மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.08

குட்டிக் கதை: நாவிதரும் கடவுளும்

நச்' சென்று சொன்னார்கள் - கதை 2

ஒரு ஆசாமி தன்னுடைய தலை முடியையும், தாடியையும் சீர் படுத்த (trimming)
நாவிதரின் கடைக்குச் சென்றான். நாவிதர் வேலையை ஆரம்பித்தார்.

நாவிதருக்கும் ஆசாமிக்கும் நீண்ட நாள் பழக்கம். நாவிதர் அவனுடன் பேசிக்
கொண்டே முடிய வெட்ட ஆரம்பித்தார். அரசியலில் இருந்து சினிமாவரை
பல விஷயங்களை இருவரும் அலசினார்கள்.

இறுதியில் பேச்சு கடவுளைப் பற்றித் திரும்பியதும், நாவிதர் அதிரடியாகச்
சொன்னார்," எனக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை இல்லை."

ஆசாமி குறுகுறுப்புடன் கேட்டான்," ஏன்?"

"அப்படி ஒருவர் இருந்தால் அல்லவா நம்பிக்கை கொள்ள முடியும்?"

"எப்படிச் சொல்கிறாய்?"

"வேண்டுமென்றால் நான்கு தெருக்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள்.
பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். அவர் இருந்தால் ஏன் இத்தனை நோயாளிகள்
ஏன் அனாதைக் குழந்தைகள். ஏன் இத்தனை சோற்றுக்கில்லாதவர்கள்?"
கடவுள் இருந்தால் வாழ்க்கையில் இத்தனை அவலங்கள் இருக்காது.
இத்தனை சோதனைகள், வலிகள், துன்பங்கள் இருக்காது. இதையெல்லாம்
பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவரைக் கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அதனால்தான் சொல்கிறேன் - கடவுள் இல்லை!"

வந்திருந்த கஸ்டமர் (அதுதான் அந்த ஆசாமி) ஒரு முறை சிந்தித்தார்.
வெட்டியாக ஏன் வாதம் செய்ய வேண்டும்? என்று எண்ணியவர் ஒன்றும்
சொல்லவில்லை.

வந்த வேலை முடிந்தவுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்

வெளியே வந்தவர், சற்றுத் தள்ளி ஒரு மனிதன் நீண்ட, அழுக்கான, வாரிவிடப்படாத
தலை முடியுடனும், நெஞ்சுவரை நீண்டிருக்கும் சீராக இல்லாத தாடியுடனும்
நிற்பதைப் பார்த்தார்.

சட்டென்று பார்பரின் கடைக்குள் மீண்டும் நுழைந்தவர், புன்னகையுடன்
சொன்னார்.

"இப்போதுதான் உணர்ந்தேன். என்ன என்று தெரியுமா? உலகில்
நாவிதர்களே இல்லை!"

"அதை நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்," என்று வியப்பு மேலிடக்
கேட்ட நாவிதர், "நான் ஒரு பார்பர்.உங்கள் கண் எதிரே நிற்கிறேன்.
அதோடு சற்று முன்புதான் உங்களுக்கு முடி வெட்டி விட்டேன் தாடியை
டிரிம் செய்துவிட்டேன்"

"நோ, இல்லவே இல்லை. பார்பர்கள் இருந்தால், வெட்டப்படாத அழுக்கான
தலை முடியுடனும், டிரிம் செய்யப்படாத நீண்ட தாடியுடனும் உலகில் ஒருவரும்
இருக்க மாட்ட்டார்கள். உன் கடை வாசலிலேயே அப்படி ஒருவன் நிற்கிறான்
வெளியே வந்து பார்த்து விட்டுச் சொல்"

"இல்லை அதற்கு பார்பர்கள் என்ன செய்ய முடியும்? அந்த ஏழை மனிதனுக்கு நான்
சென்று எப்படி உதவி செய்ய முடியும்? அவனல்லவா என்னைத் தேடி வரவேண்டும்.
அப்போதுதானே நான் அவனுக்கு உதவ முடியும்?"

