மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

11.2.14

பொன்னான மனிதருக்கோர் புகழஞ்சலி!!

 

பொன்னான மனிதருக்கோர் புகழஞ்சலி!!

திரு சிவகுருநாதன் என்ற தஞ்சாவூர் அன்பர் தூய‌ அன்னை ஸ்ரீசாரதாதேவியாரின் பக்தர்.அன்னதானச் சேவையில் அதிக ஊக்கம் கொண்டவர்.

தினசரி சரியாகக் காலை 8.45 மணிக்கு 400 இட்லிகள்/சாம்பார் வாளியுட‌ன் தஞ்சாவூர் பெரிய கோவிலின் எதிரில் ஆஜராகி விடுவார்.தஞ்சை இராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்குத் துணையாக‌ வந்துள்ள நபர்களும்,சில சமயம் நோயாளிகளுமே, இந்த இலவச காலை உணவிற்கு வந்து விடுவார்கள்.சுமார் 50‍‍,60  நபர்களுக்கு இலவச காலை உணவு மலர்ந்த முகத்துடன் அளிக்கப்ப்டும். மேலும் சில முதியவர்களும் வழக்கமாக நாள் தோறும் வருவார்கள். தயாரித்து வந்துள்ள இட்லிகள் அனைத்தும் காலியாகும் வரை திரு சிவகுருநாதன் தானே பரிமாறுவார். கடந்த‌ பல்லாண்டுகளாக இந்த நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் வடை பாயசத்துடன் 600 சாப்பாடு தயாரித்து 'டிரக்' வண்டியில் கொண்டு சென்று தஞ்சையைச் சுற்றியுள்ள அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு அளிப்பார்.

மனையேரிப்பட்டி தொழுநோயாளிகள் இல்லத்தில் தீபாவளி பொஙகல் போன்ற விசேட நாட்களில் ஆடைகளுடன் இனிய உணவும் அளிப்பார்.

அனாதைப் பிரேதங்களை எடுத்து தக்க மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளைச் செய்வார். சுனாமி வந்தபோது நாகைப்பட்டினத்தில் 500 உடல்களைப் புதைத்த அனுபவமும் அவருக்கு உண்டு.

இப்படிப்ப‌ட்ட சேவைச் செம்மல் கடந்த 17 ஜன‌வரி 2014 அன்று தன் முடிவை எய்திவிட்டார். ஆம்! 17 ஜன்வரி மாலை 5 30 மணிக்கு மனையேரிப்ப‌ட்டிக்கு உணவினை எடுத்துச் செல்லும் போது செங்கிப்ப‌ட்டி அருகில் அவருடைய
டி வி எஸ் 50 இரு சக்கர வாகனத்தை ஒரு மாருதி கார் பின்னிருந்து மோதித் தள்ளி அதே இடத்தில் அவரைக் கொன்று போட்டு விட்டது.

திரு சிவகுருநாதனை அறியதவர்களே தஞ்சையில் இல்லை என்னும் அளவில் அவர் ஒவ்வொரு இல்லத்திலும் அறியப்பட்டவராக‌ இருந்தார்.ஒருபிடி அரிசியும்,ஒரு ரூபாயும் கேட்டு அவர் சென்று நிற்காத வீட்டு வாயில்களே தஞ்சையில் இல்லை எனலாம். ஆனால் மக்கள் அவர் கேட்டதை விடவும் அதிகமாக அளிக்கத் தயாராக இருந்தனர்.அவரோ தேவைக்கு அதிகமாக வாங்குவதில்லை.

நெற்றியில் தூய வெண்ணீரும்,தூய வெள்ளை ஷெர்வானியும் தலையில் வெண்மைக் குல்லாயுமாகத் தனக்கு என ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.வயது முதிர்ந்த விதவைத் தாயையும் மூன்று சகோதரிகளையும், கணக்கற்ற  நண்பர்களையும் தவிக்க விட்டு விட்டு அகால மரணம் எய்திவிட்டார். அதுவும் அவர் மனதார விரும்பிய அன்னதானப் பணி நிமித்த‌ம் சென்ற போதே விபத்து நேர்ந்தது.போர்களத்தில் வீர சொர்க்கம் எய்திய ஒரு போர் வீரனைப் போல அவர் முடிவு நேர்ந்தது.

அன்னாருக்கு அஞ்சலி செலுத்த ஒரு கூட்டம் தஞ்சையில் வ உ சி நகர் மாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. நாள்:15 பிப்ரவரி 2014 நேரம்:மாலை 5 முதல் 7 மணிவரை.

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இருந்து தவத்திரு ஸ்ரீ அனந்தரூபானந்தஜி மஹராஜ் அவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி உரை ஆற்றுகிறார்கள். தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் அஞ்சலிக்கூடத்தில் கலந்து கொள்க. ஏனையோர் அந்த நாள், நேரத்தில் மறைந்த ஆத்மாவிற்காகப் பிரார்த்தியுங்கள்.

17 ஜனவரி'14 காலை அவர் அன்னதானம் செய்துவிட்டார். அன்று மாலை காலமாகிவிட்டார்.18, 19 இரண்டு நாட்கள் மட்டும் அன்னதான்ம் நடை பெறவில்லை. 20 ஜனவரி அன்று துவங்கி மீண்டும் அந்தப் பணியை அவர் நினைவாகச் செய்து வருகிறோம். பங்குபெற விரும்புவோர் அடியேனுடன் தொடர்பு கொள்க.உங்கள் அனைவருக்கும் நலம் உண்டாக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

K.Muthuramakrishnan
(Our classroom senior student)
Lalgudi
email: kmrk1949@gmail.com
cell:90475 16699

===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

kmr.krishnan said...

