மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதி
=========================================================
ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதி

முந்தைய பகுதிகள் இங்கே!

-----------------------------------------------------------------------------------------
ஒருநாள் அரண்மனையில் நடந்த அதிரடி நிகழ்வில், ஆசிரியர், மன்னரின்
ஆதீதகோபத்திற்கு ஆளாக, கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள
சிறைக்குப்போகும்படி ஆகிவிட்டது என்று முன் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அப்படி என்ன நடந்தது?

அரசசபையில் ஒரு விவாதம் நடந்தது. பிறப்பிற்கு, நாளையும் நட்சத்திரத்தையும்
அடையாளப் படுத்திவைக்கிறோம், இறப்பிற்குத் திதியை மட்டுமே அடையாளப்
படுத்தி வைக்கிறோம். இறப்பிற்கும் ஏன் நட்சத்திரத்தைப் பிரதானப்படுத்து
வதில்லை. இதுதான் மன்னரின் கேள்வி. அதை வைத்து விவாதம் நடந்து
கொண்டிருந்ததது.

அதாவது இன்று 28.4.2008 சர்வதாரி ஆண்டு சித்திரை மாதம் 16ஆம் தேதி
திங்கட்கிழமை உத்திராடம் நட்சத்திரம் என்றுதான் இன்று பிறக்கும் ஒரு குழந்தை
யின் பிறப்பு முன்னிறுத்தப்படும். அதே நேரம் இன்று இறக்கும் ஒருவரை சித்திரை
பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் மரணமானவர் என்று
தான் சொல்வார்கள்.

கொண்டாடுவதற்கும், ஜாதகம் கணிப்பதற்கும், வாழ்க்கைப் பலாபலன்களுக்கும்
நட்சத்திரம் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் மரணத்திற்கும், மரணத்தை நினைவு
கூர்ந்து இறந்தவருக்கு உரிய சடங்குகளைச் செய்வதற்கும் திதிதான் பிரதானமாக
எடுத்துக்கொள்ளப்படும். அதுதான் வழக்கத்தில் உள்ளது.

நட்சத்திரங்கள் 27தான். ஆனால் திதி 30. (Thithi is the distance between Sun and
Moon in transit. when both are in the same degree, it is Amaavasai and if both
are exactly in the opposite side it is called as Full Moon Day or Pournami)

திதியைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கிப் பாருங்கள்

இதுபற்றி நமது த்ரைவேதி வாத்தியார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கம்
சொல்லியும், காதில் சரியாக வாங்கிக் கொள்ளாத மன்னன், ”ஏன் நட்சத்திரத்தை
எடுத்துக்கொண்டால் என்ன தப்பு?” என்று கேட்க, எரிச்சலுக்கும் கோபத்திற்கும்
உள்ளான வாத்தியார்,மன்னனை நோக்கிச் சட்டென்று,” போடா முட்டாள்!” என்று
கூறி அனைவரையும் திகைக்க வைத்துவிட்டார். அதோடு படு வேகமாக எழுந்து
அரசசபையை விட்டு வெளியேறியும் விட்டார்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத மன்னரும், திகைத்து நிற்க, முதன் மந்திரிதான்,
பேச்சைத்துவக்கி, சபையின் இறுக்கத்தைக் குறைத்தார். அதோடு போட்டும் கொடுத்தார்.

“அரசே, அவர் என்னதான் அரசவைக் குருவாக இருந்தாலும், உங்களை, முட்டாள்
என்று சொன்னது மாபெரும் தவறு. அவரை அப்படியே விடுதல் ஒரு மோசமான
முன்னுதாரணமாகிவிடும். அவரை நீங்கள் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”

அதன்படி அரசரும் உத்தரவு இட, சேனாதிபதி, தன்னுடைய வீரர்களுடன் சென்று,
நமது வாத்தியாரைப் பிடித்து, விசாரனை ஏதுமின்றி, நேரடியாக பாதாள சிறையில்
போட்டுவிட்டார்கள்.

