மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.4.17

மனவலிமை எப்படி உண்டாகும்?


மனவலிமை எப்படி உண்டாகும்?

‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக்குடித்தனம் போயிடுன்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்ன?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’

அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை
சுமையாக பார்க்கிறது.

1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி –
என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்.

2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்.

3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும்
ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. *கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.

4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும்
தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.

5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.

6. பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகி
விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்.

7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால்  மனம் மென்மையாகும்.

8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்.

9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.

10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப்போது செயல்படுகின்ற மனநிலை
மகிழ்ச்சியை பெருக்கும்.

11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை
எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.

12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன
அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.

13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு
கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை
ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடுவதே சிறந்த அணுகுமுறை.

14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு.

15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு
முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும். மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.

16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு
நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை
கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்.

17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ
முடியும்.வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.

18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற
ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்.

19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல்
இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்.

20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு
செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை
சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்.

*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

Kannan L R said...

ஐயா வணக்கம்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
இன்றைய பதிவு அருமை
அதில்
/////நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற
ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்./////

இதற்கு ' மகிழ்ச்சி ஹார்மோன் ' என்றும் கூறலாம்

நல்ல தகவல் ஐயா நன்றி

கண்ணன்

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Very useful information sir thanks for your valuable words sir.definetly this post may change lot of people into right way without stress and with happy mind

VM. Soosai Antony said...

வணக்கம் ஐயா,
நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ
முடியும்.வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.
நல்ல புத்தமாக உங்கள் வகுப்பறை உள்ளது.
நன்றி ஐயா

kmr.krishnan said...

தமிழ்ப் புத்தாண்டு வணக்கங்கள்.

நல்ல கருத்துள்ள கட்டுரை

adithan said...

வணக்கம் ஐயா,தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.மன அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும்,வலிமைக்குமான அருமருந்தாய் அமைந்தது இன்றைய பதிவு.மிக்க நன்றி.

Chandrasekaran Suryanarayana said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Subbiah Veerappan said...

/////Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
இன்றைய பதிவு அருமை
அதில்
/////நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற
ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்./////
இதற்கு ' மகிழ்ச்சி ஹார்மோன் ' என்றும் கூறலாம்
நல்ல தகவல் ஐயா நன்றி
கண்ணன்////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Very useful information sir thanks for your valuable words sir.definetly this post may change lot of people into right way without stress and with happy mind/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

/////Blogger VM. Soosai Antony said...
வணக்கம் ஐயா,
நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ
முடியும்.வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.
நல்ல புத்தமாக உங்கள் வகுப்பறை உள்ளது.
நன்றி ஐயா/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
தமிழ்ப் புத்தாண்டு வணக்கங்கள்.
நல்ல கருத்துள்ள கட்டுரை/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.மன அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும்,வலிமைக்குமான அருமருந்தாய் அமைந்தது இன்றைய பதிவு.மிக்க நன்றி./////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ///

நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!!!!


hari ramasamy said...

Sir, vanakkam. Jagannath Horavil prastharashtakavargam paarppathu yeppadi yena sollunkal please
hari

hari ramasamy said...

Sir, vanakkam.Arumaiyana thakavalkal. oru korikkai. Jagannath Horavil
ashtakavargam pakuthiyil prastharashtakavargam yeppadi parpapthu yena sollunkal please
hariharan

Subbiah Veerappan said...

////Blogger hari ramasamy said...
Sir, vanakkam.Arumaiyana thakavalkal. oru korikkai. Jagannath Horavil
ashtakavargam pakuthiyil prastharashtakavargam yeppadi parpapthu yena sollunkal please
hariharan////

ஜகந்நாத ஹோராவில் பரல்கள் வித்தியாசமாக இருக்கும். ஆஸ்ட்ரோ விசன் மென்பொருள் சரியாக இருக்கும். ஆகவே அதையே பயன்படுத்துங்கள். அஷ்டகவர்க்க வகுப்பில் நடத்திய பாடங்கள் புத்தகமாக வரவுள்ளது. அப்போது படியுங்கள் அதுவரை பொறுத்திருங்கள். நன்றி!!!!