மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.2.10

வாத்தியாரின் வேண்டுகோள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் வேண்டுகோள்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், ஜோதிடப் பத்தகத்தின் முதல்கட்ட வேலை முடிந்துவிட்டது. அடுத்து இரண்டு கட்ட வேலைகளும் இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிடும்.

புத்தகம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது மாதம் முடிந்து, வெளியீட்டுற்குத் தயாராகி விடும். வகுப்பறை மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை. அவர்களுக்குக் கொடுத்தது/ அனுப்பியது போக மீதம் உள்ள பிரதிகள்தான் எனது நண்பர்கள்/ மற்றும் உறவினர்களுக்கு! அனேகமாக வெளி விற்பனை (Book Stand Copies) இருக்காது. அப்படி வெளிவிற்பனைக்கு யாரேனும் கேட்டு வந்தால், அது இரண்டாம் பதிப்பு வெளியிட்டால் மட்டுமே சாத்தியப்படும்.

பதிவுகள் எழுதத்துவங்கிய சமயத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் என்னை எச்சரித்தார் (அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர். தமிழ்நாடறிந்த எழுத்தாளர். இதுவரைக்கும் இருபதிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அவருடைய நூல்கள் வெளிவந்து அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பது கூடுதல் செய்தி). இணையப் பதிவுகளில் பாதுகாப்பு இல்லை. உங்கள் ஆக்கங்கள் திருடப்படலாம் என்றார்.

யாரும் பிறக்கும்போதே முழு ஜோதிட ஞானத்துடன் பிறப்பதில்லை. ஜோதிடக் குடும்பங்களில் பிறந்தவர்கள் தங்கள் தந்தையார் மூலமாகவும், மற்றவர்கள் காலப்பிரகாசிகா, சரவளி, ஜோதிட சிந்தாமணி, குமார சுவாமியம், புலிப்பாணி ஜோதிடம் போன்று பல நூல்களைப் படித்துதான் ஜோதிட அறிவைப் பெறுகின்றார்கள். நானும் பல நூல்களைப் படித்துத்தான் ஜோதிடத்தில் ஒரளவு தேர்ச்சி பெற்றேன். ஜோதிடம் என்பது கடல். அதில் முழுத் தேர்ச்சி பெறுவது என்பது சுலபமல்ல.

நானும், நான் கற்றவைகள், என் அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பயன்படட்டும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குப் பயன் படட்டும் என்றுதான் பதிவில் எழுதி வருகிறேன். எனது ஜோதிட ஆக்கங்களில் ஜோதிடக் குறிப்புக்களை மட்டும் ஒருவர் திருடமுடியுமே தவிர, என்னுடைய நடையில் எழுதப் பெற்றுள்ள மொத்த எழுத்துக்களையும், சொந்த அனுபவச் செய்திகளையும் ஒருவரால் வேறு வழிகளில் பயன்படுத்த முடியாது. அது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதோடு, சிலவற்றைத் திருடி என்னால் ஒருவர் பயனடைய முடியும் என்றால், பயனடைந்துவிட்டுப் போகட்டும் என்னும் மாறுபட்ட சிந்தனையுடன்தான் பதிவில் கடந்த 3 ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன். இப்போது பல மாணவர்களின் வேண்டுகோளூக்கு இணங்கப் பத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

ஜோதிடம் என் தொழில் அல்ல! பதிப்பித்துப் புத்தகங்களை வெளியிடுவதும் என் தொழில் அல்ல! இறையருளால் எனக்கு வேறு ஒரு நல்ல தொழில் இருக்கிறது. ஒரு ஆர்வக்கோளாறால் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அரிய நேரம் அதில் செலவாகிறது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு மனத்திருப்திக்காக அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்.

2,000ற்கும் மேற்பட்ட வாகர்களையும், இன்றையத் தேதியில் சுமார் 1249 பின் தொடர்பவர்களையும் (Followers) நான் பெற்றுள்ளேன். அதுவே எனக்குக் கிடைத்த முதல் பிரதிபலனாக நான் எண்ணுகிறேன். உங்களின் அன்பைவிட உயர்ந்த பிரதிபலன் வேறு எதுவும் கிடையாது.

என்னுடைய ஜோதிடப் புத்தகங்களை, விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்கள் பதிவில் இருந்து தாங்கள் பிரதி எடுத்து வைத்திருக்கும் பக்கங்களையே பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஜோதிடப் புத்தகத்திற்கும், பதிவில் உள்ள ஆக்கங்களுக்கும் என்ன வித்தியாசம்?

90% பதிவில் உள்ளவைகள்தான் புத்தகத்தில் வரப்போகின்றன. எல்லாப் பாடங்களும் முறைப்படுத்தப் பெற்று, பகுதிகள் பிரிக்கப் பெற்றுப் படிப்பதற்கு வசதியான முறையில், பொருளடக்கம், குறிச்சொற்களுடன் புத்தகத்தில் வரப்போகின்றன.

முதலில் பத்தகங்களைப் பெரிய அளவில் ஒவ்வொன்றும் சுமார் 480 பக்கங்கள் இருக்கும்படியாக இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் வெளியிட எண்ணி யிருந்தேன். இப்போது அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டு, எனது மானசீக ஆசான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களின் பத்து பாகங்களைப் போல என்னுடைய ஜோதிட நூல்களையும் பத்து பாகங்களாக வெளியிட எண்ணியுள்ளேன்.

ஒவ்வொரு பாகமும், சுமார் 100 பக்கங்களில் இருந்து 160 பக்கங்கள் வரை மட்டுமே இருக்கும் படியாக வெளியிட எண்ணியுள்ளேன்.

