மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.3.10

யாருக்கு முதல் மரியாதை?

The Sun Temple, Konark, Orissa State, India
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு முதல் மரியாதை?

எண் ஜோதிடத்தில் ஒன்றாம் எண்ணிற்குத்தான் முதல் மரியாதை! ஒன்றாம் எண்ணை உடையவர்களுக்குத்தான் முதல் மரியாதை!

கிரகங்களில் சூரியனைக் குறிக்கும் எண் ஒன்றாம் எண்ணாகும்.

கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு உரியது.

The Great என்று குறிப்படும் நாயகர் Alexander the Great பிறந்தது ஜூலைத் திங்கள் ஒன்றாம் தேதியில்! The Great என்று குறிப்படும் மற்றுமொரு நாயகர் அக்பர் பிறந்த தேதியின் கூட்டல் தொகையும் ஒன்றுதான் (November 23, 1542) 23 + 11 + 1542 = 19 = 1

சரித்திரத்தில் உள்ள மற்றுமொரு மாமன்னர் அசோகர் (Ashoka the Great) பிறந்த தேதி தெரியவில்லை. விக்கி மகராஜாவிடம் கேட்டுப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அவரும் ஒன்றாம் எண்ணிற்கு உரியவராக இருக்கலாம்.

தமிழ்த்திரையில் தனக்கென முத்திரையைப் பதித்துவிட்டுப்போன நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்தது ஒன்றாம் தேதியில் (Date of Birth: October 1, 1927)

ஒன்றாம் எண்ணின் தனிதன்மையே எதையும் எதிர்கொள்ளும் வலிமை மிக்க எண் அது. தன்னம்பிக்கைக்கும், துணிச்சலுக்கும் உரிய எண் அது.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் வலிமை உடையவர்கள் (They are born leaders) எண்ணங்களிலும், செயல்களிலும் சுதந்திரமனப்பான்மை உடையவர்கள். தங்கள் வழியில் குறுக்கிட எவரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆக்கவேலைகளை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எப்போதும் அசலாகவே இருக்க விரும்புபவர்கள். நகலாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.

சொந்த வாழ்க்கையாக இருக்கட்டும் அல்லது வேலை செய்யும் இடமாக இருக்கட்டும் அல்லது தொழிலாக இருக்கட்டும், எதிலும் முதன்மை பெறும் சக்தி இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும்!

உடல், மனம், செயல்படும் தன்மை என்று எல்லாவற்றிலுமே வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள் They are usually incredibly strong in mind, body, and spirit.

ஒன்றுதான் துவக்க எண். மற்ற எண்கள் எல்லாம் அதன் விரிவாக்கமே. அதை மறக்க வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்குமே பிறப்பு எண் ஒன்றுதான். அவர்கள் தங்களுடைய பெயரை ஒன்று என்ற எண் வரும்படியாக அமைத்துக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள கல்லாகும்.படிகக்கல்லாகும்,

நவரத்தினங்களுள் அதுவும் ஒன்று. தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைக்கும். ஒன்று எண்ணிற்கு உரிய கல் இந்தக் கல்.

On wearing a Ruby one becomes proof against the effect of poison என்று சொல்வார்கள். அது எந்த அள்விற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு உரிய வண்ணங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், தங்க நிறம் பொருந்தாத வண்ணங்கள்: கறுப்பு, மெரூன்

மேலதிகத்தகவல்கள்:

கிரகங்களுக்கு அரசன் என்று சொல்லப்படும் கிரகம் சூரியன். அதிகாரம், சக்திகளுக்கு உரிய கிரகம், தந்தைக்குக் காரகன். உடல் காரகன். சூரியன் நீசமடைந்திருப்பவர்கள் இந்த இளஞ்சிவப்புக் கல்லை அணியும்போது, நீசத்தன்மை குறையும்.

ஒன்றாம் எண் தனித்தன்மைவாய்ந்த எண்ணாகும். தலைமை ஏற்பதற்குரிய அபரிதமான அறிவையும், ஆற்றலையும், கொடுக்கும் தன்மையை உடையது. ஆர்வம், இலக்கை நோக்கிப் பயணிக்கும் தன்மை, அதீத உந்து சக்தி, துணிச்சல் ஆகியவற்றை வழங்கும் எண். தனித்தன்மை வாய்ந்தது. முதன்மையானது.

பிரச்சினைகளைப் புதுமையான வழியில் எதிர்கொள்ளும் ஆற்றலைத்தருவது. வெற்றிக்கான செயல்பாடுகளை உள்ளடக்கியது ஆகியவைகள் அதன் சிறப்பாகும்.

சுயதொழில் முனைவோர்கள், மேலாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களுக்கு உரிய எண் இந்த எண்ணாகும்

இந்த எண்ணை உடையவர்களிடம் அதீத உழைப்பு இருக்காது. விவேகமான செயல் இருக்கும் (works smarter not harder). தலைமை ஏற்கும் சக்தி இருக்கும்.

மொத்தத்தில் வாழ்க்கையின் முன்னணிக்குக் கொண்டுபோய் நிறுத்தும் வலிமை உடைய எண் இந்த எண். இது மற்றவர்களை ஈர்க்கும் சக்தியை உடையதும் ஆகும்!
-----------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

66 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    அரியப்பல, நான் அறியாத் தகவல்கள் நன்றி அய்யா,
    எனது மகனின் பிறந்ததேதி 13th March 2001 (13+3+2001=10=1)
    மேலும் அவர் சிம்மலக்னமும் கூட, லக்னாதிபதி சூரியன்
    புத்திமான் புதனுடன் ஏழில் இருக்கிறார், நாளில் செவ்வாய் ஆட்சி,
    எட்டில் சுக்கிரன் உச்சம். கேள்வி?..... இவருக்கு ரூபி அணிந்தால் நல்ல பலன் தருமா?
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. என்னுடைய பிறப்பு எண் 10 (10-12-1983) ஆனால் பெயரின் கூட்டல் 35 =8 நான் என் பெயரை எவ்வாறு மாற்றுவது ?