பாதாளசிறை என்பது கொடிய குற்றங்களுக்கான சிறை. நகரின் எல்லையில் ஒரு
மலையடிவாரத்தில் அது இருந்தது. உள்ளே உள்ளவர்களை வெளியில் இருக்கும்
யாரும் சென்று பார்க்க முடியாது. பூமிக்கடியில் உள்ள குகைகள் போன்ற அறைகளில்,
கைதிகள் தங்க வைக்கப்படுவார்கள். காலையில் ஒரு மணி நேரம் அனைவரும்
மலையடிவாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரைக்குக் கூட்டிக் கொண்டு வரப்
படுவார்கள், காலைக்கடன்கள், சிரமபரிகாரங்கள் முடிந்தபின், உணவளிக்கப்பட்டு,
குகைக்குள் அனுப்பப்பட்டு விடுவார்கள். அதுபோல மாலை ஒருமுறையும் அவர்கள்
வெளிக்காற்றைச் சுவாசிக்கலாம். உள்ளே சென்றவன் வெளியே வந்ததாகச்
சரித்திரம் இல்லை. ஆட்சியோ இல்லை. மன்னனோ மாறினால் ஒரு வாய்ப்பு உண்டு.
அவ்வளவுதான்

உள்ளே சென்ற நமது வாத்தியார் நொந்து நூலாகி விட்டார். ஒவ்வொரு தினமும்,
இரண்டுமுறை குளித்து சந்தியாவந்தனம் செய்து சூரிய நமஸ்காரம், பூஜை எல்லாம்
செய்பவர் ஒன்றையும் செய்யும் மனமில்லா நிலைக்குத் தள்ளப்பட்டார். குகையில்
கிரிமினல்களோடு, கிரிமினல்களாகப் படுத்துக்கொள்ள வேண்டுமென்றால் எப்படி
இருக்கும். அதிகமாக சொல்ல விரும்பவில்லை. நீங்களே கற்பனை செய்து
கொள்ளுங்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. 90 நாட்கள் ஆயிற்று.

தொன்னூற்றொன்றாம் நாள் அதிகாலை, எழுந்து அமர்ந்ததும், வாத்தியாரின் கண்களில்
எதிரே தெரிந்த நபர், பலத்த ஒளி, மற்றும் ஒலியுடன் தன்னை வெளிப்படுத்திக்
கொண்டதோடு, பேசவும் துவங்கினார்.

அவர் யாரென்று சொல்லவும் வேண்டுமா? நமது சனீஸ்வரன்தான் அவர்!

“குருவே, என்ன மிகவும் நொந்து போய்விட்டீர்களா?” என்று சனீஸ்வரன் கேட்கவும்,
குருவின் கண்கள் பேசத்திரானியின்றி, கலங்கியிருந்தன!

“கவலைப்படாதீர்கள், எல்லாம் இன்னும் இரண்டு நாழிகை நேரத்திற்குள் சரியாகிவிடும்.
அன்று நடந்த விவாதத்தில், உங்கள் நாக்கில் நுழைந்து, மன்னனை முட்டாள் என்று
அடியேன்தான் உங்களைச் சொல்ல வைத்தேன். இந்தத் துயரான நிலையும் அதனால்
உங்களுக்கு ஏற்பட்டது. அஷ்டமச் சனியாக 30 மாதங்கள் உங்களைப் பிடித்துக்
துயரங்களைக் கொடுக்க வேண்டிய நான். உங்களுக்களித்த வாக்கின்படி அதை
மூன்று மதங்களுக்குச் சுருக்கியதால்தான் இந்தப் பாதாளச் சிறை வாழ்வு. இப்போது
மன்னரின் முன் தோன்றி நான் அதைச் சரி பண்ணிவிடுகிறேன். பழையபடி உங்கள்
வாழ்க்கை முன்போல கெளரவத்தோடும் புகழோடும் இருக்கும்.மீண்டும் வேறு ஒரு
சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிய சனீஸ்வரன் ஆசிரியரின்
கைகளைப் பிடித்துக் குலுக்கி வணங்கிவிட்டு மறைந்தார்.

அந்த ஷணமே மன்னரின் எதிரில் தோன்றி, நடந்ததை மன்னனுக்கு விளக்கி,
ஆசிரியருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததோடு, மன்னருக்குக் காட்சி கொடுத்
தமையால் ஆசிரியரின் செல்வாக்கு அரண்மனையில் மேலும் ஒருபடி உயரவும் வழி
வகுத்துவிட்டுப் போனார் சனீஸ்வரன்
---------------------------------------------------------------------------------------------------
கதை அவ்வளவுதான்.

இந்தக் கதையின் நீதிக்கு வருவோம். அதைச் சொல்வதற்குத்தானே
இத்தனை Build Up கொடுத்து, Suspense கொடுத்துக் கதையை உங்களுக்குச்
சொல்லியிருக்கிறேன்,

நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.

சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?

விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power!

