மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.2.10

உங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள்



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள்

சில செய்திகளில் அதிசய ஒற்றுமை இருக்கும். அத்துடன் அதன் தொடர் ஒற்றுமை நம்மை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் தன்மையுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட செய்திகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். சார், இது அறுதப் பழசு என்று முன்பே இதைத் தெரிந்தவர்கள் யாரும் பின்னூட்டம் இட வேண்டாம். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

இதைப்போன்ற, இந்தியாவில் நடந்த ஒரு அதிசய ஒற்றுமைச் செய்தியை, கோள்களுடன் தொடர்பு படுத்தி, அடுத்த பதிவில் உங்களுக்குத் தரவுள்ளேன். பொறுத்திருந்து படியுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
அப்ரஹாம்லிங்கன் கட்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1846
ஜான். எஃப் கென்னடி கட்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1946
2
அப்ரஹாம்லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட
ஆண்டு 1860
ஜான். எஃப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட
ஆண்டு 1960
3
இருவருமே civil rights களுக்காகக் குரல் கொடுத்துப் பதவிக்கு வந்தவர்கள்
(Civil Rights means the right to be civilized with other people that's not your race)
4
வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் இருவருமே தத்தம் குழந்தையைப் பறிகொடுத்திருக்கிறார்கள்
Both lost their children while living in the White House.
5
இருவருமே வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
6
தலையில் பாய்ந்த குண்டுதான் இருவரின் உயிரையும் பறித்தது.

அடுத்த அதிசயம்:
7
லிங்கனுடைய செயலாளருடைய பெயர் கென்னடி
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்
8
இருவருமே தெற்கத்தியப் பகுதி நபர்களால் கொல்லப்பட்டார்கள்
9
தெற்குப்பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்னும் பெயரையுடையவர்களே அவர்கள் இருவருக்கும் அடுத்ததாகப் பதவிக்கு வந்தார்கள்
10
லிங்கனுக்கு அடுத்துப்பதவிக்கு வந்த ஆண்ட்ரூ ஜான்சனின் பிறந்த
வருடம் 1808
கென்னடிக்கு அடுத்துப் பதவிக்கு வந்த லிண்டன் ஜான்சனின் பிறந்த
வருடம் 1908
11
லிங்கனைக் கொன்ற ஜான் வில்கெஸ் பூத் பிறந்த வருடம் 1839
கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் பிறந்த வருடம் 1939
12
கொலையாளிகள் இருவரின் பெயருமே 3 சொற்களைக் கொண்டது
அந்த மூன்று சொற்களுமே 15 எழுத்துக்களைக் கொண்டது


உங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள் அடுத்து உள்ளன!:
13
லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட அரங்கின் பெயர் 'Ford'
சுட்டுக்கொல்லப்பட்டபோது கென்னடி பயணம் செய்த காரின் பெயர் லிங்கன் (made by 'Ford')
14
ஒரு அரங்கிலிருந்து லிங்கனைச் சுட்டுக் கொன்றவன், கொலைக்குப் பிறகு ஓடி ஒளிந்த இடம் ஒரு கிடங்கு
ஒரு கிடங்கிலிருந்து கென்னடியைச் சுட்டுக் கொன்றவன் கொலைக்குப் பிறகுஓடி ஒளிந்த இடம் ஒரு அரங்கு!
15
பூத்தும், ஆஸ்வால்டும் போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே கொல்லப்பட்டார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Coincidence?

Here's a little part of US history which makes you wonder.

Kennedy - Lincoln Similarities

Abraham Lincoln was elected to Congress in 1846.
John F. Kennedy was elected to Congress in 1946.

Abraham Lincoln was elected President in 1860.
John F. Kennedy was elected President in 1960.

The names Lincoln and Kennedy each contain seven letters.

Both were particularly concerned with civil rights.

Both wives lost their children while living in the White House.

Both Presidents were shot on a Friday.

