மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.2.10

கேள்வியும் நானே - பதிலும் நானே!

------------------------------------------------------------------------
கேள்வியும் நானே - பதிலும் நானே!

பகுதி 1
-------------------------------------------------------
1.இரட்டைப் பிறவிகளின் ஜாதகம் எப்படி வேறுபடுகிறது?

கால சந்திப்பைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் ஜாதகங்கள் பார்வைக்கு ஒன்றாக இருக்கும். ராசி & நவாம்சம் இரண்டும் அச்சர சுத்தமாக ஒன்றுபோல இருக்கும்.

ஆனால் நாடிச் சக்கரம் வேறுபடும். ஒவ்வொரு ராசிக்கும் 150 நாடிகள் உண்டு. ஒரு ராசியின் பாகைகள் 30 என்னும்போது 30 வகுத்தல் 150 பிரிவுகள் நாடியில் வரும். அதாவது 120 நிமிடங்கள் வகுத்தல் 150 நாடிகள்.48 விநாடிகளுக்கு ஒரு நாடி என்றாகும். உதய லக்கினத்தை வைத்து, அதில் இருக்கும் முதல் நாடியின் அளவு 8 முதல் 115 வினாடிகள் வரை வரலாம். அதனால் இரட்டைப் பிறவிகளின் ஜாதகங்கள் வேறுபடும்.அவர்களின் தலை எழுத்தும் வேறுபடும். வடமொழி நூல்களில் இந்த நாடியைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளது என்பார்கள். ஆனால் ஆங்கில் மொழிபெயர்ப்புக்களில் படிக்கக் கிடைக்கவில்லை. தேடினால் கிடைக்கலாம். KP Stellar System of Astrology
யில் இரட்டைப் பிறவிகளுக்கான ஜாதகத்தைக் கணிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது என்பார்கள். நம் வகுப்பிற்கு ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்கள் பலர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இந்தக் கேபி முறையைப் பற்றிய செய்தியைக் கொடுத்தால், அது அனைவருக்கும் பயன்படும்.

புதன் இரட்டைப் பிறவிகளுக்கான கிரகம். உபய ராசிகள் (Dual signs) மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces) போன்ற ராசிகளும் இரட்டைப் பிறவிகளுக்கான ராசிகள். இந்த ராசிகளின் அதிக பட்ச ஆதிக்கத்தில் பிறந்த குழந்தைகள் இரட்டை பிறவிகளாக இருக்கும் என்பார்கள்.

அதேபோல பெற்றோர்களின் ஜாதகத்தில், ஐந்தாம் வீட்டின் மேல் உபய ராசிகளின் (Dual signs) ஆதிக்கம் இருந்தாலும் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?

நான்காம் வீடு கல்விக்கான இடம். ஐந்தாம்வீடு மனம் மற்றும் நுண்ணறிவிற்கான இடம். இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம். ஆகவே இந்த மூன்று வீடுகளையும் அலசினால், ஜாதகனின் கல்வியைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அதோடு அந்த வீட்டு அதிபர்கள், காரகன் புதனின் நிலைமைகளையும் நன்கு அலச வேண்டும்.
சூரியன் - தத்துவப் பாடங்கள், நிர்வாகப் படிப்புக்களுக்கு அதிபதி
சந்திரன் - மருந்துகள்
செவ்வாய் - அறுவை சிகிச்சைகள், விவசாயம்
புதன் - கணிதம்
குரு - இலக்கியம், வானவியல்
சனி - சரித்திரம், அரசியல் என்று கிரகங்களையும், அதன் கூட்டணிகளையும் வைத்து, ஜாதகன் படிக்கும் துறையை அல்லது என்ன படிப்பு அவனுக்கு ஒத்து வரும் என்பதையும் அலசலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

இதன் அடுத்த பகுதி, அடுத்த திங்கட்கிழமையன்று வரும்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

35 comments:

  1. ஆசானே!

    வணக்கம்.

    அடியேன்! தாய்! தந்தையரையே ! மூல தெய்வமாக கொண்ட,

    மற்றவரால்,
    இந்து என பெயர் இடப்பட்ட, இல்லறம் உடையவர்கள்! முனிவர்கள்!, சித்தர்கள்! , ஞானிகள்! , தவசிகள்!, புண்ணிய ஆத்மாக்கள் என அடங்கிய என்னுடை தாய் திருநாட்டில் ,

    பொன்விளைந்த பாரத பூமியில்! ' மாயவனுடைய நாமம்'! கொண்டு ஜனனம் ஆனதிற்கு எல்லை இல்லாத புண்ணிய பெருமை அடைகின்றேன் ஐயா.



