மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.9.08

பத்துமா, பத்தாதா, இல்லை படுத்துமா இந்த வீடு?

பத்தாம் வீடு!

ஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.

பத்தாம் வீடு ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும்
தொழிலை அல்லது வேலையைக் குறிப்பிடுவதாகும். அந்த இடத்தை, அதன் இயற்கைத்
தன்மையை, அதன் அதிபதியை, அவர் சென்று அமர்ந்திருக்கும் இடத்தை, அந்த
இடம் பெருகின்ற பார்வைகளை, அந்த அதிபர் பெறும் பார்வைகளை, அந்த இடத்தில்
வந்தமரும் கிரகங்களை, அதிபருடன் சேர்கின்ற அல்லது கூட்டணி போடுகின்ற
கிரகங்களை, அதேபோல கர்மகாரன் சனீஷ்வரனின் நிலைமை ஆகியவற்றைப்
பொறுமையாக அலசுவதன் மூலம் ஒருவரின் ஜீவனத்திற்கான வழியை அறியலாம்.
இதில் அஷ்டகவர்க்கம் பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் ஒருவனுக்கு வேலை உண்டா இல்லையா அல்லது தொழில் செய்வானா
என்று பார்ப்பதற்கும், அல்லது தொழில் ஸ்தானம் முழுமையாகக் கெட்டிருந்தால்
வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுறிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச்
சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பானா என்று பார்ப்பதற்கு இந்த
வீடு உதவி செய்யும். உத்தியோகத்தில் அல்லது வேலையில் எந்த அளவிற்கு
ஒருவன் உயர்வான் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வான் என்று
பார்ப்பதற்கும் இது உதவும். எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவான்
அல்லது கீழே விழுவான் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இந்த ஜோதிடக் கலையை நிர்மானித்த முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த
வேலை வாய்ப்புக்களும், தொழில்களும் மிகச் சிலவே. பின்னாட்களில் வந்த
ஜோதிட மேதைகள் தங்கள் அனுபவத்தால் எழுதிவைத்துவிட்டுப்போன
ஏராளமான குறிப்புக்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவன் கற்றுத்
தேர்ந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புக்களை
வைத்து ஒரு குறிப்பிட்ட வேலையை, ஜாதகனுக்காகச் சொல்வது இயலாது.

ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்று ஒருவனுக்கு எப்படிச் சொல்ல முடியும்.
அல்லது நீ கனரக வாகனம் ஓட்டும் வேலைக்குச் செல்வாய் என்று எப்படிச்
சொல்ல முடியும்? அரசு வேலை என்று சொல்லலாம்.அவ்வளவுதான் அரசுத்
துறையில் வேலையில் ஆயிரம் வேலைகள் உள்ளன!. உடல் உழைப்பு வேலை
என்று சொல்லலாம். உடல் உழைப்பிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் உள்ளன.

நீ வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவாய் என்று சொல்லலாம். எந்த வியாபாரம்
என்று எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவத் துறையில் வெற்றி பெறுவாய் என்று சொல்லாம். மருத்துவத்
துறையில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன? டாக்டரும் மருத்துவத் துறைதான்,
மருந்து உற்பத்தி செய்பவரும் மருத்துவத் துறைதான், மருத்துவமனை வைத்திருப்
பவரும் மருந்துக் கம்பெனி விற்ப்பனைப் பிரநிதியும் மருத்துவத் துறைதான்.

கலைத்துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன? சுக்கிரனும் ராகுவும், அல்லது
சுக்கிரனும், புதனும் அல்லது ராகுவும், புதனும் எந்த ஜோடி சம்பந்தப்பாட்டலும்
கலைத் துறையில் சிறப்படைய முடியும். ஆனால் கதை வசனம், இயக்கம்,
இசை, நடிப்பு என்று அதில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன இல்லையா?

