மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.10

இச்சைகளின் அளவு என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இச்சைகளின் அளவு என்ன?

கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 2
-------------------------------------------------------
3. ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன? (What is the planetary position for immorality?)

ஒழுக்கம் = தனி மனிதன் கடைப்பிடிக்கும் நெறி. உரிய முறையில் நடந்து கொள்ளுதல். High moral standard discipline, good conduct.

ஒழுக்கமின்மை என்பது மேற்சொன்னவைகள் இல்லாத நிலைமை.

immoral என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு என்ன பொருள்? ஒழுக்கமின்மை என்று பொருள்.

1. not in conformity with accepted principles of right and wrong behaviour
2. not in conformity with the accepted standards of proper sexual behaviour; unchaste
3. wicked

இதைத்தமிழில் விவரித்துச் சொன்னால்: முறை தவறி நடப்பவன். ஒழுங்கீனமானவன். தவறாக நடப்பவன். முறையற்ற புணர்ச்சியில் ஈடுபாடு கொண்டவன். உங்கள் மொழியில் சொன்னால், எல்லோருக்கும் அல்வாக் கொடுப்பவன். குறிப்பாக வலையில் சிக்கும் பெண்களுக்கு அல்வாக் கொடுப்பவன் என்று கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால் சிதறிய நியாயங்களை, நியதிகளை ( Loose morals) உடையவன்.

Planetary combination for loose morals

1. சுக்கிரனும், புதனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு, அல்லது 8ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது.

2.செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது.

3. சந்திரனுக்குப் பத்தாம் வீட்டில் சுக்கிரனும் அல்லது சுக்கிரனுக்குப் பத்தாம் வீட்டில் சனியும் இருந்தாலும் ஆசாமி பெண்களுக்கு அல்வா கொடுப்பவன்தான்.

4. ஆறாம் அதிபதி, ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை!

5. இரண்டு, ஏழு, பத்தாம் வீட்டு அதிபதிகள் ஒன்று சேர்ந்து பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலைமை!

6. ஏழாம் வீட்டதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து, வேறு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருக்கும் நிலைமை!

7.சுக்கிரன் சனியின் வீட்டில் இருப்பதுடன், சனியின் பார்வையோடு இருக்கும் நிலைமை. அல்லது சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் இருப்பதுடன், செவ்வாயின் பார்வையோடு இருக்கும் நிலைமை!

8.ஏழாம் வீட்டதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழிலேயே குடியிருந்தாலும் அதே நிலைப்பாடுதான்

9.ஏழாம் அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை

10.லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருக்கும் நிலைமை!

11.லக்கினாதிபதியும், ஆறாம் அதிபதியும் ஒன்றாக வேறு ஒரு தீயகிரகத்துடன் சேர்ந்திருக்கும் நிலைமை

12.தேய்பிறைச் சந்திரனும், ஒரு தீய கிரகமும் ஒன்றாக ஏழாம் வீட்டில் இருக்கும் நிலைப்பாடு

13.ஏழாம் அதிபதியும், ஒரு தீயகிரகமும் கூட்டாக ஜாதகத்தில் எங்கே இருந்தாலும் அந்த நிலைப்பாடு!

14.சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் கூட்டணி ஒரு இடத்தில் இருக்கும் நிலைமை!

15.ஏழில் புதன் இருந்து அது அதன் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாது இருக்கும் நிலைமை!

16.சுக்கிரனும், ஏழாம் வீட்டதிபனும் ஒன்றாக செவ்வாய்க்கு உரிய இடத்தில் (அதாவது மேஷம் அல்லது விருச்சிகத்தில்) இருக்கும் நிலைமை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன தலையைச் சுற்றுகிறதா?

இதைப் படித்தவுடன், சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த அமைப்பில்லாத ஜாதகம் இருக்குமா,என்ன?

75% சதவிகித ஜாதகங்களில் இந்த அமைப்புக்களில் ஒன்றாவது இருக்கும்.

சைட் அடிக்காத அல்லது லுக் விடாத மனிதன் உண்டா? ஒரு அழகான பெண்ணைக் கண்டவுடன், அவளை அடைய வேண்டுமென்று ஆசைப்படாத அல்லது ஏக்கம் கொள்ளாத மனம் உண்டா?

நான் அப்படியில்லை என்று ஒரு இளைஞன் சொன்னால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்

அது இயற்கை: பெண்ணின் மேல் ஆணிற்கு ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காகக் காலன் செய்து வைத்துள்ள சதி!

சரி,அங்கே ஒழுக்கமின்மை எங்கே வருகிறது?

ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைக்கும்போதும், அல்லது தொட்டுப்பார்க்கும் போதும், அல்லது சாய்க்கும் போதும், பிறன் மனை நோக்கா பேராண்மை தவறும்போதும் அங்கே ஒழுக்கமின்மை வந்து நின்றுவிடும்.

மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமானவர்கள். அதீத இச்சைகளை உடையவர்கள். சிலர் தங்கள் சாமர்த்தியத்தால், அது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். Everyone wants to sleep with other man's wife என்னும் பழமொழிகள் உலவுவதை யாரும் மறக்க வேண்டாம்.

அந்த இச்சைகளின் (ஒழுக்கமின்மையின்) அளவு ஆளாளுக்கு வேறுபடும். ஜாதகத்தின் மற்ற தன்மைகளை வைத்து வேறுபடும். சாரசரிக்கு கூடவோ அல்லது குறைவாகவோ பலருக்கும் இருக்கும்.

சிலர் 14 அல்லது 18 வயது முதல் டண்டணக்கா டணக்குணக்கா அடிக்கும் கடைசி நிமிடம் வரை ஒழுக்கம் இல்லாமல் இருந்துவிட்டுப் போய்ச் சேர்வார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு திருந்தி ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து,பெயரெடுத்துவிட்டுப் போவார்கள். அது அவரவர்கள் வாங்கி வந்த வரம்

”பெண்களுக்கும் இதே விதிகள் பொருந்துமா?” என்று கடைசிப் பெஞ்ச் கண்மணிகள் யாரேனும் பின்னூட்டம் இட வேண்டாம். பெண்களுக்குக் கால் செருப்பின் அளவு வேறுபடுவதைப்போல - உங்கள் மொழியில் சொன்னால் உடலில் வளைவு நெளிவுகள் வேறு படுவதைப்போல பல விதிகள் வேறுபடும். அவை ஏன்? எதனால் என்பதைப் பற்றி பெண்களுக்கான விஷேச ஜாதக அமைப்புக்கள் என்கின்ற பாடத்தை நடத்தும் போது விவரிக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

பாடம் ஓக்கேயா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

38 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 13வது நியதி எனக்கு வருகிறது.2ல்‍ சிம்மத்தில் சனி கேது சூர்யன்! ஆட்சி பெற்ற சூர்யன் கொஞ்சம் சரியாக நடக்க உதவினார்.
    நம் காலம் வேறு. தற்கால இளைஞனுக்கு எல்லா விதமான வாய்ப்புக்களும்
    அதிகம்."டாடி மம்மி வீட்டில் இல்லை!தடைபோட யாரும் இல்லை.." என்பதே நிதர்சனம்.
    பெண்கள் பி பி ஒ, ஐடி துறைகளில் வேலை பார்த்துக்
    களைத்துப்போய் 'பப்'புக்குப் போவது தவறில்லை என்ற கலாசாரம் பரவி வருகிறது.பெங்களுரில் பிரமோத் முதாலிக் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டுவிட்டார்.ஆனால் அவர், "நான் ஒரு தந்தை,சகோதரன் ஸ்தானத்தில் இருந்து அவர்களைக் கண்டித்தேன்" என்றது எனக்குச் சரியென்று தோன்றியது.என் தாய் வீட்டைத் தாண்டி வெளியில் செல்லவில்லை. அவருக்கு வீட்டு வேலையே நாள்முழுவதும் சரியாக இருக்கும்.ஆனாலும் ஓய்வெடுக்க 'பப்' செல்லலாம் என்ற எண்ணம் தோன்றவில்லை.அத்தனை வேலைக்கு நடுவிலும்‍‍,(விற‌கு அடுப்பு,அம்மி, ஆட்டுரல்,)ராட்டையில் நூல் நூற்கவும்,ஹிந்தி ஆங்கிலம் பயிலவும்,பயிற்றி வைக்கவும்,பாட்டுப் பாடவும், இலக்கியம் படிக்கவும்,பிரசவ‌ம் பார்க்கவும்,துக்கப்பட்டு வரும் யாருக்கும் ஆறுதலாகப் பேசவும்,இன்னும் பல சேவைகளை விளம்பரம் இன்றி செய்தார்கள்.இன்று சுய உதவிக்குழு என்று ஆர்பாட்டம் செய்கிறார்களே அதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் என் தாய் செய்தார்கள்.. அரிக்கேன் விள‌க்கு வெளிச்சத்தில் ராத்திரி பள்ளிக்கூடம் நடத்துவார்கள்.ஓய்வு என்பது வழக்கமான வேலைகளில் இருந்து கொஞ்சம் விடுவித்துக் கொண்டு பிடித்தமான வேறு வேலை செய்வதுதான்.சாதியை ஒழிக்க 'பாஸ்டர்ட்' சமூகம் உருவாக வேண்டும் என்று பேசும் புரட்சிக் கருத்துக்கள் உலா வருகின்றன.கலிகாலம் அய்யா,கலிகாலம்!

