மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.3.10

Short Story - சிறுகதை: எது சொத்து?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story - சிறுகதை: எது சொத்து?

"எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அடைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க"

சுந்தரி ஆச்சி மனமுருகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.எதிரில் படுத்த படுக்கையாகக் கண் விழித்துப் பார்க்க முடியாத நிலையில் ஆச்சியின் அப்பச்சி மலையாண்டி செட்டியார்.

பிரம்மாண்டமான வீடு.வீட்டின் மேல் மாடியில் இருந்த அந்தப் பெரிய அறையே மருத்துவ மனையாக மாற்றப்பெற்றிருந்தது. செட்டியாருக்குச் சொட்டுச் சொட்டாகக் குளுகோஸ் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

சற்றுத்தள்ளி இருந்த மேஜை மீது மருந்தும், மாத்திரைகளும் கொலு வைத்தாற்போல அடுக்கி வைக்கப் பெற்றிருந்தன.

படுக்கை, படுக்கை விரிப்புக்கள், அறையிலிருந்த மேஜை நாற்காலிகள், சுவர்கள், தரைப் பகுதி,
ஏன்
சத்தமில்லாமல் இயங்கிகொண்டிருந்த குளிர்சாதன இயந்திரம் என்று எல்லாமே பளிச்சென்று வெள்ளை நிறத்தில் செட்டியாரின் பணபலத்தைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

செவிலிப் பெண் ஒருத்தி, செட்டியாரின் படுக்கை அருகே அமர்ந்து ஆச்சியின் பாடலில் மெய் மறந்திருந்தாள்.

ஆச்சியின் சகோதரியும் வந்து கலந்து கொண்டு பாட, இப்போது பாட்டு மேலும் சீராக
ஒலித்து கேட்க ஆரம்பித்தது.

"ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க, காக்க, கனகவேல் காக்க
நோக்க,நோக்க, நொடியில் நோக்க
தாக்க, தாக்க, தடையற தாக்க"

இந்த இடத்தில், செட்டியார் கண்விழித்து,"அண்ணாமலை...."என்று ஏக்கத்துடன் குரல்
கொடுக்கவும், செட்டியாரின் பெரிய மகள் அருகில் சென்று "என்ன அப்பச்சி?" என்று கேட்பதைப் போல் பார்க்கவும், செட்டியார் மெல்லிய குரலில் கேட்டார், "தம்பி வந்திட்டானா ஆத்தா?"

என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் திகைத்த மகள்," ஆள் அனுப்பியிருக்கிறோம்...
...வந்துவிடுவான் அப்பச்சி!" என்று பதில் சொன்னார்.

நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு, காசி, ராமேஸ்வரம்,திருவண்ணாமலை என்று பல
தலங்களில் கடும் பிரார்த்தனைகள் செய்து, தவமிருந்து, பெற்றெடுத்த அவருடைய மகன்,
வாத நோயால் உடலின்
பல பகுதிகள் சரியாக இயங்காத நிலையில் - மரணத்தின் விளிம்பில் - இன்றோ, நாளையோ உயிர் போகும் நிலையில் இருக்கும் அவரைக் காண - வருவானா?

யாருக்குத் தெரியும்?

வந்தாலும் வரலாம், வராமல் போனாலும் போகலாம்.

சில விஷயங்களை நாம் முடிவு செய்ய முடியாது.விதிதான் முடிவு செய்யும்.செட்டியார்
25
வருடங்களுக்கு முன்பு விடுதலை எழுதி வாங்கிக்கொண்டு தன் மகனை வீட்டைவிட்டு அனுப்பிய போது அப்படித்தான் சொன்னார். விதி என்பது விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டதை
நாம் எப்படி மாற்ற முடியும் என்று
அப்போது அதற்கு விளக்கமும் சொன்னார்.

ஆனால் அவருடைய மகன் ரோசக்காரன்.அன்று விடுதலை எழுதிக் கொடுத்துவிட்டு
வீட்டைவிட்டுப் போனவன் இன்றுவரை திரும்பி வந்து வீட்டில் கால் பதிக்கவில்லை
ஆனால் பாழாய்ப்போன மனசு கேட்கிறதா? எது கிடைக்கவில்லையோ எது
நடக்கவில்லையோ - அதற்குத்தானே இந்த மனசு ஆதங்கப்படும்.

டாக்டர்கள் கைவிட்டும்கூட,மூன்று நாட்களாக மலையாண்டி செட்டியாரின் உயிர்
ஊசலாடிக் கொண்டிருந்தது. மகன் முகத்தைத் கடைசியாக ஒரு முறை பார்த்தால்தான் அவருடைய ஜீவன் அடங்கும் போலிருந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மலையாண்டி செட்டியாருக்கு அபரிதமான செல்வம். திருச்சி கன்டோன் மெண்ட் பகுதில்
இரண்டு ஏக்கர்
பரப்பளவில் பண்ணை வீடு போன்ற அமைப்பில் பெரிய வீடு. திருச்சி மாநகரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏகப்பட்ட அசையாத சொத்துக்கள்.
அவற்றோடு அசையும் சொத்துக்களாக 25 வழித்தடங்களில்
பேருந்துகளும் ஓடிக்கொண்டிருந்தன.

செட்டியார் நினைத்ததெல்லாம் நடந்தது - ஒன்றைத்தவிர.

தான் நினைத்தபடி தன் அருமை மகன் அண்ணாமலையை மட்டும் அவரால் வளர்க்க முடியாமல் போய்விட்டது. தடுக்குப் போட்டு உட்காரவைத்து அவனை வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் பையன் விட்டத்துக்கு விட்டம் தாவி வளர்ந்தான்.எல்லாம் அவர் மனைவி வள்ளியம்மை ஆச்சி கொடுத்த செல்லம்.

படிப்பைத்தவிர மற்றதெல்லாம்
அவன் மண்டையில் நன்றாக ஏறின. நாளொரு சினிமாவும், பொழுதொரு கதைப்புத்தகமாகவும் வளர்ந்தான். 15 வயதிலேயே பைக், கார், பஸ்ஸென்று எல்லாவற்றையும் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டான். தத்தித் தத்தி இளம்நிலை பட்டப் படிப்பு
வரை போனவன், இறுதியாண்டில் ஒழுங்காகத்தேர்வு எழுதி அதை நிறைவு
செய்யாத தோடு
'ஜூட்' விட்டு விட்டுக் கையில் இருந்த பணத்தோடு காணாமல் வேறு போய்விட்டான்.
எல்லாம்
சேர்க்கை வாசம்

செட்டியார் கவலைப் படவில்லை.எங்கே போகப் போகிறான்.கையிருப்புக் கரைந்தால் தானாக வந்து விடுவான் என்று தைரியமாக இருந்தார்.தேடினால் வெளியே தெரியும் வெட்கக்கேடு
என்று அவனைத்தேடாமல் வேறு இருந்து
விட்டார்.

ஆனால் சுமந்து பெற்ற தாயால் அப்படிச் சும்மா இருக்க முடியுமா என்ன? ஆச்சி மனம்
உடைந்து போய் விட்டார்கள்-உண்ணவில்லை, உறங்கவில்லை - கடைசியில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் நிலைமைக்கு
ஆளாகி விட்டார்கள்.


பாரதிராஜாவின் 'பதினாறு வயதினிலே' படம் வந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த
காலம் அது. அடுத்த
பாரதிராஜா தான்தான் என்ற கனவோடு சென்னைக்குப் பறந்து போனவனை, அவ்வளவு பெரிய ஊரில் எங்கேபோய்த் தேடுவது?