    நட்ட கல்லை தெய்வம் என!

    நாலு புஷ்பம் சாத்தியே!

    முனு முனு என்று சொல்லும்

    மந்திரம் ஏதட ,

    நட்ட கல்லும் பேசுமோ! (சிவ)

    நாதன் உள்ளில் இருக்கையில் !

    சுட்ட சட்டி கறியின் சுவை அறியுமோ!

    சித்த பெருமான்!!!

    (பிழைக்கு மன்னிக்கவும்)

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,

    அருமையான பதிவு!
    நன்றிகள் குருவே!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  3. kp method மிக திருத்தமானது , ruling planet ,மற்றும் sub lord (உப நட்சத்திராதிபதி )கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.ஸ்வாமி ஓம்கார் kp முறையையே பின்பற்றுவதாகச் சொன்ன ஞாபகம்.ராசிச் சக்கரம் 249 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு குறிகாட்டி கருத்திலெடுக்கப்பட்டு பலன் சொல்லப்படும்.5ம் வீட்டு உப நட்சத்திராதிபதியின் நட்சத்திராதிபதி 2/5/11 ஐ குறிகாட்டி(positive pregnancy)அத்துடன் அது புதனாக அல்லது ஒரு இரட்டை கிரகமானால் இரட்டைப் பிறவியாம்.
    http://kpastrology.astrosage.com/Home/house-grouping
    இந்த சுட்டி சொல்கிறது ,அடியேன் பரீட்சிக்க வில்லை.
    அறிந்தவர்கள் அலசலாம்
    நன்றி

    ReplyDelete
  4. அய்யா இனிய காலை வணக்கம்,

    கேள்வியும் நானே பதிலும் நானே தலைப்பு அருமை ......இரட்டை பிறவிகள் பற்றிய விளக்கம் சிறப்பு அய்யா.....கே.பி.முறை ஜோதிடம் பற்றி சமீபத்தில் ஒம்கார் சுவாமிஜி அவர்களின் பதிவில் தற்செயலாக படித்தேன் அதை பற்றி விளக்கம் கேட்கலாம் என்று எண்ணம் கொண்டிருந்தேன் தாங்களே அதை துவக்கி விட்டீர்கள் .....

    நன்றி வணக்கம்.....

    ReplyDelete
  5. ////kannan said...
    ஆசானே!
    வணக்கம்.
    அடியேன்! தாய்! தந்தையரையே ! மூல தெய்வமாக கொண்ட, மற்றவரால்,
    இந்து என பெயர் இடப்பட்ட, இல்லறம் உடையவர்கள்! முனிவர்கள்!, சித்தர்கள்! , ஞானிகள்! , தவசிகள்!, புண்ணிய ஆத்மாக்கள் என அடங்கிய என்னுடை தாய் திருநாட்டில் ,
    பொன்விளைந்த பாரத பூமியில்! ' மாயவனுடைய நாமம்'! கொண்டு ஜனனம் ஆனதிற்கு எல்லை இல்லாத புண்ணிய பெருமை அடைகின்றேன் ஐயா. நட்ட கல்லை தெய்வம் என! நாலு புஷ்பம் சாத்தியே!
    முனு முனு என்று சொல்லும் மந்திரம் ஏதட ,
    நட்ட கல்லும் பேசுமோ! (சிவ)
    நாதன் உள்ளில் இருக்கையில் !
    சுட்ட சட்டி கறியின் சுவை அறியுமோ!
    சித்த பெருமான்!!!
    (பிழைக்கு மன்னிக்கவும்)/////

    நாட்டின் இன்றைய நிலை தெரியுமா? நட்ட கல்லை வணங்குபவன் கொஞ்சம் அசந்தால்,அதைச் சுட்டுக்கொண்டுபோய், எங்காவது விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் சரக்கடித்து சாந்தமாகும் (ஆ) சாமிகள்தான் நாட்டில் அதிகம்!

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அருமையான பதிவு!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    எல்லாவற்றையும் நல்ல பதிவு என்கிறீர்களே? ஒன்றையாவது சரியாக இல்லை என்று சொல்வீர்களா என்று பார்க்கிறேன். நடக்கவில்லையே சுவாமி!

