மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.8.17

இறைவன் இருக்குமிடத்தை கவியரசர் தெளிவு படுத்திக் கூறியது!!!!


இறைவன் இருக்குமிடத்தை கவியரசர் தெளிவு படுத்திக் கூறியது!!!!

வளர்பிறை (1962) என்னும் திரைப் படப் பாடல் ஒன்றில் அதை அவர் அற்புதமாகக் கூறியுள்ளார். பாடல் வரிகளும் காணொளியும் கீழே உள்ளது. படித்து, பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
=============================================
பாடல்: பூஜியமும் ராஜியமும்

என்ன தலைப்பு நெருடலாக உள்ளதா? பூஜியத்திற்கும் ராஜியத்திற்கும்என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

கொடுத்துள்ள பாடலைப் படியுங்கள். பிடிபடும். அதாவது தெளிவாகும்.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

திரைப் படம்: வளர்பிறை (1962)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: D யோகானந்த்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
===========================================
காணொளி ஒன்று:



---------------------
காணொளி இரண்டு:

திருமதி தேவிலெட்சுமி குணசேகரனின் காணொளியும் உள்ளது. அதையும் பார்க்க வேண்டுகிறேன்


============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. பூஜ்ய, இராஜ்ய கொள்கையை அறிவியலும் ஒத்துக்கொள்கின்றது. Block Hole, Big Bank என்னும் பெயரால். கவியரசருக்கு என்னே ஒரு பிரம்ம ஞானம்.

    ReplyDelete
  2. Good morning sir very useful video sir, what a Creator's creation, thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  3. ////Blogger SELVARAJ said...
    பூஜ்ய, இராஜ்ய கொள்கையை அறிவியலும் ஒத்துக்கொள்கின்றது. Block Hole, Big Bank என்னும் பெயரால். கவியரசருக்கு என்னே ஒரு பிரம்ம ஞானம்./////

    உண்மைதான்! உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful video sir, what a Creator's creation, thanks sir vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. அறுந்து போன செருப்புக்கு உள்ள மரியாதை இறந்து போன உடலுக்கு இல்லை.
    உண்மை ஐயா.
    மெய் சிலிர்கும் வரிகள்

    ReplyDelete
  6. ////Blogger Kesavaraj & Kalaivani said...
    அறுந்து போன செருப்புக்கு உள்ள மரியாதை இறந்து போன உடலுக்கு இல்லை.
    உண்மை ஐயா.
    மெய் சிலிர்கும் வரிகள்//////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  7. Arumai. Anaal paadalai naan kettathee illai. Muhal thadavai.

    ReplyDelete
  8. /////Blogger P Vinayagam said...
    Arumai. Anaal paadalai naan kettathee illai. Muhal thadavai.//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. /////Blogger varadaraj dorairaj said...
    Fine////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. கவியரசு கண்ணதாசன் கவிக்கே அரசு என்பதை விளக்கிய குரு ஜி அவர்களுக்கு வணக்கங்கள்

    ReplyDelete
  11. கண்ணதாசன் கவிதைக்கு நல்ல விளக்கம்...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com