அதற்கும் ஒரு நீண்ட கதை இருக்கிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதைச்
சொல்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------
வள்ளுவப் பெருந்தகையார் தன்னுடைய குறுகத்தெரித்த குறளில் கூறியுள்ள
வற்றில் இது சம்பந்தப்பட்ட இரண்டு குறள்களை உங்கள் பார்வைக்காகக்
கீழே கொடுத்துள்ளேன்

ஊழ் = விதி = விதிக்கப்பட்டது = Destiny

1.
“பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக்கடை”
----------குறள் எண் 372 - ஊழ்' அதிகாரம்

பொருள் போவதற்குக் காரணமான தீய ஊழ் வந்துற்ற போது
(ஒருவன் எவ்வளவு பேரறிஞனாகயிருந்தாலும் அவனை அது)
பேதையாக்கும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான
நல்ல ஊழ் வந்துற்ற போது (ஒருவன் எவ்வளவு பேதையாகயிருந்தாலும்
அவனை அது) பேரறிஞனாக்கும்.

2.
”நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு”
----------குறள் எண் 375 - ஊழ்' அதிகாரம்

செல்வத்தைத் தேடுவதற்கு, தீயஊழ் வந்துற்ற போது நல்லவை எல்லாம்
தீயவையாகிப் பயன்படாது போகும். நல்ல ஊழ் வந்துற்ற போது தீயவை
எல்லாம் நல்லவையகிப் பயன்படும்
-----------------------------------------------------------------------------------------
தொடர்ந்து ஐந்து இதழ்களாக வாசித்து மகிழ்ந்தும், பின்னூட்டம் இட்டும்
பாராட்டிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சனீஸ்வரனின் அருள்
கிடைக்கட்டும்

(நிறைவுற்றது)

அன்புடன்
சுப்பையா வாத்தியார்

54 comments:

Anonymous said...

அருமையான நிறைவுப் பகுதி. இறைவன் துணையுடன் இடரைக் களைந்த மார்க்கண்டேயன் கதை நினைவுக்கு வருகின்றது.

அன்புடன்
இராசகோபால்

Anonymous said...

Anbu Aiyya,
Naan Indre vaasiththu vittennakkum. Kathaiyum karuthum arumai.
Regards,
Sara,
CMB

Anonymous said...

Solla Maranthu Vitten. Vinayagar padamum arumai.
Sara,
CMB

Srinivasan said...

ஐயா,

தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா பகுதிகளையும் படித்து வந்தேன். மிகவும் நன்று.
உங்கள் முயற்சிக்கும் நேரத்திற்கும் பாராட்டுக்கள். மேலும், இதுபோன்ற சுவையான தகவல்களை தரவும்.
ஆமாம், விநாயகர் படம் கொடுத்துளீர்களே, இனிவரும் பதிவிற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா..?

ஸ்ரீநிவாசன்

SP.VR. SUBBIAH said...

/////Anonymous said..
அருமையான நிறைவுப் பகுதி. இறைவன் துணையுடன் இடரைக் களைந்த மார்க்கண்டேயன் கதை நினைவுக்கு வருகின்றது.
அன்புடன்
இராசகோபால்///////

பாராட்டிற்கு மிக்க நன்றி மிஸ்டர் இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

///////Anonymous said...
Anbu Aiyya,
Naan Indre vaasiththu vittennakkum. Kathaiyum karuthum arumai.
Regards,
Sara,
CMB//////

வாருங்கள் சரவணன். உங்களுக்கு கதை மிகவும் பிடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை!
எனக்கும் ஒரு நல்ல கதையைச் சொன்னோம் என்ற மனத்திருப்தி ஏற்படுகிறது!

SP.VR. SUBBIAH said...

///////Anonymous said...
Solla Maranthu Vitten. Vinayagar padamum arumai.
Sara,
CMB/////

உங்களைப் போன்ற அன்பர்களுக்காகத்தான் அந்தப்படம்!
சித்ததைத் தெளிவு படுத்தும் சித்தி விநாயகர் அவர்!

SP.VR. SUBBIAH said...

///////Srinivasan said...
ஐயா,
தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா பகுதிகளையும் படித்து வந்தேன். மிகவும் நன்று.
உங்கள் முயற்சிக்கும் நேரத்திற்கும் பாராட்டுக்கள். மேலும், இதுபோன்ற சுவையான தகவல்களை தரவும்.
ஆமாம், விநாயகர் படம் கொடுத்துளீர்களே, இனிவரும் பதிவிற்கும் இதற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா..?
ஸ்ரீநிவாசன்//////

இனிவரும் ஆக்கங்களும் சுவையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்குத்தான் அவர் படத்தைப் போட்டுள்ளேன்!:-))))

Anonymous said...