    ReplyDelete
  7. ////Blogger KS said...
    kp method மிக திருத்தமானது , ruling planet ,மற்றும் sub lord (உப நட்சத்திராதிபதி )கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.ஸ்வாமி ஓம்கார் kp முறையையே பின்பற்றுவதாகச் சொன்ன ஞாபகம்.ராசிச் சக்கரம் 249 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு குறிகாட்டி கருத்திலெடுக்கப்பட்டு பலன் சொல்லப்படும்.5ம் வீட்டு உப நட்சத்திராதிபதியின் நட்சத்திராதிபதி 2/5/11 ஐ குறிகாட்டி(positive pregnancy)அத்துடன் அது புதனாக அல்லது ஒரு இரட்டை கிரகமானால் இரட்டைப் பிறவியாம்.
    http://kpastrology.astrosage.com/Home/house-grouping
    இந்த சுட்டி சொல்கிறது ,அடியேன் பரீட்சிக்க வில்லை.
    அறிந்தவர்கள் அலசலாம்
    நன்றி/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //////Blogger dhana said...
    Thank you! Present Sir./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    கேள்வியும் நானே பதிலும் நானே தலைப்பு அருமை ......இரட்டை பிறவிகள் பற்றிய விளக்கம் சிறப்பு அய்யா.....கே.பி.முறை ஜோதிடம் பற்றி சமீபத்தில் ஒம்கார் சுவாமிஜி அவர்களின் பதிவில் தற்செயலாக படித்தேன் அதை பற்றி விளக்கம் கேட்கலாம் என்று எண்ணம் கொண்டிருந்தேன் தாங்களே அதை துவக்கி விட்டீர்கள் .....
    நன்றி வணக்கம்.....////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  10. sukkiran yenna thozhil karagan yenbathai kurippidavillai.
    poriyial thurai,computer knowledge ,cosmatic business,palthurai vithagan,kalai,

    ReplyDelete
  11. குருவே வணக்கம்,
    மிக அருமையான பதிவு.

    Brgds,
    R.A.Nainar

    ReplyDelete
  12. ////jee said...
    present sir.////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  13. //////arasaivadivel said...
    sukkiran yenna thozhil karagan yenbathai kurippidavillai.
    poriyial thurai,computer knowledge ,cosmatic business,palthurai vithagan,kalai,//////

    பத்தாம் வீட்டைப் பற்றி முன் பதிவுகளில் விவரமாக எழுதியுள்ளேன். தேடிப்பிடித்து அதைப் படியுங்கள்!

    ReplyDelete
  14. ////arumuga nainar said...
    குருவே வணக்கம்,
    மிக அருமையான பதிவு.
    rgds,
    R.A.Nainar////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நைனார்!

    ReplyDelete
  15. இரட்டை பிறவிகள் பற்றிய விளக்கம் சிறப்பு அய்யா.நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது

    ReplyDelete
  16. "எல்லாவற்றையும் நல்ல பதிவு என்கிறீர்களே? ஒன்றையாவது சரியாக இல்லை என்று சொல்வீர்களா என்று பார்க்கிறேன். நடக்கவில்லையே சுவாமி!"

    ஐயா,

    நிலவும் மலரும் சுடட்டும்,
    கதிரோனும் தேய்ந்து வளரட்டும்,
    தென்றலும் புயலென வேஷம் போடட்டும்
    சித்திரை மாதம் குளிரெட்டும்.

    சான்றோர் எல்லாம் திருடட்டும்
    மான்றோர் எல்லாம் திரும்பட்டும்
    தமிழ் இங்கு கசக்கட்டும்
    தரணி பரந்த தமிழினம் அழியட்டும்

