----------------------------------------------------------------
எண்ணையில்லாமல் ஓடும் கார்!
கவிஞர், பாடலாசிரியர், கட்டுரையாளர், கதாசிரியர் என்று எழுத்தின் எந்தப் பகுதியைப் பிரித்துப் பார்த்தாலும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்தான் என் முன்வந்து நிற்பார்!
அவரிடத்தில் எனக்கு அப்படியொரு ஈடுபாடு!
அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன். இரண்டு முறைகள் அவரைச் சந்தித்துப்
பேசினேன். அவர் எழுத்துக்களைச் சொல்லிற்குச் சொல் ரசித்தேன் என்கின்ற மனத்திருப்தி எனக்கு இருக்கிறது. அதுவே எனக்குப் போதும்.
எல்லோருமே கவியரசர் ஆகிவிட முடியாது. அவரைப் போல எழுத முடியாது.
அதற்குக் கடவுள் அருள் வேண்டும். அந்த அருள் அவரிடம் நிறையவே இருந்தது.
இல்லையென்றால் வெறும் எட்டாம் வகுப்புவரையுமே படித்த ஒருவரால்
எப்படி இத்தனை சாதனைகள் புரிந்திருக்க முடியும்? இத்தனை லட்சம் மக்கள் மனதைக் கவர்ந்திருக்க முடியும்?
நமக்கெல்லாம் அவர் எழுதியதைப் புரிந்து கொள்ளும் அறிவையும், ரசிக்கும்
தன்மையும் கொடுத்துள்ளான் இறைவன். என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்கு போதும்!
பாமரனுக்கும் புரியும் வண்ணம், எளிமையான சொற்களால், தெளிவான
கருத்துக்களால் சுருங்கச் சொல்லி படித்தவுடன் அல்லது கேட்டவுடன் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் அவருடைய எழுத்துக்கள். அதனால்தான் அவர் வெற்றி கண்டார்!
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து எழுதினார் அவர்.
உள்ளதை உள்ளபடியே எழுதினார்
.
அதனால்தான் அவர் இன்றளவும் எராளமான தமிழ் மக்களின் மனதில்
சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.
அவருக்கு ஒன்றும் அறிமுகம் தேவையில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தில்
அவரை அறியாதவன் ஒருவன் இருந்தால் அவன் தமிழனே அல்ல!
எதையும் நயம் படச் சொல்வார். மேடைகளிலும் அப்படித்தான் பேசுவார்.
அவர் தென்றல் என்ற இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த போது, துணை ஆசிரியர் ஒருவர் இரண்டு சினிமா ஸ்டில்ஸ்களை காண்பித்து, சினிமா பகுதியில் பிரசுரிக்க வந்துள்ளது என்றார்.
படத்தை வாங்கிப் பார்த்தார் கவியரசர்.
ஒரு படம் நடிகை ராஜசுலோசனா, கதாநாயகனுக்குக் காப்பிக் கோப்பையைக் கொடுப்பது போல இருந்தது. அந்த சமயம் ராஜசுலோச்சனா அவர்கள் திரைக்கு வந்த புதிது. மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பார்.
படத்தைப் பார்த்த கவியரசர் ஒரே நிமிடத்திற்குள், படத்தின் பின்புறம் இரண்டு
வரிகளை எழுதியதோடு, அந்த உதவி ஆசிரியரிடம் அதைக் கொடுத்து விட்டுச் சொன்னார். "புகைப்படத்திற்குக் கீழே இந்த இரண்டு வரிகள் வரவேண்டும் - படத்துடன் சேர்த்துப் போட்டு விடுங்கள்"
அந்த இரண்டு வரிகள் என்ன தெரியுமா?
"காப்பிக்கு உப்பிட்டுக் காரிகைதான் தந்தாலும்
சாப்பிட்ட பின்தான் சர்க்கரையின் நினைவு வரும்!"
காப்பிக்கு அந்தப் பெண் தவறுதலாக உப்புப் போட்டுக் கொடுத்தால் கூட,
கொடுத்த அந்த சிவந்த கரங்களையும், மலர்ந்த அவளுடைய முகத்தையும், பார்த்துக்கொண்டே வாங்கியவன் அந்தக் காப்பியைக் குடித்து விடுவானேயன்றி சர்க்கரையின் ஞாபகம் அப்போது அவனுக்கு எப்படி வரும்? .வந்தாலும் குடித்து முடித்தபின்தானே வரும் என்று பொருள் படும்படி எழுதியிருந்தார் கவியரசர்.
