மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.2.10

சோதிப்பவருக்கே ஒரு சோதனை!



நீலக்கல் The Blue Sapphire

+++++++++++++++++++++++++++++++++++++++++++
சோதிப்பவருக்கே ஒரு சோதனை!

நவரத்தினங்களில் சனிக்கான கல் நீலக்கல் The Blue Sapphire

நவரத்தினங்களில் அதிக வலுவானதும், அணிந்தவுடன் வெகு
தீவிரமாகத் தன் குணத்தைக் காட்டுவதும் இந்தக்கல்தான்!
இதற்கு செளரிரத்னா, ஷனிப்பிரியா, யாகுட் (persian name)
என்று பல பெயர்கள் உண்டு.

இந்த நீலக்கல், காஷ்மீர், ரஷ்யா, அமெரிக்கா என்று சில
குறிப்பிட்ட நாடுகளில்தான் கிடைக்கிறது என்றாலும்,
இலங்கையில் கிடைக்கும் நீலக் கல்லிற்குத்தான் மதிப்பு
அதிகம். அதை ஜாதி நீலக்கல் என்பார்கள். மயூர் நீலம்
என்று பெயர். ஆண் மயிலின் கழுத்து நிறத்தில் அக்கற்கள்
இருக்கும்.

இந்திர நீலம்: கரு நீலக்கலரில் இருக்கும்
ஜலநீல்: கரு நீலக்கலரில் இருக்கும் அத்துடன் நடுவில் சற்று
வெளிச்சமாக இருக்கும்

விளைவுகள்: அணிந்தவுடன், அதிரடியாகப் பலனைத் தரக்கூடிய
கல் நீலக்கல்லாகும். 3 மணி நேரம் அல்லது 3 நாட்களில் பலன்
தெரியும். சிலருக்கு ஒருவாரத்திற்குள் பலன் தெரியும்.
பொருத்தமானது என்றால், பணவரவுகள் உண்டாகும்.
பிரச்சினைகள் முடிவிற்கு வரும். தீர்வாகும். பொருத்தமில்லை
என்றால் கீழே விழுந்து அடிபட நேரிடும், விபத்துக்கள் உண்டாகும்,
பண விரையம் ஏற்படும், மற்றவர்களுடன் வாக்குவாதம்
ஏற்பட்டு சிக்கல்கள் உண்டாகும்.

(எல்லாம் இந்த பரிசோதனைக் காலத்திலேயே நடைபெறும்).
ஆகவே தொடர்ந்து அணியலாமா? அல்லது கூடாதா? என்று
நடக்கும் நிகழ்ச்சிகளைவைத்து நாம்தான் ஒரு முடிவிற்கு வரவேண்டும்.

ஆதாயங்கள்; கல் பொருத்தமாக இருக்கும் என்றால், உங்களுக்கு எல்லாவிதங்களிலும் நன்மைகள் உண்டாகும். மன உளைச்சல்கள் நிவர்த்தியாகும். மன அழுத்தங்கள் குறையும்.
நோயில் படுத்திருப்பவர்களுக்கு நோயின் வீரியம் குறையும்.
71/2 ஆண்டுச் சனியின் பாதிப்பில் இருப்பவர்களுக்குப் பாதிப்புக்கள்
குறையும். துன்பங்கள், வெறுப்புக்கள், ஏமாற்றங்கள் போன்ற
சூழ்நிலைகள் எல்லாம் மாறிவிடும்.

நீலக்கல்லை அணிந்துகொள்ள விரும்புகிறவர்கள், முதலில் ஜாதிநீலக்கல்தானா என்று ஒரு கைதேர்ந்த கல் நிபுணரிடம் கேட்டுவிட்டுத்தான் அணிந்துகொள்ளவேண்டும்.

யார்,யார் நீலக் கற்களை அணிந்து கொள்ளலாம்?

லக்கினங்களின்படியான விவரம் கீழே உள்ளது.

1
மேஷ லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி 2, 5, 7, 9, 10, 11 ஆம்
வீடுகளில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

2
ரிஷப லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி தன் சொந்த நட்சத்திரங்களில் அமையப்பெற்றவர்களுக்கும், அல்லது ராகுவின் நட்சத்திரங்களில் அமையப்பெற்றவர்களுக்கும் இந்த நீலக்கல் பொருத்தமாக இருக்கும்.

3.
மிதுன லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி நீசமாக இருந்தாலும் அல்லது பகை வீடுகளில் இருந்தாலும் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகா
திசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

4.
கடக லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

5.
சிம்ம லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

6.
கன்னி லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால், அவர்கள் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடைபெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

7.
துலா லக்கினக்காரர்கள்: ஜாதகத்தில் சனி 1, 3, 4, 5, 9ஆம் வீடுகளில்
இருந்தால் அணிந்துகொள்ளலாம்.அதோடு சனி மகாதிசை நடை
பெற்றாலும்
8.
விருச்சிக லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால்,
அவர்கள் அணிந்துகொள்ளலாம்! அதோடு சனி மகாதிசை நடை
பெற்றாலும் அணிந்துகொள்ளலாம்!

9.
தனுசு லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால்,
அவர்கள் அணிந்துகொள்ளலாம்

10.
மகர லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
கேதுவின் நட்சத்திரங்களில், அல்லது தன்னுடைய சொந்த நட்சத்திரங்
களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்

11.
கும்ப லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
கேதுவின் நட்சத்திரங்களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.

12
மீன லக்கினக்காரர்கள்: நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது.

ஒரு எச்சரிக்கையான விஷயம்: நீங்கள் நீலக்கல்லை அணிய
விரும்பினால், அதை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். உடன்
முத்து (pearl), சிகப்பு (ruby), பவளம் (coral) ஆகையவற்றையும்
சேர்த்து அணியக்கூடாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கற்கள் என்ன செய்துவிடும் என்று என் நண்பர் ஒருவர், தனது
உறவினரிடம் சவால்விட்டுவிட்டு, ஒரு பெரிய நீலக்கல்லை
வாங்கித் தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். தொடர்ந்து
ஒருவாரம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனை.

