மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.2.14

Astrology: பனியில்லாத மார்கழியா, படையில்லாத மன்னவரா?

 
Astrology: பனியில்லாத மார்கழியா, படையில்லாத மன்னவரா?

பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா?

அழகில்லாத ஓவியமா
ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா
மலரில்லாத பூங்கொடியா?

தலைவனில்லாத காவியமா
தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா
காதலில்லாத வாலிபமா?

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா?

1963ல் வெளிவந்த புரட்சித் தலைவரின் ஆனந்தஜோதி திரைப்படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாக எழுதிய பாடலின்
வரிகளை மேலே கொடுத்துள்ளேன்.

எத்தனை செய்திகளைத் தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார் பாருங்கள்.
--------------------------------------------------------------------------
நம் வாழ்க்கையும் அப்படிப் பட்டதுதான். நல்ல குடிப்பிறப்பு, தாய், தந்தை, கல்வி, வேலை, கைநிறைய வருமானம் அல்லது உட்கார்ந்து சாப்பிடும்
அளவிற்கு சொத்து, நல்ல மனைவி, சொன்னதைக் கேட்கும் பிள்ளைகள், அன்பால் உருக வைக்கும் உறவினர்கள், உபத்திரவம் இல்லாமல்
கைகொடுக்கும் நண்பர்கள் வட்டம் என்று எத்தனையோ உள்ளன.

எல்லாமுமே எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறதா என்றால், ஆயிரத்தில் ஒருவருக்கு இருக்கலாம். மற்றவர்களுக்கு சில் இருக்கலாம். சில இல்லாமல்
படுத்தலாம். வருவதை, கிடைப்பதை ஏற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை!
------------------------------------------------------------
Quiz No.42: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தியிரெண்டு.

20.2.2014

Write your answer to the queries
: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள்! (உங்களில் பலர் தேறிவிட்டார்கள். ஆகவே இரண்டு கேள்விகள்)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அன்பரின்  கல்வித் தகுதி, மற்றும் நிதி நிலைமையை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள். அதாவது அன்பர் படித்தவரா? அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? (பட்டப் படிப்பு அல்லது உயர்நிலை முதுகலைப் படிப்புவரை பயின்றவரா? படிக்காதவர் என்றால் எந்த வகுப்பு வரை படித்திருக்கலாம்? ஸ்கூல் டிராப் அவுட்டா? ஜாதகத்தை அலசி, காரணத்துடன் எழுதுங்கள். அத்துடன் அன்பர் பணக்காரரா? அல்லது ஏழ்மை மிகுந்தவரா - அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துகிறவரா?அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===========================================================

31 comments:

Dallas Kannan said...

Respected Sir
My quick analysis.

Education:
Would not have crossed School.
4hr lord is in 12the place of itself.
With laknathipath/8th lord.
only good thing is Guru looks at it.
Butha is in 5th/friendly place, but in rasi Santhippu.
After 13 years Rahu Dasa starts.

Wealth:
Cannot be rich. Will barly survive.
Mandi in in 2nd place.
2nd lord is in 10th place, but neecham and no benefic look
11th lord is in5th place looking its own place. But it is in enemy’s house and with 12th lord.
10th lord is uchham, but in 8th place.

Sathyanarayanan said...

Result: 1) The native has studied upto Post Graduation. He may be a double PG holder as well with lot of efforts. He could be a professor in college.

2) He is average in terms of finance. Most of his money would have gone in the expenditure of raising children and family. But he had enough me to meet his family needs and some savings too.

Reason: 1) Budha Adithya yoga in 5th house with Guru's 9th aspect.
Though saturn and mars are aspecting it. Saturn is aspecting its own house.

2) His money flow is good because of 11th lord in 5th aspecting the 5th house.

3) His savings is average because of mandi in 2nd house though Uccha chandra is aspecting the second house. Guru (Dhanakaraka) in the 9th house. 2nd lord in 10th house but debilitated.


thozhar pandian said...

ஜாதகர் பள்ளிப்படிப்பை முடித்திருக்க மாட்டார். 4ம் வீட்டு சனி பகவான் 4ம் வீட்டிற்கும் அதில் அமர்ந்திருக்கும் கல்விகாரகர் புதனுக்கும் 12ல். இலக்கினாதிபதியும் 3ம் வீட்டில். 4ம் வீட்டிற்கு எந்த சுபகிரக பார்வையும் இல்லை. ஆனால் 4ம் வீட்டுக்காரனுக்கு குரு பார்வை உண்டு. இருப்பினும் குரு துலா இலக்கினத்திற்கு 3 மற்றும் 6ம் வீட்டுக்காரர் (வில்லன்). படிக்கும் வயதில் செவ்வாய் மற்றும் இராகு தசை. புதன் துலா இலக்கினத்திற்கு பாக்கியாதிபதியும் கூட. அவர் 4ம் வீட்டில் உள்ளதால் ஜாதகர் பள்ளிக்கு சென்றிருப்பார், ஆனால் படிப்பை முடித்திருக்க மாட்டார். ஏட்டு படிப்பு இல்லை என்றாலும் வித்யாகாரகரின் அருளால் வியாபாரத்திலோ ஏதாவது கலையிலோ வித்தகராக இருந்திருப்பார்.