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,

    நல்ல பதிவு. பிறந்த எண் 1 க்கு பெயர் எண் 1 வந்தால் நல்லது. ஒருவேளை அது முடியாத பட்சத்தில் வேறு எந்த பெயர் எண்கள் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். இதுபோல் எல்லா பிறந்த எண்களுக்கும் அதைத் தவிர வேறு எந்த பெயர் எண்கள் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லவும்.

    நன்றி
    தி. லெட்சுமணன்

    ReplyDelete
  4. You are doing a great job to humanity by spreading the knowledge you have gained, my heartly appreciations for that, currently Im reading your astrology lessons.

    Your lessons on Numerology is very easy and I have a doubt on this, I would appreciate if its clarified,

    1. Before concluding to wear a GEM, horosocope of that person needs to analyzed, am I right?

    2. What are the other factors that needs to be considered for concluding appropriate GEM for a person

    These questions may be too mature to ask this time, I believe answer for second question would need a post.


    Thank you

    KK

    ReplyDelete
  5. பெயரின் கூட்டுத்தொகை 1 அல்லது பெயரின் முதல் எழுத்து 1க்கு உரிய A,I,J,Q,Y ஆக இருந்தாலும் இந்த பலன் உண்டு என்று எண் கணித நூலில் படித்தேன். எந்த அள்வுக்கு இது சரியாக வரும் என்று தெரியவில்லை. அரசு, அரசியல், அரசாங்கம் இவற்றுகுரிய எண் என்பதில் மட்டும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.

    ReplyDelete
  6. எண் கணிதம் ஜாதகத்தில் காணப்படும் பலன்களுக்கு உட்பட்டது தான் எனவும் ஒருவனது
    ஜாதகத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாத நேரத்தில், தன் பிறந்த தேதியின்
    எண்ணை மையமாக வைத்துக்கொண்டும் பெயரை மாற்றி அமைப்பதில் உபயோகம் இருக்கிறதா
    என‌வும் தாங்க‌ள் விள‌க்க‌வேண்டும்.
    உதார‌ண‌மாக‌ சொல்ல‌ப்போனால், என‌து பிற‌ ந்த‌ தேதி ஜூன் 10 1942
    பெய‌ரும் ப‌ள்ளியில் சூரிய‌ நாராய‌ணன் இனிஷியல் எஸ். ( சிவ சுப்பிரமணியன் )
    எனது ஜாதகத்தில் லக்னத்தில் தான் (ரிஷபம்) சூரியன், புதன், சனி இருக்கிறார்கள். இருப்பினும்
    கால சக்ர தோஷம் ( ராகு 4 ல் கேது 10ல் , மற்ற எல்லா கிருஹங்களும் அதற்குள்ளே ) இருந்ததாலோ
    என்னவோ, தொழில் வாழ்க்கையில் வெற்றி அடையவில்லை என சொல்ல இயலாவிட்டாலும் ( எனது தொழில்
    நிறுவனத்தில் மேலிருந்து நாலாவது பதவி வரை சென்றேன் ) அவ்வப்பொழுது ஸ்பீடு ப்ரேக்கர்கள் உருவாகி
    எனது வளர்ச்சியை தடை போட்டிருக்கின்றன.

    நான் எனது பெயரை மாற்றி அமைத்துக்கொண்டிருந்தால், இந்த தோஷத்திலிருந்து விடுபட்டிருக்க இயலுமா என்ன ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா ,
    வணக்கம்.
    ***********************************
    /////kannan said...
    வாத்தியார் ஐயா!!!
    சிரசு தாழ்ந்த வணக்கம்.//////

    சிரசைத் தாழ்த்தி இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். சக மனிதனை அல்ல!
    எழுத்தறிவித்தவன் இறைவன் என்று பழைய பல்லவியைச் சொல்லாதீர்கள்:-)))
    Tuesday, March 02, 2010 11:20:00 AM
    ***********************************

    ஐயா!
    பனை மரத்து தனி பதநீர் (பனமரத்து கல்லு ) குடித்து வளர்த்தவனை, உடனடியாக நிறுத்த சொன்னாள் எந்த அளவுக்கு துன்பம் அடைவானோ! அந்த அளவுக்கு துன்பத்தை அடைந்து நிறுத்தியவன், தன்னையும் அறியாமல் ஒருநாள் இனிப்பு தன்மை உள்ள உடலின் ஆரோக்கியதிக்கு ஏற்ற சுண்ணாம்பு பதநீரை அருந்திவிட்டான்.
    இது தான் நடந்தது அன்று, இதையும் நிறுத்தி விடுகின்றேன் (சுண்ணாம்பு பதநீரை அருந்துவதையும்) எனது அன்புக்குரிய

    வாத்தியார் ஐயா விற்காக!

    ReplyDelete
  8. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு

    எண்ஜோதிடத்தில் ஒன்றாம் எண்ணுக்கான விளக்கம் உதாரணம் நன்றாக உள்ளது. மற்றும் நவக்கிரக ஸ்தலங்களில், ஒன்றாம் எண்ணுக்குரிய கோனார்க் படம் அருமை. நன்றி! வணக்கம்.

    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-03

    ReplyDelete
  9. அய்யா இனிய காலை வணக்கம்,,,,

    ஒன்றாம் எண் பற்றிய விளக்கம் அருமை ,,,,இந்த ராசி கல் அணிவதை பற்றிய ஒரு விளக்கம் தேவை?அதாவது ராசி கல் அணிவது நியுமராலஜி அடிப்படையில் அணிவதா அல்லது நம் பிறப்பு ஜாதக ப்டி அணிவது ....மேற்கண்ட இரண்டு முறையில் எதை பின்பற்றலாம் ....
    நன்றி வணக்கம் ....

