மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.5.09

நீ எங்கே, நான் அங்கே!

நீ எங்கே, நான் அங்கே!

நீ எங்கே, நான் அங்கே! என்பது ஒரு அற்புதமான நிலைமை.
பொதுவாகக் காதலன் காதலிக்கு இந்த வரிகளைச் சொல்வார்கள்.

நமது வகுப்பறையில் காதலைப்பற்றி பேசினால் நன்றாக இருக்காது

ஆகவே இந்த வரிகளை, நான் நமது லக்கினாதிபதிக்கும் நமக்கும்
உள்ள தொடர்பிற்காக எழுதியதாக வைத்துக் கொள்ளுங்கள்

ஆமாம்! அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நாமும் இருப்போம்!
-----------------------------------------------------------------------------------------------
லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு
நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய்
மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி
வீடு. அது நன்மை பயக்கும்.

இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால்
அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப்
பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம்
வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ
இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம்
மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.

அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில்
கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான
நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக
இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில்
வையுங்கள்.

லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர்
அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.

லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும்
லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை
உடையதாக இருக்கும்

அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான
பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில்
இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.

ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக
இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான்
தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான்.
ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான்.
சொத்துக்களை உடையவனாக இருப்பான்.
பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான்.
வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும்.
மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான்.
உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான்.
தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்
அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.

மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும்
நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர்
மாறான பலன்களே நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக
இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள்
எல்லா இடங்களிலும் எடுபடும்.
தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான்
தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக
இருப்பான்.
செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான்.
மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான்.
அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான்.
எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான்
சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள்
ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக
இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான்.
நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான்
அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும்.
அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும்
ஜாதகன் இருப்பான்
ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான்.
நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான்.
ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத
வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான்.
தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான்.
தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான்.
கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்
சுகவாசியாக இருப்பான்.
வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான்.
இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை
பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான்.
அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு
தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக
இருப்பான்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை
உடையவனாகவும் இருப்பான்.
மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்
சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும்
இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.
எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான்.
பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்
பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்
லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்
நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து
சிறப்பைப் பெறுவார்கள்
சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
-------------------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!

84 comments:

  1. >>>லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

    ******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.
    எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான்.
    பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்
    பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
    மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்
    லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்
    நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
    லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து
    சிறப்பைப் பெறுவார்கள்
    சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்<<<<

    வாத்தியார் ஐயா...
    எனக்கு வலிமையுடந்தான் உள்ளார் 6 இடத்தில் ஆனால் மேல் சொனன மாதிரி எதுமே இல்ல...ஆண்டவன் புணியதில் (பரல் 8/39, மேசசெவ்வாய் விருச்சிக லக்னம்)

    >>>>அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம்
    வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ
    இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும்.<<<<

    விருச்சிக லக்னம் 6ம் வீடு வந்தமரும் லக்கினாபதிக்கு மேல் சொன்ன பிரச்சனை இருக்காதுனு நினைகிறேன்.

    >>>லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
    கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர்
    அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.<<<

    மேஷ செவ்வாய்க்கு இது மாறுபடும்

    இன்றைய பாடம் அருமை தெளிவாக இருந்தது...நன்றி.

    ReplyDelete
  2. லக்கனாதிபதி 6,8ல் இருந்தால் கொடுக்கும் கெடு பலன், மேச,ரிஷப,துலா,விருச்சிக லக்னகாரர்களுக்கு இல்லை. அது அவர்களுடைய இன்னொரு ஆட்சி வீடாக இருக்கும் பட்சதில். சரியா ஆசிரியரே.

    ReplyDelete
  3. ஜயா ,ஒரு சந்தேகம் எதாவது தவறு என்றால் மன்னிக்கவும். மிதுன லக்கினம் புதன் லக்கினத்தில் 12ம் வீட்டு சுக்கிரனும் லக்கினத்தில். நீங்கள் சொல்லி இருந்தீர்கள் இவ் அமைப்பு நிபுனத்துவ யோகம் என்று ஆனாலும் 12ம் வீடு லக்கினத்தோடு சேர்ந்தால் கூடாது என்று கூறி இருந்தீர்கள். இதை எவ்வாறு ஜயா எடுப்பது லக்கின்ம் (38 பரல்கள்) புதன் 7 சுக்கிரன் 5 சுயவர்க்க பரல்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா

    "நீ எங்கே நான் அங்கே" லக்கிணாதிபதி எங்கே இருக்கிறாரோ அங்கே தான்
    நாம் இருப்போம் ஒரே சொல்லில் லக்கிணாதிபதி முக்கியத்துவத்தை சொல்லி
    புரிய வைத்தீர்கள் super....

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா

    லக்கிணாதிபதி , சந்திரன் இவை இரண்டும் சிறப்பாக அமைத்திருக்க
    வேண்டும் அப்போதுதான் நம் ஜாதகத்தில் இருக்கும் யோகங்களை
    நாம் சிறப்பாக அனுபவிக்க முடியும் இல்லை என்றால் ஜாதகத்தில்
    எத்தனை யோகங்கள் இருந்தாலும் அதை மற்றவர்கள் அநுபவிபதை
    பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். நாம் நின்று அதை அனுபவிக்க
    முடியாது.

