மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.08

ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் இல்லாத உலகம் எது?

பத்தாம் வீடு - பகுதி 2

மனித வாழ்க்கையில் பல அவலங்கள். ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில்
280 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வருகிறது. பிறக்கும் முறையில்
வித்தியாசம் இல்லை. பிறந்த உடனேயே - அந்தக் கணமே வித்தியாசம்
உருவாக ஆரம்பித்து விடுகிறது. அது செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால்
எல்லாச் சீராட்டுக்களையும் பெறுகிறது. அன்றாடம் சோற்றுக்கு அல்லாடும்
ஒரு ஏழை வீட்டில் பிறந்திருந்தால், தாய் அதை வெய்யிலில் தூக்கிக்
கொண்டு தான் வேலை செய்யும் இடங்களுக்குப் போகின்றாள்.
ஒரு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலோ அல்லது ஒரு வீட்டின்
உத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலிலோ அதைக் கிடத்திவிட்டுத்
தன் வேலையைக் கவனிக்கிறாள். அவள் தன் வயிற்றுப்பாட்டையும் பார்க்க
வேண்டும் தன்னுடைய குழந்தையின் பசியையும் போக்க வேண்டும்.

குழந்தைகள் வளரும் சூழ்நிலையிலும் பல அவதிகளைச் சந்திக்கின்றன.
சில கிராமங்களில் ஆரம்பப் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கிடையாது. தினமும் மூன்று அல்லது ஐந்து கிலோ மீட்டர் தூரம் அந்தப்
பிஞ்சுக்கால்கள் நடந்து சென்று படிக்க வேண்டும்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று முண்டாசுக் கவிஞன் சொல்லி
விட்டுப்போய் விட்டான். நாட்டில் ஜாதிகள் எல்லா நிலைகளிலும்
பேயாட்டம் போடுகிறது. எந்தப் பள்ளிக்கூடத்திலாவது ஜாதியைக்
கேட்காமல் இடம் கொடுக்கிறார்களா சொல்லுங்கள்? அங்கேயே ஜாதி
அக்குழந்தையின் தோளின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுகிறது.

வெள்ளைக்காரன் செய்த சதியால் மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டு
போட்டுக் கொடுக்க நேர்ந்தது. துண்டு போட்டுக்கொண்டு சென்ற நாட்டை
விட, துண்டு போடக்காரணமாக இருந்த அந்த மதத்தினரின் எண்ணிக்கை,
இப்போது அந்த நாட்டில் இருப்பவர்களைவிட இங்கே அதிகம். பிறகு
ஒரு பெரியவர், மொழியின் பெயரால் நாட்டைப் பல மாநிலங்களாகப் பிரித்துக்
கொடுக்கும் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்துப் பிரித்துக் கொடுத்தார்.
பூகோள அடிப்படையில் பிரித்திருந்தால் பல அவதிகள் இன்று இருக்காது.
உதாரணம் காவிரி கன்னடர்களுக்கு மட்டும் என்ற நிலைப்பாடு. பிறகு
பல பெரியவர்கள் சேர்ந்து பொருளாதார அடிப்படையில், கல்வி வேலை
வாய்ப்புக்களை உருவாக்காமல் ஜாதிகளின்/ இனங்களின் அடிப்படையில்
கல்வி வேலை வாய்ப்புக்களில் சீர் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.
பிறகு 1970ற்குப் பிறகு அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையில் ஒவ்வொரு
தொகுதியிலும் அதிகமாக உள்ள ஜாதிக்காரகளின் பிரதிநிதிகளை நிற்க
வைத்து வெற்றி காணும் யுக்தியைக் கண்டு பிடித்தன. அரசியலில் ஜாதி
வேரூன்றி நிற்க ஆரம்பித்தது. பிறகு பத்தாண்டுகள் கழிந்து ஜாதிக்
கட்சிகள் இனக் கட்சிகள் உருவாகின. இப்போது எல்லா மட்டத்திலும்,
ஜாதிகள், இனங்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.
அது என் வேலையும் அல்ல.
பொதுவாக உள்ள அவலங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