    ReplyDelete
  10. Vanakam sir,
    Enaku romba pidicha numbers 1, 5 & 9. Ennudya amma feb 10 and neenga sonna qualities ellam avaku iruku..enaku romba jealous varum...the reason i like number one becoz they r clear abt wat they want in life, they don't change their mind, and most of all they are straightforward.....

    Thanks
    thanuja

    ReplyDelete
  11. Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அரியப்பல, நான் அறியாத் தகவல்கள் நன்றி அய்யா,
    எனது மகனின் பிறந்ததேதி 13th March 2001 (13+3+2001=10=1)
    மேலும் அவர் சிம்மலக்னமும் கூட, லக்னாதிபதி சூரியன்
    புத்திமான் புதனுடன் ஏழில் இருக்கிறார், நாளில் செவ்வாய் ஆட்சி, எட்டில் சுக்கிரன் உச்சம். கேள்வி?..... இவருக்கு ரூபி அணிந்தால் நல்ல பலன் தருமா?
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.///

    ஒன்பது வயதுச் சிறுவனுக்கு இதெல்லாம் வேண்டாம்! உரிய வயது வந்த பிறகு (18 வயதிற்கு மேல்) இதையெல்லாம் போட்டு அழகு பாருங்கள்!

    ReplyDelete
  12. ngs said...
    என்னுடைய பிறப்பு எண் 10 (10-12-1983) ஆனால் பெயரின் கூட்டல் 35 =8 நான் என் பெயரை எவ்வாறு
    மாற்றுவது ?

    உங்கள் இன்ஷியலுடன் பெயரைச் சொல்லுங்கள்

    ReplyDelete
  13. /////Lakshmanan said...
    வணக்கம் ஐயா,
    நல்ல பதிவு. பிறந்த எண் 1 க்கு பெயர் எண் 1 வந்தால் நல்லது. ஒருவேளை அது முடியாத பட்சத்தில் வேறு எந்த பெயர் எண்கள் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். இதுபோல் எல்லா பிறந்த எண்களுக்கும் அதைத் தவிர வேறு எந்த பெயர் எண்கள் அதற்குப் பொருத்தமாக இருக்கும்
    என்று சொல்லவும்.
    நன்றி
    தி. லெட்சுமணன்/////

    ஒன்றிற்கு உரிய நட்பு எண் 2. இதுபோல மற்ற எண்களுக்கும் தருகிறேன்!

    ReplyDelete
  14. /////KK said...
    You are doing a great job to humanity by spreading the knowledge you have gained, my heartly
    appreciations for that, currently Im reading your astrology lessons.
    Your lessons on Numerology is very easy and I have a doubt on this, I would appreciate if its clarified, 1. Before concluding to wear a GEM, horoscope of that person needs to analysed, am I right?
    2. What are the other factors that needs to be considered for concluding appropriate GEM for a person
    These questions may be too mature to ask this time, I believe answer for second question would need a post.
    Thank you
    KK//////

    நவரத்தினங்களை விற்கும் கடைகளில் உங்களுக்கு முழு உதவி கிடைக்கும். வாங்கி 15 தினங்கள் வைத்துப் பார்த்த பிறகு அணிவது உத்தமம்.

    ReplyDelete
  15. /////ananth said...
    பெயரின் கூட்டுத்தொகை 1 அல்லது பெயரின் முதல் எழுத்து 1க்கு உரிய A,I,J,Q,Y ஆக இருந்தாலும் இந்தபலன் உண்டு என்று எண் கணித நூலில் படித்தேன். எந்த அள்வுக்கு இது சரியாக வரும் என்று தெரியவில்லை. அரசு, அரசியல், அரசாங்கம் இவற்றுகுரிய எண் என்பதில் மட்டும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.
    இருக்கலாம்! ஜாதகத்தில் நட்சத்திரங்களுக்கு உரிய நாம எழுத்துக்கள் இருப்பதைப்போல!

    ReplyDelete
  16. /////sury said...
    எண் கணிதம் ஜாதகத்தில் காணப்படும் பலன்களுக்கு உட்பட்டது தான் எனவும் ஒருவனது
    ஜாதகத்தில் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாத நேரத்தில், தன் பிறந்த தேதியின்
    எண்ணை மையமாக வைத்துக்கொண்டும் பெயரை மாற்றி அமைப்பதில் உபயோகம் இருக்கிறதா
    என‌வும் தாங்க‌ள் விள‌க்க‌வேண்டும். உதார‌ண‌மாக‌ சொல்ல‌ப்போனால், என‌து பிற‌ ந்த‌ தேதி ஜூன் 10 1942
    பெய‌ரும் ப‌ள்ளியில் சூரிய‌ நாராய‌ணன் இனிஷியல் எஸ். ( சிவ சுப்பிரமணியன் )
    எனது ஜாதகத்தில் லக்னத்தில் தான் (ரிஷபம்) சூரியன், புதன், சனி இருக்கிறார்கள். இருப்பினும்
    கால சக்ர தோஷம் ( ராகு 4 ல் கேது 10ல் , மற்ற எல்லா கிருஹங்களும் அதற்குள்ளே ) இருந்ததாலோ
    என்னவோ, தொழில் வாழ்க்கையில் வெற்றி அடையவில்லை என சொல்ல இயலாவிட்டாலும் ( எனது
    தொழில் நிறுவனத்தில் மேலிருந்து நாலாவது பதவி வரை சென்றேன் ) அவ்வப்பொழுது ஸ்பீடு ப்ரேக்கர்கள்
    உருவாகி எனது வளர்ச்சியை தடை போட்டிருக்கின்றன.
    நான் எனது பெயரை மாற்றி அமைத்துக்கொண்டிருந்தால், இந்த தோஷத்திலிருந்து விடுபட்டிருக்க இயலுமா என்ன ? சுப்பு ரத்தினம்./////

    ஜாதகம்தான் முக்கியமானது. கல் அணிந்தாலும், அணியாவிட்டாலும், ஜாதகப்படி உள்ள நன்மைகள், தீமைகள் அவ்வப்போது கிடைத்துக்கொண்டே இருக்கும். கல் ஜாதகத்தையே மாற்றும் என்றால், உலகில் உள்ள கற்களை எல்லாம் இருக்கும் கோடீஸ்வரர்கள் வளைத்துப் பிடித்து வைத்துக் (போட்டுக்) கொண்டிருப்பார்கள்.
    சரி, கல் என்ன செய்யும்? வரும் நன்மைகளை அதிகப்படுத்திக் கொடுக்கும். அலையாமல், தவிக்காமல் நம்மை அவைகள் தேடிவரும்படி செய்யும்! அவ்வளவுதான். The stone will enhance the benefit to certain extend!