    மேலுரை அனைத்தும் சாத்தியமானால்
    வாத்தியாரின் பாடமும் பொய்த்த தென்பேன்!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  17. /////ஆர்.கே.சதீஷ்குமார் said...
    இரட்டை பிறவிகள் பற்றிய விளக்கம் சிறப்பு அய்யா.நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. /////Alasiam G said...
    "எல்லாவற்றையும் நல்ல பதிவு என்கிறீர்களே? ஒன்றையாவது சரியாக இல்லை என்று சொல்வீர்களா என்று பார்க்கிறேன். நடக்கவில்லையே சுவாமி!"
    ஐயா,
    நிலவும் மலரும் சுடட்டும்,
    கதிரோனும் தேய்ந்து வளரட்டும்,
    தென்றலும் புயலென வேஷம் போடட்டும்
    சித்திரை மாதம் குளிரெட்டும்.
    சான்றோர் எல்லாம் திருடட்டும்
    மான்றோர் எல்லாம் திரும்பட்டும்
    தமிழ் இங்கு கசக்கட்டும்
    தரணி பரந்த தமிழினம் அழியட்டும்
    மேலுரை அனைத்தும் சாத்தியமானால்
    வாத்தியாரின் பாடமும் பொய்த்த தென்பேன்!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    உங்களின் அன்பிற்கும், என் மேல் தாங்கள் வைத்திருக்கும் பிரியத்திற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. //////NARESH said...
    Hi sir,
    Good after noon!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  20. வாத்தியார் அய்யா வணக்கம். ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் யார்? எல்லோருக்கும் பொதுவா? ஒரு வீட்டின் அதிபதி இன்னொரு வீட்டில் இருப்பது புரிகிறது. ஆனால், சில ராசி கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்கள் இருந்தால், பவர் எப்படி இருக்கும்?

    என் அப்பா சொல்வார் "ஜோசியத்தால் பரிகாரம் செய்து கெட்டவர்கள் தான் அதிகம்" ( திண்டுக்கல் பழமொழி )

    அப்படியானால் ஜோதிடம் எப்படி உபயோகத்தில் கொள்வது?

    ReplyDelete
  21. இரட்டையர்கள் பற்றி Jagannatha Hora ஆசிரியர் PVR நரசிம்ம ராவ் அவர்கள் எழுதிய கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன். Twins with a difference என்ற தலைப்பில் case studyயாக கொடுத்திருக்கிறார். http://www.vedicastrologer.org/050200.htm

    ReplyDelete
  22. ///Raju said...
    வாத்தியார் அய்யா வணக்கம். ஒவ்வொரு வீட்டின் அதிபதிகள் யார்? எல்லோருக்கும் பொதுவா? ஒரு வீட்டின் அதிபதி இன்னொரு வீட்டில் இருப்பது புரிகிறது. ஆனால், சில ராசி கட்டங்களில் இரண்டு மூன்று கிரகங்கள் இருந்தால், பவர் எப்படி இருக்கும்?
    என் அப்பா சொல்வார் "ஜோசியத்தால் பரிகாரம் செய்து கெட்டவர்கள் தான் அதிகம்" ( திண்டுக்கல் பழமொழி ) அப்படியானால் ஜோதிடம் எப்படி உபயோகத்தில் கொள்வது?/////

    ஜோதிடம் என்ன ஹோண்டா மோட்டார் சைக்கிளா - தினசரி உபயோகத்தில் வைத்துக்கொள்வதற்கு?
    நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பழைய பாடங்களில் விடை உள்ளது. முதலி ல் அவற்றைப் படியுங்கள். அதற்கு முன்பாக பதிவின் தலைப்புப்பகுதியில் உள்ள பொது அறிவிப்பைப் படியுங்கள்.

    ReplyDelete
  23. /////ananth said...
    இரட்டையர்கள் பற்றி Jagannatha Hora ஆசிரியர் PVR நரசிம்ம ராவ் அவர்கள் எழுதிய கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதன் சுட்டி கொடுத்திருக்கிறேன். Twins with a difference என்ற தலைப்பில் case studyயாக கொடுத்திருக்கிறார். http://www.vedicastrologer.org/050200.htm///

    தகவலுக்கு நன்றி ஆனந்த்! நானும் படித்துப்பார்க்கிறேன்

    ReplyDelete
  24. Sir, The way you are teaching is simply suberb and understandable.

    ReplyDelete
  25. //ஜோதிடம் என்ன ஹோண்டா மோட்டார் சைக்கிளா - தினசரி உபயோகத்தில் வைத்துக்கொள்வதற்கு?//

    Please read the full para - with intended meaning.

    Here again

    ***என் அப்பா சொல்வார் "ஜோசியத்தால் பரிகாரம் செய்து கெட்டவர்கள் தான் அதிகம்" ( திண்டுக்கல் பழமொழி ) அப்படியானால் ஜோதிடம் எப்படி உபயோகத்தில் கொள்வது?***

    So how can we "use" Astrology? What to expect on "readings"?

    Note - I am reading your posts for very long time, thanks for it, and I can tell that I did not find an answer to my question.