அறிமுகம், ஜோதிடம் வந்தவழி, ஜோதிட ஆதாரங்கள், அடிப்படைப் பாடங்கள், நவக்கிரகங்கள், (பன்னிரண்டு) வீடுகள், தசாபுத்திப் பலன்கள், அஷ்டகவர்க்கம், யோகங்கள், ஜோதிடநுட்பங்கள் மற்றும் அலசல்கள், கேள்வி பதில்கள் என்பது போன்ற தலைப்பில் புத்தகங்கள் இருக்கும். படிப்பவர்களுக்கு அது வசதியாகவும் இருக்கும்.

முதலில் ஐந்து பாகங்களும், இரண்டு மாத இடைவெளியில் மீதமுள்ள பாகங்களும் வெளியாகும். புத்தகங்கள் அனைத்தும் படிப்பதற்கு எளிமையாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும்.

புத்தகங்கள் அச்சாகி முடிந்தவுடன், ஒவ்வொன்றின் பக்கங்களும், விலையும் பதிவில் முறையாக வெளிடப்படும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். வாங்குபவர்களுக்கு, அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பதிவு அஞ்சலில் (by registered post) அவைகள் வந்து சேரும். அஞ்சலில் அனுப்பியவுடன், அதற்காக ரசீது scan செய்ப்பட்டு, அவர்களுக்கு அனுப்பிய தேதியுடன் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

பத்தகங்களில் சில ஆச்சரியங்கள் இருக்கும். அது இப்போதைக்கு சஸ்பென்ஸாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்கள் கைக்கு வந்தவுடன், அதைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

புத்தகத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால் புத்தகங்களில் வகுப்பறையைப் பற்றியும், (இதுவரை நடத்திய) பாடங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் வெளியிட விரும்புகிறேன். விருப்பம் உள்ளவர்கள் எழுதி, மின்னஞ்சலில் அனுப்புங்கள். இரண்டு பக்கங்களுக்குமிகாமல் (1/8 sizeல் 2 பக்கங்கள் A4 sizeல் ஒருபக்கம் - புரியும்படியாகச் சொன்னால் Computer Screen Shot சைஸில் இரண்டு பக்கங்கள்) எழுதியனுப்புங்கள்.

வகுப்பறையில் ஆறு மாதங்களாக அல்லது அதற்கு முன்னதாகச் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள், உங்கள் புகைப்படம், புனைப்பெயர், வயது, வசிக்கும் ஊர், மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் வெள்ளியிடப்படும். ஒரு புத்தகத்திற்கு, 6 பேர்களின் கடிதம் வீதம், மொத்தம் 60 அன்பர்களின் கடிதங்கள் வெளியிடப்படும்.

MRK சார், உண்மைத்தமிழன், நாமக்கல் சிபி, ஆனந்த், ஆலாசியம்கோ, துபாய் டி.கண்ணன், தில்லி உமா, கனடா தனுஜா, போன்ற சீனியர் வாசகர் களிடமிருந்தும் அக்கடிதங்களை எதிர்பார்க்கிறேன். பத்து தினக்களுக்குள் எழுதியனுப்புங்கள்.

எனக்கு, வாத்தியார் பட்டத்தைக் கொடுத்து, அதன் காரணமாக வகுப்பறையைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்த இருவரின் கடிதகங்களும் வெளியிடப்படும். அவர்களையும் எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++
முன்பதிவின் அடுத்த பகுதி!

அதைப்படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு கீழே உள்ளதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது!
___________________________________________

அடுத்து நடந்தது என்ன?

அடுத்த நாள் காலையில், அதே நண்பன் திரும்பி வந்தான். வந்தவன் நம் ஆசாமியிடம் சொன்னான்:

“பெண்களை ஏற்றிக் கொண்டுவரும் கப்பல், இன்று மாலை வந்துவிடும். நீ உன் கணக்கிற்கு முந்நூறு ரூபாய்கள் தர வேண்டும்”

முந்நூறு என்பது பெரிய தொகை (ஒரு பவுன் பதின்மூன்று ரூபாயாக இருந்த காலம்) நம்ம ஆள் முதல் நாளே யோசித்து வைத்திருந்தான். முற்றிலும் இலவசம் என்றால் பரவாயில்லை. உள்ளடி வேலையாக இருந்தால்
என்ன பதில் சொல்வது என்று யோசித்து வைத்திருந்தான்.

உடனே பதில் சொன்னான்.

“பெண்களெல்லாம் இலவசமில்லையா?”

”இலவசம்தான். ஆனால் அவர்களை ஏற்றிக் கொண்டுவந்த கப்பல் கட்டணம் - தலைக்கு நூறு ரூபாய் வீதம் மூன்று பெண்களுக்கு வீதம் முந்நூறு ரூபாய் செலுத்த வேண்டும்”

“எனக்கு வேண்டாம். ஆர்டரைக் கேன்சல் செய்துவிடு.”

“ஏன் பணத்திற்காக வேண்டாம் என்கிறாயா?”

“பணத்திற்காக இல்லை. இரவு யோசித்துப் பார்த்தேன். வேண்டாமென்று இரவே முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன்”

”இதுக்கு என்ன கணக்கு?”

“புண்ணாகுக் கணக்கு! பெரிதாகக் கணக்கு ஒன்றுமில்லை. நீயும் யோசித்தாயென்றால், உனக்கும் விளங்கும்”

“உன் வாயால் நீயே சொல்.நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”

“எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. என் தம்பி சின்னப் பயல். அதனால் சரிப்பட்டுவராது என்றுதான் வேண்டாம் என்கிறேன்”

வந்த நண்பன் ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.

தன் நண்பனின் வரக் கஞ்சத்தனத்தைப் பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன?
-------------------------------------------------------------------------
அதென்ன வரக் கஞ்சத்தனம்.