    ReplyDelete
  17. /////kannan said...
    வாத்தியார் ஐயா ,
    வணக்கம். ***********************************
    /////kannan said...
    வாத்தியார் ஐயா!!!
    சிரசு தாழ்ந்த வணக்கம்.//////
    சிரசைத் தாழ்த்தி இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். சக மனிதனை அல்ல!
    எழுத்தறிவித்தவன் இறைவன் என்று பழைய பல்லவியைச் சொல்லாதீர்கள்:-)))
    Tuesday, March 02, 2010 11:20:00 AM ***********************************
    ஐயா!
    பனை மரத்து தனி பதநீர் (பனமரத்து கல்லு ) குடித்து வளர்த்தவனை, உடனடியாக நிறுத்த சொன்னால்
    எந்த அளவுக்கு துன்பம் அடைவானோ! அந்த அளவுக்கு துன்பத்தை அடைந்து நிறுத்தியவன், தன்னையும் அறியாமல் ஒருநாள் இனிப்பு தன்மை உள்ள உடலின் ஆரோக்கியதிக்கு ஏற்ற சுண்ணாம்பு பதநீரை அருந்திவிட்டான்.
    இது தான் நடந்தது அன்று, இதையும் நிறுத்தி விடுகின்றேன் (சுண்ணாம்பு பதநீரை அருந்துவதையும்) எனது
    அன்புக்குரிய வாத்தியார் ஐயா விற்காக!/////

    நல்லது நன்றி நண்பரே!
    - வாத்தியார்!

    ReplyDelete
  18. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
    எண்ஜோதிடத்தில் ஒன்றாம் எண்ணுக்கான விளக்கம் உதாரணம் நன்றாக உள்ளது. மற்றும் நவக்கிரக
    ஸ்தலங்களில், ஒன்றாம் எண்ணுக்குரிய கோனார்க் படம் அருமை. நன்றி! வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  19. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,,,,
    ஒன்றாம் எண் பற்றிய விளக்கம் அருமை ,,,,இந்த ராசி கல் அணிவதை பற்றிய ஒரு விளக்கம்
    தேவை?அதாவது ராசி கல் அணிவது நியுமராலஜி அடிப்படையில் அணிவதா அல்லது நம் பிறப்பு ஜாதகப்டி அணிவது ....மேற்கண்ட இரண்டு முறையில் எதை பின்பற்றலாம் ....
    நன்றி வணக்கம் ....////////

    ஜாதகத்தைவைத்து கல் அணிவதே சாலச் சிறந்தது!

    ReplyDelete
  20. ////Thanuja said...
    Vanakam sir,
    Enaku romba pidicha numbers 1, 5 & 9. Ennudya amma feb 10 and neenga sonna qualities ellam avaku iruku..enaku romba jealous varum...the reason i like number one becoz they r clear abt wat they want in life, they don't change their mind, and most of all they are straightforward.....
    Thanks
    thanuja////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. I have a doubt. When you say a person has to change his name as per numerology to avoid a bad effect, then will it not create a conflict to astrology. Any person who suppose to get good or bad effects as per his planet positions can not escape by changing the name is what my understanding. As per one of the famous Rajni's dialogue "Kitaika vendiyathu kitaikamal pogathu, Kitaikathatu, kitaikave ketaikathu" Is it correct?

    ReplyDelete
  22. பாடம் அருமை ஆசானே.
    ஓரு சந்தேகம்.
    பிறந்ததேதி 05-12-2007=26=8 (5&8) கும்ப லக்னம்,7ல் சனி, name=RAHUL.B 2+1+5+6+3=17=8+2=10=1
    8ல் நம்பரில் வரும் ராகுல் என்ற பெயரில் எதேனும் மாற்றம் தேவையா ? sometime back there was suggestion to change as RAAHUL.

    வகுப்பறையில் நாளுக்கு நாள் அறியாத் தகவல்கள் பயிலுவதில் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

    ReplyDelete
  23. /////saran said...
    I have a doubt. When you say a person has to change his name as per numerology to avoid a bad effect, then will it not create a conflict to astrology. Any person who suppose to get good or bad effects as per his planet positions can not escape by changing the name is what my understanding. As per one of the famous Rajni's dialogue "Kitaika vendiyathu kitaikamal pogathu, Kitaikathatu, kitaikave ketaikathu" Is it correct?

    100% கரெக்ட்! பெயர் மாற்றம் தலை எழுத்தை மாற்றுமா என்ன? மாற்றாது. ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும்.
    பெயரில் எழுத்து மாற்றம் என்பது வெய்யிலில் அல்லது மழையில் செல்பவன் குடை பிடித்துக்கொண்டு போவதைப் போன்றது. குடையின் வேலையை மட்டுமே அவைகள் செய்யும்.

    ReplyDelete
  24. /////சிங்கைசூரி said...
    பாடம் அருமை ஆசானே.
    ஓரு சந்தேகம்.
    பிறந்ததேதி 05-12-2007=26=8 (5&8) கும்ப லக்னம்,7ல் சனி, name=RAHUL.B 2+1+5+6+3=17=8+2=10=1
    8ல் நம்பரில் வரும் ராகுல் என்ற பெயரில் எதேனும் மாற்றம் தேவையா ? sometime back there was suggestion to change as RAAHUL.
    வகுப்பறையில் நாளுக்கு நாள் அறியாத் தகவல்கள் பயிலுவதில் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி./////

    பிறப்பு எண் 5. அதுதான் லக்கி எண்ணும்கூட. அதன்படி முடியுமென்றால் மாற்றம் செய்யுங்கள். இல்லையெனில்
    அப்படியே விட்டுவிடுங்கள்.