2ம் வீட்டில் மாந்தி. 2ம் வீட்டுக்கார செவ்வாய் நீசம். ஜாதகர் ஏழையாக பிறந்திருப்பார். ஆனால் இலாபாதிபதி சூரியன் தனது வீட்டை 5ல் இருந்து பார்ப்பதாலும், செவ்வாய் நீசமாக இருந்தாலும் 10ம் வீட்டில் இருப்பதாலும், தனகாரகர் குரு பகவானின் பார்வை இலக்கினத்திற்கும், இலக்கினாதிபதிக்கும், துலா இலக்கினத்திற்கு யோக காரகரான சனி பகவானுக்கும், சனி பகவானின் வீடான 5ம் வீட்டில் இருக்கும் இலாபாதிபதி சூரியனுக்கும் கிடைப்பதால் ஜாதகர் வியாழ தசையில் இருந்து தனது உழைப்பின் மூலம் உயர்ந்து செல்வந்தராகியிருப்பார். சனி தசையிலும் புதன் தசையிலும் இவருக்கு பெரும் உயர்வு இருந்திருக்கும்.

Kirupanandan A said...

ஜாதகருக்கு இருக்கும் புத ஆதித்ய யோகமே (புத்தி ஸ்தானமான 5ல்) அவர் பட்டப் படிப்பு படித்தவர் என்று சொல்ல வைக்கிறது.

2ல் மாந்தி இருப்பதையும் 2ம் அதிபதி செவ்வாய் நீசமாக இருப்பதையும் வைத்துப் பார்த்தால் எப்போதும் பணக் கஷ்டம் இருக்கும் என்று சொல்ல வேண்டியதாகிறது. பணம் வரும் ஆனால் தங்காது.

வேப்பிலை said...

என்னுடைய ஜாதகத்தை
என்றைக்கு அலசல் பகுதிக்கு

எடுத்துக் கொள்வீர்கள்..
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்

KJ said...

Native could have completed his under graduation as budhan sits second of 4th house.

He could be government employee as 10th house owner chandran got ucham and financially he is normal. Not rich nor poor.

amuthavel murugesan said...

மதிப்பிற்குற்ய ஐயா,
புதிர் தொடர் - பகுதி நாற்பத்தியொன்றிற்கான பதில்
1. 4 ஆம் இடம் ஆரம்ப்க்கல்வி.4 ஆம் இடத்து அதிபதி அதற்கு 12ல் இருப்பதால்
கல்வி தடைப்பட்டு இருக்கும்.5 ல் புதஆதித்ய யோகம் இருப்பதால் நல்ல புத்தி கூர்மை
பெற்றவராக இருப்பார்.

2. 9 ஆம் இடத்தில் குரு மற்றும் 11 ஆம் இடத்து சூரியன் நல்ல பண வரவு இருக்கும்,ஆனால்
2 ல் மாந்தி மற்றும் 2 ஆம் இடத்து செவ்வாய் 8 ல் பணம் கையில் தங்காது.

மு.சாந்தி

Srinivasa Rajulu.M said...

படிப்பிற்கும், வெளிநாட்டு சம்பாத்தியத்திற்கும் குறைவில்லை.
உச்சனான பத்தாமதிபதியும், நான்காம் இடத்தைப் பார்க்கும் நீசபங்கமாகி நாலாம் இடத்தைப் பார்க்கும் செவ்வாயும் ஆறாம் இடத்து ராஹுவும், ஒன்பதாமிட குருவும், ஐந்தில் நிபுண யோகத்தில் இருக்கும் கல்வி காரகனும், முக்கோண பரிவர்த்தனையில் இருக்கும் புதன், கல்விஸ்தானாதிபதி மற்றும் குரு ஆகியோரும் உயர்ந்த கல்வியையும் கொடுத்திருப்பார்கள்; நல்ல உத்தியோகத்தையும் தந்திருப்பார்கள். யோககாரகன் சனியுடன் மறைவில் நிற்கும் லக்னாதிபதியும் வெளிநாட்டில் இவர் கொடிகட்டி வாழ்வதைச் சொல்கின்றன.

Hari Krishna said...

4 மற்றும் 5 க்கு அதிபதியும் லக்னாதிபதியும் 3 இல் மறைவு. 8 இல் சந்திரன் (1௦ ஆம் இடத்து அதிபதி) மறைவு. ஆகவே படிப்பு மற்றும் தொழில் கிடையாது. ஆனால் 5 இல் சூரியன் புதன் கூட்டணி. ௧௨ இல் கேது . ஆகவே, ஞானி & புத்திசாலி. 2-இல் மாந்தி மற்றும் சுக்கிரன் 3 இல் மறைவு. இதனால் பணவரவு குறைவு தான். ஆனாலும், 9 இல் குரு. வாழ்க்கைக்கு தேவையான அளவு பணம் வந்து கொண்டே இருக்கும். பிழைத்துக் கொள்வார். ஆனால் சேமிப்பு குறைவு.