"கரெக்ட். தட் ஈஸ் த பாயிண்ட். அதுதான் உண்மை! கடவுளின் நிலைப்பாடும்
அதுதான். இப்போது சொல்வாயா கடவுள் இல்லையென்று?"

நாவிதர் திகைத்துப் போனார்!வாழ்க வளமுடன்!

50 comments:

 1. //"கரெக்ட். தட் ஈஸ் த பாயிண்ட். அதுதான் உண்மை! கடவுளின் நிலைப்பாடும்
  அதுதான். இப்போது சொல்வாயா கடவுள் இல்லையென்று?"
  //

  என் அகக்கண்ணை திறந்துவிட்டீர்கள் வாத்தியார் சார்!

  ReplyDelete
 2. ////நாமக்கல் சிபி said...
  //"கரெக்ட். தட் ஈஸ் த பாயிண்ட். அதுதான் உண்மை! கடவுளின் நிலைப்பாடும்
  அதுதான். இப்போது சொல்வாயா கடவுள் இல்லையென்று?"
  //
  என் அகக்கண்ணை திறந்துவிட்டீர்கள் வாத்தியார் சார்!////

  ஓகோ! இப்படி எழுதினா, அகக்கண் திறந்திடுமா? தெரியாம போச்சே சாமி இதுவரைக்கும்!

  ReplyDelete
 3. ////தமிழ் பிரியன் said...
  நல்ல படிப்பினை!///

  உங்கள் ரசனைக்கு நன்றி தமிழ்ப்பிரியன்

  ReplyDelete
 4. தெய்வமென்றால் அது தெய்வம், வெறும்
  சிலையென்றால் அது சிலைதான்
  உண்டென்றால் அது உண்டு
  இல்லையென்றால் அது இல்லை.

  ReplyDelete
 5. //தெரியாம போச்சே சாமி இதுவரைக்கும்!
  //

  ஓ! உங்களுக்கே இவ்வளவு நேரம் சாமி தெரியாமல்தான் இருந்ததா?

  ReplyDelete
 6. நச்!!! நச்!!! நச்!!!நச் கதைகள் இரண்டும் மிகவும் அருமை,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இக்கதை ஒரு சாட்டையடி!!!

  அருமை வாத்தியாரே,

  அன்புடன்,மகுடம் மோகன்

  ReplyDelete
 7. /////வடகரை வேலன் said...
  தெய்வமென்றால் அது தெய்வம், வெறும்
  சிலையென்றால் அது சிலைதான்
  உண்டென்றால் அது உண்டு
  இல்லையென்றால் அது இல்லை.////

  வாருங்கள் வடகரையாரே! வரும்போது கவியரசர் கண்ணதானின் வரிகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டீர்கள் அதற்கும் சேர்த்து நன்றி!

  ReplyDelete
 8. //// நாமக்கல் சிபி said...
  //தெரியாம போச்சே சாமி இதுவரைக்கும்!
  // ஓ! உங்களுக்கே இவ்வளவு நேரம் சாமி தெரியாமல்தான் இருந்ததா?/////

  எனக்கும் சாமி ஆட்டம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.கூட இருக்கும் சாமிகளைச் சொல்லவில்லை!:-)))

  ReplyDelete
 9. //////magudam mohan said...
  நச்!!! நச்!!! நச்!!!நச் கதைகள் இரண்டும் மிகவும் அருமை,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இக்கதை ஒரு சாட்டையடி!!!
  அருமை வாத்தியாரே,
  அன்புடன்,மகுடம் மோகன்//////

  சாட்டையால் அடிப்பது நம் வேலையல்ல! சட்டையில்லாமல் திரிபவர்களுக்கு (ஆன்மிகச்) சட்டை மாட்டிவிடுவது மட்டுமே நமது வேலை!

  ReplyDelete
 10. //// இலவசக்கொத்தனார் said...
  :))////

  வாங்க கொத்தனார் அய்யா! என்ன ஒன்னும் பூசாமப் போறீங்களே?

  ReplyDelete
 11. Intha kathai neengal solliirukkum vithathil melum nandraga ullathu...

  ungalidam innum athigamaga ethirparkirom....