    ReplyDelete
  25. /////Jeevanantham said...
    Dear sir,
    I born on 28.
    My number is one./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  26. me the number 1 அப்படின்னு சந்தோஷப்பட்டுக்கறேன். பிறந்த தேதி 10. :)) தகவல்களுக்கு நன்றி.

    மேலதிகத் தகவலாக எல்லா ஜாதிக் கற்களும் இலங்கையில் பிரசித்தம். ரத்னபுர எனும் ஊரில் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  27. வணக்கம் ஆசிரியரே!!!

    என் பிறந்த தேதி 23-1-1978.கூட்டு எண் 31 = 4. தனுசு லக்னம், லக்னாதிபதி குரு 7ல். 7,10 க்குடைய புதன் லக்னத்தில். 9 க்குடைய சூரியன் 2ல்(சனி வீட்டில்)சுக்கிரனுடன். எனவே பொருள் நாசம். நான் ஏற்கனவே மஞ்சள் புஸ்பராகம் அணிந்துள்ளேன்.புதன் திசை புதன் புத்தி நடக்கிறது. 9க்குடைய சூரியனை பலப்படுத்த சிவப்பு மாணிக்கம் அணியலாமா?

    ReplyDelete
  28. Dear sir,
    Good start for numerology lesson sir.
    I sincerely welcome your class on numerology.
    Maintain the momentum.
    Thanks

    ReplyDelete
  29. /////புதுகைத் தென்றல் said...
    me the number 1 அப்படின்னு சந்தோஷப்பட்டுக்கறேன். பிறந்த தேதி 10. :)) தகவல்களுக்கு நன்றி.
    மேலதிகத் தகவலாக எல்லா ஜாதிக் கற்களும் இலங்கையில் பிரசித்தம். ரத்னபுர எனும் ஊரில் பார்த்திருக்கிறேன்.////

    வாங்கிவந்து ஸ்டாக் வைத்திருக்கிறீர்களா?:-))))

    ReplyDelete
  30. ////Arul said...
    வணக்கம் ஆசிரியரே!!!
    என் பிறந்த தேதி 23-1-1978.கூட்டு எண் 31 = 4. தனுசு லக்னம், லக்னாதிபதி குரு 7ல். 7,10 க்குடைய புதன் லக்னத்தில். 9 க்குடைய சூரியன் 2ல்(சனி வீட்டில்)சுக்கிரனுடன். எனவே பொருள் நாசம். நான் ஏற்கனவே மஞ்சள் புஸ்பராகம் அணிந்துள்ளேன்.புதன் திசை புதன் புத்தி நடக்கிறது. 9க்குடைய சூரியனை பலப்படுத்த சிவப்பு மாணிக்கம் அணியலாமா?///////

    அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். காய்ச்சல் அடிக்கும்போது பேதி மருந்து சாப்பிட்ட கதையாகிவிடும்! புதன் தசை நடக்கும்போது புஷ்பராகம் எதற்கு? அதையும் கழற்றி வைத்துவிடுங்கள். அனுதினமும் பழநியப்பனை (மனதிற்குள்) வணங்குங்கள். அதுபோதும்.

    ReplyDelete
  31. வாங்கிவந்து ஸ்டாக் வைத்திருக்கிறீர்களா?//

    ஆஹா உங்க வாய் முகூர்த்தம் நடந்தாலும் நடக்கட்டுமே.

    ReplyDelete
  32. /////dhilse said...
    Dear sir,
    Good start for numerology lesson sir. I sincerely welcome your class on numerology.
    Maintain the momentum.
    Thanks//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  33. ////புதுகைத் தென்றல் said...
    வாங்கிவந்து ஸ்டாக் வைத்திருக்கிறீர்களா?//
    ஆஹா உங்க வாய் முகூர்த்தம் நடந்தாலும் நடக்கட்டுமே.//////

    உங்களின் ஒன்றாம் எண்ணிற்கு ஒரு நல்ல இளஞ்சிவப்புக் கல்லை வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே? சான்ஸை மிஸ் பண்ணிவிட்டீர்களே!

    ReplyDelete
  34. வணக்கம் ஐயா

    எனக்கு மிகவும் பிடித்த subject numerology. ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களை
    பற்றி புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.ஏன் என்றால் நானும் ஒன்றாம் எண்ணில்
    பிறந்தவந்தான்.சிங்கமே அதிகம் பலம் வாய்ந்தது.அது போல தான் ஒன்றாம் என்
    காரர்களும்.நல்ல அறிவுதிரனை பெற்றிருப்பவர்கள் .எதிலும் தனித்தன்மை
    பெற்று விளங்குபாவர்கள். சூரிய தேஜஸ் இவர்களின் முகத்தில் தெரியும்.
    அதை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கி விடுகிறார்கள்.அதிகம்
    கடன் வாங்கி கடனாழிக்கு பயந்து வீட்டில் இருந்து கொண்டே இல்லை
    என்று என்று காட்டி கொள்ளும் நிலமை இவர்களுக்கு ஏற்படுகிறது .
    அதனால் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிகம் கடன் வாங்க கூடாது.
    ஒன்று என்றால் அரசாங்கம் என்று பொருள். அரசாங்கத்தில் தலைமை பதவியில்
    அதிகம் இருப்பவர்கள் இவர்கள்தான்.

