மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.3.10

ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!

எண் ஐந்தைப் பற்றிய எண் ஜோதிடம்!
------------------------------------------------------------
எண் 5 புதனுக்கு உரியது. இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள்.

இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும். வாழ்க்கையில் வெற்றியாளனாகவும், புகழ் மிக்கவர்களாகவும் வலம் வருவார்கள்.

5, 14, 23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்த எண்ணிற்கு உரியவர்கள். பிறப்பு எண் 5 வந்தாலும் சரி அல்லது கூட்டல் எண் (விதி எண்) 5 வந்தாலும் சரி, அவர்களுக்கு இந்தக் குணாதிசயங்கள் இருக்கும்.

மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். இன்றைய விஞ்ஞான உலகத்தின் பல சாதனைகள் எல்லாம் பெரும்பாலும் இந்த எண்ணிற்கு உரியவர்களால் ஏற்பட்டதுதான்.

இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள். சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும். அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும்.
இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். அதில் நுழைந்து, தங்களுடைய ஆற்றலைக் காட்டினால் ஆதீதப் பொருள் குவியும் அல்லது அதிக அளவில் செல்வம் சேரும். அதனால்தான் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போன்றது என்று சொல்லப்படுகிறது.

இந்த எண்காரர்களின் வீக்னெஸ் என்ன? வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள். மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்கள், பொதுவாகத் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பிரபலமடைவார்கள்

ஐந்தாம் எண்ணில் பெயரை உடையவர்கள், அல்லது பெயரை உடைய நிறுவனங்கள் மற்றவர்களை ஈர்க்கும்படியாக இருக்கும். அதன் காரணமாகவே வெற்றிபெற நினைக்கும் பலர் இந்த எண்ணில் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள். தோல்வி என்பது இருக்காது. இருந்தாலும், வாங்கிய அடியை மறந்துவிட்டு, எழுந்து போராடி, வெற்றியடைவார்கள்.

மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள்

மனைவியாக வருபவளும், இவர்களுடைய இந்த குணத்தை அறிந்துகொண்டு, இவர்களுக்குத் தகுந்தமாதிரி விதம் விதமாகப் பணிவிடை செய்ய வேண்டும். முக்கியமாக இவர்களை விதம் விதமாகக் கொஞ்சி உறவாட வேண்டும்:-)))

She has to display her affection in different ways and She has to retain his affection by cooking tasty dishes, and impress him with changes in her personality.

தொழில் அல்லது வியாபாரத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். நிறைய சம்பாதிப்பார்கள். நிறைய செலவும் செய்வார்கள்.

ஐந்தாம் எண்ணில் பிறந்ததோடு மட்டும் அல்லாமல், ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றும் இருந்தால், அதீதப் பணம், பெயர், புகழ் என்று எல்லாவற்றையும் தேடிப்பிடிப்பார்கள். புதிய யுக்திகளை உபயோகித்து வழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். போற்றக்கூடிய, நினைவில் வைக்கக்கூடிய, பல செயல்களைச் செய்வார்கள்

இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள். அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள்.

5, 14, 23 ஆகிய தேதிகளும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இவர்களுக்கு உகந்த நாட்களாகும். Light grey, white, Light shades ஆகிய நிறங்கள் உகந்த நிறங்களாகும். இருட்டான நிறங்களை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிறந்த கல் பச்சை நிறக்கல் - மரகதம் emerald

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள்

கவியரசர் கண்ணதாசன் மொழியில் இவர்களைப் பற்றிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்:

"என்னைத் தெரியுமா..... ?
என்னைத் தெரியுமா..
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா..

ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..
வாழ்வை சோலையாக்கலாம்..
இந்தக் காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
( என்னை )"

(படம்: குடியிருந்த கோவில்)
+++++++++++++++++++++++++++++
இந்த எண்காரர்களுக்கான மேலதிகத் தகவல்கள்:

1. The direction of growth in lifetime will be toward change, freedom, and progressive thought and action.
2. The number 5 Destiny potentially endows the native with the wonderful characteristic of multi-talents
3. Good at presenting ideas and knowing how to approach people to get what you want.
4. That will give an edge in any sort of selling and easy success when it comes
to working with people in most jobs.
5. Whatever they do, they have the capacity to be clever, analytical, and a very quick thinker.
6. The Destiny 5 will be welcome in many varied professional environments.
7. The public sector is a natural for you because you must administer to all peoples.
8. The media, advertising, promotion, publicity, all types of selling, and entertainment are all potential
fields for this number
9. Settling on a single career may not be in the cards for them, as they are in a
continuous state of flux brought by constantly changing interests.
10. If there is too much of the 5 energy in their makeup or if they develop negatively, the
negative side of the number may appear. It is restless
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

32 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ஐந்தாம் எண்ணுக்கு உரிய

    பலன் மற்றும் விளக்கமும் நன்றாக உள்ளது. நன்றி!

