மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
3.2.10
மனமே மயக்கம் கொள்ளாதே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனமே மயக்கம் கொள்ளாதே!
மனதை நெறிப்படுத்தும் தொடர் - பகுதி 1
"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன்
நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!”
- கவியரசர் கண்ணதாசன்
எல்லா மனிதர்களும் நல்லவர்களே! அந்தரு மஞ்ச்சிவாரே!’ என்று அதைத்தான் ஆந்திரத்திலும் சொல்வார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு மனிதனால் நல்லவனாக நடக்க முடியாமல் போய்விடலாம். அதற்கு அவன் என்ன செய்வான் பாவம்?
மனிதர்களில் வித்தியாசம் இல்லை. மழைத்துளியில், மழை நீரில் வித்தியாசமில்லை. அது விழுகும் அல்லது பெய்யும் இடத்தை வைத்து அதன் தன்மை மாறிவிடும். வயலில் பெய்தால் பயிருக்கு நீராகும். குளத்தில் விழுந்தால், குடிப்பதற்குப் பயன்படும். தெருக்களில் பெய்தால், நகரம் சுத்தமாகும். அதுவே சாக்கடையில் பெய்தால், யாருக்கும் பயன்படாது. அதுபோலத்தான் மனித வாழ்க்கையும்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை வைத்துத்தான் ஒரு மனிதனின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் இருக்க முடியும்
கவியரசரின் வரிகளில் கடைசியில் உள்ள இரண்டு வார்த்தைகளை மாற்றிப் பார்த்தால், மனிதர்களின் இன்றைய வாழ்க்கைக்கு அது சரியாக இருக்கும்
”நல்லவனாவதும், தீயவனாவதும் சந்தர்ப்பம் வாய்ப்பதிலே!”
___________________________________________
மனிதர்களில் வித்தியாசமில்லை என்றாலும் மனித மனங்களில் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையைச் சுட்டிக் காட்ட முடியாது. ஒருவன் கஞ்சனாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஊதாரியாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு யார் காரணம்? சந்தர்ப்ப சூழ்நிலைகளா? இல்லை, அதற்கு அவனுடைய மனம் மட்டுமே காரணம்!
ஊதாரிக்கும் (spend drift), கஞ்சனுக்கும் (miser) என்ன வித்தியாசம்?
ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்.
கஞ்சன் என்றுமே தன்னைக் கஞ்சன் என்று ஒப்புக்கொள்ள மாட்டான். சிக்கனமாக இருக்கிறேன் என்பான்.காந்தியைப்போல எளிமையாக இருக்கிறேன் என்பான்.
இந்தச் சிக்கனம் எனும் பெயரில் உலாவும் கஞ்சத்தனத்திற்கு ஒரு குட்டிக் கதை உள்ளது.
_____________________________________________________
எண்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
(இதைக் கடைசிவரை நினைவில் வையுங்கள்)
ஒரு செல்வந்தர் இருந்தார். அளவிட முடியாத பணக்காரர். ஒரு நண்பன் வந்து அவரிடம் இப்படிச் சொன்னான்:
”பக்கத்து நாட்டிலிருந்து ஆயிரம் இளம் பெண்கள் வருகிறார்கள்.”
”எதற்கு?” நம்ம ஆள் கேட்டான்.(அவனுக்கு வயது 30 தான். ஏகாரத்தில் சொல்வதால் தவறில்லை)
”வேலைக்குத்தான். அவர்கள் நாட்டில் வறட்சி. வேலையில்லாத் திண்டாட்டம். உயிர் வாழ்ந்தால் போதும் என்கின்ற நிலைமை. வேலை தேடி வருகிறார்கள்.”
”இங்கே வேலைக்குத்தான் வேண்டிய ஆட்கள் கிடைக்கிறதே!”
”இல்லை. அவர்களுக்கு சம்பளம் தேவைப்படாது. இருக்க இடம். உடுக்க உடை, உண்ண உணவு கொடுத்து வைத்துக் கொண்டால் போதும்”
”சம்பளத்தைவிட, அதற்கு அதிகம் செல்வாகுமே!”