    அனைத்து
    எங்களுக்கும் தனி சிறப்பு உண்டு ஒன்றில் இருந்து ஒன்பது என் வரை
    சாதனை செய்தவர்கள் அனைத்து எங்களிலும் இருக்கிறார்கள்.
    அனைத்து என்னும் சமம்.அதன் தனி சிறப்புகளை அறிய காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  35. Dear Sir,

    Thanks for your lesson, would like to know more about No 7 and 9, i beleive it is spiritual number.

    Thanks

    Pandian

    ReplyDelete
  36. ////sundar said...
    வணக்கம் ஐயா
    எனக்கு மிகவும் பிடித்த subject numerology. ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களை
    பற்றி புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.ஏன் என்றால் நானும் ஒன்றாம் எண்ணில்
    பிறந்தவந்தான்.சிங்கமே அதிகம் பலம் வாய்ந்தது.அது போல தான் ஒன்றாம் என்
    காரர்களும்.நல்ல அறிவுதிரனை பெற்றிருப்பவர்கள் .எதிலும் தனித்தன்மை
    பெற்று விளங்குபாவர்கள். சூரிய தேஜஸ் இவர்களின் முகத்தில் தெரியும்.
    அதை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கி விடுகிறார்கள்.அதிகம்
    கடன் வாங்கி கடனாழிக்கு பயந்து வீட்டில் இருந்து கொண்டே இல்லை
    என்று என்று காட்டி கொள்ளும் நிலமை இவர்களுக்கு ஏற்படுகிறது .
    அதனால் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிகம் கடன் வாங்க கூடாது.
    ஒன்று என்றால் அரசாங்கம் என்று பொருள். அரசாங்கத்தில் தலைமை பதவியில்
    அதிகம் இருப்பவர்கள் இவர்கள்தான்.
    அனைத்து
    எங்களுக்கும் தனி சிறப்பு உண்டு ஒன்றில் இருந்து ஒன்பது என் வரை
    சாதனை செய்தவர்கள் அனைத்து எங்களிலும் இருக்கிறார்கள்.
    அனைத்து என்னும் சமம்.அதன் தனி சிறப்புகளை அறிய காத்திருக்கிறோம்../////

    நல்லது நன்றி, ஒவ்வொன்றாக அனைத்தும் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  37. Loga said...
    Dear Sir,
    Thanks for your lesson, would like to know more about No 7 and 9, i beleive it is spiritual number.
    Thanks
    Pandian

    நல்லது நன்றி, ஒவ்வொன்றாக அனைத்து எண்களுக்கும் உரிய பாடங்கள் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!

    ReplyDelete
  38. ஐயா வணக்கம்

    நியுமரலாஜி பற்றிய விளக்கம் அருமை. என்னுடைய பிறந்த தேதி 28.09.1960 தேதி எண் 1, மொத்த கூட்டு எண் 8.
    என்னுடைய பெயர் எண் 6. இந்த ஆறாம் என்னை என்னுடைய சிறு வயதிலேயே மாற்றிக்கொண்டேன். இந்த எண் மிகச்சிறந்த எண் என்று சொன்னார்கள். இருந்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் உள்ளது. ஜாதகத்தில் சூரியன் கன்னியில் (லக்கினத்தில்) . suggest me a solution.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. //////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    நியுமரலாஜி பற்றிய விளக்கம் அருமை. என்னுடைய பிறந்த தேதி 28.09.1960 தேதி எண் 1, மொத்த கூட்டு எண் 8. என்னுடைய பெயர் எண் 6. இந்த ஆறாம் என்னை என்னுடைய சிறு வயதிலேயே மாற்றிக்கொண்டேன். இந்த எண் மிகச்சிறந்த எண் என்று சொன்னார்கள். இருந்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் உள்ளது. ஜாதகத்தில் சூரியன் கன்னியில் (லக்கினத்தில்) . suggest me a solution.
    நன்றி
    வாழ்த்துக்கள்//////

    T K Arumugam 4 +2 +1 +2 +6 +4 +6 +3 + 1 + 4 = 33 = 6
    இன்னொரு எம் சேர்த்து T K Arumugamm என்று எழுதுங்கள். கூட்டல் எழுத்து 33 + 4 = 37 = 10 = 1 என்று பெயர் உங்கள் பிறந்த எண்ணுடன் (Birth & Lucky Number) இசைந்துவிடும்

    ReplyDelete
  40. கொஞ்ச நாட்களாக 'டல்'லாக இருந்த பின்னூட்டம் களை கட்டிவிட்டது அய்யா!வாசகர்களின் நாடி பிடித்துப் பார்பதில் நீங்கள் பெரிய 'கேமன்' தான்.
    பின்னூட்ட‌த்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டார்க‌ள் என்னை!எவ்வ‌ள‌வு ஆர்வ‌ம் பாருங்க‌ள்.விய‌க்க‌ வைக்கிற‌து.

    ReplyDelete
  41. A.Gunasekaran என்னுடைய certificate லும் இப்படித்தான் இருக்கிறது.மாற்றியவுடன் என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  42. sir my birth date is 15/02/1979.
    birthno:=6.and destinyno:7.
    BY name no is 3.I change my name for the no 6.this is a good no.BUT LAKNAM IS RISHABAm,Sukran in 8th place(suyavarka is 7) in navamasam sukaran neecham.
    I get a benifit for change my name to 6?

