மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.3.10

நாலு பேருக்கு நன்றி!

++++++++++++++++++++++++++++++++++++++++++
நாலு பேருக்கு நன்றி!

நான்காம் எண் ராகுவிற்கு உரியது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள். நடைமுறை வாழ்க்கை வாழ்பவர்கள். ஆங்கிலத்தில் சொன்னால் They are very practical people.
பந்தா இல்லாதவர்கள்.

நான்காம் எண்காரர்கள் எதிலும் விவரமானவர்கள். அமைப்பானவர்கள்.
ஒரு ஒழுங்குமுறையில் செயல்படக் கூடியவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள்.

எடுத்த காரியத்தை நடுவில் விட்டு விடமாட்டார்கள். என்ன இடர் வந்தாலும் போராடி அல்லது எதிர்த்து நின்று கடைசியில் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். கடினமான உழைப்பாளிகள்

வங்கியாளர், கணக்காளர், மேலாளர், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள் போன்ற வேலைகளில் சிறப்பாகச் செயல் படக்கூடியவர்கள்.

இந்த எண்காரர்களுக்கு மன உறுதி, பிடிவாதம், எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை மேலோங்கி இருக்கும். அதனால் சமயங்களில் வளைந்து கொடுத்துப் போகமுடியாமல் அவதிப்படவும் நேரிடும்

பாரம்பரிய வழிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செயல் படக்கூடியவர்கள். மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். இயல்பானவர்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு முரண்பட்டவர்களாகவும், குறுகிய சிந்தனைகளை உடையவர்களாகவும், பிடிவாதம் மிக்கவர்களாகவும் காட்சியளிப்பார்கள். அது எண்காரர்களுக்கு உரிய பொதுத் தோற்றம்.

காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள். சீக்கிரமே வெறுப்பும் அடையக்கூடியவர்கள். காதலில் ஈடுபடும்போது, காதலன் அல்லது காதலி இசைந்து வருபவராக இருந்தால், நேர்த்தியான காதலராகப் பரிணமளிக்கக்கூடியவர்கள்.

புரிந்து கொள்ளமுடியாதவர்கள். அதன்காரணமாகப் பலர் இவர்களை நெருங்கமாட்டார்கள். தங்களை நேசிப்பவர்களுக்கு உயிரையும் தரக்கூடியவர்கள். அதே நேரத்தில் தனிமை விரும்பிகள்.
(Difficult to understand and get close to. Loyal to those they love but a loner)
எதையும் சட்டென்று அறிந்து கொள்ளும் தன்மை இருக்கும்.
தெளிவான மனநிலையை உடையவர்கள். துணிச்சலானவர்கள்.
சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்கள்

அதீத புத்திசாலிகள். அதீத மனக்கட்டுப்பாடுகள் மிக்கவர்கள். பகுத்தறிவு கொண்டவர்கள். எதிர்பார்ப்பதைச் செய்யக்கூடியவர்கள். கனவுகளைத் துரத்திச் சென்று அதை நனவாக்குபவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள். சமூக சிந்தனைகளை உடையவர்கள். இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். சிலரால் காதலில் வெற்றிபெற முடியாது. எதையும் சீரியசாக எடுத்துக்கொள்பவர்கள்.
வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். இருந்தாலும் திருப்தியடையாதவர்கள். அதீதமான விருப்பு & வெறுப்புக்களை உடையவர்கள். சிலர் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். அதன்காரணமாகத் தனித்து இருக்கவும் நேரிடும். பல அரிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர்கள். இருந்தாலும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமாட்டாரகள்.

Health & Finance:
Birth number 4 people usually suffer form breathlessness, weakness, sudden stomach pain & respiratory problems. Their financial prosperity usually start from late twenties.
If possible they should avoid joint business. They will be more successful while working alone.

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் தனித் தன்மைவாய்ந்தவர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். அதன்காரணமாக பலருக்கும் எதிரியாகக் காட்சியளிப்பவர்கள். மற்ற எண்காரர்களைவிட இவர்களுக்குத்தான் அதிக அளவில் விரோதிகள் இருப்பார்கள்.

”நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி”

என்று புரட்சித்தலைவரின் படத்தில் பாடல் ஒன்றுவரும். அந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் என்று வர்ணிக்கப்படும் நபர்கள் இந்த 4 எண்ணுக்கு உரியவர்கள். தங்களுடைய முற்போக்கு சிந்தனைகளால் பலருக்கும் தோள் கொடுப்பவர்கள் அவர்கள்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணிற்கு உரியவர்கள்
1,2,7 & 8ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மட்டும் இவர்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பார்கள்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய நாட்கள்
இவர்களுக்கு உகந்த கிழமைகள்
Lucky colour are Electric blue, Half Shades, Grey



கோமேதகம் இவர்களுக்கு உரிய நவரத்தினம் ஆகும். ராகு திசை நடப்பவர்கள் அனைவரும் இந்தக் கல்லை அணிந்து கொள்ளலாம்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    நான்காம் எண்ணுக்கு உரிய பலன்,அணிய வேண்டிய நவரத்தினம்,குணாதிசயம்,தொழில் போன்ற மற்றும்

    இதர விபரங்களும் நன்றாக உள்ளது. நன்றி!

    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-11

    ReplyDelete
  2. Vanakam Sir,
    நான்காம் என்னை பற்றி நேற்று எழுதுவிங்க எண்டு wait பண்ணினான், ராகுவும் கேதுவும் வில்லன் கிரகங்கள், ஆனால் with numerology it is totally opposite predictions. என்னுடைய பிறந்த நாள் ஏழு அண்ட் விதி என் நாலு, அதுவும் கேது உச்சம், ஆனால் ராகு வந்து நீச்சம் மூன்றில். இதை எப்படி எடுக்கிறது?
    நாலாம் நம்பர் பற்றி எழுதினது is mostly true.

    Thanks
    Thanuja

    ReplyDelete
  3. எனக்கு கூட்டு எண் (தேதி, மாதம், வருடம் கூட்டல்) 31 அதாவது 4 எண் வரும். பல பலன்கள் பொருந்தி வருகிறது. எந்தெந்த பலன்கள் என்பது எனக்கு மட்டும் தெரிந்தாக இருக்கட்டும் என்று இங்கே சொல்லவில்லை.

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம்.....

    நான்காம் எண் பற்றிய பாடம் அருமை அய்யா .......

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  5. ஆசிரியருக்கு வணக்கம்,

    நாலும் தெரிஞ்சவன்,
    நாலுபேருக்கு உதவி செய்யணும்,
    நாலுபேரு வேணும்!
    நாலுபேரு நல்ல இருக்கணும்னா?
    நாலுபேருக்கு நன்றி!
    என்று எண் நான்குக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

    இது அத்தனையும் இந்த நான்காம்
    என்னில் பிறந்தவருக்கு இருக்கும் என்பதை
    வாத்தியாரின் வகுப்பறை வழியே தெரிந்துக் கொண்டேன்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோவிந்தசாமி.

    ReplyDelete
  6. அய்யா இன்றைக்காவது முதல் ஆளாக பின்னூட்டம் போட வந்தேன் அனால் அதற்குள் வேறு ஒருவர் என்னை முந்தி விட்டார் , எனக்கு இப்போ ராஹு திசை அய்யா அனால் எண் நாலு இல்லை எனது எண் ஒன்று , பாடம் நன்றாக உள்ளது ,நன்றி

    ReplyDelete
  7. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நான்காம் எண்ணுக்கு உரிய பலன்,அணிய வேண்டிய நவரத்தினம்,குணாதிசயம்,தொழில் போன்ற மற்றும்
    இதர விபரங்களும் நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  8. /////Thanuja said...
    Vanakam Sir,
    நான்காம் என்னை பற்றி நேற்று எழுதுவீங்க என்று wait பண்ணினேன், ராகுவும் கேதுவும் வில்லன் கிரகங்கள், ஆனால் with numerology it is totally opposite predictions. என்னுடைய பிறந்த நாள் ஏழு அண்ட் விதி என் நாலு, அதுவும் கேது உச்சம், ஆனால் ராகு வந்து நீச்சம் மூன்றில். இதை எப்படி எடுக்கிறது?
    நாலாம் நம்பர் பற்றி எழுதினது is mostly true.
    Thanks
    Thanuja////////

    ஜாதகத்தை வைத்துத்தான் பலன். ஜாதகம்தான் முழுச் சாப்பாடு. எண் ஜோதிடம் (numerology) ஊறுகாய்!