    ஐயா நான் சொல்வது சரியா?

    ReplyDelete
  7. லக்கினத்தின் டிகிரியை பொறுத்து பலன்கள் குறையுமா?, எனக்கு துலா லக்கினம்(0Li,18'20.41)டிகிரி லக்கினத்தில் பரல்கள்(34), லக்கினாதிபதி விருச்சிகத்தில்(செவ்வாய் வீட்டில்), மேற்கூறிய பலன்கள் 20 சதவிகிதம் மட்டுமே நடந்தது, சுக்கிர திசை ஒன்றும் செய்யவில்லை பரல்கள்(7/31), சுமாராகத்தான் இருந்தது.

    இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது எனக்கு கன்னி லக்கினமோ என்று தோன்றுகிறது. ஏன் என்றால் முதலில் எனக்கு கன்னி லக்கினம் என்று கனிததார்கள். அப்புறம் ஒரு பழுத்த வயதான ஜோதிடர் எனக்கு துலா லக்கினமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் , பிறந்த நேரம் 12:10 A.M என்றும் ஜகநாத ஹோராவில் கனித்து சொன்னார் முதலில் 11:55 P.M .

    குழப்பமாக உள்ளது ஆனால் 11.55 என்றால் எனக்கு கன்னி லக்கினம் தான் வருகிறது. கொஞ்சம் உதவி செய்யுங்கள் அய்யா, உங்களுக்கு புன்னியமாக போகட்டும்

    பிறந்த இடம் : தேவகோட்டை
    பிறந்த தேதி : முதலில் 15.01.1979 23.55 ஜோதிடர் கனித்த பிறகு 16.01.2979 00:10
    பிறந்த வருடம் : 1979

    ReplyDelete
  8. சார், வணக்கம் புதுசா உங்க வகுப்பறைக்கு வந்திருக்கேன் என்னையும் உங்க மாணவிய எத்துபிங்கள சார்,என்னகு ஜோதிடம் கத்துக்கணும்னு ரொம்ப நாளுஆசை...

    ReplyDelete
  9. Blogger மதி said...
    >>>லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
    ******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.
    எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான்.
    பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்
    பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
    மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்
    லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்
    நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
    லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து
    சிறப்பைப் பெறுவார்கள்
    சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்<<<<
    வாத்தியார் ஐயா...
    எனக்கு வலிமையுடன் தான் உள்ளார் 6 இடத்தில் ஆனால் மேல் சொனன மாதிரி எதுவுமே இல்லை...ஆண்டவன் புண்ணியத்தில் (பரல் 8/39, மேசசெவ்வாய் விருச்சிக லக்னம்)

    >>>>அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம்
    வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ
    இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும்.<<<<
    விருச்சிக லக்னம் 6ம் வீடு வந்தமரும் லக்கினாபதிக்கு மேல் சொன்ன பிரச்சனை இருக்காதுனு நினைகிறேன்.
    >>>லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
    கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர்
    அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும்
    இன்றைய பாடம் அருமை தெளிவாக இருந்தது...நன்றி./////

    உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ///Blogger KS said...
    present sir////

    வருகைப் பதிவு போட்டாயிற்று நண்பரே!

    ReplyDelete
  11. /////////Blogger saravana karthikeyan said...
    உள்ளேன் ஐயா////////////

    வருகைப் பதிவு போட்டாயிற்று நண்பரே!

    ReplyDelete
  12. ////Blogger krish said...
    Thanks for the lesson.////

    நன்றியெல்லாம் எதற்கு க்ரீஷ்?////Blogger ananth said...
    லக்கனாதிபதி 6,8ல் இருந்தால் கொடுக்கும் கெடு பலன், மேச,ரிஷப,துலா,விருச்சிக லக்னகாரர்களுக்கு இல்லை. அது அவர்களுடைய இன்னொரு ஆட்சி வீடாக இருக்கும் பட்சதில். சரியா ஆசிரியரே.//////

    அது பொது விதி. பிறகு பார்வை சேர்க்கை, அஷ்டவர்க்கம் என்று பல விஷயங்கள் உள்ளன!

    ReplyDelete
  13. ///////////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஜயா ,ஒரு சந்தேகம் எதாவது தவறு என்றால் மன்னிக்கவும். மிதுன லக்கினம் புதன் லக்கினத்தில் 12ம் வீட்டு சுக்கிரனும் லக்கினத்தில். நீங்கள் சொல்லி இருந்தீர்கள் இவ் அமைப்பு நிபுனத்துவ யோகம் என்று ஆனாலும் 12ம் வீடு லக்கினத்தோடு சேர்ந்தால் கூடாது என்று கூறி இருந்தீர்கள். இதை எவ்வாறு ஜயா எடுப்பது லக்கின்ம் (38 பரல்கள்) புதன் 7 சுக்கிரன் 5 சுயவர்க்க பரல்கள்./////

    இரண்டும் சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடன் இருப்பதால் நன்மையான பலன்களே உண்டாகும்!