    ReplyDelete
  26. கிருஷ்ணமூர்த்திபத்ததி(கேபி), ஒரு கிரஹம் தான் சஞ்ச‌ரிக்கும் நட்சத்திர அதிபதியின் நிலையையும் உபநட்சத்திர அதிபதியின் நிலையையுமே தருகிறது என்ற அடிப்படையில் பலன் சொல்கிறது.கோள்சார பலன் அளித்ததில் கேபி முறை பல வெற்றிகளைக் கண்டுள்ளது.249க்குள் எண் கேட்டுப் பெற்று ஹோரரி ஜாதகம் கணித்துக் கொண்டு பலன் சொல்கிறார்கள்.பாரம்பரிய முறை, ஒருவர் பிற‌ந்த நேர கிரஹங்கள் அப்படியே அங்கேயே நிலை பெற்று நின்று விட்டதாக‌ அனுமானித்துக்கொண்டு ப‌ல‌னைக் கொடுக்கிற‌து. ஆனா‌ல் கேபி எப்போதும் ந‌க‌ரும் கிரஹங்க‌‌ளை க‌ண‌க்கில் எடுத்துக்கொண்டு ப‌ல‌ன் கேட்க்கும் நேர‌ கிர‌ஹநிலை‌யைக்கொண்டு ந‌ட்ச‌த்திர‌,உபந‌‌ட்ச‌த்திர‌, உப‌ உப‌ ந‌ட்ச‌த்திர‌த்தில் கிர‌ஹ‌ ச‌ஞ்சார‌ம், அவ‌ற்றின் ப‌ல‌ம், கூட்டு, ஆகிய‌வை கொண்டு கோள்சார‌த்திற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து ப‌ல‌ன் சொல்கிற‌து.தான் சென்ற‌ விமான‌ம் ட‌ச் ட‌வுன் செய்ய‌ப் போகும் நேர‌த்தை
    வினாடி சுத்த‌மாக‌ ப‌ய‌ண‌த்தின் போதே க‌ணித்து அமெரிக்க‌ சோதிட‌ர்க‌ளை
    விய‌ப்பில் ஆழ்த்தினாராம் கிருஷ்ண‌‌மூர்த்தி.பார‌ம்ப‌ரிய‌ சோதிட‌ அடிப்ப‌டை தெரிந்த‌வ‌ர்க‌ளுக்குத்தான் கேபி புரியும்.

    ReplyDelete
  27. (kp)கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஜனன ஜாதகத்தைவிட ப்ரசன்ன ஜாதகத்திலேயே மிகத் திருத்தமாகப் பலன் சொல்ல முடியும் என்று கூறுகிறார்
    ( பிரசன்னத்திலேயே திசை புத்தி எல்லாம் கணிதுப் பலன் சொல்லும் வித்தை அவருடையது )
    அவரின் பிரசன்ன ஜோதிடம் படிப்பதற்கு மர்ம் நாவல் போல் இருக்கும்.அவரின் 12 புத்தகங்களில் 6 மட்டுமே எனக்குப் படிக்கக் கிடைத்து.
    ஜாதகத்தை மறுப்பவர்கள் அவற்றைப் படிக்கநேர்ந்தால் வாயடைத்துப் போவார்கள்.
    அந்த அருஞ்செல்வத்தைப் பலர் தவறவிடுகிறார்கள் என்பதை அறியும்போது வேதனை அடைகிறேன்.
    ( உங்களுக்கு வரும் பின்னூட்ங்களே அதை உறுதிப்படுத்துகிறன )
    அவரின் முறையில் பிரசன்ன மற்றும் ஜனன ஜாதகம் கணிப்பதற்கான சுட்டி இதோ
    http://www.mykundali.com/#
    செல்லிடப்பேசியில் கணிப்பதற்கும் இலவச தளம் உண்டு.

    ReplyDelete
  28. /////KS.Rajan said...
    Sir, The way you are teaching is simply suburb and understandable.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  29. /////Raju said...
    //ஜோதிடம் என்ன ஹோண்டா மோட்டார் சைக்கிளா - தினசரி உபயோகத்தில் வைத்துக்கொள்வதற்கு?//
    Please read the full para - with intended meaning.
    Here again
    ***என் அப்பா சொல்வார் "ஜோசியத்தால் பரிகாரம் செய்து கெட்டவர்கள் தான் அதிகம்" ( திண்டுக்கல் பழமொழி ) அப்படியானால் ஜோதிடம் எப்படி உபயோகத்தில் கொள்வது?***
    So how can we "use" Astrology? What to expect on "readings"?///////

    இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம் என்று நான் என் பதிவில் எழுதிவருகிறேனே - நீங்கள் பார்த்ததில்லையா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////Note - I am reading your posts for very long time, thanks for it, and I can tell that I did not find an answer to my question./////

    எப்போது கேள்வியை அனுப்பினீர்கள்? என் வகுப்பில் 3 ராஜுக்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். பார்த்துச் சொல்கிறேன்!

