Astrology: Transit Saturn: கோள்சாரச் சனி
கோள்சாரச் சனி (Transit Saturn) தன்னுடைய ஒரு சுற்றை முடித்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் 30 ஆண்டுகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் தங்கிச் செல்லும்.
அவ்வாறு தங்கிச் செல்லும் காலத்தில் எந்த ராசியில் தங்கியிருக்கும்போது சனி அதிகமான கெடுதல்களைச் செய்யும்?
மேஷத்தில் இருக்கும்போதுதான் அதிகமான தீமைகளைச் செய்யும். சனி அங்கே நீசமடைந்துவிடும். அதை மனதில் கொள்க! நீசமடைந்த நிலையில் சனியால் அதிகமான கெடுதல்களே ஏற்படும்.
அந்தச் சமயத்தில் விரையச் சனிக்காரர்கள் (ரிஷப ராசிக்காரர்கள்) அஷ்டமச் சனிக்காரர்கள் (கன்னி ராசிக்காரர்கள்) ஆகியோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஆகிய எதையும் செய்யக்கூடாது. உள்ளதும் போச்சுடா........ளைக் கண்ணா கதையாகிவிடும். உள்ளதும் போய்விடும்! ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதுபோல ஜாதகத்தில் சனி நீசமடைந்திருந்தால், சனி மகா திசையில் மற்றும், மற்ற கிரகங்களின் மகாதிசையில் சனி புத்தியில் ஜாதகன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கோள்சாரத்தில் சனி தனது உச்ச வீட்டில் சஞ்சாரிக்கும் காலத்தில், அதாவது துலா ராசியில் சஞ்சாரம் செய்யும் நாட்களில் நல்ல (நன்மையான) பலன்களை எதிர்பார்க்கலாம். அதுவும் சனி வேறு தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெறாமல் இருக்கும் காலங்களில்/ சமயங்களில்தான் அவ்வாறான பலன்களை எதிர் பார்க்கலாம்!
நமது ஜாதகத்தின் பத்தாம் வீட்டை லக்கினமாக மனதில் வைத்துக்கொண்டு அன்றையத் தேதியில் கோள்சாரச் சனி எங்கே இருக்கிறது என்று பாருங்கள். அந்த கோள்சாரச் சனி எட்டி இருந்தால், அதாவது உங்களுடைய பத்தாம் வீட்டிற்கு எட்டில் இருந்தால், அந்த இரண்டரை ஆண்டு காலம் உங்களுடைய வேலையில் அல்லது தொழிலில் பிரச்சினைகள் உண்டாகும். சறுக்கல் ஏற்படும். downfall என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகவே அந்தச் சமயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
சரி, அடுத்த சனிப் பெயர்ச்சி எப்போது?
நமக்கு திருநள்ளாறு கோயில்காரர்கள் சொல்வதுதான் வேதவாக்கு! அவர்கள் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று (16.12.2014) சனீஷ்வரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறுகின்றார் என்று சொல்லியிருக்கிறார்கள். அன்றைய தினம்தான் அத்திருக்கோயிலில் அபிஷேகம், ஆராதனை என்று விசேட பூஜைகள் நடைபெற உள்ளன.ராசிவாரியாக அதற்கான பலன்கள் என்ன? அதை இப்போதே பார்த்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல், பொறுமையாக இருங்கள். 15.12.2014 திங்கட்கிழமையன்று பலாபலன்களுடன் கூடிய அந்தக் கட்டுரை வெளியாகும்.
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
Respected Sir
ReplyDeleteI get concerned every time when you talk about Sani and what it does when it is in Mesha. For me Sani is in Mesha and my sign is Taurus. Sani Dasa just started and I can feel it.
My only consolation is My lakna is Danusu. Hoping for less turbulence in next 19 years of my life.
நன்றி வாத்தியாரே!!!
ReplyDeleteஎனக்கு 10ம் வீடு/ராசி இரண்டும் ஒன்றுதான். நான் இரண்டுக்கும் தனித் தனியாக பலன் பார்க்க வேண்டியதில்லை.
ReplyDeleteஎன் உறவினர் ஒருவர், ஆண். அவர் ஜாதகத்தில் சனிக்கு 0 சுயபரல்கள்(பரலே இல்லை). 33 வயதாகிறது. உருப்படியாக ஒரு வேலை வெட்டி எதுவும் இல்லை. சில நேரங்களில் நீசமே பரவாயில்லை என்று தோன்றுகிறது.