C Jeevanantham said...

Dear Sir,

The given horoscope person did not study beyond school. 4th lord in 3rd and maandhi is close to 4th lord.

He is poor due to 2nd lord neecham and maandhi is in 2nd place. Uccha chandran aspects reduces some ill effects. So he earn and spend what he earns.

Thanking you,
C.Jeevanantham.

Saravanan J said...

Dear Sir,
Here I want to answer for the quiz no 41.
1. Lagna lord is neecha mars
2. Native may be the (degree or doctorate) completed person
3. But there may be more struggle and delay in completion of his degree due to 4th lord (sani) in third house , which it is 12th place from the 4th house.
4. In his chart sun and mercury are combined, so it shows budha-adhitya yogam . i.e he is well educated and talented person.
5. Native may well and good wealthy person,(2 ,8)lord and 5th lord are combined. 11th lord placed in 5th place.( 2,5,8,11) are panaparasthanam. So it shows he is well settled.

Thanks and regards
SARAVANAN.J
9791187693

bg said...

பிறந்த நாள் : 26.02.1931
பண வரவு நன்றாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
காரணம்
2 – இல் மாந்தி
2 – அதிபதி செவ்வாய் நீசம் அடைந்த போதும் சுயபரல்கள் 7 உள்ளதால்
நிதி நிலை நன்றாகவே இருக்கும்.

கல்வி நிலை
புத ஆதித்ய யோகம் உள்ளது.
9 இல் குரு உள்ளார்.
கல்லூரி படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது.

Uma said...

நிச்சயம் ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்:


1. லக் அதி நான்காம் அதி உடன் சேர்க்கை, அதற்கு குரு பார்வை

2. காரகன் புதன் சூரியனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகம் அதுவும் ஐந்தாம் இடத்தில், மேலும் புதன் தனது நட்பு வீட்டில் நட்பு கிரகத்துடன்


இருப்பினும் நான்காம் அதி அதன் பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் படிப்பில் தடங்கல்கள் ஏற்பட்டிருக்கலாம்.


பணவரவு திருப்தியாக இருந்தாலும் செலவும் அதிகமிருக்கும். அல்லது பனிரெண்டில் இருக்கும் கேது பணத்தின் மீது பற்றில்லாத் தன்மையைக் கொடுத்திருக்கலாம். அல்லது ஒன்பதில் இருக்கும் குரு தர்ம காரியங்களில் ஈடுபடுத்தியிருக்கலாம் :.


1. இரண்டில் மாந்தி, இரண்டாம் அதி பத்தில் நீச்சம். இருப்பினும் பத்தாம் அதி எட்டில் உச்சம்.

2. லக் அதி பகை கிரகத்துடன் இருப்பினும் காரகன் குருவின் பார்வை இருக்கிறது

3. காரகன் குரு ஒன்பதில் நல்ல இடத்தில் (ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு !!!!)

4. லாப பாக்கிய அதிபதிகள் கூட்டாக ஐந்தில், லாப வீட்டை பார்க்கின்றன. இருப்பினும் சூரியன் பகைவீட்டில்

sundari said...

வணக்கம் சார்
இவர் பட்டமேற்படிப்பு (முதுகலை)படித்தவர்.காரணம் புதன் சூரியன் கூட்டு 9ஆம் அதிபதி புதன் அந்த விட்டிற்கு 9ல் அதோடு முதுகலை பட்டதை குறிக்கும் 9ல் குரு அப்புறம் 6ல் ராகு அந்த ராகு நல்ல செல்வத்தை கொடுக்கும் துல லக்னதிபதி சுக்கிரன் யோகதிபதி சனியோடு சேர்ந்து முன்னேற்ற ஸ்தானம் மூன்றிலிருக்கிறார் யோககிரகம் புத்ன் ல்ஷ்மிஸ்தானத்திலிருகிறார். பணமிருக்கும் 2ல்மாந்தி2ஆம் அதிபதி செவ்வாய் நீசமானாலும்கூட் மேலும் ராகு சகல் வசதி கொடுத்திருபார் குரு அவவள்வு செய்திருக்கமாட்டார் சனி புத்ன் மகாதிசை ரொம்ப யோகமாயிருக்கும்.

Star Roofing Sheets said...

