மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.8.17

Astrology: ஜோதிடம்: சரஸ்வதி யோகம்


Astrology: ஜோதிடம்: சரஸ்வதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!

சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். நம் வகுப்பறை சார்பில் சென்னை மெரீனாவில் ஒரு பாராட்டுவிழா நடத்திவிடலாம்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31 comments:

  1. Good morning sir,very interesting to hear good Saraswati yoga sir, Saraswati namas thubyam varade kaama roobini vidhya rambam karisyaami siddhi pavadhu me sadha, vargottama ketu in 4th house gives me little knowledge to keep some memories sir thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. வணங்குகிறேன். ஐயா.
    தாங்கள் கூறியது சரியே.
    எல்லாம் இருந்தால் இந்த பூமியில் நமக்கு ஏன் இடமேது
    இருந்தால், இருப்பவரை பார்த்து சந்தோஷம் பட கூடிய குணம் நமக்கு வேண்டும்.
    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. இரு பாம்புகளையும் தவிர அனைவரும் கேந்த்ரா திரிகோணங்களில் தான் அமைந்துள்ளனர்.
    துலா லக்கினத்தில் குரு, 5ஆம் வீட்டில் சனி (ஆட்சி வீடு) அவருடன் லக்கினாதிபதி சுக்ரன் (Best friend வீட்டில்).!! அமைப்பு எனக்கு உள்ளதா ???

    ReplyDelete
    Replies
    1. படிப்பில் ஆர்வம் உண்டு. B.SC Software engineering செய்கிறேன்.

      Delete
  4. Happy Morning Sir.. Nice Yoga.. But Rare to see.. Thank you sir..

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,தனுசு லக்னம்.லக்னத்தில் சனி.5 ல் குரு.அவரே லக்னாதிபதி.இது பொருந்துமா?

    ReplyDelete
  6. மெரினாவா? Undeclared, restricted area ஆச்சே.

    ReplyDelete
  7. ஐயா சனி,புதன் போன்ற கிரகங்கள் அஸ்தமனம் அல்லது வக்ரமானால் பலன் நிறைய மாறுபடுமா?

    ReplyDelete
  8. ஐயா ஜோதிடத்தில் லக்கினத்தை வைத்து இந்த மாதிரி யோகங்கள் மாறுபடுமா?

    ReplyDelete
  9. எப்படி பார்த்தாலும் இல்லை
    வண்டி ஓடினா சரி☺

    ReplyDelete
  10. When you get some time, please shed some light on

    1. Kp system
    2. Lahiri, raman ayanamsam, others

    ReplyDelete
  11. குரு, சுக்ரன்,புதன், லக்னாதிபன் ஆகியோர் கேந்திரங்களில் இருப்பதே சரஸ்வதியோகம் என்று வாசித்துள்ளேன்.சனீஸ்வரனுக்கு இந்த யோகத்தில் எந்தப் பங்கும் இல்லையே.

    ReplyDelete
  12. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir,very interesting to hear good Saraswati yoga sir, Saraswati namas thubyam varade kaama roobini vidhya rambam karisyaami siddhi pavadhu me sadha, vargottama ketu in 4th house gives me little knowledge to keep some memories sir thanks sir vazhga valamudan sir/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  13. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணங்குகிறேன். ஐயா.
    தாங்கள் கூறியது சரியே.
    எல்லாம் இருந்தால் இந்த பூமியில் நமக்கு ஏன் இடமேது
    இருந்தால், இருப்பவரை பார்த்து சந்தோஷம் பட கூடிய குணம் நமக்கு வேண்டும்.
    மிக்க மகிழ்ச்சி. /////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி!!!

    ReplyDelete
  14. /////Blogger Stylish Thamizhan said...
    இரு பாம்புகளையும் தவிர அனைவரும் கேந்த்ரா திரிகோணங்களில் தான் அமைந்துள்ளனர்.
    துலா லக்கினத்தில் குரு, 5ஆம் வீட்டில் சனி (ஆட்சி வீடு) அவருடன் லக்கினாதிபதி சுக்ரன் (Best friend வீட்டில்).!! அமைப்பு எனக்கு உள்ளதா ???////

    இல்லை!