I read all the parts. Excellent. I learnt a lot. You are an excellent teacher.So many interesting info. Thank you.

Ramya

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said...
I read all the parts. Excellent. I learnt a lot. You are an excellent teacher.So many interesting info. Thank you.
Ramya////

உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

திவா said...

இதுவரை கேள்விபடாத அருமையான கதை.நன்றி.
//அதற்கும் ஒரு நீண்ட கதை இருக்கிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதைச் சொல்கிறேன்.//
விதியை மதியால் வென்ற சாவித்திரியா?

Anonymous said...

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் எனும் கால காலமாக பூலோகத்தில் நடந்து வரும் உண்மையை ஒரு அருமையான கதையாக தந்தற்கு என் பராட்டுக்கள்.

அடுத்த நீதிக் கதைக்கு காத்திருக்கிறேன்

SP.VR. SUBBIAH said...

///////திவா said...
இதுவரை கேள்விபடாத அருமையான கதை.நன்றி.
//அதற்கும் ஒரு நீண்ட கதை இருக்கிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதைச் சொல்கிறேன்.//
விதியை மதியால் வென்ற சாவித்திரியா?////

இல்லை அன்பரே, அது வேறு ஒரு கதை, நடந்த கதை!

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said...
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் எனும் கால காலமாக பூலோகத்தில் நடந்து வரும் உண்மையை ஒரு அருமையான கதையாக தந்தற்கு என் பராட்டுக்கள்.
அடுத்த நீதிக் கதைக்கு காத்திருக்கிறேன்/////

பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் அனானி!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தொடர்ந்து ஐந்து இதழ்களாக வாசித்து மகிழ்ந்தும், பின்னூட்டம் இட்டும் பாராட்டிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சனீஸ்வரனின் அருள் கிடைக்கட்டும்.//

வாத்தியாரே.. நான் அஞ்சு பாகத்தையும் முழுசா படிச்சேன். அஞ்சுக்கும் கமெண்ட்டும் போட்டுட்டேன்.. இது பாராட்டா அல்லாட்டி சாபமா?

SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//தொடர்ந்து ஐந்து இதழ்களாக வாசித்து மகிழ்ந்தும், பின்னூட்டம் இட்டும் பாராட்டிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சனீஸ்வரனின் அருள் கிடைக்கட்டும்.//
வாத்தியாரே.. நான் அஞ்சு பாகத்தையும் முழுசா படிச்சேன். அஞ்சுக்கும் கமெண்ட்டும் போட்டுட்டேன்.. இது பாராட்டா அல்லாட்டி சாபமா?////

கதையினால் அறியப்படும் நீதியை அறிந்தீரா இல்லையா? அது பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீரே உண்மைத்தமிழரே?

நான் மகர ராசிக்காரன். சனீஸ்வரன் எனக்கு உற்ற தோழன். அதனால்தான் அவனை வேண்டிக்கொண்டேன் - என் பதிவிற்கு வந்து செல்லும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் அவன் துன்பத்தில் கை கொடுத்து உதவுவான். இது வரம்தான் என்று அறிக!

விக்னேஸ்வரன் said...

//விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.//

விதி கடவுளால் விதிக்கப்பட்டது என்றால் பிறகு ஏன் நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டிக்கிறார். அவரால் விதிக்கப்பட்டதை தானே செய்தோம்...??

கதயின் படிப்பினை சூப்பர் ஐயா.. நன்றி.

Sumathi. said...

வாத்தியாரய்யா,

ஆஹா, அருமை போங்க. கதை நிஜமாவெ நல்லாத்தான் இருக்கு.
இதே மாதிரி இன்னும் நல்ல கதைகல நீங்க குடுக்கலாமே.எங்களுக்கும் தெரிஞ்சௌக்க இது ஒரு வாய்ப்பு இல்லையா.

Sumathi. said...

சார்,

நீங்க இதே மாதிரி சனீஸ்வரோனோட அஷ்டம சனியப் பத்தியும் விரிவா சொல்லுங்களேன்.என்னொட ஒரு வேண்டுகோள்.

SP.VR. SUBBIAH said...

