மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.08

ஜோதிடமும் உருளைக்கிழங்கும்!

ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கை சென்னையில் பயிராக்கிப் பயன்பெற
முடியாது. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் சேலத்தில் விளையாது. அதற்கு
அடிப்படையான காரணம் அதனதன் மண் வளமும், சீதோஷண நிலையும்

அதுபோல ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல பலன்களைத்
தர, முக்கியமான மூன்று அடிப்படை விஷயங்கள் உள்ளன.

1
முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது
சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
native a good standing power in any situation.

2.
பெர்சனலிட்டி எனப்படும் ஜாதகரின் தோற்றம் மற்றும் உடல் வலிமை,
அத்துடன் மனவலிமை ஆகியவைகள் முக்கியமாகும். அவற்றைத்தருபவை
முறையே சூரியனும், சந்திரனும் ஆகும். அவைகளும் ஜாதகத்தில் வலுவாக
இருக்க வேண்டும். அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது
சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்

இம்மூன்றும் இல்லாவிட்டால், பத்தாம் வீடும், பத்தாம் வீட்டின் அதிபதியும்
எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஜாதகர் அதன் பலனை முழுமையாகப்
பெற முடியாது. அதை அனைவரும் மனதில் கொள்ளவும். அதை வலியுறுத்திக்
கூறத்தான் மேலே உருளைக்கிழங்கை உதாரணப் படுத்திக் கூறியுள்ளேன்

ஒருவர் தான் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் சிறக்க அம்மூன்றும்
தான் அடிப்படை அம்சங்கள்.

புரிகின்றதா கண்மணிகளே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by sign
ராசிகளை வைத்து அமையும் வேலைகள் (பொதுப் பலன்)
அதாவது கீழ்க்கண்ட ராசிகள் உங்கள் பத்தாம் இடமாக இருக்குமென்றால்
அதற்குரிய பொதுப்பலன்கள்

1. மேஷம் (Aries)
ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக்,
உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
அதிபர்கள், விளைளயாட்டுத்துறை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.ரிஷபம்:
ஏர்கண்டிஷனர் போன்ற சொகுசு சாதனங்கள் (luxury goods)
நகைகள், சோப்பு, முகப்பவுடர், சென்ட் போன்ற 'காஸ்மெடிக்'
பொருட்கள். நடிப்பு, இசை, தையற்கலைஞர்கள். ஆயத்த ஆடைகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.மிதுனம்:
ஊடகங்கள் (செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி,
வானொலி) நிறுவனப் பிரதிநிதிகள். எழுத்தாளர்கள். கணக்கர்கள்,
மொழிபெயர்ப்பாளர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.கடகம்:
கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்கார
வேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.சிம்மம்:
அரசுப் பணிகள். அரசியல், மத அமைப்புக்கள். தூதரங்கள்,
முதலீட்டு வேலைகள் (investing)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.கன்னி:
மருத்துவர்கள், கணக்காளர்கள், கணக்கு ஆய்வாளர்கள்,
ஜோதிடம், கணினி சம்பந்தப்பட்ட துறைகள், ஊடகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.துலாம்:
நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கலைஞர்கள்,விளம்பரத்துறை,
அலங்காரப்பொருட்கள்,ஆடை, அணிகலன்கள், வரவேற்பாளர்கள்
உள் அலங்கார வேலைகள் (interior decorators)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.விருச்சிகம்:
இரசாயனப் பொருட்கள், மருந்துகள், திரவப் பொருட்கள்,
காப்பீட்டுத் தொழில் (insurance) மருத்துவர்கள், செவிலியர்கள்
காவலர்கள்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.தனுசு:
சட்டம், நீதி, மதங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய தொழில்கள்
துணிமணிகள், காலணிகள், விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.மகரம்:
சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள்
மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.கும்பம்:
தத்துவஞானிகள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஜோதிடர்கள்,
பொறியாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.மீனம்
மருத்துவர்கள், கடல் சார்ந்த தொழில்கள் அல்லது வேலைகள்,
இரசாயனங்கள், எண்ணெய், ஓவியர்கள், மருத்துவமனைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வீடுகளை வைத்து வேலைகள்:
Careers by house (if the 10th lord is placed in the following houses)
1
First:
self-employment, politics or the public at large, work concered with the body (example. health club)

2.
Second:
banking, investments, accountants, restaurants, teaching, consultants, psychologists,

3
Third:
communication, arts, sales, advertising, computing, writing, publishing

4.
Fourth:
agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining

5.
Fifth:
politics, stockbrokers, religious rituals, entertainment, authorship

6
Sixth:
lawyers, military, police, labour, health related professions, food, waiters.

7.
Seventh:
business, trade, merchant, foreign business.

8.
Eighth:
insurance, research, death-related, metaphysics (e.g. astrology), sex industry.

9.
Ninth:
law, university teaching, travel, religious professions, work in foreign countries.

10
Tenth:
government jobs, dealing with public and the masses, managers, politics.

11
Eleventh:
trade and business, accountants, financial institutions, group work. sports

12
Twelfth:
foreign, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by planet (10th Lord)
1. Sun:
authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers

2. Moon
nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.

3. Mars
fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers.

4. Mercury
intellect, writing, teaching, merchandise, clerks, accountants, editors, transport, astrologers.

5. Jupiter
finance, law, treasury, scholars, priests, politicians, advertising, psychologist, humanitarian.

6. Venus
pleasures, luxuries, beauty, art, music, entertainment industry, sex industry, hotels.

7. Saturn t
real estate, labour, agriculture, building trades, mining, monk.

8. Rahu
researchers, engineers, physicians, medicine/drugs, speculators, aviation, electricity, waste.

9. Ketu
idealism, enlightenment, religion, secret affairs, poisons, metaphysics.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் பொதுப்பலன்கள். அவரவர்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமைகளை
வைத்துப் பலன்கள் மாறுபடும்.

இப்போது, பொரியல் கூட்டு, அவியல், வறுவல் ஆகியவற்றைப் பறிமாறியுள்ளேன்.
இனிமேல் சாம்பார், வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம் எல்லாம் வர
உள்ளது, அவைகள் அடுத்தடுத்து வரும். வந்த பிறகு, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு
ஒரு முடிவிற்கு வாருங்கள்.

அதாவது பத்தாம் வீட்டைப் பற்றி இன்னும் சில பாடங்கள் (பகுதிகள்) உள்ளன.
அவைகள் தொடர்ந்து வரும்! பொறுமை காத்துப் படித்து இன்புற வேண்டுகிறேன்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

97 comments:

  1. பத்தாவது இடத்துல (மேஷத்துல) சூரியன் இருக்காரு.
    அதுப்படி பார்த்தா

    ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக்,
    உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
    தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
    அதிபர்கள், விளைளயாட்டுத்துறை

    Careers by planet (10th Lord)
    1. Sun:
    authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers


    எதுவுமே ஒத்து வரலையே...

    ReplyDelete
  2. அட முதல்ல நாம வரலாம்ணு பார்த்தா வெட்டி வந்துட்டாரே!

    (அட! யாரு வந்தது! நம்ம வெட்டிதானே)

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா!

    பதிவைப் படிச்சிட்டு திரும்ப வரேன்!

    ReplyDelete
  4. //////வெட்டிப்பயல் said...
    பத்தாவது இடத்துல (மேஷத்துல) சூரியன் இருக்காரு.
    அதுப்படி பார்த்தா
    ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக்,
    உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
    தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
    அதிபர்கள், விளைளயாட்டுத்துறை
    Careers by planet (10th Lord)
    1. Sun:
    authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers/////

    பத்தாவது இடம் மேஷம் என்கிறீர்கள். சரி அடுத்த பத்தியில் (10th Lord) Sun என்று எழுதுகிறீர்கள். மேஷத்தின் அதிபதி செவ்வாய் (Mars) அல்லவா? செவ்வாய் (Mars) என்றால் பொறியாளர் என்று உள்ளதே! மீண்டும் ஒருமுறை பாருங்கள் பாலாஜி!
    நீங்கள் பொறியாளர்தானே? இப்போது சரியாக உள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  5. ஐயா

    அஷ்டவர்கம், ஜாதகம் எப்படி relate செய்வது?‍ உதாரணத்திற்கு ஒரு க்ரஹம் ஜாதகத்தில் நீச்சமடைந்து அஷ்டவர்கத்தில் 5 பரல்கள் பெற்றிருந்தால் எப்படி எடுத்துக்கொள்வது?

