மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.3.10

ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!

225 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

இடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்
(எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)

அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக்
காசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த ரட்சகனாக தன்னை எண்ணிக்
கொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.
பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்

அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.

தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப் பட்டான்.

தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.

77 ஆண்டுகள் என்று தெரிந்தது!

மரண தண்டனை கிடைக்கும்படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால் ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு செய்தான்.

இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.

நடந்தது என்ன?

படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்! மேலே படியுங்கள்

இது நடந்த கதை.

அந்த இளைஞனின் பெயர் நாராயணன் இளையத். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், திருச்சூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மச்சத் என்னும் ஊரில் பிறந்தவன் அவன். பிறந்த ஆண்டு 1765. எடக்காடு நம்பூதிரி என்னும் பிரபலமான ஜோதிட விற்ப்பன்னர் அவனுக்கு குருவாக அமைந்தார். அவருடைய குருகுலத்தில் இவனும் கற்றுத் தேறினான்.

அவனுக்கு இருபது வயதாகும்போது, ஒரு ஆர்வத்தில், தனது ஆயுள் ஸ்தானத்தைக் கணக்குப்பண்ணிப் பார்த்தான். தனது விதிப்படி தனக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று தெரிந்துகொண்டான். அதை சோதித்துப்பார்க்கவும் விரும்பினான்.

அதற்கு அவன் தேர்வு செய்த இடம், அந்தக் காலக்கட்டத்தில் கொச்சிப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சதன் தம்புரான் என்னும் அரசனின் மாளிகை. அந்த அரசன் கோலோச்சிய காலம். (1781 - 1805)

அரசனின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நம் நாயகன்,கருவறை வரை சென்று, அங்கிருந்த ஏராளமான பொக்கிஷங்களில், தங்கத்தால் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பானைகளில் ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்றான். இரவு நேரம் என்றாலும் காவல் பலமாக இருந்ததால் மாட்டிக்கொண்டு விட்டான். கையும் களவுமாக அவனைப் பிடித்த காவலர்கள்,
அவனை அரசனின் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

அரசன் யோசிக்கவேயில்லை. கடுங்கோபத்துடன், அவனுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினான்.

விதி எப்போதுமே அதற்கென்று ஒரு வழி வைத்திருக்கும். அந்த வழியை அது திறந்துவிட்டது.

அரண்மனையில் இருந்த பண்டிதர்களில் சிலர் அவனை அறிந்திருந்தார்கள். அவனுக்குத் தண்டனையளிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், இரக்கத்துடன் வந்து அவனிடம் பேசலுற்றார்கள். அத்தகைய கொடிய தண்டனை பெறும் அளவிற்கு அவன் செய்த குற்றம் என்ன?

நமது நாயகன் தான் வந்த நோக்கத்தை அவர்களிடம் முழுமையாக சொன்னான். விரைந்து சென்ற அவர்கள், மன்னனிடம் முழு விவரத்தையும் சொல்ல, மன்னன், ஒருவிதக் குறுகுறுப்புடன், நமது நாயகனைத் திரும்ப அழைத்துப் பேசலுற்றான்.
மன்னன் எல்லாக் கலைகளுடனும், ஜோதிடத்தையும் ஓரளவிற்குக் கற்றவன் என்பதால், நமது நாயகனிடம் பேசப் பேசப் பிரமிப்பிற்கு ஆளானான். அவனை மன்னித்ததோடு, விடுதலை செய்தும் அனுப்பிவைத்தான்.

ஜோதிடம் என்னும் ஒரு தெய்வீகக் கலையை சோதிக்க முயன்றது மாபெரும் தவறு என்று மன்னன் அவனை எச்சரித்தபோது, நமது நாயகன் மன்னனிடம் இவ்வாறு சொன்னான்.”அரசே ஜோதிடத்தின் மீதும், தெய்வத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என் ஜாதகப்படி நான் சாக மாட்டேன், தண்டனைக்குள்ளாக மாட்டேன் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து இச்செயலில் ஈடுபட்டேன். இக்கலையின் சிறப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இதைச் செய்தேன்”

அவனின் வார்த்தைகளில் மயங்கிய மன்னன், தன் காலம்வரை அவனையே தனது ஆஸ்தான ஜோதிடராக வைத்துக் கொண்டார்.

