மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.2.14

Astrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது!

 
Astrology: கொடுத்த தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்திருக் கிறது!

நேரம் வரும்போது, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, ஏன் திகைக்கும் அளவிற்கு, சிலருக்கு, பணம் கிடைக்கிறது. பணம் அடை மழையாய்,
ஏன் புயலாய் , அதுவும் ஒரே ஷாட்டில் கொட்டி விடுகிறது.

அதை நாம் இன்று திரையுலகில் பார்க்கிறோம். முதல் படத்தில் சான்ஸ் கிடைத்தால் போதும் என்று கொடுக்கப்படுகிற அற்பத் தொகையை வாங்கிக்
கொண்டு நடிக்கும் நடிகர், அந்தப் படத்துடன் அடுத்தடுத்து அவருடைய  3 அல்லது 4 படங்களும் வெற்றியடைந்து வசூலை அள்ள, தனது சம்பளத்தை 4 கோடிகள் அல்லது 5 கோடிகள் என்ற அளவிற்கு ஏற்றி வாங்கத் துவங்கி விடுகிறார். அவர் வீட்டு வாசலில் பல படத் தயாரிப்பாளர்கள் பணப் பெட்டிகளுடன் வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் செய்தியையும் படிக்கிறோம்.

சாதாரண மனிதர்கள் வாழ்விலும் அதுபோல நடந்திருக்கிறது. Hotmailலை வடிவமைத்த சபீர் பாட்டியா வாழ்வில் அப்படித்தான் நடந்தது. அவர் கண்டு
பிடித்த குழும மின்னஞ்சல் மென் பொருளை, 2,000 ஆயிரம் கோடி நூபாய்கள் கொடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது எல்லாம் பழைய
கதை. அதுபோல யு டியூப்’ மென் பொருளை வடிவமைத்த 3 இளைஞர்கள் வாழ்க்கையும் 2 ஆண்டுகளில் மாறியது. PayPal என்னும் பணப் பறிமாற்றம்
செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய அவர்களுக்கு, அவர்கள் கண்டுபிடித்த மென் பொருளை கூகுள் நிறுவனம் 165 கோடி டாலர்களைக் கொடுத்து
விலைக்கு வாங்கியதும் பழைய கதை.

(The history of YouTube began on February 14, 2005 when three former PayPal employees activated the Internet domain name "YouTube.com" and started to create a video-sharing website on which users could upload, share, and view videos.YouTube was founded by Chad Hurley, Steve Chen, and Jawed Karim, who were all early employees of PayPal.

Prior to PayPal, Hurley studied design at Indiana University of Pennsylvania. Chen and Karim studied computer science together at the University of Illinois at Urbana-Champaign.YouTube's early headquarters were situatedabove a pizzeria and Japanese restaurant in San Mateo, california.Purchase by Google (2006):   

Wikinews has related news: Google purchases YouTube for $1.65 billion YouTube's headquarters in San Bruno from 2006 to 2010 On October 9, 2006, it was announced that the company would
be purchased by Google for US$1.65 billion in stock.)

அதுபோல சென்ற வாரம் உலகையே கலக்கிய செய்தி - வாட்ஸ் அப்’ என்னும் மென் பொருளை முக நூல் நிறுவனம் 1900 கோடி டாலர்களைக்
(இந்தியப் பணத்தில் = Rs,62.13 x 1900 கோடி டாலர்கள் = 1,18,00,000 கோடி ரூபாய்கள்) கொடுத்து வாங்கியுள்ளது.

அதைப் பெற்றுக்கொண்டவர்கள் இருவர். அவர்கள்தான், ஐந்தாண்டுகளுக்கு முன்பு துவங்கி, அந்த மென் பொருளைக் கண்டு பிடித்து, வடிவமைத்துப்
பிரபலமாக்கியவர்கள். Smart Phone வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் அதன் பயன்பாடு தெரியும். அசுர வளர்ச்சியில் இருக்கிறது. அந்த மென் பொருள். இதில் வேடிக்கை என்ன வென்றால் அதை வடிவமைத்த இளைஞர்கள் இருவருமே, படிப்பைப் பாதியில் விட்டவர்கள் (College Drop outs) மேலும் துவக்கத்தில் அதே முகநூல் நிறுவனத்தில் வேலை தேடி அலைந்தவர்கள். வேறு பல பெரிய நிறுவனங்களிலும் வேலை தேடி அலைந்தவர்கள்.
வேலை கிடைக்கவில்லை. ஆகவே சொந்த முயற்சியில் வாட்ஸ் அப்’ ஐக் கண்டு பிடித்தார்கள்.