வாத்தியாருக்கு வணக்கங்கள்.
ReplyDeleteவணக்கம் குரு,
ReplyDeleteசனி பெயர்ச்சியை பற்றித்தான் அனேக வலைத்தளங்களில் பதிவிட்டு பயமுருத்துகிரார்கலே. ஒரு மாற்றத்திக்கு சனி பகவான் ஜனன ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்து கோட்சார பலன் எப்படி கெடு பலன் நடக்காது என்று பதிவிடுமாறு வேண்டுகிரேன்.
நன்றி
செல்வம்
நண்பர் கிருபானந்தன் அவர்கள் போல எனக்கும் இலக்கினத்திலிருந்து 10ம் வீடு, இராசி இரண்டும் ஒன்றுதான். நண்பரே, வாத்தியார் ஒரு முறை எழுதியிருந்தார், 10ம் வீட்டிற்கு 6, 8, மற்றும் 12ல் கோள்சார சனி வரும்போது, உத்தியோகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று. எனக்கும் 10ம் வீட்டிற்கு 12ல் கோள்சார சனி வந்தபோது உத்தியோகத்தில் பல பிரச்சனைகளும் தொல்லைகளும் தோன்றின. ஆனால் ஜோதிட விதியின் படி, இராசிக்கு 6ல் சனி வருவது ஒரு நல்ல யோகமாக கருதப்படுகிறது. 10ம் வீடும் இராசியும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இதில் எது பொருந்தும்? வேலைக்கு சென்றதிலிருந்து எனக்கு இராசிக்கு 6ல் சனி இன்னும் வரவில்லை. தங்களுக்கு இராசிக்கு 6ல் சனி வந்து விட்டதா? அப்போது எம்மாதிரி பலன்கள் ஏற்பட்டன என்று பகிர்ந்து கொள்ள இயலுமா?
ReplyDeleteவாத்தியார் அய்யா, திருக்கணித பஞ்சாங்கம் சனி கடந்த ஞாயிறன்றே விருச்சிகத்திற்கு பெயர்ந்து விட்டார் என்று குறிப்பிடுகிறது. இணையத்தில் உள்ள பல தளங்களிலும் திருக்கணிதமே பிரதானமாக கருதப்படுகிறது. ஆனால் திருநள்ளாரில் மட்டும் வாக்கிய பஞ்சாங்கத்தை பிரதானமாக எடுத்துக் கொள்ள காரணம் என்ன? தொன்று தொட்டு தொடர்ந்து வரும் நம்பிக்கியினாலா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா?
புதிய வீட்டில் ஓரளவு நிலை பெற்று விட்டொம். இன்னும் பல வேலைகள் மீதமுள்ளன.தற்சமயம் ரிலையனஸ் இணைப்பு கிடைக்கிறது.ஆனால் மிகவும் நிதானமாக உள்ளது.
ReplyDelete29 அக்டோபருக்குப் பின்னர் இப்போதுதான் வகுப்பறைக்கு வருகிறேன். இடைப்பட்ட பதிவுகளை வாசித்து மகிழ்ந்தேன். அப்பத்தாவின் அனுபவ அறிவும்,
நிலக்கடையின் மகத்துவம்,ஸ்ரீதரின் அரிய கண்டு பிடிப்பும் மனதைக் கவர்ந்தன.
நீங்கள் மிகவும் உயர்தரமான பத்திரிகையாளர்.வாசகனுக்குப்பிடித்தததை விட பயனுள்ள தகவலகளை அளிப்பது உங்கள் பாணி மற்றும் பணி.வகுப்பறையின் மாணவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
/////Blogger Dallas Kannan said...
ReplyDeleteRespected Sir
I get concerned every time when you talk about Sani and what it does when it is in Mesha. For me Sani is in Mesha and my sign is Taurus. Sani Dasa just started and I can feel it. My only consolation is My lakna is Danusu. Hoping for less turbulence in next 19 years of my life.//////
சனி திசை 19 ஆண்டுகளுமே சிரமமாக இருக்காது. அதில் வரும் புத்திகளின் தசாவை வைத்து (Sub periods) பலன்கள் மாறும். பொறுமையாக இருங்கள் கண்ணன்!
////Blogger BLAKNAR said...