  ReplyDelete
 12. /////சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
  Intha kathai neengal solliirukkum vithathil melum nandraga ullathu...
  ungalidam innum athigamaga ethirparkirom..../////

  ஆகா, கதைக்குக் கதை மெருமை அதிகமாக ஏற்றித்தான் தந்து கொண்டிருக்கிறேன். எல்லாம் உங்களுக்காத்தான்
  உங்களைப் போன்ற வாசகர்களுக்காத்தான் நண்பரே!

  ReplyDelete
 13. //எனக்கும் சாமி ஆட்டம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.கூட இருக்கும் சாமிகளைச் சொல்லவில்லை!:-)))//

  நீங்கள் சுப்பிரமணிய சுவாமியையா சொல்கிறீர்கள்?

  (நானும் ஆசாமிகளைச் சொல்லவில்லை)

  ReplyDelete
 14. ////ILA said...
  அருமையான கதை///

  வாங்க, நாடு போற்றும் விவசாயி! உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 15. /////நாமக்கல் சிபி said...
  //எனக்கும் சாமி ஆட்டம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.கூட இருக்கும் சாமிகளைச் சொல்லவில்லை!:-)))//
  நீங்கள் சுப்பிரமணிய சுவாமியையா சொல்கிறீர்கள்?
  (நானும் ஆசாமிகளைச் சொல்லவில்லை)/////

  தில்லியில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமியல்ல! நான் சொல்வது திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி!

  ReplyDelete
 16. Dear Sir

  I dont know why I am feeling that something is missing in the story...

  Good subject with really valuable message.

  -Shankar

  ReplyDelete
 17. நல்ல கதை. நன்றி வாத்தியார் சார்

  ReplyDelete
 18. //////hotcat has left a new comment on your post "குட்டிக் கதை: நாவிதரும் கடவுளும்":
  Dear Sir
  I dont know why I am feeling that something is missing in the story...
  Good subject with really valuable message.
  -Shankar ///

  Nothing is missing in the story my dear Shankar. Pl. read the story once again! டாக்டர் ப்ரூனோ அவர்களின் பின்னூட்டத்தைப் பாருங்கள்

  ReplyDelete
 19. ///// புருனோ bruno said...
  நல்ல கதை. நன்றி வாத்தியார் சார்////

  டாக்டர் சார். என்ன இரவுப் பணியா?
  இந்த நேரத்தில் பின்னூட்டம் இடுகிறீர்களே? நன்றி!

  ReplyDelete
 20. இதற்க்கு முன் ஆங்கிலத்தில் படித்துள்ளேன்,தமிழில் இன்னும் நன்றாக உள்ளது,மொழி பெயர்ப்புக்கு நன்றி.

  கடவுளை சதா குறை சொல்பவர்களுக்கு இது ஒரு நல்லா பாடம்.

  ReplyDelete
 21. //"வேண்டுமென்றால் நான்கு தெருக்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள்.
  பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். அவர் இருந்தால் ஏன் இத்தனை நோயாளிகள்
  ஏன் அனாதைக் குழந்தைகள். ஏன் இத்தனை சோற்றுக்கில்லாதவர்கள்?"
  கடவுள் இருந்தால் வாழ்க்கையில் இத்தனை அவலங்கள் இருக்காது.
  இத்தனை சோதனைகள், வலிகள், துன்பங்கள் இருக்காது. இதையெல்லாம்
  பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவரைக் கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
  அதனால்தான் சொல்கிறேன் - கடவுள் இல்லை!"//

  இது நாவிதரின் அறிவுபூர்வமான வாதம்.

  அடுத்து

  வெளியே வந்தவர், சற்றுத் தள்ளி ஒரு மனிதன் நீண்ட, அழுக்கான, வாரிவிடப்படாத
  தலை முடியுடனும், நெஞ்சுவரை நீண்டிருக்கும் சீராக இல்லாத தாடியுடனும்
  நிற்பதைப் பார்த்தார்.

  சட்டென்று பார்பரின் கடைக்குள் மீண்டும் நுழைந்தவர், புன்னகையுடன்
  சொன்னார்.