இப்போது ஒரே நாளில் ஒரு லட்சத்துப் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்கள் (அம்மாடியோவ்) அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைத்தான்
கிராமங்களில் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள்.

Brian Acton and Jan Koum

கீழே உள்ள செய்தியைப் படியுங்கள்!

WhatsApp Messenger is a proprietary, cross-platform instant messaging subscription service for smartphones. In addition to text messaging, users can send each other images, video, and audio media messages as well as their location using integrated mapping features. The client software is available for Google Android, BlackBerry OS, Apple iOS, selected Nokia Series 40, Symbian, selected Nokia Asha platform, Microsoft Windows Phone and BlackBerry 10. WhatsApp Inc. was founded in 2009 by Americans Brian Acton and Jan Koum (also the CEO), both former employees of Yahoo!, and is based in Mountain View, California. The company employs 55 people.Competing with a number of Asian-based messaging services (like LINE, KakaoTalk, WeChat), WhatsApp handled ten billion messages per day in  August 2012, growing from two billion in April 2012, and one billion the previous October.[6] On June 13, 2013, WhatsApp announced that they had reached their new daily record by processing 27 billion messages. According to the Financial Times, WhatsApp "has done to SMS on mobile phones what Skype did to international calling on landlines."

As of November 10, 2013, WhatsApp had over 190 million monthly active users, 400 million photos are shared each day, and the messaging system handles more than 10 billion messages each day. In a December 2013 blog post, WhatsApp claimed that 400 million active users use the service each month.

On February 19, 2014, Facebook announced it is acquiring WhatsApp for US$19 billion. Facebook will pay $4 billion in cash,$12 billion in Facebook shares and $3 billion in restricted stock units to be granted to WhatsApp founders and employees that will vest over four years.
------------------------------------------------
இன்று பணத்தின் மீது ஆசையில்லாத மனிதனே (99%) கிடையாது. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க வேண்டாம். கதைவைத் தட்டியாவது கொடுக்கட்டுமே - அல்லது ஜன்னல் வழியாகவாவது வீசி விட்டுப் போகட்டுமே என்றுதான் பலரும் ஆசைப் படுகிறார்கள்.

எல்லோருக்கும் அப்படி நடக்குமா என்ன? அதற்கெல்லாம் வாங்கி வந்த வரம் வேண்டாமா? ஜாதகத்தில் அமைப்பு இருக்க வேண்டாமா?

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்று கிராமங்களில் சொல்வார்கள். பலருடைய நிலைமை அப்படித்தான்
உள்ளது!:-))))

இதுபோன்ற திடீரென்ற, அதீதப் பண வரவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? பொது விதிகள் உள்ளதா?

உள்ளது. அதை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம். பொறுத்திருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

======================================================
Source: http://en.wikipedia.org/wiki/WhatsApp

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. Respected Sir
    Was waiting for you post. Used to wait at work too.
    It is just 3:10 AM for you and could not believe it is already here. Thanks a Lot.

    I guess Rahu plays a major role is giving lot of money at once. May be when it is in 11th place. And may be sukra dasa!!! Obviously :)

    Apologize if I am wrong or it looks like "Athikaprsankithanam". Just interest, that is all.

    ReplyDelete
  2. கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும், நமக்கென்னமோ ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ உணவுப் பொருட்களுக்கு மேல் செலவாகப் போவதில்லை.

    மீதிப்பணத்தினால் நல்ல செயல்களைச் செய்து பல‌ருடன் செல்வத்தினைப் பகிர்ந்து கொள்ளும் ம‌னமும் இறைவனே கொடுக்க வேண்டும்.