”புரியாமல் பேசாதே! அவர்கள் எல்லா வேலைக்கும் லாயக்கானவர்கள். எல்லா வேலைக்கும் உடன் படுவார்கள். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பேசு”
”சரி, சரி! அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?”
”கேட்கிறவர்களுக்குக் கேட்கிற எண்ணிக்கையில் கொடுக்கப் போகிறோம்.”
”அப்படியானால் சரி, எனக்கு மூன்று பெண்கள். ஏற்பாடு செய்!”
“மூன்று பெண்களா? என்ன கணக்கு?”
“எனக்கு ஒன்று. என் அப்பாவிற்கு ஒன்று. என் தம்பிக்கு ஒன்று!”
வந்தவன் குறித்துக் கொண்டு போய்விட்டான்
++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து நடந்தது என்ன?
(தொடரும்)
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
Dear Sir!!!
ReplyDeleteவணக்கம்.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!!
பட்டினத்தார். அடிகளின் கூற்று!!!
உடம்பார் அழியார்! உயிர் ஆர் அழி வார் !
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே! உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே!
திருமூலர் சித்தர்
how is't
வணக்கம்..
ReplyDeleteநடந்தது என்ன???
அடுத்து நடந்தது என்ன???
இங்கேயும் தொடரும்மா...
வாழ்க வளமுடன்
அய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteஆழமான கருத்துக்கள் அதற்க்கு வலு சேர்க்க கவியரசரின் வரிகள் ...தாங்கள் இந்த கதையை எற்கனவே பதிவில் ஏற்றிய கவனம் ...உங்கள் பதிவில் படித்ததை எளிதில் மறப்போமா?
நன்றி வணக்கம்
வணக்கம் அய்யா.
ReplyDelete"மனதை நெறி படுத்தும் தொடர்"
ஆரம்பமே அசத்துறீங்க.
நன்றி அய்யா.
////kannan said...
ReplyDeleteDear Sir!!!
வணக்கம்.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!!
பட்டினத்தார். அடிகளின் கூற்று!!!
உடம்பார் அழியார்! உயிர் ஆர் அழி வார் !
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே! உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே!
திருமூலர் சித்தர்
how is't//////
நீங்களே பாதி சித்தராகிவிட்டீர்கள். நன்றாக இல்லாததை எழுதுவீர்களா, என்ன?
முதல் பாட்டு, பட்டினத்தார் பாடியதல்ல! வேறு ஒரு சித்தரின் பாடல். சட்’டென்று அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை!
/////Success said...
ReplyDeleteவணக்கம்..
நடந்தது என்ன???
அடுத்து நடந்தது என்ன???
இங்கேயும் தொடருமா...
வாழ்க வளமுடன்///////
வாசகர்களை சஸ்பென்ஸில் வைக்க வேண்டுமென்றால் தொடரும் போட்டுத்தானே வைக்க முடியும்?
////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
ஆழமான கருத்துக்கள் அதற்க்கு வலு சேர்க்க கவியரசரின் வரிகள் ...தாங்கள் இந்த கதையை எற்கனவே பதிவில் ஏற்றிய கவனம் ...உங்கள் பதிவில் படித்ததை எளிதில் மறப்போமா?
நன்றி வணக்கம்////
இந்தத் தொடர் கட்டுரைக்கு அந்தக் கதை தேவைப்படுவதால், சற்று மெருகேற்றி எழுதியிருக்கிறேன்!
நன்றி!
நிஜம் நடந்தது என்ன???
ReplyDeleteஎன்பது போல் கதை நடந்தது என்ன? என்று சீரியல் போல நிறுத்தி விட்டீர்கள்...
சுவாரசியத்தையும் கூட்டிவிட்டீர்கள்...
/////Arul said...
ReplyDeleteநிஜம் நடந்தது என்ன???
என்பது போல் கதை நடந்தது என்ன? என்று சீரியல் போல நிறுத்தி விட்டீர்கள்...
சுவாரசியத்தையும் கூட்டிவிட்டீர்கள்.../////
அப்படி நிறுத்தியதால்தான் சுவாரசியம் கூடியுள்ளது!