  "இப்போதுதான் உணர்ந்தேன். என்ன என்று தெரியுமா? உலகில்
  நாவிதர்களே இல்லை!"

  "அதை நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்," என்று வியப்பு மேலிடக்
  கேட்ட நாவிதர், "நான் ஒரு பார்பர்.உங்கள் கண் எதிரே நிற்கிறேன்.
  அதோடு சற்று முன்புதான் உங்களுக்கு முடி வெட்டி விட்டேன் தாடியை
  டிரிம் செய்துவிட்டேன்"
  இதுவும் நாவிதரின் உண்மையான வாதம்தான்.
  ஆனால் முடிவெட்டிக் கொண்டவர் வாதத்தில் முட்டாள்தனம்தான் உள்ளது.

  பைத்திகாரனாக, அழுக்குருண்டையாக இருப்பதற்கு யார் காரணம். கடவுளா? கடவுள் எனில் அந்தக் கடவுள் நமக்கு தேவையா?

  கடவுளின் பேரச் சொல்லிக் கொண்டு இருக்கும் குறிப்பாக சாமியார்கள் என்று சொல்லப்படும் ஆசாமிகள் கெட்-அப்பே அப்படித்தான் இருக்குது.
  கடவுளை நிலை நிறுத்த என்னமா யோசிக்கிறீங்க.
  பார்பர் என்பது உண்மை. கடவுள் என்பது பொய்மை.

  ReplyDelete
 22. /////மதி said...
  இதற்க்கு முன் ஆங்கிலத்தில் படித்துள்ளேன்,தமிழில் இன்னும் நன்றாக உள்ளது,மொழி பெயர்ப்புக்கு நன்றி.
  கடவுளை சதா குறை சொல்பவர்களுக்கு இது ஒரு நல்லா பாடம்./////

  பாராட்டிற்கு நன்றி நண்பரே! இது மொழிமாற்றம் செய்யப்பெற்ற கதைதான்!

  ReplyDelete
 23. //////tamiloviya said...
  இதுவும் நாவிதரின் உண்மையான வாதம்தான்.
  ஆனால் முடிவெட்டிக் கொண்டவர் வாதத்தில் முட்டாள்தனம்தான் உள்ளது.
  பைத்திகாரனாக, அழுக்குருண்டையாக இருப்பதற்கு யார் காரணம். கடவுளா? கடவுள் எனில் அந்தக் கடவுள் நமக்கு தேவையா?
  கடவுளின் பேரச் சொல்லிக் கொண்டு இருக்கும் குறிப்பாக சாமியார்கள் என்று சொல்லப்படும் ஆசாமிகள் கெட்-அப்பே அப்படித்தான் இருக்குது.
  கடவுளை நிலை நிறுத்த என்னமா யோசிக்கிறீங்க.
  பார்பர் என்பது உண்மை. கடவுள் என்பது பொய்மை./////

  எங்கும் நிறைந்திருப்பவரை, நான் எதற்கு நிலை நிறுத்த வேண்டும்?
  அதனால் எனக்கு என்ன லாபம் அல்லது பயன்?

  நம்புவர்களுக்கு நமச்சிவாயம்
  நம்பதாவர்களுக்கு ஏது சிவாயம்?

  கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அழகாகச் சொல்லிவைத்திருக்கிறார்
  "உண்டு என்றால் அது உண்டு
  இல்லை என்றால் அது இல்லை!"

  உங்களுக்கு இல்லாதவரா, அப்படியே இருக்கட்டும். அதனால் யாருக்கும்
  எந்த நஷ்டமும் இல்லை! பேசுவதால் எந்தப் பயனும் இல்லை!

  எந்த நஷ்டமும் இல்லாததை, எந்தப் பயனும் இல்லாததை ஏன் பேசித் தெளிய வேண்டும் நண்பரே?
  எனக்கு இதில் எந்த யோசனையும் இல்லை! நான் தெளிவாக இருக்கிறேன்.
  யோசித்தால் நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.But it is your problem!

  ReplyDelete
 24. கலக்கல் கதை.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 25. கலக்கல் கதை.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 26. வணக்கம் ஆசானே!