    ReplyDelete
  3. /////kmr.krishnan said...
    13வது நியதி எனக்கு வருகிறது.2ல்‍ சிம்மத்தில் சனி கேது சூர்யன்! ஆட்சி பெற்ற சூர்யன் கொஞ்சம் சரியாக நடக்க உதவினார்.
    நம் காலம் வேறு. தற்கால இளைஞனுக்கு எல்லா விதமான வாய்ப்புக்களும்
    அதிகம்."டாடி மம்மி வீட்டில் இல்லை!தடைபோட யாரும் இல்லை.." என்பதே நிதர்சனம்.
    பெண்கள் பி பி ஒ, ஐடி துறைகளில் வேலை பார்த்துக்
    களைத்துப்போய் 'பப்'புக்குப் போவது தவறில்லை என்ற கலாசாரம் பரவி வருகிறது.பெங்களுரில் பிரமோத் முதாலிக் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டுவிட்டார்.ஆனால் அவர், "நான் ஒரு தந்தை,சகோதரன் ஸ்தானத்தில் இருந்து அவர்களைக் கண்டித்தேன்" என்றது எனக்குச் சரியென்று தோன்றியது.என் தாய் வீட்டைத் தாண்டி வெளியில் செல்லவில்லை. அவருக்கு வீட்டு வேலையே நாள்முழுவதும் சரியாக இருக்கும்.ஆனாலும் ஓய்வெடுக்க 'பப்' செல்லலாம் என்ற எண்ணம் தோன்றவில்லை.அத்தனை வேலைக்கு நடுவிலும்‍‍,(விற‌கு அடுப்பு,அம்மி, ஆட்டுரல்,)ராட்டையில் நூல் நூற்கவும்,ஹிந்தி ஆங்கிலம் பயிலவும்,பயிற்றி வைக்கவும்,பாட்டுப் பாடவும், இலக்கியம் படிக்கவும்,பிரசவ‌ம் பார்க்கவும்,துக்கப்பட்டு வரும் யாருக்கும் ஆறுதலாகப் பேசவும்,இன்னும் பல சேவைகளை விளம்பரம் இன்றி செய்தார்கள்.இன்று சுய உதவிக்குழு என்று ஆர்பாட்டம் செய்கிறார்களே அதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் என் தாய் செய்தார்கள்.. அரிக்கேன் விள‌க்கு வெளிச்சத்தில் ராத்திரி பள்ளிக்கூடம் நடத்துவார்கள்.ஓய்வு என்பது வழக்கமான வேலைகளில் இருந்து கொஞ்சம் விடுவித்துக் கொண்டு பிடித்தமான வேறு வேலை செய்வதுதான்.சாதியை ஒழிக்க 'பாஸ்டர்ட்' சமூகம் உருவாக வேண்டும் என்று பேசும் புரட்சிக் கருத்துக்கள் உலா வருகின்றன.கலிகாலம் அய்யா,கலிகாலம்!//////

    கலி முற்றிக் கொண்டிருக்கிறது. பெங்களூரில் அதிகமாக விற்கும் மாத்திரை - ஐஃபில் என்னும் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையாம். நணபர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. குருவே வணக்கம்!

    இச்சைகளின் இம்சை இல்லாதோர் இருந்ததில்லை
    இருக்கவில்லை இருக்கப்போவதும் இல்லை.
    இந்திரன் அசிங்கப்பட்டான்
    விஸ்வாமித்திரர் அவதிபட்டார்.
    இந்திர லோகத்தோர்கே விதி விளக்கில்லை எனும் போது?

    காம இச்சை அதிகம் கொண்டிருந்த நம் மகாத்மா அவற்றை
    சிந்தாமல் சிதறாமல் வேறொரு நல்ல சக்தியாக ஆன்மாவை
    வளர்க்கும் அறியசக்தியாக மாற்றினேன் என்று ஒரு இடத்தில்
    கூறியதை படித்திருக்கிறேன்.

    எந்த ஒரு உணர்ச்சியும் மிகும் போது நல்ல புத்தி என்னும்
    அணை எழுப்பி பொறுமையுடன் வடிகால் அமைத்தோமானால்
    நீர்த் தேக்கத்தில் மின்சாரமும் தயாரிப்பது போலும்
    அதில் வடிந்த நீரை இன்னும் பலவாறுப்
    பயன் படுத்தலாம்.

    தாங்கள் கூறிய கருத்துக்கொப்ப எந்த ஒரு உணர்வும்
    சற்று தூக்கலாக இருந்தா தான் அது "டக்கராக" இருக்கும்.

    பாடம் டபுள் ஓகே!

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  6. திரு கிருஷ்னன் அவர்கள் புரட்சிக் கருத்து என்றதும் புரட்சிக்கான கிரகம் எது என்று யோசித்தேன். புதன் புதிய சிந்தனை, புதுக் கருத்துக்கள், புத்தெழுச்சி எண்ணங்கள், மாற்றங்கள், நவீன மயம் இவற்றுக்குக் காரக்ர் என்றும், குரு, பாரம்பரியம், வழி, வழியாக கடைப்பிடிக்கப் பட்டு வருபவை, ஒழுக்கம் இவற்றுக்குக் காரகர் என்றும் படித்திருக்கிறேன்.