இன்று சமுதாயத்தில், முற்பட்டவர்கள், பிற்பட்டவர்கள், அதிகம் பிற்பட்ட
வர்கள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் என்று பல
பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒதுக்கீடுகள் போதாது என்கிறார்கள்.
எல்லா நிலையிலும் ஒதுக்கீடுகள் வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு
வேண்டும் என்று தெரியவில்லை? எத்தனை காலத்திற்கு என்று தெரிய
வில்லை? எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை? எப்படிக்
கொடுத்தால் அனைவரும் திருப்தியடைவார்கள், மகிழ்ச்சி கொள்வார்கள்
என்பதும் தெரியவில்லை!

கல்வியில் ஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகளில்
ஒதுக்கீடு, வேலைகளில் ஒதுக்கீடு, வேலை உயர்வுகளில் ஒதுக்கீடு என்று
எங்கே பார்த்தாலும் கூச்சல் குழப்பம்.

தினமும் இதை வைத்து பத்திரிக்கைகளில் எழுதுபவர்களும், மேடைகளில்
பேசுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள்.
பிரச்சினைகளும் தீர்ந்த பாடாக இல்லை. வேண்டுகோள்களும் குறைந்த
பாடாக இல்லை.

ஏன் இதை வைத்துத் தினமும் இரண்டு பதிவுகள் போடும் பதிவர்களும்
இருக்கிறார்கள்.

எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோருடைய கோரிக்கைகளும்,
எண்ணங்களும் நிறைவேறட்டும். என்னுடைய விருப்பமும் அதுதான்.

நான் சொல்லவந்தது அதுவல்ல!

ஜோதிடத்தில் அந்தப் பிரச்சினையே கிடையாது. இங்கே எந்தப் பிரிவினை
களும், உயர்வு தாழ்வும் இல்லை. 100/100 அனைவரும் சமம். எப்படி
யென்றால் எல்லோருக்கும் மொத்த மதிப்பெண்கள் 337 தான். யாராக
இருந்தாலும் இங்கே சமம்.

ஒடுக்கப்பட்டவர்களும், ஒடுக்குபவர்களும் இல்லாத உலகம் ஜோதிட உலகம்தான்!

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் எனக்கு ஜோதிடத்தை மிகவும்
பிடித்துப்போய் ஜோதிடத்தைக் கற்க ஆரம்பித்தேன்.

இந்த மதிப்பெண் எப்படி உண்டாகிறது என்பதை முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
வாகன ஓட்டுனருக்கும் 337 பரல்கள்தான்
முகேஷ் அம்பாணிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய மெய்க்காப்பாளருக்கும்
337 பரல்கள்தான்
இயக்குனர் மணி ரத்தினத்திற்கும் 337 பரல்கள்தான். அவருடைய உதவி
யாளருக்கும் 337 பரல்கள்தான்
இசைஞானி இளையராஜாவிற்கும் 337 பரல்கள்தான். அவருடைய குழுவில்
தபேலா
வாசிப்பவருக்கும் 337 பரல்கள்தான்

இப்படி யாரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் எவருக்கும் அதிக
மாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது.துல்லியமாக 337 மட்டுமே இருக்கும்.

ஒருவருக்கு ஒன்று இருந்தால், ஒன்று இருக்காது. மொத்த பாக்கியங்கள் 36ல்
18தான் ஒருவருக்கு இருக்கும், 18 இருக்காது. எந்த பதினெட்டு என்பதில்
எல்லாம் அடங்கி விடுகிறது. (உ.ம்:Those who are having wealth will not
have health.)

பிறகு உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஜாதகம் எப்படி வேறு படுகிறது?
ஜோதிடத்தின் பிரம்மாண்டம் என்று அதையும் முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இதையெல்லாம் கடவுளா போட்டு அனுப்புகிறார்? இல்லை!