    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-15

    ReplyDelete
  2. எனக்கு பெயர் எண் தான் 5 வருகிறது. எனது அடையாள அட்டையில் என்னுடைய இனிசியலையும் சேர்த்து 6 ஆக்கி வீட்டார்கள். நான் படித்த எண் கணித நூலில், அழைக்கப்படும் பெயருக்குதான் சக்தி அதிகம் என்று இருக்கிறது. அடிக்கடி பயன் படுத்தப் படுவதால். அடுத்தது அடிக்கடி கையெழுத்தாக போடப்படும் பெயர். அவ்வளவாக பயன்படுத்தாவிட்டால் அதற்கு சக்தி குறைந்துதான் இருக்கும்

    ReplyDelete
  3. sir, good morning. recently i came thro your blog and i really enjoying it, I am a no. 5 person, though most of your observations, go through, some are not. I was born on 14 th july and recently taken over venkodis consultants, a firm that is being run by my husband, (totaling to 59) i hope to really do well and request ur wishes. Internet can be used positively by the services of the people like you
    god bless you
    wishes
    Mangalamravi

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,

    புதனும் ஐந்தும் நன்று என்று
    புதியப் பாடம் புரிந்ததின்று.

    தங்களின் நூல் பொற் தாமரை
    ஏறும் நாள் எதுவோ?

    மிகுந்த ஆவலுடன்....
    ஆலாசியம் கோவிந்தசாமி.

    ReplyDelete
  5. ////ஜோதிஜி said...
    வணக்கம் ஐயா////

    உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஐந்தாம் எண்ணுக்கு உரிய பலன் மற்றும் விளக்கமும் நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////ananth said...
    எனக்கு பெயர் எண் தான் 5 வருகிறது. எனது அடையாள அட்டையில் என்னுடைய இனிசியலையும் சேர்த்து 6 ஆக்கி வீட்டார்கள். நான் படித்த எண் கணித நூலில், அழைக்கப்படும் பெயருக்குதான் சக்தி அதிகம் என்று இருக்கிறது. அடிக்கடி பயன் படுத்தப் படுவதால். அடுத்தது அடிக்கடி கையெழுத்தாக போடப்படும் பெயர். அவ்வளவாக பயன்படுத்தாவிட்டால் அதற்கு சக்தி குறைந்துதான் இருக்கும்///////

    ஆமாம். நன்று நண்பரே!

    ReplyDelete
  8. /////MangalamRavi said...
    sir, good morning. recently i came thro your blog and i really enjoying it, I am a no. 5 person, though most of your observations, go through, some are not. I was born on 14 th july and recently taken over venkodis consultants, a firm that is being run by my husband, (totaling to 59) i hope to really do well and request ur wishes. Internet can be used positively by the services of the people like you
    god bless you
    wishes
    Mangalamravi/////

    உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  9. //////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    புதனும் ஐந்தும் நன்று என்று
    புதியப் பாடம் புரிந்ததின்று.
    தங்களின் நூல் பொற் தாமரை
    ஏறும் நாள் எதுவோ?
    மிகுந்த ஆவலுடன்....
    ஆலாசியம் கோவிந்தசாமி./////

    நன்றி ஆலாசியம். ஏப்ரல் கடைசி வாரம் வெளியிட உத்தேசித்துள்ளேன். ஆண்டவன் சித்தம் எப்படியோ!

    ReplyDelete
  10. அய்யா இனிய காலை வணக்கம்.

    5 ம் எண் பற்றிய விளக்கம் நன்று ...என்னுடய விதி எண் 5 ...பெயரின் கூட்டெழ்த்தும் 5 தான் ...தாங்கள் கூறிய பெறும் பாலான விடயங்கள் ஒத்து வருகின்றன ....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  11. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். பாடம் நன்றாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் எண் கணிதத்தில் பிறந்த தேதி ஆங்கில தேதியா அல்லது தமிழ் தேதியா

    ReplyDelete
  12. பாரம்பரிய சோதிடத்திலும் 5 மனம் பற்றிய செய்தியாகவே உள்ள்து.இங்கே புத‌ன் என்று சொன்னாலும், சந்திரனைப்போல் வேலைசெய்யும் போல!‌

    ReplyDelete
  13. vaathiyaria,

    Yes.Born in 5th and birth total also 23 .. Full name (1st and last ) seems to be 41 ..

    Thank you so much.. Morethan 95 % suits for me..But Many times, the talent is not visible to others or if known also, not recognized properly.I think may be due to Pudhan Neesam in Amsham :)

    I liked the below ** one cannot digest others foolishness ***..Because of the above,lots of conflicts ( personal and work place ) as well..But if others listen for few minutes then they understand their mistakes.