ஆகவே உயர்வைச் சொல்ல முடியுமே தவிர உயர்வு அடையும் காலத்தைச்
சொல்ல முடியுமே தவிர, வேலையை மிகத்துல்லியமாகக் குறிப்பிட முடியாது.
அதை நினைவில் வையுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும்
பொதுப் பலன்கள்

பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில்
வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ
அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான்.
போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
Tenth lord placed in the lagna or 1st house
லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை
அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில்
இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால்
போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.
இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின்
தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
Tenth lord placed in the 2nd house
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன்.
இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும்
கை நிறையப் பொருள் ஈட்டுவான்.
தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்.
குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை
ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும்
தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள்.
பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் பெரும் நஷடங்களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும்
தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Tenth lord placed in the 3rd house
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை
அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில்
பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும்
இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்
விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல்
மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால்
இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும்
அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Tenth lord placed in the 4th house
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடை
யவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால்
பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்
களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு
உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார்.
தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங்
களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த
அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்
களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும்,
பயனுள்ளதாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
Tenth lord in the 5th House
ஐந்தாம் வீட்டில் இருந்தால்
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த
அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம்
துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும்.
இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள
பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம்
வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும்
இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த
முயல்வார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
Tenth lord in the 6th House
ஆறாம் வீட்டில் இருந்தால்:
நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில்
இருந்தால், அதில் பிரகாசிப்பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை
அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர்
பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள்.
அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள்.
ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள்
செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு
அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
Tenth lord in the 7th House
ஏழாம் வீட்டில் இருந்தால்:
பாத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை
மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும்
அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து
கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில்
சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய
வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி
தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள்
உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள்,
அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள்
கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும்.
இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
Tenth lord in the 8th House
எட்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது
வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி
களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.
தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள்.
பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும்
இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும்,
விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப்
11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம்
கிடைக்கும் வேலைகள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
Tenth lord in the 9th House
ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர்
என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்
களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடைய
வராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டு
தலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள
மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு
இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது
போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Tenth lord in the Tenth House
பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால்
தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு
கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும்.
தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக
இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு
உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும்
உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை,
பார்வைகளளப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11
Tenth lord in the 11th House
பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும்,
மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக
இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு
வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும்
இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலரலும் விரும்பப்படுவார்கள்.
இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு
செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை
உடையவர்களாக இருப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Tenth lord in the 12th House
பத்தாம் அதிபதி 12ல் இருந்தால்.
வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க
நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க
நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முரையற்று நடந்தால்
பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த
அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ
அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை
மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும்
அவ்ற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்கு தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வீட்டைப்பற்றி இன்னும் மூன்று பகுதிகள் வர உள்ளன. அவற்றையும்
படித்துவிட்டு
ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார்,
வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும்.
முழுச்சாப்பாடையும் சாப்பிடாமல், உங்களுக்குச் சொந்த ஜாதகத்திற்குத் தாவி
குழம்பிக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்


வாழ்க வளமுடன்!

34 comments:

 1. //இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார்,
  வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும்//

  ஆவலுடன் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 2. //இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார்,
  வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும்//

  இலை ஓட்டை..இலை ஓட்டை

  ReplyDelete
 3. எப்ப வரும்..? எப்ப வரும்..?

  ReplyDelete
 4. //முழுச்சாப்பாடையும் சாப்பிடாமல், உங்களுக்குச் சொந்த ஜாதகத்திற்குத் தாவி
  குழம்பிக்கொள்ளாதீர்கள்.
  //
  வழி மொழிகிறேன் :) :)

  ReplyDelete
 5. //எப்ப வரும்..? எப்ப வரும்..//

  அது வரை 10ஆம் இடம் குறித்த சில கருத்துக்களை மீண்டும் படிப்போமா

  http://classroom2007.blogspot.com/2008/06/astrology_16.html

  ReplyDelete
 6. Simply superb....My 10 th lord is in first house..I am involved in a independent career...Your wordings are exactly matching me.Looking to read further !!!!

  ReplyDelete
 7. இந்த வீட்டைப்பற்றி இன்னும் மூன்று பகுதிகள் வர உள்ளன. அவற்றையும்
  படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.ஃஃஃ

  அப்படியா?

