மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.11.14

Astrology: ஜாதகங்களில் உள்ள சிக்கல் என்ன?


Astrology: ஜாதகங்களில் உள்ள சிக்கல் என்ன? 

அடிப்படை விதிகள்

எல்லா செயல்களுக்குமே சில அடிப்படை விதிகள் உண்டு.

நான்கு பேர்களுக்கு சமையல் செய்து பறிமாறுவதற்கு சில அடிப்படை விதிகள் உண்டு. முதலில் சமையல் செய்பவர் அதில் ஒரு முறையான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். சமையல் செய்வதற்கு உரிய அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், முக்கியமாக அடுப்பு, எரிபொருள் போன்ற சாமான்கள் மற்றும் தேவையான உபகரணங்கள், சாதனங்கள் வேண்டும்.

ஒரு ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கும் சில அடிப்படைவிதிகள் மற்றும் அடிப்படைத் தகுதிகள் உள்ளன!

ஒவ்வொரு ஜாதகமும், 12 ராசிகள், 12 வீடுகள், ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அவைகள் எண்ணற்றை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுப்பவை. பிறந்த இடம், பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து அவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவை. மாறுபட்ட பலன்களைக் கொடுக்கக் கூடியவை.

ஒரு ஜாதகத்தில் உள்ள மேன்மைகளையும், சிக்கல்களையும் அறிந்து சொல்வதற்கு ஜோதிட அறிவும், பல ஜாதகங்களைப் பார்த்துப் பலன்சொல்லிய அனுபவமும் முக்கியமானதாகும். அது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலோ கிடைத்துவிடாது. பொறுமையாகத் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலமே அது வசப்படும்.

எந்த ஒரு கலைக்குமே அது பொருந்தும். அதாவது அந்தத் தொடர் முயற்சியும், கற்றுத் தேரும் தன்மையும் அவசியமாகும்.

அந்த அடிப்படை விதிகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

முதன்மை விதிகள். உபவிதிகள் என்று அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி, காரகன் குரு ஆகிய மூவரும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது அடிப்படை விதி.

அதே நேரத்தில் ஐந்தாம் வீட்டில் சுபகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, அத்துடன் ஐந்தாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட அஷ்டகவர்க்கப்பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை உண்டு, ஆகவே உப விதிகளையும் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வதில் உள்ள சிக்கல் அதுதான்.

உப விதிகளும் கை கொடுக்க வில்லை என்றால் மட்டுமே ஜாதகனுக்குக் குழந்தை இருக்காது.

வயிற்றில் வலி இருந்தால் அதை அப்பென்டிக்ஸ் என்று எப்படி நினைக்க முடியும்? அது சாதாரண வயிற்று உபாதையாகக்கூட இருக்கலாம். ஒரு ஸ்பூன் சீரகம் சாப்பிட்டால், நீங்கிவிடக்கூடிய சாதாரண gas trouble வலியாகக்கூட இருக்கலாம். ஒரு இடத்தில் ராகு இருப்பதை வைத்து மட்டும் எந்தவொரு முடிவிறகும் வரக்கூடாது. மற்ற கிரகங்களையும் அலச வேண்டும். அவற்றிற்கு ராகுவுடன் உள்ள தொடர்பையும் வைத்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாம் வீட்டில் சனி இருந்தால், கையில் காசு தங்காது என்று எப்படிச் சொல்ல முடியும். சனி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதி நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஜாதகம்.

ஆகவே முதன்மை விதிகளை வைத்து மட்டும் முடிவிற்கு வராதீர்கள். உப விதிகளையும் பாருங்கள். பிறகு பலன்களைப் பற்றி யோசியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

 1. நன்றி வாத்தியாரே!!!

  மேலும் ஒரு கிரகம்
  ராசியில் பகை, அம்சத்தில் சொந்த வீடு,

  ராசியில் நீச்சம் அம்சத்தில் பகை,

  ராசியில் அச்தங்கம் அம்சத்தில் உச்சம் என்று அட்டவணை படுத்தி, இந்த பலன் கணிப்பு முறையை இன்னும் தங்கள் பாணியில் எளிமை படுத்த முடியுமா?

  அவ்வாறு தாங்கள் தந்தால் என்னை போன்ற கத்துக்குட்டிகள் மேலும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்...

  தங்களது ஹோரை அட்டவணை மற்றும் அதை கண்டு பிடிக்கும் குறுக்கு வழி எனக்கு மிகவும் உபயோகமாகவும், எளிதாகவும் இன்று வரை இருக்கிறது என்பதை, இது எங்கள் வாத்தியார் வழி என்ற பெருமிதமும் எங்களுக்கு உண்டு.  வாத்தியார் செய்து தருவார் என ஆவலோடு எதிர்பார்க்கும்

  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.

  ReplyDelete
 2. உப விதிகளுக்கம் சில
  உப விதிகள் உள்ளனவே..

  சட்டத்திற்கும் அந்த
  சட்டத்திற்கு உட்பிரிவும்

  விதிவிலக்கும் நம்
  விதியை மாற்றும் வி(த்)ந்தை

  அல்லவா?
  அதை மறக்க முடியுமா?