Both were shot in the head.

Lincoln's secretary was named Kennedy.
Kennedy's secretary was named Lincoln.

Both were assassinated by Southerners.

Both were succeeded by Southerners.

Both successors were named Johnson.

Andrew Johnson, who succeeded Lincoln, was born in 1808.
Lyndon Johnson, who succeeded Kennedy, was born in 1908.

John Wilkes Booth,was born in 1839.
Lee Harvey Oswald,was born in 1939.

Both assassins were known by their three names.
Both names are comprised of fifteen letters.

Booth ran from the theatre and was caught in a warehouse.
Oswald ran from a warehouse and was caught in a theatre.

Booth and Oswald were assassinated before their trials.

And here's the kicker;

A week before Lincoln was shot, he was in Monroe, Maryland.
A week before Kennedy was shot, he was ___ Marilyn Monroe.

Taken from URL: Click Here
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

38 comments:

  1. வணக்கம் ஐயா...

    ஆகா என்ன ஒரு ஒற்றுமை...பிரமை போல் உள்ளது.

    ReplyDelete
  2. அரிய தகவல்கள் அய்யா...இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை..நல்ல பதிவு.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. I Find you also make constant search in google. the present comparison is very nice. there can not be explanation for this type of rare coincidence.
    -----------------------------------

    Question: What is God?

    Answer:

    There can be a variety of definitions of God. Being limitless and beyond the realm of physical senses, it is difficult to capture the meaning of God in a few words or sentences.

    A reasonably decent definition would be as foliows:
    God is (Sachidanand) existent, intelligent and blissful. He is (Nirakaar) formless, (Sarvashaktimaan) all powerful, (Sarvajya) omniscient, (Nyayakari) just, (Dayalu) merciful, (Ajanma) unborn, (Anant) endless, (Nirvikaar) unchangeable & faultless, (Anadi) beginning-less, (Anupam) unequalled, (Sarvadhar) the support of all, (Sarveshwar) the master of all, (Sarvayapak) omnipresent, (Sarvantaryami) immanent, (Ajar) un-aging, (Amar) immortal, (Abhay) fearless, (Nitya) eternal, and (Pavitra) holy, and (Srishtikarta) the maker of all.

    But that is next step. To begin with, it is sufficient to understand that God is the manager of world around and within. This can be deciphered through a systematic process of evaluation of life and world.

    And once we are able to initiate this process of analysis, the rest of the adjectives of God would become clear automatically.

    from agniveer.com

    ReplyDelete
  4. ஆசிரியருக்கு வணக்கம்,
    அன்பு சகோதர சகோதிரிகளாகிய
    என் சக மாணவர்களுக்கும் வணக்கம்.

    அய்யா இந்த விவரகள் எனக்கு புதிது.
    மேலும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. அண்ணா!
    இதை இரு வாரங்களுக்கு முன் இன்னும் ஓர் பதிவில் ஆச்சரியத்துடன்
    படித்தேன்.
    அப்பதிவுக்குப் பின்னூட்டிய அன்பர் இதில் பல தவறுகள் உண்டெனக் கூறி
    அவரும் ஒரு தொடுப்பு ஒன்று கொடுத்திருந்தார்.
    எனக்கோ அத்தொடுப்பை ஆயும் அளவுக்குப் பொறுமையில்லை.
    ஆனால் இணையத்தில் உண்மைக்குப் புறம்பான செய்தியும் தாரளமாகக் கிடைக்கும் போல் உள்ளது.
    அப்பதிவு கிடைத்தால் அப்பின்னூட்டத்தில் உள்ள தொடுப்பை அனுப்புகிறேன்.