கருணை மிக்கவர் கடவுள். அவருக்கு எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான்
அவருடைய வேலையல்ல இது !

நாம் முற்பிறவிகளில் செய்த நல் வினைகள் தீவினைகளுக்கேற்பத் தானியங்கி
முறையில் நமது அடுத்த பிறவி தீர்மானிக்கப்பட்டு நாம் பிறக்கிறோம்.

முன் ஜென்மத்தில் அடுதவன் பணத்தில் உண்டு கொழுத்துத் தூங்கி வாழ்க்கையைக்
கழித்தவன் அடுத்த பிறவியில் தினமும் 12மணி நேரம் உடலால் உழைத்து
வாழ்க்கையை நடத்தும்படி ஆகி விடுகிறது.

முன் ஜென்மத்தில் பொதுப் பணத்திலும் கோவில் சொத்துக்களிலும் குடும்பம்
நடத்தியவன், அடுத்த பிறவியில் கோவில் வாசலில் தட்டோடு உட்காரும்படி ஆகி
விடுகிறது.

முன் பிறவியில் வயதான பெற்றோர்களைத் தவிக்க விட்டவன், இந்தப் பிறவியில்
பெற்றோர்கள் இன்றி அனாதையாகத் திரிய நேரிடுகிறது.

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு பிறவிக்கும், அவன் ஜீவனம் செய்வதற்காகப் பிழைப்பதற்கும் ஒரு பலமான
அர்த்தம் இருக்கும். அதை உணர்பவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

புரிந்தவர்களுக்குப் புரியட்டும், பரியாமல் விதண்டாவாதம் செய்பவர்களுக்குப்
புரியாமலேயே போகட்டும்.

இந்தக் கர்ம தர்ம நியதிகளைத் தீவிரமாக படிக்க விரும்புபவர்கள். கவியரசர்
கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலின் பத்துப்
பாகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

இதுவரை இந்தப் பதிவில் எழுதியுள்ளவற்றைப் பற்றி எதிர்க் கேள்வி கேட்க
நினைப்பவர்களும் அதைப் படித்துவிட்டு வந்து இங்கே கேள்வி கேட்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதே விதிமுறைகள்தான் பத்தாம் வீட்டிற்கும். பத்தாம் வீடு மிகவும் நன்றாக
அமைந்திருந்தால் நல்ல வேலையில் சேர்ந்து அபரிதமாகப் பொருள் ஈட்டுவீர்கள்
அதே நேரத்தில் ஜாதகத்தில் வேறு ஏதாவது வீட்டில் குறை இருக்கும்.

ஜாதகத்தில் பத்தாம் வீடு நன்றாக இல்லாமல் இருந்து ஜீவனத்திற்குப்
போராட்டமாக இருந்தால் வேறு ஒரு வீட்டில் அது நிறை செய்யப்பட்டிருக்கும்

எல்லாம் அந்த 18/36 அளவில், 337 பரல்களின் எண்ணிக்கைக் கணக்கில்
அடங்கிவிடும்.

ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும்
ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும். உட்கார்ந்து அலசிப்பார்த்தால் அது
தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டைப் பற்றிய பாடம் நாளையும் தொடரும்!


வாழ்க வளமுடன்!

42 comments:

  1. சாதியை ஒழிக்கனும் சார்... மொதல்ல பள்ளிக்கூட டிசியில் ஓசி...பிசி..எம்பிசின்னு போடுறதை எப்ப நிப்பாட்டுறாங்களோ அப்ப தான் நாடு வெளங்கும். இப்போ நகரத்தில எடுத்துக்கிட்ட ரெண்டே சாதி தான்... ஒன்னு ஏடிஎம் மிற்கு வெளியெ நிக்கிது.. இன்னொன்னு உள்ள நிக்குது... கற்றது தமிழ் வசனம் மாதிரி நீண்டுக்கிட்டே போதுது.. என்னைப்பொறுத்தவரையில் ஜோதிடம் கூட பாக்காம கல்யாணம் செய்யனும்...