///////விக்னேஸ்வரன் said...
//விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.//
விதி கடவுளால் விதிக்கப்பட்டது என்றால் பிறகு ஏன் நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டிக்கிறார். அவரால் விதிக்கப்பட்டதை தானே செய்தோம்...??
கதயின் படிப்பினை சூப்பர் ஐயா.. நன்றி.//////

தவறுகள் என்பது விதிக்கப்பட்டதல்ல! அது நாமே செய்வதுதான். அதற்கு கடவுள் என்ன செய்வார்?

SP.VR. SUBBIAH said...

///////Sumathi. said...
வாத்தியாரய்யா,
ஆஹா, அருமை போங்க. கதை நிஜமாவே நல்லாத்தான் இருக்கு.
இதே மாதிரி இன்னும் நல்ல கதைகல நீங்க குடுக்கலாமே.எங்களுக்கும் தெரிஞ்சுக்க இது ஒரு வாய்ப்பு இல்லையா?////


கதை உங்களுக்கு மிகவும் பிடித்ததற்கு - அதை நீங்கள் வெளிப்படுத்தியதற்கு மிகவும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////////Sumathi. said...
சார்,
நீங்க இதே மாதிரி சனீஸ்வரோனோட அஷ்டம சனியப் பத்தியும் விரிவா சொல்லுங்களேன்.என்னொட ஒரு வேண்டுகோள்.////

கோச்சார சனியைப் பற்றி (Transit Satrun) தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன் சகோதரி. அதில் எல்லா விவரங்களும் வரும்!

கூடுதுறை said...

மிகவும் அற்புதமாக இருந்தது.

தங்களின் கோச்சரம் பற்றிய பாடத்தை எதிர்பார்த்து காத்து உள்ளேன்

Anonymous said...

//நான் மகர ராசிக்காரன். சனீஸ்வரன் எனக்கு உற்ற தோழன். அதனால்தான் அவனை வேண்டிக்கொண்டேன் - என் பதிவிற்கு வந்து செல்லும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் அவன் துன்பத்தில் கை கொடுத்து உதவுவான். இது வரம்தான் என்று அறிக!//

த்ரைவேதியின்(மன்னரின் ஆஸ்தான குரு-நமது த்ரைவேதி வாத்தியார்) லக்ணம் மகர லக்ணம் போல் தெரிகிறது.அதனால்தான் இந்த சலுகையோ?
மகர லக்ணத்திற்கு சனி பகவான் பூரண அருள் பாலிப்பார் என சோதிடக் கலை சார்ந்த புத்தகத்தில் படித்த ஞாபகம்.

SP.VR. SUBBIAH said...

/////////கூடுதுறை said...
மிகவும் அற்புதமாக இருந்தது.
தங்களின் கோச்சரம் பற்றிய பாடத்தை எதிர்பார்த்து காத்து உள்ளேன்/////

சற்று விரிவாக எழுதிப் பதிவிட வேண்டும். அடுத்த வாரம் செய்துவிடலாம் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said...
//நான் மகர ராசிக்காரன். சனீஸ்வரன் எனக்கு உற்ற தோழன். அதனால்தான் அவனை வேண்டிக்கொண்டேன் - என் பதிவிற்கு வந்து செல்லும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் அவன் துன்பத்தில் கை கொடுத்து உதவுவான். இது வரம்தான் என்று அறிக!//
த்ரைவேதியின்(மன்னரின் ஆஸ்தான குரு-நமது த்ரைவேதி வாத்தியார்) லக்ணம் மகர லக்ணம் போல் தெரிகிறது.அதனால்தான் இந்த சலுகையோ?
மகர லக்ணத்திற்கு சனி பகவான் பூரண அருள் பாலிப்பார் என சோதிடக் கலை சார்ந்த புத்தகத்தில் படித்த ஞாபகம்./////

மகர லக்கினம்/ராசி மட்டுமல்ல கும்ப லக்கினம்/ராசிக்கும் அவர் அதிபதி. அவர்களுக்கும் சனீஸ்வரனின் சலுகைகள் உண்டு. Ownership கணக்கில் அது வரும்!

Anonymous said...