என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!
இரண்டவது படம் நடிகை பத்மினியின் படம். அவர் கார் ஒன்றில்
ஸ்டீரிங்கைப் பிடித்தபடி முன் சீட்டில் அமர்ந்திருப்பது போன்ற படம்.அதற்கும்
கவியரசர் இரண்டு வரிகள் எழுதிக் கொடுத்தார்.
அந்த வரிகள் இதுதான்!
"வண்ண மயில் காரோட்ட வருகின்றார் என்றால்
எண்ணை யில்லாமல் ஓடாதா இந்தக்கார் ?
கவிதை அவர் வாழ்க்கையோடு இப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது.
கவியரசரின் மனைவி நன்றாகச் சமையல் செய்வார்கள். எல்லாம் மிகவும்
பக்குவமாகவும், ருசியோடும் இருக்கும்.அருகிருந்து பறிமாறுவார்கள்.
தன் மனைவியின் சமையலைப் பற்றித்தன் நண்பர்களிடம் கவியரசர் அடிக்கடி
இப்படிக் கூறுவார்.
"பொன்னம்மாள் சமையல் செய்தால்
பூமியெங்கும் வாசம்வரும்
சர்க்கரைப்பொங்கல் வைத்தால்
சாமிக்கே ஆசைவரும்!"
என்ன ஒரு வெளிப்பாடு பாருங்கள்.
அந்த அம்மையார் கோவில்களில் பொங்கல் வைத்தால்,வைத்து
முடித்தவுடன் உள்ளிருக்கும் சாமியே எழுந்து வெளியே வந்து விடுவாராம், அந்தப் பொங்கலின் மணம் கண்டு!
ஒரு சமயம் அவர் மனைவியின் காதுகளுக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டது .
அந்த நாட்களில் பெரிய சிகிச்சைகள் இல்லாததால் அந்த அம்மையாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. அதேபோல அந்தக் குறைபாட்டினால் கவிஞருக்கு எந்தக் குறையும் வந்து விடாமலும், கவிஞர் மனம் மகிழும்படியாகவும் நன்றாகச் சேவகம் செய்தார்.
எங்கள் ஊர்ப்பக்கம் மேடைகளில் பேசும் போது, கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் தன் மனைவியைப் பற்றி இப்படித்தான் இரண்டே வரிகளில் குறிப்பிட்டுப் பேசுவார்.
"தன் செவிகள் பழுதானாலும்
என் கவிகள் பழுதாகாமல்
பார்த்துக் கொண்ட மகராசி!"
_________________________________________________
நான்கு பகுதிகள். அடுத்த பகுதி நாளை வரும்!
-----------------------------------------------------------------------
எனது கணினி வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. அதை, ஒரு நாள் போராட்டத்திற்குப் பின் சரி செய்தேன். word Pad ல் எழுதிய, எழுதி வைக்கப்பட்டிருந்த கோப்புக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன.
அவற்றைச் சரி செய்துகொண்டிருக்கிறேன். எல்லாம் என் மற்ற வேலைகளுக்கிடையே!
சரியாக இரண்டு நாட்கள் ஆகலாம். அதுவரை என் பதிவிற்கு கவியரசர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி எழுதி வைத்துள்ள பழைய ஆக்கங்கள் கைகொடுக்கும். அவைகள் வேறு prompt இருந்ததால் தப்பித்தன!
இவைகள் மீள் பதிவுகள்தான். இருந்தாலும் மீண்டும் படிப்பதற்குச் சுவையாக இருக்கும். படித்து மகிழுங்கள்!
-----------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
23.3.10
Subscribe to:
Post Comments (Atom)
கவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர் மட்டுமன்றி, தத்துவங்களைப் படியாதவனுக்கும் புரியும் வகையிலே எடுத்துச்சொல்லிய பேரரிஞர்.
ReplyDeleteகண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம் " பற்றி எழுதுங்கள்.
அந்த மேதை தமிழகத்தின்
தங்கச் சுரங்கம்.