    ReplyDelete
  2. /////tamil cinema said...
    சாதியை ஒழிக்கனும் சார்... மொதல்ல பள்ளிக்கூட டிசியில் ஓசி...பிசி..எம்பிசின்னு போடுறதை எப்ப நிப்பாட்டுறாங்களோ அப்ப தான் நாடு வெளங்கும். இப்போ நகரத்தில எடுத்துக்கிட்ட ரெண்டே சாதி தான்... ஒன்னு ஏடிஎம் மிற்கு வெளியெ நிக்கிது.. இன்னொன்னு உள்ள நிக்குது... கற்றது தமிழ் வசனம் மாதிரி நீண்டுக்கிட்டே போதுது.. என்னைப்பொறுத்தவரையில் ஜோதிடம் கூட பாக்காம கல்யாணம் செய்யனும்...////

    நெல்லைக்காரரே! நாட்டில் இரண்டு வகை மனிதர்கள்:

    1. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று அலைபவர்கள்
    2. பணத்திற்கு என்ன செய்யலாம் என்று தவிப்பவர்கள்

    சரிதானா?

    ReplyDelete
  3. //இந்தக் கர்ம தர்ம நியதிகளைத் தீவிரமாக படிக்க விரும்புபவர்கள். கவியரசர்
    கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலின் பத்துப்
    பாகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.//

    100 முறை ரிப்பீ்ட்டு செய்கிறேன்..

    ReplyDelete
  4. //நெல்லைக்காரரே! நாட்டில் இரண்டு வகை மனிதர்கள்:
    1. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று அலைபவர்கள்
    2. பணத்திற்கு என்ன செய்யலாம் என்று தவிப்பவர்கள்
    சரிதானா?//

    சத்தியமான உண்மை வாத்தியாரே..

    ReplyDelete
  5. ஹைய்யா! 1/3 ஆச்சு!

    இன்னும் 2 பாடம்தான் பத்தாமிடத்தைப் பத்தி!

    ReplyDelete
  6. ரொம்ப சரி... நான் ரெண்டாவது சாதி... நீங்க?

    ReplyDelete
  7. //ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும்
    ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும். உட்கார்ந்து அலசிப்பார்த்தால் அது
    தெரியும்.//

    :-))

    Present Sir,

    GK, BLR.

    ReplyDelete
  8. நானும் 2 வது சாதிதான்! அப்ப நீங்க?

    ReplyDelete
  9. ////நானும் 2 வது சாதிதான்!////

    Same here....

    I like the way you present the topic....I can see total perfection. I admire it.

    I am gonna read Kanadasan episodes...

    -Shankar

    ReplyDelete
  10. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //இந்தக் கர்ம தர்ம நியதிகளைத் தீவிரமாக படிக்க விரும்புபவர்கள். கவியரசர்
    கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலின் பத்துப்
    பாகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.//
    100 முறை ரிப்பீ்ட்டு செய்கிறேன்..//////

    வாருங்கள் உண்மை விரும்பியே! நீங்கள் ஒருமுறை ரிப்பீட் என்றாலே நூறுமுறை சொல்வதற்குச் சமம் ஆயிற்றே!
    நூறுமுறை ரிப்பீட் என்றால் பத்தாயிரம் தடவைகளுக்குச் சமமாகும்.

    ReplyDelete
  11. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நெல்லைக்காரரே! நாட்டில் இரண்டு வகை மனிதர்கள்:
    1. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று அலைபவர்கள்
    2. பணத்திற்கு என்ன செய்யலாம் என்று தவிப்பவர்கள்
    சரிதானா?//
    சத்தியமான உண்மை வாத்தியாரே..////

    இன்றைய நிலவரம் அதுதான் உண்மைத் தமிழரே!