  ReplyDelete
 8. 3 பதிவிற்காக காத்திருக்கிறேன், முதல் பதிவில் மீ த 8'த் மாணவன்..:-))

  ReplyDelete
 9. //////நாமக்கல் சிபி said...
  //இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார்,
  வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும்//

  ஆவலுடன் காத்திருக்கிறேன்!//////

  ஆகா, ஆனால் ரொம்ப நேரம் காத்திருக்கும்படி செய்ய மாட்டேன்!

  ReplyDelete
 10. /////நாமக்கல் சிபி said...
  //இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார்,
  வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும்//

  இலை ஓட்டை..இலை ஓட்டை///

  நீங்கள் வீட்டு ஆள். உங்களுக்கு எப்போதும் தட்டுதானே? யார் இலையைப் போட்டது?

  ReplyDelete
 11. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  எப்ப வரும்..? எப்ப வரும்..?/////

  அடுத்தடுத்து வரும் தமிழரே!

  ReplyDelete
 12. ////புருனோ Bruno said...
  //முழுச்சாப்பாடையும் சாப்பிடாமல், உங்களுக்குச் சொந்த ஜாதகத்திற்குத் தாவி
  குழம்பிக்கொள்ளாதீர்கள்.
  //
  வழி மொழிகிறேன் :) :)////

  நன்றி டாக்டர்!

  ReplyDelete
 13. ////புருனோ Bruno said...
  //எப்ப வரும்..? எப்ப வரும்..//
  அது வரை 10ஆம் இடம் குறித்த சில கருத்துக்களை மீண்டும் படிப்போமா?
  http://classroom2007.blogspot.com/2008/06/astrology_16.html////

  நன்று சொன்னீர்கள் டாக்டர்! நன்றி!

  ReplyDelete
 14. ////Ragu Sivanmalai said...
  Simply superb....My 10 th lord is in first house..I am involved in a independent career...Your wordings are exactly matching me.Looking to read further !!!!////

  நன்றி கருர் ரகு சிவன்மலை!

  ReplyDelete
 15. /////tamil cinema said...
  இந்த வீட்டைப்பற்றி இன்னும் மூன்று பகுதிகள் வர உள்ளன. அவற்றையும்
  படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.ஃஃஃ
  அப்படியா?////

  ஆமாம் நண்பரே! தட்டச்சிப் பதிய வேண்டாமா?

  ReplyDelete
 16. /////கோவை விமல்(vimal) said...
  3 பதிவிற்காக காத்திருக்கிறேன், முதல் பதிவில் மீ த 8'த் மாணவன்..:-))///

  எப்போது வந்தாலும் வகுப்பில் குறைந்த வயதுக்காரர் நீங்களாகத்தான் இருக்கும்!

  ReplyDelete
 17. i have 10 th lord sun in 7th house along with 7th lord venus and rahu. i am afraid of rahu .

  what will happen if rahu with sun 10th lord. i am viruchiga lagna.

  ReplyDelete
 18. //SP.VR. SUBBIAH said...
  /////கோவை விமல்(vimal) said...
  3 பதிவிற்காக காத்திருக்கிறேன், முதல் பதிவில் மீ த 8'த் மாணவன்..:-))///

  எப்போது வந்தாலும் வகுப்பில் குறைந்த வயதுக்காரர் நீங்களாகத்தான் இருக்கும்!//


  என்ன செய்ய வாத்தியரே பின்சிலெ பழுத்து விட்டேனே, நானும் வாழ்க்கையை தேடி ஓடி கொண்டிருக்கிறேன்.....


  :-))

  ReplyDelete
 19. குருவே,

  பொரியல், அவியல் எல்லாம் உண்டுதான் இல்லையா?

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 20. /////gonzalez said...
  i have 10 th lord sun in 7th house along with 7th lord venus and rahu. i am afraid of rahu .
  what will happen if rahu with sun 10th lord. i am viruchiga lagna./////

  இன்னும் மூன்று பகுதிகள் வர உள்ளன. அவற்ரையும் படித்துவிட்டுப் பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள். இப்போது சற்றுப் பொறுமையாக இருங்கள்.