    ReplyDelete
  30. //////kmr.krishnan said...
    கிருஷ்ணமூர்த்திபத்ததி(கேபி), ஒரு கிரஹம் தான் சஞ்ச‌ரிக்கும் நட்சத்திர அதிபதியின் நிலையையும் உபநட்சத்திர அதிபதியின் நிலையையுமே தருகிறது என்ற அடிப்படையில் பலன் சொல்கிறது.கோள்சார பலன் அளித்ததில் கேபி முறை பல வெற்றிகளைக் கண்டுள்ளது.249க்குள் எண் கேட்டுப் பெற்று ஹோரரி ஜாதகம் கணித்துக் கொண்டு பலன் சொல்கிறார்கள்.பாரம்பரிய முறை, ஒருவர் பிற‌ந்த நேர கிரஹங்கள் அப்படியே அங்கேயே நிலை பெற்று நின்று விட்டதாக‌ அனுமானித்துக்கொண்டு ப‌ல‌னைக் கொடுக்கிற‌து. ஆனா‌ல் கேபி எப்போதும் ந‌க‌ரும் கிரஹங்க‌‌ளை க‌ண‌க்கில் எடுத்துக்கொண்டு ப‌ல‌ன் கேட்க்கும் நேர‌ கிர‌ஹநிலை‌யைக்கொண்டு ந‌ட்ச‌த்திர‌,உபந‌‌ட்ச‌த்திர‌, உப‌ உப‌ ந‌ட்ச‌த்திர‌த்தில் கிர‌ஹ‌ ச‌ஞ்சார‌ம், அவ‌ற்றின் ப‌ல‌ம், கூட்டு, ஆகிய‌வை கொண்டு கோள்சார‌த்திற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து ப‌ல‌ன் சொல்கிற‌து.தான் சென்ற‌ விமான‌ம் ட‌ச் ட‌வுன் செய்ய‌ப் போகும் நேர‌த்தை வினாடி சுத்த‌மாக‌ ப‌ய‌ண‌த்தின் போதே க‌ணித்து அமெரிக்க‌ சோதிட‌ர்க‌ளை விய‌ப்பில் ஆழ்த்தினாராம் கிருஷ்ண‌‌மூர்த்தி.பார‌ம்ப‌ரிய‌ சோதிட‌ அடிப்ப‌டை தெரிந்த‌வ‌ர்க‌ளுக்குத்தான் கேபி புரியும்.//////

    நல்ல தகவல்.பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  31. KS said...
    (kp)கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஜனன ஜாதகத்தைவிட ப்ரசன்ன ஜாதகத்திலேயே மிகத் திருத்தமாகப் பலன் சொல்ல முடியும் என்று கூறுகிறார்.( பிரசன்னத்திலேயே திசை புத்தி எல்லாம் கணிதுப் பலன் சொல்லும் வித்தை அவருடையது ) அவரின் பிரசன்ன ஜோதிடம் படிப்பதற்கு மர்ம நாவல் போல் இருக்கும்.அவரின் 12 புத்தகங்களில் 6 மட்டுமே எனக்குப் படிக்கக் கிடைத்து. ஜாதகத்தை மறுப்பவர்கள் அவற்றைப் படிக்க நேர்ந்தால் வாயடைத்துப் போவார்கள். அந்த அருஞ்செல்வத்தைப் பலர் தவறவிடுகிறார்கள் என்பதை அறியும்போது வேதனை அடைகிறேன். ( உங்களுக்கு வரும் பின்னூட்டங்களே அதை உறுதிப்படுத்துகிறன )
    அவரின் முறையில் பிரசன்ன மற்றும் ஜனன ஜாதகம் கணிப்பதற்கான சுட்டி இதோ: http://www.mykundali.com/#
    செல்லிடப்பேசியில் கணிப்பதற்கும் இலவச தளம் உண்டு.////

    உங்களுடைய தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. http://www.vedicastrologer.org/050200.htm பாருங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com