    ReplyDelete
  6. /////Success said...
    வணக்கம் ஐயா...
    ஆகா என்ன ஒரு ஒற்றுமை...பிரமை போல் உள்ளது./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  7. /////வேலன். said...
    அரிய தகவல்கள் அய்யா...இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை..நல்ல பதிவு.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  8. /////kmr.krishnan said...
    I Find you also make constant search in google. the present comparison is very nice. there can not be explanation for this type of rare coincidence.
    -----------------------------------
    Question: What is God?
    Answer:
    There can be a variety of definitions of God. Being limitless and beyond the realm of physical senses, it is difficult to capture the meaning of God in a few words or sentences.
    A reasonably decent definition would be as foliows:
    God is (Sachidanand) existent, intelligent and blissful. He is (Nirakaar) formless, (Sarvashaktimaan) all powerful, (Sarvajya) omniscient, (Nyayakari) just, (Dayalu) merciful, (Ajanma) unborn, (Anant) endless, (Nirvikaar) unchangeable & faultless, (Anadi) beginning-less, (Anupam) unequalled, (Sarvadhar) the support of all, (Sarveshwar) the master of all, (Sarvayapak) omnipresent, (Sarvantaryami) immanent, (Ajar) un-aging, (Amar) immortal, (Abhay) fearless, (Nitya) eternal, and (Pavitra) holy, and (Srishtikarta) the maker of all.
    But that is next step. To begin with, it is sufficient to understand that God is the manager of world around and within. This can be deciphered through a systematic process of evaluation of life and world.
    And once we are able to initiate this process of analysis, the rest of the adjectives of God would become clear automatically.
    from agniveer.com////

    கடவுளைப் பற்றிய விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்! இதைததான் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரியார் இப்படிப் பாடிவைத்துள்ளார்:

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

    உருவம் உள்ளவனாய், உருவம் இல்லாதவனாய் (அருவாய்) உள்ளவனாய், இல்லாதவனாய்......என்று இறைவனின் எல்லா நிலைகளையும் அவர் 4 வரிப் பாட்டில் வைத்தார்

    ReplyDelete
  9. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    அன்பு சகோதர சகோதிரிகளாகிய என் சக மாணவர்களுக்கும் வணக்கம்.
    அய்யா இந்த விவரகள் எனக்கு புதிது. மேலும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    ஆகா, எனக்குத் தெரியும். அதனால்தான் கொக்கிபோட்டு (suspense) வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  10. /////govind said...
    its really interesting////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  11. /////யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    அண்ணா!
    இதை இரு வாரங்களுக்கு முன் இன்னும் ஓர் பதிவில் ஆச்சரியத்துடன்
    படித்தேன்.
    அப்பதிவுக்குப் பின்னூட்டிய அன்பர் இதில் பல தவறுகள் உண்டெனக் கூறி
    அவரும் ஒரு தொடுப்பு ஒன்று கொடுத்திருந்தார்.
    எனக்கோ அத்தொடுப்பை ஆயும் அளவுக்குப் பொறுமையில்லை.
    ஆனால் இணையத்தில் உண்மைக்குப் புறம்பான செய்தியும் தாரளமாகக் கிடைக்கும் போல் உள்ளது.
    அப்பதிவு கிடைத்தால் அப்பின்னூட்டத்தில் உள்ள தொடுப்பை அனுப்புகிறேன்.////

    இல்லை யோகன்! இந்தச் செய்திகளை வேறு ஒருவர் ஆதாரத்துடன் விளக்கி உள்ளார். அதைப் படியுங்கள். அதற்கான தளம் கீழே உள்ளது
    http://www.school-for-champions.com/history/lincolnjfk.htm

    ReplyDelete
  12. வணக்கம் அய்யா ,

    அரிய தகவல்களை அறிய தந்த வாத்தியாரிக்கு நன்றிகள்.....

    ReplyDelete
  13. vanakkam aasiriyare,

    John Wilkes Booth was born in 1838 & not in 1839.

    ReplyDelete
  14. for proof pls visit


    http://en.wikipedia.org/wiki/John_Wilkes_Booth

    ReplyDelete
  15. Dear sir,
    Very rare datas for astonishment....
    Thank you.