    ReplyDelete
  43. //////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    நியுமரலாஜி பற்றிய விளக்கம் அருமை. என்னுடைய பிறந்த தேதி 28.09.1960 தேதி எண் 1, மொத்த கூட்டு எண் 8. என்னுடைய பெயர் எண் 6. இந்த ஆறாம் என்னை என்னுடைய சிறு வயதிலேயே மாற்றிக்கொண்டேன். இந்த எண் மிகச்சிறந்த எண் என்று சொன்னார்கள். இருந்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் உள்ளது. ஜாதகத்தில் சூரியன் கன்னியில் (லக்கினத்தில்) . suggest me a solution.
    நன்றி
    வாழ்த்துக்கள்//////

    T K Arumugam 4 +2 +1 +2 +6 +4 +6 +3 + 1 + 4 = 33 = 6
    இன்னொரு எம் சேர்த்து T K Arumugamm என்று எழுதுங்கள். கூட்டல் எழுத்து 33 + 4 = 37 = 10 = 1 என்று பெயர் உங்கள் பிறந்த எண்ணுடன் (Birth & Lucky Number) இசைந்துவிடும்

    Wednesday, March 03, 2010 12:46:00 PM


    நன்றி நன்றி நன்றி

    மாற்றிவிடுகிறேன்

    மீண்டும் ஒருமுறை நன்றி

    ReplyDelete
  44. சான்ஸை மிஸ் பண்ணிவிட்டீர்களே!//

    ஆண்டவன் புண்ணியத்துல் கதிர்காமனை தரிசிக்க இன்னொரு பயணம் இருக்கு. அப்ப வாங்கிடறேன். :))

    ReplyDelete
  45. வாத்தியார் numerology படி பெயரை சிறிது மாற்றிக் கொண்டு விட்டார் அல்லது அரிதாரம் பூசிக் கொண்டு விட்டார். இது வாத்தியாரையும் விட்டு வைக்கவில்லை போலும். நல்லதிற்கான மாற்றம் என்பது தேவையானதுதான். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் மாறக் கூடியதே.

    இன்னொன்றும் மாறாதாம். இந்த கவிதையைப் படியுங்கள். தோற்றங்கள் மாறிப் போகும். தோல் நிறம் மாறிப் போகும். மாற்றங்கள் வந்து மீண்டும் மறுபடியும் மாறிப் போகும். ஆற்றிலே வெள்ளம் வந்தால் அடையாளம் மாறிப் போகும். ஆனால் போற்றி காதல் மட்டும் புயலிலும் மாறாது.

    ReplyDelete
  46. ////kmr.krishnan said...
    கொஞ்ச நாட்களாக 'டல்'லாக இருந்த பின்னூட்டம் களை கட்டிவிட்டது அய்யா!வாசகர்களின் நாடி பிடித்துப் பார்பதில் நீங்கள் பெரிய 'கேமன்' தான்.
    பின்னூட்ட‌த்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டார்க‌ள் என்னை!எவ்வ‌ள‌வு ஆர்வ‌ம் பாருங்க‌ள்.விய‌க்க‌ வைக்கிற‌து./////

    பின்னூட்டத்தின் எண்ணிக்கைபற்றி நான் கவலை கொள்வதில்லை! வாசகர்களின் எண்ணிக்கை பற்றியும் கவலை கொள்வதில்லை! எழுதுவது மட்டுமே என் கையில். மற்றதெல்லாம் உங்கள் (வாசகர்கள்/மாணவர்கள்) கையில். அந்த மனப்பாங்குதான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது!

    ReplyDelete
  47. //////Guna said...
    A.Gunasekaran என்னுடைய certificate லும் இப்படித்தான் இருக்கிறது.மாற்றியவுடன் என்ன செய்ய வேண்டும்?/////

    எழுத்துக்களில் மட்டும் மாற்றம் என்றால், அதை மட்டும் செயல்படுத்துங்கள். தினமும் பத்துமுறைகள் எழுதி அதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். வங்கிக் கணக்குகள் போன்றவற்றிற்குக் கடிதம் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  48. /////Babu said...
    sir my birth date is 15/02/1979.
    birthno:=6.and destinyno:7.
    BY name no is 3.I change my name for the no 6.this is a good no.BUT LAKNAM IS RISHABAm,Sukran in 8th place(suyavarka is 7) in navamasam sukaran neecham.
    I get a benifit for change my name to 6?/////

    பிறந்த எண்ணிற்கு மாற்றியது நல்லதே! ஜாதகத்தை ஒத்துப்பார்த்துக் குழம்ப வேண்டாம்!

    ReplyDelete
  49. அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், எண் 1 ஐ பற்றிய பாடம் சிறப்பாக இருந்தது
    நான் 21 தேதி இரவு 12.12 பிறந்தேன், நான் எந்த தேதியை கணக்கில் சேர்த்துகொள்வது?
    தாங்கள் தயவு செய்து விளக்கவும்
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  50. /////T K Arumugam said...
    //////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    நியுமரலாஜி பற்றிய விளக்கம் அருமை. என்னுடைய பிறந்த தேதி 28.09.1960 தேதி எண் 1, மொத்த கூட்டு எண் 8. என்னுடைய பெயர் எண் 6. இந்த ஆறாம் என்னை என்னுடைய சிறு வயதிலேயே மாற்றிக்கொண்டேன். இந்த எண் மிகச்சிறந்த எண் என்று சொன்னார்கள். இருந்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் உள்ளது. ஜாதகத்தில் சூரியன் கன்னியில் (லக்கினத்தில்) . suggest me a solution.
    நன்றி
    வாழ்த்துக்கள்//////
    T K Arumugam 4 +2 +1 +2 +6 +4 +6 +3 + 1 + 4 = 33 = 6
    இன்னொரு எம் சேர்த்து T K Arumugamm என்று எழுதுங்கள். கூட்டல் எழுத்து 33 + 4 = 37 = 10 = 1 என்று பெயர் உங்கள் பிறந்த எண்ணுடன் (Birth & Lucky Number) இசைந்துவிடும்
    நன்றி நன்றி நன்றி
    மாற்றிவிடுகிறேன்
    மீண்டும் ஒருமுறை நன்றி//////

    மாற்றிய பெயரைத் தினமும் 10 மூறைகள் எழுதிப் பழக்கத்திற்குக் கொண்டு வாருங்கள்! அது முக்கியம்!

    ReplyDelete
  51. /////புதுகைத் தென்றல் said...
    சான்ஸை மிஸ் பண்ணிவிட்டீர்களே!//
    ஆண்டவன் புண்ணியத்துல் கதிர்காமனை தரிசிக்க இன்னொரு பயணம் இருக்கு. அப்ப வாங்கிடறேன். :))/////

    வாழ்த்துக்கள். கதிர்காமன் அருளால் பயணம் சீக்கிரமே அமையட்டும்!