    நன்றி

    சுந்தர்

    ReplyDelete
  6. //த்தாவது இடம் மேஷம் என்கிறீர்கள். சரி அடுத்த பத்தியில் (10th Lord) Sun என்று எழுதுகிறீர்கள். மேஷத்தின் அதிபதி செவ்வாய் (Mars) அல்லவா? செவ்வாய் (Mars) என்றால் பொறியாளர் என்று உள்ளதே! மீண்டும் ஒருமுறை பாருங்கள் பாலாஜி!
    நீங்கள் பொறியாளர்தானே? இப்போது சரியாக உள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!//

    நமக்கு இதேதான்!

    கடக லக்கினக்காரர்களுக்கு 10ம் இடம் மேஷம்! மேஷத்தின் அதிபதி செவ்வாய்!

    ஆக பொறியாளர் என்பது சரியே!

    ReplyDelete
  7. மன்னிக்கவும் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். பத்துல (மேஷத்துல) சூரியன் இருக்கு. அதை தான் தப்பா சொல்லிட்டேன்...

    ReplyDelete
  8. //நாமக்கல் சிபி said...
    //த்தாவது இடம் மேஷம் என்கிறீர்கள். சரி அடுத்த பத்தியில் (10th Lord) Sun என்று எழுதுகிறீர்கள். மேஷத்தின் அதிபதி செவ்வாய் (Mars) அல்லவா? செவ்வாய் (Mars) என்றால் பொறியாளர் என்று உள்ளதே! மீண்டும் ஒருமுறை பாருங்கள் பாலாஜி!
    நீங்கள் பொறியாளர்தானே? இப்போது சரியாக உள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!//

    நமக்கு இதேதான்!

    கடக லக்கினக்காரர்களுக்கு 10ம் இடம் மேஷம்! மேஷத்தின் அதிபதி செவ்வாய்!

    ஆக பொறியாளர் என்பது சரியே!
    //

    தள,
    பட்டையை கிளப்பறீங்க...

    ReplyDelete
  9. //தள,
    பட்டையை கிளப்பறீங்க...//

    ஐயாகிட்டே நேரடியா படிச்சமாணவன் ஆச்சே!

    வாத்தியார் பேரைக் காப்பாத்த வேணாமா?

    (உங்க ஜாதகத்துலே மேஷ ராசியில சூரியன் இருக்காருன்னு நினைக்கிறேன்.

    இங்கே மூணாவதா சொன்ன ரூல்ஸ் 10 இடத்து அதிபதி யார் என்பதைப் பற்றியது!

    இரண்டாவது ரூல்ஸ் பத்தாமிடத்தின் அதிபதி எங்கே உட்கார்ந்திருக்கார் என்பது பற்றியது!

    முதல் ரூல்ஸ் பத்தாமிடம் என்ன ராசி என்பது பற்றியது)

    ReplyDelete
  10. //////sundar said...
    ஐயா
    அஷ்டவர்கம், ஜாதகம் எப்படி relate செய்வது?‍ உதாரணத்திற்கு ஒரு கிரஹம் ஜாதகத்தில் நீச்சமடைந்து அஷ்டவர்கத்தில் 5 பரல்கள் பெற்றிருந்தால் எப்படி எடுத்துக்கொள்வது?
    நன்றி
    சுந்தர்/////

    பாலின் அடர்த்தி கண்களால் பார்த்தால் தெரியாது. அதன் அடர்த்தியைப் பார்ப்பதற்குக் கருவிகள் உள்ளன. அதுபோல கிரகங்களின் வலிமையைப் பார்ப்பதற்கு உள்ள கருவிதான் அஷ்டகவர்க்கம்.
    உச்சம், நீசம், அம்சத்தில் பகைவீடு என்பதையெல்லாம் பார்த்து ஒரு முடிவிற்கு வரமுடியாமல் போகும்போது கைக் கொடுப்பது அஷ்டகவர்க்கம். அதை நீங்கள் பிரதானமாக எடுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. /////நாமக்கல் சிபி said...
    //பத்தாவது இடம் மேஷம் என்கிறீர்கள். சரி அடுத்த பத்தியில் (10th Lord) Sun என்று எழுதுகிறீர்கள். மேஷத்தின் அதிபதி செவ்வாய் (Mars) அல்லவா? செவ்வாய் (Mars) என்றால் பொறியாளர் என்று உள்ளதே! மீண்டும் ஒருமுறை பாருங்கள் பாலாஜி!
    நீங்கள் பொறியாளர்தானே? இப்போது சரியாக உள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!//
    நமக்கு இதேதான்!
    கடக லக்கினக்காரர்களுக்கு 10ம் இடம் மேஷம்! மேஷத்தின் அதிபதி செவ்வாய்!
    ஆக பொறியாளர் என்பது சரியே!/////

    ஆகா, தேர்வாகிவிட்டீர்கள். அடுத்த மந்த்லி டெஸ்ட்டை நீங்கள் எழுத வேண்டாம். எழுதாமலேயே பாஸ்!:-))))

    ReplyDelete
  12. /////வெட்டிப்பயல் said...
    மன்னிக்கவும் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். பத்துல (மேஷத்துல) சூரியன் இருக்கு. அதை தான் தப்பா சொல்லிட்டேன்...////

    மன்னிப்பெல்லாம் எதற்கு பாலாஜி? வாத்தியார் - மாணவன் உறவு அதற்கெல்லாம் அப்பாற்பட்டது!:-)))

    ReplyDelete
  13. //வாத்தியார் - மாணவன் உறவு அதற்கெல்லாம் அப்பாற்பட்டது!:-)))//

    ஆமாம்!

    ReplyDelete
  14. /////வெட்டிப்பயல் said...
    //நாமக்கல் சிபி said...
    //த்தாவது இடம் மேஷம் என்கிறீர்கள். சரி அடுத்த பத்தியில் (10th Lord) Sun என்று எழுதுகிறீர்கள். மேஷத்தின் அதிபதி செவ்வாய் (Mars) அல்லவா? செவ்வாய் (Mars) என்றால் பொறியாளர் என்று உள்ளதே! மீண்டும் ஒருமுறை பாருங்கள் பாலாஜி!
    நீங்கள் பொறியாளர்தானே? இப்போது சரியாக உள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள்!//
    நமக்கு இதேதான்!
    கடக லக்கினக்காரர்களுக்கு 10ம் இடம் மேஷம்! மேஷத்தின் அதிபதி செவ்வாய்!
    ஆக பொறியாளர் என்பது சரியே! //
    தள,
    பட்டையை கிளப்பறீங்க...!?////

    ஆமா, சரியாகச் சொன்னீர்கள்! எல்லாம் நாமக்கல் ஆஞ்சநேயரின் கைங்கர்யம்!:-))))

    ReplyDelete
  15. ஓ..

    அப்ப இதோ செக் பண்ணிடலாம்.

    பத்தாமிடம் மேஷம். அந்த இடத்தோட அதிபதி செவ்வாய். செவ்வாய் என் ஜாதகத்துல எங்க இருக்கு???

    செவ்வாயும் சனியும் மூணுல இருக்காங்க. மூணுனா - கன்னி

    ஓ இங்க மூணாவதுனே இருக்கு. சூப்பர்

    Third:
    communication, arts, sales, advertising, computing, writing, publishing

    அப்பறம் பத்தாவது இடத்து அதிபதி செவ்வாய்

    3. Mars
    fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers.

    தள,
    நமக்கும் நெருப்புக்கும் அதிகமா தொடர்பு இருக்கே. அப்பறம் ஏன் நம்ம பதிவெல்லாம் சூடாக மாட்டீங்குது :)

    ReplyDelete
  16. /////நாமக்கல் சிபி said...
    //தள,
    பட்டையை கிளப்பறீங்க...//
    ஐயாகிட்டே நேரடியா படிச்சமாணவன் ஆச்சே!/////

    ரகசியத்தை வெளியில் சொல்லலாமா? நியாயமா? கோவியானந்தா நானும் நேரில் கற்றுக் கொள்கிறேன் என்று புறப்பட்டு வந்தால் என்ன செய்வது? உங்களிடம் அனுப்பட்டுமா?:-))))

    ReplyDelete
  17. //தள,
    நமக்கும் நெருப்புக்கும் அதிகமா தொடர்பு இருக்கே. அப்பறம் ஏன் நம்ம பதிவெல்லாம் சூடாக மாட்டீங்குது :)//

    அதுக்குத்தான் ஈஸியான வழி கலாய்த்தல் திணைல சொல்லி இருக்கேனே!

    http://kalaaythal.blogspot.com/2008/05/115.html

    ReplyDelete
  18. //செவ்வாயும் சனியும் மூணுல இருக்காங்க//

    அட! எனக்கு இவங்க ரெண்டு பேரும் லக்கினத்துலயே உக்காந்திருக்காங்க!