சுப்பு ரத்தினம்
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் பற்றிய கருத்துக்கள் மிக அருமை. அவரின் பாடல்கள் முக்கியமாக தத்துவ பாடல்கள் யாவும் கருத்தாழம் மிக்கவை .தமிழ் மக்கள் யாவரும்
அவரை மறக்க முடியாது. அர்த்தமுள்ள ஹிந்து மதம்
புத்தகம் மற்றும் அவரின் குரலிலேயே பேசியிருந்த
ஒலிநாடாவும் படித்தும் கேட்டும் ரசித்த காலங்களை தற்போது
நினைவு கூறும் வாய்ப்பை தாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-23
தாங்கள் இளைஞராக இருந்திருந்தால் காதல் வைரஸ் தாக்கியிருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம். இது வேறு ஏதாவது வைரஸாக இருக்கலாம். ஒரு anti-virus program வைத்து இருந்திருந்தால் இவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. இப்போதுதான் நிறைய free anti-virus programகள் இருக்கின்றனவே. இவை virus வராமல் பாதுகாக்கும். வந்து விட்டால் அதை சரி செய்வதானால் paid programதான் கை கொடுக்கும். இல்லாவிட்டால் என்ன குட்டிக் கரணம் அடித்தாலும் முடியாது.
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteதமிழ் பேராசான்
தமிழ் பேராசிரியர்கள் (திருமதி. சரஸ்வதி ராமநாதன் போன்றோர்)
முனைவர்ப் பட்டம் பெற ஆய்வுக் களமானவர்,
பேரறிஞர் அண்ணாவின் அன்பிர்க்குரியர்
(உம்-அண்ணா சுகம் இல்லாதது அறிந்தும், தான் காங்கிரசில் இயக்கத்தில் சேர்ந்தபொழுது: அவரை நேரடியாக சென்று நலம் விசாரிக்க முடியாத நிலையில், அவரின் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் "தில்லான மோகனாம்பாள்" படத்திற்கு "நலம் தானான? உடலும் உள்ளமும் நலம் தானா?" என்ற பாடலை எழுதியதும்: அதை அண்ணா அவர்களே (பதவியில் இருக்கும் போது) தனது நண்பர்களுடன் திரையரங்கில் பார்க்கும் போது, இது எனக்காக எழுதியது தான் என்றும் கூறினாராம்).
கண்ணதாசன் ஒரு சகாப்தம்,
பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன்.....
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் இவரும் ஒருவரே!
அதனால் தான், கண்ணனுக்கே தாசனானார்.
நன்றிகள் குருவே!
7 yennai patriya paadam yepothu?
ReplyDeleteகவியரசரின் வரிகள் சாகா வரம் பெற்றவை ஐயா..
ReplyDeleteஉங்களால் அவரை நாங்கள் மேலும் புரிந்து கொள்ளுகின்றோம்.
நன்றிகள் பல.
///surya said...
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் அவர்கள். ஒரு மிகச்சிறந்த பாடலாசிரியர் மட்டுமன்றி, தத்துவங்களைப் படியாதவனுக்கும் புரியும் வகையிலே எடுத்துச்சொல்லிய பேரரிஞர்.
கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம் " பற்றி எழுதுங்கள்.
அந்த மேதை தமிழகத்தின்
தங்கச் சுரங்கம்.
சுப்பு ரத்தினம்///////
காப்பு உரிமை உள்ள நூல் அது. அதை அப்படியே பதிவிட முடியாது! உங்கள் யோசனைக்கு நன்றி!
////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
கவிஞர் கண்ணதாசன் பற்றிய கருத்துக்கள் மிக அருமை. அவரின் பாடல்கள் முக்கியமாக தத்துவ பாடல்கள் யாவும் கருத்தாழம் மிக்கவை .தமிழ் மக்கள் யாவரும்
அவரை மறக்க முடியாது. அர்த்தமுள்ள ஹிந்து மதம்
புத்தகம் மற்றும் அவரின் குரலிலேயே பேசியிருந்த
ஒலிநாடாவும் படித்தும் கேட்டும் ரசித்த காலங்களை தற்போது
நினைவு கூறும் வாய்ப்பை தாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது நன்றி நண்பரே!
/////ananth said...
ReplyDeleteதாங்கள் இளைஞராக இருந்திருந்தால் காதல் வைரஸ் தாக்கியிருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம். இது வேறு ஏதாவது வைரஸாக இருக்கலாம். ஒரு anti-virus program வைத்து இருந்திருந்தால் இவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்காது. இப்போதுதான் நிறைய free anti-virus programகள் இருக்கின்றனவே. இவை virus வராமல் பாதுகாக்கும். வந்து விட்டால் அதை சரி செய்வதானால் paid programதான் கை கொடுக்கும். இல்லாவிட்டால் என்ன குட்டிக் கரணம் அடித்தாலும் முடியாது.//////
AVG, Norton, Avast என்று மாற்றி மாற்றி நிறையப் பார்த்துவிட்டேன். வைரஸ் எழுதுபவர்கள்/அனுப்பி வைப்பவர்கள் கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கில்லாடித்தனத்தை வேறு ஆக்கபூர்வமான வழிகளில் செலுத்தினால் நன்றாக இருக்கும். ராகு காலத்தில் பிறந்தவர்கள் அவர்கள் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வேன். நம்மால் வேறு என்ன செய்யமுடியும். சி' ப்ராம்ட்டில் எந்தக் கோப்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதுதான் உத்தமமான வழி!
Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
தமிழ் பேராசான்
தமிழ் பேராசிரியர்கள் (திருமதி. சரஸ்வதி ராமநாதன் போன்றோர்)
முனைவர்ப் பட்டம் பெற ஆய்வுக் களமானவர்,
பேரறிஞர் அண்ணாவின் அன்பிற்குரியவர்
(உம்-அண்ணா சுகம் இல்லாதது அறிந்தும், தான் காங்கிரசில் இயக்கத்தில் சேர்ந்தபொழுது: அவரை நேரடியாக சென்று நலம் விசாரிக்க முடியாத நிலையில், அவரின் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் "தில்லான மோகனாம்பாள்" படத்திற்கு "நலம் தானான? உடலும் உள்ளமும் நலம் தானா?" என்ற பாடலை எழுதியதும்: அதை அண்ணா அவர்களே (பதவியில் இருக்கும் போது) தனது நண்பர்களுடன் திரையரங்கில் பார்க்கும் போது, இது எனக்காக எழுதியது தான் என்றும் கூறினாராம்).
கண்ணதாசன் ஒரு சகாப்தம்,
பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன்.....
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் இவரும் ஒருவரே!
அதனால் தான், கண்ணனுக்கே தாசனானார்.
நன்றிகள் குருவே!////////
ஆமாம். கண்ணனைப் பற்றி நிறையப்பாடல்களில் எழுதியுள்ளார்! நன்றி ஆலாசியம்!
/////sundaresan p said...
ReplyDelete7 yennai patriya paadam yepothu?//////
வைரஸ் பிரச்சினையால் எழுதியது அழிந்துவிட்டது. மீண்டும் எழுதவேண்டும். இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்!
/////இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteகவியரசரின் வரிகள் சாகா வரம் பெற்றவை ஐயா..
உங்களால் அவரை நாங்கள் மேலும் புரிந்து கொள்ளுகின்றோம்.
நன்றிகள் பல.////
எனக்கும் அதில் மகிழ்ச்சிதான்! எனக்குத் தெரிந்த புதிய தகவல்களை அளிக்கின்றேன்!
கவிஞர் கண்ணதாசனின் சிதனையில் இன்று எத்தனையோ வண்டி எதுவுமே இல்லாம ஓடுகிறது . அருமையான பதிவு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
'கண்ணதாசன்' என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகை நடத்தினார். இலக்கியம் புரிய ஆரம்பித்திருந்த வயதில் 'கண்ணதாசன்' பல ஜன்னல்களைத் திறந்துவிட்டது.எங்கள் பள்ளிக்கு வந்தார். தானும் ஒரு மாணவனைப் போலவே
ReplyDeleteமாறி, சினிமாவைப்பற்றி ஒருசெய்தியும் கூறாமல்,'பழந்தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை' பற்றி 90 நிமிடங்கள் பொழிந்தார்.இந்தவயதிலும் அவர் கூறிய அனைத்து சுவையான செய்திகளையும் என்னால் அப்படியே சொல்லமுடியும்.
அவர் சொன்னதுபோல் சுவையாகப் பாடம் சொன்னால் மாணவன் ஏன் பாடத்தை
மறக்கப் போகிறான்?
வாத்தியார் ஐயா,
ReplyDeleteமாலைப்பொழுதின் மயக்கத்திலே மங்களகரமான வணக்கம்.
" விதியை, மதியால் வெல்லுவாய்! என்று உனது விதி விதிக்கப்பட்டு இருந்தால் ஒழிய உன்னால் விதியை வெல்ல முடியாது"! என்ற பொன் வரிகளை தந்த மகான் அல்லவா கண்ணதாசன்.
--
ubuntu போன்ற system உக்கு மாறுவது நல்லது போல தான் இருக்கு. சற்று நிம்மதியா இருக்கலாம். கோப்புக்களையும் google ஆண்டவரிடம் விடலாமே ;).