படிப்பு கிடையாது பள்ளி வாழ்க்கை மட்டுமே, ஆனால் பணம் இருக்கும், 9 11 க்கு அதிபதிகள் சேர்ந்து 5 இல் இருப்பதும் அதனை குரு பார்ப்பதும் 10 ஆம் அதிபதி உச்சமாக இருப்பதும் காரணம். 2 ஆம் ஆதி நீசமாக இருந்தாலும் வீடு கொடுத்தவர் உச்சமாக இருப்பதினால் பணத்தினை கொடுத்தே ஆகவேண்டும், படிப்பு பெரிதாக இல்லாமல் போனதிற்கு காரணம் 2 ஆம் ஆதி நீசம் 4 ஆம் அதி தனக்கு 12 இல் , புதன் சர லக்கினமான துலாத்திர்க்கு மாரகாதியான சூரியனுடன் கூட்டு அதனை 6 ஆம் ஆதி பார்ப்பது போன்ற காரணங்களினால், ராகு திசை அற்புதமாக அமைந்து இருக்கும் குருவும் 3 6க்கு அதிபதியானாலும் 9 இடம் ஏறி இருப்பதினால் தனது கெடுதல்களை குறைத்தே கொடுக்கும்

Kalai Rajan said...

அய்யா
ராசி கட்டங்களை வைத்து ஜாதகர் ஆணா அல்லது பெண்ணா என்று கண்டுபிடிக்கமுடியுமா?. சாத்தியம் என்றால் அதை வைத்து ஒரு போட்டிவையுங்கள்

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 41 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

ஆரம்ப கல்வி ஸ்தான அதிபதி செவ்வாய் 10ல் நீசம் ஆனாலும், உச்சம், வர்க்கோத்தமம் பெற்ற சந்திரனால் நீசபங்கம் ஆகிறார். அதனால் ஆரம்ப கல்விக்கு தடையில்லை.

கல்வி ஸ்தானமான 4ம் ஸ்தான அதிபதி சனி, அந்த இடத்துக்கு 12ல் இருப்பதால் கல்விக்கு தடை ஏற்படும். ஆனால் 5ம் ஸ்தானத்தில் புதன், சூரியனோடு சேர்ந்து, குருவின் பார்வை பெற்று இருப்பதால் பள்ளி இறுதி வரை படித்திருப்பார்.

உயர்கல்வி ஸ்தானத்தில் குரு இருந்தாலும் சனியின் நேரடிப் பார்வையில் இருப்பது உயர்கல்விக்கு தடை ஏற்படுத்தும்.

தன ஸ்தான அதிபதி நீச பங்க ராஜ யோகம் பெறுவதால், ஜாதகர் பணக்காரர்.

தன ஸ்தான அதிபதி 10ம் வீட்டில் இருப்பதும், 10ம் விட்டு அதிபதி சந்திரன் 8ல் உச்சமாக இருப்பதும் இவர் பணக்காரர்தான் என்பதை உறுதி செய்கிறது..

இளைய பல்லவன் said...

ஐயா வணக்கம்!

விடை:-
கல்வி - பள்ளிப்படிப்பு (or Dropout) மட்டுமே. பட்டப்படிப்போ, உயர் படிப்போ இல்லை.
செல்வம் - பணக்காரர். சுய முயற்சி.

அலசல்:-
1931ல் பிறந்த ஜாதகரின் கிரக அமைப்பு:
1. துலா லக்னம். லக்னாதிபதி 3ல், இந்த லக்னத்திற்கு யோக காரகனான சனியுடன் சேர்க்கை. பகைவீட்டிலிருக்கும் குருவின் பார்வை பெற்ற லக்னாதிபதி, யோக காரகன்.

2. 2, 7க்குடைய செவ்வாய், 10ல் நீசம்.

3. 11க்குரிய சூரியன் 5ல் பகை வீட்டில். உடன் புதன். ஆனாலும், குருவின் 9ம் பார்வை.

4. 2ல் மாந்தி

5. 6ல் ராகு, 12ல் கேது.

6. 6ம், 8ம் அதிபதி சேர்க்கை - விபரீத ராஜயோகம்.

தசா காலம்
4 வயது வரை சந்திர தசை, 11 வரை செவ்வாய், 29 வரை ராகு, 45 வரை குரு, 64 வரை சனி.


கல்விக்கான அமைப்பு- 4ம் இடம், அதில் அமர்ந்த கிரகம், அதன் அதிபதி, புதன்.

4க்கு சுபர் பார்வை இல்லை. 4ம் அதிபதி 4க்கு 12ல் மறைவு. புதன் 5ல்.
சனியும், புதனும் குருவின் பார்வை பெறுவதால், பள்ளிக்கல்வி வரை மட்டுமே படிப்பு. படிக்கும் காலத்தில் ராகு தசை.

செல்வம்:-
2ம் இடம், அதில் அமர்ந்த கிரகம், 2ம் அதிபதி, குரு.

2ல் மாந்தி, 2ம் அதிபதி நீசமடைந்து 10ல் மறைவு, உச்சமடைந்த சந்திரனின் பார்வை.

2ம் இடம் சுமார் என்றாலும், குரு, சுக்கிரனின் விபரீத ராஜயோகத்தால், நல்ல நிதி நிலை.