/////thirunarayanan said...
ReplyDeleteவணக்கம் அய்யா.
"மனதை நெறி படுத்தும் தொடர்" ஆரம்பமே அசத்துறீங்க.
நன்றி அய்யா.////
எல்லாம் உங்களுக்காகத்தான்!
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅனைவரும் மதிப்பெண் மட்டும் பெற மனப்பாடம் செய்த சில
மானப் பாடங்களை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். -தமிழ்க் கிழவி
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து - தமிழ்க் கிழவி
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. -தமிழ்க் கிழவி
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். - தமிழ்க் கிழவி.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. - வள்ளுவர்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - வள்ளுவர்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்? - வள்ளுவர்
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. - வள்ளுவர்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. - வள்ளுவர்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. -வள்ளுவர்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. - வள்ளுவர்
அறிவு,திறமை இதனோடு கூடிய கல்வியே செல்வத்தைக் கொடுக்கும்.
ஈகை, கடமை அதனோடு கூடியப் பணிவே நல் வாழ்க்கையைக் கொடுக்கும்.
கருணை, பொறுமை, அதனோடு கூடிய பக்தியே வாழும் போதே நல் மோட்சத்தை கொடுக்கும்.
பொருள் ஒரு பொருட்டல்ல அருள் வேண்டுவோருக்கு - அப்படியே ஆகிவிடும்
இருளும் மருளும் நிறைந்தோருக்கும்.
கல்வியும், கேள்வியும், மெய்யுணர்வும் அழியாச் செல்வம் என்றால் அற்ப உடம்பில் ஓடும் குருதியை விற்ற பொருள் கொண்டாவது அதைப் பெற்றிடுவோம்.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. - வள்ளுவர்
தனக்கு பொருள் தேடியும்,
தன் பிள்ளைக்கு பொருளத் தேட வழி கூறியும்
இசை பட வாழ்தலே வாழ்க்கை.
நன்றிகள் குருவே!
ஆலாசியம் கோ.
இங்கயுமா தொடரும்... டிவி சீரியல் மாதிரில இருக்கு....
ReplyDeleteIs coffee good or bad for me?
ReplyDeleteCoffee doesn't seem to hurt and actually may help. No, it doesn't raise cancer or heart attack risk if consumed in moderation (no more than two cups a day). Four to seven cups a day, however, can cause restlessness, anxiety, irritability, sleeplessness and headaches. Coffee is believed to protect against Parkinson's disease, type 2 diabetes and liver cancer.
தங்களுக்கு தொடர் நாடகத்திற்கு திரைக் கதை ஆசிரியராகும் தகுதி நிறைய இருக்கிறது. சரியான இடத்தில்தான் தொடரும் போடுகிறீர்கள்.
ReplyDelete/////sundinesh1 said...
ReplyDeleteஅய்யா வணக்கம்
த்ரேக்கான,சப்தாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடஷாம்சம், விம்ஷத்யம்ஷம் ஏறக், முதலியவை கணக்கிடுவது எப்படி. அந்த பாடங்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ./////
//vaathiyar said
காரை ஓட்டுவத்ற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதாதா? மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா?:-)))
///
மெக்கானிக் வேலை தெரிந்தால் நாமே ரிப்பேர் செய்துவிடலாமே . அதற்க்க்காகதான் அய்யா , அந்த கேட்கிறேன் .
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
அனைவரும் மதிப்பெண் மட்டும் பெற மனப்பாடம் செய்த சில
மானப் பாடங்களை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். -தமிழ்க் கிழவி
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து - தமிழ்க் கிழவி
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. -தமிழ்க் கிழவி
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். - தமிழ்க் கிழவி.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. - வள்ளுவர்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - வள்ளுவர்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்? - வள்ளுவர்
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. - வள்ளுவர்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. - வள்ளுவர்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. -வள்ளுவர்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. - வள்ளுவர்
அறிவு,திறமை இதனோடு கூடிய கல்வியே செல்வத்தைக் கொடுக்கும்.