    ReplyDelete
  12. /////நாமக்கல் சிபி said...
    ஹைய்யா! 1/3 ஆச்சு!
    இன்னும் 2 பாடம்தான் பத்தாமிடத்தைப் பத்தி!/////

    இரண்டு பாடங்கள் என்று இல்லை. தொடர்ந்து சில அத்தியாயங்கள் எழுத உள்ளேன். என்ன எழுதி, தட்டச்சும் வேலை படுத்துகிறது. ஒலி உரையென்றால் செளகரியமாக இருக்கும். ஆனால் என் குரல் நம்பியார் குரல் போல இருக்கும். அதனால் சற்றுத் தயக்கம்!:-)))

    ReplyDelete
  13. //////tamil cinema said...
    ரொம்ப சரி... நான் ரெண்டாவது சாதி... நீங்க?/////

    நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை. இரண்டாவது வகைதான். அதனால் பல அனுபவங்களைப் பெற்றேன். எத்தனை காசு கொடுத்தாலும் அந்த அனுபவங்கள் கிடைக்காது.

    ReplyDelete
  14. /////Geekay said...
    //ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும்
    ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும். உட்கார்ந்து அலசிப்பார்த்தால் அது
    தெரியும்.// :-))
    Present Sir,
    GK, BLR.///

    நன்று ஜீக்கே!

    ReplyDelete
  15. //////நாமக்கல் சிபி said...
    நானும் 2 வது சாதிதான்! அப்ப நீங்க?////

    நானும் அந்த விஷயத்தில் உங்களுக்கு உறவுதான்!

    ReplyDelete
  16. /////hotcat said...
    ////நானும் 2 வது சாதிதான்!////
    Same here....
    I like the way you present the topic....I can see total perfection. I admire it.
    I am gonna read Kanadasan episodes...
    -Shankar////

    ஆகா, நன்றாகப் படியுங்கள். மொத்த புத்தகங்களையும் வாங்கி வைத்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  17. ஐயா

    10 ஆம் இட பதிவு நன்றாக இருக்கிறது. 10 ஆம் அதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் பலன் நன்றாக இருக்கிறதே‍- உங்க‌ள் விள‌க்க‌த்தில்

    சுந்த‌ர்

    ReplyDelete
  18. //////sundar said...
    ஐயா
    10 ஆம் இட பதிவு நன்றாக இருக்கிறது. 10 ஆம் அதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் பலன் நன்றாக இருக்கிறதே‍- உங்க‌ள் விள‌க்க‌த்தில்
    சுந்த‌ர்///

    பத்தாம் வீடு ஜீவன ஸ்தானம். ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கான இடம். அது முற்றிலும் கெட்டிருந்தால் அவன் எப்படி உயிர் வாழ்வான்? பறவைகள், விலங்குகள் எல்லாவற்றிற்குமே பணம் இல்லாமல் உணவு கிடைக்கும். அவைகள் அவற்றை நெருப்பில் வேகவைத்துச் சாப்பிடுவதில்லை. மனிதன் நிலை அப்படியா? இல்லையே? இன்றைய நிலையில் மாதம் ஒரு கேஸ் சிலிண்டராவது வேண்டுமே? உணவுப்பொருட்கள் வேண்டுமே?அதற்கெல்லாம் பணம் வேண்டாமா?

    ஆகவேதான் பொது விதிகளில் இருந்து 10ஆம் வீட்டிற்கு மட்டும் சில விதிவிலக்குகள் உண்டு.

    நீங்கள் சொல்லும் 6, 8, 12ஆம் இடங்கள். 10ஆம் வீடிலிருந்து, அதைப் பிரதானமாக வைத்துப்பார்த்தீர்கள் என்றால் அதற்கு 9, 11, & 3 ஆம் இடங்கள் ஆகும். அதை வைத்துப் பேசும் போது அவைகள் எல்லாம் நல்ல இடங்களே.விளக்கம் போதுமா?

    ReplyDelete
  19. //////sundar said...
    ஐயா
    10 ஆம் இட பதிவு நன்றாக இருக்கிறது. 10 ஆம் அதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் பலன் நன்றாக இருக்கிறதே‍- உங்க‌ள் விள‌க்க‌த்தில்
    சுந்த‌ர்///


    வாத்யாரே அதேதான் எனக்கும் சந்தேகம்.