    ReplyDelete
  14. //////////Blogger sundar said... வணக்கம் ஐயா
    "நீ எங்கே நான் அங்கே" லக்கிணாதிபதி எங்கே இருக்கிறாரோ அங்கே தான்
    நாம் இருப்போம் ஒரே சொல்லில் லக்கிணாதிபதி முக்கியத்துவத்தை சொல்லி
    புரிய வைத்தீர்கள் super....///////

    எல்லாம் உங்களுக்காகத்தான்!:-))))

    ReplyDelete
  15. Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    லக்கிணாதிபதி , சந்திரன் இவை இரண்டும் சிறப்பாக அமைத்திருக்க
    வேண்டும் அப்போதுதான் நம் ஜாதகத்தில் இருக்கும் யோகங்களை
    நாம் சிறப்பாக அனுபவிக்க முடியும் இல்லை என்றால் ஜாதகத்தில்
    எத்தனை யோகங்கள் இருந்தாலும் அதை மற்றவர்கள் அநுபவிப்பதை
    பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். நாம் நின்று அதை அனுபவிக்க
    முடியாது.
    ஐயா நான் சொல்வது சரியா?/////

    சரியல்ல. அது பொதுவிதி. மற்றும் எத்தனையோ அம்சங்கள் அமைப்புக்கள் உள்ளன.
    There is no fixed rule!

    ReplyDelete
  16. ////Blogger Slakshmanan said...
    லக்கினத்தின் டிகிரியை பொறுத்து பலன்கள் குறையுமா?, எனக்கு துலா லக்கினம்(0Li,18'20.41)டிகிரி லக்கினத்தில் பரல்கள்(34), லக்கினாதிபதி விருச்சிகத்தில்(செவ்வாய் வீட்டில்), மேற்கூறிய பலன்கள் 20 சதவிகிதம் மட்டுமே நடந்தது, சுக்கிர திசை ஒன்றும் செய்யவில்லை பரல்கள்(7/31), சுமாராகத்தான் இருந்தது.
    இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது எனக்கு கன்னி லக்கினமோ என்று தோன்றுகிறது. ஏன் என்றால் முதலில் எனக்கு கன்னி லக்கினம் என்று கனிததார்கள். அப்புறம் ஒரு பழுத்த வயதான ஜோதிடர் எனக்கு துலா லக்கினமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் , பிறந்த நேரம் 12:10 A.M என்றும் ஜகநாத ஹோராவில் கனித்து சொன்னார் முதலில் 11:55 P.M .
    குழப்பமாக உள்ளது ஆனால் 11.55 என்றால் எனக்கு கன்னி லக்கினம் தான் வருகிறது. கொஞ்சம் உதவி செய்யுங்கள் அய்யா, உங்களுக்கு புன்னியமாக போகட்டும்
    பிறந்த இடம் : தேவகோட்டை
    பிறந்த தேதி : முதலில் 15.01.1979 23.55 ஜோதிடர் கனித்த பிறகு 16.01.2979 00:10
    பிறந்த வருடம் : 1979//////

    ஜோதிடரை விடுங்கள். உங்கள் அன்னையைக் கேட்டு, பிறந்த நேரம் என்ன என்பதைச் சரியாக எழுதுங்கள்!

    ReplyDelete
  17. /////Blogger DD said...
    சார், வணக்கம் புதுசா உங்க வகுப்பறைக்கு வந்திருக்கேன் என்னையும் உங்க மாணவியாக ஏற்றுக்கொள்வீர்களா சார்? எனக்கு ஜோதிடம் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை...//////

    This class is open to all.
    நீங்கள் பழைய படங்களையெல்லாம் பொறுமையாக - ஒவ்வொன்றாகப் படியுங்கள். மொத்தம் இதுவரை எழுதியவை 200 பாடங்களாகும்! அவை அனைத்திற்கும் சுட்டி (link) சைடுபாரில் (side bar) உள்ளது

    ReplyDelete
  18. எனக்கு லக்னாதிபதி 8ல் இருக்கிறார். அடுத்த பதிவு வரை கத்திருக்க வேண்டும். என் மனைவிக்கு 2ல். சொன்ன சில பலன்கள் சரியாக இருக்கிறது.

    தமிழில் வந்த பல ஜோதிட நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றில் பலவற்றில் அஷ்ட வர்கத்தைப் பற்றி எதுவும் இருக்காது. சிலவற்றில் அஷ்டவர்கம் எப்படி கணிப்பது என்று மட்டும் சொல்லப் பட்டிருக்கும். அஷ்வர்கத்தைப் பார்த்து பலன் சொல்வது தமிழக ஜோதிடர்களின் வழக்கமில்லையா. தாங்கள் சொல்வதைப் போல் அஷ்ட வர்கம் பார்க்காமல் பலன் சொன்னால் எல்லாமே தவறாகத்தான் போகும்.

    ReplyDelete
  19. //சரியல்ல. அது பொதுவிதி. மற்றும் எத்தனையோ அம்சங்கள் அமைப்புக்கள் உள்ளன.
    There is no fixed rule!//

    தவறை திருத்தியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. /////Blogger ananth said...
    எனக்கு லக்னாதிபதி 8ல் இருக்கிறார். அடுத்த பதிவு வரை கத்திருக்க வேண்டும். என் மனைவிக்கு 2ல். சொன்ன சில பலன்கள் சரியாக இருக்கிறது.
    தமிழில் வந்த பல ஜோதிட நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றில் பலவற்றில் அஷ்ட வர்கத்தைப் பற்றி எதுவும் இருக்காது. சிலவற்றில் அஷ்டவர்கம் எப்படி கணிப்பது என்று மட்டும் சொல்லப் பட்டிருக்கும். அஷ்வர்கத்தைப் பார்த்து பலன் சொல்வது தமிழக ஜோதிடர்களின் வழக்கமில்லையா. தாங்கள் சொல்வதைப் போல் அஷ்ட வர்கம் பார்க்காமல் பலன் சொன்னால் எல்லாமே தவறாகத்தான் போகும்./////

    அஷ்டகவர்க்கம் முக்கியமானது. தமிழகத்தில் பல ஜோதிடர்கள் அதுபற்றிய அக்கறையின்றி இருப்பது வருந்தத்தக்கதே!