    ReplyDelete
  16. ஐயா,

    அரிய தகவல்களை தெரிய தந்தமைக்கு மிகவும் நன்றி!!!
    இவை முன் ஜென்மத்துடன் சம்பந்தப்பட்டவையோ என எண்ணத்தோன்றுகிறது...இதைப் போல் உள்ள ஒற்றுமைகளை ஜோதிட ரத்னா மதிப்பிற்குறிய பி.வி.ஆர்.நரசிம்மராவ் அவர்கள் ஜோதிட ரீதியாக விளக்கியுள்ளார்...அதன் தளம் கீழே உள்ளது...விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்...
    http://groups.yahoo.com/group/JyotishWritings
    இதில் டிசம்பர் 13 ம் தேதி இடுகையில் Death chart and next birth chart என்ற தலைப்பில் உள்ளது.

    நன்றி...

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா,

    அறிய தகவல்களை தெறிய தந்த்மைக்கு மிகவும் நன்றி...

    ReplyDelete
  18. இது போன்ற தகவல்கள் தினமலரில் அவ்வப்போது வரும்.இருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  19. தத்துவ ஞானியே!!!

    வணக்கம் .

    என்னலாமோ சொல்லுகின்றீர்கள் ?

    என்னலாமோ செய்கின்றீர்கள் .?

    ஆனால் ?

    ................................

    ReplyDelete
  20. ஆங்கிலத்தில் Stranger than fiction என்ற ஒரு சொல் வழக்கு உண்டு. அதற்கு இதை உதாரணமாக குறிப்பிடலாம் போலிருக்கிறது. நான் தினமும் அலுவலகத்திலிருந்துதான் internet பயன்படுத்துகிறேன். நாளையிலிருந்து 6 நாட்களுக்கு அலுவலகத்திற்கு விடுமுறை. எனக்கும்தான். 6 நாள் கழித்து மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  21. ////astroadhi said...
    வணக்கம் அய்யா ,
    அரிய தகவல்களை அறிய தந்த வாத்தியாருக்கு நன்றிகள்.....////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  22. /////ms torrent said...
    vanakkam aasiriyare,
    John Wilkes Booth was born in 1838 & not in 1839.////

    நல்லது நன்றி. மற்ற பதினாலும் சரிதானே?

    ReplyDelete
  23. /////ms torrent said...
    for proof pls visit
    http://en.wikipedia.org/wiki/John_Wilkes_Booth////

    ப்ரூஃப் எதற்கு? நீங்கள் சொன்னால் போதாதா?

    ReplyDelete
  24. ////ms torrent said...
    http://www.kilty.com/l_and_k.htm/////

    சுட்டிக்கு நன்றி!

    ReplyDelete
  25. /////jee said...
    Dear sir,
    Very rare datas for astonishment....
    Thank you.////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ///////Arul said...
    ஐயா,
    அரிய தகவல்களை தெரிய தந்தமைக்கு மிகவும் நன்றி!!!
    இவை முன் ஜென்மத்துடன் சம்பந்தப்பட்டவையோ என எண்ணத்தோன்றுகிறது...இதைப் போல் உள்ள ஒற்றுமைகளை ஜோதிட ரத்னா மதிப்பிற்குறிய பி.வி.ஆர்.நரசிம்மராவ் அவர்கள் ஜோதிட ரீதியாக விளக்கியுள்ளார்...அதன் தளம் கீழே உள்ளது...விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்...
    http://groups.yahoo.com/group/JyotishWritings
    இதில் டிசம்பர் 13 ம் தேதி இடுகையில் Death chart and next birth chart என்ற தலைப்பில் உள்ளது.
    நன்றி...////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Arul said...
    வணக்கம் ஐயா,
    அறிய தகவல்களை தெறிய தந்தமைக்கு மிகவும் நன்றி.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  28. ///ஆர்.கே.சதீஷ்குமார் said...
    இது போன்ற தகவல்கள் தினமலரில் அவ்வப்போது வரும்.இருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.////

    ஆமாம். நல்லது நன்றி!