வரக்காப்பி என்று பால் இல்லாத காப்பியைக் கிராமங்களில் குடிப்பார்கள். அதுபோல வரக் கஞ்சத்தனம் என்பது.....காசிற்காக எதையும் பறிகொடுக்கும் அல்லது அனுபவிக்காமல் கடாசிவிடும் அல்லது நன்மை தீமைகளை நினைத்துப் பார்க்க மறுக்கும் கஞ்சத்தனம்

(தொடரும்)
------------------------------------------------
அவசர வேலையாக வேலையாக வெளியூர் சென்றமையால், நேற்று வகுப்பறைக்கு வரமுடியாமல் போய்விட்டது.


வாழ்க வளமுடன்!

53 comments:

  1. Am I The First to post the comment ???

    ReplyDelete
  2. Good afternoon sir,
    THanks for ur today lesson. i want horoscope books sir.
    sundari

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,
    குருவே!
    எனது பாக்கியம்,
    நல்லதொரு செய்தியும்
    நயம் பட உரைத்த நல்ல தொரு கதையும்
    நர்த்தனமாடும் என் மனநிலையும்
    விளக்க மொழியில்லை.

    சிறகில்லை இருந்தும் பறக்கிறேன்
    குரலில்லை இருந்தும் இசைக்கிறேன்.
    இதயத்துனுள் இமயம் புகுந்தது
    இரத்தத்துனுள் இளமை புகுந்தது
    சந்தோசக் கடல் என்னை ஆட்க்கொண்டது!
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
    போற்றி புகழுவேன் புகழ்வதர்க்கான பொக்கிசமே!

    விட்டால் இன்றும் தொடர்ந்திடுவேன் அய்யா....
    வேண்டாம் அந்த தர்மச் சங்கடம்...

    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. நன்றி சகோதிரி சுந்தரி!
    உடலும் உள்ளமும் நலம்,
    வாத்தியார் அய்யாவின் (எழுத்துக்) களம்
    வகுப்பறைக்கு வருவோருக்கெல்லாம்
    அது என்றும் தரும் பலம்.

    ReplyDelete
  5. அடடே... விட்டால் எங்கள் வாத்தியாரை முழு நேர எழுத்தாளராக்காமல் இந்த மாணவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா
    புத்தகம் மிகவும் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள் ஐயா!!!
    நானும் பிரதிகளுக்காக காத்துகொண்டு இருக்கிறேன் ஐயா

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா ,
    கதை நன்றாக செல்கிறது.
    பத்தகத்தின் முதல்கட்ட வேலையும் நிறைவுற்றது!
    உங்கள் நற்பணி தொடற அடியேனின் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. புத்தக பிரதிகளுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்....
    தங்களின் கதையும் அருமை, அருமை, அருமை!!!

    ReplyDelete
  9. ////sundari said...
    Good afternoon sir,
    THanks for ur today lesson. i want horoscope books sir.
    sundari/////

    உங்களுக்கு இல்லாமலா? உங்களுக்கு நிச்சயம் உண்டு!

    ReplyDelete
  10. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    குருவே! எனது பாக்கியம், நல்லதொரு செய்தியும்
    நயம் பட உரைத்த நல்ல தொரு கதையும்
    நர்த்தனமாடும் என் மனநிலையும் விளக்க மொழியில்லை.
    சிறகில்லை இருந்தும் பறக்கிறேன் குரலில்லை இருந்தும் இசைக்கிறேன்.
    இதயத்துனுள் இமயம் புகுந்தது இரத்தத்துனுள் இளமை புகுந்தது
    சந்தோசக் கடல் என்னை ஆட்க்கொண்டது! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
    போற்றி புகழுவேன் புகழ்வதர்க்கான பொக்கிசமே!
    விட்டால் இன்றும் தொடர்ந்திடுவேன் அய்யா.... வேண்டாம் அந்த தர்மச் சங்கடம்...
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    நல்லது. உங்களின் மேலான அன்பிற்கு நன்றி!

    ReplyDelete
  11. செந்தழல் ரவி said...
    அடடே... விட்டால் எங்கள் வாத்தியாரை முழு நேர எழுத்தாளராக்காமல் இந்த மாணவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...////

    வாருங்கள் செந்தழலாரே! உங்கள் வாழ்த்திற்கு நன்றி! முழு நேர எழுதாளாராகும் எண்ணமில்லை. அது தமிழில் சாத்தியமாகுமா என்றும் தெரியவில்லை!:-))))

    ReplyDelete
  12. ////Kumares said...
    வணக்கம் ஐயா
    புத்தகம் மிகவும் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள் ஐயா!!!
    நானும் பிரதிகளுக்காக காத்துகொண்டு இருக்கிறேன் ஐயா////

    உங்கள் எதிர்பார்ப்பிற்கு நன்றி குமரேசன்!

    ReplyDelete
  13. ////NARESH said...
    வணக்கம் ஐயா ,
    கதை நன்றாக செல்கிறது. பத்தகத்தின் முதல்கட்ட வேலையும் நிறைவுற்றது!
    உங்கள் நற்பணி தொடற அடியேனின் நல்வாழ்த்துக்கள்!////

    நல்லது. உங்கள் வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger மிஸ்டர் அரட்டை said...
    Am I The First to post the comment ?///

    ஆமாம், அதில் ஒரு சந்தோஷமா? உங்கள் சந்தோஷம் வாழ்க!

    ReplyDelete
  15. உங்கள் உழைப்பும், தன்னம்பிக்கையும் என்றுமே வீண்போகாது ஜயா.

    ReplyDelete
  16. Dear Sir,
    உங்கள் புத்தகத்தை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  17. /////காவேரி கணேஷ் said...
    உங்கள் உழைப்பும், தன்னம்பிக்கையும் என்றுமே வீண்போகாது ஜயா./////

    நல்லது சொன்னீர்; நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////arumuga nainar said...
    Dear Sir,
    உங்கள் புத்தகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    Rgds
    Nainar/////

    உங்களுக்கு இல்லாதா புத்தகமா? வெளிவந்த அன்றே உங்களுக்கு அனுப்பிவைக்கப்ப்டும் நைனா(ர்)

    ReplyDelete
  19. /////Blogger Dr.Vidhya said...
    புத்தக பிரதிகளுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்....
    தங்களின் கதையும் அருமை, அருமை, அருமை!!!////

    நன்றி! புத்தகம் வெளிவந்தவுடன் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் சகோதரி!