    If ragu dasa is running, is it good to wear the stone based on birth details or only for the stone which suits the major dasa ?

    Thanks
    Rajan

    ReplyDelete
  14. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    5 ம் எண் பற்றிய விளக்கம் நன்று ...என்னுடய விதி எண் 5 ...பெயரின் கூட்டெழ்த்தும் 5 தான் ...தாங்கள் கூறிய பெறும் பாலான விடயங்கள் ஒத்து வருகின்றன ....
    நன்றி வணக்கம்////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். பாடம் நன்றாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் எண் கணிதத்தில் பிறந்த தேதி ஆங்கில தேதியா அல்லது தமிழ் தேதியா?/////

    ஆங்கிலத் தேதிதான் சாமி!

    ReplyDelete
  16. ///kmr.krishnan said...
    பாரம்பரிய சோதிடத்திலும் 5 மனம் பற்றிய செய்தியாகவே உள்ள்து.இங்கே புத‌ன் என்று சொன்னாலும், சந்திரனைப்போல் வேலைசெய்யும் போல!‌////

    புத்திநாதனல்லவா? புத்தி மனதோடு சம்பந்தப்பட்டதுதானே - கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. ////Rajan said...
    vaathiyaraiya,
    Yes.Born in 5th and birth total also 23 .. Full name (1st and last ) seems to be 41
    Thank you so much.. Morethan 95 % suits for me..But Many times, the talent is not visible to others or if known also, not recognized properly.I think may be due to Pudhan Neesam in Amsham :)
    I liked the below ** one cannot digest others foolishness ***..Because of the above,lots of conflicts ( personal and work place ) as well..But if others listen for few minutes then they understand their mistakes.
    If ragu dasa is running, is it good to wear the stone based on birth details or only for the stone which suits the major dasa ?
    Thanks
    Rajan////

    Major Dasa is to be taken!

    ReplyDelete
  18. சார் வணக்கம்,
    இந்த பாட்டு "என்னைத் தெரியுமா..... ?
    என்னைத் தெரியுமா..
    நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
    ரசிகன் என்னைத் தெரியுமா..
    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
    கவிஞன் என்னைத் தெரியுமா..

    ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
    உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

    நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
    நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து
    அன்பில் வாழ்பவன்
    ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..
    வாழ்வை சோலையாக்கலாம்..
    இந்தக் காலம் உதவி செய்ய
    இங்கு யாரும் உறவு கொள்ள
    அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
    அளந்து பார்க்கலாம்
    இசையிலே மிதக்கலாம்
    எதையுமே மறக்கலாம்
    ( என்னை )"
    நல்லாயிருக்கிற்து மனதுக்கு இதமாயிருந்தது அப்புறம் பாடமும் ரொம்ப நல்லாயிருக்கிறது ரொம்ப நன்றி.
    தங்களின் சொல் நயம் தென்னை தரும் இளநீரை விட,முற்றிய கனிகளிடை எறிய சாரைவிட,பதமாக் காய்ச்சிய வெல்லபாகின் சுவையைவிட, பசுவின் பாலைவிட க்ரும்பின் சாறைவிட இனிமையாகயிருக்கிறது.
    சுந்தரி

    ReplyDelete
  19. Dear Sir,

    Which is the best to name, as per the birth No or as per the Horoscope

    ReplyDelete
  20. //// MangalamRavi said...
    sir, good morning. recently i came thro your blog and i really enjoying it, I am a no. 5 person, though most of your observations, go through, some are not. I was born on 14 th july and recently taken over venkodis consultants, a firm that is being run by my husband, (totaling to 59) i hope to really do well and request ur wishes. Internet can be used positively by the services of the people like you
    god bless you
    wishes
    Mangalamravi/////

    சக வாசகர் மங்களம்ரவி அவர்களே,
    The firm name venkodis consultants is with a total number of venkodis33+consultants44=77 =total 5
    but the effects of this number is diferent from that one of 59.
    77has been stated that gives success in proceedings of ex-im oriented business activities..
    while calculating firms / companies names ending like pvt.ltd or & co.,
    formats are to be calculated as with their actual pronounciation private limited=27+22=49
    and for & co.,
    and company 10+29=39
    wish u all success in ur further endeavors after this take over..

