வாழ்வில் இடரேதும் எப்போதும் வாராது இருக்க என்ன செய்ய வேண்டும்?
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
'பன்னிரு விழிகளிலே'’ என்னும் முருகப் பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன. படித்து/பாடி மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
பன்னிரு விழிகளிலே ...
பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்
முருகா ...
பன்னிரு விழிகளிலே
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
ஷண்முகா ...
(பன்னிரு விழிகளிலே)
உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
முருகா ... முருகா ...
உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து
(பன்னிரு விழிகளிலே)
பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா
வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
(பன்னிரு விழிகளிலே)
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
முருகா ...
பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்.
பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நல்ல பாடல் ஐயா..
ReplyDeleteஉன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
ReplyDeleteதிண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து
அருமையான வரிகள் அய்யா! பகிர்வுக்கு நன்றி.
தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைக் காண்பதற்கு...
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ!
முருகா! முருகா!
முருகா..
ReplyDeleteமுருகா..