  ReplyDelete
 21. கோவை விமல்(vimal) said...
  //SP.VR. SUBBIAH said...
  /////கோவை விமல்(vimal) said...
  3 பதிவிற்காக காத்திருக்கிறேன், முதல் பதிவில் மீ த 8'த் மாணவன்..:-))///
  எப்போது வந்தாலும் வகுப்பில் குறைந்த வயதுக்காரர் நீங்களாகத்தான் இருக்கும்!//
  என்ன செய்ய வாத்தியரே பின்சிலெ பழுத்து விட்டேனே, நானும் வாழ்க்கையை தேடி ஓடி கொண்டிருக்கிறேன்.....
  :-))

  ஏன் இப்போது இருக்கும் வாழ்க்கை என்ன ஆயிற்று? புதிதாக எதைத் தேடுகிறீர்கள்? ஒரு இணையைத் தானே? அவள் வரும்போதுதான் வருவாள்.

  பின்சிலெ = பிஞ்சிலே
  ++++++++++++++++++

  ReplyDelete
 22. /////Rajagopal said...
  குருவே,
  பொரியல், அவியல் எல்லாம் உண்டுதான் இல்லையா?
  அன்புடன்
  இராசகோபால்///

  பொரியல், கூட்டு, அவியல், துவையல், வறுவல் எல்லாமும் உண்டு!
  முழுச் சாப்பாடு! (சாப்பிட்ட பிறகு எழ முடியாமல்
  சிரமப்படுபவர்களைத் தூக்கிவிட ஆளும் உண்டு)

  ReplyDelete
 23. Thanks for your writing. Its easy to understand. Going through the blog which Dr.B recommended.

  -Shankar

  ReplyDelete
 24. //இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின்
  தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்//

  கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷம் 10 இடம்! 10ம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய்!

  செவ்வாய் லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் மேற்கண்ட பலன் பொருந்துமா?

  (அதான் இப்பவே நமக்கு தளபதி பட்டமா?)

  ReplyDelete
 25. நம்ம வகுப்பில் இன்னொரு மாணவரையும் அழைத்து வந்திருக்கிறேன்!

  நான் தொடர்ந்து படிப்பதைப் பார்த்துவிட்டு அவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ளா உடனடியாக ஜாதகம் கணிக்கும் மென்பொருளில் (தளம்) சென்று தனது ஜாதகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, பரல்கள் கணக்கிடும் முறை வரை படித்துக் கொண்டார்.

  பழைய பாடங்கள் ஒவ்வொன்றாகப் படிக்கவும் தொடங்கியுள்ளார்!

  சீக்கிரமே வகுப்பில் அட்டெண்டன்சும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
 26. /////hotcat said...

  Thanks for your writing. Its easy to understand. Going through the blog which Dr.B recommended.
  -Shankar/////

  Thanks Mr Shankar for your comment!

  ReplyDelete
 27. //////நாமக்கல் சிபி said...

  //இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின்
  தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்//
  கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேஷம் 10 இடம்! 10ம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய்!
  செவ்வாய் லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் மேற்கண்ட பலன் பொருந்துமா?
  (அதான் இப்பவே நமக்கு தளபதி பட்டமா?)////

  ஆகா பொருந்தும்! 10ஆம் இடத்தில் உள்ள பரல்கள், செவ்வாய் வந்த அமர்ந்துள்ள இடத்தில் உள்ள பரல்கள் மற்றும் செவ்வாய்
  & கர்மகாரகன் சனி ஆகியோர் சுய வர்க்கத்தில் பெற்றுள்ள பரல்களை வைத்து பலன்கள் உண்டாகும்.

  ReplyDelete
 28. /////நாமக்கல் சிபி said...
  நம்ம வகுப்பில் இன்னொரு மாணவரையும் அழைத்து வந்திருக்கிறேன்!
  நான் தொடர்ந்து படிப்பதைப் பார்த்துவிட்டு அவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொள்ளா உடனடியாக ஜாதகம் கணிக்கும் மென்பொருளில் (தளம்) சென்று தனது ஜாதகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, பரல்கள் கணக்கிடும் முறை வரை படித்துக் கொண்டார்.
  பழைய பாடங்கள் ஒவ்வொன்றாகப் படிக்கவும் தொடங்கியுள்ளார்!
  சீக்கிரமே வகுப்பில் அட்டெண்டன்சும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்!///

  நன்றி! எல்லாவற்றையும் சொல்லிக்கொடுங்கள் - கலாய்க்கும் வித்தையைத்தவிர!:-)))

  ReplyDelete
 29. //கலாய்க்கும் வித்தையைத்தவிர//

  அதை நீங்களே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறீர்களா?