ஆச்சி படுத்தவுடன் சீரியஸான செட்டியார் தன்னுடைய பண பலத்தாலும், காவல்துறையில் தமக்கு இருந்த செல்வாக்காலும் இரண்டே நாட்களில் பையனை அமுக்கிப் பிடித்துக் கொண்டு வந்து ஆச்சிமுன் நிறுத்தி விட்டார்.ஆச்சி, தன் மகனைக் கட்டிப்பிடித்து கொண்டு அழுது,
தேக்கி வைத்திருந்த கண்ணீரைக் கொட்டித்
தீர்த்தார்கள்

ஆச்சியின் கண்ணீரில் கரைந்துபோன பையனும் 15 நாட்கள் பக்கத் திலேயே இருந்தான்.
அப்புறம் பழைய
குருடி, கதவைத் திறடி கதையாகி விட்டது. சினிமா தாகத்தாலும்,
மோகத்தாலும் தாக்குண்டு இருந்தவன்
செய்வதறியாது பித்துப் பிடித்தவன்போல்
ஆகிவிட்டான். வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே
சுருண்டு படுத்து
விட்டான்.


நிலைமையைச் சரி செய்ய வேறு வழியின்றி, செட்டியார் அவராகவே முன் வந்து சென்னையில் ஒரு பெரிய திரைப்பட இயக்குனரிடம் அவனை உதவியாள ராகச் சேர்த்து விட்டார். சும்மா
சேர்த்து விடாமல் பல
உறுதிமொழிகளை வாங்கிக் கொண்டுதான் சேர்த்துவிட்டார்.

அந்த உறுதிமொழிகளில் ஒன்றின்படி அண்ணாமலைக்கும் கால்கட்டுப் போடப்பட்டது., சென்னை வடபழனியில் வீடு ஒன்று வாங்கிக் கொடுக்கப் பெற்றதுடன், சகல வசதிகளுடனும், மனைவியுடனும் அந்த வீட்டில் குடியமர்த்தப் பெற்றான்

கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த சொல்லும் எத்தனை நாட்களுக்கு வரும்?

இரண்டு ஆண்டுகள் திரைப்பட நுணுக்கங்களையெல்லாம் சிரத்தையாகவும், சிறப்பாகவும் கற்றுக்கொண்ட அண்ணாமலை, தமிழ் நாட்டிலுள்ள திரையரங்குகளின் வெண்திரைகளில் கதை-வசனம்-இயக்கம் என்ற டைட்டில் கார்டுடன் தன் பெயர் வரவேண்டுமென்ற தீராத
ஆசையை நிறை வேற்றிக் கொள்ளும் பொருட்டுச் சொந்தமாகப்
படமெடுக்க முனைந்த
போதுதான் பல சோதனைகள் சொல்லிக் கொண்டு வந்தன.


படமெடுக்கத் தங்கள் குடும்பத்தின் குடியரசுத்தலைவரின் மூலம் பிரதம மந்திரிக்கு மனுப்போட்டான். அதாவது தன் ஆத்தா மூலம், அப்பச்சிக்கு மனுப்போட்டான்.முதலில்
மறுத்த அப்பச்சி, தன் அன்பு மனைவியின் வற்புறுத்தலால்
- ஒருமுறைதான் - மறுபடியும் கேட்கமாட்டேன் என்று அவனிடம் எழுதி வாங்கிக் கொண்டு, அவன் கேட்ட முப்பது
லட்சத்தை ரொக்கமாகக் கொடுத்தனுப்பினார். அந்தக் கால கட்டத்தில் அது பெரிய தொகை.


அண்ணாமலை எடுத்த படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வேறு இரண்டு பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான நேரத்தில் இதுவும் வந்ததால் - வர்த்தக ரீதியில் நன்றாக ஓடவில்லை. திரைப்பட மொழியில் சொன்னால் படம் ஊற்றிக்கொண்டு விட்டது.

அடுத்தடுத்து அண்ணாமலை எடுத்த படங்கள் எல்லாம் படுத்துக் கொள்ள,மூன்றாண்டுகளுக்குள் அறுபது லட்ச ரூபாய்களுக்குமேல் கடனாகிவிட்டது. அரசல் புரசலாக செட்டியாரின் காதிற்கு சில விஷயங்கள் தெரிய வந்தாலும், ஒரு நாள் அவருடைய மருமகள் வந்து அழுது புலம்பிய போதுதான் முழு உண்மைகளும் தெரியவந்தன.

செட்டியார் தன்னுடைய குடும்ப நண்பரும், திருச்சியின் பிரபல வழக்கறிஞருமான முத்துராமன் செட்டியாரை அனுப்பித் தன் மகனுடன் பேசச் சொன்னார். அவன் சினிமா உலகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பித் திருச்சிக்கு வந்து செட்டிலாவதற்குத் தயாராக இருந்தால்
தான் அவனுடைய கடன் முழுவதையும்
அடைத்து விடுவதாகச் சொல்லி அனுப்பினார்.

அதற்கு அண்ணாமல ஒப்புக்கொள்ளவில்லை. சினிமாவை விட்டு விட்டு வர முடியாது -
அது என் முதல் மனைவி
என்று சொல்லிவிட்டான்.

இனிமேல் கைக் காசைப்போட்டோ, கடன் வாங்கியோ ஜென்மத்திற்கும் படம் எடுக்க மாட்டேன். எடிட்டிங் துறையிலோ, அல்லது ஒரு பெரிய கம்பெனியின் கதை இலாகாவிலோ வேலை
செய்து என் பிழைப்பை நான்
பார்த்துக்கொள்கிறேன் - என் காலிலேயே நான் நிற்க விரும்புகிறேன் என்று கூறிவிட்டான்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது - ஒரு நாள் இந்தத்துறையில் பெரிய
ஆளாக வருவேன் என்றும் சொல்லிவிட்டான்.


குடும்பத்தினர் எல்லோரும் கலந்து பேசி - இப்போது அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ள சிக்கலும்
தீர வேண்டும் -
எதிர் காலத்திலும் அவனால் பணப்பிரச் சினை வந்து குடும்பச்சொத்துக்கள் பாழாக்கக்கூடாது என்பதற்காக அவனிடம் விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு அவன் கடன் முழுவதையும் தீர்த்து வைத்தார்கள்.

வீட்டை விட்டு விடுதலை எழுதிக்கொடுத்துவிட்டு மகன் வெளியேறிப் போன கவலையில்,
தீராத கவலைக்கும் -
நோய்க்கும் ஆளாகி வள்ளி ஆச்சி மூன்றே மாதங்களில் இறந்து
விட்டார்கள்


தகவல் தெரிந்து தகனத்திற்கு அண்ணாமலை வந்துவிட்டான்.அதுவும் வீட்டிற்கு வரவில்லை. நேராகச் சுடுகாட்டிற்கே வந்தவன், தன் தலைமுடியை மழித்துக்கொண்டு, தாயாருக்கு இறுதிக் காரியங்களைச் செய்ததோடு, அப்படியே காவேரியில் முக்கி எழுந்து, கட்டியிருந்த ஈர வேட்டியுடனும், தன் மனைவியுடனும் ரயிலேறிச் சென்னைக்குத் திரும்பிப் போய்விட்டான்

அண்ணாமலை குடும்பத்தை விட்டுப் பிரிந்து போன கதைச் சுருக்கம் இதுதான்.

சரி, இப்போது பெரிய செட்டியார் சாகக் கிடக்கின்றாரே, அவனை ஒருமுறை பார்த்து விடத் தவிக்கின்றாரே - அவன் வருவானா?

செட்டியார் அனுதினமும் வணங்கி வந்த ஸ்ரீரெங்கநாதப்பெருமான் அருள் புரியாமற் போய்விடுவாரா என்ன?"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. கரைப்பவர் கரைத்தால் எதையும் கரைக்க முடியும். அடுத்த நாள் வைகரைப் பொழுதில் செட்டியாரின் ஆத்ம நண்பர் முத்துராமன் செட்டியார் அண்ணாமலையை அழைத்துக்கொண்டு வந்து விட்டார்.