ஈகை, கடமை அதனோடு கூடியப் பணிவே நல் வாழ்க்கையைக் கொடுக்கும்.
கருணை, பொறுமை, அதனோடு கூடிய பக்தியே வாழும் போதே நல் மோட்சத்தை கொடுக்கும்.
பொருள் ஒரு பொருட்டல்ல அருள் வேண்டுவோருக்கு - அப்படியே ஆகிவிடும்
இருளும் மருளும் நிறைந்தோருக்கும்.
கல்வியும், கேள்வியும், மெய்யுணர்வும் அழியாச் செல்வம் என்றால் அற்ப உடம்பில் ஓடும் குருதியை விற்ற பொருள் கொண்டாவது அதைப் பெற்றிடுவோம்.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. - வள்ளுவர்
தனக்கு பொருள் தேடியும்,
தன் பிள்ளைக்கு பொருளத் தேட வழி கூறியும்
இசை பட வாழ்தலே வாழ்க்கை.
நன்றிகள் குருவே!
ஆலாசியம் கோ.//////
அசத்திட்டீங்க ஆலாசியம். நன்றி! இன்று வேலைக்குப் போகவில்லையா? இத்தனை வரிகளைத் தட்டச்சு செய்து பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்? பின்னூட்டமே ஒரு பதிவு அளவிற்கு இருக்கிறது!
/////மதி said...
ReplyDeleteஇங்கயுமா தொடரும்... டிவி சீரியல் மாதிரில இருக்கு....//////
ஒரு சுவாரசியத்திற்காக, முக்கியமான இடத்தில் இப்படித் தொடரும் என்று போடுவது எழுதுவதில் உள்ள நயம். வாசகர்களை அடுத்த பதிவுவரை ஆர்வத்தில் நிறுத்தி (அல்லது உட்கார) வைக்கலாம் இல்லையா?
////sundari said...
ReplyDeleteIs coffee good or bad for me?
Coffee doesn't seem to hurt and actually may help. No, it doesn't raise cancer or heart attack risk if consumed in moderation (no more than two cups a day). Four to seven cups a day, however, can cause restlessness, anxiety, irritability, sleeplessness and headaches. Coffee is believed to protect against Parkinson's disease, type 2 diabetes and liver cancer.////
தகவலுக்கு நன்றி சகோதரி!
/////ananth said...
ReplyDeleteதங்களுக்கு தொடர் நாடகத்திற்கு திரைக் கதை ஆசிரியராகும் தகுதி நிறைய இருக்கிறது. சரியான இடத்தில்தான் தொடரும் போடுகிறீர்கள்../////
ஒரு கதையை சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்லும் உத்திகளில் இதுவும் ஒன்று:-)))
//////sundinesh1 said...
ReplyDelete/////sundinesh1 said...
அய்யா வணக்கம்
த்ரேக்கான,சப்தாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடஷாம்சம், விம்ஷத்யம்ஷம் ஏறக், முதலியவை கணக்கிடுவது எப்படி. அந்த பாடங்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ./////
//vaathiyar said
காரை ஓட்டுவதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதாதா? மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா?:-))) ///
மெக்கானிக் வேலை தெரிந்தால் நாமே ரிப்பேர் செய்துவிடலாமே . அதற்காகத்தான் அய்யா , அந்த கேட்கிறேன் .////////
செய்துவிட்டால் போகிறது. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறென். பொறுத்திருங்கள்!
கஞ்சத்தனம் பற்றிப் பேசும் முன் உதார குணத்திர்க்கு ஒரு தகவல்.எப்போதும்
ReplyDeleteஇறை சிந்தனையிலேயே இருக்கும் ஒரு ஞானியின் ரொட்டியை நாய் ஒன்று அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டது. ஞானிக்கு அந்த நாயும் இறைவனாகத் தோன்ற கையில் வெண்ணைப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு
பின்னாலேயே ஒடுகிறார்."நில் ஆண்டவனே!வெண்ணைதடவித்தருகிறேன்
வெண்ணை தடவாத ரொட்டியை மெல்வது சிரமமாக இருக்கும் ஆண்டவனே!"