அவர் வைத்துக்கொண்ட அன்றே கல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் அவருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு (Loose Motion). அவருடைய வீட்டுத் தோட்டத்தில், அவர் நின்று கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த காகம் ஒன்று அவர் மண்டையில் கொத்திவிட்டுப் போய் விட்டது. அத்துடன் அந்தவாரம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பலத்த சரிவினால், கணிசமான அளவில் பணவிரையம் வேறு ஏற்பட்டது. இப்படியாகப் பல தொல்லைகள்.

ஒருவாரம் கழித்து, கல்லைத் தான் வாங்கிய கடையில் கொடுத்துத் திருப்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பாதிப் பணம் தந்தால் போதும் என்றார். கடைக்காரர் மறுத்துவிட்டார். அதோடு கடைக்காரரே அதற்குப் பரிகாரமும் சொன்னார். கல்லை விபூதி சம்படத்தில் விபூதிக்குள் முக்கி வைக்கும்படி சொல்லி யனுப்பினார். அவரும் அப்படியே செய்ய உபத்திரவங்கள் நின்றன. ஒரு மாதம் கழித்து மீண்டும், அவர் கல்லைச் சோதிக்க முயன்றபோது, அதே நிலை ஏற்பட, மறுபடியும் வீபூதிச் சம்படத்தில் கல்லைவைத்து, மங்களம் பாடி முடித்தார்.

மனிதர்களைப் பல சோதனைகளுக்கு உள்ளாக்குபவர் சனீஷ்வரன். அவரை அல்லது அவருக்கான கல்லைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும் அல்லது அவரின் சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறவர்களும், அப்படி செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4 அல்லது 5 கேரட் எடையுள்ள நீலக்கல்லின் விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 என்ற அளவில் இருந்தது. தற்சமயம் என்ன விலை உள்ளது என்று தெரியவில்லை. சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் கற்களை விற்கும் வியாபாரிகள் உள்ளார்கள். விசாரித்துப்பார்த்து விலையை எழுதுங்கள். நமது வகுப்பறைக் கண்மணி களுக்கு அது உபயோகமாக இருக்கும்!:-)))))))
கற்களுக்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டா? உண்டு என்கிறது ஒரு அறிக்கை. அதுபற்றிய கட்டுரை

திங்களன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

75 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஐயா அரியத் தகவல்கள்
    அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
    மற்ற வண்ணக் கற்களைப் பற்றியும்
    எழுத வேண்டுகிறேன்.
    அற்புதமும் அருமையும் நிறைந்த பதிவு.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. கற்கள் பற்றி அரிய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.கற்கள் மூலம் ஏற்படும் பரிகாரங்கள் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைப்பதை போல். இறைவழிபாடு ஒன்று தான் நல்லது.

    ReplyDelete
  3. My lagnam is Viruchigam. But my raasi is Simmam. I am in the Period of 7 & 1/2 Saturn. Can I wear blue Saphire

    ReplyDelete
  4. Ayya,

    precaution, preventive and useful information.

    thozhil isthanam padhika paduvatharku uyarthiru Saneswaran thaan karanama?

    thozhil isthanam padhipai arivadhu yeppadi?(saturn in 10th place leads to job problem?).paazhum manadhu parikaram ketkathane seiyum?

    thangal padhil ariya aaval.

    ubayogamana thagaval thandhatharku meendum oru murai nandri theyrivithu kolkireyn.

    +ram

    ReplyDelete
  5. பகிர்விற்கு நன்றி.

    தலைப்பு அசத்தலோ அசத்தல்

    நன்றியுடன் டெக்‌ஷங்கர் @ TechShankar


    Glorious World Record Moments - Sachin Tendulkar 200 Runs

    ReplyDelete
  6. அய்யா இனிய காலை வணக்கம்,
    ராசி கல் அதிலும் சனிபகவானின் நீலக்கல் பற்றிய விளக்கம் அருமை....அடுத்து நம்ம குரு பகவான் பத்தி இது போன்ற விளக்கத்தை எழத வேண்டும் அய்யா ...

    நன்றி வணக்கம்........

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா!
    காலைப்பொழுது வணக்கம்.

    உள்ளம் பெரும் கோவில்!
    ஊன் உடம்பு ஆலயம்! தெள்ள
    தெரிந்தாருக்கு சீவன் சிவலிங்கம்
    கள்ள புலன் ஐந்தும் கானாமணி விளக்கே!

    சித்த பெருமானார்!

    சொல்லி சென்ற உண்மை வாக்கு வாத்தியார் ஐயா!

    ReplyDelete
  8. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். நான் நினைத்ததை விட மிகவும் அருமையாக தந்துள்ளுர்கள், சென்னையில் எங்கு நல்ல கல் கிடைக்கும் என்று கூறுங்கள் அய்யா. நன்றி அய்யா.

    ReplyDelete
  9. I don't want blue sapphaire. (kadaga lagnam)

    ReplyDelete
  10. மிகவும் உபயோகமான தகவல்கள். மற்ற கிரஹங்களைப் பற்றியும் எழுதவும். இவை அனைத்தையும் உங்கள் புத்தகத்தில் சேர்ப்பீர்கள் என நினைக்கிறேன்.

    அஷ்டமாதிபதியாக சூர் / சந்த் இருந்தால், எதுவும் கெடுதல் இல்லை என்று சொல்கிறார்களே, அது சரியா?

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா!!!
    உண்மைதான் ஐயா!!!
    எனக்கும் அனுபவம் இருக்கிறது!!!
    but யாரும் நம்புகிறார்கள் இல்லையே!!! சிரிக்கிறார்கள்!

    a+b=C எண்டு எல்லாரும் நம்பிற மாதிரி ஜோதிடமும் இருந்திருந்தால் எவளவு நல்லம்...

    ReplyDelete
  12. ஐயா!!!

    தகவலுக்கு நன்றி...இந்த ராசி கற்கள் எவ்வாறு கோள்களில் இருந்து அலைகளை செயல்படுத்துகிறது என்பதற்கு விளக்கம் இருந்தால் பதிவில் ஏற்றினால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  13. இலங்கையில் கற்கள் மிக அருமையாக இருக்கும். கண்கூடாக பார்த்திருக்கிறேன். மரகதப்பச்சை மோதிரம் கணவருக்கு அங்கேதான் செய்தோம் மிக நல்ல பலன்கள்.