வீட்டிற்குள் நுழைந்த அண்ணாமலை, முத்துராமன் செட்டியார் வழிகாட்ட நேரடியாகத் தன் தந்தையாரின் எதிரில்போய் நின்றான்.

பெரிய செட்டியார் முகம் மலர, மனம் நெகிழ, "வா அப்பச்சி" என்றார் அவரால் எழுந்து உட்கார முடியவில்லை. படுத்தவாறே கையெடுத்துக் கும்பிட்டார். சைகையில் அவனைக் குனியச் சொல்லி அவனுடைய சிரசைத்தொட்டு, ஆசீர்வாதம் செய்தார். அவன் அவருடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

உணர்ச்சிவசப்பட்ட பெரிய செட்டியார் தேம்பி அழுக ஆரம்பித்து விட்டார். இருந்தவர்கள்
அவரைத்
தேற்றுவதற்குள் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டது.

திருச்சி நகரமே திரண்டிருந்தது. செட்டியாரின் பூதவுடல் நல்ல முறையில் தகனம்

செய்யப்பட்டது.சுற்றத்தாரும்,பங்காளிகளும் உடனிருக்க மற்ற காரியங்களும் தொடர்ந்து நிறைவேறின. செட்டியாரின் ஆத்ம நண்பரும், அவருடைய குடும்ப வழக்கறிஞருமான முத்துராமன் செட்டியார், 100 கோடிக்குமேல் தேறக்கூடிய செட்டியாரின் சொத்துக்களுக்கு
உயில் இருப்பதாகவும் அதை உரியவர்கள்
தெரிந்துகொண்டு செல்லுமாறும் சொல்லி, அண்ணாமலை உட்பட பிள்ளைகள் அனைவரையும் நிறுத்திவிட்டார்.

சவண்டியன்று மாலை நான்கு மணிக்குச் செட்டியாரின் பெட்டகம் திறக்கப்பட்டது. அதற்குரிய சாவிகளில் ஒன்று முத்துராமன் செட்டியாரிடமும், மற்றொன்று செட்டியாரின் மூத்த
மகளிடமும் இருந்தது.


மலையாண்டி செட்டியார் மொத்த சொத்துக்களும் தன் மகனையே சேரவேண்டுமென்று பதினெட்டுப் பக்கங்களில் உயில் எழுதிவைத்து விட்டுப் போயிருந்தார்

அதையறிந்த அண்ணாமலை, தீர்க்கமான குரலில் பின்வருமாறு சொன்னான்.

"உயிலில் அப்பச்சி என்னைப் பற்றி மிகவும் உயர்வாக எழுதியிருக் கிறார்கள்.அதைவிட முக்கியமாக என் மீது அசாத்திய நம்பிக்கை உள்ளதாக எழுதியிருக்கிறார்கள். கேட்பதற்கு
மிகவும் சந்தோசமாக இருக்கிறது.25 வயதில்
ஒரு தகப்பனாரிடமிருந்து மகனுக்குக் கிடைக்கவேண்டிய சான்றிதழ் எனக்கு 55 வயதில் கிடைத்திருக்கிறது. எனக்கு அது ஒன்றே போதும்.இந்த சொத்துக்கள் எதுவும் எனக்கு வேண்டாம்.பணம்,சொத்தெல்லாம் ஒருவருக்கு
உரிய காலத்தில் கிடைக்கவேண்டும். இல்லையென்றால் கிடைத்தவருக்கு அது மகிழ்ச்சியைத் தராது. ஒரு பெண்ணிற்கு 24 வயதிற்குள் அல்லது மீறிப் போனால் 30 வயதிற் குள் திருமணம் நடைபெறவேண்டும். அதைவிடுத்து அவளுக்கு 50 வயதில் திருமணம் செய்துவைத்தால் அவளுடைய இல்லற வாழ்க்கை எப்படி முழுமை பெறும்? அவளால் எப்படி மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்த முடியும்? அதுபோலக் காலம் கடந்து வரும் இந்த சொத்துக்களை அனுபவிப்பதற்கோ அல்லது வைத்திருந்து பெருக்கவோ உரிய வயதை நான் கடந்து
விட்டேன்.மேலும் எனக்குப் பணத்தின் மேல் இருந்த காதலெல்லாம் விடை பெற்றுக் கொண்டுபோய் வெகு நாட்களாகிவிட்டது.தற்போது என்னிடம் இருக்கும் பணமே எனக்குப்
போதும் ஆகவே இந்த சொத்தில் ஒரு
இம்மிகூட எனக்கு வேண்டாம்"

அண்ணாமலையின் பேச்சில் அனைவரும் அதிர்ந்துவிட்டார்கள்.உடனிருந்த அவர்கள் பங்காளியும், குடும்ப ஆடிட்டருமான பெரிச்சியப்பன் தான் இடைமறித்துப் பேசினார்.

"சரி தம்பி, நீங்கள் சொல்வது வாஸ்தவம். ஆனால் உயில் உங்கள் பெயருக்கு இருக்கிறது. நீங்கள்தான் எக்ஸிக்யூட்டர்.உங்களுக்கு வேண்டா மென்றால் அவற்றை என்ன செய்ய
வேண்டும் என்று சொல்லுங்கள்."


"அப்பச்சி திருச்சியில் கட்டிவைத்துள்ள வீடுகள் எதையும் விற்க வேண்டாம். தாயார் காலமான பிறகு இத்தனை ஆண்டுகளாக இந்த வீட்டில் இருந்து என் தந்தையாரைப் பார்த்துக் கொண்ட என் மூத்த சகோதரிக்கே இந்த வீட்டைக் கொடுத்து விடுங்கள்.மற்ற வீடுகளையும் ஆளுக்கொன்றாக மற்ற சகோதரிகளுக்கும் கொடுத்து விடுங்கள். தங்க,வைர நகைகளும்,வெள்ளிப்பாத்திரங்களும் ஏராளமாக உள்ளன.அவற்றைப் பேத்திகளுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள். குளித்தலை,தொட்டியம் ஆகிய இடங்களில் இருக்கும் நிலபுலன்களைப் பேரர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள்.பங்குப் பத்திரங்கள் இன்றைய சந்தை மதிப்பின்படி ரூபாய் அறுபது
கோடிகளுக்குக் குறையாது என்று உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது - அவற்றை முழுவதுமாக விற்றுவிட்டு வங்கிகளில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ரூபாய் பத்துக் கோடிகளையும் சேர்த்து தாயார் - தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, அதன் மூலம் காரைக்குடிப் பகுதியில் மூன்று மருத்துவமனைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை ஒன்றும்
அதிக தூரத்தில் இல்லை - வந்து போவதில் சிரமமும்


இல்லை -எப்பொழுது வேண்டுமென்றாலும் கூப்பிடுங்கள் வந்து வேண்டிய கையெழுத்துக்களைப் போட்டுவிட்டுப்

போகிறேன்....." என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கும் போது, மாப்பிள்ளைகளில் ஒருவர் குறுக்கிட்டுச் சொன்னார், "செட்டி நாட்டிலேயே உங்கள் அப்பச்சி நினைவாகக் கல்லூரிகளைக் கட்டலாமே"

அண்ணாமலை சற்றுப் புன்னகைத்துவிட்டுச் சொன்னான்.