    எனது 10'ம் வீட்டின் அதிபதி செவ்வாய்(பரல்கள் 3) மிதுன வீட்டில் எனக்கு 12'ம் வீடு தனித்து உள்ளார்(பரல்கள் 26), 10'ம் வீட்டின் பரல் எண்ணிக்கை 39, அது எப்படி வாத்தியரே....? நியாபடி 12'ம் வீட்டில் 10'ம் வீடு அதிபதி இருந்தால் சிறிது கஸ்ட்டமல்லவா...?

    9'th house:28
    10'th house:39
    11"th house:34
    12'th house:26

    ReplyDelete
  20. /////கோவை விமல்(vimal) said...
    //////sundar said...
    ஐயா
    10 ஆம் இட பதிவு நன்றாக இருக்கிறது. 10 ஆம் அதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் பலன் நன்றாக இருக்கிறதே‍- உங்க‌ள் விள‌க்க‌த்தில்
    சுந்த‌ர்///
    வாத்யாரே அதேதான் எனக்கும் சந்தேகம்.
    எனது 10'ம் வீட்டின் அதிபதி செவ்வாய்(பரல்கள் 3) மிதுன வீட்டில் எனக்கு 12'ம் வீடு தனித்து உள்ளார்(பரல்கள் 26), 10'ம் வீட்டின் பரல் எண்ணிக்கை 39, அது எப்படி வாத்தியரே....? நியாபடி 12'ம் வீட்டில் 10'ம் வீடு அதிபதி இருந்தால் சிறிது கஷ்டமல்லவா...?
    9'th house:28
    10'th house:39
    11"th house:34
    12'th house:26////

    பத்தாம் இடத்து அதிபதி 12ல் இருந்தால் என்ன? 10ஆம் விட்டில்தான் 39 பரல்கள் உள்ளனவே. கவலை வேண்டாம்.

    தியேட்டர் ஹவுஸ்ஃபுல். டிக்கெட் இல்லை: ஆனால் தியேட்டரின் அதிபர் உங்களின் நண்பர். ஆப்பரேட்டர் அறையில் உட்காரவைத்தாவது உங்களுக்குப் படத்தைப் பார்க்க விடுவார் இல்லையா? அப்படித்தான் இதுவும். புரிந்ததா?

    ReplyDelete
  21. //ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும்
    ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும்.//


    தங்கள் ஜாதகத்தை பார்த்து குழம்பி கொள்பவர்களுக்கு தங்களது இந்த வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலை அளிக்கும் .

    ReplyDelete
  22. ////Aruppukkottai Baskar said...
    //ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும்
    ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும்.//
    தங்கள் ஜாதகத்தை பார்த்து குழம்பி கொள்பவர்களுக்கு தங்களது இந்த வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலை அளிக்கும் .////

    உண்மை அதுதான் பாஸ்கர்! அதைச் சொல்வதற்குச் சான்றாக அஷ்டவர்கம் (337 பரல்கள்) ஒன்று போதுமே!

    ReplyDelete
  23. ///SP.VR. SUBBIAH said...
    பத்தாம் இடத்து அதிபதி 12ல் இருந்தால் என்ன? 10ஆம் விட்டில்தான் 39 பரல்கள் உள்ளனவே. கவலை வேண்டாம்.

    தியேட்டர் ஹவுஸ்ஃபுல். டிக்கெட் இல்லை: ஆனால் தியேட்டரின் அதிபர் உங்களின் நண்பர். ஆப்பரேட்டர் அறையில் உட்காரவைத்தாவது உங்களுக்குப் படத்தைப் பார்க்க விடுவார் இல்லையா? அப்படித்தான் இதுவும். புரிந்ததா? ///

    நன்றாக விளங்கியது, ஆனால் இன்னும் ஒரு சிறு சந்தேகம்.

    எல்லா பலன்களும் ஜாதக படி அணுகுவாதா, இல்லை அஸ்டவர்க படி பார்பதா, அது மட்டும் விளங்கவில்லை.....