    உங்களுக்கு என்ன ராசி?

    ReplyDelete
  19. ///////வெட்டிப்பயல் said...
    தள,
    நமக்கும் நெருப்புக்கும் அதிகமா தொடர்பு இருக்கே. அப்பறம் ஏன் நம்ம பதிவெல்லாம் சூடாக மாட்டீங்குது :)/////

    அதிக சூடாகாமல் இருப்பதற்குக் காரணம் கடக லக்கினம். அது ஜல ராசி.:-))))
    ஜலம் சூடாகி பதிவு சூடு பிடிப்பதற்கு நேரமாகி விடுகிறது:-))))

    உங்களுக்கும் கொத்தனாருக்கும் சூடாக 100, 150 என்று பின்னூட்டங்கள் விழுகிறதே பாலாஜி - அது போதாதா?
    நீங்கள் அதிரடியாக எழுதும் கவுண்டமணி கலக்கல்கள், கொல்டி பட விமர்சனங்கள் எல்லாம் சூடாக படிக்கப் படுகிறதே!
    அது போதும் பாலாஜி!

    ReplyDelete
  20. /அதிக சூடாகாமல் இருப்பதற்குக் காரணம் கடக லக்கினம். அது ஜல ராசி.:-))))
    ஜலம் சூடாகி பதிவு சூடு பிடிப்பதற்கு நேரமாகி விடுகிறது:-))))//

    அதனால்தான் அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறதா?

    (நான் கூட பிறர் நமக்கு வைக்கும் ஐஸ்(கண் வைப்பது)தான் காரணம் என்று நினைத்திருந்தேன்)

    ReplyDelete
  21. எனக்கு முதல் விதியின் படி:

    1. மேஷம் (Aries)
    அறுவை(!?) சிகிச்சை நிபுனர்(காலேஜ்ல போலி டாக்டர் பட்டம்- பசங்க குடுத்தது), மெக்கானிக்,
    உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
    தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
    அதிபர்கள், விளைளயாட்டுத்துறை (சீட்டுக்கட்டு-மங்காத்தா !?)

    2 வது விதிப்படி:
    1
    First:
    self-employment(சொந்த வேலை !?), politics(தளபதி!?) or the public at large, work concered with the body (example. health club)

    3 வது விதிப்படி:
    . Mars
    fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers (பொட்டி தட்டும் எஞ்சினியரு)

    ReplyDelete
  22. /செவ்வாயும் சனியும் மூணுல இருக்காங்க//

    அட! எனக்கு இவங்க ரெண்டு பேரும் லக்கினத்துலயே உக்காந்திருக்காங்க!

    உங்களுக்கு என்ன ராசி?//

    தனுசு :)

    ReplyDelete
  23. //தனுசு :)//

    எனக்கு முன்னாடியே பிறந்துட்டீங்க போல! நான் காலை 10.05 மணிக்கு பிறந்தேன்!

    ReplyDelete
  24. ஆஹா! லக்கினம் மாறினாத்தானே பிறந்த நேரம் மாறுபடும்!

    மாதம், நேரம்(ஓரளவுக்கு) ஒரே மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன்!

    ராசி மாறும்போது நட்சத்திரம்தான் மாற வாய்ப்பு உண்டு!

    ReplyDelete
  25. ஒருவருடைய ராசிக் கட்டத்தில் சந்திரன் உட்கார்ந்திருக்கும் இடமே ஜன்ம ராசி!

    (இப்போ வாத்தியார் சரியாச் சொன்னீங்க சிபியாரேன்னு சொல்லுவாரு பாருங்க)

    ReplyDelete
  26. wow, I have heard about this before...It works good for me...I did hotel management and finally ended up in doing food microbiology...

    Yes, my 10th lord is in 12house kadakam -
    //////கடகம்:
    கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்கார
    வேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்

    12
    Twelfth:
    FOREIGN, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy

    Venus
    pleasures, luxuries, beauty, art, music, entertainment industry, sex industry, hotels//////

    It works well for me.

    Waiting for more because I am eager to know the association with 10th lord.

    What if sun and moon in own house in rasi chart even though ashtavarkaga does not have 5 points?

    Thanks
    Shankar

    ReplyDelete
  27. /ஒருவருடைய ராசிக் கட்டத்தில் சந்திரன் உட்கார்ந்திருக்கும் இடமே ஜன்ம ராசி! //

    தள அது தெரியும் :)

    இப்ப நான் என்ன என் ஜாதகத்தை கைல வெச்சா சொல்லிட்டு இருக்கேன். எல்லாம் ஞாபகத்துல இருந்து தான்.

    கடக லக்கினமும், சிம்ம லக்கினமும் ராஜ லக்கினம்.

    ReplyDelete
  28. /நாமக்கல் சிபி said...
    //தனுசு :)//

    எனக்கு முன்னாடியே பிறந்துட்டீங்க போல! நான் காலை 10.05 மணிக்கு பிறந்தேன்!
    //

    நான் செவ்வாய் காலை 10:30. எமகண்டத்தில இருந்து கொஞ்சம் எஸ்கேப்னு எல்லாரும் சொன்னாங்களாம்.

    ReplyDelete
  29. //கடக லக்கினமும், சிம்ம லக்கினமும் ராஜ லக்கினம்//

    கேள்விப்பட்டிருக்கேன்!

    சிம்ம லக்கினத்து (சமகால) பிரபலங்களை அவ்வளவு எளிதில் மறந்துட முடியுமா!

    ReplyDelete
  30. /உங்களுக்கும் கொத்தனாருக்கும் சூடாக 100, 150 என்று பின்னூட்டங்கள் விழுகிறதே பாலாஜி - அது போதாதா?//
    இப்ப எல்லாம் அப்படி இல்லை. பின்னூட்டமெல்லாம் அட்டகாசமா பதிவு எழுதனாதான் :)

    //
    நீங்கள் அதிரடியாக எழுதும் கவுண்டமணி கலக்கல்கள், கொல்டி பட விமர்சனங்கள் எல்லாம் சூடாக படிக்கப் படுகிறதே!
    அது போதும் பாலாஜி!//

    ஹி ஹி ஹி...

    ReplyDelete
  31. //////நாமக்கல் சிபி said...
    /அதிக சூடாகாமல் இருப்பதற்குக் காரணம் கடக லக்கினம். அது ஜல ராசி.:-))))
    ஜலம் சூடாகி பதிவு சூடு பிடிப்பதற்கு நேரமாகி விடுகிறது:-))))//
    அதனால்தான் அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறதா?
    (நான் கூட பிறர் நமக்கு வைக்கும் ஐஸ்(கண் வைப்பது)தான் காரணம் என்று நினைத்திருந்தேன்)//////

    ஜலதோஷத்திற்கு முக்கியகாரணம், சரியான தூக்கமின்மை, மற்றும் ஒவ்வாமை
    மருந்து. பத்து மணிக்கு மேல் பதிவுகளைப் படிக்காமல், கணினியை அனைத்துவிட்டுத் தூங்க வேண்டும்!

    ReplyDelete
  32. நாமக்கல் சிபி said...
    எனக்கு முதல் விதியின் படி:
    1. மேஷம் (Aries)
    அறுவை(!?) சிகிச்சை நிபுனர்(காலேஜ்ல போலி டாக்டர் பட்டம்- பசங்க குடுத்தது), மெக்கானிக்,
    உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
    தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
    அதிபர்கள், விளைளயாட்டுத்துறை (சீட்டுக்கட்டு-மங்காத்தா !?)
    2 வது விதிப்படி:
    1
    First:
    self-employment(சொந்த வேலை !?), politics(தளபதி!?) or the public at large, work concered with the body (example. health club)
    3 வது விதிப்படி:
    . Mars
    fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers (பொட்டி தட்டும் எஞ்சினியரு)////

    எல்லா விதிகளையும் கூட்டிப் பார்த்து அததனை வேலைகளுக்கும் நீங்கள் செல்ல முடியுமா? இந்த மூன்றில் எந்த விதிப்படி கிரகம் வலுவாக உள்ளதோ அது மட்டுமே செல்லுபடியாகும்!