    ReplyDelete
  20. வணக்கம் சார்,
    பொன்மொழிகள்: 1. குறையாருடையதாக இருந்தாலும் பொறுப்பு நம்முடையது.
    2.நீங்கள் வாழ்வதோடு பிறர் வாழவும் வழிவகைச்செய்யுங்கள்.
    3.வெற்றி வேண்டுமா? கவலை நோய் முதலியவற்றைப் பொறுத்துக்கொண்டு நீடித்து உழையுங்கள்.
    4.மனச்சாட்சியை ஏமாற்றாமல் வழ்பவனே உண்மையான வீரன் அவனது வெற்றி
    உறுதியானது.
    5.உங்கள் சிந்தனையை மறைக்க வேண்டாம் நேர்மையான் முறையில் வெளிப்படையாகப் பேசுங்கள்.
    6. தன்நம்பிக்கைதான் அனைத்துப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காணத்தூண்டும்.
    7.அறம் கணக்கற்ற பாவங்களை மூடி/நீக்கி/போக்கி விடும்.

    ReplyDelete
  21. ஐயா!!!

    கடலின் இக்கரையில், ஒரு ஜீவன்! வழி மேல் விழி வைத்து காத்து இருக்கின்றது .

    ஜோதிடம் என்னும் கல்விகளஞ்சியம் !

    அக்கரையில் இருந்து, பனை ஓலை சுவடியின் மூலம் வருமோ!அல்லது!

    வெள்ளை புறாவின்! வெள்ளை சிகப்புடன் உடைய, சிவந்த கால்களில் கட்டப்பெற்று வருமோ ! அல்லது !

    வெள்ளை புறாவின்! வர்கத்தினர், காரணமாக இருந்த வானுர்திமூலமாக வருமோ! அல்லது !

    கூடு விட்டு கூடு பாயும்! சித்தனின் சித்து விளையாட்டு போல்

    கண்டம் விட்டு கண்டம் பாயும் கணினிமூலமாக வருமோ!

    அல்லது!

    கம்பன் காலத்து எழுத்தாணி கொண்டோ எழுதியதோ?அல்லது

    காளிதாசன் எழுத்தாணி கொண்டோ எழுதியதோ ?அல்லது

    எழுத்தச்சனின் எழுத்தாணி கொண்டு எழுதப்பெற்றதோ?அல்லது

    கலியுக ஜோதிட பிதாமகன்! (சுப்)ஐயா கைவண்ணம் கொண்டு எழுதப்பெற்றதோ என்பதனை!

    அறிய வேண்டி ஆவலுடன் ஆசானே!!

    ReplyDelete
  22. Hello Sir. How can i register for the book. I remember some of the previous lesson you have requested to send e-mail to your personal id ?.. so do i need to send additional request now ? I have been reading blogs in net for past 7 years.. but never interested in providing feedback.. Was trying to understand basis on astrology so google redirected me here.. thank you so much for your service. please do not stop writing sir. expecting more lessons..

    ReplyDelete
  23. Vaathiyariya,

    Great news..Waiting for the book release.Please reserve one copy for me also.

    I am Still going through each topics (old) in the blogs.once I get the book, will read through and for any clarifications I can refer the Q & A Section along with the comments section.This would really help anyone as well.

    Thanks
    Rajan

    ReplyDelete
  24. //////sundari said...
    வணக்கம் சார்,
    பொன்மொழிகள்: 1. குறையாருடையதாக இருந்தாலும் பொறுப்பு நம்முடையது.
    2.நீங்கள் வாழ்வதோடு பிறர் வாழவும் வழிவகைச்செய்யுங்கள்.
    3.வெற்றி வேண்டுமா? கவலை நோய் முதலியவற்றைப் பொறுத்துக்கொண்டு நீடித்து உழையுங்கள்.
    4.மனச்சாட்சியை ஏமாற்றாமல் வாழ்பவனே உண்மையான வீரன் அவனது வெற்றி
    உறுதியானது.
    5.உங்கள் சிந்தனையை மறைக்க வேண்டாம் நேர்மையான முறையில் வெளிப்படையாகப் பேசுங்கள்.
    6. தன்நம்பிக்கைதான் அனைத்துப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காணத்தூண்டும்.
    7.அறம் கணக்கற்ற பாவங்களை மூடி/நீக்கி/போக்கி விடும்./////

    நல்லது. நன்றாக உள்ளன.நன்றி!

    ReplyDelete
  25. /////kannan said...
    ஐயா!!!
    கடலின் இக்கரையில், ஒரு ஜீவன்! வழி மேல் விழி வைத்து காத்து இருக்கின்றது
    ஜோதிடம் என்னும் கல்விகளஞ்சியம் ! அக்கரையில் இருந்து, பனை ஓலை சுவடியின் மூலம் வருமோ!அல்லது! வெள்ளை புறாவின்! வெள்ளை சிகப்புடன் உடைய, சிவந்த கால்களில் கட்டப்பெற்று வருமோ ! அல்லது ! வெள்ளை புறாவின்! வர்கத்தினர், காரணமாக இருந்த வானுர்திமூலமாக வருமோ! அல்லது ! கூடு விட்டு கூடு பாயும்! சித்தனின் சித்து விளையாட்டு போல் கண்டம் விட்டு கண்டம் பாயும் கணினிமூலமாக வருமோ! அல்லது! கம்பன் காலத்து எழுத்தாணி கொண்டோ எழுதியதோ?அல்லது காளிதாசன் எழுத்தாணி கொண்டோ எழுதியதோ ?அல்லது எழுத்தச்சனின் எழுத்தாணி கொண்டு எழுதப்பெற்றதோ?அல்லது
    கலியுக ஜோதிட பிதாமகன்! (சுப்)ஐயா கைவண்ணம் கொண்டு எழுதப்பெற்றதோ என்பதனை!
    அறிய வேண்டி ஆவலுடன் ஆசானே!!///////