    ReplyDelete
  21. //////////Blogger sundar said...
    //சரியல்ல. அது பொதுவிதி. மற்றும் எத்தனையோ அம்சங்கள் அமைப்புக்கள் உள்ளன.
    There is no fixed rule!//
    தவறை திருத்தியதற்கு நன்றி ஐயா.///////

    That is all right Sundar!

    ReplyDelete
  22. //////Blogger VA P RAJAGOPAL said...
    Thanks for today leason..../////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  23. //////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    EACH AND EVERY WORDS PERFECTLY SUPER SIR///////////

    நன்றி கார்த்திகேயன்!

    ReplyDelete
  24. அன்புள்ள ஆசான் அவர்களுக்கு,

    தங்கள் பாடத்திட்டத்தில்

    வேதகர்/பாசகர்/போதகர்/காரகர் கான்செப்ட் மற்றும் அங்கிச பலன்கள் பற்றிய கான்செப்ட்களையும் நடத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  25. Dear Sir

    Enakku Lagnadhibhadhi 11il(viruchiga) & En magan lagnadhibadhi 9il (Kadakam)uchham.

    please explain about sara , isthira and ubhaya lagnam -- Adhan Padhagadhibhadhi satru vilakamalikavum sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  26. Dear sir,

    Hope you are doing same as well. Lagna lesson super sir. I have sun in simha lagna with mercury which is considered Budha-Aditya yoga but saturn is also sitting next to them, so there are always hurdles in my life for everything...One time you told me that for every step I move forward, I will slip 5 step backwards...Its kinda true. And your explanation in the lesson also holds good,

    If Saturn with Sun, and Mercury will the Budha-Aditya yogam will work? (Non of them are combust)

    Regards
    Shankar

    ReplyDelete
  27. /////Blogger Slakshmanan said...
    அன்புள்ள ஆசான் அவர்களுக்கு,
    தங்கள் பாடத்திட்டத்தில்
    வேதகர்/பாசகர்/போதகர்/காரகர் கான்செப்ட் மற்றும் அங்கிச பலன்கள் பற்றிய கான்செப்ட்களையும் நடத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்./////

    வேதகர், பாசகர், போதகர், அங்கிசபலன் - இவையெல்லாம் என்ன? அவற்றிற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் சொல்லுங்கள்!

    ReplyDelete
  28. /////Blogger Arulkumar Rajaraman said..
    Dear Sir
    Enakku Lagnadhibhadhi 11il(viruchiga) & En magan lagnadhibadhi 9il (Kadakam)uchham.
    please explain about sara , isthira and ubhaya lagnam -- Adhan Padhagadhibhadhi satru vilakamalikavum sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman///

    நீங்கள் கேட்டு எழுதியுள்ளவைகளெல்லாம் அடுத்தடுத்து வரும். சற்றுப் பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  29. /////Blogger Geekay said...
    உள்ளேன் ஐயா!!/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  30. /////////////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் ஐயா./////

    நன்றி பாரதி!

    ReplyDelete
  31. Blogger hotcat said...
    Dear sir,
    Hope you are doing same as well. Lagna lesson super sir. I have sun in simha lagna with mercury which is considered Budha-Aditya yoga but saturn is also sitting next to them, so there are always hurdles in my life for everything...One time you told me that for every step I move forward, I will slip 5 step backwards...Its kinda true. And your explanation in the lesson also holds good,
    If Saturn with Sun, and Mercury will the Budha-Aditya yogam will work? (Non of them are combust)
    Regards
    Shankar/////

    புதாதித்ய யோகம் அதன் தசாபுத்திகளில் உரிய பலனைத் தரும்!
    லக்கினத்தில் சனி இருப்பது ஒரு தடைதான்!

    ReplyDelete
  32. உள்ளேன் ஐயா.பாடம் நன்று.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  33. naanum present sir...still waiting for other half....

    ReplyDelete
  34. hi sir,

    dhanushu lagnam 30 paralgal, lagnathipathi guru(vak) in 11 th house thulam rasi 32 paralgal

    wht will be d effect?

    ReplyDelete
  35. Dear sir

    I am following you for the last 2 months. I am also belonging to Simha lagnam. I like Kannadasan verymuch. Infact he is my Manaseega guru.

    Thanks

    ReplyDelete
  36. ////Blogger dhanan said...
    உள்ளேன் ஐயா.பாடம் நன்று.
    அன்புடன்,
    மதுரை தனா.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. //////////Blogger Thanuja said...
    naanum present sir...still waiting for other half..../////

    தொடர்ந்து வரும் சகோதரி!

    ReplyDelete
  38. //////////Blogger YOGANANDAM M said...
    hi sir,
    dhanushu lagnam 30 paralgal, lagnathipathi guru(vak) in 11 th house thulam rasi 32 paralgal
    wht will be d effect?/////////

    லக்கினாதிபதி 11ல் அதாவது லாபஸ்தானத்தில் அமர்ந்தால், குறைந்த முயற்சி;அதிகபலன். Minimum efforts;Maximum benefits!

