++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: தாய்மொழி எப்படி வந்தது?
எச்சரிக்கை: நகைச்சுவைக்காகப் பதியப்பட்டுள்ள பதிவு!
உம்'மன்னா மூஞ்சிகள் பதிவை விட்டு விலகவும்.
நகைச்சுவை இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சாப்பாட்டைப்போன்றது!
அதை உணருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
நீதிபதி : நாற்காலியால் உன் கணவனை ஏன் தாக்கினாய்?
மனைவி : மேஜை தூக்கும்படியாக இல்லாததால்!
....................................................................................
2
'எனக்கு ஞாபக மறதி அதிகம் என்று டாக்டரிடம் சொன்னது தப்பாகப் போயிற்று"
"ஏன் என்ன செய்தார்?"
"மொத்த ஃபீஸையும் முன்னாடியே வாங்கிக்கொண்டுவிட்டார்!"
....................................................................................
3
"தொல்லையாக இருக்கிறது. தனக்கு என்ன வேண்டுமென்பது என் மனைவிக்குத் தெரிவதில்லை"
"நீங்கள் லக்கியானவர். என் துரதிர்ஷ்டம் என் மனைவிக்கு அது தெரியும்"
.....................................................................................
4
"பாத்திரங்களைக் கழுவதற்கு எதை உபயோகிக்கிறீர்கள்?"
"நானும் எதைஎதையோ உபயோகித்துப் பார்த்துவிட்டேன். எதுவுமே சரியில்லை, என் கணவரைத்தவிர!"
.........................................................................................
5.
வாத்தியார்: நாம் பேசும் மொழிக்குத் தாய்மொழி என்று எப்படிப் பெயர் வந்தது?
மாணவன்: வீட்டில் அப்பாக்கள் வாயைத் திறப்பதே இல்லை. அதனால்தான் வீட்டில் பேசும் மொழியைத் தாய்மொழி என்கிறோம்!
...............................................................................................
6.
"நான் டாக்டருக்குப் படிக்க விரும்புகிறேன்"
"அதற்குரிய தகுதி உனக்கு இருக்கிறது. உன் கையெழுத்து படிக்கும்படியாக இல்லை!"
.................................................................................................
==================================================
7.
தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் செய்வதற்காக வந்திருந்த ஆசாமியை உட்காரவைத்த காவல்துறைக் கண்காணிப்பாளர், அவனுடன் பேசத்துவங்கினார்:
"எத்தனை நாட்களாக உன் மனைவியைக் காணவில்லை"
"மூன்று நாட்களாக!"
"என்ன உயரம் இருப்பார்?"
"என்னைவிடக் குட்டையானவள்"
"என்ன நிறம் இருப்பார்?"
"என்னைவிடக் கறுப்பாக இருப்பாள்"
"என்ன உடை அணிந்திருந்தார்?"
"காணாமல் போன சமயத்தில் நான் வீட்டில் இல்லை. அதனால் தெரியவில்லை!"
"புகைப்படம் இருக்கிறதா?"
"பத்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் நடைபெற்றபோது எடுத்த புகைப்படம் இருக்கிறது"
இந்த இடத்தில் கண்காணிப்பாளர் தயக்கத்துடன் கேட்டார். "உங்கள் மனைவிக்கு நெருக்கமானவர்கள், பழக்கமானவர்கள் யாரேனும் உண்டா?"
"எங்கள் வீட்டு நாயின்மேல் அவள் உயிரையே வைத்திருப்பாள். அவளுடன் சேர்த்து அதையும் காணவில்லை. அது ராஜபாளையம் கோம்பை நாய். நான்கடி உயரம் இருக்கும். காலைத் தூக்கி நம் தோளின்மீது வைத்தால் ஆறடி உயரம் இருக்கும். கோதுமை நிறத்தில் இருக்கும். ஆரோக்கியமான நாய். அதன் கண்கள் நீல நிறத்தில் ஜொலிக்கும். கழுத்தில் தங்க நிற பெல்ட் அணிந்திருக்கும். அதில் வெள்ளி நிற மணிகள் தொங்கும். நான்-வெஜ் உணவுகளை விரும்பிச் சாப்பிடும். குரைக்கவே குரைக்காது. நாங்கள் மூவரும் ஒன்றாகத்தான் ஜாக்கிங்
செல்லுவோம். ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்...." என்று சொல்லிக்கொண்டே வந்தவன், துக்கத்தை அடக்க முடியாமல் அழுகத்துவங்கி விட்டான்.
அவனை ஆறுதற்படுத்திய கண்காணிப்பாளர் மெல்லச் சொன்னார்:
"முதலில் நாயைத் தேடுவோம்!"