மன்னிக்கவும் அய்யா,
ReplyDeleteநிறைய இடங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன்.
சற்று ஓய்வு கிடைத்தது அந்த நேரத்தில் தான் நிறைய போயிற்று.
அன்புடன்,
ஆலாசியம் கோ.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
ReplyDeleteநாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!!
ஒரு சுடுகாட்டு வெடடியன் ஒரு ஊரில் வாழ்ந்தார். அவர் தினசரி யாராவது செத்து போவங்களா நம்க்கு வேலை கிடைக்குமா அதாவது புதைகுழி தோண்ட வாய்ப்பு கிடைக்கும்மா என்று கஷ்டபடுவர் அடிக்கடி சாவுவிழ வேண்டும் என்று சாமி கும்மிடுவார் அவருக்கு ரொம்ப நாட்களா குழந்தையில்லாமல் இருந்தார் ஒரூ நாள் அவங்க மனைவி சொன்னங்க நீஙக அப்பாவா ஆக போறீஙக என்று அதிலிருந்து அவருக்கு ரொமப மகிழ்ச்சி அதே நேரத்தில் அவருக்கு பையன் பிறந்தான். அவருக்கு குழந்தையின் வளர்ப்புக்காக பணமும் தேவைப்பட்டது. கிரமாத்தார்கள் வ்ந்து அவங்க வீட்டு சாவு செய்தி சொல்லி கூப்பிட்டு போகும் பொழுது மலர்ந்த முகத்தோடு சாமி கும்மிட்டுவிட்டு போவார்
சாவு குழி தோண்டும் பொழுது
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!! இந்த பாட்டை ரொம்ப சந்தோஷ்மா பாடுவார். ஒரு துக்கமும் இல்லாமல் வேலையைமுடித்து விட்டு வீட்டுக்கு வந்து நல்ல சாப்பிட்டுவிட்டு தூங்குவார் இபடியே காலம் சென்றது ஒரு நாள் அவருடைய மகன் நோயுற்றான், எவ்வளவு வைத்தியம் செய்தும் சரியாகவில்லை முதல் முறையாக இறைவனிடம் சென்று என்மகன் சாககூடாது அவனுக்கு நான் குழி
தோண்ட கூடாது என் வேண்டினார் ஆனால் காலதேவன் இரக்கம் காட்டவில்லை மகனை இழந்துவிட்டார் குழி பறிக்கும் பொழுது அந்த பாட்டைபாடாமல் அழுதிட்டே இருந்தர்ர் அப்புறம் அவர் மரண துக்கத்தை புரிந்து கொண்டு இனிமே இந்த வேலையை நான் செய்ய மாட்டேன் என்று
மனைவிகிட்டே சொல்லிட்டு அவளையும் ஒரு வழியா தேத்திட்டு வேற வேலைக்கு போய்விட்டார். சாவு வீட்டுகாரங்க வந்து ரொம்ப கெஞ்சி கேட்ட கூட அதிக பணம் தரேன் என்று சொன்ன கூட் அவங்க்ளுக்கு வேலை செய்ய(சவ அடக்க வேலையை செய்ய) ம்றுத்துவிட்டார்.
ஐயா!
ReplyDeleteஇன்று! அதிகாலை வேலை (Morning shift Duty ) என்பதனால் முழுமையாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை!
Dear Sir!!!
வணக்கம்.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!!
குதம்பை சித்தர்! என்று நினைக்கின்றேன் ஐயா !!!
உடம்பார் அழிவார் எனில், உயிரார் அழிவார்!
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உயிரை! வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்! உயிரை வளர்த்தேனே!
திருமூலர் சித்தர்!
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
வேதம்! நான்கினும் மெய்பொருள் ஆவது
நாதன்தா நமசிவா எவே!
யாரோ ஒரு தமிழ் புலவர் !!!!
"நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
ReplyDeleteபுல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது அவ்வைத்தாயார் அருளியது நம் வகுப்பிற்கு வரும் எல்லோரும் நல்லவர்களாக இருக்கும் போது..... மழை பொய்க்காது.