    ReplyDelete
  21. அன்பு அய்யாவுக்கு வணக்கம்,எண் ஐந்து மற்றும் புதன் பற்றிய பாடம்
    மிகவும் சூப்பர்,விதி எண் என்பது என்ன அய்யா? மற்றும் எனக்கு மிதுன ராசி, மிருகசீரிடம் நட்சத்திரம் (ம்கர லக்கணம்).
    நான் மரகத பச்சை மோதிரம் அணியலாமா?
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  22. /////sundari said...
    சார் வணக்கம்,
    இந்த பாட்டு "என்னைத் தெரியுமா..... ?
    என்னைத் தெரியுமா..
    நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
    ரசிகன் என்னைத் தெரியுமா..
    உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
    கவிஞன் என்னைத் தெரியுமா.........................
    நல்லாயிருக்கிறது மனதுக்கு இதமாயிருந்தது அப்புறம் பாடமும் ரொம்ப நல்லாயிருக்கிறது ரொம்ப நன்றி.
    தங்களின் சொல்நயம் தென்னை தரும் இளநீரை விட,முற்றிய கனிகளிடை எறிய சாரைவிட,பதமாக் காய்ச்சிய வெல்லபாகின் சுவையைவிட, பசுவின் பாலைவிட கரும்பின் சாறைவிட இனிமையாகயிருக்கிறது.
    சுந்தரி//////

    அப்படியா? எல்லோருக்கும் அப்படித் தெரிந்தால் நல்லது சகோதரி!

    ReplyDelete
  23. /////Ram said...
    Dear Sir,
    Which is the best to name, as per the birth No or as per the Horoscope/////

    நட்சத்திர நாம எழுத்துக்களை வைத்துப் பெயர் சூட்டுவார்கள். அந்தப் பெயர், பிறந்த எண்ணுடன் இசைவாக இருந்தால், அம்சமாக இருக்கும்! அதாவது நன்மை பயக்கும்

    ReplyDelete
  24. ////minorwall said...
    //// MangalamRavi said...
    sir, good morning. recently i came thro your blog and i really enjoying it, I am a no. 5 person, though most of your observations, go through, some are not. I was born on 14 th july and recently taken over venkodis consultants, a firm that is being run by my husband, (totaling to 59) i hope to really do well and request ur wishes. Internet can be used positively by the services of the people like you
    god bless you
    wishes
    Mangalamravi/////
    சக வாசகர் மங்களம்ரவி அவர்களே,
    The firm name venkodis consultants is with a total number of venkodis33+consultants44=77 =total 5
    but the effects of this number is diferent from that one of 59.
    77has been stated that gives success in proceedings of ex-im oriented business activities..
    while calculating firms / companies names ending like pvt.ltd or & co.,
    formats are to be calculated as with their actual pronounciation private limited=27+22=49
    and for & co.,
    and company 10+29=39
    wish u all success in ur further endeavors after this take over..//////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  25. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம்,எண் ஐந்து மற்றும் புதன் பற்றிய பாடம்
    மிகவும் சூப்பர்,விதி எண் என்பது என்ன அய்யா? மற்றும் எனக்கு மிதுன ராசி, மிருகசீரிடம் நட்சத்திரம் (ம்கர லக்கணம்). நான் மரகத பச்சை மோதிரம் அணியலாமா?
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா////

    விதி எண் என்பது பிறந்த எண்களின் கூட்டல். உதாரணம் இன்றையத் தேதி 16.3.2010. இதற்கு லக்கி எண் 7
    விதி எண்: 1+6+3+2+0+1+0 = 13 = 4

    பிறந்த எண்ணைவைத்து அல்லது நடக்கும் மகாதசையைவைத்துக் கல்லை அணிவது நல்லது!

    ReplyDelete
  26. /////kannan said...
    yes sir!thanks./////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  27. Dear Sir,

    Whatever you said is 100% True in my experience....Because I am also born in 23rd.For me now pudhan thisai puthan pukthi is going on.And puthan( 7th and 10th lord)thanusu laknathil irukkiraar.shall i wear this green emerald stone???

    Regards,
    Arul

    ReplyDelete
  28. ஐந்தாம் எண் பலன்கள் அருமை.

    >>>இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள்.

    இது 9, 18, 27 என்று எண்ணுகிறேன். 16 என்பது அச்சுப்பிழையோ.


    >>அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள்.

    என்ன செய்வது... விதி அப்படி இருந்தால் அமைந்து தானே ஆக வேண்டும். :)

    ReplyDelete
  29. ////Arul said... Dear Sir,
    Whatever you said is 100% True in my experience....Because I am also born in 23rd.For me now pudhan thisai puthan pukthi is going on.And puthan( 7th and 10th lord)thanusu laknathil irukkiraar.shall i wear this green emerald stone???
    Regards,
    Arul/////

    அணியலாம்!

    ReplyDelete
  30. /////Sathish K said...
    ஐந்தாம் எண் பலன்கள் அருமை.
    >>>இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள்.
    இது 9, 18, 27 என்று எண்ணுகிறேன். 16 என்பது அச்சுப்பிழையோ.
    >>அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள்.
    என்ன செய்வது... விதி அப்படி இருந்தால் அமைந்து தானே ஆக வேண்டும். :)/////

    ஆமாம் தட்டச்சுப்பிழை.திருத்திவாசியுங்கள். தெரிவித்தமைக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com