    ReplyDelete
  24. /////கோவை விமல்(vimal) said...
    ///SP.VR. SUBBIAH said...
    பத்தாம் இடத்து அதிபதி 12ல் இருந்தால் என்ன? 10ஆம் விட்டில்தான் 39 பரல்கள் உள்ளனவே. கவலை வேண்டாம்.
    தியேட்டர் ஹவுஸ்ஃபுல். டிக்கெட் இல்லை: ஆனால் தியேட்டரின் அதிபர் உங்களின் நண்பர். ஆப்பரேட்டர் அறையில் உட்காரவைத்தாவது உங்களுக்குப் படத்தைப் பார்க்க விடுவார் இல்லையா? அப்படித்தான் இதுவும். புரிந்ததா? ///
    நன்றாக விளங்கியது, ஆனால் இன்னும் ஒரு சிறு சந்தேகம்.
    எல்லா பலன்களும் ஜாதக படி அணுகுவாதா, இல்லை அஸ்டவர்க படி பார்பதா, அது மட்டும் விளங்கவில்லை.....////

    Ashtakavargam is not a different thing. It is part of astrolgy and it will help to assess a chart with marks.

    விளக்கமாகச் சொன்னால், கிரகங்களின் அமைப்பை வைத்தும் ஜாதகத்தைப் பார்க்கலாம். அஷ்டகவர்க்க பரல்களைவைத்தும் ஜாதகத்தைப் பார்க்கலாம். ஒன்று தராசு (Manual scale) மற்றொன்று மின் தராசு (digital scale) புரிந்ததா?
    Okay யா?

    ReplyDelete
  25. உங்கள் மாணவர்கள் பட்டியலில் எனது பெயர் இல்லையே, முன்னாள் மாணவர்களுக்கு டிசி கொடுத்தாகிவிட்டதா ? கிழித்தாகிவிட்டதா ?

    ReplyDelete
  26. //Ashtakavargam is not a different thing. It is part of astrolgy and it will help to assess a chart with marks.

    விளக்கமாகச் சொன்னால், கிரகங்களின் அமைப்பை வைத்தும் ஜாதகத்தைப் பார்க்கலாம். அஷ்டகவர்க்க பரல்களைவைத்தும் ஜாதகத்தைப் பார்க்கலாம். ஒன்று தராசு (Manual scale) மற்றொன்று மின் தராசு (digital scale) புரிந்ததா?
    Okay யா?//

    ok ok...

    ReplyDelete
  27. ஆசானே! எப்படி உங்களால் மட்டும் பதிவிற்கு ஏற்ற வகையில் புகைபடங்களை தேர்ந்து எடுக்க முடிகிறது. (5ம் இடம் பலமாயிருப்பதாலா?)

    ReplyDelete
  28. ஐயா,

    நன்றாக புரிந்தது. விளக்கம் அருமை.


    நன்றி


    சுந்தர்

    ReplyDelete
  29. /////////hotcat said...
    ////நானும் 2 வது சாதிதான்!////
    Same here....
    I like the way you present the topic....I can see total perfection. I admire it.
    I am gonna read Kanadasan episodes...
    -Shankar////

    ஆகா, நன்றாகப் படியுங்கள். மொத்த புத்தகங்களையும் வாங்கி வைத்திருக்கிறீர்களா?////

    Illai sir, trying to find some online copies...and also searching in libraries here...we have a library here with Indian book collections...

    -Shankar

    ReplyDelete
  30. //////கோவி.கண்ணன் said...
    உங்கள் மாணவர்கள் பட்டியலில் எனது பெயர் இல்லையே, முன்னாள் மாணவர்களுக்கு டிசி கொடுத்தாகிவிட்டதா ? கிழித்தாகிவிட்டதா ?////////

    நீங்களும், பி.மகேந்திரனும் சேர்ந்து என்னை வாத்தியாராக்கினீர்கள்.. நீங்கள் இருவரும் கெளரவ மாணவர் லிஸ்ட்டில் இருக்கிறீர்கள். அதோடு காலம் என்ற வகுப்பறைக்கு நீங்கள் வாத்தியார். நீங்கள் த்ரீ இன் ஒன். பல்சுவை அரங்கத்தில் உங்கள் பெயர் இருக்கிறது. சென்று பாருங்கள்.