துலா லக்னத்திற்குப் பாதகர்களான குரு, சூரியன், செவ்வாய் ஆகியோர் பகை, நீசத்தில் இருப்பது ஜாதகருக்கு மேன்மையளித்திருக்கிறது.

29 வயது வரை கடுமையான உழைப்பு. பிறகு குரு தசை முதல் உழைப்பால் உயர்ந்த நிலை.

வெங்கடேஷ் கிருஷ்ணன் (எ) இளையபல்லவன்

Ramesh Balakrishnan said...

rameshraja1304

quiz: 41

1. school drop-out
2. LIC (Low income group)
3. No Marriage


Reasons:


l lagna has engulfed with pabakarthari yogo (Kethu and Manthi) - but 3rd and 6th lord guru sitting in pagai house - aspects...

l 2nd House has manthi - speech and money not satisfied)

l 2nd lord chevai in 10th house but neesam - no permanent profession - He may be temple gurukal (Ve.. Iyer?)

l 10th lord authority of profession chandran is in 8th house

l 4th lord (education, mother) sani in 3rd house (12th house from his own house) (Maraivu) with laknathipathi Sukran

l 2nd and 7th lord chevai sitting at 10th house (Pagai) - No marriage

l 12th place kethu. His profession in temple.

l Lapathipathi suriyan with 12th lord bhuthan sitting in enemy house

Subamohan Subbu said...

Respected Sir
Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
Thula lagnum , Rishaba rasi

Assessment Of Education:
LAGNUM:
1) Occupied aspected by debilitated Mars & Retrograde Jupiter
LAGNATHIPATHI
1) Venus In third house – but VARGOTHAMAM – STRONG
2) Aspected by Jupiter
FOURTH HOUSE:
Made weak by MARS WHICH IS deblitated
Fourth house owner Saturn at 12 th place – but VARGOTHAMAMAM
NINTH HOUSE:
1) Occupied by Guru – at kona position
2) Ninth house lord 5Th position - Kendra & at 9 th position from his own position
But mercury affected by Saturn & Mars

PREDICTIONS
Though the 4 th house lord is at 12 th position his association with Venus , Guru aspect & Vargothamamam CAN HELP THE PERSON TO GO FOR HIGHER EDUCATION MAY BE UPTO POST GRADUATE LEVEL. Budha Aditya yoga can help this
Assessment Of finance:
1) Second house affected by Mandhi
2) Second house lord debilitated
3) Aspected by Exalted Moon but at 8th house
4) 11th house aspected by 11th house lord who is vargothamam and by 12th house lord.
5) 11th house lord is at Kendra and he is at 7th position from his house
PREDICTIONS
He will earn money but money may not stay with him.Chance of money loss in gambling.

Dr.Mohan
Brunei

ravichandran said...

Respected Sir,

Today's Quiz No is 42. You have written wrongly as 41 .

Bagavathi S said...

Hi Sir,

2nd House: Native will have enough wealth to live.

Moon[Good planet] in exalted sees 2nd place.
Yogakaran Saturn for Thula lagna sees Jupiter[Authority of Money]
2nd place owner Mars[debiliated] sees the lagna.

4th House: Native would not have completed School.

4th house owner[Saturn] is 12th from its place.
6th lord Mars in debiliated position sees 4th place.
No Good vision in 4th place.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.42:

1. The native of the given horoscope has dropped out of school.

2. He has financial difficulties.

1. Reason for not getting education:
i)The fourth lord is sitting twelfth house from its own house alongwith eigth house authority (Venus) and getting third and six house authority (Jupiter). Fourth house authority completely affected.

ii) Vidyakaraga is getting Mars aspect and it is combusted by Sun. Mars aspects forth house also.It's bad sign for education.

iii) In second house, Mandhi is there and also that house authority is debiliated.

2. Reason for financial difficulties:

i) Second house is affected by Mandhi as well as this house authority is debiliated.

ii) Though eleventh house authority (Sun) aspects its own house, it is associated with twelfth lord Mercury. It's bad.

iii) Jupiter is No.1 enemy for Libra lagna,sitting in Gemini and aspects Venus,Saturn,Mercury and Sun.

iv) There is chance to flow of money but no way to save.(broken pot)

v) Kedhu is sitting in twelfth house and which generally lead the native to face difficulties at old age. but that house(12th) authority (Mercury) is sitting with eleventh lord. Hence he can manage.

In short, Langa is under babakathiri yoga and lagna lord clutched by Saturn. Hence the native has to struggle.

With kind regards,
Ravichandran M.

