எச்சரிக்கை: அடல்ஸ் ஒன்லி பதிவு!
”யோவ் வாத்தியார், வகுப்பறையில் இந்தமாதிரிப் பதிவு தேவைதானா?” என்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!
மற்றவர்கள் சமூக இயல் பாடமாக இந்தப் பதிவைக் கணக்கில் கொண்டு மேலே படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்றைய நாட்டு நடப்பை, மக்களின் மனப்போக்கை மாணவர்களுக்குத் தெரிவிப்பது வாத்தியாரின் கடமையாகும்.
அதோடு என்னுடைய மாணாக்கர்களின் சராசரி வயது 40
குறைந்த வயது 21
அதிக வயது 75
அதையும் கணக்கில்கொண்டுதான் பதிவை வலையில் ஏற்றுகிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு அழகான இளம்பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை உணர்ந்தாள்.
பயந்தாளா? அதுதான் இல்லை. நவீன உலகத்துப்பெண். தன் அன்னையிடம் செய்தியைச் சொன்னாள்.
அவளுடைய அன்னை, மிரண்டுபோனதுடன், அதீதக் கோபத்துடன் காட்டுக் கத்தலாக அவளிடம் கேட்டாள்:
“உன்னுடன் பழகும் எந்தப் பன்றி இந்தக் காரியத்தைச் செய்தது?”
("Who was the pig that did This to you?)
”இரு, நானும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அமைதியாகச் சொன்னவள். தன் கைபேசியை எடுத்துப் பேசினாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில், மிகவும் விலை உயர்ந்த சிவப்பு வண்ண பெராரி கார் வந்து நின்றது. அசத்தலான தோற்றத்துடன் ஒரு இளைஞன் வண்டியை விட்டு இறங்கினான். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தான். ஊரையே தூக்கும் அளவிற்கு நறுமணம் அவனுடன் சேர்ந்து வந்தது. வீட்டிற்குள்ளே பவ்வியமாக வந்தான்.
வந்தவன், அந்தப் பெண்ணின் தாய், தந்தை, மற்றும் அவளுடன், வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்தான்.
சற்றும் யோசிக்காமல், கவலைப்படாமல், பேசலானான்.
“உங்கள் பெண் சற்றுமுன் என்னிடன் தன்னுடைய புதுப் பிரச்சினையைச் சொன்னாள். நான் என்னுடைய சில சொந்த மற்றும் குடும்பப் பிரச்சினை களால், அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனாலும்
நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன். (I can't marry her because of
my personal family Situation, but I'll take responsibility.)
”பெண் குழந்தைபிறந்தால், அடையாறில் ஒரு பங்களா, அண்ணா சாலையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி வைப்புத்தொகை தருகிறேன்.”
”ஆண் குழந்தை பிறந்தால், வாரிசுச் சிக்கல் வரக்கூடாது. சென்னைப் புறநகரில் எங்களுக்கு உள்ள தொழிற்சாலைகளில் இரண்டை எழுதித் தருகிறேன். இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்புத்தொகையாகத் தருகிறேன்”
”இரட்டைக் குழந்தைகள் என்றால், சொன்னவற்றை இரண்டு மடங்காகத் தருகிறேன்.”
”அதே சமயம், இடையில் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை பிறப்பு சிக்கலாகி, குழந்தை உயிருடன் பிறக்காவிட்டாலோ, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்
(However, If there is a miscarriage or unsuccessful delivery , what do you suggest I do?")
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
இந்த இடத்தில், அதுவரை அமைதியாக இருந்த
அந்தப் பெண்ணின் தந்தை,
எழுந்து நின்று, அவனுடைய தோளில்
ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:
அந்தப் பெண்ணின் தந்தை,
எழுந்து நின்று, அவனுடைய தோளில்
ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சொன்னார்:
என்ன சொன்னார்?
கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
"You can try again!!!"
++++++++++++++++++++++++++++++
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது!
நட்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஇது பணம் படுத்தும் பாடு.எதுவும் சொல்வதற்கு இல்லை.
இது கலியுகம்
ஒரு வேளை ஜாதக அமைப்பாகவும் இருக்கலாம்.
கதையாக இருந்தாலும் மனம் ஒப்பவில்லை
நன்றி!
வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-03-10
good morning sir,
ReplyDeleteThanks for today lesson lesson is very nice sir i know that the world is going for money
sundari
very practical dad...
ReplyDeleteமுயற்ச்சி திருவினையாக்கும்....நல்லதைதான சொல்லியிருக்காரு..
ReplyDelete//You can try again//
ReplyDeleteஆமாம் முயற்சி திருவினையாக்கும்.
அய்யா காலை வணக்கம்...
ReplyDeleteகாலத்தின் கோலத்தை கச்சிதமாக ஒரு பக்க கதை வடிவில் படம் பிடித்து காட்டும் கதை ......
நன்றி வணக்கம்
The minimum age of your students is 20. Not 21. He he he he.
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDelete"பணம் பத்தும் செய்யும்"
பணப் பேய் பிடித்தால்
படுக்கை, பாடை,பாதை
எதுவும் தெரியாது போலும்.
ஒழுக்கம் விழுப்பம் தரும்
ஆனால் உடனே பணம் தருமா????
பெற்ற மகளை விற்றத் தந்தை.
Nice joke,
ReplyDeleteஇந்த மூலச் சரக்கை நான் ஏற்கனவே படித்துள்ளேன். ஆனாலும் மொழி பெயர்ப்பு அருமை.
ReplyDelete/////Blogger V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
இது பணம் படுத்தும் பாடு.எதுவும் சொல்வதற்கு இல்லை.
இது கலியுகம்
ஒரு வேளை ஜாதக அமைப்பாகவும் இருக்கலாம்.
கதையாக இருந்தாலும் மனம் ஒப்பவில்லை
நன்றி!
வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
உங்களைப் போல மனம் ஒப்பாதவர்கள் ஒரு பத்து சதவிகிதம் இருக்கலாம். இன்று எல்லாமே காசு என்றாகி விட்டது!
////Blogger sundari said...
ReplyDeletegood morning sir,
Thanks for today lesson lesson is very nice sir i know that the world is going for money
sundari////
கலியுகம். காசேதான் கடவுளப்பா! கடவுளம்மா!
/////Blogger GKS said...
ReplyDeletevery practical dad.../////
வேறு என்ன செய்யமுடியும் - அததனை பணம் அனாசயமாகவரும்போது?
////Blogger தாராபுரத்தான் said...
ReplyDeleteமுயற்ச்சி திருவினையாக்கும்....நல்லதைத்தான சொல்லியிருக்காரு../////
இந்தமாதிரி எல்லா அப்பாக்களும் இருந்தால் நாடு என்னாவது?
/////Blogger ananth said...
ReplyDelete//You can try again//
ஆமாம் முயற்சி திருவினையாக்கும்.////
இதற்கும்கூட திருவினையைச் சொல்லலாமா ஆனந்த்?:-)))
/////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்...
காலத்தின் கோலத்தை கச்சிதமாக ஒரு பக்க கதை வடிவில் படம் பிடித்து காட்டும் கதை ......
நன்றி வணக்கம்/////
கோலம் மோசமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது ஆதிராஜ்!
காசேதான் கடவுள டா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா ........ இந்த மனிதர்களுஉக்கு " பணம் மட்டுமே எல்லாம்"........
ReplyDeleteஅன்புடன்
கர்ண ரத்தினவேல்
//////Blogger sundinesh1 said...
ReplyDeleteThe minimum age of your students is 20. Not 21. He he he he.//////
சொன்னால்தானே தெரியும் சாமி! தெரிந்தவரை சொன்னேன்! ஹி..ஹி..!
/////Blogger Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
"பணம் பத்தும் செய்யும்"
பணப் பேய் பிடித்தால்
படுக்கை, பாடை,பாதை
எதுவும் தெரியாது போலும்.
ஒழுக்கம் விழுப்பம் தரும்
ஆனால் உடனே பணம் தருமா????
பெற்ற மகளை விற்றத் தந்தை./////
இன்றைய நிலைமை அப்படித்தான் உள்ளது ஆலாசியம் கோவிந்தசாமி!
/////Blogger CJeevanantham said...
ReplyDeleteNice joke,/////
நல்லது. நன்றி!
வண்க்கம்...
ReplyDeleteவாத்தியார் ஐயாவுக்கு வாழு கொஞ்சம் அதிகமாயிடுச்சு...