ReplyDeleteநன்றி வாத்தியாரே!!!/////
நல்லது குடியாரே! தூத்துக்குடியாரே1
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஎனக்கு 10ம் வீடு/ராசி இரண்டும் ஒன்றுதான். நான் இரண்டுக்கும் தனித் தனியாக பலன் பார்க்க வேண்டியதில்லை.
என் உறவினர் ஒருவர், ஆண். அவர் ஜாதகத்தில் சனிக்கு 0 சுயபரல்கள்(பரலே இல்லை). 33 வயதாகிறது. உருப்படியாக ஒரு வேலை வெட்டி எதுவும் இல்லை. சில நேரங்களில் நீசமே பரவாயில்லை என்று தோன்றுகிறது./////
உண்மைதான். சனியின் சுயவர்க்கப் பரல்கள் சில விஷயங்களை அடையாளப் படுத்தும். அது உண்மையாகவும் இருக்கும். நன்றி ஆனந்த்!
////Blogger Maaya kanna said...
ReplyDeleteவாத்தியாருக்கு வணக்கங்கள்.////
உங்களுடைய வணக்கங்களுக்கு நன்றி மாயக்கண்ணன்!
////Blogger selvam velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு,
சனி பெயர்ச்சியை பற்றித்தான் அனேக வலைத்தளங்களில் பதிவிட்டு பயமுறுத்துகிறார்களே. ஒரு மாற்றத்திக்கு சனி பகவான் ஜனன ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்து கோட்சார பலன் எப்படி கெடு பலன் நடக்காது என்று பதிவிடுமாறு வேண்டுகிறேன்.
நன்றி
செல்வம்///////
அவர்கள் பயமுறுத்தினால் பயமுறுத்திவிட்டுப் போகிறார்கள். நீங்கள் எதற்காக பயப்படவேண்டும்? கோள்சாரம் இந்தியாவில் உள்ள 120 பேர்களுக்கும் பொதுவாக எழுதுகிறார்கள். ஒரு ராசிக்கு 10 கோடி பேர்கள். பொதுப் பலன்களை வைத்து அத்தனை பேர்களையும் எப்படி பயமுறுத்த முடியும்? ஒவ்வொருவரின் ஜாதகத்தையும் வைத்து, நடப்பு தசா புத்திகளையும் வைத்து தனித்தனியாக வெவ்வேறு பலன்கள். அதை மனதில் வையுங்கள். மோடிக்கும், அம்பானிக்கும், உங்களுக்கும் பலன்கள் கோச்சாரத்தை மட்டும் வைத்தல்ல. அதையும் மனதில் வையுங்கள்
/////Blogger thozhar pandian said...
ReplyDeleteநண்பர் கிருபானந்தன் அவர்கள் போல எனக்கும் இலக்கினத்திலிருந்து 10ம் வீடு, இராசி இரண்டும் ஒன்றுதான். நண்பரே, வாத்தியார் ஒரு முறை எழுதியிருந்தார், 10ம் வீட்டிற்கு 6, 8, மற்றும் 12ல் கோள்சார சனி வரும்போது, உத்தியோகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்று. எனக்கும் 10ம் வீட்டிற்கு 12ல் கோள்சார சனி வந்தபோது உத்தியோகத்தில் பல பிரச்சனைகளும் தொல்லைகளும் தோன்றின. ஆனால் ஜோதிட விதியின் படி, இராசிக்கு 6ல் சனி வருவது ஒரு நல்ல யோகமாக கருதப்படுகிறது. 10ம் வீடும் இராசியும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இதில் எது பொருந்தும்? வேலைக்கு சென்றதிலிருந்து எனக்கு இராசிக்கு 6ல் சனி இன்னும் வரவில்லை. தங்களுக்கு இராசிக்கு 6ல் சனி வந்து விட்டதா? அப்போது எம்மாதிரி பலன்கள் ஏற்பட்டன என்று பகிர்ந்து கொள்ள இயலுமா?
வாத்தியார் அய்யா, திருக்கணித பஞ்சாங்கம் சனி கடந்த ஞாயிறன்றே விருச்சிகத்திற்கு பெயர்ந்து விட்டார் என்று குறிப்பிடுகிறது. இணையத்தில் உள்ள பல தளங்களிலும் திருக்கணிதமே பிரதானமாக கருதப்படுகிறது. ஆனால் திருநள்ளாரில் மட்டும் வாக்கிய பஞ்சாங்கத்தை பிரதானமாக எடுத்துக் கொள்ள காரணம் என்ன? தொன்று தொட்டு தொடர்ந்து வரும் நம்பிக்கியினாலா அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா?/////
வாக்கியப் பஞ்சாங்கம் ரிஷிகளால் கணிக்கப் பெற்றது. தொன்று தொட்டு கடைப் பிடிக்கப்பெற்று வருகிறது. அதுதான் காரணமாக இருக்கலாம்.