    நீங்கள் சொல்லியிருக்கின்ற வழிகள் எல்லாம் அறுதப் பழசானவை. புத்தகங்கள் Postal Air Parcel முறையில் உங்களுக்கு வரும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. //////dhana said...
    Hello Sir. How can i register for the book. I remember some of the previous lesson you have requested to send e-mail to your personal id ?.. so do i need to send additional request now ? I have been reading blogs in net for past 7 years.. but never interested in providing feedback.. Was trying to understand basis on astrology so google redirected me here.. thank you so much for your service. please do not stop writing sir. expecting more lessons..//////

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள்.
    எனது மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com

    ReplyDelete
  27. //////Rajan said...
    Vaathiyariya,
    Great news..Waiting for the book release.Please reserve one copy for me also.
    I am Still going through each topics (old) in the blogs.once I get the book, will read through and for any clarifications I can refer the Q & A Section along with the comments section.This would really help anyone as well.
    Thanks
    Rajan//////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  28. புத்தக வெளியீடு பற்றிய செய்தி இனிப்பாக வந்து சேர்ந்தது.சிறிய
    புத்தகங்களாக பல வெளியீடுகள் என்பதில் என்ன பிரச்சனை என்றால், உதிரியாக யாராவது இரவல் வாங்கிச் சென்று விட்டாலோ, ஏதாவது ஒன்று தொலைந்து விட்டாலோ சிரமம் ஆகிவிடும்.எனவே 2,3 தொகுதிகள் மட்டும் என்பது அடிக்கடி பயன் படுத்துவோருக்கு பலன் உள்ளதாக அமையும்.மாணவர்களுக்கு 2,3 தொகுதிகளாக அளித்துவிடுங்கள். பின்னர் 2ம் பதிப்பு செய்யும் போது உதிரியாக விற்றாலும் பரவாயில்லை என்று 12 பாகமாகப் போட்டுக்கொள்ளுங்கள்.தொடர்பில்லாத
    தனித்தனி தலைப்புக்களில் சிறிய புத்தகஙளை ரூ10/ அல்லது ரூ15/ விலைவைத்து வெளியிடலாம்.இப்போது எல்லாம் புத்தகத்தின் விலையைப் பார்த்து எல்லோரும் ஒதுங்குகிறார்கள்.''திருமணத் தடையா?காரணம்,பரிகாரம்"
    "குழந்தைப்பேற்றுக்கு ஜாதகபலன்,பரிகாரம்"இதுபோன்ற தலைப்புக்க‌ளில்
    குட்டிக்குட்டிப் புத்தகங்களை கையடக்கமாகப் போட்டு எல்லா புத்தக விற்பனை
    யாளர்களிடமும் அளித்துவிடலாம். முன்கூட்டிப்பதிவு செய்யும் என் போன்றவர்களுக்கு 500 பக்க அளவிலான 2,3 கெட்டிஅட்டை(பைண்டு தேவையில்லை)பதிப்புக்கள்தான் பயன்படும்.அதிகப் பிரசங்க‌ம் என்றால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  29. புத்தகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் அய்யா.(ஒரு சிறு திருத்தம்..ஏப்ரல் முதல் வாரம் இரண்டாவது மாதம்என வருவதை இரண்டாவது வாரம் என திருத்திவிடவும்) வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  30. SP.VR. SUBBIAH said... ////kannan said...
    ஐயா! இன்று! அதிகாலை வேலை (Morning shift Duty ) என்பதனால் முழுமையாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை!

    நல்லது.பாடல்களைத் தேடிப்பிடித்துத் தந்தமைக்கு நன்றி கண்ணன்!
    Friday, February 05, 2010 1:31:00 PM

    ஆசானே!!!
    பொன் காலைப்பொழுது!பொன்னான வணக்கம்.

    நடுநிளைப், உயர்நிலை பள்ளிகூடம் மற்றும் கல்லுரி படிக்கும் காலங்களில்!

    {' கடைசியில் (தாயின்! மனம் குளிர்ந்த பொழுதுதான் தான்) மனபக்குவம் அடையும் வரைக்கும்' !}

    ஆன்மிகம் என்னும்!,
    ஞான என்ற மெய்யானத்தை தேடி!

    சித்தனைப்போல்! அலைந்து திரிந்த காலங்களில்,

    தனது ஒரே மகன்! எதிர் காலத்தை
    ஆன்மிகம் என்னும்!,

    'ஞானம் என்ற மெய்யானத்தில்'!

    வாழ்க்கையை தொலைத்து விட்டு
    (பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை ஒழுங்காக படிக்காமல் )

    நாளைக்கு என்னாவானோ என்று!
    பெற்றோர்களை (ஐயாவின் மரணதிக்குப் பின்னர்,தாயை!மட்டும்)

    ஒருபாடு ஏக்கத்தில் கண் கலங்க வைத்துவிட்டு!

    நூலகம்!, மடம், கிறிஸ்துவம் மற்றும் அல்லா என!
    அனைத்து சமய ஆலயங்களிலும்!

    கன்னியாகுமரி, பழனி முதல் இராமேஸ்வரம் வரைக்கும் உள்ள கோவில்களில்
    அலைந்து! திரிந்து, பித்தனைப்போல் கண்ணீர் விட்டு கரைந்து!

    ஒருநாள்! ஒருமாகானால் குருஞானம் போதிக்கப்பெற்றும்!

    'அம்மா! அப்பா! தான் உலகம்'! என்று,

    இளம் வயது! பயம் அறியாது! அல்லது அடங்காது!
    என்பதனை நிருபிக்கும் அளவில்!