//கேள்வி: நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் இந்து கடவுள்களை இழிவு படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக 'துக்ளக்' இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

பதில்: 'துக்ளக்' இதழுக்கு, இன்றைய 'தினமணி' இதழ் புகைப்படத்தோடு பொருத்தமான விடை அளித்திருக்கின்றதே?. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் நீலோத்பலாம்பாள் அம்மனுக்கு ரூ. 30 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட தேர் கடந்த 27ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்தியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மனுக்கு என தனியாக தேர் இல்லை என்றும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை புதிய தேர் கட்டுமானத் திருப்பணிக்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்தது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது மாத்திரமல்ல, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் தி.மு. கழக அரசின் சார்பில் 2190 திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு, குட முழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

திருக்கோயில்களில் திருப்பணி செய்வதற்காக ஆண்டுதோறும் அரசு வழங்கும் மானியத் தொகை ரூ. 75 லட்சமாக இருந்தது, மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

கிராம கோயில் பூசாரிகள் நலனுக்கென நல வாரியம் அமைக்கப்பட்டு, இதுவரை 15,000 பூசாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க 48 திருக்கோயில்களில் திருப்பணி செய்து குட முழுக்கு நடத்துவதற்காக புராதன சின்னங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9.87 கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டது.

240 திருக்கோயில்களுக்குச் சொந்தமான தேர்கள் புதுப்பிக்கப்படும் திட்டம் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் சார்பில் செய்யப்படுபவைகளில் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். நேற்றைய தினமணி நாளிதழில் வந்துள்ள மற்றுமோர் செய்தி- சிதம்பரம் அருகே ரூ. 13 லட்சம் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் மாரியம்மன் கோவில் கட்டி, நேற்றைய தினம் அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

இவற்றிலிருந்து துக்ளக் எழுதியிருப்பதைப் போல - இந்து கடவுள்கள் இழிவுபடுத்தச் சொல்லி நான் யாருக்கும் தைரியமளிக்கவில்லை என்பதையும் துக்ளக் ஆசிரியரைப் போல மறைமுகமாக யாரையும் தூண்டி விடவும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.//தமிழக முதல்வர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களின் சமீபத்திய கண்ணொட்டம் இந்து சமயம்/கடவுள்/ஆரதனைகள் பற்றி தங்கள் கருத்தை ஒரு தனி பதிவாக தந்திட்டால் ஆன்மீக சமுதாயம் உங்களை வாழ்த்தி வணங்கும்.

Anonymous said...

Dear Sir

I read all the parts of this episodes, Awesome and excellent efforts. I sincerely thank you for teaching good thoughts and lessons...

-Shankar

SP.VR. SUBBIAH said...

////தமிழக முதல்வர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களின் சமீபத்திய கண்ணொட்டம் இந்து சமயம்/கடவுள்/ஆராதனைகள் பற்றி தங்கள் கருத்தை ஒரு தனி பதிவாக தந்திட்டால் ஆன்மீக சமுதாயம் உங்களை வாழ்த்தி வணங்கும்.////


கலைஞர் அவர்கள் என் மதிப்பிற்குரிய தலைவர். அவருடைய தமிழ் அறிவிற்கும், புத்திசாலித்தனத்திற்கும் சாதுரியத்திற்கும் ஈடில்லை! அவரால் (அவருடைய நாத்திக வாதங்களைத்தவிர) எந்த விதத்துயரும் எந்த மதங்களுக்கும் இல்லை. அவருடைய வீட்டிலேயே சிலர் இறைபக்தர்கள். அவர்களுடைய சுதந்திரத்திலேயே
அவர் தலையிடுவதில்லை! அப்படியிருக்கும்போது வேறு என்ன சொல்ல இருக்கிறது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Anonymous said...
Dear Sir
I read all the parts of this episodes, Awesome and excellent efforts. I sincerely thank you for teaching good thoughts and lessons...
-Shankar//////

பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் சங்கர்!

சிவமுருகன் said...

அருமையான கதை! இதே போல் ஒரு முடிவு, ஸ்ரீரங்கன் கதையிலும் வரும், அதில் ஏழரை நாழிகை, இதில் மூன்று மாதம்! அது தான் மற்றம் மற்றபடி அல்லல் எல்லாம் இத்துனை இருக்கும்.

SP.VR. SUBBIAH said...

/////சிவமுருகன் said...
அருமையான கதை! இதே போல் ஒரு முடிவு, ஸ்ரீரங்கன் கதையிலும் வரும், அதில் ஏழரை நாழிகை, இதில் மூன்று மாதம்! அது தான் மற்றம் மற்றபடி அல்லல் எல்லாம் இத்துனை இருக்கும்.////

வாருங்கள் சிவமுருகன். கதையின் நீதியைச் சொல்வதற்காகத்தான் இத்தனை விவரமாக எழுத வேண்டியதிருந்தது. வள்ளுவர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?

ambi said...