    மகனுக்கு கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். சந்திரனின் ப்ராபவம் குறைய்ய முத்து மோதிரம் போடச் சொன்னார்கள். போட்டதும் நல்ல பலன் தெரிந்தது. ஆனால் இப்போதும் மோதிரம் தொலைந்துவிட்டது. இன்னொரு மோதிரம் போட்டேன் முத்து கழண்டு விட்டது. :(

    மறுபடியும் போடட்டுமா வேண்டாமான்னு யோசனை.

    ReplyDelete
  14. Dear Sir,

    For me Thula Lagna and at presnt Sani Maha Dhiasi is running, sani is in 11th simmam (Pagai house),
    do you recommend me to use blue sapphire.

    Thanks
    Saravana

    ReplyDelete
  15. Sir,

    for viruchuka lagna , the saturn is placed at [kanni] 11 th house, in navamsa it is in his own house [magram]. but saturn is in the star of suriyan and now 71/2 [2 nd round ] is running . shall i wear blue sapphire.

    my rasi is thulam

    ReplyDelete
  16. அன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானின் நீல நிறம் பற்றிய பாடம் மிகவும் சிறப்பு, நீல நிறத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது, அதாவது மற்ற நிறத்தை நாம் மிகை படுத்தி சொல்லும் போது வெள்ளையை வெள்ள‌ வெள்ளேருன்னு இருக்கு என்போம், சிவப்பை செக்கசேவேர் என்றும், பச்சையை பச்சபசேர், இது போல் எல்லா நிறத்தையும் இப்படி சொல்ல முடியும், ஆனால் நீலத்தை நீல நீலேர் என்றும் யாரும் சொல்வதிலை
    ,ஒரு நீல நிறமாக இருக்கிறது என்றுதான் சொல்வொம்,வான‌ம் எங்கும் நிறைந்திருக்கும் ஒரெ நிற‌ம் இதுதான் ,நன்றி அய்யா

    அன்புட‌ன் ஜீவா

    ReplyDelete
  17. Dear Sir.
    I am Thanushu lagna,Kanni Raasi.I had undergone severe trauma during first 2.5 years of 7.5 years of sani.
    One of my well wisher asked me to wear a blue stone silver ring in the right hand middle finger.It worked for me.I ordered it for Rs.800 ...I got favorable results..
    Now I just removed it.Do you want me to wear it till 7,5 sani gets over?
    Also Sani is Ucham for me in 11th place.And vithi en is 8 :-)

    Please advise.

    ReplyDelete
  18. ஐயா வணக்கம்

    நீலக்கல் பற்றிய விளக்கம் அருமை ஆலாசியம் கோ கூறியது போல மற்ற கிரகங்களுக்கான கற்களை பற்றி பதிவிட்டால் நன்றாக இருக்கும். கற்களை சோதனை செய்ய சட்டை பையில் வைத்து தான் பார்க்க வேண்டுமா, அல்லது வேறு முறைகள் உள்ளதா. தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து பரிசோதிக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் ராசி கற்களை அணிவதற்கு (சோதனை முயற்ச்சிக்கு பின்) அணியும் கிழமை, நட்சத்திரம், நேரம் மற்றும் அணிய வேண்டிய விரல் பற்றியும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. மதிய வணக்கம்.

    பிழை திருத்தம் ஐயா !


    உள்ளம் பெரும் கோவில்!
    ஊன் உடம்பு ஆலயம்! தெள்ள
    தெளிந்தாருக்கு, சீவன் சிவலிங்கம்!
    கள்ள புலன் ஐந்தும் கானாமணி விளக்கே!

    சித்த பெருமானார்!

    சொல்லி சென்ற உண்மை வாக்கு
    சிந்திக்க வேண்டி மட்டுமே !!!

    வாத்தியார் ஐயா!

    ReplyDelete
  20. Dear Guruji,
    I am wearing dark blue (karuneelam) stone for few years, and it is going on fine. In between another astorloger, suggested wearing another blue sappheire, and he gave me one, which was similar to the photo published. From the time I started wearing, i had few near miss accidents, and health also was not okay. But that astrologer insisted that I should continue to wear it with belief. But I removed it but continue to wear that old dark blue stone with diamonds on both sides.I showed the new stone to nother astrologer, who also recommended not to wear that new stone as it is not as dark in olor. I understand that the stones will magnify what ever comes from that planet, whether it is good or bad. In such situation, you have mentioned to wear this dark blue stone, when saturn is neesam in horoscope. Does it mean when saturn is Neesam, will it give good benefits. It is in its own house in the hororscope but deblitated. Would appreciate your views.

    ReplyDelete
  21. வைரம் வாங்கும் போதும் தோஷம் பார்த்துத்தான் வாங்குவார்கள். வைரம் அணிந்தபிறகு 'ஓஹோ'ன்னு ஆனவர்களும் உண்டு வீதிக்கு வந்தவர்களும் உண்டு.உறவில் ஒருவர் வைர வியாபாரம் செய்தார்கள். அதோடுகூட, பெரிய நிறுவனங்களின் முகவாண்மையும் இருந்தது.வைர வியாபாரம் ஆரம்பித்த பின்னர் எல்லாமும் நட்ட‌மாகி வீதிக்கு வந்துவிட்டார்கள்.ஆகவே கற்களுக்கு
    சக்தி உண்டு. ஆனால் அதைப்பற்றிய முழு அறிவு இருப்பவர்கள் குறைவு.
    எனவே வம்பை விலைக்கு வாங்காமல், மனதாற ஆண்டவனை வேண்டினாலேபோதும்.