- லலித்
present sir
ReplyDeleteSir,
ReplyDeleteDid u write any posts today (feb 4,2010) becoz I don't see it in your blog sir.
Thanuja
«ö¡ Žì¸õ!
ReplyDelete¿¡ý ¾¢Õôâ¡¢ø ¸½¢É¢ô À¢ĸõ ¿¼ò¾¢ ÅÕ¸¢§Èý.
ÁýÉ¢ì¸×õ! þô¦À¡ØÐ ¾¡ý ¨¸¦ÂØòÐô §À¡¼ §ÅñÎõ ±ý§È ¦¾¡¢ó¾Ð.
¯í¸û À¡¼í¸¨Ç ÀÊòÐ ÅÕ¸¢§Èý. ¿ýÈ¡¸ô Ò¡¢ó¾ À¢ý ¾¡ý «Îò¾ À¡¼õ ¦ºøÄ §ÅñÎõ ±ýÚ ¿¡ý ¦ÁÐÅ¡¸ô ÀÊòÐ ÅÕ¸¢§Èý(§¿ÃÁ¢ý¨Á ¸¡Ã½Á¡¸×õ).
¿ýÈ¢!
அந்த நல்லார் சிலரில் நம் ஆசிரியரும் ஒருவே நண்பரே!
ReplyDeleteஅவர் தம் நல்ல செயலே நமக்கு (புல்லுக்கு பொசிகிறதே).
சகோதரி சுந்தரி,
ReplyDeleteஉங்கள் கதை அழகு!
அது கண்ட தமிழ் நடை அழகு!
மொழி அழகு!
மொத்தத்தில் பிழையில்லா
உரை நடையோ மிக அழகு!
வாழ்த்துக்கள்!
பாராட்டிப் பழகுவோம்!
அது நம் மனதையும் சீராட்டும்!
அன்புடன்,
ஆலாசியம் கோ.
சகோதரி சுந்தரி,
ReplyDeleteஉங்கள் கதை அழகு!
அது கண்ட தமிழ் நடை அழகு!
மொழி அழகு!
மொத்தத்தில் பிழையில்லா
உரை நடையோ மிக அழகு!
வாழ்த்துக்கள்!
பாராட்டிப் பழகுவோம்!
அது நம் மனதையும் சீராட்டும்!
அன்புடன்,
ஆலாசியம் கோ.///
சகோதரர் ஆலோசியத்திற்கு ரொம்ப நன்றி நீங்க எழுதிய ஔவையார் பாடல் திருக்குறள் எல்லா நல்லாயிருந்தது தங்கள் த்மிழ் வகுப்பிற்கு எனனை அழைத்து சென்று விட்டீர்கள் மலர்ந்த நினைவுகள் சின்ன குழந்தையில்லா படித்ததை ஞாபகப்படித்தினீர்கள். இப்ப உடம்பு நல்லாயிடுச்சா நல்லாயிருக்கிறீங்களா.
சுந்தரி
/////kmr.krishnan said...
ReplyDeleteகஞ்சத்தனம் பற்றிப் பேசும் முன் உதார குணத்திர்க்கு ஒரு தகவல்.எப்போதும்
இறை சிந்தனையிலேயே இருக்கும் ஒரு ஞானியின் ரொட்டியை நாய் ஒன்று அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டது. ஞானிக்கு அந்த நாயும் இறைவனாகத் தோன்ற கையில் வெண்ணைப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே ஒடுகிறார்."நில் ஆண்டவனே! வெண்ணைதடவித்தருகிறேன்
வெண்ணை தடவாத ரொட்டியை மெல்வது சிரமமாக இருக்கும் ஆண்டவனே!"/////
நன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!
//////Alasiam G said...
ReplyDeleteமன்னிக்கவும் அய்யா, நிறைய இடங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன்.
சற்று ஓய்வு கிடைத்தது அந்த நேரத்தில் தான் நிறைய போயிற்று.
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
அதனாலென்ன பரவாயில்லை. இடப் பாரம் கூகுள் ஆண்டவருக்குத்தான். நம் இருவருக்குமில்லை!