ஐயா,

தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா பகுதிகளையும் படித்து வந்தேன்.

நிறைவு பகுதிக்கு பின்னூட்டம் இடாவிட்டால் நன்றி மறந்தவனாகி விடுவேன்.

எளிய வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் ஜோதிட சாஸ்த்திரத்தை தாங்கள் சொல்லி குடுக்கும் அழகே தனி தான்.

தங்கள் பாடங்களில் பரிகாரங்களையும் தொட்டு சென்றால், நம் வினைப்பயனின் தாக்கம் கொஞ்சம் குறையுமே?

SP.VR. SUBBIAH said...

ambi said...
ஐயா,
தங்களின் 'சனீஸ்வரன் படித்த பள்ளிகூடம்' எல்லா பகுதிகளையும் படித்து வந்தேன்.
நிறைவு பகுதிக்கு பின்னூட்டம் இடாவிட்டால் நன்றி மறந்தவனாகி விடுவேன்.
எளிய வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் ஜோதிட சாஸ்த்திரத்தை தாங்கள் சொல்லி குடுக்கும் அழகே தனி தான்.
தங்கள் பாடங்களில் பரிகாரங்களையும் தொட்டு சென்றால், நம் வினைப்பயனின் தாக்கம் கொஞ்சம் குறையுமே?////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
பரிகாரம் ஒரே வரிதான். பிராத்தனை செய்யுங்கள்.அவ்வளவுதான்

விக்னேஸ்வரன் said...

அப்படியென்றால் விதி என்பது எது??? நன்மை நடப்பது விதியால் என்றால் தீமையும் விதியால் தானே ஏற்படிகிறது.

SP.VR. SUBBIAH said...

//////அப்படியென்றால் விதி என்பது எது??? நன்மை நடப்பது விதியால் என்றால் தீமையும் விதியால் தானே ஏற்படிகிறது./////

ஒருவன் தன் மனைவியின் பேச்சைக் கேட்காமல் தன் தாயை நன்றாக வைத்துக் கொண்டால் அது நன்மை. இல்லை யென்றால் அது தீமை. இரண்டில் ஒன்றை அவன்தான் செய்யமுடியும்.

அப்படி அவன் செய்த பிறகு அவன் செயலைக் கணக்கிட்டு அவன் செய்தது பாவமா? அல்லது புண்ணியமா? என்று கணக்கிட்டு அவனுக்கு கணக்குத் தீர்ப்பது மட்டும்தான் விதி எனப்படும். இப்போது புறிகிறதா நண்பரே?


முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள்,
(பாவ, புண்ணியங்கள்) செய்தவனையே செய்தமுறைபடி சென்றடையும் இயற்கை ஒழுங்கு
தான் விதி!

நீங்கள் வேறெதையும் வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள்

Anonymous said...

Dear Sir
You are doing a great job!
Best wishes for keeping it up!

Uma

SP.VR. SUBBIAH said...

///////Anonymous said...
Dear Sir
You are doing a great job!
Best wishes for keeping it up!
Uma//////

உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

கிரி said...

சார் பின்னிட்டீங்க போங்க..

//விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம்//

100% உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன் :)

SP.VR. SUBBIAH said...

//////கிரி said...
சார் பின்னிட்டீங்க போங்க..
//விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம்//
100% உண்மை. அனுபவத்தில் சொல்கிறேன் :)/////

நானும் அனுபத்தை வைத்துத்தான் எழுதுகிறேன் நண்பரே!
அனுபவித்தறிந்தது பொய்க்காது அல்லவா?

தமிழ் பிரியன் said...

///நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.

சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?

விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power! //////
யாருடைய மறுப்புக்கும் இடமளிக்க இயலா சரியான வாசகங்கள்... 5 பகுதியும் மிக அருமை.... :)

தமிழ் பிரியன் said...

எண்கள் இடாததும் சேர்த்து 7 பகுதியும் சேர்த்து தான்... :)

SP.VR. SUBBIAH said...

//////தமிழ் பிரியன் said...
///நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.
சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?
விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power! //////

யாருடைய மறுப்புக்கும் இடமளிக்க இயலா சரியான வாசகங்கள்... 5 பகுதியும் மிக அருமை.... :)///

உண்மையைத்தான் எழுதியுள்ளேன் நண்பரே!
உண்மை உணரப்படும்போது சரியான தோற்றத்தை மட்டுமே கொடுக்கும்!

