நச்' சென்று சொன்னார்கள் - பகுதி 1
அரசனின் கனவில் அடிக்கடி மூன்று எலிகள் தோன்றி தொல்லை கொடுத்துக்
கொண்டிருந்தன. அதில் ஒன்று கொழுத்த எலி. ஒன்று மெலிந்த எலி.
இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி!!
தன் கனவிற்கு விளக்கம் கேட்டு, மன்னன் அவையினரைத் தொல்லைப் படுத்தினான்.
யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
மக்களில் யாராவது அதற்கு விளக்கம் சொல்கிறார்களா பார்க்கலாம் என்று
தண்டோரா போட்டு பொது இடங்களில் அறிவித்தான்.
அதற்கு கணிசமான பரிசுத் தொகை ஒன்றையும் அறிவித்திருந்தான்.
ஆனால் யாரும் முன் வரவில்லை. பதில் தவறாகி, அரசனின் கோபத்திற்கு
ஆளானால் என்ன செய்வது?
இரண்டு தினங்கள் கழித்து செய்தியை அறிந்த மூதாட்டி ஒருத்தி பதில்
சொல்லும் நோக்கோடு அரசவைக்கு வந்தாள்.
வந்தவள் மன்னனிடம் அதிரடியாக இப்படிச் சொன்னாள்:
"மன்னா, நீ கனவில் கண்ட அந்தக் கொழுத்த எலி, உன்னுடைய
அரண்மனையில் இருக்கும் மந்திரிகளையும், பணியாளர்களையும்
குறிக்கும். மெலிந்த எலி இந்த நாட்டு மக்களைக் குறிக்கும்."
மூதாட்டியின் பதிலில் ஓரளவு திருப்தியடைந்த மன்னன், உற்சாகமாகக் கேட்டான்:
"சரி, தாயே! எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி யாரைக் குறிக்கிறது?"
மூதாட்டி சலனமின்றிப் பதில் சொன்னாள்:
"அது வேறு யாருமில்லை! நீதான் அது! உன்னைத்தான் குறிக்கிறது அது!"
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
21.9.08
அதிரடியாக அரசனுக்குப் பதில் சொன்ன மூதாட்டி!
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம் ஆசானே!
ReplyDeleteஅந்த மூதாட்டிக்கு பரிசு கிடைத்ததா?............
இப்பொழுது எதற்காக இந்த ஞான கதை?
யார் இப்ப வகுப்பில் தூங்கினா?
ReplyDeleteஉண்மை தமிழனா? அவரு இப்பதான் ரெண்டு ஷோ பார்த்துட்டு அப்படியே கிளாஸ்க்கு வந்தார் அதனால் இருக்கும்.
நல்ல கதை. நாட்டு நடப்பை அப்படியே சித்தரிக்கிறது இந்தக் கதை.
ReplyDeleteஇல்லைன்னாலும் உண்மையச் சொல்லனும்னு இருக்குறப்போ சொல்லீரனுங்குறது நீதி.
/////அணுயோகி said...வணக்கம் ஆசானே!
ReplyDeleteஅந்த மூதாட்டிக்கு பரிசு கிடைத்ததா?............
இப்பொழுது எதற்காக இந்த ஞான கதை?////
கிடைத்தது. வெறும் ஜோதிடப் பாடத்தையே நடத்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் போரடிக்காதா? அதனால் நடுவில் வேறு பாடங்களும் நடத்தப்படும்
/////குசும்பன் said...
ReplyDeleteயார் இப்ப வகுப்பில் தூங்கினா?
உண்மை தமிழனா? அவரு இப்பதான் ரெண்டு ஷோ பார்த்துட்டு அப்படியே கிளாஸ்க்கு வந்தார் அதனால் இருக்கும்.////
மிகவும் சாதுவானவர் அவர். அவரைஏன் சாமி வம்பிற்கு இழுக்கிறீர்கள்?
////G.Ragavan said...
ReplyDeleteநல்ல கதை. நாட்டு நடப்பை அப்படியே சித்தரிக்கிறது இந்தக் கதை.
இல்லைன்னாலும் உண்மையச் சொல்லனும்னு இருக்குறப்போ சொல்லீரனுங்குறது நீதி./////
வாருங்கள் பதிவுலகப் பரந்தாமன். உங்கள் வருகைக்கு நன்றி!
நீங்கள் சொன்ன பிறகு யோசித்தால் தற்போது இருக்கும் நாட்டு நடப்பையும் கதை சித்தரிப்பது உண்மைதான்:)))
கதையை பாதியிலேயே நிறுத்தி வைத்து விட்டீர்களா ?
ReplyDeleteஎதோ ஒன்று விடுபட்டதுபோல் தோன்றுகிறது !
/////ARUVAI BASKAR said...
ReplyDeleteகதையை பாதியிலேயே நிறுத்தி வைத்து விட்டீர்களா ?
எதோ ஒன்று விடுபட்டதுபோல் தோன்றுகிறது !///
கதை அவ்வளவுதான் சாமி!
ராஜா நாட்டின் நிலையையும் தன் நிலையையும் உணர்ந்து அனைத்தையும் சரி செய்தான் அந்த மூதாட்டிக்கும் பரிசு கொடுத்து அனுப்பினான். என்று எழுதினால் ஒருவேளை நீங்கள் நினைத்த க்ளைமாக்ஸ் வந்திருக்கும். அது 1955ஆம் ஆண்டில் மதுரை வீரன் படம் வந்த காலத்துக் கதை சொல்லும் உத்தி. இப்போது 2008க்கு வாருங்கள் பாஸ்கர்!
நெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதானா?
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
////Rajagopal said...
ReplyDeleteநெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதானா?
அன்புடன்
இராசகோபால்////
ஆமாம் கோபால்!:-)))
Arumaiyana kathai, engai aasanthu ellorum oru periya OOOOOO podungal!!!!
ReplyDelete-Shankar
அற்புதம்! அதிரடி பதில்!
ReplyDelete/////hotcat said...
ReplyDeleteArumaiyana kathai, engai aasanthu ellorum oru periya OOOOOO podungal!!!!
-Shankar////
ஆகா எல்லோரும் ஓ போட்டுட்டாங்க! அதை விட ஓம் என்று போடச்சொல்லியிருந்தால் அனைவரும் இறைவனை ஒரு முறை நினத்தாற்போல இருந்திருக்குமே சங்கர்!:-)))
/////RATHNESH said...
ReplyDeleteஅற்புதம்! அதிரடி பதில்!////
நன்றி நண்பரே!
///இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி?
ReplyDelete"அது வேறு யாருமில்லை! நீதான் அது! உன்னைத்தான் குறிக்கிறது அது!"///
ஐயா,
கதை எனக்காகவா?
உண்மையிலேயே அப்படித்தான் தோன்றுகிறது.
"அடியேன் சற்றே தூங்கெலி தான்".
அடியேனுக்கு 12 ம் இடமான அயன,சயன ஸ்தானம் பாதிக்கப் படாமலிருப்பதுதான் காரணமென நினக்கிறேன்.
ஹலோ வாத்தியாரய்யா,
ReplyDeleteஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சியில இருக்கறவங்க யாராச்சும் தூங்கிட்டாங்களா?
அதற்கும் சேர்த்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ... என்ன ஷங்கர் சார் போதுமா? ஓ போட்டது.
ஆசானே,
ReplyDeleteசரி எனக்கும் அடிக்கடி(வாரத்துல 2 தினமாவது) கனவுல யானை வந்து என்னையே சுத்தி சுத்தி வருது.போராததுக்கு என்னை வேற துரத்திகிட்டு வருது. இதற்கும் என்ன அர்த்தம் னு சொல்லிடுங்க.
மக்களே யாரும் யானைய அடிச்சியா பிடிச்சியா னு லாம் கேக்காதீங்க, நான் நிஜமாவே இத கேக்கறேன்.தெரிஞ்சவங்க சொல்லுங்க.
/////தியாகராஜன் said...
ReplyDelete///இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி?
"அது வேறு யாருமில்லை! நீதான் அது! உன்னைத்தான் குறிக்கிறது அது!"///
ஐயா,
கதை எனக்காகவா?
உண்மையிலேயே அப்படித்தான் தோன்றுகிறது.
"அடியேன் சற்றே தூங்கெலி தான்".
அடியேனுக்கு 12 ம் இடமான அயன,சயன ஸ்தானம் பாதிக்கப் படாமலிருப்பதுதான் காரணமென நினைக்கிறேன்./////
இது பொதுவான நீதிக் கதை சாமி! அரசன் தூங்கக்கூடாது என்பதற்கான கதை!
/////Sumathi. said...
ReplyDeleteஹலோ வாத்தியாரய்யா,
ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சியில இருக்கறவங்க யாராச்சும் தூங்கிட்டாங்களா?
அதற்கும் சேர்த்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ... என்ன ஷங்கர் சார் போதுமா? ஓ போட்டது./////
அதையெல்லாம் வகுப்பில் உள்ள ஜூனியர்ஸ் பார்த்துக் கொள்வார்கள் சகோதரி!
நீங்கள் சிரமம் கொள்ளலாகுமா?:-)))
////Sumathi. said...
ReplyDeleteஆசானே,
சரி எனக்கும் அடிக்கடி(வாரத்துல 2 தினமாவது) கனவுல யானை வந்து என்னையே சுத்தி சுத்தி வருது.போராததுக்கு என்னை வேற துரத்திகிட்டு வருது. இதற்கும் என்ன அர்த்தம் னு சொல்லிடுங்க.
மக்களே யாரும் யானைய அடிச்சியா பிடிச்சியா னு லாம் கேக்காதீங்க, நான் நிஜமாவே இத கேக்கறேன்.தெரிஞ்சவங்க சொல்லுங்க.////
யானை கனவில் வந்தால் ஏதோ பெரிதாக அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரப்போகிறது என்று அர்த்தம் (நேரம் நன்றாக இருந்தால்)
இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்று அர்த்தம். எது வந்தால் என்ன? பெங்களூர் ராஜ ராஜேஷ்வரி அம்மன் துணை என்று இருந்து விடுங்கள்.
////ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சியில இருக்கறவங்க யாராச்சும் தூங்கிட்டாங்களா?
ReplyDeleteஅதற்கும் சேர்த்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ... என்ன ஷங்கர் சார் போதுமா? ஓ போட்டது.//////////////
Super,Thanks. appadi podu!!!
-Shankar
//இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்று அர்த்தம்//
ReplyDeleteசுபச் செலவு என்று சொல்லுங்கள் ஆசானே!
/////மாண்புமிகு மாணவி said...
ReplyDelete//இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்று அர்த்தம்//
சுபச் செலவு என்று சொல்லுங்கள் ஆசானே!////
செலவு என்றாலே சுபச் செலவுதானே! எங்க ஊர்ல (காரைக்குடியில்) அப்படித்தான் வழக்கம்!