"அதை ஒரு புண்ணியவான் அற்புதமாகக் காரைக்குடியில் முன்பே செய்துவிட்டுப் போயிருக்கிறார். மற்ற ஊர்களிலும் படிப்படியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்போதைய தேவை எல்லா வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனைகள். நான் வந்தவுடன் கவனித்தேன் அப்பச்சிக்காக வீட்டிலுள்ள ஒரு பெரிய ஹாலையே மருத்துவமனையாக மாற்றி இருந்தீர்கள்.இந்த வசதி
எண்ணற்ற குடும்பங்களுக்கும்,
வயதானவர்களுக்கும் கிடைக்க வேண்டும் அதனால்தான் மருத்துவமனைகளைக் கட்டச் சொல்கிறேன்.இத்தோடு இந்தக் கூட்டத்தை முடித்துக் கொள்வோம். நடு இரவிற்குள் நான் சென்னைக்குப் போய்ச் சேர வேண்டும். ஆகவே நான் புறப்படுகிறேன். மீண்டும் தேவைப்படும்போது சந்திப்போம். ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொண்டு
உங்கள் அனைவரிடமிருந்தும் நான் விடை பெறுகிறேன். அன்பு, அனுபவம், அனுசரணை இம்மூன்றும்தான் ஒரு மனிதனுக்குக்கிடைக்கும் விலை மதிப்பில் லாத சொத்து. அந்த மூன்றும் எனக்கு கிடைத்தது. என் தாயாரின் மூலம் அளவில்லாத அன்பையும், என் தந்தையார் துணிச்சலுடன் என்னை வெளியே அனுப்பியதன் மூலம் அரிய அனுபவங்களையும், என் மனைவி மூலம் அனுசரணையான குடும்ப வாழ்க்கையையும் நான் பெற்றுள்ளேன்.இந்த ஜென்மத்திற்கு எனக்கு அதுவே போதும்....வருகிறேன்" என்று சொல்லியவன், அருகில் ஸ்டூலின் மீது
தன்னுடைய
தாயாரும் தந்தையாரும் சேர்ந்திருந்த படத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு விருட்டென்று புறப்பட்டு விட்டான்.

மற்ற அனைவரும் செயலற்றுப்போய் நின்றிருந்தார்கள்

=================================================
எப்படி உள்ளது சாமிகளா கதை? உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்












வாழ்க வளமுடன்!

66 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ''பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு''

    ஒரு குடும்பத்தின் நடப்பினை நேரில்

    காண்பது போல் உள்ளது., தங்களின் எழுத்தாக்கம்

    நன்றி!

    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-17

    ReplyDelete
  2. அய்யா
    ஒரு மனிதனக்கு 'அன்பு', 'அனுபவம்' மற்றும் 'அனுசரணை' இவை அனைத்தும் குறைந்த இழப்புகளிலிருந்து கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்.

    கதை மிக அருமை !
    by
    sridhar

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா!
    அதிகாலைப் பொழுது அன்பான வணக்கம்.

    குப்பையிலே கிடந்தாலும் கருமணியின் நிறம் ஒருக்கையிலும் மாறுமா? மாறாது'!

    அன்பு, அனுபவம், அனுசரணை இம்மூன்றும்தான் ஒரு மனிதனுக்குக்கிடைக்கும் விலை மதிப்பில் லாத சொத்து. அந்த மூன்றும் எனக்கு கிடைத்தது. என் தாயாரின் மூலம் அளவில்லாத அன்பையும், என் தந்தையார் துணிச்சலுடன் என்னை வெளியே அனுப்பியதன் மூலம் அரிய அனுபவங்களையும், என் மனைவி மூலம் அனுசரணையான குடும்ப வாழ்க்கையையும் நான் பெற்றுள்ளேன்.இந்த ஜென்மத்திற்கு எனக்கு அதுவே போதும்....வருகிறேன்" என்று சொல்லியவன், அருகில் ஸ்டூலின் மீது
    தன்னுடைய தாயாரும் தந்தையாரும் சேர்ந்திருந்த படத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு விருட்டென்று புறப்பட்டு விட்டான்.

    மற்ற அனைவரும் செயலற்றுப்போய் நின்றிருந்தார்கள்

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா! சொல்லும் பொருளும்
    நர்த்தனமாடி ஒரு நாட்டிய நாடகத்தை
    அரங்கேற்றிவிட்டன!

    பொருள் சுமந்து சென்ற சொல்லுக்குத் தான் இத்தனை வேகம்.
    சிலச் சொற்கள் பல பொருள்கள்.
    கதையின் தொடர்ச்சி என் பிறப்பை நினைவுப் படுத்தியது.
    நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பின் எட்டாவதாக தவம் இருந்து நான் பிறந்தேன்......

    கதையின் வேகத்தில் தெய்வத்திரு வள்ளல் அழகப்பச் செட்டியாரும் வந்துச் சென்றதும் இதைப் போல் இன்னும் பல வள்ளல்களுக்கு விண்ணப்பித்ததும்... மூத்த சகோதிரியின் மீது காண்பித்த விசுவாசமும்.... பெரி ஆயித்தானின் பணம் சம்பாதிக்க எண்ணிய விதத்தை ஒரு நமுட்டு சிரிப்போடு மறுத்தும்... இல்லை மருத்துவமனைகளை கட்டுங்கள் என்றும்.... அத்தனைக்கும் மேல் அன்பு அனுபவம் அனுசரணை அதன் மகிமையை, தேவையை, உயர்வை, வெள்ளிடைமலை போல்; குன்றின் மேல் விளக்காக்கி கதை வார்த்த குரு வாழ்க!

    ReplyDelete
  5. நான் படித்த கதைகல்லே இது தான் சிறந்தது........ மிகவும் நன்றி..

    அன்புடன்
    கர்ண ரத்தினவேல்

    ReplyDelete
  6. ஐயன்மீர், நாள்தொறும் வகுப்பறைக்கு இடம் கிட்டாவிட்டாலும் வந்து கவனிப்பேன். கருத்துடன் படிப்பேன். 55 வயதில் கதையில் கிடைத்த மூன்றும் கதாநாயகனுக்கு கிடைக்க அவரின் சாதகம் எப்படியிருக்கும் என எண்ணுகிறேன்.
    உங்கள் சேவை மகேசன் சேவை. நன்றி. வை.கிருஸ்ணர்.

    ReplyDelete
  7. Good and very informative story. Nice feel but people like Annamalai are 1 in 1000.

    ReplyDelete
  8. மிகவும் அருமையான கதை குரு அவர்களே தங்களுடைய மிகவும் ஆணித்தரமாக எந்தெந்த வயதில் எது கிடைத்தால் மட்டுமே அது நல்லது என்பது புரிகிறது. வாழ்த்துகள் தொடரட்டும்

    ReplyDelete
  9. கதை நன்றாக உள்ளது.

    நான் இதற்கு முன் அனுப்பிய பின்னூட்டம் ஏன் வரவில்லை?

    ReplyDelete
  10. மீண்டும் வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்

    கதை மிக அருமை. எதுவுமே கிடைக்க வேண்டிய காலத்தில் கிடைத்தால்தான் அதற்க்கு மதிப்பு. அண்ணாமலையை பொறுத்த வரை அத்தனை சொத்துக்களும் ஒரே வாரிசாக இருந்தும் சென்னையில் கஷ்டபட்டதுதான் அவரின் நினைவில் ஓடியிருக்கும். பசிக்கும் போது கிடைக்கும் உணவு தான் உயிரை காப்பாற்றும். வயிறு நிறைந்து இருக்கும் போது பிரியாணியே கிடைத்தாலும் அதன் மேல் ஒரு பிரியம் வராது. அதனால் தான் இந்த சொத்தில் ஒரு இம்மி கூட வேண்டாம் என்று கூறியிருப்பார்.

    இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடை பெறுவது தான். இந்த பதிவிற்கு பிறகாவது இதை படிக்கும் பெற்றோர்கள் சம்பாதிப்பது தம் மக்களுக்கே என்று நினைத்து சொத்துக்களை கொடுத்து காப்பாற்றுவார்கள் என நினைக்கிறேன்.

    இது என் அனுபவமும் கூட.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பல விஷயங்களை தெளிவாக்க கதைகள் மூலம் சொன்னால் தானே புரிகிறது! நன்றி!