    'பின்னரும்'!

    கன்னியாகுமரி! முதல் காசி வரைக்கும், உள்ள கோவில்களில் எல்லாம்! அலைந்து, திரிந்த பின்னர்

    {முதலிலையே மாதா, பிதா, குரு என்னும் மூன்று தெய்வங்களின் மந்திர வாக்கை கேட்காமல்,}

    சுய அனுபவம் என்றபள்ளிகூடத்தில்! எதோ! பெற்றோர்களின் புண்ணியத்தால்! சிறிது புத்தி வந்து.

    தந்தை காட்டிய வழியில் ( கல்வி என்னும் வித்தையில் பொறியாலன்னாகி) சென்று !
    இன்று முதுகலை பட்டம் பெரும் தருவாயில் இல்லறத்தான்னாகும் பொறுட்டு!

    இராதையை எதிர்நோக்கி இருக்கும், ஒரு சந்நியாசியின் மனத்திரையில் இருந்து கொண்டுவரப்பட்டது. ஆசானே !!!

    ReplyDelete
  31. வணக்கம் ஐயா..

    உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வல்லவனின் உதவியால் வெற்றி பெரும்.

    I want all the Horoscope Books which is going to Publish by you. Earlier itself I sent a mail for the same.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  32. Dear sir,
    Present today.
    Good news. It will be useful for everybody to learn.

    ReplyDelete
  33. ஆ என்னையும் கிருஷ்ணன் சார், ஆனந்த் ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டிங்க. மின்னஞ்சல் அடுத்த வாரம் அனுப்புகிறேன்.

    நீங்கள் முதலில் அனுப்பிய மின்னஞ்சலுக்கு காலக்கெடு இருக்கிறதா? தெரிவிக்கவும்.

    இப்போது நான் உங்கள் இன்னொரு ப்ளாக் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னை ரொம்ப கவர்ந்தது வாரியார் & சின்ன அண்ணாமலை பற்றி எழுதியது.

    சார், எல்லா புத்தகங்களிலும் ஒரு காப்பி எனக்கும் வேண்டும்.

    ReplyDelete
  34. Vanakam sir,

    It is a pleasure and for sure I can write abt the online classroom and ur teachings on astrology. I just want to know if I can write it in English or in Tamil?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  35. Dear Guruji,
    I have already submitted my request for the books. Kindly let me know do we have to send the request again. My email id is pulicat@hotmail.com
    Being in Saudi Arabia, I cannot receive such books, and I have to give my Indian address and then can collect it when I go to India next. Is there any chance the book can be sold as strictly protected PDF format for your students like me say in the form of e-Book.

    Would look forward to your response.

    With best regards,
    BALASUBRAMANIAN P.

    ReplyDelete
  36. ////kmr.krishnan said...
    புத்தக வெளியீடு பற்றிய செய்தி இனிப்பாக வந்து சேர்ந்தது.சிறிய
    புத்தகங்களாக பல வெளியீடுகள் என்பதில் என்ன பிரச்சனை என்றால், உதிரியாக யாராவது இரவல் வாங்கிச் சென்று விட்டாலோ, ஏதாவது ஒன்று தொலைந்து விட்டாலோ சிரமம் ஆகிவிடும்.எனவே 2,3 தொகுதிகள் மட்டும் என்பது அடிக்கடி பயன் படுத்துவோருக்கு பலன் உள்ளதாக அமையும்.மாணவர்களுக்கு 2,3 தொகுதிகளாக அளித்துவிடுங்கள். பின்னர் 2ம் பதிப்பு செய்யும் போது உதிரியாக விற்றாலும் பரவாயில்லை என்று 12 பாகமாகப் போட்டுக்கொள்ளுங்கள்.தொடர்பில்லாத
    தனித்தனி தலைப்புக்களில் சிறிய புத்தகஙளை ரூ10/ அல்லது ரூ15/ விலைவைத்து வெளியிடலாம்.இப்போது எல்லாம் புத்தகத்தின் விலையைப் பார்த்து எல்லோரும் ஒதுங்குகிறார்கள்.''திருமணத் தடையா?காரணம்,பரிகாரம்" "குழந்தைப்பேற்றுக்கு ஜாதகபலன்,பரிகாரம்"இதுபோன்ற தலைப்புக்க‌ளில்
    குட்டிக்குட்டிப் புத்தகங்களை கையடக்கமாகப் போட்டு எல்லா புத்தக விற்பனை
    யாளர்களிடமும் அளித்துவிடலாம். முன்கூட்டிப்பதிவு செய்யும் என் போன்றவர்களுக்கு 500 பக்க அளவிலான 2,3 கெட்டிஅட்டை(பைண்டு தேவையில்லை)பதிப்புக்கள்தான் பயன்படும்.அதிகப் பிரசங்க‌ம் என்றால் மன்னிக்கவும்.//////

    உங்களின் யோசனைகளுக்கு நன்றி கிருஷ்ணன் சார்! அச்சகக்காரர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். பார்த்து அப்படியே செய்கிறேன். நன்றி

    ReplyDelete
  37. //////வேலன். said...
    புத்தகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் அய்யா.(ஒரு சிறு திருத்தம்..ஏப்ரல் முதல் வாரம் இரண்டாவது மாதம்என வருவதை இரண்டாவது வாரம் என திருத்திவிடவும்) வாழ்க வளமுடன், வேலன்.//////

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! திருத்தம் செய்துவிடுகிறேன்