    ReplyDelete
  15. ////Blogger KJ said...
    Happy Morning Sir.. Nice Yoga.. But Rare to see.. Thank you sir..//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  16. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,தனுசு லக்னம்.லக்னத்தில் சனி.5 ல் குரு.அவரே லக்னாதிபதி.இது பொருந்துமா?/////

    மூன்று திரிகோணங்களில் இருக்க வேண்டுமே சுவாமி.

    ReplyDelete
  17. ////Blogger SELVARAJ said...
    மெரினாவா? Undeclared, restricted area ஆச்சே./////

    அப்படியா? வேறு இடம் பார்த்தால் போகிறது!

    ReplyDelete
  18. /////Blogger Mani Prasath said...
    ஐயா சனி,புதன் போன்ற கிரகங்கள் அஸ்தமனம் அல்லது வக்ரமானால் பலன் நிறைய மாறுபடுமா?/////

    ஆமாம். மாறும்!

    ReplyDelete
  19. /////Blogger Mani Prasath said...
    ஐயா ஜோதிடத்தில் லக்கினத்தை வைத்து இந்த மாதிரி யோகங்கள் மாறுபடுமா?/////

    ஆமாம். லக்கினத்தை வைத்தும், லக்கின நாதன் இருக்கும் இடத்தை வைத்தும் பலன்கள் மாறும்!!!!


    ReplyDelete
  20. ////Blogger selvaspk said...
    எப்படி பார்த்தாலும் இல்லை
    வண்டி ஓடினா சரி☺//////

    நல்லது. நன்றி செல்வா!!!!

    ReplyDelete
  21. /////Blogger selvaspk said...
    When you get some time, please shed some light on
    1. Kp system
    2. Lahiri, raman ayanamsam, others /////

    பார்க்கலாம். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். நன்றி!!!!

    ReplyDelete
  22. //////Blogger selvaspk said...
    How was your education?///////

    பில் கேட்ஸ் போல. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவன் (சூழ்நிலை காரணம்)


    ReplyDelete
  23. //////Blogger kmr.krishnan said...
    குரு, சுக்ரன்,புதன், லக்னாதிபன் ஆகியோர் கேந்திரங்களில் இருப்பதே சரஸ்வதியோகம் என்று வாசித்துள்ளேன்.சனீஸ்வரனுக்கு இந்த யோகத்தில் எந்தப் பங்கும் இல்லையே.///////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார் ! எனது கிடங்கில் உள்ள குறிப்புக்களை வைத்து எழுதியது. நேரம் கிடைக்கும்போது சரி பார்த்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  24. Sir meena lagnam. Guru in lagnam . Sani in 5th house katakam. Do I have this yoga
    Sudarsan, Chennai

    ReplyDelete
  25. ஐயா ராகு எதில் உச்சம்?
    விருச்சிகமா? அல்லது ரிஷபமா? அல்லது வேறு ராசியா?
    புத்தகத்திற்கு புத்தகம் மாறுபடுகிறது! என்ன செய்ய?

    ReplyDelete
  26. Hi sir,
    I am having all the three planets guru, sani, sukran(lagnathipathi) in 5th house, rishaba lagnam, but sukran neecham and Vargothamam. DOB:17/11/1980, Time: 6.30pm, place:chennai

    ReplyDelete
  27. ஐயா,

    தங்களுடைய பழைய பாடங்களை படித்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய ஐயத்தை தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு 4 தினங்களுக்கு முன் அனுப்பினேன். பதிலை எதிர் நோக்கி ....

    -- சரவணன்

    ReplyDelete
  28. அன்புள்ள ஐயா, ரிஷப லக்னம். லக்னத்தில் சுக்ரன் ஆட்சி.
    9ல் குரு நீச்சம். லக்னத்தில் சனிபகவான். எனக்கு சரஸ்வதி யோகம் உண்டா?

    ReplyDelete
  29. அன்புள்ள ஐயா, ரிஷப லக்னம். லக்னத்தில் சுக்ரன் ஆட்சி.
    9ல் குரு நீச்சம். லக்னத்தில் சனிபகவான். எனக்கு சரஸ்வதி யோகம் உண்டா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com