    ReplyDelete
  13. /////Subbaraman said...
    Nandraga ulladhu aiyaa../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. .////////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ''பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு''
    ஒரு குடும்பத்தின் நடப்பினை நேரில் காண்பது போல் உள்ளது., தங்களின் எழுத்தாக்கம்
    நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி///////

    அப்படி எழுதினால்தான் படிப்பதற்கு சுவையாக இருக்கும். அருகில் இருந்து பார்ப்பதைப்போல்தான் நான் எழுதுவேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Deiva said...
    Very nice story. Good thinking./////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////sridhar said...
    அய்யா
    ஒரு மனிதனக்கு 'அன்பு', 'அனுபவம்' மற்றும் 'அனுசரணை' இவை அனைத்தும் குறைந்த இழப்புகளிலிருந்து கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்.
    கதை மிக அருமை !
    by
    sridhar/////

    உங்களுக்கு அவ்வாறு கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. ////kannan said...
    வாத்தியார் ஐயா!
    அதிகாலைப் பொழுது அன்பான வணக்கம்.
    குப்பையிலே கிடந்தாலும் கருமணியின் நிறம் ஒருக்கையிலும் மாறுமா? மாறாது'!
    அன்பு, அனுபவம், அனுசரணை இம்மூன்றும்தான் ஒரு மனிதனுக்குக்கிடைக்கும் விலை மதிப்பில் லாத சொத்து. அந்த மூன்றும் எனக்கு கிடைத்தது. என் தாயாரின் மூலம் அளவில்லாத அன்பையும், என் தந்தையார் துணிச்சலுடன் என்னை வெளியே அனுப்பியதன் மூலம் அரிய அனுபவங்களையும், என் மனைவி மூலம் அனுசரணையான குடும்ப வாழ்க்கையையும் நான் பெற்றுள்ளேன்.இந்த ஜென்மத்திற்கு எனக்கு அதுவே போதும்....வருகிறேன்" என்று சொல்லியவன், அருகில் ஸ்டூலின் மீது
    தன்னுடைய தாயாரும் தந்தையாரும் சேர்ந்திருந்த படத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு விருட்டென்று புறப்பட்டு விட்டான்.
    மற்ற அனைவரும் செயலற்றுப்போய் நின்றிருந்தார்கள்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி முருகா!

    ReplyDelete
  18. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா! சொல்லும் பொருளும்
    நர்த்தனமாடி ஒரு நாட்டிய நாடகத்தை
    அரங்கேற்றிவிட்டன!
    பொருள் சுமந்து சென்ற சொல்லுக்குத் தான் இத்தனை வேகம்.
    சிலச் சொற்கள் பல பொருள்கள்.
    கதையின் தொடர்ச்சி என் பிறப்பை நினைவுப் படுத்தியது.
    நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பின் எட்டாவதாக தவம் இருந்து நான் பிறந்தேன்....
    கதையின் வேகத்தில் தெய்வத்திரு வள்ளல் அழகப்பச் செட்டியாரும் வந்துச் சென்றதும் இதைப் போல் இன்னும் பல வள்ளல்களுக்கு விண்ணப்பித்ததும்... மூத்த சகோதிரியின் மீது காண்பித்த விசுவாசமும்.... பெரி ஆயித்தானின் பணம் சம்பாதிக்க எண்ணிய விதத்தை ஒரு நமுட்டு சிரிப்போடு மறுத்தும்... இல்லை மருத்துவமனைகளை கட்டுங்கள் என்றும்.... அத்தனைக்கும் மேல் அன்பு அனுபவம் அனுசரணை அதன் மகிமையை, தேவையை, உயர்வை, வெள்ளிடைமலை போல்; குன்றின் மேல் விளக்காக்கி கதை வார்த்த குரு வாழ்க!/////

    உங்களின் நீண்ட விமர்சனத்திற்கும் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. //////Rathinavel.C said...
    நான் படித்த கதைகல்லே இது தான் சிறந்தது........ மிகவும் நன்றி..
    அன்புடன்
    கர்ண ரத்தினவேல்/////

    உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. //////CJeevanantham said...
    Great ...........sir....//////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  21. //////krishnar said...
    ஐயன்மீர், நாள்தொறும் வகுப்பறைக்கு இடம் கிட்டாவிட்டாலும் வந்து கவனிப்பேன். கருத்துடன் படிப்பேன். 55 வயதில் கதையில் கிடைத்த மூன்றும் கதாநாயகனுக்கு கிடைக்க அவரின் சாதகம் எப்படியிருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் சேவை மகேசன் சேவை. நன்றி. வை.கிருஸ்ணர்./////

    இது ஆகாயத்தில் (இணையத்தில்) நடத்தப்பெறும் வகுப்பு. உங்களுக்கு எப்படி இடம் இல்லாமல் போகும் சார்?
    ஒன்பதில் குரு இருக்கும்! ஒன்பதாம் வீட்டதிபதி உச்சமாக இருப்பார்!

    ReplyDelete
  22. /////dubai saravanan said...
    கதை மிக அருமை !////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //////ananth said...
    Morale of the story நன்று.////

    நல்லது நன்றி மிஸ்டர் ஆனந்த்!

    ReplyDelete
  24. //////sabhrinath said...
    Good and very informative story. Nice feel but people like Annamalai are 1 in 1000./////

    உண்மை. ஆயிரத்தில் ஒருவர் இருந்தாலும் போதும். அவர் பொருட்டுப் பெய்யெனப் பெய்யும் மழை!

    ReplyDelete
  25. /////கண்ணகி said...
    அருமையான கதை..////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. /////வடிவேலன் ஆர். said...
    மிகவும் அருமையான கதை குரு அவர்களே தங்களுடைய மிகவும் ஆணித்தரமாக எந்தெந்த வயதில் எது கிடைத்தால் மட்டுமே அது நல்லது என்பது புரிகிறது. வாழ்த்துகள் தொடரட்டும்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Uma said...
    கதை நன்றாக உள்ளது.
    நான் இதற்கு முன் அனுப்பிய பின்னூட்டம் ஏன் வரவில்லை?/////

    அதற்கான பதில் உங்களுக்கு மின்னஞ்சலில் வரும்!

    ReplyDelete
  28. //////kmr.krishnan said..
    மீண்டும் வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  29. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    கதை மிக அருமை. எதுவுமே கிடைக்க வேண்டிய காலத்தில் கிடைத்தால்தான் அதற்க்கு மதிப்பு. அண்ணாமலையை பொறுத்த வரை அத்தனை சொத்துக்களும் ஒரே வாரிசாக இருந்தும் சென்னையில் கஷ்டபட்டதுதான் அவரின் நினைவில் ஓடியிருக்கும். பசிக்கும் போது கிடைக்கும் உணவு தான் உயிரை காப்பாற்றும். வயிறு நிறைந்து இருக்கும் போது பிரியாணியே கிடைத்தாலும் அதன் மேல் ஒரு பிரியம் வராது. அதனால் தான் இந்த சொத்தில் ஒரு இம்மி கூட வேண்டாம் என்று கூறியிருப்பார்.
    இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடை பெறுவது தான். இந்த பதிவிற்கு பிறகாவது இதை படிக்கும் பெற்றோர்கள் சம்பாதிப்பது தம் மக்களுக்கே என்று நினைத்து சொத்துக்களை கொடுத்து காப்பாற்றுவார்கள் என நினைக்கிறேன்.இது என் அனுபவமும் கூட.
    நன்றி
    வாழ்த்துக்கள்///

    உங்களின் அனுபவப் பகிர்விற்கிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. நல்ல கதை வாத்தியார்

    ReplyDelete
  31. அன்பு அய்யாவுக்கு வணக்கம்,ஒரு சின்ன திரைப்படம் பார்த்த திருப்தி எனக்கு,
    க‌தையின் பாத்திர‌த்தை க‌ண் முன் நிருத்திவிட்டீர்கள்,நீங்க‌ள் திரைக்க‌தை எழுத‌லாம்.
    மிக‌வும் அருமையான‌ ப‌டைப்பு.
    அன்புட‌ன் உங்க‌ள் மாண‌வ‌ன்
    ஜீவா

    ReplyDelete
  32. Dear sir,

    superb story sir.
    Anbu, Anubavam, Anusaranai... True sir these 3 are the most wanted in everyones life. I understood Sir.