    ReplyDelete
  38. /////kannan said...
    SP.VR. SUBBIAH said... ////kannan said...
    ஐயா! இன்று! அதிகாலை வேலை (Morning shift Duty ) என்பதனால் முழுமையாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை!
    நல்லது.பாடல்களைத் தேடிப்பிடித்துத் தந்தமைக்கு நன்றி கண்ணன்!
    ஆசானே!!!
    பொன் காலைப்பொழுது!பொன்னான வணக்கம்.
    நடுநிலைப், உயர்நிலைப் பள்ளிகூடம் மற்றும் கல்லுரி படிக்கும் காலங்களில்!
    {' கடைசியில் (தாயின்! மனம் குளிர்ந்த பொழுதுதான் தான்) மனபக்குவம் அடையும் வரைக்கும்' !}
    ஆன்மிகம் என்னும்!, ஞான என்ற மெய்யானத்தை தேடி! சித்தனைப்போல்! அலைந்து திரிந்த காலங்களில்,
    தனது ஒரே மகன்! எதிர் காலத்தை ஆன்மிகம் என்னும்!,
    'ஞானம் என்ற மெய்யானத்தில்'! வாழ்க்கையை தொலைத்து விட்டு (பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை ஒழுங்காக படிக்காமல் ) நாளைக்கு என்னாவானோ என்று! பெற்றோர்களை (ஐயாவின் மரணதிக்குப் பின்னர்,தாயை!மட்டும்) ஒருபாடு ஏக்கத்தில் கண் கலங்க வைத்துவிட்டு! நூலகம்!, மடம், கிறிஸ்துவம் மற்றும் அல்லா என! அனைத்து சமய ஆலயங்களிலும்! கன்னியாகுமரி, பழனி முதல் இராமேஸ்வரம் வரைக்கும் உள்ள கோவில்களில் அலைந்து! திரிந்து, பித்தனைப்போல் கண்ணீர் விட்டு கரைந்து!
    ஒருநாள்! ஒருமாகானால் குருஞானம் போதிக்கப்பெற்றும்! 'அம்மா! அப்பா! தான் உலகம்'! என்று,
    இளம் வயது! பயம் அறியாது! அல்லது அடங்காது! என்பதனை நிருபிக்கும் அளவில்!'பின்னரும்'!
    கன்னியாகுமரி! முதல் காசி வரைக்கும், உள்ள கோவில்களில் எல்லாம்! அலைந்து, திரிந்த பின்னர்
    {முதலிலையே மாதா, பிதா, குரு என்னும் மூன்று தெய்வங்களின் மந்திர வாக்கை கேட்காமல்,}
    சுய அனுபவம் என்றபள்ளிகூடத்தில்! எதோ! பெற்றோர்களின் புண்ணியத்தால்! சிறிது புத்தி வந்து.
    தந்தை காட்டிய வழியில் ( கல்வி என்னும் வித்தையில் பொறியாளனாகிச்) சென்று !
    இன்று முதுகலை பட்டம் பெரும் தருவாயில் இல்லறத்தானாகும் பொறுட்டு!
    இராதையை எதிர்நோக்கி இருக்கும், ஒரு சந்நியாசியின் மனத்திரையில் இருந்து கொண்டுவரப்பட்டது. ஆசானே !!!//////

    இறையருளால் கூடிய சீக்கிரமே ராதை அல்லது ருக்மணி வரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. ///Success said...
    வணக்கம் ஐயா..
    உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வல்லவனின் உதவியால் வெற்றி பெரும்.
    I want all the Horoscope Books which is going to Publish by you. Earlier itself I sent a mail for the same.
    வாழ்க வளமுடன்////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. /////jee said...
    Dear sir,
    Present today.
    Good news. It will be useful for everybody to learn.////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. ////Uma said...
    ஆ என்னையும் கிருஷ்ணன் சார், ஆனந்த் ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டிங்க. மின்னஞ்சல் அடுத்த வாரம் அனுப்புகிறேன். நீங்கள் முதலில் அனுப்பிய மின்னஞ்சலுக்கு காலக்கெடு இருக்கிறதா? தெரிவிக்கவும்.
    இப்போது நான் உங்கள் இன்னொரு ப்ளாக் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னை ரொம்ப கவர்ந்தது வாரியார் & சின்ன அண்ணாமலை பற்றி எழுதியது.
    சார், எல்லா புத்தகங்களிலும் ஒரு காப்பி எனக்கும் வேண்டும்.////

    பெண்களுக்கும் பிரதிநித்துவம் வேண்டுமல்லவா? அதன் பொருட்டே உங்களையும் மடல் அனுப்பக் கோரியுள்ளேன்!

    ReplyDelete
  42. //Thanuja said...
    Vanakam sir,
    It is a pleasure and for sure I can write abt the online classroom and ur teachings on astrology. I just want to know if I can write it in English or in Tamil?
    Thanks
    Thanuja////

    பிரச்சினை ஒன்றும் இல்லை. உங்களுக்குச் சரளமாக எழுதவரும் மொழியிலேயே நீங்கள் எழுதி அனுப்பலாம்!

    ReplyDelete
  43. ///Balasubramanian Pulicat said...
    Dear Guruji,
    I have already submitted my request for the books. Kindly let me know do we have to send the request again. My email id is pulicat@hotmail.com
    Being in Saudi Arabia, I cannot receive such books, and I have to give my Indian address and then can collect it when I go to India next. Is there any chance the book can be sold as strictly protected PDF format for your students like me say in the form of e-Book.
    Would look forward to your response.
    With best regards,
    BALASUBRAMANIAN P.//////

    நீங்கள் விரும்பும் முகவரிக்கே புத்தகத்தை அனுப்பிவைக்கிறேன். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. e-Book
    ஆக வெளியிடும் எண்ணம் தற்சமயம் இல்லை.

    ReplyDelete
  44. கதையும் அருமை, நான் உங்கள் புத்தகத்துகாக waiting.

    ReplyDelete
  45. ////சிங்கைசூரி said...
    கதையும் அருமை, நான் உங்கள் புத்தகத்துகாக waiting.////

    உங்களின் அர்வத்திற்கு நன்றி. புத்தகம் வெளிவந்தவுடன் உங்களுக்குத்தகவல் வரும்!

    ReplyDelete
  46. நன்று வாத்தியாரே..!

