மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.2.14

Astrology: எது முக்கியம்?

 
ஸ்ரீ காசி விஸ்வநாதர்
Astrology: எது முக்கியம்?

எது நமக்கு முக்கியம்?

இறைநம்பிக்கை முக்கியம். இறைவன் நம்மைப் பார்த்துகொள்வான். நம்மை வழி நடத்துவான் என்ற நம்பிக்கை முக்கியம். முதலில் நம்பிக்கை முக்கியம். அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் நிம்மதியுடையதாக இருக்கும்.

துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் விதிப்படி, அதாவது விதித்தபடி நமக்கு வந்து சேருகின்றன.

அவற்றை நீக்க முடியாது. தவிர்க்க முடியாது. யாரிடமும் அவற்றைத் தள்ளிவிட முடியாது. நாம்தான் அவற்றை அனுபவித்தாக வேண்டும். வேலைக்கு ஆள்வைத்து அவற்றை அனுபவிக்கச் சொல்ல முடியாது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அல்லது எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவனவன் விதியை அவனவன்தான் அனுபவிக்க வேண்டும்

அதைத்தான் வள்ளுவப் பெருந்தகை 10 குறள்களின் மூலம் தனது மறை நூலில் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளார். அறத்துப் பாலில் உள்ள (38ஆவது அதிகாரம்) 10 குறள்களையும் படித்துப் பாருங்கள். ஊழ்வினை என்னும் அதிகாரம் அது. (ஊழ்வினை =  Fate, Destiny)

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் ஊழ்வினை அதிகாரத்துடன் தனது அறத்துப்பால் பகுதியை முடித்துள்ளார். ஊழ்வினை அதிகாரத்தைக் கடைசியில் வைத்ததற்குக் காரணமே அதை நமக்கு வலியுறுத்திச் சொல்வதற்குத்தான்.

என்னதான் கடவுளை வணங்கினாலும், நடப்பது விதிப்படிதான் நடக்கும் என்ற செய்தியை நீங்கள் அறிந்து கொள்ளவே அவ்வாறு அது வகைப்படுத்தப் பெற்றிருக்கிறது.

அதுவும் அந்த அதிகாரத்தில் உள்ள கடைசி குறள் மண்டையில் அடித்துச் சொல்வதுபோல அடித்துச் சொல்லப்பட்டிருக்கும்.

17.2.2009 அன்று விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற எனது ஆக்கத்தைப் பதிவில் வெளியிட்டுள்ளேன். அதன் சுட்டி:

http://classroom2007.blogspot.in/2009/02/blog-post_17.html  

அதைப் படித்துப் பாருங்கள் தெளிவு பிறக்கும்

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால், எதற்காக இறைவனைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

விதியைத் தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் நமக்குக் கொடுப்பார்.
-----------------------------------------------------------
இறை நம்பிக்கைக்கு அடுத்தபடி பிரார்த்தனையின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பிரார்த்தனை செய்யும்போது நமக்கு விதியைத் தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும். எந்தச் சூழலையும், சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியமல்லவா?

சிவ வழிபாடுதான் முதன்மையானது.

உலகமெல்லாம் சிவமயம் என்பதை வலியுறுத்தித்தான், ‘உ, சிவமயம்’ என்று எதையும் துவங்குகிறோம்.

Everything is Eshwara; Everywhere is Eshwara. You can not separate Eshwara from Space, earth and time!" என்று சுவாமி தயானந்த சரஸ்வதி அற்புதமாகச் சொல்வார்.  


The creator and the creations are one and the same என்றும் சொல்வார்.

அதைத்தான் கிராமத்து மக்கள்,’ இறைவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான்’ என்று எளிமையாக, அறிந்ததைச் சொல்வார்கள்!

ஜோதிடம் என்ன சொல்கிறது? இறைவணக்கத்தை வலியுறுத்திச் சொல்கிறது. உங்கள் துன்பங்கள் நீங்க ஒவ்வொரு மாதமும் உங்கள் ஜன்ம நட்சத்திரத் தன்று சிவபெருமானை பிரார்த்தனை செய்யச் சொல்கிறது. சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வணங்கச் சொல்கிறது.