    ReplyDelete
  9. /////ananth said...
    எனக்கு கூட்டு எண் (தேதி, மாதம், வருடம் கூட்டல்) 31 அதாவது 4 எண் வரும். பல பலன்கள் பொருந்தி வருகிறது. எந்தெந்த பலன்கள் என்பது எனக்கு மட்டும் தெரிந்தாக இருக்கட்டும் என்று இங்கே சொல்லவில்லை.//////

    ஆமாம். சிலவற்றைச் சொல்லாமல் இருப்பதே சுகம்!:-))))

    ReplyDelete
  10. /////astroadhi said...
    இனிய காலை வணக்கம்.....
    நான்காம் எண் பற்றிய பாடம் அருமை அய்யா .......
    நன்றி வணக்கம்//////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நாலும் தெரிஞ்சவன்,
    நாலுபேருக்கு உதவி செய்யணும்,
    நாலுபேரு வேணும்!
    நாலுபேரு நல்ல இருக்கணும்னா?
    நாலுபேருக்கு நன்றி!
    என்று எண் நான்குக்கு முக்கியத்துவம் தருகிறோம்.
    இது அத்தனையும் இந்த நான்காம்
    என்னில் பிறந்தவருக்கு இருக்கும் என்பதை
    வாத்தியாரின் வகுப்பறை வழியே தெரிந்துக் கொண்டேன்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோவிந்தசாமி./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  12. Dear sir,
    I am proud of myself being born in number 4.My birth number is 4 and my fate number is (27)ie., 9. Whatever said in your lesson is true. As for as myself is concerned, I will never bend to any body those who command me. If anybody request politely, then I give everything for them.
    Thanks for your valuable lesson sir,
    J.SENDHIL

    ReplyDelete
  13. /////Sakthi Ganesh said...
    அய்யா இன்றைக்காவது முதல் ஆளாக பின்னூட்டம் போட வந்தேன் அனால் அதற்குள் வேறு ஒருவர் என்னை முந்தி விட்டார் , எனக்கு இப்போ ராஹு திசை அய்யா அனால் எண் நாலு இல்லை எனது எண் ஒன்று , பாடம் நன்றாக உள்ளது ,நன்றி
    உங்களின் பாராட்டிற்கு நன்றி!///////

    எனக்கு முதல், கடைசி என்று எதுவும் கிடையாது. அத்தனை பின்னூட்டங்களும் எனக்கு முதல்தான். ஒன்றைக்கூட விடாமல் பதில் அளிக்கிறேன் பாருங்கள். என் எழுத்தின் வெற்றியே உங்கள் (மாணவர்கள்) வாசிப்பில்தான் இருக்கிறது

    ReplyDelete
  14. //////dhilse said...
    Dear sir,
    I am proud of myself being born in number 4.My birth number is 4 and my fate number is (27)ie., 9. Whatever said in your lesson is true. As for as myself is concerned, I will never bend to any body those who command me. If anybody request politely, then I give everything for them.
    Thanks for your valuable lesson sir,
    J.SENDHIL/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  15. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் எனக்கு கூட வருத்தம் இருந்தது முதலில் பின்னோட்டம் இடனும் என்று ஆனால் நீங்கள் அனைத்தும் எனக்கு ஒன்றுதான் என்று சொன்னதால் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. 4 ஆம் எண் பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன் நன்றி அய்யா.