    பத்து பாகங்கள் எனில் அதுவும் நல்ல விஷயந்தான்..! பிரித்துப் பிரித்துப் படிக்க தோதாக இருக்கும்..!

    வாத்தியாரை நான்கு பேர் வாழ்த்தி எழுதினால்தான் மற்றவர்களுக்குத் தெரியுமா? புரியுமா என்ன..?

    வலையுலகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாத்தியாரின் திருநாமம் உச்சரிக்கப்பட்டே வருகிறது..!

    அப்பன் முருகனின் ஆசியோடு தாங்கள் செய்து முடித்திருக்கும் இந்த நற்செயலுக்கு தமிழ் ஜோதிட உலகமே நன்றிக் கடன்பட்டிருக்கிறது வாத்தியாரே..!

    வாழ்க நீவிர்..!

    ReplyDelete
  47. AT LAST WE ARE VERY HAPPY TO HERE THE ANNOUNCEMENT OF YOUR PUBLICATION
    THANKS FOR GIVING US THE CHANCE TO HAVE THE BOOK IN OUR HAND WE ARE EAGERLY WAITING FOR THAT. I PRAY , MAY THE ALMIGHTY WILL GIVE YOU THE STENGHT AND POWER TO TEACH US THE DEPTH OF ASTROLOGY IN FORTH COMING DAYS SIR
    WE ARE BLESSED YOU ARE THE LIGHT HOUSE FOR THE SMALL SHIPS{OURSELVES) TO REACH OUR DESTINATION WITH YOUR GUIDING LIGHT

    ReplyDelete
  48. SP.VR. SUBBIAH said...

    /////kannan said...
    SP.VR. SUBBIAH said... ////kannan said.........


    இறையருளால் கூடிய சீக்கிரமே ராதை அல்லது ருக்மணி வரட்டும் வாழ்த்துக்கள்
    Saturday, February 06, 2010 2:56:00 PM



    நன்றி ஆசானே!!!


    'குரு பிரம்மா! குரு விஷ்ணு!

    குரு தேவோ மகேஸ்வர!

    குரு சாஸ்தா! பரப்ரம்மா!

    தஸ்மை ஸ்ரீ குருவே நமக!

    தஸ்மை ஸ்ரீ குருவே நமக'!

    ReplyDelete
  49. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    நன்று வாத்தியாரே..!
    பத்து பாகங்கள் எனில் அதுவும் நல்ல விஷயந்தான்..! பிரித்துப் பிரித்துப் படிக்க தோதாக இருக்கும்..!
    வாத்தியாரை நான்கு பேர் வாழ்த்தி எழுதினால்தான் மற்றவர்களுக்குத் தெரியுமா? புரியுமா என்ன..?
    வலையுலகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாத்தியாரின் திருநாமம் உச்சரிக்கப்பட்டே வருகிறது..!
    அப்பன் முருகனின் ஆசியோடு தாங்கள் செய்து முடித்திருக்கும் இந்த நற்செயலுக்கு தமிழ் ஜோதிட உலகமே நன்றிக் கடன்பட்டிருக்கிறது வாத்தியாரே..!
    வாழ்க நீவிர்..!///////

    நன்றிக்கடன் என்பதெல்லாம் அதிகப்படியான பாராட்டு மொழி! நான் எளியவன். எனக்கு உங்களைப் போன்றவர்களின் அன்பு ஒன்று போதும் ஊனா தானா!

    ReplyDelete
  50. ///choli ganesan said...
    AT LAST WE ARE VERY HAPPY TO HERE THE ANNOUNCEMENT OF YOUR PUBLICATION
    THANKS FOR GIVING US THE CHANCE TO HAVE THE BOOK IN OUR HAND WE ARE EAGERLY WAITING FOR THAT. I PRAY , MAY THE ALMIGHTY WILL GIVE YOU THE STENGHT AND POWER TO TEACH US THE DEPTH OF ASTROLOGY IN FORTH COMING DAYS SIR
    WE ARE BLESSED YOU ARE THE LIGHT HOUSE FOR THE SMALL SHIPS{OURSELVES) TO REACH OUR DESTINATION WITH YOUR GUIDING LIGHT////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. ////kannan said...
    SP.VR. SUBBIAH said..
    /////kannan said...
    SP.VR. SUBBIAH said... ////kannan said.........
    இறையருளால் கூடிய சீக்கிரமே ராதை அல்லது ருக்மணி வரட்டும் வாழ்த்துக்கள்
    Saturday, February 06, 2010 2:56:00 PM
    நன்றி ஆசானே!!!
    'குரு பிரம்மா! குரு விஷ்ணு!
    குரு தேவோ மகேஸ்வர!
    குரு சாஸ்தா! பரப்ரம்மா!
    தஸ்மை ஸ்ரீ குருவே நமக!
    தஸ்மை ஸ்ரீ குருவே நமக'!////

    இதற்கெதற்கு நன்றி!???!!!!

    ReplyDelete
  52. வேளை பளு காரணமாக கடந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை. இன்றுதான் வர முடிந்தது. எனக்களிக்கப் பட்ட மிகப் பெரிய கௌரவமாக கருதி என்னுடைய கருத்துக்களை இன்னும் ஓரிரு எழுதி அனுப்புகிறேன். என் பெயரை குறிப்பிட்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  53. ////ananth said...
    வேலைப்பளு காரணமாகக் கடந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வர இயலவில்லை. இன்றுதான் வர முடிந்தது. எனக்களிக்கப் பட்ட மிகப் பெரிய கௌரவமாக கருதி என்னுடைய கருத்துக்களை இன்னும் ஓரிரு எழுதி அனுப்புகிறேன். என் பெயரை குறிப்பிட்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.////

    ஆகா, எழுதுங்கள். நீங்கள் ஓரளவிற்கு ஜோதிட ஞானம் உள்ளவர். நீங்கள் எழுதுவது புத்தகத்திற்கு அணி சேர்க்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com