    Thanks
    Saravana
    Kovai

    ReplyDelete
  33. /////snkm said...
    பல விஷயங்களை தெளிவாக்க கதைகள் மூலம் சொன்னால் தானே புரிகிறது! நன்றி!/////

    ஆமாம். ஒரு செய்தியை அல்லது ஒரு நீதியைக் கதையின் மூலம் அழுத்தமாகச் சொல்லலாம். மனதில் பதியும் வண்ணம் சொல்லமுடியும்!

    ReplyDelete
  34. /////A.சிவசங்கர் said...
    நல்ல கதை வாத்தியார்/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம்,ஒரு சின்ன திரைப்படம் பார்த்த திருப்தி எனக்கு,
    க‌தையின் பாத்திர‌த்தை க‌ண் முன் நிருத்திவிட்டீர்கள்,நீங்க‌ள் திரைக்க‌தை எழுத‌லாம்.
    மிக‌வும் அருமையான‌ ப‌டைப்பு.
    அன்புட‌ன் உங்க‌ள் மாண‌வ‌ன்
    ஜீவா/////

    இப்போதெல்லாம், 'டாடி மம்மி வீட்டில் இல்லை. தடைபோட யாரும் இல்லை' என்று சொல்லும் திரைக் கதைகள்தானே எடுபடும் சாமி! இதையெல்லாம் திரைக்கதையாக்கினால், படம் எடுக்க மீண்டும் ஒரு பீம்சிங் வரவேண்டுமே!

    ReplyDelete
  36. //////Saravana said...
    Dear sir,
    superb story sir.
    Anbu, Anubavam, Anusaranai... True sir these 3 are the most wanted in everyones life. I understood Sir.
    Thanks
    Saravana
    Kovai/////

    நல்லது. நன்றி சரவணன்!

    ReplyDelete
  37. படமெடுக்கத் தங்கள் குடும்பத்தின் குடியரசுத்தலைவரின் மூலம் பிரதம மந்திரிக்கு மனுப்போட்டான். அதாவது தன் ஆத்தா மூலம், அப்பச்சிக்கு மனுப்போட்டான்........
    கதை மிகவும் நன்றாகஉள்ளது., அருமை.!!!
    நன்றி!
    அன்புடன்
    ரமேஷ்

    ReplyDelete
  38. /////Ramesh said...
    படமெடுக்கத் தங்கள் குடும்பத்தின் குடியரசுத்தலைவரின் மூலம் பிரதம மந்திரிக்கு மனுப்போட்டான். அதாவது தன் ஆத்தா மூலம், அப்பச்சிக்கு மனுப்போட்டான்........
    கதை மிகவும் நன்றாகஉள்ளது., அருமை.!!!
    நன்றி!
    அன்புடன்
    ரமேஷ்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  39. கதை இல்லை. நடந்த நிஜமாகவே தோன்றுகிறது.
    அதை எடுத்துச் சொன்ன விதம் பிரமிப்பை ஏற்படுத்தியது.
    அது சரி. அப்பச்சியின் ஜாதகத்தைப் பார்த்து பஞ்சம் ஸ்தானாதிபதி பற்றியும்
    புத்ர காரகனான குருவின் இருப்பிடத்தையும்
    எடுத்துக்காட்டி, நடந்தது வினைப்பயனே என்று சுட்டிக்காட்டியிருப்பீர்களோ என‌
    எதிர்பார்த்தேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  40. //சொத்தெல்லாம் ஒருவருக்கு
    உரிய காலத்தில் கிடைக்கவேண்டும். இல்லையென்றால் கிடைத்தவருக்கு அது மகிழ்ச்சியைத் தராது// it's a wonderful quote

    A heart warming story, thanks a lot sir.

    ReplyDelete
  41. நல்ல கதை..இன்னமும் இத்தகைய தாக்கத்தில் கட்டி எழுப்பப்பட்ட மருத்துவமனைகள் ஏதும் காரைக்குடி பகுதியில் இல்லை என்று நினைக்கிறேன்..இந்த கதையை படிக்கும் வசதிமிக்க நாட்டுகோட்டை நண்பர்கள் யாரேனும் ஆவன செய்வார்களா என்ற மேலான நோக்கமும் தங்களின் கதையின் ஊடே ஒளிந்து கிடக்கிறதா?
    மற்றபடி எனக்கு 9ஆம் ஆதி உச்சம்தான்.கிடைக்கவேண்டியவை கிடைத்ததா?இன்னும் இல்லையா என்று புரியவில்லை..
    TK Arumugam அய்யா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். என் வீட்டிலும் இப்படி சினிமா மோகத்தில் சொத்தை அழித்த சித்தப்பா ஒருத்தர் இருக்கிறார். இன்றும் நண்பர்கள் பலர் இதே நிலையில் இருக்கிறார்கள். ஆதரவு அளிக்க இப்படிப்பட்ட அப்பாதான் இல்லை..
    வாழ்த்துக்கள்..நல்ல கதையை வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  42. தந்தைக்கு மகன் மேல் எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் எப்போதும் இருந்ததில்லை. இப்போதாவது திருந்தி நல்ல குணத்துடன் நல்லவனாக இருக்கிறானா, தனக்குப் பிறகு தன் சொத்தையெல்லாம் நல்ல படியாக கட்டிக் காப்பானா என்று தெரியாது. இருப்பினும் தன் சொத்தையெல்லாம் அந்த மகன் பெயருக்கே தந்தை எழுதி வைக்கிறார். இந்த இடம்தான் சற்று நெருடலாக இருக்கிறது.

    ReplyDelete
  43. நல்ல கதை.ஆனா நிஜத்துல கோடில ஒருத்தர் இப்படி இருந்தா அதிசியம் தான்

    ReplyDelete
  44. மைனர்வாள் சகோதரா,
    வர வர நீங்க ரொம்ப ஜோக்காடிக்கிறீங்க நல்லா பாடத்தை படிங்க அப்பதா நம்ப தேர்ச்சி பெறுவோம் சார் நன்நடத்தை சான்றுல்லா மோசமானவங்க என்று எழுதி தந்த நம்ப வேறு க்ல்லூரில்ல சேர முடியாது.
    வாத்தியார் சார் வண்க்கம், கதை ரொம்ப நல்லாயிருந்தது உடனே அவ்ரு ஊருக்கு திரும்பி போய்விட்டாரே 16 நாள் அவர் இறுதி சடங்கு செய்ய வேண்டாவா அய்யா இந்த மாதரி கதைங்களை தமிழ் துணைப்பாடமா தந்த நல்லாயிருக்கும்
    சுந்தரி.

    ReplyDelete
  45. ///////sury said...
    கதை இல்லை. நடந்த நிஜமாகவே தோன்றுகிறது.
    அதை எடுத்துச் சொன்ன விதம் பிரமிப்பை ஏற்படுத்தியது.
    அது சரி. அப்பச்சியின் ஜாதகத்தைப் பார்த்து பஞ்சம் ஸ்தானாதிபதி பற்றியும்
    புத்ர காரகனான குருவின் இருப்பிடத்தையும்
    எடுத்துக்காட்டி, நடந்தது வினைப்பயனே என்று சுட்டிக்காட்டியிருப்பீர்களோ என‌
    எதிர்பார்த்தேன்.
    சுப்பு ரத்தினம்.////////

    கதைபடிப்பவர்கள் அத்தனைபேரும் அதை விரும்புவார்களா என்ன? அதனால் கதைகளைக் கதைகளாகவே விட்டுவிடுவேன். தேவைப்படாமல் ஜோதிடத்தை அங்கே நுழைக்கமாட்டேன்!