    ReplyDelete
  33. /////வெட்டிப்பயல் said...
    /செவ்வாயும் சனியும் மூணுல இருக்காங்க//
    அட! எனக்கு இவங்க ரெண்டு பேரும் லக்கினத்துலயே உக்காந்திருக்காங்க!
    உங்களுக்கு என்ன ராசி?//
    தனுசு :)////

    தனுசு என்றால், மூல நட்சத்திரமா அல்லது பூராடமா?

    ReplyDelete
  34. ////நாமக்கல் சிபி said...
    //தனுசு :)//
    எனக்கு முன்னாடியே பிறந்துட்டீங்க போல! நான் காலை 10.05 மணிக்கு பிறந்தேன்!////

    உங்கள் நட்சத்திரத்தைச் சொல்லுங்கள். யார் முதலில் பிறந்தீர்கள் என்று நான் சொல்கிறேன்

    ReplyDelete
  35. /////நாமக்கல் சிபி said...
    ஆஹா! லக்கினம் மாறினாத்தானே பிறந்த நேரம் மாறுபடும்!
    மாதம், நேரம்(ஓரளவுக்கு) ஒரே மாதிரிதான் இருக்கும்னு நினைக்கிறேன்!
    ராசி மாறும்போது நட்சத்திரம்தான் மாற வாய்ப்பு உண்டு!////

    அதோடு இரண்டு நட்சத்திரம் கடந்திருந்தால் பிறந்த தேதியும் மாறிவிடும்

    ReplyDelete
  36. /////நாமக்கல் சிபி said...
    ஒருவருடைய ராசிக் கட்டத்தில் சந்திரன் உட்கார்ந்திருக்கும் இடமே ஜன்ம ராசி!
    (இப்போ வாத்தியார் சரியாச் சொன்னீங்க சிபியாரேன்னு சொல்லுவாரு பாருங்க)/////

    வாத்தியார் மட்டுமல்ல அனைவருமே சரி என்றுதான் சொல்வார்கள்:-))))

    ReplyDelete
  37. /////hotcat said...
    What if sun and moon in own house in rasi chart even though ashtavarkaga does not have 5 points?/////

    சாதாரண பலன்கள்

    ReplyDelete
  38. /////வெட்டிப்பயல் said...
    /ஒருவருடைய ராசிக் கட்டத்தில் சந்திரன் உட்கார்ந்திருக்கும் இடமே ஜன்ம ராசி! //
    தள அது தெரியும் :)
    இப்ப நான் என்ன என் ஜாதகத்தை கைல வெச்சா சொல்லிட்டு இருக்கேன். எல்லாம் ஞாபகத்துல இருந்து தான்.
    கடக லக்கினமும், சிம்ம லக்கினமும் ராஜ லக்கினம்.////

    உண்மை காரணம். சிம்மத்திற்கு அதிபதி சூரியன். கடகத்திற்கு அதிபதி சந்திரன்.

    பல அரசியல் தலைவர்கள் கடக லக்கினக்காரகள்: உதாரணம் கலைஞர், இந்திரா காந்தி,
    பல ஹீரோக்கள் சிம்ம லக்கினக்காரர்கள்; உதாரணம்: ரஜினி, கமல்

    ReplyDelete
  39. அரசாளும் நட்சத்திரம் முதல் பாதம் :) (நட்சத்திரம் பேரை சொன்னா வேற மாதிரி நினைச்சிப்பாங்க. அதுவும் நம்ம தள இருக்குற இடத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கனும் ;) )

    ReplyDelete
  40. அப்ப எங்க தளபதிக்கு அரசியல்ல வளமான எதிர்காலம் இருக்குனு சொல்றீங்க? நான் சொல்ற தளபதி எங்க சங்க தளபதி :)

    ReplyDelete
  41. //////வெட்டிப்பயல் said...
    அரசாளும் நட்சத்திரம் முதல் பாதம் :) (நட்சத்திரம் பேரை சொன்னா வேற மாதிரி நினைச்சிப்பாங்க. அதுவும் நம்ம தள இருக்குற இடத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கனும் ;) )////

    இந்நேரம் அவர் கண்டு பிடித்திருப்பார்!:-)))

    ReplyDelete
  42. ////வெட்டிப்பயல் said...
    அப்ப எங்க தளபதிக்கு அரசியல்ல வளமான எதிர்காலம் இருக்குனு சொல்றீங்க? நான் சொல்ற தளபதி எங்க சங்க தளபதி :)/////

    எவ்வளவு அடிச்சாலும் (கலாய்த்தாலும்) தாக்குப் பிடிக்கிறார். அதனால் நல்ல எதிர்காலம் உண்டு.
    (நான் சொல்ற தளபதி உங்க சங்க தளபதிதான்)

    ReplyDelete
  43. வாத்தியாரையா...10ம் அதிபதி சுய வர்க்கத்தில் 1, அஷ்தவர்கம் 19, 8ம் வீட்டில்.

    இவரு எனக்கு சரி இல்லை...ஆனால்
    இறைவன் கருணை மிக்கவன்....

    >>முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது
    சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
    மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
    native a good standing power in any situation.<<

    நான் கொஞ்சம் தப்பிச்சேன் எனக்கு லக்கினாதிபதி சுய வர்க்கத்தில் 8 பரல்,அஷ்தவர்கம் 39

    இறைவனுக்கு நன்றி...


    வாத்தியர் ஐயா தகவலுக்கும் நன்றி...

    ReplyDelete
  44. //கெளரவ மாணவர்கள் (Like Guest Artists or Visiting Professors)
    பல வருடங்களாக சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்கள்: நாமக்கல் சிபி, கோவி.கண்ணன் //

    மாப்பிள்ளை பெஞ்ச் ஆஆஆஆஆ

    :)

    எப்படியோ வகுப்பை விட்டு துறத்தாமல் இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. வாத்தியார் என்றால் வாத்தியார் தான். நன்றி !

    :)

    ReplyDelete
  45. //அப்ப எங்க தளபதிக்கு அரசியல்ல வளமான எதிர்காலம் இருக்குனு சொல்றீங்க? நான் சொல்ற தளபதி எங்க சங்க தளபதி :)
    //

    பாலாஜி! நீங்க பதிவுல அரசியலைப் பத்தி இங்கே சொல்லலையே?

    ReplyDelete
  46. தள,
    பின்னூட்டம் எதையுமே படிக்கலை போல :)

    ReplyDelete
  47. //அரசாளும் நட்சத்திரம் முதல் பாதம் :) (நட்சத்திரம் பேரை சொன்னா வேற மாதிரி நினைச்சிப்பாங்க. அதுவும் நம்ம தள இருக்குற இடத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கனும் ;) )////

    இந்நேரம் அவர் கண்டு பிடித்திருப்பார்!:-)))
    //

    வாத்தியார் நம்பிக்கையைக் காப்பாத்திடுவம்ல!

    நீங்களே க்ளூ வேற கொடுத்துட்டீங்க!

    "ஆண் மூலம் அரசாளும்"னு!

    மூல நட்சத்திரம்தானே!

    ReplyDelete
  48. ஐயா! மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய கோப்புகளுடன் புரியும் பணி தொடர்பான தொழிலில் இருப்பார்கள் என்று கருத்து நிலவுகிறதே! உண்மையா?

    ReplyDelete
  49. ஐயா! மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய கோப்புகளுடன் புரியும் பணி தொடர்பான தொழிலில் இருப்பார்கள் என்று கருத்து நிலவுகிறதே! உண்மையா?

    ReplyDelete
  50. /மாப்பிள்ளை பெஞ்ச் ஆஆஆஆஆ//

    பின்னே நமக்கென்ன சம்மந்தி பெஞ்சா கிடைக்கும்!