    ReplyDelete
  39. /////Blogger Krushna Cumaar said...
    Dear sir
    I am following you for the last 2 months. I am also belonging to Simha lagnam. I like Kannadasan verymuch. Infact he is my Manaseega guru.
    Thanks//////

    தகவலுக்கு நன்றி!
    கிருஷ்ணகுமார் என்னும் அழகான பெயரை எப்படி சேதப் படுத்தியிருக்கிறீர்கள்?
    எண் சாஸ்த்திரமா?

    ReplyDelete
  40. Yes sir, it is numerology only. It is a very long story... But one thing is sure. After the name change my life is 100 times better. I do down load tamil fonts and write a lot. Thanks sir.

    ReplyDelete
  41. Hello Sir

    I have been reading the lessons..But I could not comment for a long time...

    Thanks for the lesson about Lagna Lord...My wife belongs to Meena lagna..Lagnathipathi is in 5th place..(Ucha veedu)..But we dont have child for the last 4 years..Why is it getting delayed? She was pregnant two months ago..But doctor has advised to abort it since there was no heartbeat found for both of the babies.(Twin Pregnancy)

    ReplyDelete
  42. /////Blogger Krushna Cumaar said...
    Yes sir, it is numerology only. It is a very long story... But one thing is sure. After the name change my life is 100 times better. I do down load tamil fonts and write a lot. Thanks sir.////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. /////////////Blogger Ragu Sivanmalai said...
    Hello Sir
    I have been reading the lessons..But I could not comment for a long time...
    Thanks for the lesson about Lagna Lord...My wife belongs to Meena lagna..Lagnathipathi is in 5th place..(Ucha veedu)..But we dont have child for the last 4 years..Why is it getting delayed? She was pregnant two months ago..But doctor has advised to abort it since there was no heartbeat found for both of the babies.(Twin Pregnancy)///////////

    கடுமையான தோஷம் காரணமாக அப்படி நிகழ்ந்திருக்கலாம். ஒரு முறை ராமேஷ்வரம் சென்று அங்கே உறைந்திருக்கும் இறைவனை வழிபட்டு வாருங்கள்!

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. அடுத்த பாடம் வருவது தாமதமாகிறது. ஆசிரியருக்கு நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். பரவாயில்லை அது வரும்போது வரட்டும். பாடம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்.

    வேதகர்/பாசகர்/போதகர்/காரகர் இவற்றைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். தாங்களும் என்ன என்று கேட்டிருந்தீர்கள்.

    ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன். ஒவ்வொரு தசாவிலும் வெவ்வேறு கிரகங்கள் (புத்தி நாதர்கள்) வேதகர்/பாசகர்/போதகர்/காரகர் என்று அழைக்கப்ப்படுவார்கள். உதாரணத்திற்கு சூரிய தசையில் போதகர் புதன், வேதகர் சுக்கிரன், பாசகர் சந்திரன், காரகர் செவ்வாய். போதகர் நிறைய பலன் தருவர். வேதகர் பலனைத் தடுத்து நிறுத்துவார். பாசகர் சீக்கிரம் பலன் தருவார், காரகர் நிதானமாக அனைத்து பலன்களையும் தருவார்.

    Disclaimer: ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொன்னேன். இவை எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  46. ஐயா,
    எனக்கு மீன லக்கினம்-லக்கினத்தில் குரு..பலன்கள் சூப்பர்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  47. Sir
    தலைப்பு "நீ எங்கே நான் இங்கே" கலக்கல்!
    லக்கினாதிபதி நீ எங்கே இருக்கிறாய்?
    (லக்கினாதிபதி வீடாகிய/ இடமாகிய) நான் இங்கே இருக்கிறேன்.
    பாடத்துக்கு நன்றி

    ReplyDelete
  48. Blogger ananth said...
    அடுத்த பாடம் வருவது தாமதமாகிறது. ஆசிரியருக்கு நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். பரவாயில்லை அது வரும்போது வரட்டும். பாடம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும்.
    வேதகர்/பாசகர்/போதகர்/காரகர் இவற்றைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். தாங்களும் என்ன என்று கேட்டிருந்தீர்கள்.
    ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன். ஒவ்வொரு தசாவிலும் வெவ்வேறு கிரகங்கள் (புத்தி நாதர்கள்) வேதகர்/பாசகர்/போதகர்/காரகர் என்று அழைக்கப்ப்படுவார்கள். உதாரணத்திற்கு சூரிய தசையில் போதகர் புதன், வேதகர் சுக்கிரன், பாசகர் சந்திரன், காரகர் செவ்வாய். போதகர் நிறைய பலன் தருவர். வேதகர் பலனைத் தடுத்து நிறுத்துவார். பாசகர் சீக்கிரம் பலன் தருவார், காரகர் நிதானமாக அனைத்து பலன்களையும் தருவார்.
    Disclaimer: ஏதோ எனக்கு தெரிந்ததைச் சொன்னேன். இவை எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை./////////

    சூரியதசையின் பலன்களை அறிவதற்கு சுலபமான வழியிருக்கிறதே. சூரியன் சுயவர்க்கத்தில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்டிருந்தால் பலன்கள் நன்றாக இருக்கும். 4 பரல்கள் என்றால் சராசரியாக இருக்கும். 3ம் அதற்குக் கீழான பரல்களுடன் இருந்தால் சுமாராக இருக்கும். இது (இந்த விதி) எல்லா தசைகளுக்குக்கும் பொருந்தும்

    ReplyDelete
  49. /////Blogger வேலன். said...
    ஐயா,
    எனக்கு மீன லக்கினம்-லக்கினத்தில் குரு..பலன்கள் சூப்பர்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்/////

    எனக்கும் மகிழ்ச்சிதான் வேலன்!