    விபரீத ராஜ யோகம் வேலை செய்தால் இப்படி பணம் கொட்டுமோ?

    ReplyDelete
  3. வணக்கம்.

    என்னுடைய யூகம் என்னவென்றால் 5ம் வீடு ஆதாய வரவுகளுக்கான வீடு.40 பரல்கள் இருந்தால் பணம் அடை மழை போல் கொட்டும்.

    வாத்தியார் ஒரு முறை கூறியது எனக்கு ஒரு ஞாபகம்.
    கேந்திர வீடுகள் தான் லஷ்மி ஸ்தானங்கள், திரிகோண வீடுகள் விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும்.
    இவைகள் நன்றாக இருந்தால் அடை மழை பணம் கொட்டும் அந்த தசா காலத்தில்.

    தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  4. Sir,

    Kethu will give fortune if it sits in 12th house. I remember once you have mentioned this in your old lessons.
    Bcz 12th house is 2nd for 11th and also Kethu is planet for fortune.

    Please excuse if I am wrong.

    Thanks,
    GS

    ReplyDelete
  5. ஒரு (1%)பட்டியலில் அய்யர் இருப்பது
    உள்ளபடியே மகிழ்ச்சி..

    காத்திருக்கிறோம்
    கடைந்தெடுத்த அலசலுக்கு

    ReplyDelete
  6. ///kmr.krishnan said...
    ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ உணவுப் பொருட்களுக்கு மேல் செலவாகப் போவதில்லை.///

    இடைவேளைக்கு பிறகு உங்களை
    இங்கு பார்ப்பது மகிழ்சி தருகிறது

    உணவு மட்டும் போதுமா..?


    ///பல‌ருடன் செல்வத்தினைப் பகிர்ந்து கொள்ளும் ம‌னமும் இறைவனே கொடுக்க வேண்டும்.///

    அநேகமாக இதை தான் செய்கிறார்
    அத்துனை பேர்களும்..

    இல்லாதவருக்கு கொடுப்பதுபோல்
    இவர்கள் குடித்தும் கழிப்பார்கள்

    தனக்காக வாழ்பவர்கள் ஒருவரும்
    தரணியில் இருக்க முடியாது

    உண்மை இது தான் என்றாலும்
    உள்ளம் ஏற்க மறுப்பது இயல்பே

    ReplyDelete
  7. இது போல் திடீர் பண வரவுக்கும், புகழ் பெறுவது, பதவி தேடி வருவது இவை யாவும் விபரீத ராஜயோகக் கணக்கில்தான் வரும். இவையெல்லாம் ரஜினிகாந்த் போல்தான். எப்போ வரும் எப்படி வரும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும்.

    ReplyDelete
  8. பணம் என்றதும் தான் நினைவு வருகிறது. மன நிம்மதியான வாழ்க்கைக்கான ஜாதக அமைப்பு பற்றிய விரிவான பாடத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. எனக்கென்னவோ பலர் பணத்திற்கும் மன நிம்மதிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருப்பது போல் தோன்றுகிறது. பலர் என்பது இந்த வகுப்பறையில்தான். உலகில் பலரும் பணத்தை கொண்டே மன நிம்மதி அடைகின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. கே.எம்.ஆர் அவர்களின் கருத்து மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அந்த கருத்திலிருந்து மரியாதையோடு சற்று வேறுபடுகிறேன். பணத்தின் தேவை அந்த ஒரு கிலோ உணவுப் பொருட்களுக்காக மட்டும் தானா? பணத்தால் கிடைக்கும் மன நிம்மதி வேறு எதில் கிடைக்கும்? பணம் இருந்தால் நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம். பிடிக்காத வேலைக்கு தினமும் சென்று வர வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும். ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தை கூட பணத்தால் இந்த காலத்தில் வாங்க முடிகிறது. எனக்கென்னவோ பணம் இருந்தால் பல பிரச்சனைகள் காணாமல் போய்விடுகின்றன என்று தோன்றுகிறது. "பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை" என்பது முற்றிலும் உண்மை. இன்னும் வருத்தமான‌ செய்தி என்னவென்றால் பணத்தை வைத்தே பலர் மற்றவரை மதிப்பிடுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் பணம் இல்லையேல் பல உறவினர்களும், நண்பர்களும் கூட மதிப்பதில்லை என்பதே நான் என் வாழ்வில் கண்டு அனுபவித்தது, அனுபவித்து கொண்டிருப்பது.