    ReplyDelete
  51. //
    ஐயா! மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய கோப்புகளுடன் புரியும் பணி தொடர்பான தொழிலில் இருப்பார்கள் என்று கருத்து நிலவுகிறதே! உண்மையா?//

    இல்லை :)

    இது உங்க மன பிராந்தி :)

    ReplyDelete
  52. அட என்னடா நாம வருமுன்னே பாலாஜியும் நாமக்கல் சிபியாரும் வாத்தியரே இப்படி கலாச்சு விட்டாரே என்று நினைத்தால், நானும் அதே கடக லக்கினம், 10'ம் இடம் மேஷம், அதிபதி செவ்வாய், அதே பொட்டி தட்டும் பொறியாளர் வேலை.... ஹ்ம்ம்ம் .. இப்போ புரியுது அதனால் தான் வாத்தியார் என்னால் இவ்வளவு கஸ்ட பட்டார் போலிருக்கு...:-))

    //பல அரசியல் தலைவர்கள் கடக லக்கினக்காரகள்//

    அப்போ 10'ம் இடம் அதிபதி செவ்வாய், அதனால் தான் இப்போ வர அரசியல் தலைவருங்க எல்லாத்துக்கும் இரும்பு,நெருப்பு (உருக்கி), ஆயுதம் இது எல்லாம் அடிப்படை போலிருக்கு... சும்மா தமாசு....


    இப்போ பாடத்தின் கேள்விகள்...

    //அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது
    சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
    மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்//


    வாத்தியரே எனக்கு..
    As(4) 30,
    Moon (6)
    Sun (6)

    லக்கினாதில் 4' மட்டும் இருக்குது, ஒரு 1 மார்க் அதிகமாக போட்டு பாஸ் பண்ணி விடாம விட்டங்களே..:-((

    ReplyDelete
  53. //நாமக்கல் சிபி said...
    /மாப்பிள்ளை பெஞ்ச் ஆஆஆஆஆ//

    பின்னே நமக்கென்ன சம்மந்தி பெஞ்சா கிடைக்கும்!//

    சம்மந்தி பெஞ்சானு எனக்கு தெரியாது ஆனா எல்லாருக்கும் சம பந்தி தான் :)

    ReplyDelete
  54. அன்புள்ள ஐயாவிற்கு வணக்கம்...

    எனது கணினி காய்ச்சல் வந்து படுத்துக்கொண்டதால் கடந்த 4 நாட்களாக தங்களால் படைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விருந்து பந்திக்க மிகவும் லேட்டாக வந்துள்ளேன்.

    மற்ற எல்லா இடங்களை விட 10 மிடத்தைப்பற்றி விளக்கங்கள் மிக அதிகமாகவும் மிகவும் சூப்பரகவும் அமைந்ந்துள்ளன. மிக்க நன்றி

    அதுவும் உருளைக்கிழங்கு உதாரணமும் அதற்குரிய விளக்கமும் அற்புதம்...

    மேலும் எனது ஜாதகத்திற்கு அஷ்டவர்கப்படி மிகவும் பொருந்தி போகிறது...

    ஆனால் பொது பலன் தான் பொருந்தவில்லை..

    ReplyDelete
  55. //////மதி said...
    வாத்தியாரையா...10ம் அதிபதி சுய வர்க்கத்தில் 1, அஷ்டவர்கம் 19, 8ம் வீட்டில்.
    இவரு எனக்கு சரி இல்லை...ஆனால்
    இறைவன் கருணை மிக்கவன்...
    >>முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது
    சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
    மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
    native a good standing power in any situation.<<
    நான் கொஞ்சம் தப்பிச்சேன் எனக்கு லக்கினாதிபதி சுய வர்க்கத்தில் 8 பரல்,அஷ்டவர்கம் 39
    இறைவனுக்கு நன்றி...
    வாத்தியர் ஐயா தகவலுக்கும் நன்றி...////

    நன்றியெல்லாம் எதற்கு? தகவல் உபயோகமாக இருந்தது என்று சொன்னால் போதும் நண்பரே!

    ReplyDelete
  56. ////கோவி.கண்ணன் said...
    //கெளரவ மாணவர்கள் (Like Guest Artists or Visiting Professors)
    பல வருடங்களாக சிறப்பு விருதுகளுடன் வகுப்பில் இருக்கும் மாணவர்கள்: நாமக்கல் சிபி, கோவி.கண்ணன் //
    மாப்பிள்ளை பெஞ்ச் ஆஆஆஆஆ :)
    எப்படியோ வகுப்பை விட்டு துறத்தாமல் இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. வாத்தியார் என்றால் வாத்தியார் தான். நன்றி !////

    மாப்பிள்ளை பெஞ்ச் இல்லை. அதற்குப் பெயர் மாமனார் பெஞ்ச்!

    ReplyDelete
  57. ////நாமக்கல் சிபி said...
    //அப்ப எங்க தளபதிக்கு அரசியல்ல வளமான எதிர்காலம் இருக்குனு சொல்றீங்க? நான் சொல்ற தளபதி எங்க சங்க தளபதி :)
    // பாலாஜி! நீங்க பதிவுல அரசியலைப் பத்தி இங்கே சொல்லலையே?///

    அது வேற இருக்கா? என்னன்னு தனி மின்னஞ்சலில் சொல்லுங்கள்:-))))

    ReplyDelete
  58. /////வெட்டிப்பயல் said...
    தள,
    பின்னூட்டம் எதையுமே படிக்கலை போல :)///


    தளையா? தலையா? இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம்!

    ReplyDelete
  59. ////நாமக்கல் சிபி said...
    //அரசாளும் நட்சத்திரம் முதல் பாதம் :) (நட்சத்திரம் பேரை சொன்னா வேற மாதிரி நினைச்சிப்பாங்க. அதுவும் நம்ம தள இருக்குற இடத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கனும் ;) )////
    இந்நேரம் அவர் கண்டு பிடித்திருப்பார்!:-)))
    // வாத்தியார் நம்பிக்கையைக் காப்பாத்திடுவம்ல!
    நீங்களே க்ளூ வேற கொடுத்துட்டீங்க!
    "ஆண் மூலம் அரசாளும்"னு!
    மூல நட்சத்திரம்தானே!////

    கரெக்ட்! கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள். இதில் ஒரு செய்தி உள்ளது. ஆண் மூலம் என்பது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பகல் சூரியன் ஆதிக்கத்தில் உள்ள மூல நட்சத்திர பிறவிகள். மாலை ஆறு மணிக்குமேல் சந்திரன் ஆதிக்கத்தில் உள்ள நேரத்தில் உள்ள பிறப்புக்கள் பெண் மூலம். ஆண் மூலம் என்பது ஆண்களை மட்டும் குறிப்பதல்ல. அந்த நேரத்தில் பெண் பிறந்திருந்தாலும், அவளும் அரசாளும் யோகம் உடைய பெண்தான்!

    வெட்டியார் பகல் நேர மூல நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். ராஜ யோகம் உள்ளவர்தான்.

    ReplyDelete
  60. ////நாமக்கல் சிபி said...
    ஐயா! மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய கோப்புகளுடன் புரியும் பணி தொடர்பான தொழிலில் இருப்பார்கள் என்று கருத்து நிலவுகிறதே! உண்மையா?/////

    நான் கேள்விப்பட்டதில்லை சிபியாரே! (கோப்பைகளுடன் பணிபுரியக்கூடாது. கோப்புகளுடன் பணிபுரிந்தால் தவறில்லை!)

    ReplyDelete
  61. /////நாமக்கல் சிபி said...
    /மாப்பிள்ளை பெஞ்ச் ஆஆஆஆஆ//
    பின்னே நமக்கென்ன சம்மந்தி பெஞ்சா கிடைக்கும்!////

    அவர் ஆனந்தா ஆகிவிட்டார். அவருக்கு எல்லாம் கிடைக்கும்!:-)))

    ReplyDelete
  62. /////வெட்டிப்பயல் said...
    // ஐயா! மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய கோப்புகளுடன் புரியும் பணி தொடர்பான தொழிலில் இருப்பார்கள் என்று கருத்து நிலவுகிறதே! உண்மையா?//
    இல்லை :)
    இது உங்க மன பிராந்தி :)/////

    இது என்ன புதுச் சரக்காக உள்ளதே?:-))))