    ReplyDelete
  22. அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு மகர லக்கனம்,மிதுன ராசி, மிருகசீரிடம் 4 ஆம் பாதம், நடப்பு தசை ‍‍‍ சனி மகா தசை, நான் நீல நிற கள் அணியலாமா? தயவுசெய்து சொல்லவும் அய்யா?
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  23. Dear Sir,
    Good informations about blu sapphire.Thanks
    Ashok

    ReplyDelete
  24. வணக்கம் அய்யா... நலம்... நலம் அறிய அவா...
    உங்கள் கட்டுரை அருமை... நீல கல்லில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது உங்கள் கட்டுரை படித்து தான் தெரிஞ்சுகிட்டேன்... நல்லது அய்யா...
    நானும் நீல கல் பதித்த மோதிரத்தை, கடந்த ஒரு ஆண்டாக அணிந்து வருகிறேன்... பலன்கள் எல்லாம் நல்ல படியாக இருக்கிறது.... இருந்தாலும் புதிய நீல கல்லை வாங்கலாம் என்ற எண்ணம் உள்ளது.... மதுரை சுற்றி உள்ள பகுதியில் உங்களுக்கு தெரிந்த, நீல கல் விற்பனை செய்பவர்கள் இருந்தால் சொல்லுங்க....
    நன்றி அய்யா...
    என்றும் உங்கள் அருண்

    ReplyDelete
  25. Good afternoon sir,
    I am a Capricon ascendant. Saturn transit in ketu's star. I am wearing Blue sapphire stone in right hand middle finger for the past six months. Nothing is happened, it's going well. I am also wearing redcoral in right handring finger (saturn and Mars both sit together in 8th house - no combat). Is it okay or coral has to be removed. Kindly guide me sir. Mars transit in venus star (4th and 11th lord).
    J.SENDHIL

    ReplyDelete
  26. நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எதனையும் பழிக்கக் கூடாது. நீலக்கல் மட்டுமல்ல நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட எல்லாவற்றுக்கும்தான். ரத்தினக் கற்களால் ஒரு பிரச்சினை என்னவென்றால் அதை நாம் வாங்கும் போது அதற்கு ஒரு விலை என்று நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது. வாங்கிய பிறகு மறுபடியும் விற்க போனால் அதற்கு விலை இல்லை. யாரும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  27. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம், ஐயா அரிய தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
    மற்ற வண்ணக் கற்களைப் பற்றியும் எழுத வேண்டுகிறேன்.
    அற்புதமும் அருமையும் நிறைந்த பதிவு. நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    தொடர்ந்து எல்லாக் கற்களைப் பற்றியும் எழுத உள்ளேன். பொறுத்திருந்து படியுங்கள் ஆலாசியம்!

    ReplyDelete
  28. /////krishnamoorthy said..
    கற்கள் பற்றி அரிய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.கற்கள் மூலம் ஏற்படும் பரிகாரங்கள் ஒரு கடன்
    வாங்கி இன்னொரு கடனை அடைப்பதை போல். இறைவழிபாடு ஒன்று தான் நல்லது./////

    ஆமாம். இறையருளுக்கு மிஞ்சியது ஒன்றும் இல்லை!

    ReplyDelete
  29. /////Kavitha said...
    My lagnam is Viruchigam. But my raasi is Simmam. I am in the Period of 7 & 1/2 Saturn. Can I wear blue
    Saphire////

    விருச்சிக லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால், அவர்கள் அணிந்துகொள்ளலாம்!
    அதோடு சனி மகாதிசை நடை பெற்றாலும் அணிந்துகொள்ளலாம்! மற்றபடி என்றால் வேண்டாம்.

    ReplyDelete
  30. //////ramakrishnan said...
    Ayya, precaution, preventive and useful information. thozhil isthanam padhika paduvatharku uyarthiru Saneswaran thaan karanama? thozhil isthanam padhipai arivadhu yeppadi?(saturn in 10th place leads to job
    problem?).paazhum manadhu parikaram ketkathane seiyum?
    thangal padhil ariya aaval. ubayogamana thagaval thandhatharku meendum oru murai nandri theyrivithu kolkireyn.
    +ram//////

    தொழில் ஸ்தானத்தைப் பற்றி முன்பு நிறைய எழுதியுள்ளேன். பழைய பாடங்களைப் படியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  31. /////Tech Shankar said...
    பகிர்விற்கு நன்றி.
    தலைப்பு அசத்தலோ அசத்தல்
    நன்றியுடன் டெக்‌ஷங்கர் @ TechShankar/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  32. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    ராசி கல் அதிலும் சனிபகவானின் நீலக்கல் பற்றிய விளக்கம் அருமை....அடுத்து நம்ம குரு பகவான் பத்தி இது போன்ற விளக்கத்தை எழத வேண்டும் அய்யா... நன்றி வணக்கம்...... ..///////

    எல்லாக் கற்களைப் பற்றியும் எழுத உள்ளேன். பொறுத்திருந்து படியுங்கள் ஆதிராஜ்!!

    ReplyDelete
  33. //////kannan said...
    வாத்தியார் ஐயா!
    காலைப்பொழுது வணக்கம்.
    உள்ளம் பெரும் கோவில்!
    ஊன் உடம்பு ஆலயம்! தெள்ள
    தெரிந்தாருக்கு சீவன் சிவலிங்கம்
    கள்ள புலன் ஐந்தும் கானாமணி விளக்கே!
    சித்த பெருமானார்!
    சொல்லி சென்ற உண்மை வாக்கு வாத்தியார் ஐயா!////

    மனமே முருகனின் மயில்வாகனம்
    மாந்தளிர்மேனியே குகனாலயம்
    குரலே செந்தூரின் கோவில்மணி
    குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!
    -கொத்தமங்கலம் சுப்பு

    ReplyDelete
  34. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். நான் நினைத்ததை விட மிகவும் அருமையாக தந்துள்ளீர்கள், சென்னையில் எங்கு நல்ல கல் கிடைக்கும் என்று கூறுங்கள் அய்யா. நன்றி அய்யா./////

    சென்னை தி.நகரில் நிறையக் கடைகள் உள்ளன. சென்று பாருங்கள்

    ReplyDelete
  35. ////Jeevanantham said...
    I don't want blue sapphaire. (kadaga lagnam)/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  36. ///////Uma said...
    மிகவும் உபயோகமான தகவல்கள். மற்ற கிரஹங்களைப் பற்றியும் எழுதவும். இவை அனைத்தையும் உங்கள் புத்தகத்தில் சேர்ப்பீர்கள் என நினைக்கிறேன்
    அஷ்டமாதிபதியாக சூர் / சந்த் இருந்தால், எதுவும் கெடுதல் இல்லை என்று சொல்கிறார்களே, அது சரியா?/////

    சூரியன் உடல்காரகன். தந்தைக்கு அதிபதி. சந்திரன் மனகாரகன். தாய்க்கு அதிபதி. அவர்கள் ஆறில்
    அமர்ந்தால் அந்தச் செயல்பாடு களுக்கு கேடு விளையுமே சகோதரி!