    நிற்க, புத்தகத்திற்கான எனது கருத்துக்களை எழுதி வகுப்பறை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டேன். ஏதோ என் மனதில் தோன்றியதை சொல்லியிருக்கிறேன். பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

    ReplyDelete
  7. வணக்கம்...

    இந்த அமைப்பில்லாத ஜாதகம் இருக்குமா,என்ன?

    எனக்கு இருக்கின்றது!!!!

    ஆனாலும் இப்பொழுது சில காலமாக பெண்ணின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கதான் செய்கின்றது...

    அது இயற்கை, ஒழுக்கமின்மை இல்லை...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. குருவே!

    முதற்கண் வணக்கம்.

    நான் (அடியேன் ) எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய தங்களிடம் ( வாத்தியாரின் வகுப்பறையில் ) தெரிவித்தது உண்டு .

    நான் என்னை பெரியதாக காண்பிக்கணும் என்றோ! அல்லது பெயர், புகழ் .......... என்ற, வேறு காரணம் இல்லை.

    உண்மையை சொல்ல போனால் எனது சுய ஜாதகத்தை நான்கு பெயர்களிடம் காண்பிப்பதே (சொல்லுவதே ) பாவம் என்பது
    எனது கருத்து.

    தாங்கள் தான் ஒரு இடத்தில மிகவும் அருமையாக காண்பித்து உள்ளீர்கள்!
    மிகவும் தெள்ள தெளிவாக அது வேறு ஒன்றும் இல்லை ,

    'இறைவன் எங்கும் உள்ளான் என்பதே' ஐயா!

    எதனால் நான் கூறினேன் என்று தாங்கள் ( சக மாணவர்கள்) நினைக்கலாம் .

    இறைநம்பிக்கை,, ஜாதகம், இறைவழிபாடு இவற்றில் நம்பிக்கை இல்லாத நபர்களுக்கு வேண்டிதான் குருவே !!!

    A. பணம், பெயர், சொத்து , பதவி , இன்னும் என்னலாமோ சொல்லலாம் இது தான் வாழ்க்கை என்று இன்றைய உலகம் வெற்றி நடை போடுகின்றது . இது சென்ற ஜென்மத்தின் பலன் என்பதனை! எத்தனை நபர்கள் அறிவார்கள் என்பதனை அறியேன் ஐயா.

    1. விதி, கர்மம் , ஊழ்வினை என்று ஜடம்மாக இருக்காமல் படைத்தவன் இடம் சென்று மனம் உருக,
    கண்ணீர் வடித்தால் கருணை காட்டுவான் கருணை உள்ளம் கொண்ட 'கருநீல வண்ணன்' . 'பிரகலனாதனுக்கு'! அருளியது போல்.

    2. பரமாத்மா அல்லது !மாயகண்ணன்'! என்று ஒரு தெய்வத்தின் பிறப்பு இங்கு இருந்ததா!
    என்றுகூட இங்கு நம்பிக்கை உள்ள நபர்களும், இல்லாத நபர்களும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் உள்ளனர் ஐயா
    ஏனெனில் கலியுகம் அல்லவா ...?

    3 . நமது கோவில்களை வெறும் கல்லாக தான் இன்றைய (அனைத்து) சமுக ஜீவன்கள் பார்கின்றது .

    ஞானம் என்ற மெய்யானத்தை அடைய சொல்லித்தரும் ' அண்ட மகா உலகின்! 'முதல் மாபெரும்! மகா பல்கலைகழகம்'!

    ( நூலகம் ) என்பதனை! எத்தனை அறிவி ஜீவிகள் அறிவார்கள் என்பதனை அடியேன் அறிவேன் ஐயா!

    ( கரும் கல்லில் சொல்லி கொடுத்த முதல் மகா பல்கலைகழகம்'!)

    4. இங்கு (இந்து மதத்தில்) முதல் கண்கண்ட தெய்வம்

    'தாய் தந்தையே '!

    5. இரு உடல்கள்! ஒரு உயிர் ஆக வாழவேண்டும். இருவரும் சரிசமம் என்பதே

    'அர்த்தநாரிஸ்வரர்'! தத்துவம்

    இன்றைய கலியுகதிக்காக அன்றே எமது முன்னோர்கள் சொல்லிய பாடம் ஆகும் .

    6. ஏகபத்தினி விரதம் என்ற ஒன்றிக்கு சான்று

    'இராம அவதாரம்'!

    7. etc ..........................

    thanks.

    ReplyDelete
  9. Dear sir,
    If Guru is in good position, these rules may be changed or not?

    ReplyDelete
  10. அய்யா இனிய காலை வணக்கம்.

    அல்வா கொடுக்கும் ஆசாமிகளை அறிய தந்த ஜோதிட விதிகள் அருமை....

