மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.8.17

உங்களுடைய எல்லா துக்கங்களும் முடிவிற்கு வரவேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!


உங்களுடைய எல்லா துக்கங்களும் முடிவிற்கு வரவேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!

இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் .

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.

“இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

ஆகவே தன்னம்பிக்கையோடும், இறை நம்பிக்கையோடும் இருங்கள்!

வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!!

படித்ததில் பிடித்தது!

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir, very useful story sir,im completely surrended to lord palaniyappan,one doubt sir in this kali yuga the only god change our fate who surrended to lord murugan is it true sir?

Ragini Santosh said...

Sir,

As always, it is a good moral story. I was sort of down, today and thinking
about didn't He hear me or not?

Your story answered my question. He is always there, listening and waiting
for the right moment to make it happen. There is no email / twitter account
to respond as your request will be considered in a timely fashion (FIFO).

I will attend sani pradosham as I planned and leave the rest up to him.

Ragini Santhosh


SELVARAJ said...

நம்பிக்கை, அதுவே அனைத்தும். முழுமையாக நம்புவோம்

KJ said...

Excellent sir...Really much needed Story for everyone. Got some New Dimension abt Life and my Troubles around me.... U r Great sir.

S. selvakumar said...

அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்-nice wards sir. I am expriensed

ravichandran said...

Respected Sir,

Happy morning... Aadi 18 Greetings...

Excellent Article... Thanks for sharing...

Have a great day.

With regards,
Ravi-avn

jaga.gm said...

Super Sir

Kannan L R said...

Super super ayya


KANNAN

adithan said...

வணக்கம் ஐயா,கதையும்,கருத்தும்...ஆஹா!ஆனந்தம்!பரமானந்தம்.நன்றி.

Sakthi Balan said...

கதை ரொம்ப நல்லா இருக்கு சார்..

Mani Prasath said...

ஐயா அருமையான கதை! அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்-அருமையான வசனம்!

Mani Prasath said...

ஐயா எனக்கு ஒரு சந்தேகம். இறைவனை வணங்குவதால் விதி மாறுவது இல்லை. நாம் இப்பொழுது செய்யும் பலனுக்கு தக்க அடுத்த பிறவி அமையும்.இந்த பிறவியில் அனைத்தும் ஜாதக படியே நடக்கிறது. பின் எதற்கு இறைவனை வணங்க வேண்டும்?

KJ said...

Arunachalam Padathil ithe pol oru Sodhanai than Padathin Karu ayya.. Flashback Rajni told his father kept in a room full of Cigerrates, and asked to finish within Morning.. Jus remember tht when readin this..

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, very useful story sir,im completely surrended to lord palaniyappan,one doubt sir in this kali yuga the only god change our fate who surrended to lord murugan is it true sir?////

இறைவன் ஒருவர்தான். பல வடிவங்களில் அவரை நாம் வணங்குகிறோம். மொத்தத்தில் இறை உணர்வோடும் நம்பிக்கையோடும் இருங்கள். தக்க சமயத்தில் அவர் கை கொடுப்பார். நன்றி!!!!

Subbiah Veerappan said...

///Blogger Ragini Santosh said...
Sir,
As always, it is a good moral story. I was sort of down, today and thinking
about didn't He hear me or not?
Your story answered my question. He is always there, listening and waiting
for the right moment to make it happen. There is no email / twitter account
to respond as your request will be considered in a timely fashion (FIFO).
I will attend sani pradosham as I planned and leave the rest up to him.
Ragini Santhosh////

ஆமாம். அவரிடம் (இறைவனிடம்) விட்டு விடுங்கள். அவர் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பார்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
நம்பிக்கை, அதுவே அனைத்தும். முழுமையாக நம்புவோம்////

அப்படியே செய்யுங்கள். நன்றி செல்வராஜ்!

Subbiah Veerappan said...

/////Blogger KJ said...
Excellent sir...Really much needed Story for everyone. Got some New Dimension abt Life and my Troubles around me.... U r Great sir./////

நான் எளியவன். கற்றதை உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வளவுதான். நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

///Blogger S. selvakumar said...
அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்-nice wards sir. I am expriensed////

உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Aadi 18 Greetings...
Excellent Article... Thanks for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

Subbiah Veerappan said...

////Blogger jaga.gm said...
Super Sir///

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Kannan L R said...
Super super ayya
KANNAN////

நல்லது. நன்றி கண்ணன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,கதையும்,கருத்தும்...ஆஹா!ஆனந்தம்!பரமானந்தம்.நன்றி.////

நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger Sakthi Balan said...
கதை ரொம்ப நல்லா இருக்கு சார்../////

உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Mani Prasath said...
ஐயா அருமையான கதை! அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்-அருமையான வசனம்!/////

உண்மைதான். நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger Mani Prasath said...
ஐயா எனக்கு ஒரு சந்தேகம். இறைவனை வணங்குவதால் விதி மாறுவது இல்லை. நாம் இப்பொழுது செய்யும் பலனுக்கு தக்க அடுத்த பிறவி அமையும்.இந்த பிறவியில் அனைத்தும் ஜாதகப் படியே நடக்கிறது. பின் எதற்கு இறைவனை வணங்க வேண்டும்?//////

விதித்தபடிதான் நடக்கும். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இறைவனை வணங்குவதால், நமக்கு தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும் (with standing power) அது முக்கியமில்லையா?

Subbiah Veerappan said...

///Blogger KJ said...
Arunachalam Padathil ithe pol oru Sodhanai than Padathin Karu ayya.. Flashback Rajni told his father kept in a room full of Cigerrates, and asked to finish within Morning.. Jus remember tht when readin this../////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!

Kesavaraj & Kalaivani said...

அருமை

RPKN said...

Arumai

Vivek Pandiaraj said...

அருமை சார்