    ReplyDelete
  37. //////Kumares said...
    வணக்கம் ஐயா!!!
    உண்மைதான் ஐயா!!!
    எனக்கும் அனுபவம் இருக்கிறது!!!
    but யாரும் நம்புகிறார்கள் இல்லையே!!! சிரிக்கிறார்கள்!
    a+b=C எண்டு எல்லாரும் நம்புகிற மாதிரி ஜோதிடமும் இருந்திருந்தால் எவ்வளவு நல்லது?.../////

    அடிபட்டுத்திருந்தினால் நம்புவார்கள். எல்லோரும் நம்பவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
    அனுபவிக்கும்போது, நம்பிக்கை தன்னால் ஏற்படும்!

    ReplyDelete
  38. /////Arul said...
    ஐயா!!!
    தகவலுக்கு நன்றி...இந்த ராசி கற்கள் எவ்வாறு கோள்களில் இருந்து அலைகளை செயல்படுத்துகிறது
    என்பதற்கு விளக்கம் இருந்தால் பதிவில் ஏற்றினால் உதவியாக இருக்கும்.///////

    எழுதுகிறேன். நன்றி

    ReplyDelete
  39. //////புதுகைத் தென்றல் said...
    இலங்கையில் கற்கள் மிக அருமையாக இருக்கும். கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். மரகதப்பச்சை மோதிரம் கணவருக்கு அங்கேதான் செய்தோம் மிக நல்ல பலன்கள். மகனுக்கு கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். சந்திரனின் ப்ராபவம் குறைய்ய முத்து மோதிரம் போடச் சொன்னார்கள். போட்டதும் நல்ல பலன் தெரிந்தது. ஆனால் இப்போதும் மோதிரம் தொலைந்து விட்டது. இன்னொரு மோதிரம் போட்டேன் முத்து கழண்டு விட்டது. :( மறுபடியும் போடட்டுமா வேண்டாமான்னு யோசனை./////

    குழந்தைகளுக்குப் பன்னிரெண்டு வயதுவரை, எந்த பாதிப்பும் இருக்காது. அந்த வயதிற்குப் பிறகு அணிவித்து விடுங்கள்

    ReplyDelete
  40. /////Saravana said...
    Dear Sir,
    For me Thula Lagna and at presnt Sani Maha Dhiasi is running, sani is in 11th simmam (Pagai house), do you recommend me to use blue sapphire.
    Thanks
    Saravana/////

    துலா லக்கினக்காரர்கள் சனி மகாதசை நடைபெறும்போது நீலக்கல்லை அணிந்து கொள்ளலாம். சனி அந்த லக்கினத்திற்கு யோககாரகன்.

    ReplyDelete
  41. //////RameshVeluswami said...
    Sir,
    for viruchuka lagna , the saturn is placed at [kanni] 11 th house, in navamsa it is in his own house [magram]. but saturn is in the star of suriyan and now 71/2 [2 nd round ] is running . shall i wear blue sapphire. my rasi is thulam/////

    விருச்சிக லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால், அவர்கள் அணிந்துகொள்ளலாம்!
    அதோடு சனி மகாதிசை நடை பெற்றாலும் அணிந்துகொள்ளலாம்! இல்லையென்றால் வேண்டாம்!

    ReplyDelete
  42. //////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், சனி பகவானின் நீல நிறம் பற்றிய பாடம் மிகவும் சிறப்பு, நீல நிறத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது, அதாவது மற்ற நிறத்தை நாம் மிகை படுத்தி சொல்லும் போது வெள்ளையை வெள்ள‌
    வெள்ளேருன்னு இருக்கு என்போம், சிவப்பை செக்கசேவேர் என்றும், பச்சையை பச்சபசேர், இது போல்
    எல்லா நிறத்தையும் இப்படி சொல்ல முடியும், ஆனால் நீலத்தை நீல நீலேர் என்றும் யாரும் சொல்வதிலை
    ,ஒரு நீல நிறமாக இருக்கிறது என்றுதான் சொல்வொம்,வான‌ம் எங்கும் நிறைந்திருக்கும் ஒரெ நிற‌ம்
    இதுதான் ,நன்றி அய்யா
    அன்புட‌ன் ஜீவா///////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  43. //////Rathinavel.C said...
    Dear Sir.
    I am Thanushu lagna,Kanni Raasi.I had undergone severe trauma during first 2.5 years of 7.5 years of sani.One of my well wisher asked me to wear a blue stone silver ring in the right hand middle finger.It
    worked for me.I ordered it for Rs.800 ...I got favorable results.. Now I just removed it.Do you want me to wear it till 7,5 sani gets over? Also Sani is Ucham for me in 11th place.And vithi en is 8 :-)
    Please advise./////

    உங்களுக்குத்தான் நன்மையாக இருந்தது என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.பிறகு எதற்குக் கழற்றினீர்கள்?
    மீண்டும் அணிந்து கொள்ளலாம்

    ReplyDelete
  44. //////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    நீலக்கல் பற்றிய விளக்கம் அருமை ஆலாசியம் கோ கூறியது போல மற்ற கிரகங்களுக்கான கற்களை பற்றி பதிவிட்டால் நன்றாக இருக்கும். கற்களை சோதனை செய்ய சட்டை பையில் வைத்து தான் பார்க்க வேண்டுமா,
    அல்லது வேறு முறைகள் உள்ளதா. தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து பரிசோதிக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் ராசி கற்களை அணிவதற்கு (சோதனை முயற்ச்சிக்கு பின்) அணியும் கிழமை, நட்சத்திரம், நேரம் மற்றும் அணிய வேண்டிய விரல் பற்றியும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
    நன்றி
    வாழ்த்துக்கள்/////

    செலவு அதிகம் இல்லாமல் இருக்க வெள்ளியில் மோதிரமாகச் செய்து அணிந்துகொள்ளலாம். ஒவ்வொரு
    விதமான கல்லையும், முதன் முதலில் அணியும்போது, அந்தந்தக் கிரகத்திற்கு உரிய நாளில்
    அணிந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  45. ////kannan said...
    மதிய வணக்கம்.
    பிழை திருத்தம் ஐயா !
    உள்ளம் பெரும் கோவில்!
    ஊன் உடம்பு ஆலயம்! தெள்ளத்
    தெளிந்தாருக்கு, சீவன் சிவலிங்கம்!
    கள்ளப் புலன் ஐந்தும் கானாமணி விளக்கே!
    சித்த பெருமானார்!
    சொல்லி சென்ற உண்மை வாக்கு
    சிந்திக்க வேண்டி மட்டுமே !!!
    வாத்தியார் ஐயா!/////

    நல்லது. நன்றி முருகா!