    ReplyDelete
  52. /////ananth said...
    வாத்தியார் numerology படி பெயரை சிறிது மாற்றிக் கொண்டு விட்டார் அல்லது அரிதாரம் பூசிக் கொண்டு விட்டார். இது வாத்தியாரையும் விட்டு வைக்கவில்லை போலும். நல்லதிற்கான மாற்றம் என்பது தேவையானதுதான். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் மாறக் கூடியதே.
    இன்னொன்றும் மாறாதாம். இந்த கவிதையைப் படியுங்கள். தோற்றங்கள் மாறிப் போகும். தோல் நிறம் மாறிப் போகும். மாற்றங்கள் வந்து மீண்டும் மறுபடியும் மாறிப் போகும். ஆற்றிலே வெள்ளம் வந்தால் அடையாளம் மாறிப் போகும். ஆனால் போற்றி காதல் மட்டும் புயலிலும் மாறாது./////

    நான் முன்னரே எழுதிக்கொண்டிருக்கிறேன். பதிவில் இப்போதுதான் மாற்றினேன். நானும் வழிகாட்டியாக இருக்க வேண்டாமா நண்பரே?!

    ReplyDelete
  53. ////ஜீவா said...
    அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், எண் 1 ஐ பற்றிய பாடம் சிறப்பாக இருந்தது
    நான் 21 தேதி இரவு 12.12 பிறந்தேன், நான் எந்த தேதியை கணக்கில் சேர்த்துகொள்வது?
    தாங்கள் தயவு செய்து விளக்கவும்
    அன்புடன் ஜீவா/////

    இரவு 12:00 மணிக்குப் பிறகு நேரமும் மாறிவிடும் தேதியும் மாறிவிடும்.
    நேரம் 00.12 தேதி 22
    உங்களுடைய பிறந்த தேதி 22
    விளக்கம் போதுமா?

    ReplyDelete
  54. respected teacher,

    you have given numerical values for each alphabet,eg. a=1 ,b =2..etc. ok
    but in many websites they follow different numbers for alphabets from a-z .

    for example : name rajesh = 17 in your calculation & it is 7 by other websites ..

    http://www.paulsadowski.com/Numbers.asp

    http://www.babynamefacts.com/numerology.php

    http://www.white2000.com/number/number.htm

    ReplyDelete
  55. also my date count no is 1, and total dob count no is also 1 .

    k.ananthaprasath thats the name which is currenlty i use. but all the certificates hold

    k.anantha prasad

    what spelling would suit for me . Also for all the followers here. instead of calculating on your own . EVeryone can use this below website for calculation .
    IT calculates according to mr.v.subbiah sirs method.

    http://www.indiaparenting.com/funtime/naminggame/index.shtml

    ReplyDelete
  56. சிவாஜி கணேசன் அவர்கள் 1ஆம் தேதியில் பிறந்தவராக இருந்தும் அரசியலில் முயன்றும் பிரகாசிக்க முடியாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும் அய்யா?

    ReplyDelete
  57. ////ms torrent said...
    respected teacher,
    you have given numerical values for each alphabet,eg. a=1 ,b =2..etc. ok
    but in many websites they follow different numbers for alphabets from a-z .
    for example : name rajesh = 17 in your calculation & it is 7 by other websites ..
    http://www.paulsadowski.com/Numbers.asp
    http://www.babynamefacts.com/numerology.php
    http://www.white2000.com/number/number.htm/////

    I have furnished the numbers for alphabets as given by Mr.Cheiro, the authority of numerology
    You can follow it without any doubt!

    ReplyDelete
  58. ///ms torrent said...
    also my date count no is 1, and total dob count no is also 1 .
    k.ananthaprasath thats the name which is currenlty i use. but all the certificates hold
    k.anantha prasad
    what spelling would suit for me . Also for all the followers here. instead of calculating on your own . EVeryone can use this below website for calculation .
    IT calculates according to mr.v.subbiah sirs method.
    http://www.indiaparenting.com/funtime/naminggame/index.shtml///

    Try this change: k.aanantha prasaad = 45
    Thanks for the information!

    ReplyDelete
  59. /////minorwall said...
    சிவாஜி கணேசன் அவர்கள் 1ஆம் தேதியில் பிறந்தவராக இருந்தும் அரசியலில் முயன்றும் பிரகாசிக்க முடியாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும் அய்யா?/////

    அவருடைய சுயஜாதகம் காரணமாக இருக்கும் மைனர்! அவருடைய ஜாதகத்தை எங்காவது தேடிப்பிடித்துக்கொடுங்கள் மைனர்!

    ReplyDelete
  60. can i use k.anand prasad . because its total is 37 = 1 .

    k.anand prasad = 37 =1
    or
    k.aananthaprasaad = 45 = 9

    which one would be better ?

    ReplyDelete
  61. ////ms torrent said...
    can i use k.anand prasad . because its total is 37 = 1 .
    k.anand prasad = 37 =1
    or
    k.aananthaprasaad = 45 = 9
    which one would be better ?

    First one is better, since your date count no is 1, and total dob count no is also 1 .

    ReplyDelete
  62. /////Blogger ms torrent said...
    thank u .for ur suggestion sir./////

    நல்லது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  63. Hi Sir
    In your previous post you said, only the total of birth date will be used (1, 28 ,10 ) but in this post you are saying it is total of full Date of birth (1/12/2000). So please tell which way we should calculate the number (only birth date or full DOB)

    ReplyDelete
  64. ////Ramu said...
    Hi Sir
    In your previous post you said, only the total of birth date will be used (1, 28 ,10 ) but in this post you are saying it is total of full Date of birth (1/12/2000). So please tell which way we should calculate the number (only birth date or full DOB)////////

    For knowing the lucky number, only the date of birth has to be taken!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com