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
ஜாதகர் படித்தவரா, பணம் உள்ளவரா. பார்க்கலாம்.
நான்காம் அதிபதி மூன்றில். ஆனால் குரு பார்வை. குரு அந்த
மூன்றாம் வீட்டுக்குறியவன்.ஐந்தாம் இடத்தில் சூரியன், புதன். குரு
ஒன்பதில் இருந்து சூரியன், புதனை பார்ப்பதால் ஜாதகர் நுண்ணறிவு
படைத்தவர். குரு ஒன்பதில். துலா லக்னத்திற்கு மூன்று, ஆறுக்கு
உரியவன். ஆனால், கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதற்கு
ஏற்ப குரு ஜாதகர் பட்டப்படிப்பு வரை படிக்க உதவி செய்வார். இரண்டில்
உள்ள மாந்தி பட்டமேற்படிப்பு படிக்க இடைஞ்சல் தந்து தடுத்திருப்பார்.
ஆகவே ஜாதகர் பட்ட படிப்புவரை படித்தவர்.
இரண்டில் மாந்தி.இந்த அமைப்புள்ள சிலருக்கு செல்வம் என்பது அகராதியில் மட்டும் தான். பதினோராம் இடத்துக்குரிய சூரியன்,
விரையதிபதி புதனுடன். இலாபாதிபதியும் விரையாதிபதியும் எங்கே சேர்ந்திருந்தாலும் பணம் விரையம் தான் ஆகும். 12ல் கேது. வயதான காலத்தில் கையில் சேமிப்பு என்று எதுவும் இருக்காது. ஆகவே நிதி நிலை சுகம் இல்லை.

அ.நடராஜன்

Chandrasekaran Suryanarayana said...

Quiz No.41 வணக்கம்.
துலா லக்கினம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம்

1. ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.

2. தினமும் உழைத்து சம்ப்பாதிப்பவர். எழ்மையான‌வர்.

இந்த ஜாதகத்தின் பலம் :

சந்திரன் (5 ப‌ர‌ல்) உச்சம் அடைந்து 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது.
ல‌க்கின‌த்தில் 37 ப‌ர‌ல்
5ல் புத,ஆதித்ய‌யோக‌ம்
6ல் ராகு (36 பரல்) தீர்கமான‌ ஆயூள்.

இந்த ஜாதகத்தின் பலவீனம்:

குரு வக்கிரம், செவ்வாய் வக்கிரம், நீசம்
லக்கினம் பாபகர்த்தாரி தோஷம்
4ம் வீடு பாபகர்த்தாரி தோஷம்
2ல் மாந்தி
செவ்வாயின் 4ம் பார்வை லக்கினத்தின்மீது
செவ்வாயின் 7ம் பார்வை 4ம் வீட்டின்மீது
6ம் வீட்டு அதிபதி 7ம் பார்வை 3ம் வீட்டின்மீது
சனி,சுக்கிரன் கூட்டு வர்க்கோத்தமம்.


ல‌க்கினம் (37 பரல்) பாபகர்தாரி தோஷத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது 12ல், மறுபக்கம் மாந்தி 2ல். 10ல் உள்ள நீசமான, வ‌க்கிரமான‌ செவ்வாயின் தீய பார்வையும் (4ம்பார்வை ) லக்கினத்தின் மீது விழுகிறது. லக்கினம் பாதிக்க பட்டுள்ளது. வாழ்க்கை குறை சொல்லும்படியாக அமைந்துள்ளது.

4ம் வீடு கல்விக்கான வீடு. 4ம் வீடு (25 பரல்) பாபகர்தாரி தோஷத்தில் உள்ளது.ஒரு பக்கம் சூரியன் 5ல், மறுபக்கம் சனி 3ல். 4ம் வீடு பாதிக்க பட்டுள்ளது.மேலும், 10ம் வீட்டில் உள்ள வக்கிரமான, நீசமான, செவ்வாயின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது. கல்வி பெற வாய்ப்பில்லை. கல்வி பாதிப்பு, மண அமைதி இருக்காது. தாயுடன் உறவு சுமுகமாக இருக்காது. சொந்த வீடுகள் இருக்க வாய்ப்பில்லை. சொத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

4ம், 5ம் வீட்டு அதிபதி 3ம் வீட்டில் சனியுடன் கூட்டு. 4ம் வீட்டு அதிபதி அதாவது, 4ம் வீட்டிற்க்கு 12ல். கல்வி தடங்கள். கஷ்டங்கள், நஷ்டங்கள், அதிகமாகும். வாழ்க்கை வசதியில்லாமல் போய்விடும்.வருமானத்தைவிட செலவுகள் அதிகமாக இருக்கும்.

6ம் வீட்டு அதிபதி வ‌க்கிரமான‌ குருவின் பார்வை 4ம் வீட்டின் மீது 8ம் பார்வையாக இருப்பதால், மேலும் கல்விக்கு தடங்கள்.

சனியின் 3ம் பார்வை 5ம் வீட்டில்ள்ள புதன் மீதும் பார்ப்பதால் ஜாதகனின் நுண் அறிவிற்க்கும் தடங்கள்.

எந்த சுப கிரகங்களின் பார்வையும் 4ம் வீட்டின் மீது இல்லை.

4ம் வீடு பூரணமாக் கெட்டு இருக்கிறது. கல்விக்கு பாதிப்பு அதிக‌ம்.