    ReplyDelete
  46. //////Balasubramanian Pulicat said...
    Dear Guruji,
    I am wearing dark blue (karuneelam) stone for few years, and it is going on fine. In between another astorloger, suggested wearing another blue sappheire, and he gave me one, which was similar to the photo published. From the time I started wearing, i had few near miss accidents, and health also was not okay. But that astrologer insisted that I should continue to wear it with belief. But I removed it but continue to wear that old dark blue stone with diamonds on both sides.I showed the new stone to nother astrologer, who also recommended not to wear that new stone as it is not as dark in olor. I understand that the stones will magnify what ever comes from that planet, whether it is good or bad. In such situation, you have mentioned to wear this dark blue stone, when saturn is neesam in horoscope. Does it mean when saturn is Neesam, will it give good benefits. It is in its own house in the hororscope but deblitated. Would appreciate your
    views.//////

    நீசத்தன்மையால் ஏற்படும் பாதிப்புக்கள் குறையும். அவ்வளவுதான்!

    ReplyDelete
  47. //////kmr.krishnan said...
    வைரம் வாங்கும் போதும் தோஷம் பார்த்துத்தான் வாங்குவார்கள். வைரம் அணிந்தபிறகு 'ஓஹோ'ன்னு
    ஆனவர்களும் உண்டு வீதிக்கு வந்தவர்களும் உண்டு.உறவில் ஒருவர் வைர வியாபாரம் செய்தார்கள். அதோடுகூட, பெரிய நிறுவனங்களின் முகவாண்மையும் இருந்தது.வைர வியாபாரம் ஆரம்பித்த பின்னர் எல்லாமும் நட்ட‌மாகி வீதிக்கு வந்து விட்டார்கள்.ஆகவே கற்களுக்கு
    சக்தி உண்டு. ஆனால் அதைப்பற்றிய முழு அறிவு இருப்பவர்கள் குறைவு.
    எனவே வம்பை விலைக்கு வாங்காமல், மனதாற ஆண்டவனை வேண்டினாலேபோதும்.//////

    வைரத்தைப்பற்றி எழுதும்போது இதைப்பற்றி (வீதிக்கு வந்தவர்கள்) எழுதலாம் என்றுள்ளேன் கிருஷ்ணன் சார்!

    நன்றி!

    ReplyDelete
  48. //////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம், எனக்கு மகர லக்கனம்,மிதுன ராசி, மிருகசீரிடம் 4 ஆம் பாதம், நடப்பு தசை ‍‍‍ சனி மகா தசை, நான் நீல நிறக்கல் அணியலாமா? தயவுசெய்து சொல்லவும் அய்யா?
    அன்புடன் ஜீவா//////

    அணிந்துகொள்ளலாம் நண்பரே!

    ReplyDelete
  49. /////Ashok said...
    Dear Sir,
    Good informations about blu sapphire.Thanks
    Ashok//////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  50. //////அருண் பிரசங்கி said...
    வணக்கம் அய்யா... நலம்... நலம் அறிய அவா...
    உங்கள் கட்டுரை அருமை... நீல கல்லில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது உங்கள் கட்டுரை
    படித்து தான் தெரிஞ்சுகிட்டேன்... நல்லது அய்யா... நானும் நீல கல் பதித்த மோதிரத்தை, கடந்த ஒரு ஆண்டாக அணிந்து வருகிறேன்... பலன்கள் எல்லாம்
    நல்ல படியாக இருக்கிறது.... இருந்தாலும் புதிய நீல கல்லை வாங்கலாம் என்ற எண்ணம் உள்ளது.... மதுரை
    சுற்றி உள்ள பகுதியில் உங்களுக்கு தெரிந்த, நீல கல் விற்பனை செய்பவர்கள் இருந்தால் சொல்லுங்க....
    நன்றி அய்யா...
    என்றும் உங்கள் அருண்//////

    தெற்கு மாசிவீதியில் நிறைய நகைக்கடைகள் உள்ளனவே ஸ்வாமி. விசாரித்துப்பாருங்கள். கிடைக்கும்!

    ReplyDelete
  51. //////dhilse said...
    Good afternoon sir,
    I am a Capricon ascendant. Saturn transit in ketu's star. I am wearing Blue sapphire stone in right hand middle finger for the past six months. Nothing is happened, it's going well. I am also wearing redcoral in right
    handring finger (saturn and Mars both sit together in 8th house - no combat). Is it okay or coral has to be removed. Kindly guide me sir. Mars transit in venus star (4th and 11th lord).
    J.SENDHIL/////

    பவளத்தை, நீலத்துடன் சேர்த்து அணியக்கூடாது. கழற்றிவைத்துப்பாருங்கள்!

    ReplyDelete
  52. //////ananth said...
    நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எதனையும் பழிக்கக் கூடாது. நீலக்கல் மட்டுமல்ல
    நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட எல்லாவற்றுக்கும்தான். ரத்தினக் கற்களால் ஒரு பிரச்சினை
    என்னவென்றால் அதை நாம் வாங்கும் போது அதற்கு ஒரு விலை என்று நாம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
    வாங்கிய பிறகு மறுபடியும் விற்க போனால் அதற்கு விலை இல்லை. யாரும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்./////

    உண்மை நண்பரே! கார் முதற்கொண்டு எல்லாப் பொருட்களுக்கும் அதே நிலைதான். ஷோ ரூமை விட்டு வெளியே வந்துவிட்டால், வாங்கிய விலைக்கு விற்கமுடியாது.