சும்மா, விளையாட்டுக்கு...keep smiling...
வாழ்க வளமுடன்
/////பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஇந்த மூலச் சரக்கை நான் ஏற்கனவே படித்துள்ளேன். ஆனாலும் மொழி பெயர்ப்பு அருமை./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Blogger Rathinavel.C said...
ReplyDeleteகாசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா ........ இந்த மனிதர்களுக்கு " பணம் மட்டுமே எல்லாம்"........
அன்புடன்
கர்ண ரத்தினவேல்////
உண்மைதான். அதனால்தான் இத்தனை அவலங்கள். நன்றி நண்பரே!
போச்சுடா.. வாத்தியாரும் கெட்டுப் போயிட்டாரா..?
ReplyDeleteசாமிகளைத்தான் நம்பக் கூடாதுன்னு நினைச்சேன்..!
வாத்தியார்களையுமா..?
முருகா..!
சார் அசத்தல் !!! நகைச்சுவை வழியாக கருத்துக்களை தரும் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என்றும் கடமை பட்டுள்ளோம் . நன்றி
ReplyDeleteநாம் எப்படியெல்லாம் மேற்கத்திய கலாச்சாரப் படையெடுப்பிற்கு நம்மை ஒப்புக் கொடுத்து வருகிறோம் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டு.
ReplyDeleteஎப்படியாவது கலி முற்றித்தானே ஆக வேண்டும்?காசுக்காகக் கலியில் சோற்றை விற்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.காசுக்காகப் பெண்ணின்
மானத்தை விற்கத்தயாராக உள்ள தந்தை!பலே பலே!கலி சீக்கிரம் முடிந்துவிடும்.மாயன் காலண்டர் சரிதானோ?
/////Success said...
ReplyDeleteவண்க்கம்...
வாத்தியார் ஐயாவுக்கு வால் கொஞ்சம் அதிகமாயிடுச்சு..
சும்மா, விளையாட்டுக்கு...keep smiling...
வாழ்க வளமுடன்//////
அனுமாருக்கும்தான் வால் இருக்கிறது. சிலரது வால்கள் நன்மைக்காகவே இருக்கும். அல்லது படைக்கப் பெற்றிருக்கும்!:-)))
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteபோச்சுடா.. வாத்தியாரும் கெட்டுப் போயிட்டாரா..?
சாமிகளைத்தான் நம்பக் கூடாதுன்னு நினைச்சேன்..!
வாத்தியார்களையுமா..?
முருகா..!//////
அடுத்த பின்னூட்டத்தை படித்துப்பாருங்கள் ஊனாதானா!
/////rajesh said...
ReplyDeleteசார் அசத்தல் !!! நகைச்சுவை வழியாக கருத்துக்களை தரும் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என்றும் கடமை பட்டுள்ளோம் . நன்றி//////
நல்லது. நன்றி நண்பரே!
//////kmr.krishnan said...
ReplyDeleteநாம் எப்படியெல்லாம் மேற்கத்திய கலாச்சாரப் படையெடுப்பிற்கு நம்மை ஒப்புக் கொடுத்து வருகிறோம் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டு.
எப்படியாவது கலி முற்றித்தானே ஆக வேண்டும்?காசுக்காகக் கலியில் சோற்றை விற்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.காசுக்காகப் பெண்ணின் மானத்தை விற்கத்தயாராக உள்ள தந்தை!பலே பலே!கலி சீக்கிரம் முடிந்துவிடும்.மாயன் காலண்டர் சரிதானோ?/////
மாயன் காலண்டரின்படி நடக்கட்டும் சார்! அப்படியாவது ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட் எல்லாம் இன்றுள்ளதில் 20% விலைக்கு வந்து நிற்கட்டும்சார்! சகமனிதன் திருந்த வேண்டும்!