    ஆனால் ஒன்று தான் இடிக்கிறது 7ம் அதிபதி 7இல் இருந்தாலும் ...புதன் 7 இல் ஆட்சி பெற்றாலும் அவன் அல்வா கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று ....

    எனக்கு 7ம் அதிபதி அவர் புதன் தான் அவரும் 7 இல் ஆட்சி பெற்றுள்ளார்
    லக்னமும் மற்றும் லனாதிபதி குரு வலுவாக அமந்துள்ள்தால் இது வரை சமாளித்து விட்டேன் ...சனி தசை போன்ற மோசமான நேரங்களில் இந்த(அல்வா தரும்) அமைப்பு
    வேலை செய்யுது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமா அய்யா ?இது தான் என் சந்தேகம்.....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  11. Dear Sir,

    Good Morning!!!

    Shall I take the above points are only for Gents as you said.

    Because In our lessons I read like, if a female has Venus & Budhan in 7th place and if it has guru parvai, the person who is going to marry her is a luckiest one.

    why this difference between male and female sir?

    Thanks
    Saravana
    Coimbatore

    ReplyDelete
  12. பாடம் டபுள் ஓகே!

    நன்றிகள் குருவே.

    ReplyDelete
  13. பாடம் அருமை sir,

    7ல் விடு மிதுனம்- சனி சுக்ரனுடன் கூடினால் w.r.t below factors
    - if 7th athipathi budan in 9th House with suriyan(Atchi)?
    - Laganathil(தனு) chandran with less than 28 parals
    - 7th has more than 32 parals
    - Lagnathipathi Guru in 9th(சிம்மம்) also aspecting Lagna with 5th parvai.

    ReplyDelete
  14. ஏழாம் அதிபதியான குரு(வ), லக்னத்திற்கு(மிதுனம்) மூன்றில் ராகு, செவ்வாய், சனி(வ) போன்றவற்றுடன் சேர்க்கை , கேது பார்வையில்.
    லக்னம், எட்டு, ஒன்பதாமிட பரல்கள் முறையே 38, 31, 30. மேலும், லக்னாதிபதி நீச்சம் but, பரல்கள் 7.
    11-இல் சூரியன் உச்சம். I think(hope) i escaped. :)

    ReplyDelete
  15. 1,8,11,15 has suits in my astro. oh god be me in honest to my heart.thanks sir

    ReplyDelete
  16. வணக்கம் அய்யா.
    கேள்வியும் நானே!பதிலும் நானே!
    அசத்தலா இருக்கு சாமி.
    இன்றைய கேள்வி பதில்
    அசத்திட்டீங்க.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  17. ப்ரெசென்ட் சார்.
    ரொம்ப நாள் ஆஜராகாததாலே நம்ம சப்ஜெக்டை ப்ரெசென்ட் பண்ணி பின்னூட்டம் போட வெச்சுட்டீங்களே.?
    அளவு மாறுபடும்..மத்தபடி எல்லோருமே அப்பிடி இப்பிடி பார்ட்டிதான்னு செம காட்டு காட்டிட்டீங்கோ...
    கொஞ்சம் தூக்கலா கிரக அமைப்புக்கள் இருக்குற ஆளுங்க வேற வழியில்லாமல் இப்பிடி ஆகிடுறதுக்கு
    ஒழுக்கம், ஒழுக்கமின்மை என்று பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு சார்.?
    சூழ்நிலை, சந்தர்ப்பம், விதிவசப்படுதல், உணர்ச்சி வசப்படுதல் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே?
    இந்த காலத்திலே பிறன் மனை நோக்கினால்தான் பேராண்மை என்று பிறர் மனைவிகளே ஆண்களைப் பார்த்து கேலி பண்ணி சிரிக்கும் அளவுக்கு மேட்டர் சீரியசாகிப் போச்சு..
    இவ்வளவுக்கும் காரணம் சுக்கிரன்,புதன்,சூரியன்,சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது என்று தாங்கள் இட்டுள்ள பட்டியலில் குருவைத்தவிர மற்ற எல்லோருமே மேட்டர்லே சம்பந்தப்படுராங்களே சார்? ஏகப்பட்ட வீடுகள் வேற சம்பந்தப்படுதே?
    மொத்தத்லே இன்னிக்கு மேட்டர் செம மேட்டர் போங்க...

    ReplyDelete
  18. சபலமே வராத ஜாதக குறிப்பும் எழுதுங்கள்...

    ReplyDelete
  19. இவ்ளோ விசயங்கள கத்து வச்சுக்கிட்டு கற்றது கொஞ்சம்
    தான் என்கிறீர்களே.... வெறும் திசை கணக்கை வைத்து
    பலன் சொல்லி விட்டுப் போகும் ஜோதிடர்களை என்ன
    சொல்வது...

    பெண்களின் ஒழுக்க விதிகளைப் பற்றி அறிந்து கொள்ள
    ஆவலாய்....