    கே.எம்.ஆர் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர். அனுபவசாலி. ஆதலால், ஒரு வேளை, அவர் வயது வரும் போது அதே எண்ணங்கள் எனக்கும் வருமோ என்னவோ.

    ReplyDelete
  10. என் ந‌ண்பர் தோழர் பாண்டியன் கூறிய கருத்து மிக சிற‌ந்தது.
    மேலும் நாம் சிந்திக்கயுள்ளது நிறையயுள்ளது நண்பரே.

    இந்த வகுப்பறையில் தர்ம சிந்தனையுள்ள மாணவர்கள்
    நிறையபேர் உள்ளனர்.
    இந்த தர்ம செயலுக்கு பணம் தேவைபடுகிறது.
    இன்று அமெரிக்காவில் நான் உழைக்கும் பணம்
    தர்ம செயலுக்காக.எனக்காக இல்லை,
    நாங்கள் தூங்கும் நேரம் சிறிதளவே.
    நான் வகுப்பு அறையில் வரும் நேரமே என்னுடைய ஒய்வு நேரம்.
    இங்கு என்னைப்போல் பலரும் உள்ளனர்.

    இங்கு நான் தர்மம் என்று குறிப்பிட்டது அடிப்படை தேவை இல்லாதவ‌ர்களின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்வதற்க்காக‌.
    தர்மம் என்பத‌ற்க்கு தியாகம் என்ற் பெயரும் உண்டு.
    சந்திப்போம், சிந்திப்போம் பிறகு.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.





    ReplyDelete
  11. //thozhar pandian said...
    எனக்கென்னவோ பலர் பணத்திற்கும் மன நிம்மதிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருப்பது போல் தோன்றுகிறதுபலர் என்பது இந்த வகுப்பறையில்தான். உலகில் பலரும் பணத்தை கொண்டே மன நிம்மதி அடைகின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து.//
    பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைதான். ஏனெனில் பணம் இருந்தால் தான் அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழியுண்டு. ஆனால் அதிக பணத்தால் மன நிம்மதியை வாங்க முடியுமா என்பது சந்தேகம் தான். வேண்டுமாயின் விரும்பும் பொருட்களை வாங்கி விடலாம். நோய் நொடிகளை தீர்த்துக் கொள்ளலாம்.
    எங்கள் சூழ்நிலையில் பணக்காரர்களிலும் தம்பதி வாழ்க்கையில் பிரச்சனையோடு வாழ்பவர்களை பார்க்கிறேன்.
    திருமணம் காலகாலத்தில் கூடாமல் கலங்கும் கன்னியரை கண்டிருக்கிறேன்.
    பணத்தால் வரும் விபத்துக்களை தடுக்க முடியாமல் இழப்புகள் வருவதை கவனித்திருக்கிறேன்.
    அதிக பணத்தால் பாதை மாறும் இளைய சமுதாயத்தை கண்டிருக்கிறேன். அதனால் தலைவலிக்குள்ளாகும் பெற்றோரை கண்டிருக்கிறேன்.
    என்னைப் பொறுத்தவரை இல்லாதவனுக்கோ அடுத்த வேளை சாப்பாட்டை பற்றிய கவலை ஒன்று தான்.
    ஆனால் இருப்பவனுக்கு அதை விட அதிக கவலைகள். (இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்)

    முடிவாக எனக்கு தோன்றுவது என்னவென்றால்
    மன நிம்மதி என்பது அவரவர் எண்ணங்களைப் பொறுத்ததே.