அதெல்லாம் சரி யார் இந்த வேலையை செய்த பன்றி என்று அம்மா கேட்டதற்கு மகள் இரு நானும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்களே இதற்க்கு என்ன அர்த்தம், மாணவனை சந்தேகம் தீர்த்து வைப்பது ஆசிரியரின் கடமை, தப்பா பதிவு எழுதினால் இப்படி தான் கேட்போம் (சும்மா விளையாட்டுக்கு )
ReplyDeleteஇந்த கதையிலே வரும் மாம்சைப் போலவே love is nothing but a reaction of amphitamin (chemical )..என்று வேறு பணக்கார மாப்பிள்ளைக்காக அவன் வசமாக மாறிவிட்டிருக்கிற மகளின் சார்பாக (உண்மைக்)காதலனிடம் விளக்கமளிக்கும் தகப்பன் கதாபாத்திரம் சுஜாதாவின் எதோ ஒரு கதையிலே 20 வருடங்களுக்கு முன்னரே படித்த ஞாபகம்.
ReplyDeleteகாதல் ஒரு ஜீவ உணர்ச்சி என்று உணர்ச்சி என்று காவியங்கள் படைத்த பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் நாயகியின் தற்போதைய நிலவரம்தான் இன்றைய கால கற்பு நிலையின் உதாரணம்..மற்றவர்கள் இதில் வருத்தப்படுவதற்கோ கோபப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை..பெண்ணியம் என்ற பெயரில் இத்தகைய விஷயங்களுக்காக போராடிவரும் ரேணுகா சௌத்ரி போன்றவர்கள் வெட்கப்படாதபோது..
//////SARAVANA BALAAJI said...
ReplyDeleteஅதெல்லாம் சரி யார் இந்த வேலையை செய்த பன்றி என்று அம்மா கேட்டதற்கு மகள் இரு நானும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்களே இதற்க்கு என்ன அர்த்தம், மாணவனை சந்தேகம் தீர்த்து வைப்பது ஆசிரியரின் கடமை, தப்பா பதிவு எழுதினால் இப்படி தான் கேட்போம் (சும்மா விளையாட்டுக்கு)//////
அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லும்போதே மகளுக்குத் தெரியாதா என்ன? அம்மாவிற்க்காக அப்படிப்பேசி தன் அலைபேசி உரையாடலைத்துவங்குகிறார். அவ்வளவுதான்
////minorwall said...
ReplyDeleteஇந்த கதையிலே வரும் மாம்சைப் போலவே love is nothing but a reaction of amphitamin (chemical )..என்று வேறு பணக்கார மாப்பிள்ளைக்காக அவன் வசமாக மாறிவிட்டிருக்கிற மகளின் சார்பாக (உண்மைக்)காதலனிடம் விளக்கமளிக்கும் தகப்பன் கதாபாத்திரம் சுஜாதாவின் எதோ ஒரு கதையிலே 20 வருடங்களுக்கு முன்னரே படித்த ஞாபகம்.
காதல் ஒரு ஜீவ உணர்ச்சி என்று உணர்ச்சி என்று காவியங்கள் படைத்த பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் நாயகியின் தற்போதைய நிலவரம்தான் இன்றைய கால கற்பு நிலையின் உதாரணம்..மற்றவர்கள் இதில் வருத்தப்படுவதற்கோ கோபப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை..பெண்ணியம் என்ற பெயரில் இத்தகைய விஷயங்களுக்காக போராடிவரும் ரேணுகா சௌத்ரி போன்றவர்கள் வெட்கப்படாதபோது..///////
கற்பைவிட்டுத்தள்ளுங்கள் மைனர். பண விஷயத்தில் பெரும்பாலோர், இந்த நிலைக்குத் தாவி விடுகிறார்களே - அதுதான் தற்போதைய மனமாற்றம். அதைப் பார்த்தீர்களா? கதையில் சொல்லியிருப்பதும் அதுதான் மைனர்!
one small doubt sir , for match making . is there any rule that . girls lagna should not be boys 6th,8th,12th lagna or boys lagna should not be of girls 6th,8th,12th
ReplyDeleteexample .: for simma lagna boy , meenam is the 8,dhanus 6th, kadagam 12th , can he or she marry a person from those lagna ? ..
why peoples say that chevvai, planet is none other than murugan,angaragan himself? . if so , then what about other planets?.
வாத்தியார் ஐயா!
ReplyDeleteவணக்கம்.
எம்பெருமான் மாயகண்ணன் பாரதத்தில் இரண்டு இடங்களில் கண்ணீர் வடிப்பதாக கூறுவார்கள்.
1. அபிமன்யு போர்களத்தில் வீரமரணம் அடைந்த பொழுது.