=======================================================
சாமிகளா, ஏழில் எது நன்றாக உள்ளது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
22.3.10
Subscribe to:
Post Comments (Atom)
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteநகைச்சுவைகள் ஏழும் நன்றாக உள்ளது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-22
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஇரண்டும் ஐந்தும் உடனே சிரிக்க வைத்தது,
ஏழும் அதைப் போலவே.... இருந்தும்,
தனது நாயைப் பற்றி அறிந்த அளவுக்கு கூட தனது மனைவியைப் பற்றி அறியவில்லை போலும் இவரே இப்படி என்றால் மனைவி எவ்வளவு அறிந்திருக்கனு....... கணவன் மனைவி உறவுக்களுக்குள், பல நாய்கள் புகுந்து விடுவது இப்படித்தான் போலும். கணவன்மார்கள் ஜாக்கிரதை.... சும்மா!!!.......
நன்றிகள் குருவே!
அன்புடன்.
ஐன்ஸ்டீனின் மின்சாரம் பற்றியப் பாடம் எதற்கு?
ReplyDeleteசம்சாரம் அது மின்சாரம் என்று சொல்வதற்காகவா?
அனைத்தும் நன்று. முதலில் இருப்பது எனக்குப் பிடித்தது.
ReplyDelete" எப்ப பாத் ரூமை விட்டு வெளிலே வரப்போறீக ? "
ReplyDelete" முதல்லே நாற்காலிய கீழ போடு .."
" சரி.. ஆனா இனிமே அசைவ ஜோக் சொல்லமாட்டேன்னு சத்யம் பண்ணுங்க.."
சுப்பு ரத்தினம். .
அன்பு அய்யா அவர்களுக்கு, தாங்கள் எழுதிய ஏழும் மிகவும்
ReplyDeleteஅருமையாக இருக்கிறது, அதில் ஏழாவது மிகவும் அருமை.
நான் படிக்கும் பொழுது என் நண்பரும் பக்கத்தில் இருந்தார்
இதை படித்துவிட்டு அவரும் சிரித்துவிட்டார்.
காலை வேலையில் என் நண்பனையும் சந்தோசபடுத்தியது
இந்த நகைசுவை.
அன்புடன் உங்கள் மாணவன்,
ஜீவா.
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
நகைச்சுவைகள் ஏழும் நன்றாக உள்ளது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
வாரத்தின் முதல் நாள் நகைச்சுவையுடன் துவங்கட்டும் என்றுதான் பதிவில் இன்று நகைச்சுவையை ஏற்றினேன்!
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
இரண்டும் ஐந்தும் உடனே சிரிக்க வைத்தது,
ஏழும் அதைப் போலவே.... இருந்தும்,
தனது நாயைப் பற்றி அறிந்த அளவுக்கு கூட தனது மனைவியைப் பற்றி அறியவில்லை போலும் இவரே இப்படி என்றால் மனைவி எவ்வளவு அறிந்திருக்கனு....... கணவன் மனைவி உறவுக்களுக்குள், பல நாய்கள் புகுந்து விடுவது இப்படித்தான் போலும். கணவன்மார்கள் ஜாக்கிரதை.... சும்மா!!!.......
நன்றிகள் குருவே!
அன்புடன்./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////Alasiam G said...
ReplyDeleteஐன்ஸ்டீனின் மின்சாரம் பற்றியப் பாடம் எதற்கு?
சம்சாரம் அது மின்சாரம் என்று சொல்வதற்காகவா?////
ஏஎன்சி.க்கு விளக்கம் சொல்லியிருக்கிறாரே - அதுக்காக!
////ananth said...
ReplyDeleteஅனைத்தும் நன்று. முதலில் இருப்பது எனக்குப் பிடித்தது./////
நல்லது.நன்றி நண்பரே!
/////sury said...
ReplyDelete" எப்ப பாத் ரூமை விட்டு வெளிலே வரப்போறீக ? "
" முதல்லே நாற்காலிய கீழ போடு .."
" சரி.. ஆனா இனிமே அசைவ ஜோக் சொல்லமாட்டேன்னு சத்யம் பண்ணுங்க.."
சுப்பு ரத்தினம். .////////
"இனி பண்ணினா அது 101வது சத்தியம். தேவைதானா?"
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு அய்யா அவர்களுக்கு, தாங்கள் எழுதிய ஏழும் மிகவும்
அருமையாக இருக்கிறது, அதில் ஏழாவது மிகவும் அருமை.
நான் படிக்கும் பொழுது என் நண்பரும் பக்கத்தில் இருந்தார்
இதை படித்துவிட்டு அவரும் சிரித்துவிட்டார்.
காலை வேலையில் என் நண்பனையும் சந்தோசபடுத்தியது
இந்த நகைச்சுவை.
அன்புடன் உங்கள் மாணவன்,
ஜீவா.///////
நல்லது.நன்றி நண்பரே!