    ReplyDelete
  29. /////kannan said...
    தத்துவ ஞானியே!!!
    வணக்கம் .
    என்னலாமோ சொல்லுகின்றீர்கள் ?
    என்னலாமோ செய்கின்றீர்கள் .?
    ஆனால் ?//////

    என்ன ஆனால்...? வாத்தியாரே, குருவே, ஆசிரியரே, ஆசானே, நக்கீரரே, அப்பனே, தத்துவ ஞானியே
    என்று நீவிர் எப்படி அழைத்தாலும், என் மண்டைக்குள் அது எதுவும் ஏறாது. நான் எப்போதும் போல எளியவன். என்னுடைய போதாத நேரம் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கிறென். நேரம் சரியானவுடன் எழுதுவதை நிறுத்திவிடுவேன்:-)))))

    ReplyDelete
  30. /////ananth said...
    ஆங்கிலத்தில் Stranger than fiction என்ற ஒரு சொல் வழக்கு உண்டு. அதற்கு இதை உதாரணமாக குறிப்பிடலாம் போலிருக்கிறது. நான் தினமும் அலுவலகத்திலிருந்துதான் internet பயன்படுத்துகிறேன். நாளையிலிருந்து 6 நாட்களுக்கு அலுவலகத்திற்கு விடுமுறை. எனக்கும்தான். 6 நாள் கழித்து மீண்டும் வருகிறேன்.////

    ஆறு நாட்கள் விடுமுறையா? கொடுத்துவைத்த மகராசன்!:-))))))

    ReplyDelete
  31. VANAKKAM SIR,
    HAPPY SIVA RATHIRI TO U AND UR FAMILY MEMBERS SIR.

    HAPPY SIVARATHARI TO MY DEAREST CLASSROOM BROTHERS AND SISTERS AND THEIR FAMILY MEMBERS.
    SUNDARI.

    ReplyDelete
  32. Anbu Aiyya,
    Aachariyam aanalum Unmai. Birammippai than irukirathu Iraivanin seyalpadugal. Matrapadi, Niraya followers vantha pinnal naan pinnootam pottu thontharavu seivathillai. Matravargalukkana ungal Kelvi-bathil evvalavo vishayangalai solli tharugirathu.
    Ungalukku anbu vanakkamum, iraivan arul melum ungalukku thunaiyai irukka en prarthanaigalum.(Romba naalukappuram pinnoottam ittathal 2 vari extra)
    Anbudan,
    Sara,
    CMB

    ReplyDelete
  33. /////sundari said...
    VANAKKAM SIR,
    HAPPY SIVA RATHIRI TO U AND UR FAMILY MEMBERS SIR.
    HAPPY SIVARATHARI TO MY DEAREST CLASSROOM BROTHERS AND SISTERS AND THEIR FAMILY MEMBERS.
    SUNDARI.////////

    நல்லது.உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  34. /////R.Saravanakumar said...
    Anbu Aiyya,
    Aachariyam aanalum Unmai. Birammippai than irukirathu Iraivanin seyalpadugal. Matrapadi, Niraya followers vantha pinnal naan pinnootam pottu thontharavu seivathillai. Matravargalukkana ungal Kelvi-bathil evvalavo vishayangalai solli tharugirathu.
    Ungalukku anbu vanakkamum, iraivan arul melum ungalukku thunaiyai irukka en prarthanaigalum.(Romba naalukappuram pinnoottam ittathal 2 vari extra)
    Anbudan,
    Sara,
    CMB//////

    உங்கள் அன்பிற்கு நன்றி சரவணன்!

    ReplyDelete
  35. We are waiting for the incidence in india

    ReplyDelete
  36. ////Ram said...
    We are waiting for the incidence in india////

    அடுத்து எழுதுகிறேன் நண்பரே. உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com