2. 'கருணை வள்ளல் கர்ணன்'! வீரமரணம் அடைந்த பொழுது..
விளக்கம்.
1. அபிமன்யு போர்களத்தில் வீரமரணம் அடைந்த பொழுது.
தனது தங்கையின் தவப்புதல்வன் அபிமன்யு.
ஏனெனில், மகன் இல்லையே என்ற குறையை போக்க வந்ததவப்புதல்வன்.
மருமகன்
மகன் இல்லையே என்ற குறையை போக்க இந்த மண்ணில் தனது மகளுக்கு கணவன் வடிவில் மகனாக வந்த மகன்.
2.'கருணை வள்ளல் கர்ணன்'!
இல்லை என்ற சொல்! என்னில் இருந்து வராமல், கொடுக்கின்ற வள்ளல் தன்மையை தா 'கண்ணா'! என்று
(பகவான் மாயக்கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும்?, கேள்! கர்ணா என்று கேட்டதிற்கு )
எந்தவிதமான சுயநலம் இல்லாத வரத்தை கேட்டு கண்ணனையே கண்ணீர் வடிக்க வைத்தானே அதை நினைத்து
--
தன்னம்பிக்கையுள்ள தந்தை!
ReplyDeleteDear sir,
ReplyDeleteYou're 100% correct . In earth we can use money and solve many non acceptable mistakes but after death we have to answer to the supreme power( God) for all the mistakes , at that time money will not help.
Ashok
/////Blogger ms torrent said...
ReplyDeleteone small doubt sir , for match making . is there any rule that . girls lagna should not be boys 6th,8th,12th lagna or boys lagna should not be of girls 6th,8th,12th
example .: for simma lagna boy , meenam is the 8,dhanus 6th, kadagam 12th , can he or she marry a person from those lagna ? ../////
ராசி அல்லது லக்கினம் இருவருக்கும் அஷ்டம சஷ்டம நிலையில் (6/8 அல்லது 8/6) இருக்கக்கூடாது என்பார்கள். காதல் திருமனங்களில் இதையெல்லாம் பார்க்க முடியுமா என்ன?
>>>>>>>>>>>>>>>
////why peoples say that chevvai, planet is none other than murugan,angaragan himself? . if so , then what about other planets?./////
இல்லை. தவறு!
/////Blogger kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா!
வணக்கம்.
எம்பெருமான் மாயகண்ணன் பாரதத்தில் இரண்டு இடங்களில் கண்ணீர் வடிப்பதாக கூறுவார்கள்.
1. அபிமன்யு போர்களத்தில் வீரமரணம் அடைந்த பொழுது.
2. 'கருணை வள்ளல் கர்ணன்'! வீரமரணம் அடைந்த பொழுது..
விளக்கம்.
1. அபிமன்யு போர்களத்தில் வீரமரணம் அடைந்த பொழுது.
தனது தங்கையின் தவப்புதல்வன் அபிமன்யு.
ஏனெனில், மகன் இல்லையே என்ற குறையை போக்க வந்ததவப்புதல்வன்.
மருமகன்
மகன் இல்லையே என்ற குறையை போக்க இந்த மண்ணில் தனது மகளுக்கு கணவன் வடிவில் மகனாக வந்த மகன்.
2.'கருணை வள்ளல் கர்ணன்'!
இல்லை என்ற சொல்! என்னில் இருந்து வராமல், கொடுக்கின்ற வள்ளல் தன்மையை தா 'கண்ணா'! என்று
(பகவான் மாயக்கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும்?, கேள்! கர்ணா என்று கேட்டதிற்கு )
எந்தவிதமான சுயநலம் இல்லாத வரத்தை கேட்டு கண்ணனையே கண்ணீர் வடிக்க வைத்தானே அதை நினைத்து/////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கண்ணன்!
/////Blogger வால்பையன் said...
ReplyDeleteதன்னம்பிக்கையுள்ள தந்தை!/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////Blogger Ashok said...
ReplyDeleteDear sir,
You're 100% correct . In earth we can use money and solve many non acceptable mistakes but after death we have to answer to the supreme power( God) for all the mistakes , at that time money will not help.
Ashok////
அதை யார் நினைக்கிறார்கள். நினைத்தாலும் அன்று பார்த்துக்கொள்ளலாம் என்று வாளாவிருப்பார்கள்!