  ReplyDelete
 3. அய்யா,
  நான் சுமார் ஒரு மாதத்திற்கு விடுப்பில் இருந்தேன்.உங்கள் பதிவுகளை படித்தேன் ஆனால் பின்னோட்டம் செய்ய வில்லை.இப்போதுதான்
  மறுபடியும் பணிக்கு திரும்பி உள்ளேன்.இப்போது பின்னோட்டம் செய்வேன் அய்யா.
  //எனது ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில ராகு (ரிஷப ராசியில் );லக்னமோ மகரம்; ராசி மீனம் ;ஐந்தாம் இடத்தின் அதிபதி 9ஆம் இடத்தில் (கன்னி ராசியில் ) நீசம்;ஆனால் நவாம்சத்தில் சுக்ரன் ஆட்சி பெற்று உள்ளார்.குரு பகவான் 12 இல் மறைவு மற்றும் மாநதியின் சேர்க்கை(ஆனால் தனுசு ராசியில் ஆட்சி )ஐந்தாம் வீட்டில் பரல்கள் 33.//

  இந்த மாதிரி அமைப்பு இருந்தால் எப்படி எடுத்து கொள்ள வேண்டும் அய்யா ?உங்கள் கருத்து என்ன அய்யா ?

  என்றும் பணிவுடன் ,
  S .ரகுநாதன்

  ReplyDelete
 4. வணக்கம் சார்....

  முதன்மை விதி!
  உப விதி!

  எந்தவிதி எப்படியிருப்பினும்
  நம்விதி வலியது,வலியது........

  ReplyDelete
 5. ஆம் ஐயா!நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.நீங்கள் குறியுள்ளதற்கும் அப்பால் தசா புக்தியயும் கணக்கில் கொள்ளுதல் அவசியம்.கடைசியாக கோள்ஸாரமும் கைகொடுக்க வேண்டும்.எல்லாவற்றிர்கும் மேலாக கேட்பவ‌ர் சொல்லுபவர் இருவருக்கும் நேரம் சரியாக இருக்க வேண்டும்.எல்லாவற்றிற்கும் அப்பால் இறையருள் வேண்டும்.0

  ReplyDelete
 6. வணக்கம் குரு,

  இந்த பதிவு இரண்டாவது முறையாக வந்தாலும் மனதில் பதியும்படியாக உள்ளது. சுட்டிகான்பிதமையை தவறாக நினைகாதிர்கள். பதிவிடுதலின் கஷ்டத்தை நான் உணருகிறேன்.

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 7. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கங்கள் கோடி

  ஒருவன் பொம்பள பொறுக்கியாக இருப்பதற்கும் மற்றொருவன் பெண்வாடையே படாத ( குடும்ப வாழ்கையில் இருந்து கொண்டு )

  சந்நியாசியாக இருப்பதக்கும் ஜாதகத்தில் அமைப்பு எப்படி ஐயா இருக்க வேண்டும்.

  பரல்கள் எப்படி ஐயா அமைந்து இருக்கும். அன்புடன் மாணவன்.

  ReplyDelete
 8. Hello sir,

  Thanks for nice lesson on 5th house.

  Is there any rule or sub rule is there to calculate the time when a person will get child. like 5th house owner dasa/puthi or guru's placement or 5il amarantha planet dasa/puthil like that. please explain if any further calculation is there to calculate child birth for a horoscope.

  Thank you,

  ReplyDelete
 9. Kanni lagnam ...Thula rasi...Sani in 5 th house...Navamsa Mesham...
  Dhanur guru.paarvai....Paralgal 36...Sani maha dasa epadi irukum

  ReplyDelete
 10. Kanni lagnam...Thula rasi...Sani in 5 th house...Navamsa Mesham...Dhanur guru.paarvai....Paralgal 36...Sani maha dasa epadi irukum

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா,
  ஒருவரின் ஜாதகத்தை
  1.பிறந்த ஜாதகம்
  2.அஷ்ட்டகவர்க்கம்
  3. நடப்பு திசா
  4.கோச்சாரம் இவை தவிர கிரஹங்களின் பாகை வித்யாசங்களையும் ( நல்ல பாகை,கெட்டபாகை) பார்க்க வேண்டுமா? இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா. நன்றி

  ReplyDelete
 12. மதிப்பிற்குரிய ஐயா !!!!

  எனக்கு திருமணதிற்கு பெண் பார்க்க தொடங்கியபோது ஏற்ப்பட்ட ஆர்வத்தின் பலனே இந்த ஜோதிடத்தின் மீதுள்ள நாட்டம். நீங்களும், மதிப்பிற்குரிய ஐயா கே.எம்.ஆர். கிருஷ்ணன் ஐயா அவர்களும் கூறியது போல என்னக்கே பிறந்தவள் கிடைத்துவிட்டாள். இந்த திருமணம் இந்த மதம் நவம்பர் மூன்றாம் தேதி உறுதியானது. மார்ச் மாதம் 21 மற்றும் 22 ஆம் தேதியில் கோவையில் திருமணம் செய்யவதாக பெற்றோர்கள் முடிவு எடுத்துள்ளனர்!!!!! உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!! மேலும் அழைப்பிதழ் தயார் ஆனவுடன் உங்களை நேரில் அழைக்க விரும்புகிறேன் !!!!!!

  இப்படிக்கு

  உங்கள் மாணவன்
  சிவச்சந்திரன்.பா

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com