    ReplyDelete
  12. பணத்தை பற்றி எழுத சொன்னால்
    பத்தி பத்தியாய் எழுதலாம்

    பறக்கும் அணல் வாதங்களில்
    பங்கு கொள்ளலாம்..

    அடுத்தவருக்காக கொடுப்பவர்
    அங்கு இருக்கும் வரை..

    கை நீட்டுபவர்கள் இருப்பார்கள்
    கை காட்டுபவர்கள் இருப்பார்களா?

    அளவும் தேவையும்
    அவரவர் எண்ணங்களே

    ஒரு கிலோ அரிசி சிலருக்கு
    ஒரு கி. பாதாம்பிஸ்தா சிலருக்கு

    காகிதம் தான் அது. அதிலிருப்பது
    காந்தி மட்டுமல்ல. ஆசையும் தான்

    கடல் பயணத்திற்கு நீர் தேவை
    கடலையே கப்பலில் வைத்தால்

    கடல் பயணம்
    காணாமல் போயிடும்

    செருப்பும் பணமும் ஒன்று அளவில்
    செருப்பு பெரிதானால் தள்ளி விடும்

    சிறியதானல் காலை கடிக்கும்
    குறைந்தால் பணம் கையைகடிக்கும்

    இப்படி பல சொல்லலாம்
    இங்கு சொல்ல வேண்டுமா?

    ReplyDelete
  13. நண்பர் சந்திரசேகரன் சூரியநாராயணன் அவர்களுக்கு நன்றி. எனக்கும் ஓரளவுக்கு தர்ம சிந்தனை உண்டு. ஆனால் நான் செல்வந்தன் அல்ல. எனது மனைவியின் உறவினர் ஒருவர் தன்னிடம் யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடுவாராம். கடைசியில் அவரது குடும்பத்திற்கு என்று மிஞ்சியது பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த புண்ணியம் நிச்சயம் உண்டு. இறைவன் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நல்லதே செய்வார். ஆனால் இன்று அவர்கள் வசதியாக இல்லை. "தனக்கு மிஞ்சியே தான தர்மம்" என்பதை சற்று மாற்றி "தன் குடும்பத்திற்கு மிஞ்சியே தான தர்மம்" என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. என்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்கு செய்தது போகவே மற்றவர்களுக்கு தர்மம் செய்யும் ஒரு சாதாரன சுயநலவாதிதான் நான். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. விலைவாசி உயர்வை பார்த்தால் தேவைகளை சுருக்கிக் கொண்டு எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் நாளை நம்மால் இப்போது வாழும் வசதிகளுடனாவது வாழ முடியுமா, குழந்தையை நல்லபடியாக படிக்க வைக்க முடியுமா, நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க முடியுமா என்ற அச்சத்திலேயே வாழ வேண்டி இருக்கிறது. பணம் இருந்தால் இந்த பிரச்சனை இருக்காது. இது என் நம்பிக்கை தான். நாளை என்ன நடக்கும் என்பது இறைவனை தவிர யாருக்கு தெரியும்?

    அனிதா அவர்கள் கூறியது போல் செல்வந்தர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை அனைத்தும் பணத்தால் வரும் பிரச்சனைகளா? இந்த பிரச்சனைகளில் பல செல்வந்தர்கள் அல்லாருக்கும் வரத்தானே செய்கிறது? அனிதா அவர்கள் கூறியதை போல் மன நிம்மதி என்பது அவரவர் எண்ணங்களை பொறுத்தது என்பது ஏற்க வேண்டிய ஒன்று. நான் சிறு வயதில் இருந்து நாளை என்ன நடக்குமோ என்ற ஒரு அச்சத்திலேயே வளர்ந்தவன். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விட அச்சமே பெரிதாக தோன்றுவதால் பணம் அந்த அச்சத்தை போக்கி விடும் என்ற எண்ணம் எனக்குள் ஊறி விட்டது. தவறாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  14. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Was waiting for you post. Used to wait at work too.
    It is just 3:10 AM for you and could not believe it is already here. Thanks a Lot.
    I guess Rahu plays a major role is giving lot of money at once. May be when it is in 11th place. And may be sukra dasa!!! Obviously :)
    Apologize if I am wrong or it looks like "Athikaprsankithanam". Just interest, that is all./////

    முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும், நமக்கென்னமோ ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ உணவுப் பொருட்களுக்கு மேல் செலவாகப் போவதில்லை.
    மீதிப்பணத்தினால் நல்ல செயல்களைச் செய்து பல‌ருடன் செல்வத்தினைப் பகிர்ந்து கொள்ளும் ம‌னமும் இறைவனே கொடுக்க வேண்டும்.
    விபரீத ராஜ யோகம் வேலை செய்தால் இப்படி பணம் கொட்டுமோ?////

    அதுவும் ஒரு காரணம். அத்துடன் முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்!

    ReplyDelete
  16. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    என்னுடைய யூகம் என்னவென்றால் 5ம் வீடு ஆதாய வரவுகளுக்கான வீடு.40 பரல்கள் இருந்தால் பணம் அடை மழை போல் கொட்டும்.
    வாத்தியார் ஒரு முறை கூறியது எனக்கு ஒரு ஞாபகம்.
    கேந்திர வீடுகள் தான் லஷ்மி ஸ்தானங்கள், திரிகோண வீடுகள் விஷ்ணு ஸ்தானங்கள் எனப்படும்.
    இவைகள் நன்றாக இருந்தால் அடை மழை பணம் கொட்டும் அந்த தசா காலத்தில்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்./////

    நீங்கள் சொல்லும், கேந்திர மற்றும் திரிகோண வீடுகளுடன் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்!

    ReplyDelete
  17. ////Blogger KJ said...
    Sir,
    Kethu will give fortune if it sits in 12th house. I remember once you have mentioned this in your old lessons.
    Bcz 12th house is 2nd for 11th and also Kethu is planet for fortune.
    Please excuse if I am wrong.
    Thanks,
    GS////

    வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பொறுத்திருங்கள். அலசுவோம்!

    ReplyDelete
  18. ////Blogger வேப்பிலை said...
    ஒரு (1%)பட்டியலில் அய்யர் இருப்பது
    உள்ளபடியே மகிழ்ச்சி..
    காத்திருக்கிறோம்
    கடைந்தெடுத்த அலசலுக்கு////

    எங்களுக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  19. ////Blogger Kirupanandan A said...
    இது போல் திடீர் பண வரவுக்கும், புகழ் பெறுவது, பதவி தேடி வருவது இவை யாவும் விபரீத ராஜயோகக் கணக்கில்தான் வரும். இவையெல்லாம் ரஜினிகாந்த் போல்தான். எப்போ வரும் எப்படி வரும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும்.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. ////Blogger A. Anitha said...
    பணம் என்றதும் தான் நினைவு வருகிறது. மன நிம்மதியான வாழ்க்கைக்கான ஜாதக அமைப்பு பற்றிய விரிவான பாடத்தை எதிர்பார்க்கிறேன்./////

    போதும் என்ற மனம் இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்

    ReplyDelete
  21. ////Blogger thozhar pandian said...
    எனக்கென்னவோ பலர் பணத்திற்கும் மன நிம்மதிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருப்பது போல் தோன்றுகிறது. பலர் என்பது இந்த வகுப்பறையில்தான். உலகில் பலரும் பணத்தை கொண்டே மன நிம்மதி அடைகின்றனர் என்பது என் தாழ்மையான கருத்து. கே.எம்.ஆர் அவர்களின் கருத்து மீது எனக்கு மதிப்புள்ளது. ஆனால் அந்த கருத்திலிருந்து மரியாதையோடு சற்று வேறுபடுகிறேன். பணத்தின் தேவை அந்த ஒரு கிலோ உணவுப் பொருட்களுக்காக மட்டும் தானா? பணத்தால் கிடைக்கும் மன நிம்மதி வேறு எதில் கிடைக்கும்? பணம் இருந்தால் நமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம். பிடிக்காத வேலைக்கு தினமும் சென்று வர வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும். ஏழை எளிய மக்களுக்கு உதவ முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தை கூட பணத்தால் இந்த காலத்தில் வாங்க முடிகிறது. எனக்கென்னவோ பணம் இருந்தால் பல பிரச்சனைகள் காணாமல் போய்விடுகின்றன என்று தோன்றுகிறது. "பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை" என்பது முற்றிலும் உண்மை. இன்னும் வருத்தமான‌ செய்தி என்னவென்றால் பணத்தை வைத்தே பலர் மற்றவரை மதிப்பிடுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் பணம் இல்லையேல் பல உறவினர்களும், நண்பர்களும் கூட மதிப்பதில்லை என்பதே நான் என் வாழ்வில் கண்டு அனுபவித்தது, அனுபவித்து கொண்டிருப்பது.
    கே.எம்.ஆர் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர். அனுபவசாலி. ஆதலால், ஒரு வேளை, அவர் வயது வரும் போது அதே எண்ணங்கள் எனக்கும் வருமோ என்னவோ.//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி பாண்டியர்!