//////sundari said...
ReplyDeleteநந்த வனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி - அதை,
கூத்தாடி கூத்தாடி போட்டு உடைதாண்டி!!!
ஒரு ஊரில் ஒரு வெட்டியன் வாழ்ந்தார். அவர் தினசரி யாராவது செத்து போவங்களா நமக்கு வேலை கிடைக்குமா அதாவது புதைகுழி தோண்ட வாய்ப்பு கிடைக்கும்மா என்று கஷ்டப்படுவார் அடிக்கடி சாவுவிழ வேண்டும் என்று சாமி கும்மிடுவார் அவருக்கு ரொம்ப நாட்களா குழந்தையில்லாமல் இருந்தார் ஒரூ நாள் அவங்க மனைவி சொன்னங்க நீஙக அப்பாவா ஆக போறீஙக என்று அதிலிருந்து அவருக்கு ரொமப மகிழ்ச்சி அதே நேரத்தில் அவருக்கு பையன் பிறந்தான். அவருக்கு குழந்தையின் வளர்ப்புக்காக பணமும் தேவைப்பட்டது. கிரமாத்தார்கள் வ்ந்து அவங்க வீட்டு சாவு செய்தி சொல்லி கூப்பிட்டு போகும் பொழுது மலர்ந்த முகத்தோடு சாமி கும்மிட்டுவிட்டு போவார்கள்
சாவு குழி தோண்டும் பொழுது
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!! இந்த பாட்டை ரொம்ப சந்தோஷமா பாடுவார். ஒரு துக்கமும் இல்லாமல் வேலையைமுடித்து விட்டு வீட்டுக்கு வந்து நல்ல சாப்பிட்டுவிட்டு தூங்குவார் இபடியே காலம் சென்றது ஒரு நாள் அவருடைய மகன் நோயுற்றான், எவ்வளவு வைத்தியம் செய்தும் சரியாகவில்லை முதல் முறையாக இறைவனிடம் சென்று என் மகன் சாககூடாது அவனுக்கு நான் குழி தோண்டக் கூடாது என் வேண்டினார் ஆனால் காலதேவன் இரக்கம் காட்டவில்லை மகனை இழந்துவிட்டார் குழி பறிக்கும் பொழுது அந்த பாட்டைபாடாமல் அழுதிட்டே இருந்தார் அப்புறம் அவர் மரண துக்கத்தை புரிந்து கொண்டு இனிமே இந்த வேலையை நான் செய்ய மாட்டேன் என்று மனைவிகிட்டே சொல்லிட்டு அவளையும் ஒரு வழியா தேத்திட்டு வேற வேலைக்கு போய்விட்டார். சாவு வீட்டுகாரங்க வந்து ரொம்ப கெஞ்சி கேட்ட கூட அதிக பணம் தரேன் என்று சொன்ன கூட் அவங்களுக்கு வேலை செய்ய(சவ அடக்க வேலையை செய்ய) மறுத்துவிட்டார்.//////
உங்கள் கதைப்பகிர்விற்கு நன்றி சகோதரி!
////kannan said...
ReplyDeleteஐயா! இன்று! அதிகாலை வேலை (Morning shift Duty ) என்பதனால் முழுமையாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை!
Dear Sir!!!
வணக்கம்.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்
நாலாறு மாதமாக குயவனை வேண்டி
கொண்டுவந்தானடி ஒரு தோண்டி!
அதை, கூத்தாடி கூத்தாடி போட்டு
உடைதாண்டி!!!
குதம்பை சித்தர்! என்று நினைக்கின்றேன் ஐயா !!!
உடம்பார் அழிவார் எனில், உயிரார் அழிவார்!
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உயிரை! வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்! உயிரை வளர்த்தேனே!
திருமூலர் சித்தர்!
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
வேதம்! நான்கினும் மெய்பொருள் ஆவது
நாதன்தாள் நமசிவாவே!
யாரோ ஒரு தமிழ் புலவர் !!!!//////
நல்லது. பாடல்களைத் தேடிப்பிடித்துத் தந்தமைக்கு நன்றி கண்ணன்!