    ReplyDelete
  50. /////////Blogger செல்லி said...
    Sir
    தலைப்பு "நீ எங்கே நான் இங்கே" கலக்கல்!
    லக்கினாதிபதி நீ எங்கே இருக்கிறாய்?
    (லக்கினாதிபதி வீடாகிய/ இடமாகிய) நான் இங்கே இருக்கிறேன்.
    பாடத்துக்கு நன்றி//////////

    பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  51. Dear sir

    You have said that to get maximum benifit, not only the Lagnathipathi but also the moon is important. Mine is Simha lagnam. Sun is on 5th place along with Buthan and Moon. But it is amavasai. In this case what is the status of moon?

    During Amavasai moon is powerful or powerless. Because we believe amavasai is one of the most auspesious day. And we do lot of things on that day. Is it correct or not? please clarify sir.....

    ReplyDelete
  52. ////////////////Blogger Krushna Cumaar said...
    Dear sir
    You have said that to get maximum benifit, not only the Lagnathipathi but also the moon is important. Mine is Simha lagnam. Sun is on 5th place along with Buthan and Moon. But it is amavasai. In this case what is the status of moon?
    During Amavasai moon is powerful or powerless. Because we believe amavasai is one of the most auspesious day. And we do lot of things on that day. Is it correct or not? please clarify sir.....///////////

    Any planet which conjucts with The Sun will loose its power. On amavasai day the moon is powerless.
    Birth on Amavasai day is not good for the native and also for the parents. The native will suffer in his/her childhood

    ReplyDelete
  53. அய்யா,

    ஒரு சந்தேகம், ஒருவருக்கு லக்கினாதிபதி சுக்கிரன் என்று வைத்து கொல்வோம், அவர் லக்கினத்திற்க்கு 3ல் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் சுக்கிரன் 3ல் இருந்தால் மறைவு ஆயிற்றே. அதே போல் ஒருவருக்கு புதிரஸ்தானாதிபதி புதன் என்று வைத்து கொல்வோம் அவர்,3,6,8,12ல் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் புதன் 3,6,8,12ல் மறைவு ஆயிற்றே

    ReplyDelete
  54. உள்ளேன் ஐயா..

    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..

    நான் ஒரு பதிவுக்கு வந்து ஆஜர் சொன்னா நூறு பதிவுக்கு சொன்ன மாதிரி)))))))))))))))

    ReplyDelete
  55. வணக்கம் அய்யா

    அமாவாச குறித்த தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  56. Dear Sir

    Sara, Isthiram and Ubhaya lagnam -- silavatrai appa moolam arindhu kondaen. Enakku sariyagha puriyavillai...Adhadnal than ketten..

    Thank you

    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  57. Vanakkam .Hi sir,
    I'm following your class for past few months,but this is the first time i'm giving feedback.First of all I'm really greatful to you,because you are spreading the precious knowledge across the globe.Your sincere effort for this blog is really impressive.I'll pray for you and your sincere effort towards indian astrology.
    tq.

    ReplyDelete
  58. innuma sir the coming part eluthirinka...i am anxiously waiting.. to read it.....

    ReplyDelete
  59. அன்புள்ள வாத்தியாரய்யா,

    துலா லக்கினக்காரர்களுக்கு சனி யோக காரகன், அவரே சிம்மத்தில்(சனி 3 பரல்கள்/வீட்டின் பரல்கள் 31) அமர்ந்து புத்திரஸ்தானமாகிய கும்பத்தை பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் (கும்பத்தில் கேது/ வீட்டின் பரல்கள் 27), ஏன் என்றால் சிம்மத்தில் சனி இருந்தால் கடும் புத்திர தோஷம் என்று படித்துள்ளேன். ஆனால் மகரத்தில் சூரியன் இவர்கள் பரிவர்த்தனம் பெற்றுள்ளார்கள்.இப்பொழுது இந்த ஜாதகத்தில் நாம் சனி சிம்மத்தில் இருப்பதாக் கொள்வதா? அல்லது மகரத்தில் இருப்பதாக கொள்வதா?

    ReplyDelete
  60. ம்ம் ஐயா எங்கோ வேலை அலுவலாக சொல்லாமல் லீவு போட்டுட்டார் போல. ஜயா முடித்திட்டு வருவாரு லேட்டஸ்டா...

    ReplyDelete
  61. Dear Sir

    Endha Endha Lagnathirku endha graham nanmai seyyum endru erkanave eluthiirikkeergal.