    ReplyDelete
  63. //////கோவை விமல்(vimal) said...
    அட என்னடா நாம வருமுன்னே பாலாஜியும் நாமக்கல் சிபியாரும் வாத்தியரே இப்படி கலாச்சு விட்டாரே என்று நினைத்தால், நானும் அதே கடக லக்கினம், 10'ம் இடம் மேஷம், அதிபதி செவ்வாய், அதே பொட்டி தட்டும் பொறியாளர் வேலை.... ஹ்ம்ம்ம் .. இப்போ புரியுது அதனால் தான் வாத்தியார் என்னால் இவ்வளவு கஷ்டப் பட்டார் போலிருக்கு...:-))
    //பல அரசியல் தலைவர்கள் கடக லக்கினக்காரகள்//
    அப்போ 10'ம் இடம் அதிபதி செவ்வாய், அதனால் தான் இப்போ வர அரசியல் தலைவருங்க எல்லாத்துக்கும் இரும்பு,நெருப்பு (உருக்கி), ஆயுதம் இது எல்லாம் அடிப்படை போலிருக்கு... சும்மா தமாசு....
    இப்போ பாடத்தின் கேள்விகள்...
    //அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது
    சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
    மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்//
    வாத்தியரே எனக்கு..
    As(4) 30,
    Moon (6)
    Sun (6)
    லக்கினாதில் 4' மட்டும் இருக்குது, ஒரு 1 மார்க் அதிகமாக போட்டு பாஸ் பண்ணி விடாம விட்டங்களே..:-((////

    அதற்கென்ன நீங்களே போட்டுக் கொண்டு ஜாதகத்தைத் திருத்திவிடுஙகள். யார் கேட்கப் போகிறார்கள்?:-))))

    ReplyDelete
  64. /////வெட்டிப்பயல் said...
    //நாமக்கல் சிபி said...
    /மாப்பிள்ளை பெஞ்ச் ஆஆஆஆஆ//
    பின்னே நமக்கென்ன சம்மந்தி பெஞ்சா கிடைக்கும்!//
    சம்மந்தி பெஞ்சானு எனக்கு தெரியாது ஆனா எல்லாருக்கும் சம பந்தி தான் :)////

    கரெக்ட். வகுப்பறையில் எப்பொதும் சமபந்தி போஜனம் மட்டுமே!

    ReplyDelete
  65. கூடுதுறை said...
    அன்புள்ள ஐயாவிற்கு வணக்கம்...
    எனது கணினி காய்ச்சல் வந்து படுத்துக்கொண்டதால் கடந்த 4 நாட்களாக தங்களால் படைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விருந்து பந்திக்க மிகவும் லேட்டாக வந்துள்ளேன்.
    மற்ற எல்லா இடங்களை விட 10 மிடத்தைப்பற்றி விளக்கங்கள் மிக அதிகமாகவும் மிகவும் சூப்பராகவும் அமைந்ந்துள்ளன. மிக்க நன்றி. அதுவும் உருளைக்கிழங்கு உதாரணமும் அதற்குரிய விளக்கமும் அற்புதம்...////

    பாராட்டுக்களுக்கு நன்றி கூடுதுறையாரே!
    +++++++++++++++++++

    ///////மேலும் எனது ஜாதகத்திற்கு அஷ்டவர்கப்படி மிகவும் பொருந்திப் போகிறது...
    ஆனால் பொது பலன் தான் பொருந்தவில்லை../////

    எதாவது ஒன்று பொருந்தி வருகிறதே என்று திருப்தியடையுங்கள். இரண்டுமே பொருந்திவராதவர்கள் நிலைமையை நினைத்துப் பாருங்கள்

    ReplyDelete
  66. //SP.VR. SUBBIAH said...
    அதற்கென்ன நீங்களே போட்டுக் கொண்டு ஜாதகத்தைத் திருத்திவிடுஙகள். யார் கேட்கப் போகிறார்கள்?:-))))//

    நாமெல்லாம் திருத்த முடியாது வாத்தியரே, வேண்டும் என்றால் அந்த 1 மார்க் வரப்போகும் துணைவியிடம் இருந்து கிடைத்தால் சரி..:-))

    ReplyDelete
  67. //நான் கேள்விப்பட்டதில்லை சிபியாரே! (கோப்பைகளுடன் பணிபுரியக்கூடாது. கோப்புகளுடன் பணிபுரிந்தால் தவறில்லை!)//

    அது சும்மா லுலுங்காட்டிக்கு கேட்டது சாரே!

    பாலாஜி கரெக்டா புரிஞ்சிகிட்டு பதில் சொல்லிட்டார். மனப்பிராந்தின்னு!

    ReplyDelete
  68. /அந்த 1 மார்க் வரப்போகும் துணைவியிடம் இருந்து கிடைத்தால் சரி//

    தேவையான அளவுக்கும் மேலேயே மதிப்பெண்களுடன் துணைவியார் கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  69. /////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    அதற்கென்ன நீங்களே போட்டுக் கொண்டு ஜாதகத்தைத் திருத்திவிடுஙகள். யார் கேட்கப் போகிறார்கள்?:-))))//
    நாமெல்லாம் திருத்த முடியாது வாத்தியரே, வேண்டும் என்றால் அந்த 1 மார்க் வரப்போகும் துணைவியிடம் இருந்து கிடைத்தால் சரி..:-))//////

    என்னே பெருந்தன்மை! அதுபோலவே கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  70. //என்னே பெருந்தன்மை!//

    வாத்தியாரின் பெருந்தன்மையில் கொஞ்சம் கூட மாணாக்கர்களுக்கு வராதா என்ன?

    (சீக்கிரமே லீடர் ஆயிடலாம்னு நினைக்கிறேன்)

    ReplyDelete
  71. வாத்தியாரே..

    நான், கன்னி..

    கடைசி வாய்ப்பு, ஊடகங்கள்..

    கரீக்ட்டா இருக்கு வாத்தியாரே..

    ///நாமக்கல் சிபி said...
    (சீக்கிரமே லீடர் ஆயிடலாம்னு நினைக்கிறேன்)///

    வாத்தியாரே.. நாமக்கல்லார் நாமக்கட்டியைக் குழைத்துக் கொண்டு உங்களிடம் கொஞ்சிக் கொண்டிருப்பது ஏன் என்று இப்போது தெரிகிறதா..? எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்..

    ReplyDelete
  72. //நாமக்கல்லார் நாமக்கட்டியைக் குழைத்துக் கொண்டு உங்களிடம் கொஞ்சிக் கொண்டிருப்பது ஏன் என்று இப்போது தெரிகிறதா..?//

    சுப்பைய்யா வாத்தியாருக்கு யாரேனும் நாமம் போட முடியுமா? (அது பெருமாளுக்குப் போடுவது)

    நம்ம வாத்தியாரிடம் விபூதியைத்தான் அள்ளிக் கொண்டுவர வேண்டும்!

    ReplyDelete
  73. விருந்து அருமை. ஒப்பிட்டு பார்த்து வியப்படைந்தேன்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  74. //ஆனா எல்லாருக்கும் சம பந்தி தான்//

    சம பந்திதான் அதுவும் செம பந்தி!

    ReplyDelete
  75. எனக்கு மேஷத்தில் லக்கினம், ஆக பத்தாமிடம் மகரம் அப்படிப் பார்த்தா

    (அவ்வளவா பொருந்துரா மாதிரியும் இல்லயே - இருக்கே) ஐயா!
    அரசியல் நான் பேசவே மாட்டேன் ஆனால் இதுல politics ன்னு போட்டிருக்கு.
    கண்டிப்பா லேபர் தான், விவசாயம் எனக்கு ரொம்ப பிடிச்சது, பத்தாவது ஃபெயில் ஆகிருந்தா இன்னேரம் ரெண்டு வருஷம் போகும் பார்த்துகிட்டு இருந்திருப்பேன். பாஸாயிட்டேனே, என்ன செய்வது! 
    சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள் - செய்ததில்லை
    மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை! – செஞ்சிருக்கேன் (பரிட்சை நேரத்தில் மூலப்பொருளான பரிட்சை பேப்பரை கொண்டு போய் விற்பது)

    Monk - இது ஹைலைட் :)

    //10.மகரம்:
    சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள்
    மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++
    Tenth:
    government jobs, dealing with public and the masses, managers, politics.
    7. Saturn t
    real estate, labour, agriculture, building trades, mining, monk.
    //

    ReplyDelete
  76. ///////நாமக்கல் சிபி said...
    //என்னே பெருந்தன்மை!//
    வாத்தியாரின் பெருந்தன்மையில் கொஞ்சம் கூட மாணாக்கர்களுக்கு வராதா என்ன?
    (சீக்கிரமே லீடர் ஆயிடலாம்னு நினைக்கிறேன்)////

    இப்போதே நீங்கள் வ.வா.சங்கத்தின் தலைவர்தானே? அந்தப் பதவி ஒன்று போதுமே!