  ***"அந்த ஏழை மனிதனுக்கு நான் சென்று எப்படி உதவி செய்ய முடியும்? அவனல்லவா என்னைத் தேடி வரவேண்டும்.அப்போதுதானே நான் அவனுக்கு உதவ முடியும்?" ***

  சரியான நச்.......

  உங்களை தவிர இதை விட எளிமையாக வேறு யாரால் பாடம் நடத்த முடியும். இந்த கதை நீங்கள் எங்களுக்கு நடத்திய பாடங்களுள் சிறந்த ஒன்று.

  ReplyDelete
 27. போலி நாத்திகவாதிகளுக்கு இந்த கதை நல்ல படிப்பினையை கொடுக்க நான் இறைவனை வேண்டுகிறேன் !

  ReplyDelete
 28. /////Rajagopal said...
  கலக்கல் கதை.///
  அன்புடன்
  இராசகோபால்////

  நன்றி கோபால்!

  ReplyDelete
 29. //////அணுயோகி said...
  வணக்கம் ஆசானே!
  ***"அந்த ஏழை மனிதனுக்கு நான் சென்று எப்படி உதவி செய்ய முடியும்? அவனல்லவா என்னைத் தேடி வரவேண்டும்.அப்போதுதானே நான் அவனுக்கு உதவ முடியும்?" ***
  சரியான நச்.......
  உங்களை தவிர இதை விட எளிமையாக வேறு யாரால் பாடம் நடத்த முடியும். இந்த கதை நீங்கள் எங்களுக்கு நடத்திய பாடங்களுள் சிறந்த ஒன்று.//////

  பாராட்டிற்கு நன்றி யோகியாரே!

  ReplyDelete
 30. /////ARUVAI BASKAR said...
  போலி நாத்திகவாதிகளுக்கு இந்த கதை நல்ல படிப்பினையை கொடுக்க நான் இறைவனை வேண்டுகிறேன் !////

  ஆகா, உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்!

  ReplyDelete
 31. போலி நாத்திகவாதிகளுக்கு கூறவேண்டிய சரியான சவுக்கடி கதை...

  அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 32. நாங் கூட எத்தாவது களுத்துல கத்தி வச்சு ஏதாவது கேக்க போறாரோன்னு நினைத்தேன். கதை முடிவு சூப்பர்.

  நச் ன்னு ஒரு உண்மை.

  ReplyDelete
 33. /////கூடுதுறை said...
  போலி நாத்திகவாதிகளுக்கு கூறவேண்டிய சரியான சவுக்கடி கதை...
  அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா.../////

  நாளை ஒரு கதை இருக்கிறது. அதையும் படியுங்கள் கூடுதுறையாரே!

  ReplyDelete
 34. /////சிவமுருகன் said...
  நாங் கூட எத்தாவது களுத்துல கத்தி வச்சு ஏதாவது கேக்க போறாரோன்னு நினைத்தேன். கதை முடிவு சூப்பர்.
  நச் ன்னு ஒரு உண்மை.////

  வாருங்கள் சிவமுருகன். வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 35. ஐயா வணக்கம்.
  நல்ல நீதிக்கதைகளை பதிவிட்டு கலக்குகிறீர்கள்.
  நன்றி.

  ReplyDelete
 36. ///////தியாகராஜன் said...
  ஐயா வணக்கம்.
  நல்ல நீதிக்கதைகளை பதிவிட்டு கலக்குகிறீர்கள்.
  நன்றி.////

  வாருங்கள் தியாகராஜன். வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 37. நல்ல கதை. நன்றி ஐயா.

  GK, BLR.

  ReplyDelete
 38. ////தங்ஸ் said...
  Nice Punch! Nanri!////

  நன்றி தங்ஸ்!

  ReplyDelete
 39. /////Geekay said...
  நல்ல கதை. நன்றி ஐயா.
  GK, BLR.////

  நன்றி ஜீக்கே!

  ReplyDelete
 40. ஐயா,

  கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்து சொல்கிறேன்.