    ReplyDelete
  46. //////Prabhu said...
    //சொத்தெல்லாம் ஒருவருக்கு
    உரிய காலத்தில் கிடைக்கவேண்டும். இல்லையென்றால் கிடைத்தவருக்கு அது மகிழ்ச்சியைத் தராது// it's a wonderful quote
    A heart warming story, thanks a lot sir./////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  47. ////minorwall said..
    நல்ல கதை..இன்னமும் இத்தகைய தாக்கத்தில் கட்டி எழுப்பப்பட்ட மருத்துவமனைகள் ஏதும் காரைக்குடி பகுதியில் இல்லை என்று நினைக்கிறேன்..இந்த கதையை படிக்கும் வசதிமிக்க நாட்டுகோட்டை நண்பர்கள் யாரேனும் ஆவன செய்வார்களா என்ற மேலான நோக்கமும் தங்களின் கதையின் ஊடே ஒளிந்து கிடக்கிறதா?
    மற்றபடி எனக்கு 9ஆம் ஆதி உச்சம்தான்.கிடைக்கவேண்டியவை கிடைத்ததா?இன்னும் இல்லையா என்று புரியவில்லை..
    TK Arumugam அய்யா அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். என் வீட்டிலும் இப்படி சினிமா மோகத்தில் சொத்தை அழித்த சித்தப்பா ஒருத்தர் இருக்கிறார். இன்றும் நண்பர்கள் பலர் இதே நிலையில் இருக்கிறார்கள். ஆதரவு அளிக்க இப்படிப்பட்ட அப்பாதான் இல்லை..
    வாழ்த்துக்கள்..நல்ல கதையை வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி../////

    நல்லது. உங்களுடைய மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  48. /////ananth said...
    தந்தைக்கு மகன் மேல் எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் எப்போதும் இருந்ததில்லை. இப்போதாவது திருந்தி நல்ல குணத்துடன் நல்லவனாக இருக்கிறானா, தனக்குப் பிறகு தன் சொத்தையெல்லாம் நல்ல படியாக கட்டிக் காப்பானா என்று தெரியாது. இருப்பினும் தன் சொத்தையெல்லாம் அந்த மகன் பெயருக்கே தந்தை எழுதி வைக்கிறார். இந்த இடம்தான் சற்று நெருடலாக இருக்கிறது.///////

    இடையில் 25 ஆண்டுகள் அண்ணாமலை சாதித்தவற்றையும், அது பற்றி அவனுடைய தந்தை அறிந்ததையும் கதையில் கொண்டுவரவில்லை. நெடுங்கதையாகிவிடும். அவனுடைய அந்த ரோஷ உணர்வு ஒன்று போதாதா - அவன்மேல் அவனுடைய தந்தைக்குப் பின்னாளில் நம்பிக்கை ஏற்பட?

    ReplyDelete
  49. /////அப்பாவி தங்கமணி said...
    நல்ல கதை.ஆனா நிஜத்துல கோடில ஒருத்தர் இப்படி இருந்தா அதிசியம் தான்//////

    இருப்பவர்கள் சிலரை நான் பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  50. /////sundari said...
    மைனர்வாள் சகோதரா,
    வர வர நீங்க ரொம்ப ஜோக்காடிக்கிறீங்க நல்லா பாடத்தை படிங்க அப்பதா நம்ப தேர்ச்சி பெறுவோம் சார் நன்நடத்தை சான்றுல்லா மோசமானவங்க என்று எழுதி தந்த நம்ப வேறு கல்லூரில்ல சேர முடியாது./////

    அவர்தான் மைனராயிற்றே! படித்து என்ன சாதிக்க வேண்டுமோ, அதைப் படிக்காமலேயே சாதிக்கக்கூடியவர் அவர்! அவர்தருவார் ஆயிரம் பேருக்கு நன்னடத்தைச் சான்றிதழ்கள்! அவருக்கு எதற்குச் சான்றிதழ்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    வாத்தியார் சார் வணக்கம், கதை ரொம்ப நல்லாயிருந்தது உடனே அவரு ஊருக்கு திரும்பி போய்விட்டாரே 16 நாள் அவர் இறுதி சடங்கு செய்ய வேண்டாவா அய்யா இந்த மாதரி கதைங்களை தமிழ் துணைப்பாடமா தந்த நல்லாயிருக்கும்
    சுந்தரி.////

    அதையெல்லாம் விவரித்து எழுதினால் கதை தொடர்கதை யாகிவிடுமே அம்மணி!

    ReplyDelete
  51. A good story. Sir, where i can buy your book ' chettinattu kathaigal' in chennai? please provide us the address.

    ReplyDelete
  52. /////Raja said...
    A good story. Sir, where i can buy your book ' chettinattu kathaigal' in chennai? please provide us the address./////

    எனது மின்னஞ்சல் முகவரிக்கு classroom2007@gmail.com உங்கள் முகவரியைத் தாருங்கள். புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்

    ReplyDelete
  53. ////sundari said...
    மைனர்வாள் சகோதரா,
    வர வர நீங்க ரொம்ப ஜோக்காடிக்கிறீங்க நல்லா பாடத்தை படிங்க அப்பதா நம்ப தேர்ச்சி பெறுவோம் சார் நன்நடத்தை சான்றுல்லா மோசமானவங்க என்று எழுதி தந்த நம்ப வேறு க்ல்லூரில்ல சேர முடியாது.
    /////

    Wednesday, March
    சுந்தரிம்மா,
    கண்டிப்பின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை. என்கிற டைட்டிலுடன் நடத்தப்படுகிற இடம் என்பதால் கொஞ்சம் freeயாக கமெண்ட் அடிக்கிறேன்..அவ்வளவுதான்..
    இதைத்தவிர நம்ம வாத்தியார் சரியான மொக்கை பார்ட்டிகளையும் தினந்தோறும் எதிர்கொள்பவர். தனித்தனியே தங்களோட ப்லோக்குகளிலே
    நேரெதிர் மாற்றுக்கருத்து கொண்டு மிக மோசமாக பதிவிடும் பதிவர்களும் அவ்வப்போது நமது வகுப்பறையிலே புகுந்ததும்
    கலாயத்ததும் அதன் பின்னர் எல்லோருமே தங்கள் காரசாரமான பதிலை வெளியிட்டதும் எல்லோருமே அறிந்த பழைய கதை..
    இவ்வளவு நடந்த பிறகும் அந்த பதிவர் சமீபத்திய வகுப்பறையின் பதிவிலே பின்நூட்டமிட்டிருப்பதையும் அதையும் நமது வாத்தியார்
    அனுமதித்திருப்பதையும் பார்க்கும்போது அவரின் இளகிய மனசு புரிகிறது..
    அதனால் என்னைப் போன்றவர்களை அந்தளவு மோசமான லிஸ்டிலே சேர்த்திட வேண்டாம்...நாம நல்ல distinction வாங்கி P .G .சீட்டயும் இதே யுனிவெர்சிடியில் வாங்குவோம்.
    அப்பிடி ஒருவேளை competition heavy ஆ இருந்தால் P .G . சீட் நான் NRI quota விலே ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..உங்களுக்கும் donation கொடுத்து ட்ரை பண்றதுன்னாலும் நான் என்னாலே முடிந்த அளவு ட்ரை பண்றேன்...