SP.VR. SUBBIAH said...

////தமிழ் பிரியன் said...
எண்கள் இடாததும் சேர்த்து 7 பகுதியும் சேர்த்து தான்... :)////

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Anonymous said...

বাংলা ગુજરાતી हिन्दी ಕನ್ನಡ മലയാളം मराठी नेपाली beta ਪੰਜਾਬੀ beta தமிழ் తెలుగు


Quillpad is simply the easiest way to type in Hindi. Just type in the panel below in roman letters to get the words in Hindi.

Your Name
gk
Your email address
(Please provide a valid email address)
To
(Please provide a valid list of email addresses)
Subject
vanakkam


அன்புள்ள ஆசிரியருக்கு..
வணக்கம்,
உங்கள் ஜோதிட வகுப்புகள் அனிதும் அருமை..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு.
அன்புடன்,
ஜுகே. பெங்களூரு .

SP.VR. SUBBIAH said...

////உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க பல்லாண்டு.
அன்புடன்,
ஜுகே. பெங்களூரு .///

வாழ்த்திற்கு நன்றி மிஸ்டர் ஜி.கே!

KC said...

Anbin annan,

I thoroughly enjoyed reading your articles. I would appreciate if you could write the effects of sanishwaran in 10th house of the birth chart (with explanations for the terms dignified, received, in sect, out of sect, in debility with affliction etc). Which school of thought is correct-when the task master-Saturn/Sani) is in the professional sector-10th house, will we be just late bloomers or always be uncomfortable/unsettled in profession invariable of age? Over all reading your astrology articles is quite understandable and you are a good teacher (it is coming from a teacher!)
Thanks for all,
KC

SP.VR. SUBBIAH said...

///////Anbin annan,
I thoroughly enjoyed reading your articles. I would appreciate if you could write the effects of sanishwaran in 10th house of the birth chart (with explanations for the terms dignified, received, in sect, out of sect, in debility with affliction etc). Which school of thought is correct-when the task master-Saturn/Sani) is in the professional sector-10th house, will we be just late bloomers or always be uncomfortable/unsettled in profession invariable of age? ////

I will write a detailed article about Saturn soon, as you have desired!

///////Over all reading your astrology articles is quite understandable and you are a good teacher (it is coming from a teacher!)
Thanks for all,
KC /////

Thanks for your comment as a teacher. I am very much happy to hear it. ( am not teacher by profession and I am a businessman!)

குமரன் (Kumaran) said...

வாத்தியார் ஐயா. இன்று தான் இந்தத் தொடர்கதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். மிகச் சுவையான கதை. மிக்க நன்றி.

Gobinath said...

sir,
i am ur student.
i have a question
how many type of sani?
like கண்டச்சனி,அஷ்டம சனி,ஏழரைச்சனி
please sir
அன்புடன்
Gopinath

SP.VR. SUBBIAH said...

////////Blogger குமரன் (Kumaran) said...
வாத்தியார் ஐயா. இன்று தான் இந்தத் தொடர்கதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். மிகச் சுவையான கதை. மிக்க நன்றி.////

நன்றி குமரன்!

SP.VR. SUBBIAH said...

Blogger Gobinath said...
sir,
i am ur student.
i have a question
how many type of sani?
like கண்டச்சனி,அஷ்டம சனி,ஏழரைச்சனி
please sir
அன்புடன்
Gopinath

சனி ஒருவரே! நீங்கள் குறிப்பிடுவது கோள்சாரத்தில் அவரின் நிலைப்பாடுகள். அதில் அஷ்டமச் சனி, ஏழரைச்சனி ஆகிய இரண்டு நிலைப்பாடுகளே முக்கியமானது. மற்றவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்!

hellomydear said...

ஐய்யா ,

தாங்கள் செய்யும் சேவை மேகவும் செம்மை. தாங்கிகள் வகுப்புக்கு நான் மிகவும் புதியவன் அல்ல. என் மனைவியின் உந்துதல் மூலம் நான் ஒரு பக்தநாகிவிட்டேன், தங்கள் வகுப்பிற்கு. என்னுடைய வணக்கங்களை தயவுடன் கூர்ந்து ஏற்றுக்கொளவும்.

அன்புடன்
விஜயன்

lrk said...

விதி விதிக்கப்பட்டது . அனுபவித்து ஆகவேண்டும் என்ற கருத்தை சனீஸ்வர பகவான் மூலம் தெரிந்து கொண்டேன் .நன்றி ஐயா .