சந்தர்ப்பம், சூழ்நிலை, வசிக்கும் நாடுகள், நகரங்களைப் பொறுத்து சிலருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கலாம். அவர்கள் வீட்டில் விளக்கேற்றி அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே பிரார்த்தனை செய்யலாம். ஒரு மூன்று நிமிடம் பிரார்த்தனை செய்தாலும் போதும். ’ஓம் நமச்சிவாயா’ என்ற சிவமந்திரத்தைப் 16 முறைகள் சொன்னால் போதும்.

அறிவுபூர்வமாக ஆதாரத்தைக் கேட்டுக்கொண்டிருக்காமல், பிரார்த்தனையை மட்டும் செய்யுங்கள்.

என்ன நடக்கிறது என்று பிறகு பாருங்கள்!
-------------------------------------------
எதற்காக இந்தக் கட்டுரை?

இன்று மகாசிவராத்திரி. இன்று சிவனை வழிபடுவது மிகவும் விசேடமானது. அதை வலியுறுத்திச் சொல்லவே - இன்று இதைப் பதிவிட்டுள்ளேன்.
மகா சிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். ஒவ்வொரு

மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி நாள் ஆகும் அதனை நினைவில் வையுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்

------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. வாத்தியார் மற்றும் சக மாணாக்கர்களுக்கும் வணக்கம்.
    அரியும் அயனும் அரனின் அடியையும் முடியையும் நோக்கி அகங்கரப் பயணம் கொண்டு அதிலே தோல்வியையுற்று அந்தத்திலே அகங்காரம் ஒழித்து அப்பனைப் பணிந்தேத்திய அற்புத நாள் இந்த மகா சிவராத்திரியை கொண்டாட அழைத்த ஐயாவின் பதிவில்.. ஈசன் என் சிந்தையில் புகுந்து எழுதச் செய்த சில பாடல்களையும் இங்கே எழுதிகிறேன்.

    ‘தோடுடைய செவியன்’ தொண்டரோ ரடியார் தம்
    பா(ட்)டுடைத் தலைவனவன் கண்டுணர்ந்தார் உள்நின்
    ஆடும்கைலை மலையுறைநீல கண்டனின் நீள்கழல் புகழ்
    பாடிப் பணிவாய் பாழும் மனமே!

    வாடிநின்ற பொழுதெல்லாம் தீவினையால் துன்பம்
    கூடிநின்றுனை கொடுமை செய்த பொழுதெல்லாம்
    நாடி ஒடுங்க நரம்போடு ஊனும் ஒடுங்க பரமனைப்
    பாடிப் பணிவாய் பாழும் மனமே!

    இறைவிதனை இடத்தே வைத்தவன் குளிர்வெண்
    பிறைதனை முடியில் தரித்தவன் புலித்தோலுடை
    அறைதனில் அணிந்தவ நந்தஅன்பூற்றான அமுதனைப்
    பாடிப் பணிவாய் பாழும் மனமே!

    உலகினைப் படைத்தவன் உலகெலாம் நிறைந்தவன்
    உளன் இலன் என்பாரின் சிந்தையில் நிற்பவன்
    நலன் தரும் விமலன் விடையேறு நாயகனவனை
    உளமாறப் பாடிப் பணிவாய் மனமே!

    ஈசன் அருள் யாவருக்கும் கிடைக்க அவனருளால் அவன் தாள் பணிகிறேன். நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. Respected Sir,

    God bless you sir. Have a holy day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  3. ஸ்ரீ மஹாசிவராத்திரியின் சிந்தனைகள் அருமை.
    அனைவருக்கும் வளமும் நலமும் விளைவதாக!..

    ReplyDelete
  4. சிவராத்திரி முகூர்த்த நாளா
    சிறப்பான நிகழ்ச்சிகளை அன்று

    தொடங்கலாமா?
    தொழில் அ கிரஹக பிரவேசம் போல

    ஆலோசனைகளை தந்தால்
    அகம் மகிழ்வோம்

    ReplyDelete
  5. ஐயா அவர்களுக்கு

    மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்.

    எது முக்கியம் கட்டுரை அருமையாக இருந்தது, மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

    அன்புடன்
    தனலக்ஷ்மி.

    ReplyDelete
  6. ஐயா அவர்களுக்கு

    மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்.

    எது முக்கியம்? கட்டுரை அருமையாக இருந்தது, மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

    ஓம்நமச்சிவாயா

    அன்புடன்
    தனலக்ஷ்மி.