    ReplyDelete
  53. ஐயா விருச்சிக லக்னம்:
    ராசியில் மீனத்தில் சனி பகவான் (ஐந்தில்)
    நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார் - இதில்
    (மன்னிக்கணும் இப்படியே ஆயிரம் முறை கேட்டு இருப்போம்)
    நவாம்சத்தையே கணக்கில் கொள்ளலாமா?
    நன்றிகள் குருவே.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. வணக்கம் ஐயா,

    //மகர லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
    கேதுவின் நட்சத்திரங்களில், அல்லது தன்னுடைய சொந்த நட்சத்திரங்
    களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்//
    நட்சத்திரங்களில் என்றால் புரியவில்லையே?

    எனக்கு தற்போது சனி திசை நடக்கிறது துலா லக்கினம் மகர ராசி நானும் இந்த கல்லை அணியலாமா?சொல்லுங்களேன்..

    ReplyDelete
  56. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். நான் நினைத்ததை விட மிகவும் அருமையாக தந்துள்ளீர்கள், சென்னையில் எங்கு நல்ல கல் கிடைக்கும் என்று கூறுங்கள் அய்யா. நன்றி அய்யா./////

    சென்னை தி.நகரில் நிறையக் கடைகள் உள்ளன. சென்று பாருங்கள்///
    சகோதரர் ரர்ஜேஷ்க்கு,
    தங்கள் சென்னையில் ஜெய்பூர் ஜேம்ஸ்ல்ல வர்ங்கிக்குங அது தி. நகர்ல்லயிருக்குது உங்க பிற்ந்த தேதி நேரம் இடம் அப்புறம் உஙக ரர்சி நட்சத்திரத்தை மட்ட்டும் சொல்லுங்க அவங்களே ஜாதகம் பார்த்து உங்களுக்கு பொருத்தமான் கல்லு த்ருவங்க நானு ரொம்ப சீக்கா போயிடுவேன் எவ்வள்வு
    தீண்ணாலும் ரத்த சோகையிருக்கும் இப்போ நல்லர்யிருக்கிறேன் நீங்க போயி எதும் கேட்காதிங்க உங்க ஜாதகத்தை பார்த்து அவங்களே எல்லாத்தையும் சொல்லுவங்க உங்களுக்கு எதுனா பிரச்சனை என்றால் என்கிட்ட சொல்லுங்க நர்ன் போயி கேட்கிறேன் நான் உங்களுக்கு உத்திரவர்தம் அளிக்கிறேன். உதவும் மனப்பன்மையில் தான் சொன்னேன் நான் கடைக்கு marketingகுடுக்கவில்லை ஆனால் நான் commerce

    ReplyDelete
  57. ஐயா வணக்கம்,
    கடந்த நர்னகு நாட்களா ரொம்ப நல்ல் பதிவு அசத்திட்டீங்க சார்
    ஆனால் எனக்கு ஒரு வருத்தம்தான் நீங்க எங்களா கேள்வி கேட்க சொல்லி
    உங்க பொன்னான நேரத்தை வீணாக்கிவிட்டிர்கள் ஐயா. அதிகமா சொல்லியிருந்த ம்ன்னித்துவிடுங்கள் இந்த் கேள்வியும் நானே பதிலும் நானே வகுப்பு நல்லாயிருக்குது.இந்த வகுப்பை தொடங்கி வைத்தது யார் சகோதரர் ஆலோசிகமா அல்லது ம்ற்ற சகோதர சகோதரிகளா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
    சுந்தரி.

    ReplyDelete
  58. FOR BEST RESULTS OF GEM STONES

    AVOID WEARING

    1. When eating food.

    2. when going to death places

    3. When going to toilet/ bathroom

    4. When doing Rough works.

    5. During period times

    6. When going to Manjal neeradu function.

    ReplyDelete
  59. அய்யா
    நான் மகர ராசி எனக்கு (தனுசு லக்கினம் ) 11 ம் இடத்தில் சனி உடன் சுக்கிரன் .நான் அணியலாம ?

    ReplyDelete
  60. ////Alasiam G said...
    ஐயா விருச்சிக லக்னம்:
    ராசியில் மீனத்தில் சனி பகவான் (ஐந்தில்)
    நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார் - இதில்
    (மன்னிக்கணும் இப்படியே ஆயிரம் முறை கேட்டு இருப்போம்)
    நவாம்சத்தையே கணக்கில் கொள்ளலாமா?
    நன்றிகள் குருவே.////

    எடுத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  61. /////Sumathi. said...
    வணக்கம் ஐயா,
    //மகர லக்கினக்காரர்கள்: சனி, புதனின் நட்சத்திரங்களில் அல்லது
    கேதுவின் நட்சத்திரங்களில், அல்லது தன்னுடைய சொந்த நட்சத்திரங்
    களில் இருந்தால் அணிந்துகொள்ளலாம்//
    நட்சத்திரங்களில் என்றால் புரியவில்லையே?/////

    ஜாதகத்தில் அயனாம்ச ஸ்புடத்தைப் பாருங்கள். எந்தக் கிரகம் எந்த நட்சத்திரத்தின் எந்தப் பாதத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பெற்றிருக்கும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    //////எனக்கு தற்போது சனி திசை நடக்கிறது துலா லக்கினம் மகர ராசி நானும் இந்த கல்லை அணியலாமா?சொல்லுங்களேன்..//////

    சனி திசை நடக்கிறது அல்லவா - அணிந்து கொள்ளலாம்!