  இந்தக் கதையில் லாஜிக் சுத்தமாக இல்லை. நாவிதன் குறிப்பிட்ட‌ கஷ்டப் படுபவர்களில் பெரும்பாலோர் கடவுளை நாடிச் சென்றும் கஷ்டம் தீராதவர்கள். எனவே ஆசாமியின் பதிலும் உங்கள் கதையும் தவறு. உங்கள் ப்ளாக் ஐ விரும்பிப் படிப்பவன் நான். தயவுசெய்து கடவுள் என்ற உணர்வற்ற சக்தி நிலையிடம் நன்றி உணர்வைக் காட்ட லாஜிக் இல்லாமல் எழுத வேண்டாம்.

  ReplyDelete
 41. /////Manivannan said...
  ஐயா,
  கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்து சொல்கிறேன்./////

  எனக்குக் கோபமே வராது! உருப்படும் வழியைப் பார்க்காமல் பதிவில் வீணாக எழுதிக்கொண்டிருக்கிறாயே என்று என் நண்பர்கள்தான் என் மீது கோபப்படுவார்கள். அதையும் நான் கோபமில்லாமல் எதிர்கொள்வேன்.
  ++++++++++++++++++++++++++++++++++
  /////இந்தக் கதையில் லாஜிக் சுத்தமாக இல்லை. நாவிதன் குறிப்பிட்ட‌ கஷ்டப் படுபவர்களில் பெரும்பாலோர் கடவுளை நாடிச் சென்றும் கஷ்டம் தீராதவர்கள்.////

  இதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீகள்? அவர்கள் நாடிச் சென்று வழிபட்டு ஒன்றும் கிடைக்காமல் திரும்பியதைப் பார்த்தீர்களா?
  ++++++++++++++++++++++++++++++++++++
  ///// எனவே ஆசாமியின் பதிலும் உங்கள் கதையும் தவறு. உங்கள் ப்ளாக் ஐ விரும்பிப் படிப்பவன் நான். தயவுசெய்து கடவுள் என்ற உணர்வற்ற சக்தி நிலையிடம் நன்றி உணர்வைக் காட்ட /////

  நன்றி உணர்வைக் காட்ட நான் ஏன் பாடுபட வேண்டும்? நான் நன்றியுடையவனா அல்லது நன்றி உணர்வு இல்லாதவனா என்பதை அவர் அறியதவரா? அறியாதவராக இருந்தால் அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?

  இல்லை அப்படி உணர்வு இருப்பதாக இதைப் போன்ற எழுத்துக்களால் எழுதுவதால் எனக்குக் கூடுதலாக என்ன கிடைத்துவிடப் போகிறது? இல்லை அதைப்போன்ற அல்ப பயன்களுக்காக எழுதுபவர்களை அடையாளம் காணத்தெரியாதவரா கடவுள்?
  ++++++++++++++++++++++++++++++++++++++
  லாஜிக் இல்லாமல் எழுத வேண்டாம்.

  இறைவனையே நிருபிக்க முடியவில்லை. அங்கே முதலில் செத்துவிடுவது இந்த லாஜிக் என்ற சொல்லாடல்தான்!:-)))

  ReplyDelete
 42. நண்பர் சுப்பையா அவர்களே
  கடவுள் இருப்பதை நிரூபிக்க இவ்வள்வு மெனக்கெட்டு கதை சொல்ல வேண்டியதில்லை

  ReplyDelete
 43. //////ப. சேர்முக பாண்டியன் said...
  நண்பர் சுப்பையா அவர்களே
  கடவுள் இருப்பதை நிரூபிக்க இவ்வளவு மெனக்கெட்டு கதை சொல்ல வேண்டியதில்லை/////

  அதுதான் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அப்போதே நன்றாகச் சொல்லிவிட்டாரே!

  "தெய்வமென்றால் அது தெய்வம், வெறும்
  சிலையென்றால் அது சிலைதான்
  உண்டென்றால் அது உண்டு
  இல்லையென்றால் அது இல்லை."

  நான் எதுவும் மெனக்கெடவில்லை நண்பரே!

  ReplyDelete
 44. Only these kinda theories and arguments makes God exists. Practically there is no God.