    ReplyDelete
  20. Alasiam G said...
    குருவே வணக்கம்!
    இச்சைகளின் இம்சை இல்லாதோர் இருந்ததில்லை. இருக்கவில்லை இருக்கப்போவதும் இல்லை.
    இந்திரன் அசிங்கப்பட்டான் விஸ்வாமித்திரர் அவதிபட்டார்.
    இந்திர லோகத்தோர்கே விதி விலக்கில்லை எனும் போது?
    காம இச்சை அதிகம் கொண்டிருந்த நம் மகாத்மா அவற்றை
    சிந்தாமல் சிதறாமல் வேறொரு நல்ல சக்தியாக ஆன்மாவை
    வளர்க்கும் அறியசக்தியாக மாற்றினேன் என்று ஒரு இடத்தில்
    கூறியதை படித்திருக்கிறேன்.
    எந்த ஒரு உணர்ச்சியும் மிகும் போது நல்ல புத்தி என்னும்
    அணை எழுப்பி பொறுமையுடன் வடிகால் அமைத்தோமானால்
    நீர்த் தேக்கத்தில் மின்சாரமும் தயாரிப்பது போலும்
    அதில் வடிந்த நீரை இன்னும் பலவாறு பயன் படுத்தலாம்.
    தாங்கள் கூறிய கருத்துக்கொப்ப எந்த ஒரு உணர்வும்
    சற்று தூக்கலாக இருந்தா தான் அது "டக்கராக" இருக்கும்.
    பாடம் டபுள் ஓகே!
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    நல்லது நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  21. ananth said...
    திரு கிருஷ்னன் அவர்கள் புரட்சிக் கருத்து என்றதும் புரட்சிக்கான கிரகம் எது என்று யோசித்தேன். புதன் புதிய சிந்தனை, புதுக் கருத்துக்கள், புத்தெழுச்சி எண்ணங்கள், மாற்றங்கள், நவீன மயம் இவற்றுக்குக் காரகர் என்றும், குரு, பாரம்பரியம், வழி, வழியாக கடைப்பிடிக்கப் பட்டு வருபவை, ஒழுக்கம் இவற்றுக்குக் காரகர் என்றும் படித்திருக்கிறேன்.
    நிற்க, புத்தகத்திற்கான எனது கருத்துக்களை எழுதி வகுப்பறை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டேன். ஏதோ என் மனதில் தோன்றியதை சொல்லியிருக்கிறேன். பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

    சிறப்பாக உள்ளது. நன்றி, நேற்றே உங்களுக்குத் தனி மின்னஞ்சலில் பதில் அனுப்பிவிட்டேன் நண்பரே!

    ReplyDelete
  22. Success said...
    வணக்கம்...
    இந்த அமைப்பில்லாத ஜாதகம் இருக்குமா,என்ன?
    எனக்கு இருக்கின்றது!!!!
    ஆனாலும் இப்பொழுது சில காலமாக பெண்ணின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கதான் செய்கின்றது...
    அது இயற்கை, ஒழுக்கமின்மை இல்லை...
    வாழ்க வளமுடன்

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  23. kannan said...
    குருவே! முதற்கண் வணக்கம்.
    நான் (அடியேன் ) எனது சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய தங்களிடம் ( வாத்தியாரின் வகுப்பறையில் ) தெரிவித்தது உண்டு .
    நான் என்னை பெரியதாக காண்பிக்கணும் என்றோ! அல்லது பெயர், புகழ் .......... என்ற, வேறு காரணம் இல்லை.
    உண்மையை சொல்ல போனால் எனது சுய ஜாதகத்தை நான்கு பெயர்களிடம் காண்பிப்பதே (சொல்லுவதே ) பாவம் என்பது எனது கருத்து.
    தாங்கள் தான் ஒரு இடத்தில மிகவும் அருமையாக காண்பித்து உள்ளீர்கள்!
    மிகவும் தெள்ள தெளிவாக அது வேறு ஒன்றும் இல்லை ,
    'இறைவன் எங்கும் உள்ளான் என்பதே' ஐயா!
    எதனால் நான் கூறினேன் என்று தாங்கள் ( சக மாணவர்கள்) நினைக்கலாம் .
    இறைநம்பிக்கை,, ஜாதகம், இறைவழிபாடு இவற்றில் நம்பிக்கை இல்லாத நபர்களுக்கு வேண்டிதான் குருவே !!!
    A. பணம், பெயர், சொத்து , பதவி , இன்னும் என்னலாமோ சொல்லலாம் இது தான் வாழ்க்கை என்று இன்றைய உலகம் வெற்றி நடை போடுகின்றது . இது சென்ற ஜென்மத்தின் பலன் என்பதனை! எத்தனை நபர்கள் அறிவார்கள் என்பதனை அறியேன் ஐயா.
    1. விதி, கர்மம் , ஊழ்வினை என்று ஜடம்மாக இருக்காமல் படைத்தவன் இடம் சென்று மனம் உருக,
    கண்ணீர் வடித்தால் கருணை காட்டுவான் கருணை உள்ளம் கொண்ட 'கருநீல வண்ணன்' . 'பிரகலனாதனுக்கு'! அருளியது போல்.
    2. பரமாத்மா அல்லது !மாயகண்ணன்'! என்று ஒரு தெய்வத்தின் பிறப்பு இங்கு இருந்ததா!
    என்றுகூட இங்கு நம்பிக்கை உள்ள நபர்களும், இல்லாத நபர்களும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் உள்ளனர் ஐயா
    ஏனெனில் கலியுகம் அல்லவா ...?
    3 . நமது கோவில்களை வெறும் கல்லாக தான் இன்றைய (அனைத்து) சமுக ஜீவன்கள் பார்கின்றது .
    ஞானம் என்ற மெய்யானத்தை அடைய சொல்லித்தரும் ' அண்ட மகா உலகின்! 'முதல் மாபெரும்! மகா பல்கலைகழகம்'!
    ( நூலகம் ) என்பதனை! எத்தனை அறிவி ஜீவிகள் அறிவார்கள் என்பதனை அடியேன் அறிவேன் ஐயா! ( கரும் கல்லில் சொல்லி கொடுத்த முதல் மகா பல்கலைகழகம்'!)
    4. இங்கு (இந்து மதத்தில்) முதல் கண்கண்ட தெய்வம்
    'தாய் தந்தையே '!
    5. இரு உடல்கள்! ஒரு உயிர் ஆக வாழவேண்டும். இருவரும் சரிசமம் என்பதே
    'அர்த்தநாரிஸ்வரர்'! தத்துவம்
    இன்றைய கலியுகதிக்காக அன்றே எமது முன்னோர்கள் சொல்லிய பாடம் ஆகும் .
    6. ஏகபத்தினி விரதம் என்ற ஒன்றிக்கு சான்று 'இராம அவதாரம்'!
    7. etc ..........................
    thanks.//////