    ReplyDelete
  22. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    என் ந‌ண்பர் தோழர் பாண்டியன் கூறிய கருத்து மிக சிற‌ந்தது.
    மேலும் நாம் சிந்திக்கயுள்ளது நிறையயுள்ளது நண்பரே.
    இந்த வகுப்பறையில் தர்ம சிந்தனையுள்ள மாணவர்கள்
    நிறையபேர் உள்ளனர்.
    இந்த தர்ம செயலுக்கு பணம் தேவைபடுகிறது.
    இன்று அமெரிக்காவில் நான் உழைக்கும் பணம்
    தர்ம செயலுக்காக.எனக்காக இல்லை,
    நாங்கள் தூங்கும் நேரம் சிறிதளவே.
    நான் வகுப்பு அறையில் வரும் நேரமே என்னுடைய ஒய்வு நேரம்.
    இங்கு என்னைப்போல் பலரும் உள்ளனர்.
    இங்கு நான் தர்மம் என்று குறிப்பிட்டது அடிப்படை தேவை இல்லாதவ‌ர்களின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்வதற்க்காக‌.
    தர்மம் என்பத‌ற்க்கு தியாகம் என்ற் பெயரும் உண்டு.
    சந்திப்போம், சிந்திப்போம் பிறகு.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.////

    நல்லது. அப்படியே சிந்தியுங்கள் நன்பரே!

    ReplyDelete
  23. ////Blogger வேப்பிலை said...
    பணத்தை பற்றி எழுத சொன்னால்
    பத்தி பத்தியாய் எழுதலாம்
    பறக்கும் அணல் வாதங்களில்
    பங்கு கொள்ளலாம்..
    அடுத்தவருக்காக கொடுப்பவர்
    அங்கு இருக்கும் வரை..
    கை நீட்டுபவர்கள் இருப்பார்கள்
    கை காட்டுபவர்கள் இருப்பார்களா?
    அளவும் தேவையும்
    அவரவர் எண்ணங்களே
    ஒரு கிலோ அரிசி சிலருக்கு
    ஒரு கி. பாதாம்பிஸ்தா சிலருக்கு
    காகிதம் தான் அது. அதிலிருப்பது
    காந்தி மட்டுமல்ல. ஆசையும் தான்
    கடல் பயணத்திற்கு நீர் தேவை
    கடலையே கப்பலில் வைத்தால்
    கடல் பயணம்
    காணாமல் போயிடும்
    செருப்பும் பணமும் ஒன்று அளவில்
    செருப்பு பெரிதானால் தள்ளி விடும்
    சிறியதானல் காலை கடிக்கும்
    குறைந்தால் பணம் கையைகடிக்கும்
    இப்படி பல சொல்லலாம்
    இங்கு சொல்ல வேண்டுமா?/////

    உண்மைதான். பணம் அளவோடு இருந்தால் அது நம்மைக் காப்பாற்றும். அளவிற்கு மீறியிருந்தால் அதை நாம் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படும்!

    ReplyDelete
  24. ஐயா வணக்கம்.

    உண்மை தான் ஆசானே

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com