    ReplyDelete
  62. ////sundari said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். நான் நினைத்ததை விட மிகவும் அருமையாக தந்துள்ளீர்கள், சென்னையில் எங்கு நல்ல கல் கிடைக்கும் என்று கூறுங்கள் அய்யா. நன்றி அய்யா./////
    சென்னை தி.நகரில் நிறையக் கடைகள் உள்ளன. சென்று பாருங்கள்///
    சகோதரர் ராஜேஷ்க்கு,
    தங்கள் சென்னையில் ஜெய்பூர் ஜேம்ஸ்ல்ல வாங்கிக்குங்க அது தி. நகர்ல்லயிருக்குது உங்க பிறந்த தேதி நேரம் இடம் அப்புறம் உஙக ராசி நட்சத்திரத்தை மட்ட்டும் சொல்லுங்க அவங்களே ஜாதகம் பார்த்து உங்களுக்கு பொருத்தமான் கல்லு தருவங்க நானு ரொம்ப சீக்கா போயிடுவேன் எவ்வள்வு
    தீண்ணாலும் ரத்த சோகையிருக்கும் இப்போ நல்லர்யிருக்கிறேன் நீங்க போயி எதும் கேட்காதிங்க உங்க ஜாதகத்தை பார்த்து அவங்களே எல்லாத்தையும் சொல்லுவங்க உங்களுக்கு எதுனா பிரச்சனை என்றால் என்கிட்ட சொல்லுங்க நர்ன் போயி கேட்கிறேன் நான் உங்களுக்கு உத்திரவர்தம் அளிக்கிறேன். உதவும் மனப்பன்மையில் தான் சொன்னேன் நான் கடைக்கு marketingகுடுக்கவில்லை ஆனால் நான் commerce/////

    உங்களுடைய உதவும் மனப்பான்மை வாழ்க!

    ReplyDelete
  63. /////sundari said...
    ஐயா வணக்கம்,
    கடந்த நான்கு நாட்களா ரொம்ப நல்ல பதிவு அசத்திட்டீங்க சார்
    ஆனால் எனக்கு ஒரு வருத்தம்தான் நீங்க எங்களா கேள்வி கேட்க சொல்லி
    உங்க பொன்னான நேரத்தை வீணாக்கிவிட்டிர்கள் ஐயா. அதிகமா சொல்லியிருந்த மன்னித்துவிடுங்கள் இந்தக் கேள்வியும் நானே பதிலும் நானே வகுப்பு நல்லாயிருக்குது.இந்த வகுப்பை தொடங்கி வைத்தது யார் சகோதரர் ஆலோசிகமா அல்லது ம்ற்ற சகோதர சகோதரிகளா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
    சுந்தரி.///////

    எப்பவும்போலத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  64. /////sundari said...
    FOR BEST RESULTS OF GEM STONES
    AVOID WEARING
    1. When eating food.
    2. when going to death places
    3. When going to toilet/ bathroom
    4. When doing Rough works.
    5. During period times
    6. When going to Manjal neeradu function./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  65. /////ngs said...
    அய்யா
    நான் மகர ராசி எனக்கு (தனுசு லக்கினம் ) 11 ம் இடத்தில் சனி உடன் சுக்கிரன் .நான் அணியலாம?/////

    தனுசு லக்கினக்காரர்கள்: சனி தன் சொந்த ராசிகளில் இருந்தால், அவர்கள் அணிந்துகொள்ளலாம்.
    உங்களுக்கு சனி தன் சொந்த ராசியில் இல்லை. அதனால் அணிய வேண்டாம்!

    ReplyDelete
  66. Dear Sir,

    I am Kumba lagna ( Saturn in 4th place ) and i am wearing blue saphire of size 1.5k in silver ring.

    After waring this i got good results, like job change, income etc...

    I bought it at Lalitha jewallery in chennai.

    thanks for the info.
    -Ram

    ReplyDelete
  67. ////Ram said...
    Dear Sir,
    I am Kumba lagna ( Saturn in 4th place ) and i am wearing blue saphire of size 1.5k in silver ring.
    After waring this i got good results, like job change, income etc...
    I bought it at Lalitha jewallery in chennai.
    thanks for the info.
    -Ram/////

    தகவல் பகிர்விற்குநன்றி நண்பரே!

    ReplyDelete
  68. This is 100% true. I'm kadaka lagnam and wore just for 2 weeks. I couldn't tell how much I suffered in that 2 weeks.

    ReplyDelete
  69. ////Mohan said...
    This is 100% true. I'm kadaka lagnam and wore just for 2 weeks. I couldn't tell how much I suffered in that 2 weeks.////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  70. Sir,

    My lagna is kadagam and sani is utcham in Thulam (4th house).Now Sani maha desai and sukkira puthi running. One astrologer suggested me to wear pearl (moon in 12th house).

    Please suggest me can i wear Pearl or blue sapphire

    ReplyDelete
  71. /////Blogger Saravanakumar GM said...
    Sir,
    My lagna is kadagam and sani is utcham in Thulam (4th house).Now Sani maha desai and sukkira puthi running. One astrologer suggested me to wear pearl (moon in 12th house).
    Please suggest me can i wear Pearl or blue sapphire////

    கடக லக்கினக்காரர்கள் நீலக்கல்லை நினைத்தே பார்க்கக்கூடாது என்று எழுதியுள்ளேனே! நீங்கள் முத்து அணிவதே நல்லது!

    ReplyDelete
  72. Vanakkam asiriyare, i am kumba rasi avittam natchathiram. on which finger which gem stone should i wear.
    and Meenam rasikku purattathi natchathiram ulla en manaivukku endha rasikkal aniyalam.
    She is already wearing red stone.
    is it ok.
    thanks,

    ReplyDelete
  73. நான் அணிந்திருந்த ராசிக்கல் (Natural Pearl) மோதிரம் தொலைந்து விட்டது. சற்றே பயமாக உள்ளது. ராசிக்கல் தொலைந்தால் கெட்ட சகுனம் என்று சொல்லுகிறார்களே... உண்மையா? இணையத்தில் ஆனா மட்டும் தேடிவிட்டேன்... தகவல் கிடைக்கவில்லை. தயவு செய்து சொல்லவும்.

    ReplyDelete
  74. /////Blogger Nilofer Anbarasu said...
    நான் அணிந்திருந்த ராசிக்கல் (Natural Pearl) மோதிரம் தொலைந்து விட்டது. சற்றே பயமாக உள்ளது. ராசிக்கல் தொலைந்தால் கெட்ட சகுனம் என்று சொல்லுகிறார்களே... உண்மையா? இணையத்தில் ஆனா மட்டும் தேடிவிட்டேன்... தகவல் கிடைக்கவில்லை. தயவு செய்து சொல்லவும்./////

    எதற்கு வீணான கற்பனைகள்? புதிதாக ஒன்றை வாங்கி அணிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com