நித்ய அன்னதானம் செய்பவர்கள், ஆயிரம் பிறை கண்ட சதாபிஷேகிகள், நாள் தோறும் அக்னி வழிபாடு செய்பவர்கள், வேதத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆகியவர்களைத் தான் வணங்குவதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
ஸ்ரீசிவகுருநாதன் 'நித்யான்னதாதா'! இப்போது வைகுண்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின்
மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு இருப்பார்.

இச்செய்தியை வெளியிட்டு உதவிய ஐயாவுக்கு நன்றி!இதனைக் கண்ணுறும் நண்பர்கள் முக நூல் போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டு செய்தி பலருக்கும் சென்று அடைய உதவ வேண்டுகிறேன்.

வேப்பிலை said...

சரி

Subramaniam Yogarasa said...

அன்னாருக்கு என் இதய அஞ்சலி!

kmr.krishnan said...

என் கட்டுரையில் ஒரு திருத்தம். திரு சிவகுருநாதனின் பூத உடல் மார்சுவரியில் இருந்த சமயம் 18 ஜனவரி'14 அன்றும் அவருடைய நண்பர் ஒருவர் காலை உணவைக் கொண்டு அளித்து விட்டார் என்று தஞ்சையிலிருந்து கைபேசியில் அழைத்துக் கூறினார்கள். எனவே 19 ஜனவரி ஒருநாள் மட்டுமே அந்தப் பணி நடக்கவில்லை.நான் தஞ்சையை விட்டு சிறிது தள்ளி இருப்ப‌தாலும், அந்த நண்பர் இப்போதுதான் கூறியதாலும் கட்டுரையில் இரண்டு நாள் சேவை நின்று போனது என்று விசாரிக்காமல் கூறிவிட்டேன். ஒருநாள் மட்டுமே சேவை நின்ற்து என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

hamaragana said...

அன்புடன் வணக்கம் kmrk sir,
உண்டி கொடுத்தோர் உயர் கொடுத்தோர் .உயிர் கொடுத்த உத்தமருக்கு அஞ்சலி ..அவர் விட்டு சென்ற சேவை தொடர்கிறது ...அது அதை விட பெரிய விஷயம் தொடர்வது எமது நண்பர் எனும்போது . பெருமையாக இருக்கிறது....சமயம் வரும்போது அடியேனின் பங்களிப்பும் இருக்கும் ..
சிரம் தாழ்ந்த வணக்கம் ....

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
நித்ய அன்னதானம் செய்பவர்கள், ஆயிரம் பிறை கண்ட சதாபிஷேகிகள், நாள் தோறும் அக்னி வழிபாடு செய்பவர்கள், வேதத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆகியவர்களைத் தான் வணங்குவதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
ஸ்ரீசிவகுருநாதன் 'நித்யான்னதாதா'! இப்போது வைகுண்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின்
மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு இருப்பார்.
இச்செய்தியை வெளியிட்டு உதவிய ஐயாவுக்கு நன்றி!இதனைக் கண்ணுறும் நண்பர்கள் முக நூல் போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டு செய்தி பலருக்கும் சென்று அடைய உதவ வேண்டுகிறேன்./////

அப்படியே உங்களுடைய அடுத்த பின்னூட்டத்தின் மூலம், பங்களிக்க விரும்புவர்களுக்கு வசதியாக சேவை நிறுவனத்தின் முகவரி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணின் விபரம் ஆகியவற்றைக் கொடுங்கள் சுவாமி!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
சரி/////

நல்லது!

Subbiah Veerappan said...

/////Blogger Subramaniam Yogarasa said...
அன்னாருக்கு என் இதய அஞ்சலி!////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
என் கட்டுரையில் ஒரு திருத்தம். திரு சிவகுருநாதனின் பூத உடல் மார்சுவரியில் இருந்த சமயம் 18 ஜனவரி'14 அன்றும் அவருடைய நண்பர் ஒருவர் காலை உணவைக் கொண்டு அளித்து விட்டார் என்று தஞ்சையிலிருந்து கைபேசியில் அழைத்துக் கூறினார்கள். எனவே 19 ஜனவரி ஒருநாள் மட்டுமே அந்தப் பணி நடக்கவில்லை.நான் தஞ்சையை விட்டு சிறிது தள்ளி இருப்ப‌தாலும், அந்த நண்பர் இப்போதுதான் கூறியதாலும் கட்டுரையில் இரண்டு நாள் சேவை நின்று போனது என்று விசாரிக்காமல் கூறிவிட்டேன். ஒருநாள் மட்டுமே சேவை நின்ற்து என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.////

அதனாலென்ன - பரவாயில்லை!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வணக்கம் kmrk sir,
உண்டி கொடுத்தோர் உயர் கொடுத்தோர் .உயிர் கொடுத்த உத்தமருக்கு அஞ்சலி ..அவர் விட்டு சென்ற சேவை தொடர்கிறது ...அது அதை விட பெரிய விஷயம் தொடர்வது எமது நண்பர் எனும்போது . பெருமையாக இருக்கிறது....சமயம் வரும்போது அடியேனின் பங்களிப்பும் இருக்கும் ..
சிரம் தாழ்ந்த வணக்கம் ....//////

நல்லது. நன்றி கணபதியாரே!

ramakrishnan jayalakshmi said...

Andava ithu enna sothanai avarathu anma santhiperuka