    ReplyDelete
  16. அன்பு அய்யாவுக்கு காலை வணக்கம், தங்களின் நாங்காம் எண் மற்றும்
    ராகு பற்றிய பாடம் மிகவும் அருமை,நான் 22‍ந்தேதி (ஏப்ரல் மாதம்)பிறந்தேன்,
    நீங்கள் இங்கு எழுதியிருப்பதில் எனக்கு 80% ஒத்து போகிறது அதற்காக மிக்க நன்றி.
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்

    ராகுவின் எண் பற்றிய விளக்கம் அருமை. எனக்கு ஒரு தொழில் முறை ஜோதிடர் ஒருவர் amethyst என்ற ராசிக்கல்லை அணியுமாறு பரிந்துரைத்தார். நான் அந்த கல் ராகுவிற்கு என்று நினைத்திருந்தேன் தற்போது கோமேதகம் தான் ராகுவின் இரத்தின கல் என்பதை அறிந்து கொண்டேன். அப்படியானால் மேற்சொன்ன amethyst என்ற இரத்தின கல் எந்த கிரகத்திரக்கான ரத்தினம் என்பதை விளக்கினால் அறிந்துகொள்வேன்.

    மேலும் சக மாணவர் செந்தில் கூறியது போல பிறந்த தேதி எண் மற்றும் விதி எண் போன்றவை மாறி வருகிறது என்றால் எந்த எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதையும் விளக்கினால் நன்றாக அறிந்து கொள்வோம்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. என்னுடைய எண் 4. 22ஆக‌ஸ்ட்1949. கூட்டு எண் 8.பொதுப்பலஙள் 90%
    பொருத்தமாக உள்ளன.ந‌ன்றி

    ReplyDelete
  19. //////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு காலை வணக்கம், தங்களின் நாங்காம் எண் மற்றும்
    ராகு பற்றிய பாடம் மிகவும் அருமை,நான் 22‍ந்தேதி (ஏப்ரல் மாதம்)பிறந்தேன்,
    நீங்கள் இங்கு எழுதியிருப்பதில் எனக்கு 80% ஒத்து போகிறது அதற்காக மிக்க நன்றி.
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  20. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் எனக்கு கூட வருத்தம் இருந்தது முதலில் பின்னோட்டம் இடனும் என்று ஆனால் நீங்கள் அனைத்தும் எனக்கு ஒன்றுதான் என்று சொன்னதால் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. 4 ஆம் எண் பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன் நன்றி அய்யா./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  21. ////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    ராகுவின் எண் பற்றிய விளக்கம் அருமை. எனக்கு ஒரு தொழில் முறை ஜோதிடர் ஒருவர் amethyst என்ற ராசிக்கல்லை அணியுமாறு பரிந்துரைத்தார். நான் அந்த கல் ராகுவிற்கு என்று நினைத்திருந்தேன் தற்போது கோமேதகம் தான் ராகுவின் இரத்தின கல் என்பதை அறிந்து கொண்டேன். அப்படியானால் மேற்சொன்ன amethyst என்ற இரத்தின கல் எந்த கிரகத்திரக்கான ரத்தினம் என்பதை விளக்கினால் அறிந்துகொள்வேன்.
    மேலும் சக மாணவர் செந்தில் கூறியது போல பிறந்த தேதி எண் மற்றும் விதி எண் போன்றவை மாறி வருகிறது என்றால் எந்த எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதையும் விளக்கினால் நன்றாக அறிந்து கொள்வோம்.
    நன்றி
    வாழ்த்துக்கள்////////

    amethyst எனும் கல்லை மகரராசிக்காரர்களுக்குச் சிபாரிசு செய்வார்கள். 4ஆம் எண்ணிற்கும் (ராகுவிற்கும்) கோமேதகம்தான் முக்கியமானது. பிறப்பு எண்ணிற்கும், விதி எண்ணிற்கு உள்ள உபயோகத்தை விரிவாக எழுதுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  22. ////kmr.krishnan said...
    என்னுடைய எண் 4. 22ஆக‌ஸ்ட்1949. கூட்டு எண் 8.பொதுப்பலஙள் 90%
    பொருத்தமாக உள்ளன.ந‌ன்றி/////

    உங்களுடைய மேலதிகத் தகவலுக்கும், கருத்துப்பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. Everything is true.
    Two of my friends birthdate 4 and 22
    all characters you said are match with them.

    Thank u sir.

    ReplyDelete
  24. நாலாம் நாளாம் திருநாளாம்!

    ReplyDelete
  25. /////Subbramaniabalaji said...
    Everything is true.
    Two of my friends birthdate 4 and 22 all characters you said are match with them.Thank u sir.////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ////ramakrishnan said...
    நாலாம் நாளாம் திருநாளாம்!////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com