நிதி நிலமை:
சனி அமர்ந்த வீடும் பார்வை பெற்ற வீடும் நன்மையளிக்காது.

2ம் வீட்டில் மாந்தி. 2ம் வீடு (28 பரல்). ஜாதகன் வறுமையால் வாட நேரிடும்.சொத்துக்கள் இருக்காது.நாவன்மை பங்கு எற்படும். விதண்டாவாதம் செய்யகூடியவன்.

உச்சமான சந்திரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் நிதி மேலான்மைக்கு இது இடைஞ்சல்.

11ம் வீடு தன் சொந்த முயற்ச்சியால் சம்பாதிப்பது.11ம் வீட்டு அதிபதி சூரியன்(4 பரல்) 5ம் வீட்டில் சனியின் 3ம் பார்வையுடன் இருப்பதால் 11ம் வீட்டு அதிபதி பாதிக்கப்பட்டுள்ளதால் செல்வத்திற்க்கு மற்றவர்களின் எதிர்ப்பார்ப்பை பெற‌வேண்டும்.

5ம் வீட்டு அதிபதி சனி 3ல், தன் வீட்டையே 3ம் பார்வையால் வைத்துள்ளார். துர்திஷ்டம்.

ராசியிலும், நவாம்சத்திலும் சனி, சுக்கிரன் கூட்டு வர்க்கோத்தமம் அடைந்துள்ளது. திருமணம் ஆனவுடன், மனைவியின் மூலம் ஜாதகர்க்கு செல்வம் கிடைக்க வழியிருக்கிறது.

10ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டிலுள்ளபடியால், வேலையில் அடிக்கடி மாற்றம் எற்படும். தடைகள் எற்படகூடும்.பணிகாலம் மிக குறுகியதாக இருக்கும். கட்டிடம் கட்டும் சம்பந்தப்ப‌ட்ட தொழிலில் வேலை செய்வார்.

சனியின் 10ம் பார்வை 12ம் வீட்டின் மீது. அயனம், சயனம், போகம் பாதிப்பு.

3ல் இருக்கும் சுக்கிரன் வீட்டில் உள்ள உறவை கெடுக்கும். நிலைதடுமாறி விடுபவர்.

இந்த ஜாதகத்தில் சொல்லும்படியாக எந்த யோகமும் இல்லை.
சந்திரசேகரன் சூரியநாராயணன்

Chandrasekharan said...

Respected sir.

En system repair aadhalal mobile-il type seigiraen.. mistakes irundhal mannikavum...

Indha jadhagar siridhu kaalam mattumey palliku sendriruppar... Nalla kalvi 100% Illai... karanam 4 aandugal kalithu neecham petra chevvai dhasa and 4m adhipathy sani avar veetirku 12il and neecham petra chevvai paarvai 4... karagan budhan 5 il irupadhal konja natkal palli sendrirupar...

Kaikum vaaikumana nilai illai... 2-il mandhi irundhlum.. adhipatthy neechamaga irundhalum.... chandran uccha parvai 2veedu and karagan guru trikonathil.... adhanal kaikum vaikumana varavu illai.. oru alavu nalla selvam irukkum...


Thank you

vanikumaran said...

ஜாதகர் படிக்காதவர்.
1.கல்விக்கு 4ம் வீடு. பாபகத்தாரி யோகத்தில்
2.4ம் அதிபதி சனி 4க்கு 12ம் இடத்தில்
3.கல்விக்கு காரகன் புதன் பாதகாதிபதி சூரியனுடன்


பணவரவிற்க்கு
1.2ம் வீட்டில் மாந்தி இது ஏழ்மை நிலை
2. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம்
3.10ம் அதிபதி உச்ச சந்திரன் 2ம் வீட்டை பார்பதால் தொழில் மூலம் பணவரவு இருந்தாலும் லாபம் இல்லை. 11ம் அதிபதி லாபாதிபதி பாபகத்தாரி யோகத்தில். உடன் 12ம் அத்பதி

கைக்கும் வாய்க்கும் ஆன நிலை.