  ReplyDelete
 45. /////Hari said...
  Only these kinda theories and arguments makes God exists. Practically there is no God.////

  நீங்கள் இப்படிப் பட்ட சிந்தனை உடையவராக உருவாவீர்கள் என்ற தீர்க்கதரிசனத்தால்தானோ என்னவோ உங்களுடைய பெற்றோர்கள் உங்களுக்கு 'ஹரி' என்று பெயர் இட்டுள்ளார்கள். அடுததவரிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லும்போது அல்லது அடுத்தவர் உங்களை அழைக்கும்போது 'ஹரி' என்னும் இறைவனின் திருப்பெயர்தான் உச்சரிக்கப்படுகிறது.அதையாவது உணர்ந்திருக்கிறீர்களா நண்பரே?

  ReplyDelete
 46. /////Hari said...

  I have checked most of the Hindu names. They are mostly refer to the God/Myth characters. And a few refer to nature/nature oriented things. Naming doesn't mean the existence of God.

  I never attack on a real person for a unreal god. I never attack a real person for an actor.

  The following lines shows your character. This is type of Ego of the persons, who thinks they are very near to God, and disrespect all who do not believe in God. But I always respect you and God. I just do not believe in God.

  "நீங்கள் இப்படிப் பட்ட சிந்தனை உடையவராக உருவாவீர்கள் என்ற தீர்க்கதரிசனத்தால்தானோ என்னவோ உங்களுடைய பெற்றோர்கள் உங்களுக்கு 'ஹரி' என்று பெயர் இட்டுள்ளார்கள்."

  Grow up. You need to mature. Show respect to all, who you can see, touch. After that you may respect/care about unseen things(if any).

  ReplyDelete
 47. Hari said...
  /////Hari said...
  Only these kinda theories and arguments makes God exists. Practically there is no God.////
  நீங்கள் இப்படிப் பட்ட சிந்தனை உடையவராக உருவாவீர்கள் என்ற தீர்க்கதரிசனத்தால்தானோ என்னவோ உங்களுடைய பெற்றோர்கள் உங்களுக்கு 'ஹரி' என்று பெயர் இட்டுள்ளார்கள். அடுததவரிடம் நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லும்போது அல்லது அடுத்தவர் உங்களை அழைக்கும்போது 'ஹரி' என்னும் இறைவனின் திருப்பெயர்தான் உச்சரிக்கப்படுகிறது.அதையாவது உணர்ந்திருக்கிறீர்களா நண்பரே?
  //

  I have checked most of the Hindu names. They are mostly refer to the God/Myth characters. And a few refer to nature/nature oriented things. Naming doesn't mean the existence of God.
  I never attack on a real person for a unreal god. I never attack a real person for an actor.
  The following lines shows your character. This is type of Ego of the persons, who thinks they are very near to God, and disrespect all who do not believe in God. But I always respect you and God. I just do not believe in God.
  "நீங்கள் இப்படிப் பட்ட சிந்தனை உடையவராக உருவாவீர்கள் என்ற தீர்க்கதரிசனத்தால்தானோ என்னவோ உங்களுடைய பெற்றோர்கள் உங்களுக்கு 'ஹரி' என்று பெயர் இட்டுள்ளார்கள்."
  Grow up. You need to mature. Show respect to all, who you can see, touch. After that you may respect/care about unseen things(if any).///

  எனக்கு இன்னும் முதிர்ந்ததன்மை (maturity) வரவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். வந்திருந்தால் ஏன் பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லாத வலைப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்?

  நான் வயது வித்தியாசமின்றி, அவர்கள் வேறுபட்ட கொள்கையுடையவராயினும், அனைவரையும் மதிப்பவன். அது என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத்தெரியும்.

  கடவுளை நீங்கள் நம்பவில்லை என்பதால், யாருக்கும் நஷ்டமில்லை! கடவுள் கருணை மிக்கவர், தன்னை நம்புகிறவன், நம்பாதவன் ஆகிய இருவருமே அவருக்கு ஒன்றுதான். இல்லையென்றால் அவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com