    ReplyDelete
  31. //////அணுயோகி said...
    ஆசானே! எப்படி உங்களால் மட்டும் பதிவிற்கு ஏற்ற வகையில் புகைபடங்களை தேர்ந்து எடுக்க முடிகிறது. (5ம் இடம் பலமாயிருப்பதாலா?)/////

    கொஞ்சம் முயற்சி செய்தால் எல்லோருக்கும் கிடைக்கும்! நான் இணையத்தில்தான் எடுக்கிறேன்!

    ReplyDelete
  32. //////sundar said...
    ஐயா,
    நன்றாக புரிந்தது. விளக்கம் அருமை.
    நன்றி
    சுந்தர்//////

    நன்றி சுந்தர்!

    ReplyDelete
  33. //வாருங்கள் உண்மை விரும்பியே! நீங்கள் ஒருமுறை ரிப்பீட் என்றாலே நூறுமுறை சொல்வதற்குச் சமம் ஆயிற்றே!
    நூறுமுறை ரிப்பீட் என்றால் பத்தாயிரம் தடவைகளுக்குச் சமமாகும்.//

    சபாஷ்! சரியான போட்டி.

    ReplyDelete
  34. //உங்கள் மாணவர்கள் பட்டியலில் எனது பெயர் இல்லையே, முன்னாள் மாணவர்களுக்கு டிசி கொடுத்தாகிவிட்டதா ? கிழித்தாகிவிட்டதா ?
    //

    கிளாஸ்லே ஓவரா அலும்பு பண்ணினா இப்படித்தான்! லீடர் பேர் எழுதி (அடங்கவில்லைன்னு வேற போடுவாராம்) வாத்தியார்கிட்டே கொடுத்துட்டா டிசி கிழிஞ்சிடும்!

    பாருங்க நம்ம பேரு கூட இல்லை!

    :))

    ReplyDelete
  35. //////நாமக்கல் சிபி said...
    //உங்கள் மாணவர்கள் பட்டியலில் எனது பெயர் இல்லையே, முன்னாள் மாணவர்களுக்கு டிசி கொடுத்தாகிவிட்டதா ? கிழித்தாகிவிட்டதா ?
    //
    கிளாஸ்லே ஓவரா அலும்பு பண்ணினா இப்படித்தான்! லீடர் பேர் எழுதி (அடங்கவில்லைன்னு வேற போடுவாராம்) வாத்தியார்கிட்டே கொடுத்துட்டா டிசி கிழிஞ்சிடும்!
    பாருங்க நம்ம பேரு கூட இல்லை! :))///

    சைடுபாரைப் பாருங்கள் சிபியாரே!

    ReplyDelete
  36. //சைடுபாரைப் பாருங்கள் சிபியாரே//

    ஆஹா! இது வேற திறந்துட்டீங்களா!

    வாத்தியார் வாழ்க!
    வாத்தியார் வாழ்க!
    வாத்தியார் வாழ்க!

    ReplyDelete
  37. //கெளரவ மாணவர்கள் (Like Guest Artists or Visiting Professors)
    பல வருடங்களாக சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்கள்: நாமக்கல் சிபி, கோவி.கண்ணன் //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    இனிமே என் கண்ணாடில ஆனந்தக் கண்ணீரோட கரைதான் தெரியும்!

    ReplyDelete
  38. How to determine jathakar will or can do Business otherwise can lead life long as employee ?

    ReplyDelete
  39. ////singaiSuri said...
    How to determine jathakar will or can do Business otherwise can lead life long as employee ?

    பழைய பாடங்களைப் படியுங்கள். அதில் விவரம் உள்ளது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com