பூர்வபுண்ணியாதிபதி சனி அஸ்டமாதிபதி சுக்ரனுடன் உள்ளதால் பலன் இல்லை

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
Quiz No.42.
துலா லக்னம் ,ரிஷப ராசி .திசை இருப்பு 4.1.7.,
கல்வி .படிப்பு :...
1.லக்னத்திற்கு 4 மிடம் கல்வி ஸ்தானம் ...அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12ல் தனுசில் .
2.5 மிடம் நுண்ணறிவு .அங்கே புதன் சூரியன் கூட்டணி புத ஆதித்ய யோகம்
[சூரியனுக்கு பகை வீடு -புதன் சம வீடு ]கல்வி கற்காமல் பல கலைகளும் தெரிந்தவர்.பலதுறை நிபுணர்
3. கல்விகாரகன் புதன் இருப்புக்கு 12 மிடம் 4ம் வீடு
ஆகவே உயர் கல்வி இவருக்கு இல்லை ..பள்ளி படிப்போடு சரி..!!
செல்வம் :....
2,5,9,10,11 இடங்களை வைத்து பார்த்தால்...
1...2ல் மாந்தி ஒ ஒ ஒ ஒட்டை வாளி ..2&7குடையவன் செவ்வாய் 9ல் நீசம்
2... 5,9.மிடம் வைத்து பார்க்கும் போது பூர்வ புண்ணியம் குறைவுதான் !!
3..10ல் செவ்வாய் நீசம் 10ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டில் உச்சம்.அது சந்திரன்.!! ..போச்சு..போச்சு...எல்லாம்.. போச்சு.. அது தர்க்கம் விவாதம் பண்ண சரி ..!!
4..11ம் வீட்டதிபதி 5ல் பகை வீட்டில் ..
5..ஆக ராஜ கிரகமான.சூரியன்&சந்திரன் வலுவிழந்து போனார்கள்
6...லக்னாதிபதி 3ல் சனியுடன் துலாத்துக்கு யோககாரகன் சனி அவன் .3ல். பிரயோஜனம் இல்லை ..6&12 ல் கேது இருப்பதால் வாழ்க்கை பாடம் இதுதான் என கண்டு மனம் தேற்றி ஞானி போல் வாழ்வார்.
செல்வம் ...**செல்வோம்**

***ஆக கல்வி இந்த நபருக்கு பள்ளி படிப்போடு சரி.பலதுறை நிபுணர் .**.!!
***ஆக ஏதாவது ஒரு வகையில சம்பாத்தியம் வந்தாலும் கைல தங்காது??
வாய்க்கும் கைக்குமான வருமானம் ..***

உணர்ந்தவை! said...

Hello Sir
Mrigashirsha
26/02/31 05:08 PM - 27/02/31 04:54 PM

Rogini is not matching. Let us see as per mine.
Seems a perfect one, so person could be college plus and earns enough.

2nd lord neesa bhanga, 4th in 3rd, but with aspects by guru, education could have been better.

11th and 9th in 5th
aspected by 2nd lord, enough to say rich.
Thanks
satya

S.Namasu said...

Dear sir:
My answer for Quiz no:42

JATHAKAR PATTAPATIPPU PADITHAVAR

Reasons:
1.Putha athithya yogam in 5th house (thirikonam)

2.Kuru (9th house from lagna -thirikonam) 9th parvai on 5th house.

3.Kalvi shthana athipathi Sani (3rd house) is sitted 12th house(from 4th house) though Kuru 7th parvai on 3rd house.

4.Chanthira thasi 4Y 1M 7D, then Ragu (18) 22Y 1M 7D, then Kuru (16) 38Y 1M 7D.... so 9th house thasai also for higer study....

JATHAKAR PANAKARAR (BY HIS EITHER FATHER OR PORVIKA PROPERTY)BUT HE WILL LOSE.....

Reasons:
1)Kuru is in 9th house (thirikonam)(pakai veedu 50%) for
*Pakiya shthanam*

2)Mandi is sitted in 2nd house & Utcha chanthiran (8th house from lagna)parvai on 2nd house. so NO SAVINGS (to avoid money to be given to his well-wishers)

4. Laba shtana (11th house)athipathi "Suriyan" is sitted in 5th house (thirikonam from lagna but pakai veedu so 75% power) and from his place 7th house, also his 7th parvai on 11th house... revenue will come often....

Thank You & I am waiting for your
result.....
by S.NamasuGovindasamy said...

4,5 க்குரிய சனி 3ல் ஆனால் குரு பார்வையில்.
பள்ளிப் படிப்பை முடித்திருப்பார். ஆனால் சிறப்பாக இருக்காது.
9க்கு உரியவன் 5ல் சிறப்பான இடத்தில். மேலும் 9க்குரியவன் 9லிருந்து 9ம் இடத்தில். குரு பார்வையுடன்.
ஆசாமி மேல் படிப்பிலும் ஞானத்திலும் கெட்டி. புத ஆதித்ய யோகம் வேறு. மிகச் சிறப்பான புத்திசாலி.
2க்கு உரிய செவ்வாய் 10ல் உழைப்பிற்கு பலன் உண்டு ஆனால் 2ல் மாந்தி மனிதர் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக வாய்ப்புண்டு. குடி அதிகமாக இருக்கலாம். 10க்குரிய சந்திரன் 8ல் . ஆசாமி consultation business , சுய உத்தியோகம் பார்ப்பவராக இருக்கலாம். 9ம் இடமும் 9க்குரியோனும் வலுவாக இருப்பதால் இவருக்கு எல்லாம் பாக்கியமாகக் கிடைக்கும். சூரியன் 5ல் இருப்பதால் அப்பாவினுடைய சொத்தை அனுபவிப்பார். பரம்பரை பணக்காரராக இருக்க வாய்ப்புண்டு.