  அதுவும் சரிதான்!

  ReplyDelete
 30. ஹலோ வாத்தியாரய்யா,

  //நான் மிகவும் எளிமையாகத்தான் எழுதுகிறேன். அதனால் அனைவருக்கும் புரியும். கவலை வேண்டாம் சகோதரி!//

  நீங்க என்னமோ ரொம்ப எளிமையாத் தான் சொல்றீங்க, ஆனா என் மண்டைக்குள்ள தான் ஏறத் தடுமாறுது.
  இந்த பாடம் கொஞ்சம் ஈசியாத் தான் இருக்கும் போல இருக்கிறது.
  அதாவது 10ம் வீட்டு lord சனியானால் எனக்கு அது ல.இருந்து
  4ம் வீட்டில் இருக்கிறது, ஆனா //வசதியான வீட்டையும், வாகனங்
  களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும்
  சிறப்புடையவர்களாக இந்த
  அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்திவாய்ந்ததாகவும்பயனுள்ளதாகவும் இருக்கும்.// இது எதுவுமே எனக்கு பொருந்தற மாதிரி தெரியலையே....
  ஒருவேளை மிச்சமும் படித்து விட்டு பார்த்தால் புரியுமோ?

  ReplyDelete
 31. /////Sumathi. said...
  ஹலோ வாத்தியாரய்யா,
  //நான் மிகவும் எளிமையாகத்தான் எழுதுகிறேன். அதனால் அனைவருக்கும் புரியும். கவலை வேண்டாம் சகோதரி!//
  நீங்க என்னமோ ரொம்ப எளிமையாத் தான் சொல்றீங்க, ஆனா என் மண்டைக்குள்ள தான் ஏறத் தடுமாறுது.
  இந்த பாடம் கொஞ்சம் ஈசியாத் தான் இருக்கும் போல இருக்கிறது.
  அதாவது 10ம் வீட்டு lord சனியானால் எனக்கு அது ல.இருந்து
  4ம் வீட்டில் இருக்கிறது, ஆனா //வசதியான வீட்டையும், வாகனங்
  களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும்
  சிறப்புடையவர்களாக இந்த
  அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்திவாய்ந்ததாகவும்பயனுள்ளதாகவும் இருக்கும்.// இது எதுவுமே எனக்கு பொருந்தற மாதிரி தெரியலையே....
  ஒருவேளை மிச்சமும் படித்து விட்டு பார்த்தால் புரியுமோ?////

  ஆமாம் சகோதரி இன்னும் 4 பகுதிகள் உள்ளன. அவற்றையும் படித்துவிட்டுப் பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்!

  ReplyDelete
 32. நன்றி ஐயா! தொழில் ஸ்தானத்துக்கான காரகன் யார்? சனி போன்ற தீய கிரகங்கள் பத்தாம் அதிபதியாக இருந்தால் பலன் எப்படி?

  ReplyDelete
 33. /////தங்ஸ் said...
  நன்றி ஐயா! தொழில் ஸ்தானத்துக்கான காரகன் யார்? சனி போன்ற தீய கிரகங்கள் பத்தாம் அதிபதியாக இருந்தால் பலன் எப்படி?////

  தொழில் மற்றும் ஆயுள் ஸ்தானங்களுக்கு சனிஷ்வரன்தான் காரகன் (authority)
  சனியை எப்படித் தீயவன் என்கிறீர்கள்?
  சனி நல்லவர்களுக்கு நல்லவன், தீயவர்களுக்குத் தீயவன்
  சனி மாதிரிக் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை!
  சனி உழைப்பவர்களுக்குக் கை கொடுப்பான். சோம்பேறிகளுக்குக் காலைக் காட்டுவான்.
  சனி தன் சுயவர்கத்தில் 6ம் அதற்கு மேலும் பரல்கள் உள்ளவர்களை, அவர்கள் வகிக்கும் பதவிகளில் உச்சத்திற்குக் கொண்டுபோய் விட்டு விடுவான். பெரிய பதவியில் இருப்பவர்களின் ஜாதகங்களில் எல்லாம் சனி தன் சுயவர்க்கத்தில் அதிகப் பரல்களுடன் இருப்பான்.

  ReplyDelete
 34. விரிவான விளக்கத்திற்கு நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com