    ReplyDelete
  77. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    நான், கன்னி..
    கடைசி வாய்ப்பு, ஊடகங்கள்..
    கரீக்ட்டா இருக்கு வாத்தியாரே../////

    தண்டாயுதத்தானின் தீவிர பக்தர் நீங்கள். உங்களுக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கும்!
    ++++++++++++++++++++++++++++++
    ///நாமக்கல் சிபி said...
    (சீக்கிரமே லீடர் ஆயிடலாம்னு நினைக்கிறேன்)///
    வாத்தியாரே.. நாமக்கல்லார் நாமக்கட்டியைக் குழைத்துக் கொண்டு உங்களிடம் கொஞ்சிக் கொண்டிருப்பது ஏன் என்று இப்போது தெரிகிறதா..? எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்../////

    நானும் தண்டாயுதத்தானின் தீவிர பக்தன். எனக்கு யாரும் நாமம் போடமுடியாது. அவன் பார்த்துக்கொள்வான். நீங்கள் கவலையை விடுங்கள் தமிழரே!

    ReplyDelete
  78. /////நாமக்கல் சிபி said...
    //நாமக்கல்லார் நாமக்கட்டியைக் குழைத்துக் கொண்டு உங்களிடம் கொஞ்சிக் கொண்டிருப்பது ஏன் என்று இப்போது தெரிகிறதா..?//
    சுப்பைய்யா வாத்தியாருக்கு யாரேனும் நாமம் போட முடியுமா? (அது பெருமாளுக்குப் போடுவது)
    நம்ம வாத்தியாரிடம் விபூதியைத்தான் அள்ளிக் கொண்டுவர வேண்டும்!/////

    விபூதிதானே. அதைச் செல்வம் என்று எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சொல்வார்கள். எவ்வளவு வேண்டுமென்றாலும் அள்ளிக்கொண்டு போங்கள். அது என்றைக்குமே குறையாது!

    ReplyDelete
  79. ///////Rajagopal said...
    விருந்து அருமை. ஒப்பிட்டு பார்த்து வியப்படைந்தேன்.
    அன்புடன்
    இராசகோபால்///

    நன்றி கோபால்!

    ReplyDelete
  80. //////நாமக்கல் சிபி said...
    //ஆனா எல்லாருக்கும் சம பந்தி தான்//
    சம பந்திதான் அதுவும் செம பந்தி!////

    செமையான பந்தியா? என்றைக்கும் அது உண்டு சிபியாரே!

    ReplyDelete
  81. //////Blogger சிவமுருகன் said...
    எனக்கு மேஷத்தில் லக்கினம், ஆக பத்தாமிடம் மகரம் அப்படிப் பார்த்தா

    (அவ்வளவா பொருந்துரா மாதிரியும் இல்லயே - இருக்கே) ஐயா!////

    லக்கினம் மேஷம்:
    லக்கினாதிபதி செவ்வாய் எங்கே இருக்கிறார்
    லக்கினத்தில் எத்தனை பரல்கள்?
    சூரியன் & சந்திரன் இருவரும் எங்கே இருக்கிறார்கள்?
    சுயவர்க்கத்தில் செவ்வாய், சூரியன், சந்திரன் மூவருக்கும் எத்தனை பரல்கள்?
    பத்தாம் வீட்டில் என்ன கிரகம் உள்ளது?
    பத்தாம் வீட்டை என்னென்ன கிரகங்கள் பார்க்கின்றன?
    பத்தாம் அதிபதி அம்சத்தில் எங்கே இருக்கிறார்?
    கர்மகாரகன் சனி எங்கே இருக்கிறார்?
    சுயவர்க்கத்தில் அவருக்கு எத்தனை பரல்கள்?
    இதுபோன்ற தகவல்களை வைத்துப் பார்க்க வேண்டும் நண்பரே!

    கால சந்தியில் அதாவது இரண்டு லக்கினங்களின் Borderல் பிறந்தவர்களுக்கும்,
    லக்கினாதிபதி, பத்தாம் இடத்தின் அதிபதி, தொழில்காரகன் ஆகியோர்
    நீசமடைந்திருப்பவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்திவராது!

    ReplyDelete
  82. ஐய்யா,

    எனக்கு 10 மிடம் கடகம்-அதிபதி சந்திரன், 4ல், ஆக //agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining//

    அப்பறம் 10 மிடம் அதிபதி சந்திரன்
    //Moon nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.//

    ஆகா இப்படி இதில் எதுவுமே சரியாக வரலையே?

    ReplyDelete
  83. /////Sumathi. said...
    ஐய்யா,
    எனக்கு 10 மிடம் கடகம்-அதிபதி சந்திரன், 4ல், ஆக //agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining//
    அப்பறம் 10 மிடம் அதிபதி சந்திரன் //Moon nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.//
    ஆகா இப்படி இதில் எதுவுமே சரியாக வரலையே?/////

    :
    உங்கள் லக்கினம் துலாம் (சரியா?):
    லக்கினாதிபதி சுக்கிரன் எங்கே இருக்கிறார்
    லக்கினத்தில் எத்தனை பரல்கள்?
    சூரியன் & சந்திரன் இருவரும் எங்கே இருக்கிறார்கள்?
    சுயவர்க்கத்தில் சுக்கிரன், சூரியன், சந்திரன் மூவருக்கும் எத்தனை பரல்கள்?
    பத்தாம் வீட்டில் என்ன கிரகம் உள்ளது?
    பத்தாம் வீட்டை என்னென்ன கிரகங்கள் பார்க்கின்றன?
    பத்தாம் அதிபதி அம்சத்தில் எங்கே இருக்கிறார்?
    கர்மகாரகன் சனி எங்கே இருக்கிறார்?
    சுயவர்க்கத்தில் அவருக்கு எத்தனை பரல்கள்?
    இதுபோன்ற தகவல்களை வைத்துப் பார்க்க வேண்டும் சகோதரி!

    கால சந்தியில் அதாவது இரண்டு லக்கினங்களின் Borderல் பிறந்தவர்களுக்கும்,
    லக்கினாதிபதி, பத்தாம் இடத்தின் அதிபதி, தொழில்காரகன் ஆகியோர்
    நீசமடைந்திருப்பவர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்திவராது!

    இன்னும் இரண்டு பகுதிகள் வர உள்ளன. அதையும் படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  84. ஐய்யா,
    என் லக்கினம் துலாம். சரி.
    லக்னத்தில் பரல்கள் 5.
    சூரியன் 9ல் மிதுனத்தில்,
    சந்திரன் 4ல் மகரத்தில்
    சுய வர்கத்தில் சூரிய 4 பரல்கள்.
    சந்திரன் 5 பரல்கள்,சுக்கிரன் 4.
    10 ம் வீட்டில் சுக்கிரனும் ராகுவும்
    10ம் வீட்டை சந், சனி கேதுவும் பார்க்கிறார்கள்.
    அம்சத்தில் 10ம் அதிபதி மிதுனத்தில் சனி(வ) 4ல் மகரத்தில்.சொந்த வீட்டில்.
    சனிக்கு 10 பரல்கள்
    சரி இப்போ சொல்லுங்க

    ReplyDelete
  85. //////Sumathi. said...
    ஐய்யா,
    என் லக்கினம் துலாம். சரி.
    லக்னத்தில் பரல்கள் 5.
    சூரியன் 9ல் மிதுனத்தில்,
    சந்திரன் 4ல் மகரத்தில்
    சுய வர்கத்தில் சூரிய 4 பரல்கள்.
    சந்திரன் 5 பரல்கள்,சுக்கிரன் 4.
    10 ம் வீட்டில் சுக்கிரனும் ராகுவும்
    10ம் வீட்டை சந், சனி கேதுவும் பார்க்கிறார்கள்.
    அம்சத்தில் 10ம் அதிபதி மிதுனத்தில் சனி(வ) 4ல் மகரத்தில்.சொந்த வீட்டில்.
    சனிக்கு 10 பரல்கள்
    சரி இப்போ சொல்லுங்க////

    லக்கினத்தில் வெறும் 5 பரல்களா? தவறு
    சனிக்கு பத்துப் பரல்களா? இதுவும் தவறு.