    நல்லது. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  24. ////jee said...
    Dear sir,
    If Guru is in good position, these rules may be changed or not?//////

    ஆகும்!

    ReplyDelete
  25. astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    அல்வா கொடுக்கும் ஆசாமிகளை அறிய தந்த ஜோதிட விதிகள் அருமை....
    ஆனால் ஒன்று தான் இடிக்கிறது 7ம் அதிபதி 7இல் இருந்தாலும் ...புதன் 7 இல் ஆட்சி பெற்றாலும் அவன் அல்வா கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று ....
    எனக்கு 7ம் அதிபதி அவர் புதன் தான் அவரும் 7 இல் ஆட்சி பெற்றுள்ளார்
    லக்னமும் மற்றும் லனாதிபதி குரு வலுவாக அமந்துள்ள்தால் இது வரை சமாளித்து விட்டேன் ...சனி தசை போன்ற மோசமான நேரங்களில் இந்த(அல்வா தரும்) அமைப்பு வேலை செய்யுது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமா அய்யா ?இது தான் என் சந்தேகம்.....
    நன்றி வணக்கம்

    மனக்கட்டுப்பாடுடனும், இறைவழிபாட்டுடனும் இருங்கள். நல்லதே நடக்கும்!

    ReplyDelete
  26. ////Saravana said...
    Dear Sir,
    Good Morning!!!
    Shall I take the above points are only for Gents as you said.
    Because In our lessons I read like, if a female has Venus & Budhan in 7th place and if it has guru parvai, the person who is going to marry her is a luckiest one.
    why this difference between male and female sir?
    Thanks
    Saravana
    Coimbatore////

    பொறுத்திருங்கள். அதைப்பற்றிய தொடர் கட்டுரை ஒன்றைப் பின்னால் எழுத உள்ளேன்.

    ReplyDelete
  27. /////Uma said...
    Super////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  28. ////jadam said...
    பாடம் டபுள் ஓக்கே!
    நன்றிகள் குருவே./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  29. ////சிங்கைசூரி said...
    பாடம் அருமை sir,
    7ல் விடு மிதுனம்- சனி சுக்ரனுடன் கூடினால் w.r.t below factors
    - if 7th athipathi budan in 9th House with suriyan(Atchi)?
    - Laganathil(தனு) chandran with less than 28 parals
    - 7th has more than 32 parals
    - Lagnathipathi Guru in 9th(சிம்மம்) also aspecting Lagna with 5th parvai./////

    தகவலுக்கு நன்றி சிங்கைக் காரரே!

    ReplyDelete
  30. ////Sreenivasan said...
    ஏழாம் அதிபதியான குரு(வ), லக்னத்திற்கு(மிதுனம்) மூன்றில் ராகு, செவ்வாய், சனி(வ) போன்றவற்றுடன் சேர்க்கை , கேது பார்வையில். லக்னம், எட்டு, ஒன்பதாமிட பரல்கள் முறையே 38, 31, 30. மேலும், லக்னாதிபதி நீச்சம் but, பரல்கள் 7. 11-இல் சூரியன் உச்சம். I think(hope) i escaped. :)/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  31. /////பித்தனின் வாக்கு said...
    1,8,11,15 has suits in my astro. oh god be me in honest to my heart.thanks sir////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  32. thirunarayanan said...
    வணக்கம் அய்யா. கேள்வியும் நானே!பதிலும் நானே!
    அசத்தலா இருக்கு சாமி.
    இன்றைய கேள்வி பதில் அசத்திட்டீங்க.
    நன்றி அய்யா.