ReplyDeleteஅண்ணா!
ReplyDeleteமலையரசி அருள்பெற்ற கவியரசர் பற்றிய சுவையான செய்திகள், படிக்கத் திகட்டாதவை.
தமிழர் வாழும் இடமெல்லாம் கவி பாடிய அவரை, எத்தனையோ தடவை முயன்றும் இலங்கையரசுகள் அவர் பாதம் படும் பாக்கியம்பெற இலங்கையை
அனுமதிக்கவில்லை.
///♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDeleteகவிஞர் கண்ணதாசனின் சிதனையில் இன்று எத்தனையோ வண்டி எதுவுமே இல்லாம ஓடுகிறது . அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி .////
பலருடைய மனதிற்குத் தெம்பை அளிப்பது, அவருடைய பாடல் வரிகள்தான். நன்றி நண்பரே!
//////kmr.krishnan said..
ReplyDelete'கண்ணதாசன்' என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகை நடத்தினார். இலக்கியம் புரிய ஆரம்பித்திருந்த வயதில் 'கண்ணதாசன்' பல ஜன்னல்களைத் திறந்துவிட்டது.எங்கள் பள்ளிக்கு வந்தார். தானும் ஒரு மாணவனைப் போலவேமாறி, சினிமாவைப்பற்றி ஒருசெய்தியும் கூறாமல்,'பழந்தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை' பற்றி 90 நிமிடங்கள் பொழிந்தார்.இந்தவயதிலும் அவர் கூறிய அனைத்து சுவையான செய்திகளையும் என்னால் அப்படியே சொல்லமுடியும்.
அவர் சொன்னதுபோல் சுவையாகப் பாடம் சொன்னால் மாணவன் ஏன் பாடத்தை மறக்கப் போகிறான்?////
உங்களுக்கும் அவரை நேரில் காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.தகவலுக்கு நன்றி சார்!
////kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா,
மாலைப்பொழுதின் மயக்கத்திலே மங்களகரமான வணக்கம்.
" விதியை, மதியால் வெல்லுவாய்! என்று உனது விதி விதிக்கப்பட்டு இருந்தால் ஒழிய உன்னால் விதியை வெல்ல முடியாது"! என்ற பொன் வரிகளை தந்த மகான் அல்லவா கண்ணதாசன்./////
நல்லது.நன்றி முருகா!
/////Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteubuntu போன்ற system உக்கு மாறுவது நல்லது போல தான் இருக்கு. சற்று நிம்மதியா இருக்கலாம். கோப்புக்களையும் google ஆண்டவரிடம் விடலாமே ;)./////
ஆமாம், ஏதாவது செய்தாக வேண்டும். யோசனைக்கு நன்றி இமானுவேல்!
/////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDeleteஅண்ணா!
மலையரசி அருள்பெற்ற கவியரசர் பற்றிய சுவையான செய்திகள், படிக்கத் திகட்டாதவை.
தமிழர் வாழும் இடமெல்லாம் கவி பாடிய அவரை, எத்தனையோ தடவை முயன்றும் இலங்கையரசுகள் அவர் பாதம் படும் பாக்கியம்பெற இலங்கையை அனுமதிக்கவில்லை.////
காற்றில் மிதந்துவரும் வரிகளுக்கு மட்டும் யாருடைய அனுமதியும் தேவையில்லை. என்றும் அது ஒலித்துக்கொண்டிருக்கும்!
"பொன்னம்மாள் சமையல் செய்தால்
ReplyDeleteபூமியெங்கும் வாசம்வரும்
சர்க்கரைப்பொங்கல் வைத்தால்
சாமிக்கே ஆசைவரும்!"
"தன் செவிகள் பழுதானாலும்
என் கவிகள் பழுதாகாமல்
பார்த்துக் கொண்ட மகராசி!"
இவை போதும், கண்ணதாசன் ஒரு தெய்வம் என்பதற்கான ஆதாரம்...
//////சீனு said...
ReplyDelete"பொன்னம்மாள் சமையல் செய்தால்
பூமியெங்கும் வாசம்வரும்
சர்க்கரைப்பொங்கல் வைத்தால்
சாமிக்கே ஆசைவரும்!"
"தன் செவிகள் பழுதானாலும்
என் கவிகள் பழுதாகாமல்
பார்த்துக் கொண்ட மகராசி!"
இவை போதும், கண்ணதாசன் ஒரு தெய்வம் என்பதற்கான ஆதாரம்..////////
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!