    பத்தாம் வீட்டில் 2 கிரகங்கள், மேலும் 3 கிரகங்களின் பார்வை. யுத்தம்.
    பத்தில் ராகு, உத்தியோகத்தில் தடைகள், இடையூறுகள். மாறுதல்கள்
    5 கிரகங்களின் ஆதிக்கத்தில் 10ஆம் வீடு இருப்பதால் குறிப்பிட்ட ஒரு
    வேலையோ அல்லது தொழிலோ உங்களுக்கு இருக்காது. எந்த வேலை
    மனதிற்குப் பிடித்திருக்கிறதோ அதை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்.
    ஆனால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டீர்கள்.
    பத்தாம் அதிபதி சந்திரன் 4ல் சுக ஸ்தானத்தில் இருப்பதால்
    உங்களுக்கு சுக ஜீவனம். வீட்டு வேலை மட்டுமே.
    பெண்ணாக இருப்பதால் Home maker வேலை!
    சரிதானா?

    ReplyDelete
  86. ஹலோ சார்,

    //குறிப்பிட்ட ஒரு
    வேலையோ அல்லது தொழிலோ உங்களுக்கு இருக்காது. எந்த வேலை
    மனதிற்குப் பிடித்திருக்கிறதோ அதை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்.ஆனால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டீர்கள்.//

    100% சரி.எனக்கு பிடிச்சா மட்டும் தான் நான் எதுவுமே செய்வேன்.அது வேலையானாலும் சரி தூங்கறதா இருந்தாலும் சரி.
    அதனால தான் எனக்கு எங்கயுமே சரியா தொடர்ந்து இருக்க முடியலையா?

    //சந்திரன் 4ல் சுக ஸ்தானத்தில் இருப்பதால்உங்களுக்கு சுக ஜீவனம். வீட்டு வேலை மட்டுமே.பெண்ணாக இருப்பதால் Home maker வேலை!
    சரிதானா?//

    நூற்றுக்கு நூறு சரி.ஆனாலும் மனசுக்குள்ள ஒரு வருத்தம், என் கையிலும் எனக்குன்னு ஒரு வருமானம் இல்லையே னு.

    ReplyDelete
  87. //நூற்றுக்கு நூறு சரி.ஆனாலும் மனசுக்குள்ள ஒரு வருத்தம், என் கையிலும் எனக்குன்னு ஒரு வருமானம் இல்லையே னு//

    அட! இதுக்கேங்க கவலைப்படணும்! கடவுள் ஒன்றை மறுக்கிறார் என்றால் இன்னொன்றை தருவார்/தந்திருப்பார். அது என்னவென்று அறிந்து மகிழ்ச்சியடைந்திட வேண்டும்!

    உதாரணம்: நல்லா கமகமன்னு ருசியா சமைக்கும் திறமை இருக்கலாம்! சாப்பிடுறவங்க மனசாற திருப்தியா சாப்பிடுவாங்க! கச்சிதமா வீட்டைப் பராமரிப்பதிலும் சில பெண்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும்! குழந்தைகளை பேணி வளர்த்தல் - ஒரு சிறந்த கலை! வேலைக்குப் போகும் பெண்களுக்கு இந்த வரம் கிடைக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  88. ஐயா! அடுத்த வகுப்பு எப்போ?

    ஆவல் மிகுந்த(தலைக்கேறிய!?) மாணர்கள் சங்கம்!

    ReplyDelete
  89. /////Sumathi. said...
    ஹலோ சார்,
    //குறிப்பிட்ட ஒரு
    வேலையோ அல்லது தொழிலோ உங்களுக்கு இருக்காது. எந்த வேலை
    மனதிற்குப் பிடித்திருக்கிறதோ அதை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்.ஆனால் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டீர்கள்.//
    100% சரி.எனக்கு பிடிச்சா மட்டும் தான் நான் எதுவுமே செய்வேன்.அது வேலையானாலும் சரி தூங்கறதா இருந்தாலும் சரி.
    அதனால தான் எனக்கு எங்கயுமே சரியா தொடர்ந்து இருக்க முடியலையா?
    //சந்திரன் 4ல் சுக ஸ்தானத்தில் இருப்பதால்உங்களுக்கு சுக ஜீவனம். வீட்டு வேலை மட்டுமே.பெண்ணாக இருப்பதால் Home maker வேலை! சரிதானா?//
    நூற்றுக்கு நூறு சரி.ஆனாலும் மனசுக்குள்ள ஒரு வருத்தம், என் கையிலும் எனக்குன்னு ஒரு வருமானம் இல்லையே னு./////

    100/100 சரிதான் என்று சொன்னதில் எனக்கும் ஒரு மனநிறைவு சகோதரி!

    கடவுள் ஒரு கதவை சாத்தினால் இன்னோரு கதவைத் திறந்து விட்டிருப்பார். அது என்ன என்று பாருங்கள்!

    ReplyDelete
  90. /////நாமக்கல் சிபி said...
    //நூற்றுக்கு நூறு சரி.ஆனாலும் மனசுக்குள்ள ஒரு வருத்தம், என் கையிலும் எனக்குன்னு ஒரு வருமானம் இல்லையே னு//
    அட! இதுக்கேங்க கவலைப்படணும்! கடவுள் ஒன்றை மறுக்கிறார் என்றால் இன்னொன்றை தருவார்/தந்திருப்பார். அது என்னவென்று அறிந்து மகிழ்ச்சியடைந்திட வேண்டும்!
    உதாரணம்: நல்லா கமகமன்னு ருசியா சமைக்கும் திறமை இருக்கலாம்! சாப்பிடுறவங்க மனசாற திருப்தியா சாப்பிடுவாங்க! கச்சிதமா வீட்டைப் பராமரிப்பதிலும் சில பெண்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும்! குழந்தைகளை பேணி வளர்த்தல் - ஒரு சிறந்த கலை! வேலைக்குப் போகும் பெண்களுக்கு இந்த வரம் கிடைக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்!/////

    நன்றி சிபி. என் வேலையை எளிதாக்கி, சகோதரியாருக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறீர்கள்
    வேலைக்குப் போகும் பெண்களில் 75% சதவிகிதம் படும் அவஸ்தை விவரிக்க முடியாதது! இல்லத்தரசிகளாக இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete
  91. //ஐயா! அடுத்த வகுப்பு எப்போ?
    ஆவல் மிகுந்த(தலைக்கேறிய!?) மாணர்கள் சங்கம்!//

    சிபி அண்ணா உங்களுக்கு தெரியாதா?
    எப்படியும் இன்று இரவு 11 அ 12 மணீக்கு வந்துவிடும் அடுத்த பதிவு...

    ReplyDelete
  92. ////நாமக்கல் சிபி said...
    ஐயா! அடுத்த வகுப்பு எப்போ?
    ஆவல் மிகுந்த(தலைக்கேறிய!?) மாணர்கள் சங்கம்!////

    எத்தனை சங்கங்களைத்தான் துவக்குவீர்களோ? எத்தனை சங்கங்களை வேண்டுமென்றாலும் துவக்குங்கள். கொடி பிடிக்காமல் இருந்தால் சரிதான்!:-)))

    ReplyDelete
  93. /////கூடுதுறை said...
    //ஐயா! அடுத்த வகுப்பு எப்போ?
    ஆவல் மிகுந்த(தலைக்கேறிய!?) மாணர்கள் சங்கம்!//
    சிபி அண்ணா உங்களுக்கு தெரியாதா?
    எப்படியும் இன்று இரவு 11 அ 12 மணீக்கு வந்துவிடும் அடுத்த பதிவு...////

    இதையெல்லாம் சரியாகக் கணித்து வைத்திருக்கிறீர்கள். இன்று சற்று முன்னதாகவே 10.00 மணிக்கே அடுத்த பாடத்தை வலை ஏற்றிவிட்டேன் கூடுதுறையாரே!

    ReplyDelete
  94. "அதுேபால ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல
    பலன்கைளத்
    தர, முக்கியமான மூன்று அடிப்பைட விஷயங்கள் உள்ளன."

    I find only 2 items listed. May I know what is the third item. I think this is apart from 10th place and its lord. I am not sure whether I am missing out anything.

    ReplyDelete
  95. ///Balasubramanian Pulicat said...
    "அதுேபால ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல
    பலன்கைளத் தர, முக்கியமான மூன்று அடிப்பைட விஷயங்கள் உள்ளன."
    I find only 2 items listed. May I know what is the third item. I think this is apart from 10th place and its lord. I am not sure whether I am missing out anything./////

    கவனக்குறைவு. இரண்டு என்று திருத்தி வாசியுங்கள் பாலா! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  96. ஐயா வணக்கம்
    லக்னம் , சூரியன் , சந்திரன் நல்ல நிலை யில்( உடலும் மனமும் ) இருந்தால் வாழ்க்கையே சுகமாக இருக்குமே ஐயா !!
    நன்றி .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com