    ReplyDelete
  54. //////////SP.VR. SUBBAIYA said...
    அவர்தான் மைனராயிற்றே! படித்து என்ன சாதிக்க வேண்டுமோ, அதைப் படிக்காமலேயே சாதிக்கக்கூடியவர் அவர்! அவர்தருவார் ஆயிரம் பேருக்கு நன்னடத்தைச் சான்றிதழ்கள்! அவருக்கு எதற்குச் சான்றிதழ்?//////
    எனக்கு இப்பிடி ஒரு நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா. (வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?)
    சுந்தரி அவர்கள் விளையாட்டாக ஆரம்பித்த இந்த கல்லூரி விவகாரம் நல்ல ஆரம்பமாக இருந்து இந்த வகுப்பறையை உண்மையிலேயே ஜோதிட சம்பந்தமான டிப்ளோமாவை மதுரை காமராஜ் university வழங்குவது போலே ஆசிரியர் சீரிய விருப்பம் உள்ளவர்களை விண்ணப்பமிடச் சொல்லி ஆன்லைன் டிகிரி / டிப்ளோமோ கோர்ஸ் நடத்தலாம் என்று நினைக்கிறேன்.
    ஆமா? எங்க சார் ரொம்ப நாளா மெயில் பாடங்களையே காணோம்?
    என்னையும் லிஸ்டிலேதனே வெச்சுருக்கீங்க?(ஹிட் லிஸ்டிலே இல்லாட்டி சரிதான்.)
    (கிளாஸ்ரூம்லேயும் உங்க ஸ்பெஷல் சப்ஜெக்ட்லேருந்து deviate ஆகி numerology சைடிலே போயிட்டே இருக்கீங்கோ..)

    ReplyDelete
  55. minorwall said...
    ////sundari said...
    மைனர்வாள் சகோதரா,
    வர வர நீங்க ரொம்ப ஜோக்காடிக்கிறீங்க நல்லா பாடத்தை படிங்க அப்பதா நம்ப தேர்ச்சி பெறுவோம் சார் நன்நடத்தை சான்றுல்லா மோசமானவங்க என்று எழுதி தந்த நம்ப வேறு க்ல்லூரில்ல சேர முடியாது.
    /////
    Wednesday, March
    சுந்தரிம்மா,
    கண்டிப்பின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை. என்கிற டைட்டிலுடன் நடத்தப்படுகிற இடம் என்பதால் கொஞ்சம் freeயாக கமெண்ட் அடிக்கிறேன்..அவ்வளவுதான்..
    இதைத்தவிர நம்ம வாத்தியார் சரியான மொக்கை பார்ட்டிகளையும் தினந்தோறும் எதிர்கொள்பவர். தனித்தனியே தங்களோட ப்லோக்குகளிலே
    நேரெதிர் மாற்றுக்கருத்து கொண்டு மிக மோசமாக பதிவிடும் பதிவர்களும் அவ்வப்போது நமது வகுப்பறையிலே புகுந்ததும்
    கலாயத்ததும் அதன் பின்னர் எல்லோருமே தங்கள் காரசாரமான பதிலை வெளியிட்டதும் எல்லோருமே அறிந்த பழைய கதை..
    இவ்வளவு நடந்த பிறகும் அந்த பதிவர் சமீபத்திய வகுப்பறையின் பதிவிலே பின்நூட்டமிட்டிருப்பதையும் அதையும் நமது வாத்தியார்
    அனுமதித்திருப்பதையும் பார்க்கும்போது அவரின் இளகிய மனசு புரிகிறது..
    அதனால் என்னைப் போன்றவர்களை அந்தளவு மோசமான லிஸ்டிலே சேர்த்திட வேண்டாம்...நாம நல்ல distinction வாங்கி P .G .சீட்டயும் இதே யுனிவெர்சிடியில் வாங்குவோம்.
    அப்பிடி ஒருவேளை competition heavy ஆ இருந்தால் P .G . சீட் நான் NRI quota விலே ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..உங்களுக்கும் donation கொடுத்து ட்ரை பண்றதுன்னாலும் நான் என்னாலே முடிந்த அளவு ட்ரை பண்றேன்...//////

    இது இணைய வகுப்பு. இடப் பிரச்சினை இல்லாத வகுப்பு. ஆகவே கோட்டாவிற்கு இங்கே இடமில்லை. வருகின்ற அத்தனை பேர்களுக்கும் வகுப்பறையில் அனுமதியுண்டு மைனர்.

    ReplyDelete
  56. //////minorwall said...
    //////////SP.VR. SUBBAIYA said...
    அவர்தான் மைனராயிற்றே! படித்து என்ன சாதிக்க வேண்டுமோ, அதைப் படிக்காமலேயே சாதிக்கக்கூடியவர் அவர்! அவர்தருவார் ஆயிரம் பேருக்கு நன்னடத்தைச் சான்றிதழ்கள்! அவருக்கு எதற்குச் சான்றிதழ்?//////
    எனக்கு இப்பிடி ஒரு நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்ததற்கு மிக்க நன்றி அய்யா. (வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?)
    சுந்தரி அவர்கள் விளையாட்டாக ஆரம்பித்த இந்த கல்லூரி விவகாரம் நல்ல ஆரம்பமாக இருந்து இந்த வகுப்பறையை உண்மையிலேயே ஜோதிட சம்பந்தமான டிப்ளோமாவை மதுரை காமராஜ் university வழங்குவது போலே ஆசிரியர் சீரிய விருப்பம் உள்ளவர்களை விண்ணப்பமிடச் சொல்லி ஆன்லைன் டிகிரி / டிப்ளோமோ கோர்ஸ் நடத்தலாம் என்று நினைக்கிறேன்.
    ஆமா? எங்க சார் ரொம்ப நாளா மெயில் பாடங்களையே காணோம்?
    என்னையும் லிஸ்டிலேதனே வெச்சுருக்கீங்க?(ஹிட் லிஸ்டிலே இல்லாட்டி சரிதான்.)
    (கிளாஸ்ரூம்லேயும் உங்க ஸ்பெஷல் சப்ஜெக்ட்லேருந்து deviate ஆகி numerology சைடிலே போயிட்டே இருக்கீங்கோ..)//////

    ஒரு மாறுதலுக்காகத்தான் மைனர். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மீண்டும் ஜோதிட வகுப்புக்கள்!

    ReplyDelete
  57. oru VaaZhkai Payanathin Anubavam.
    Oru Uyirin Unarvin Velippadu
    Miga Unmayaga Manasu Solvadhai indha kadhai solkirathu.
    Kadhaikku Nandri Ayya
    ippadikku ungal anbu maanavan

    ReplyDelete
  58. ////KULIR NILA said...
    oru VaaZhkai Payanathin Anubavam.
    Oru Uyirin Unarvin Velippadu
    Miga Unmayaga Manasu Solvadhai indha kadhai solkirathu.
    Kadhaikku Nandri Ayya
    ippadikku ungal anbu maanavan/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  59. Correct. காலம் கடந்து கிடைக்கும் எதுவுமே ஒன்று சுமையாகி போகும் அல்லது பத்தோடு பதினொன்றாக இருக்கும். மனிதர்களுக்கு வேண்டுமானால் காலத்தின் கணக்கு சமன் ஆகாதது போல் தோற்றமளிக்கலாம். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் வித்திடப்பட்ட உயிரினம் அவ்வாறு எண்ணுவது விசித்திரமானதல்ல. ஆனால், மேலே இருந்து பார்த்து கொண்டிருக்கும் கணக்கனின் ஏடுகளில் நேராகிக்கொண்டிருக்கும்.

    In short the story is nice.

    ReplyDelete
  60. ///////Sreenivasan said...
    Correct. காலம் கடந்து கிடைக்கும் எதுவுமே ஒன்று சுமையாகி போகும் அல்லது பத்தோடு பதினொன்றாக இருக்கும். மனிதர்களுக்கு வேண்டுமானால் காலத்தின் கணக்கு சமன் ஆகாதது போல் தோற்றமளிக்கலாம். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் வித்திடப்பட்ட உயிரினம் அவ்வாறு எண்ணுவது விசித்திரமானதல்ல. ஆனால், மேலே இருந்து பார்த்து கொண்டிருக்கும் கணக்கனின் ஏடுகளில் நேராகிக்கொண்டிருக்கும்.
    In short the story is nice.//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com