    ReplyDelete
  7. எல்லா சிவாலயங்களிலும் இரவு முழுவதும் அபிஷெகம் நடைபெறும்.முழு இரவு முழுவதும் கண் விழித்து அபிஷேகம் காணலாம்.அல்லது விடியற்காலையில்
    கடைசி அபிஷேகம் மட்டுமாவது தரிசிக்கலாம். சிவபுராணம் 11 முறை வாசிப்பது நல்லது.

    ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்!

    ReplyDelete
  8. Blogger G Alasiam said...
    வாத்தியார் மற்றும் சக மாணாக்கர்களுக்கும் வணக்கம்.
    அரியும் அயனும் அரனின் அடியையும் முடியையும் நோக்கி அகங்கரப் பயணம் கொண்டு அதிலே தோல்வியையுற்று அந்தத்திலே அகங்காரம் ஒழித்து அப்பனைப் பணிந்தேத்திய அற்புத நாள் இந்த மகா சிவராத்திரியை கொண்டாட அழைத்த ஐயாவின் பதிவில்.. ஈசன் என் சிந்தையில் புகுந்து எழுதச் செய்த சில பாடல்களையும் இங்கே எழுதியிருக்கிறேன்.

    ‘தோடுடைய செவியன்’ தொண்டரோ ரடியார் தம்
    பா(ட்)டுடைத் தலைவனவன் கண்டுணர்ந்தார் உள்நின்
    ஆடும்கைலை மலையுறைநீல கண்டனின் நீள்கழல் புகழ்
    பாடிப் பணிவாய் பாழும் மனமே!

    வாடிநின்ற பொழுதெல்லாம் தீவினையால் துன்பம்
    கூடிநின்றுனை கொடுமை செய்த பொழுதெல்லாம்
    நாடி ஒடுங்க நரம்போடு ஊனும் ஒடுங்க பரமனைப்
    பாடிப் பணிவாய் பாழும் மனமே!

    இறைவிதனை இடத்தே வைத்தவன் குளிர்வெண்
    பிறைதனை முடியில் தரித்தவன் புலித்தோலுடை
    அறைதனில் அணிந்தவ நந்தஅன்பூற்றான அமுதனைப்
    பாடிப் பணிவாய் பாழும் மனமே!

    உலகினைப் படைத்தவன் உலகெலாம் நிறைந்தவன்
    உளன் இலன் என்பாரின் சிந்தையில் நிற்பவன்
    நலன் தரும் விமலன் விடையேறு நாயகனவனை
    உளமாறப் பாடிப் பணிவாய் மனமே!

    ஈசன் அருள் யாவருக்கும் கிடைக்க அவனருளால் அவன் தாள் பணிகிறேன். நன்றிகள் ஐயா!///////

    அடடா, ஆலாசியம் கோவிந்தசாமியா? வெகு நாட்களுக்குப் பிறகு, உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஆலாசியம். சிவனின் மேல் இயற்றிய பாடல்கள் அருமை. சிவனருள் உங்களுக்குக் கிடைக்கட்டும். நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    God bless you sir. Have a holy day.
    With kind regards,
    Ravichandran M./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger துரை செல்வராஜூ said...
    ஸ்ரீ மஹாசிவராத்திரியின் சிந்தனைகள் அருமை.
    அனைவருக்கும் வளமும் நலமும் விளைவதாக!../////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Blogger dhana lakshmi said...
    ஐயா அவர்களுக்கு
    மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்.
    எது முக்கியம்? கட்டுரை அருமையாக இருந்தது, மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.
    ஓம்நமச்சிவாயா
    அன்புடன்
    தனலக்ஷ்மி///////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    எல்லா சிவாலயங்களிலும் இரவு முழுவதும் அபிஷெகம் நடைபெறும்.முழு இரவு முழுவதும் கண் விழித்து அபிஷேகம் காணலாம்.அல்லது விடியற்காலையில்
    கடைசி அபிஷேகம் மட்டுமாவது தரிசிக்கலாம். சிவபுராணம் 11 முறை வாசிப்பது நல்லது.
    ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்!/////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ///அடடா, ஆலாசியம் கோவிந்தசாமியா? வெகு நாட்களுக்குப் பிறகு, உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஆலாசியம். சிவனின் மேல் இயற்றிய பாடல்கள் அருமை. சிவனருள் உங்களுக்குக் கிடைக்கட்டும். நன்றி! ///

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com