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபுதிய வீட்டில் ஓரளவு நிலை பெற்று விட்டோம். இன்னும் பல வேலைகள் மீதமுள்ளன.தற்சமயம் ரிலையனஸ் இணைப்பு கிடைக்கிறது.ஆனால் மிகவும் நிதானமாக உள்ளது.
29 அக்டோபருக்குப் பின்னர் இப்போதுதான் வகுப்பறைக்கு வருகிறேன். இடைப்பட்ட பதிவுகளை வாசித்து மகிழ்ந்தேன். அப்பத்தாவின் அனுபவ அறிவும்,நிலக்கடையின் மகத்துவம்,ஸ்ரீதரின் அரிய கண்டு பிடிப்பும் மனதைக் கவர்ந்தன. நீங்கள் மிகவும் உயர்தரமான பத்திரிகையாளர்.வாசகனுக்குப்பிடித்தததை விட பயனுள்ள தகவலகளை அளிப்பது உங்கள் பாணி மற்றும் பணி.வகுப்பறையின் மாணவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்./////
நல்லது. உங்களின் அன்பிற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி கிருஷ்ணன் சார். தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். நல்லது கெட்டதுகளை அவ்வப்போது உங்களுடைய பின்னூட்டங்களில் சொல்லுங்கள்!
இந்த பெயர்ச்சியின் மூலம் சனி பகவான் எனது 10ம் இடம்/ராசி இவற்றுக்கு ஐந்தில் இருந்து 6ம் இடத்துக்கு செல்கிறார். இதற்கு முன் இந்த நிலை இருக்கும் போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையில் ஒரு கால கட்டத்தில் தொழிலில் பிரச்சினை வந்தது. அப்போது ஏழரை சனியின் கடைசி பாகம், சனி தசையின் சுய புத்தி, ஜன்ம ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்திலிருந்து 3ம் இடம், நவம்ச (மற்றும் தசாம்ச) சனியிலிருந்து 6ம் இடம் இப்படி வரிசையாக வந்தது.
ReplyDeleteநன்றி ஐயா .முன்பு ஒரு முறை நீங்கள் எழுதியதாக நினைவு . பரல்கள் முந்தைய வீட்டை விட அதிகம் இருந்தால் , பலன்கள் சென்ற 2.5 வருடத்தை விட நல்லபடியாகவும் , குறைவாக இருந்தால், பலன்களும் குறையும் என்று . என் விஷயத்தில் இது சரியாக இருப்பது போல் தெரிகிறது . என் ஜாதகத்தில் கன்னியில் உள்ள பரல்கள் 28. துலாத்தில் உள்ள பரல்கள் 21. கடந்த 2.5 வருடத்தில் கசப்பான / மோசமான அனுபவங்கள் . விருச்சிகத்தில் 27 பரல்கள் . வரும் 2.5 வருடங்களாவது சுமாராக இருக்குமா என்று பார்ப்போம் . என் கருத்து சரியா ?
ReplyDeleteRespected sir,
ReplyDeleteஎந்த கிரகத்தின் பார்வையும் சேர்க்கையும் இல்லாமல் சனி தனியே உச்சமாக இருந்து , வீட்டின் அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றால்.. சனி நன்மையை செய்யுமா?
நன்றி நண்பர் கிருபானந்தன் அவர்களே. 6ம் இடத்து சனி உங்களுக்கு பல நன்மைகளை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete/// அந்தச் சமயத்தில் விரையச் சனிக்காரர்கள் (ரிஷப ராசிக்காரர்கள்) அஷ்டமச் சனிக்காரர்கள் (கன்னி ராசிக்காரர்கள்) ஆகியோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ///
ReplyDeleteஐயா, சனி துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு அல்லவா செல்கிறார். அது எப்படி ரிஷப ராசிக்கு விரையச் சனியாகும்? அதே போல கன்னி ராசிக்கு எப்படி அஷ்டமச் சனியாகும்?