பிரசன்ன ஜோதிடத்தில் மிகவும் தேர்ந்தவனான நமது நாயகன், பல அசரடிக்கும் பலன்களைக்கூறி, அவை அவ்வாறே நடந்தேறியபோது, அவனைப் பார்த்துப் பிரம்மித்தவர்களே அதிகம்.

பிரசன்ன ஜோதிடம் என்பது கேள்வியையும், கேள்வி கேட்கும் நேரத்தையும் வைத்துப் பலன் சொல்வதாகும்.

ஒரு வாழைக்கன்று வைக்கப்படும் நேரத்தை வைத்து, அந்தக் கன்று வளர்ந்து கனி தருமா? தராதா? வைத்தவன் அதைச்சாப்பிடுவானா? அல்லது மாட்டானா? அல்லது அந்தக் கனி என்னவாகும் என்பது வரை சொல்லும் ஆற்றல்
பிரசனன ஜோதிடத்திற்கு உண்டு என்பார்கள்.

ஒரு சமயம் நமது நாயகன், தம்புராக்கள் என்னும் பெரிய பண்டிதரைப் பார்த்துவரச் சென்றான். இவன் சென்ற நேரம், பண்டிதர், முடிதிருத்தத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். இவனைக் கணடதும், அவர் விளையாட்டாகச் சொன்னார்:

“என்னப்பா நான் முடிவெட்டக் கிளம்பும்போது, நீ வந்திருக்கிறாயே, உன்னோடு இப்போது எப்படிப் பேசுவது? சரி, உன்னுடைய பிரசன்ன ஜோதிடத்தை வைத்துச் சொல், இப்போது நான் முடிவெட்டிக்கொள்வேனா? அல்லது மாட்டேனா?”

“சட்டென்று தன் மனதிற்குள் கணக்கிட்ட நமது நாயகன் சொன்னான், “இல்லை, இப்போது நீங்கள் முடி வெட்டிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கவும் வேண்டும்”

”நாவிதன் எங்கள் தோட்டத்தில் எனக்காகக் காத்திருக்கிறான். உன் பிரசன்னம் பொய்யாகப் போகிறது. என்னுடன் வா, காட்டுகிறேன்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார்.

ஆனால் அது பொய்யாகவில்லை. உண்மையாகிப்போனது.

எப்படி?

அது சமயம், அங்கே வந்த பண்டிதரின் தாய், தன் மருமகளுக்கு (அதாவது பண்டிதரின் மனைவிக்கு) நாள் தள்ளிப்போய்விட்டதையும், அவள் கருவுற்றிருப்பதையும் சொல்ல, முடி திருத்தம் தள்ளிவைக்கப்பட்டது.
கேரள அந்தனர்களின் முறைப்படி மனைவி கருவுற்றிருக்கும்போது,
கணவன் தாடி வளர்க்கும் அந்தக்கால வழக்கத்திற்கு அவரும்
ஆட்படுத்தப்பட்டார். எட்டு மாதங்கள் கழித்து, அவருடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகே, அவர் முடிதிருத்தம் செய்துகொள்ள முடிந்தது.

நமது நாயகனின் பிரசன்ன ஜோதிட மகிமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?

(V S. கல்யாணராமன் என்னும் கணிதம் மற்றும் ஜோதிட மேதை எழுதிய செய்திகளின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. அவருக்கு நமது நன்றி உரித்தாகுக!)

சதன் தம்புரானைப் பற்றிய மேல் விவரங்கள் விக்கி மகராசாவிடம் கிடைக்கும். இங்கே சொடுக்கிப் பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
V S. கல்யாணராமனைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

V S KALYANRAMAN A mathematician and amateur astronomer by training, a bureaucrat by profession and a student of astrology by passion, the author had his traditional training in astrology in his teens, under a couple of doyens of Gurus of yester years, with a vow not to
turn a professional. Commencing his career as a teacher in Kerala completed it as a
Senior Class I officer of the Government of India. After a stint of story writing in Tamil in the fifties, turned to serious study of Saiva Siddhanta, Philosophy, Psychology, Vedic Mathematics, Bharateeya Ganitha Sastra, Jyothisha (astronomy), the various astrological systems, Vastu Sastra, Vedic Numerology and allied disciplines, under various masters of repute.