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  33. ////minorwall said...
    ப்ரெசென்ட் சார்.
    ரொம்ப நாள் ஆஜராகாததாலே நம்ம சப்ஜெக்டை ப்ரெசென்ட் பண்ணி பின்னூட்டம் போட வெச்சுட்டீங்களே.?
    அளவு மாறுபடும்..மத்தபடி எல்லோருமே அப்பிடி இப்பிடி பார்ட்டிதான்னு செம காட்டு காட்டிட்டீங்கோ...
    கொஞ்சம் தூக்கலா கிரக அமைப்புக்கள் இருக்குற ஆளுங்க வேற வழியில்லாமல் இப்பிடி ஆகிடுறதுக்கு
    ஒழுக்கம், ஒழுக்கமின்மை என்று பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு சார்.?
    சூழ்நிலை, சந்தர்ப்பம், விதிவசப்படுதல், உணர்ச்சி வசப்படுதல் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே?
    இந்த காலத்திலே பிறன் மனை நோக்கினால்தான் பேராண்மை என்று பிறர் மனைவிகளே ஆண்களைப் பார்த்து கேலி பண்ணி சிரிக்கும் அளவுக்கு மேட்டர் சீரியசாகிப் போச்சு..
    இவ்வளவுக்கும் காரணம் சுக்கிரன்,புதன்,சூரியன்,சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது என்று தாங்கள் இட்டுள்ள பட்டியலில் குருவைத்தவிர மற்ற எல்லோருமே மேட்டர்லே சம்பந்தப்படுராங்களே சார்? ஏகப்பட்ட வீடுகள் வேற சம்பந்தப்படுதே?
    மொத்தத்லே இன்னிக்கு மேட்டர் செம மேட்டர் போங்க...//////

    நான் போறேன். ஆனா, நீங்க அடிக்கடி வாங்க மைனர்!:-)))))

    ReplyDelete
  34. ////ஆர்.கே.சதீஷ்குமார் said...
    சபலமே வராத ஜாதக குறிப்பும் எழுதுங்கள்.../////

    சபலமே இல்லாமலா? நோ சான்ஸ்! கோடியில் ஒருவர் இருக்கலாம். அவர்களை மகான்கள் என்று சொல்வோம். அந்த நிலைக்கான ஜாதக அமைப்பு இதுவரை கண்ணில் படவில்லை சாமி!

    ReplyDelete
  35. /////Sivakumar said...
    இவ்ளோ விசயங்கள கத்து வச்சுக்கிட்டு கற்றது கொஞ்சம்
    தான் என்கிறீர்களே.... வெறும் திசை கணக்கை வைத்து
    பலன் சொல்லி விட்டுப் போகும் ஜோதிடர்களை என்ன
    சொல்வது...பெண்களின் ஒழுக்க விதிகளைப் பற்றி அறிந்து கொள்ள
    ஆவலாய்..../////

    இப்போதும் சொல்கிறேன். கற்றது கை மண் அளவுதான். ஜோதிடம் பெரிய கடல். அதில் எடுக்க வேண்டிய முத்துக்கள் ஏராளமாக உள்ளது. நீங்கள் கேட்டுள்ள பாடம் பின்னால் வரும்!

    ReplyDelete
  36. ஜயா வணக்கம்
    ஜோதிடம் பெரிய கடல். அதில் எடுக்க வேண்டிய முத்துக்கள் ஏராளமாக உள்ளது. உங்களின் பாடங்களை படித்தபின்பும், பல பரிசோதனைகள் செய்தபின்பும் தான் தெரிகிறது இது ஒரு பொக்கிசமென்று. இவ்வளவு பொக்கிசம் எங்களிடமிருக்க ஏன் இதை மறைக்கிறார்கள்.
    உண்மையாக சொல்லப்போனால், சரியான நேரத்தில், சரியான இடத்தில் சரியானவனின் இலகுவாக விளங்கக்கூடிய வகையில் தோற்றமளிக்கிறது.
    நிம் செயல் வாழ்க வளர்க. எமது உள்ளார்ந்த அன்பும் சகல உதவிகளும் உங்களுக்குக் கிடைக்கும்.

    நன்றி

    வாசுதேவன்

    ReplyDelete
  37. Vasanthan said...
    ஜயா வணக்கம்

    வாசுதேவன்////

    புரிதலுக்கு நன்றி! வாத்தியாருக்கு மாணவர்களின் அன்பு ஒன்று போதும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com