    Mesha Lagnathirkku Shani Nanmai Seyyuma?(paralkalai patri naan ketkavillai). I mean meenathil Shani - Adharkuiryavan(guru) simmathil irundhal - mesha lagnathirkku eppadi irukkum...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  62. Sir
    when I refer to a computerised horoscope I could see the parals of each houses. But I am not able to understand about suyavargam of 7 planets. You have mentioned in your earlier lessons that each planet has 8 parals and atleast each should have a minimum of 4 parals. In Ashtavargam chart name of 7 planets are given horzondally at the top and 12 houses are given vertically on left hand side. When I refered to that I could understand about the parals of houses which generally varies from 20 to 40 parals. Similarly all 7 planets are also having parals which are inbetween 35 t0 50. But you have mentioned that each planets have only 8. I am confused. Please explain. Or else should we devide this by 12?
    I was trying to find out from your earlier lessons and unable to find out.
    Thanks

    Tuesday, May 19, 2009 1:16:00 AM

    ReplyDelete
  63. வணக்கம் ஐயா

    நாங்கள் ( மாணவர்கள்)அனைவரும் இங்கே! ஆசிரியர் எங்கே ???????????/

    ReplyDelete
  64. ஆசானுக்கும் attendance mark போட வேண்டும் :)

    ReplyDelete
  65. /////Blogger Slakshmanan said...
    அய்யா,
    ஒரு சந்தேகம், ஒருவருக்கு லக்கினாதிபதி சுக்கிரன் என்று வைத்து கொல்வோம், அவர் லக்கினத்திற்க்கு 3ல் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் சுக்கிரன் 3ல் இருந்தால் மறைவு ஆயிற்றே. அதே போல் ஒருவருக்கு புதிரஸ்தானாதிபதி புதன் என்று வைத்து கொல்வோம் அவர்,3,6,8,12ல் ஏதாவது ஒரு இடத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் பலன் எவ்வாறு இருக்கும். ஏனென்றால் புதன் 3,6,8,12ல் மறைவு ஆயிற்றே!////////

    மறைவு ஒன்றை வைத்து மட்டும் பலன் சொல்லப்படுவதில்லை. சேர்க்கை, பார்வை, பரல்கள், ஆதிபத்யம், காரகன் என்று மேலும் பல விஷயங்களை அலச வேண்டும்.

    பெண் என்றால், அழகு, அறிவு, கல்வி, திறமை, குணம், குடும்ப பாரம்பரியம் என்று எத்தனை விஷயங்களைப் பார்க்க வேண்டியதிருக்கிறது?

    அதுபோலத்தான் இதுவும்!

    ReplyDelete
  66. ////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    உள்ளேன் ஐயா..
    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..
    நான் ஒரு பதிவுக்கு வந்து ஆஜர் சொன்னா நூறு பதிவுக்கு சொன்ன மாதிரி)))))))))))))))////

    இல்லை இல்லை! இதுவரை எழுதிய பதிவுகளுக்கும், இனிமேல் எழுதப் போகும் பதிவுகளுக்கும் சொன்ன மாதிரி வைத்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  67. ////Blogger Krushna Cumaar said...
    வணக்கம் அய்யா
    அமாவாசை குறித்த தகவலுக்கு நன்றி./////

    நன்றி இருக்கட்டும். விளக்கத்தை உள் வாங்கிக்கொண்டீர்களா?

    ReplyDelete
  68. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Sara, Isthiram and Ubhaya lagnam -- silavatrai appa moolam arindhu kondaen. Enakku sariyagha puriyavillai...Adhadnal than ketten..
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman//////

    அது பற்றி எழுதுகிறேன்!

    ReplyDelete
  69. /////Blogger Thanuja said...
    innuma sir the coming part eluthirinka...i am anxiously waiting.. to read it...../////

    எழுதிப் பதிவிட்டு விட்டேன் அம்மணி!

    ReplyDelete
  70. ////Blogger Slakshmanan said...
    அன்புள்ள வாத்தியாரய்யா,
    துலா லக்கினக்காரர்களுக்கு சனி யோக காரகன், அவரே சிம்மத்தில்(சனி 3 பரல்கள்/வீட்டின் பரல்கள் 31) அமர்ந்து புத்திரஸ்தானமாகிய கும்பத்தை பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் (கும்பத்தில் கேது/ வீட்டின் பரல்கள் 27), ஏன் என்றால் சிம்மத்தில் சனி இருந்தால் கடும் புத்திர தோஷம் என்று படித்துள்ளேன். ஆனால் மகரத்தில் சூரியன் இவர்கள் பரிவர்த்தனம் பெற்றுள்ளார்கள்.இப்பொழுது இந்த ஜாதகத்தில் நாம் சனி சிம்மத்தில் இருப்பதாக் கொள்வதா? அல்லது மகரத்தில் இருப்பதாக கொள்வதா?//////

    யோககாரகன் மேலேயே சந்தேகமா?
    கிரகங்கள் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.
    பரிவர்த்தனைக்கான பலன்கள் மட்டும் உண்டு!

    ReplyDelete
  71. /////////Blogger Emmanuel Arul Gobinath said...
    ம்ம் ஐயா எங்கோ வேலை அலுவலாக சொல்லாமல் லீவு போட்டுட்டார் போல. ஜயா முடித்திட்டு வருவாரு லேட்டஸ்டா...//////

    வந்துவிட்டேன் இமானுவேல்!

    ReplyDelete
  72. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Endha Endha Lagnathirku endha graham nanmai seyyum endru erkanave eluthiirikkeergal.
    Mesha Lagnathirkku Shani Nanmai Seyyuma?(paralkalai patri naan ketkavillai). I mean meenathil Shani - Adharkuiryavan(guru) simmathil irundhal - mesha lagnathirkku eppadi irukkum...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    பன்னிரெண்டில் சென்று அமரும் கிரகத்தால் பலன் இல்லை!