As a freelancer, though was contributing on varied topics, occasionally to various magazines in English, Tamil and Malayalam, mostly under disguise, for decades and has received many awards and accolades, would prefer to remain, anonymous and a student, till his last breath

பிரசன்ன ஜோதிடத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

Prasna Marga is an ancient branch of horoscopic astrology by which an astrologer attempts to answer a question by constructing a horoscope for the exact time and place at which the question was received and understood by the astrologer. A common misconception is that the horoscope must be constructed for the place and time the querent establishes the question. In the previous centuries this issue did not create any problems as the astrologer would consult with the querent face to face. These days the querent could be in Africa and send an email with the question to an
astrologer in Australia. Hence, it is necessary to emphasize the point.

The answer might be a simple yes or no, but is generally more complex with insights into, for example, the motives of the questioner, the motives of others involved in the matter, and the options available to him. History Prasna Marga has been practiced for centuries in India known as Prasna Shastra (Sanskrit prasna = question). It is a branch of Vedic astrology which is still widely used across the Indian subcontinent. The more advanced form is the Astamangalam Prasna and Deva Prasna methods of Kerala. The state of Kerala, in India, is famous even today for its traditional use of Prasna Marga.
++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்


சதன் த்ம்பூரான் மன்னரின் அரண்மனை
வாழ்க வளமுடன்!

19 comments:

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
''பிரசன்ன ஜோதிட மகிமை'',
மிகவும் நன்றாக உள்ளது.
நன்றி! வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-29

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
ஆஹா! அற்புதமானத் தகவல்.
சாகா சாஸ்திரங்களுக்கு சான்றுகளைத் தேடித்தந்த சான்றோர்களின் அரிய கதைகளை,அறிய தந்தமைக்கு நன்றிகள் குருவே!

minorwall said...

கதை விளக்கம் அருமை..ஆனால் எப்படி பிரசன்னா பார்ப்பது என்பது பற்றி நீங்கள் சொல்லவேயில்லையே சார்.தொடர்கின்ற பதிவிலே எதிர்பார்க்கலாமா?நடப்பை அறிவிக்கும் நுட்பம் என்ற வகையிலே பார்த்தால் கோட்சார ரீதியிலான அன்றைய கிரக நிலைகளை அனுசரித்து பலன் அலசப்படுமா?அப்படி இருந்தாலுமே ஜனன கால ஜாதகம் இல்லாமல் கிரகங்களின் தன்மைகள் லகினாதிபதி,பாவாதிபதி,ராசியாதிபதி தெரியாமல் கோசாரம் எப்படி பார்ப்பது என்ற பல வகை அடிப்படை ஜாதக விஷயங்களின் மொத்த விஷயங்களுமே ஒரு பலனை கூற அவசியமாக இருந்துமே பலன்கள் சொன்னதுபோலேவே நடக்கும் என்பதற்கு கியாரண்டி இல்லை என்பதுதான் ஜோதிடத்தின் வருத்தமான விஷயம்..
இப்படியிருக்க பிரசன்னம் கேள்வி எழுந்த இடம்,காலம் என்று இந்த 2 ஐ மட்டும் வைத்து ஜனன கால ஜாதகம் கணித்தால் அது அன்றைய கிரக நிலைகளைத்தானே காட்டும்.இதை எந்த வகையில் எடுத்து பலன்கள் சொல்லப்பட்டன என்பது குறித்து பதிவிட்டால் நல்லது என்று எதிபார்க்கிறேன்..
வாசக நண்பர்கள் தங்களின் இது தொடர்பான அனுபவங்களை பதிவு செய்வார்களானால் இன்னும் interesting ஆக இருக்கும்.

ananth said...

பிரசன்ன ஜோதிடத்தைப் பற்றி சிறிது படித்திருக்கிறேன். பி வி ராமன் அவர்கள் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார். சந்திர கலா நாடி என்னும் தேவ கேரளத்தைப் படித்து வருகிறேன். ஜோதிடத்தில் எதையும் விடுவதில்லை என்ற எண்ணம்தான் காரணம். பிரசன்ன ஜோதிடத்தில் பொதுவாக குறிப்பிட்ட ஒரு கேள்வியை மட்டும் அந்தந்த நேரத்தில் கேட்டு பலன் காணலாம். நிறைய கேள்விகளுக்கு ஒரே நேரத்தில் பலன் காண முடியாது. அதே நேரத்தில் காணும் பலன் குறுகிய காலத்திற்குத்தான் சொல்ல முடியும்.

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்....

ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன் கட்டுரை அருமை ....பிரசன்ன மார்கம் பற்றிய ட்ரைலர் சூப்பர் மெயின் பிக்சர் எப்போது அய்யா ஆவலுடன் காத்திருக்கின்றோம்...இனி இது வகுப்பறை அல்ல ஜோதிட பல்கலைகழகம்.....
நன்றி வணக்கம்

ms torrent said...

thanks a lot ..i was waiting long time for this...thank u sir.

essusara said...

பிரசன்ன ஜோதிடம் பற்றிய கட்டுரையும் ,குறிப்புகளும் அருமை.
நான் தற்பொழுது பாவ முனை தொடர்புகளை பற்றிய பாஸ்கரா ஜோதிடம் பயின்று
வருகிறேன். சமீபத்தில் நடந்த IPL cricket போட்டிகளை பிரசனம் முறையில் அனுகியபொழுது
அணைத்து முடிவுகளும் சரியாக வந்தன.

யாஹூ க்ரூபில் அதை போட்டி நடக்கும் முன்னரே upload seoithulleyn.

லிங்கை இத்துடன் இனைதுல்லேய்ன் . படிபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

http://groups.yahoo.com/group/k_p_system/message/31903

மதி said...

நீங்கள் சொல்வது ஆளும் கிரகத்தின் பற்றியதுதானே....

பலன் அறிய விரும்பும் நேரத்தில் (அப்போதிய)...
1. கிழமை(திங்கள் என்றல சந்திரன்)
2. ராசி அதிபதி
3. ராசியதிபதி நட்சத்திரம்
4. லக்னம் அதிபதி
5. லக்னாதிபதி நட்சத்திரம்

பார்த்து பலன் சொல்ல பயன்படும் என்று கேள்விபட்டுள்ளேன்....

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
''பிரசன்ன ஜோதிட மகிமை'', மிகவும் நன்றாக உள்ளது.
நன்றி! வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

நல்லது நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
ஆஹா! அற்புதமானத் தகவல்.
சாகா சாஸ்திரங்களுக்கு சான்றுகளைத் தேடித்தந்த சான்றோர்களின் அரிய கதைகளை,அறிய தந்தமைக்கு நன்றிகள் குருவே!////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////minorwall said...
கதை விளக்கம் அருமை..ஆனால் எப்படி பிரசன்னா பார்ப்பது என்பது பற்றி நீங்கள் சொல்லவேயில்லையே சார்.தொடர்கின்ற பதிவிலே எதிர்பார்க்கலாமா?நடப்பை அறிவிக்கும் நுட்பம் என்ற வகையிலே பார்த்தால் கோட்சார ரீதியிலான அன்றைய கிரக நிலைகளை அனுசரித்து பலன் அலசப்படுமா?அப்படி இருந்தாலுமே ஜனன கால ஜாதகம் இல்லாமல் கிரகங்களின் தன்மைகள் லகினாதிபதி,பாவாதிபதி,ராசியாதிபதி தெரியாமல் கோசாரம் எப்படி பார்ப்பது என்ற பல வகை அடிப்படை ஜாதக விஷயங்களின் மொத்த விஷயங்களுமே ஒரு பலனை கூற அவசியமாக இருந்துமே பலன்கள் சொன்னதுபோலேவே நடக்கும் என்பதற்கு கியாரண்டி இல்லை என்பதுதான் ஜோதிடத்தின் வருத்தமான விஷயம்..
இப்படியிருக்க பிரசன்னம் கேள்வி எழுந்த இடம்,காலம் என்று இந்த 2 ஐ மட்டும் வைத்து ஜனன கால ஜாதகம் கணித்தால் அது அன்றைய கிரக நிலைகளைத்தானே காட்டும்.இதை எந்த வகையில் எடுத்து பலன்கள் சொல்லப்பட்டன என்பது குறித்து பதிவிட்டால் நல்லது என்று எதிபார்க்கிறேன்..
வாசக நண்பர்கள் தங்களின் இது தொடர்பான அனுபவங்களை பதிவு செய்வார்களானால் இன்னும் interesting ஆக இருக்கும்.////

மைனர் உங்களின் ஆர்வம் புரிகிறது. அதுபற்றிப் பின்னால் விவரமாக எழுதுகிறேன்.தற்சமயம் நேரம் இல்லை!