அய்யா இனிய காலை வணக்கம் ..
ReplyDeleteநகைசுவை அருமை .....
நன்றி வணக்கம்
My Dear Sir!
ReplyDeleteNice.
***********************************
6.
"நான் டாக்டருக்குப் படிக்க விரும்புகிறேன்"
"அதற்குரிய தகுதி உனக்கு இருக்கிறது. உன் கையெழுத்து படிக்கும்படியாக இல்லை!"
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம் ..
நகைச்சுவை அருமை .....
நன்றி வணக்கம்////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////kannan said...
ReplyDeleteMy Dear Sir!
Nice.
***********************************
6.
"நான் டாக்டருக்குப் படிக்க விரும்புகிறேன்"
"அதற்குரிய தகுதி உனக்கு இருக்கிறது. உன் கையெழுத்து படிக்கும்படியாக இல்லை!"/////
நல்லது. நன்றி முருகா!
எல்லாமும் சுவையாக உள்ளன. சுஜாதா இருந்தவரை மெக்சிகோ சலவைக்காரி
ReplyDeleteஜோக் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.கடைசிவரை சொல்லாமலே போய்விட்டார்.உங்களுக்கு எத்தனை மின்னஞ்சல் வந்தது
(ஜோக்குக்காக) என்பதை மட்டும் எழுதுங்கள்.நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை.
Dear sir,
ReplyDeleteI really enjoyed 4th and 7th joke. All jokes are nice.
Thanks sir,
J.SENDHIL
உங்களோட கடைசி ஜோக் படிச்சி ரொம்ப புடிச்சி போச்சு சார்.....
ReplyDeleteஒரு ஹிந்தி ஷாயரி (சிறு கவிதை) நினைவுக்கு வந்தது...
தமிழாக்கம்:
திருமணம் நடக்க வேண்டும்
அதிஷ்டம் வர வில்லை.
காதலை வெளிப்படுத்த வேண்டும்
தைரியம் பிறக்கவில்லை.
தாஜ்மஹால் கட்டவேண்டும்
மும்தாஜ் கிடைக்கவில்லை.
ஒருநாள்...
அதிஷ்டம் வந்து, தைரியம் பிறந்தது!
திருமணமும் முடிந்தது!
இப்போது...
தாஜ்மஹால் கட்டவேண்டும்
ஆனால்...
மும்தாஜ் இறப்பதாக இல்லை....
:-))
- அன்புடன்,
லலித்
I really enjoyed 3d and 5th joke but all jokes are really nice.
ReplyDelete/////kmr.krishnan said...
ReplyDeleteஎல்லாமும் சுவையாக உள்ளன. சுஜாதா இருந்தவரை மெக்சிகோ சலவைக்காரி
ஜோக் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.கடைசிவரை சொல்லாமலே போய்விட்டார்.உங்களுக்கு எத்தனை மின்னஞ்சல் வந்தது
(ஜோக்குக்காக) என்பதை மட்டும் எழுதுங்கள்.நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை.////
30 மின்னஞ்சல்கள் வந்தன. வந்த அத்தனை பேர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
////dhilse said...
ReplyDeleteDear sir,
I really enjoyed 4th and 7th joke. All jokes are nice.
Thanks sir,
J.SENDHIL//////
நல்லது. நன்றி நண்பரே!
/////லலித் said...
ReplyDeleteஉங்களோட கடைசி ஜோக் படிச்சி ரொம்ப புடிச்சி போச்சு சார்.....
ஒரு ஹிந்தி ஷாயரி (சிறு கவிதை) நினைவுக்கு வந்தது...
தமிழாக்கம்:
திருமணம் நடக்க வேண்டும்
அதிஷ்டம் வரவில்லை.
காதலை வெளிப்படுத்த வேண்டும்
தைரியம் பிறக்கவில்லை.
தாஜ்மஹால் கட்டவேண்டும்
மும்தாஜ் கிடைக்கவில்லை.
ஒருநாள்...
அதிஷ்டம் வந்து, தைரியம் பிறந்தது!
திருமணமும் முடிந்தது!
இப்போது...
தாஜ்மஹால் கட்டவேண்டும்
ஆனால்...
மும்தாஜ் இறப்பதாக இல்லை.... :-))
- அன்புடன்,
லலித்///////
கடைசிவரி நன்றாக உள்ளது. அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே!
//////Monickam said...
ReplyDeleteI really enjoyed 3d and 5th joke but all jokes are really nice.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
அனைத்தும் அருமை..அந்த ஐந்தாவதுக்கு எனது ஓட்டு
ReplyDelete////sri said...
ReplyDeleteஅனைத்தும் அருமை..அந்த ஐந்தாவதுக்கு எனது ஓட்டு/////
நல்லது. நன்றி நண்பரே!