    ReplyDelete
  73. ///////Blogger Krushna Cumaar said...
    Sir
    when I refer to a computerised horoscope I could see the parals of each houses. But I am not able to understand about suyavargam of 7 planets. You have mentioned in your earlier lessons that each planet has 8 parals and atleast each should have a minimum of 4 parals. In Ashtavargam chart name of 7 planets are given horzondally at the top and 12 houses are given vertically on left hand side. When I refered to that I could understand about the parals of houses which generally varies from 20 to 40 parals. Similarly all 7 planets are also having parals which are inbetween 35 t0 50. But you have mentioned that each planets have only 8. I am confused. Please explain. Or else should we devide this by 12?
    I was trying to find out from your earlier lessons and unable to find out.
    Thanks/////

    உங்கள் ஜாதகத்தை பி.டி.எஃப் பார்மாட்டில் அனுப்புங்கள். சுயவர்க்கத்தை டிக் செய்து திருப்பி அனுப்பிவைக்கிறேன். அப்பொது எளிதாகப் புரியும்

    ReplyDelete
  74. //////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    நாங்கள் ( மாணவர்கள்)அனைவரும் இங்கே! ஆசிரியர் எங்கே ???????????///////

    பணிச்சுமை. தொடர்ந்து முகூர்த்த நாட்கள். பல திருமண அழைப்புக்கள். ஊருக்குப் பயணம். என்ன செய்வது சுந்தர்?

    ReplyDelete
  75. ///////Blogger Arun Kumar. S said...
    ஆசானுக்கும் attendance mark போட வேண்டும் :)///////

    விதிமுறைகள், சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆசானுக்கும் attendance போட்டு விடுங்கள்

    ReplyDelete
  76. ஐயா,
    பெரும்பாலான எல்லா ஜோதிட புத்தகங்களிலும் 6 , 8 , 12 ஆம் இடங்களையே மறைவு ஸ்தானங்களாக விசேஷமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
    இந்த ஸ்தானங்களில் இருக்கும் க்ரகங்கள் தீயப்பலங்களையே தருகின்றன .
    3 ஆம் இடமும் மறைவு ஸ்தானம் தானே .
    C.G. ராஜன் அவர்கள் எழுதிய ஜாதக கணிதம் என்னும் புத்தகத்தில் 3 , 6 ஆம் இடங்கள் வலுவாய் இருக்கும்
    போது அவை உபஜெய ஸ்தானம் என்றும். பலவீனமாய் இருக்கும் போது அவை மறைவு ஸ்தானம் என்றும்
    குறிப்பிட்டுள்ளார் .
    LIFCO வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் ,
    சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது லக்னத்திற்கு 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும் ,
    சந்திரன் , புதன் , குரு 3, 6 , 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும்
    ( சுக்ரன் 3 , 8 இல் இருந்தால் மறைவு 6 , 12 இல் இருந்தால் மறைவு இல்லை என்றும் ) குறிப்பிடப்பட்டுள்ளது .
    இதைப்பற்றி தங்களுடைய கருத்து.
    Further For example
    துலா லக்னத்திற்கு மூன்றில் குரு . அவர் தன் சொந்த வீடான தனுசில் உள்ளார் . மேலும் குரு ஆறுக்கு உடையவனும் ஆகிறார்,
    இந்நிலையில் மூன்றாம் இடத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது, மேலும் அங்கு வந்து அமரும் மற்ற க்ரஹத்தின் நிலை என்ன
    அவை மறைந்ததாக கொள்வதா இல்லையா ?
    இதைப்பற்றி விளக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  77. /////karthik said...
    ஐயா,
    பெரும்பாலான எல்லா ஜோதிட புத்தகங்களிலும் 6 , 8 , 12 ஆம் இடங்களையே மறைவு ஸ்தானங்களாக விசேஷமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
    இந்த ஸ்தானங்களில் இருக்கும் க்ரகங்கள் தீயப்பலங்களையே தருகின்றன .
    3 ஆம் இடமும் மறைவு ஸ்தானம் தானே .
    C.G. ராஜன் அவர்கள் எழுதிய ஜாதக கணிதம் என்னும் புத்தகத்தில் 3 , 6 ஆம் இடங்கள் வலுவாய் இருக்கும்
    போது அவை உபஜெய ஸ்தானம் என்றும். பலவீனமாய் இருக்கும் போது அவை மறைவு ஸ்தானம் என்றும்
    குறிப்பிட்டுள்ளார் .
    LIFCO வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் ,
    சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது லக்னத்திற்கு 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும் ,
    சந்திரன் , புதன் , குரு 3, 6 , 8 , 12 இல் இருந்தால் மறைவு என்றும்
    ( சுக்ரன் 3 , 8 இல் இருந்தால் மறைவு 6 , 12 இல் இருந்தால் மறைவு இல்லை என்றும் ) குறிப்பிடப்பட்டுள்ளது .
    இதைப்பற்றி தங்களுடைய கருத்து.///////

    எதை வைத்து அவர்கள் அப்படி எழுதியுள்ளார்கள் என்பது தெரியவில்லை.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Further For example
    துலா லக்னத்திற்கு மூன்றில் குரு . அவர் தன் சொந்த வீடான தனுசில் உள்ளார் . மேலும் குரு ஆறுக்கு உடையவனும் ஆகிறார், இந்நிலையில் மூன்றாம் இடத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது, மேலும் அங்கு வந்து அமரும் மற்ற க்ரஹத்தின் நிலை என்ன
    அவை மறைந்ததாக கொள்வதா இல்லையா ?
    இதைப்பற்றி விளக்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//////

    மறைவிடங்களில் உள்ள கிரகங்களால் முழுப்பலனும் கிடைக்கது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com