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
பிரசன்ன ஜோதிடத்தைப் பற்றி சிறிது படித்திருக்கிறேன். பி வி ராமன் அவர்கள் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார். சந்திரகலா நாடி என்னும் தேவ கேரளத்தைப் படித்து வருகிறேன். ஜோதிடத்தில் எதையும் விடுவதில்லை என்ற எண்ணம்தான் காரணம். பிரசன்ன ஜோதிடத்தில் பொதுவாக குறிப்பிட்ட ஒரு கேள்வியை மட்டும் அந்தந்த நேரத்தில் கேட்டு பலன் காணலாம். நிறைய கேள்விகளுக்கு ஒரே நேரத்தில் பலன் காண முடியாது. அதே நேரத்தில் காணும் பலன் குறுகிய காலத்திற்குத்தான் சொல்ல முடியும்.////

ஆமாம். எங்கள் ஊர்ப் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணி செய்யும் முன்பாகக் கேரளாவில் இருந்து பண்டிதர்களை அழைத்துவந்து பிரசன்னம் பார்ப்பார்கள். ஒருமுறை எங்கள் குடும்பக்கோவிலில் (பங்காளிகளுக்குச் சொந்தமானகோவிலில்) அது போன்று நடந்துள்ளது!

SP.VR. SUBBAIYA said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்....
ஜோதிடத்தை ஒரு கை பார்த்த இளைஞன் கட்டுரை அருமை ....பிரசன்ன மார்கம் பற்றிய ட்ரைலர் சூப்பர் மெயின் பிக்சர் எப்போது அய்யா ஆவலுடன் காத்திருக்கின்றோம்...இனி இது வகுப்பறை அல்ல ஜோதிட பல்கலைகழகம்.....
நன்றி வணக்கம்////

சிலபஸில் அது இப்போது இல்லை. பிறகு வரும்!

SP.VR. SUBBAIYA said...

////ms torrent said...
thanks a lot ..i was waiting long time for this...thank u sir./////

ஆமாம். நீங்களும் எத்தனைமுறை நினைவுறுத்தி மின்னஞ்சல் கொடுத்தீர்கள். இந்தப் பதிவு உங்களுக்கே சமர்ப்பணம்!

SP.VR. SUBBAIYA said...

/////essusara said...
பிரசன்ன ஜோதிடம் பற்றிய கட்டுரையும் ,குறிப்புகளும் அருமை.
நான் தற்பொழுது பாவ முனை தொடர்புகளை பற்றிய பாஸ்கரா ஜோதிடம் பயின்று
வருகிறேன். சமீபத்தில் நடந்த IPL cricket போட்டிகளை பிரசனம் முறையில் அனுகியபொழுது
அணைத்து முடிவுகளும் சரியாக வந்தன.
யாஹூ க்ரூபில் அதை போட்டி நடக்கும் முன்னரே upload seoithulleyn.
லிங்கை இத்துடன் இனைதுல்லேய்ன் . படிபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
http://groups.yahoo.com/group/k_p_system/message/31903////

தங்களுடைய தகவல்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////மதி said...
நீங்கள் சொல்வது ஆளும் கிரகத்தின் பற்றியதுதானே....
பலன் அறிய விரும்பும் நேரத்தில் (அப்போதிய)...
1. கிழமை(திங்கள் என்றல சந்திரன்)
2. ராசி அதிபதி
3. ராசியதிபதி நட்சத்திரம்
4. லக்னம் அதிபதி
5. லக்னாதிபதி நட்சத்திரம்
பார்த்து பலன் சொல்ல பயன்படும் என்று கேள்விபட்டுள்ளேன்..../////////

இல்லை. சோழிகளை வைத்துக் கணக்கிட்டும், அன்றைய கிரக நிலையை வைத்தும் பலன் சொல்வார்கள். அது பற்றிப் பின்னால் எழுதுகிறேன்.

V Dhakshanamoorthy said...
This comment has been removed by the author.
Subbaraman said...

நன்றாக இருந்தது, ஐயா.நன்றி!

Sri Nagulan Subramaniam said...

ஐயா வணக்கம்
அருமையான பதிவு
எனக்கு பிரசன்னம் ஜோதிடம் கற்க மிக ஆர்வம்.. 3 வருடங்களாக நான் எங்கு கற்கலாம் என தேடிய போதும் சரியான இடம் கிடைக்கவில்லை. இவ் கல்வியினை எங்கு சரியாக கற்றுக்கொள்ள முடியும் நன்றி ஐயா.