மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.11.14

Astrology: உடற்குறைபாடுகள்

Astrology: உடற்குறைபாடுகள்

எல்லா ஜாதகங்களிலுமே யோகங்கள் இருக்கும். ராஜயோகம்,
அவயோகம் என்று அவற்றை வகைப்படுத்தலாம். அதிர்ஷ்டத்தைத்
தரும் யோகம் என்றால் மனம் துள்ளும். மகிழும். அதே நேரத்தில்
அவயோகம் என்றால் மனம் துவளும். துன்பம் கொள்ளும்,
இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

இந்த உடற்குறைபாடுகள் அவயோகக் கணக்கில் வரும்.

சிலருக்குப் பிறக்கும்போதே உடற்குறைபாடுகள் இருக்கும்.
சிலருக்கு வாழ்க்கையின் நடப்பில் அல்லது போக்கில் உண்டாகும். விபத்துக்களால் உண்டாகும்.

1. சந்திரன் 10ல், செவ்வாய் 7ல் சூரியன் 2ல் இருக்கும் ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்

2. செவ்வாய் லக்கினத்தில் இருப்பதுடன் அவர் சனி, மற்றும் செவ்வாயின் பார்வையும் பெற்று இருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.

3 சந்திரன் 10ல், செவ்வாய் 7ல், சூரியன் இருக்கும் வீட்டிற்கு 2ல் சனி
இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு  உடற்குறைபாடு இருக்கும்.

4. கேந்திரங்களில் தீய கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு உடற்
குறைபாடு இருக்கும்

5. சனி 7ல் இருக்க, செவ்வாயுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தாலோ
அல்லது செவ்வாய் நீசம் பெற்று பல வீனமாக இருந்தாலோ,
ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.

6. செவ்வாய் 5 அல்லது 9ஆம் இடத்தில் இருந்து தீய கிரகங்களின்
பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்

7. சுக்கிரனும், சூரியனும் ஒன்றாக 5 அல்லது 7 அல்லது 9ல் இருக்கும் அமைப்புள்ள ஜாதகனின் மனைவி உடற்குறைபாடு உள்ளவளாக
இருப்பாள்.

8. ஆறாம் வீடு பாதிக்கப்பெற்று ஆறில் அமர்ந்திருக்கும் கிரகமும் பாதிக்கப்பெற்றிருந்தால் ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்

இவை அனைத்தும் பொது விதிகள். ஜாதகத்தில் உள்ள மற்ற
கிரகங்கள், அதாவது சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்து,
இந்தக் குறைபாடு இல்லாமலும் போகலாம். ஆகவே அதையும்
மனதில் கொள்ளுங்கள்
-----------------------------------------------------------
சென்ற வாரம் உடல் நலமின்மை காரணமாக இரண்டு நாட்கள்
வகுப்பறை நடைபெறவில்லை. அந்த 2 நாட்களுக்குரிய பாடங்கள்
இந்தவாரம் சேர்த்துப் பதிவிடப் பெறும். ஆகவே பொறுத்திருந்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

selvam velusamy said...

வணக்கம் குரு,

தாங்கள் பூரணகுணமடைய பிரார்த்தனை செய்கிறேன். 2வது அமைப்பில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக தோன்றுகிறது. சற்று சரி பாருங்கள்.

//2. செவ்வாய் லக்கினத்தில் இருப்பதுடன் அவர் சனி, மற்றும் செவ்வாயின் பார்வையும் பெற்று இருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.//

நன்றி
செல்வம்

venkatesh r said...

அய்யா வணக்கம்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய்ப் பிறந்திடினும்
கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.

என்று அவ்வை பாட்டி கூறியதுதான் நினைவுக்கு வந்தது.

செவ்வாய் லக்கினத்தில் இருப்பதுடன் அவர் சனி, மற்றும்” செவ்வாயின்" பார்வையும் பெற்று இருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.

பார்வை சூரியனா? செவ்வாயா? சற்று விளக்கவும்.

Regunathan Srinivasan said...

அய்யா,
சந்திரன் தனித்து இருந்தால் 'கேமத்ரும யோகம் ' என்று சொல்கிறார்கள்.இதுவும் ஒரு அவயோகம் தானே?ஆனால் ஒரு சிலர் இதனை 'தனிமையை விரும்பும் மனிதர்கள்' என்றும் சொல்கிறார்கள்.இதனை எவ்வாறு எடுத்து கொள்வது???

மேலும் 3 ஆம் அதிபதி 6 அல்லது 8 அல்லது 12 ஆம் வீட்டில் இருந்தால் அந்த நபர் மிகவும் கோழையாக,மனோதிடம் இல்லாதவராக இருப்பார் என்றும் சொல்கிறார்களே.உங்கள் கருத்து அய்யா ?

என்றும் பணிவுடன்,
S . ரகுநாதன்

lrk said...

Nice lesson .
Thankyou sir .

krishnababuvasudevan said...

Nice sir

Subbiah Veerappan said...

////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
தாங்கள் பூரணகுணமடைய பிரார்த்தனை செய்கிறேன். 2வது அமைப்பில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக தோன்றுகிறது. சற்று சரி பாருங்கள்.
//2. செவ்வாய் லக்கினத்தில் இருப்பதுடன் அவர் சனி, மற்றும் செவ்வாயின் பார்வையும் பெற்று இருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.//
நன்றி
செல்வம்////

சனியின் பார்வை என்று திருத்திக்கொள்ளுங்கள் நண்பரே! சுற்றிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

Subbiah Veerappan said...

//Blogger venkatesh r said...
அய்யா வணக்கம்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
மானிடராய்ப் பிறந்திடினும்
கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது.
என்று அவ்வை பாட்டி கூறியதுதான் நினைவுக்கு வந்தது.
செவ்வாய் லக்கினத்தில் இருப்பதுடன் அவர் சனி, மற்றும்” செவ்வாயின்" பார்வையும் பெற்று இருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.
பார்வை சூரியனா? செவ்வாயா? சற்று விளக்கவும்./////

/////Blogger Regunathan Srinivasan said...
அய்யா,
சந்திரன் தனித்து இருந்தால் 'கேமத்ரும யோகம் ' என்று சொல்கிறார்கள்.இதுவும் ஒரு அவயோகம் தானே?ஆனால் ஒரு சிலர் இதனை 'தனிமையை விரும்பும் மனிதர்கள்' என்றும் சொல்கிறார்கள்.இதனை எவ்வாறு எடுத்து கொள்வது???/////

விரும்பியா ஜாதகப் பலன்கள் நடைபெறுகின்றன? இல்லையே! அது அவயோகம்தான். வயதான காலத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.
.......................................................................................................
////மேலும் 3 ஆம் அதிபதி 6 அல்லது 8 அல்லது 12 ஆம் வீட்டில் இருந்தால் அந்த நபர் மிகவும் கோழையாக,மனோதிடம் இல்லாதவராக இருப்பார் என்றும் சொல்கிறார்களே.உங்கள் கருத்து அய்யா ?
என்றும் பணிவுடன்,
S . ரகுநாதன்////

மனோதிடத்திற்கு அல்லது மனவலிமை இல்லாமல் இருப்பதற்கு ச்மனகாரகனையும் பார்க்க வேண்டும் சாமி!

/////Blogger lrk said...
Nice lesson .
Thankyou sir .

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger krishnababuvasudevan said...
Nice sir/////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger krishnababuvasudevan said...
Nice sir/////

நல்லது. நன்றி!