////லலித் said...
ReplyDelete"நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது அவ்வைத்தாயார் அருளியது நம் வகுப்பிற்கு வரும் எல்லோரும் நல்லவர்களாக இருக்கும் போது..... மழை பொய்க்காது.
- லலித்//////
நல்லது.நன்றி!
////Anbu said...
ReplyDeletepresent sir////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////Thanuja said...
ReplyDeleteSir,
Did u write any posts today (feb 4,2010) becoz I don't see it in your blog sir.
Thanuja////
இல்லை சகோதரி! காரணத்தை அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
//////phoenix said...
ReplyDelete«ö¡ Žì¸õ!
¿¡ý ¾¢Õôâ¡¢ø ¸½¢É¢ô À¢ĸõ ¿¼ò¾¢ ÅÕ¸¢§Èý.
ÁýÉ¢ì¸×õ! þô¦À¡ØÐ ¾¡ý ¨¸¦ÂØòÐô §À¡¼ §ÅñÎõ ±ý§È ¦¾¡¢ó¾Ð.
¯í¸û À¡¼í¸¨Ç ÀÊòÐ ÅÕ¸¢§Èý. ¿ýÈ¡¸ô Ò¡¢ó¾ À¢ý ¾¡ý «Îò¾ À¡¼õ ¦ºøÄ §ÅñÎõ ±ýÚ ¿¡ý ¦ÁÐÅ¡¸ô ÀÊòÐ ÅÕ¸¢§Èý(§¿ÃÁ¢ý¨Á ¸¡Ã½Á¡¸×õ).
¿ýÈ¢! - உங்கள் எழுத்துரு படிக்கும்படியாக இல்லை. யுனிகோட் தமிழைப் பயன் படுத்துங்கள். உங்கள் எழுத்துக்களை நான் யுனிகோட் தமிழாக மாற்றிக் கீழே கொடுத்துள்ளேன்:
அய்யா வணக்கம்! நான் திருப்பூரில் கணினிப் பயிலகம் நடத்தி வருகிறேன்.மன்னிக்கவும்! இப்பொழுது தான் கையெழுத்துப் போட வேண்டும் என்றே தெரிந்தது. உங்கள் பாடங்களை படித்து வருகிறேன். நன்றாகப் புரிந்த பின்தான் அடுத்த பாடம் செல்லவேண்டும் என்று நான் மெதுவாகப் படித்து வருகிறேன்(நேரமின்மை காரணமாகவும்).//////
நல்லது நன்றி!
////Alasiam G said...
ReplyDeleteஅந்த நல்லார் சிலரில் நம் ஆசிரியரும் ஒருவர் நண்பரே!
அவர்தம் நல்ல செயலே நமக்கு (புல்லுக்கு பொசிகிறதே)./////
நம் மாணவர்களைப் புல்’ லென்று சொல்ல வேண்டாம். அத்தனையும், மலர், மற்றும் வளர்ந்து கனிதரப்போகும் செடிகள்!
கஞ்சத்தனம் பற்றிப் பேசும் முன் உதார குணத்திர்க்கு ஒரு தகவல்.எப்போதும்
ReplyDeleteஇறை சிந்தனையிலேயே இருக்கும் ஒரு ஞானியின் ரொட்டியை நாய் ஒன்று அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டது. ஞானிக்கு அந்த நாயும் இறைவனாகத் தோன்ற கையில் வெண்ணைப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே ஒடுகிறார்."நில் ஆண்டவனே! வெண்ணைதடவித்தருகிறேன்
வெண்ணை தடவாத ரொட்டியை மெல்வது சிரமமாக இருக்கும் ஆண்டவனே!"/////
அப்பா ரொம்ப நல்லாயிருக்கிறது. நீங்க இந்தமாதரி ரொம்ப சொல்லி சொல்லி என் நெஞ்சத்தை தொட்டு விடுகிறீர்கள் வாத்தியார் புத்தகத்தில் சேர்பதற்க்கு வகுப்பறை பயன்பாடுப்பற்றி எழுதி அனுப்புங்க.
சுந்தரி