மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

12.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4

========================================================

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 4

முந்தைய பகுதிகள் இங்கே!
-------------------------------------------------------------------------
கதையில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள்.
இப்போது முதல் க்ளைமாக்ஸ் காட்சி!
---------------------------------------------------------------------------
சனீஸ்வரன் எல்லாப் பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார்

ஆர்வமும், முயற்சியும், தன்முனைப்பும், ஈடுபாடும் இருந்தால் எதுதான் வராது?

அதுவும் கற்க வந்தது சாதாரண மனிதப் பிறவியா? அல்ல!
வந்தது சனி பகவான். ஆகவே அவர் ஜஸ்ட் லைக் தட் என்னும்படியாக
அனைத்திலும் தேறினார். எடுத்த மதிப்பெண்கள் அனைத்துப் பேப்பர்களிலும்
100/100

ஒரு வெள்ளிக்கிழமை காலை நேரத்தில், தலைமை ஆசிரியர், சனீஸ்வரனை
அழைத்து, ”இன்றுடன் உன்னுடைய பள்ளி வாழ்க்கை முடிகிறது. வேதங்களில்
நீ என் அளவிற்கு விஷய ஞானமுள்ளவனாக ஆகிவிட்டாய்.

ஒருவன் தான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் அறியத் தர வேண்டும்
ஆகவே, இங்கே கற்றுக் கொண்டவைகளை, நேரம் கிடைக்கும்போது அல்லது
நேரம் வரும்போது, மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பாயாக!

நீ நாளை அதிகாலையில் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லலாம்” என்று சொன்னார்

அத்துடன், அந்த அற்புத மாணவனைப் பாராட்டும் விதமாக, ஒரு Fairwell
பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். குருகுலத்தில் இருந்த அத்தனை பேரும்
அதில் கலந்து கொண்டு, ‘அரவிந்தசாமி' வடிவத்தில் இருந்த சனி பகவானைப்
பாராட்டி மகிழ்ந்தார்கள்.
----------------------------------------------------------------------------------
சனிக்கிழமை அதிகாலை!

விடைபெறும் நேரம்!

சனி பகவான், தான் குறிபெடுத்திருந்த ஓலைச் சுவடிகளையெல்லாம்,
பள்ளி நூலகத்திற்கே பரிசாகக் கொடுத்து விட்டதால், ஒன்றையும் எடுத்துக்
கொள்ளவில்லை.

கல்லில் பதிந்த எழுத்துக்களாக வேதங்கள் எல்லாம் அவர் மனதில்
பதிந்துவிட்ட பிறகு ஓலைச் சுவடிகள் எதற்கு?

தலைமை ஆசிரியரின் அறை இருந்த அரங்கத்தின் வாயிலில் அனைவரும்
கூடி நிற்க, தன் இருகரங்களையும் கூப்பி அனைவரிடமும் விடை பெற்றார்

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

என்றும் இல்லாத வழக்கமாக, பெரிய வெள்ளித்தட்டு ஒன்றில் ஒரு செட்
வேட்டி, துண்டுடன், பழங்கள், வெற்றிலை, பாக்கு, வைத்து, தலைமை
ஆசிரியர், ஆசீர்வதித்து, பரிசாகக் கொடுக்க, சனீஸ்வர பகவான், அவர்
காலில் விழுந்து வணங்கி, அதைப் பெற்றுக் கொண்டார்.

அப்போது அவருடைய கண்கள் கலங்கிவிட்டன!

எப்போதுமே, அவருடைய கண்களைப் பார்த்தே, அதில் தெரியும் தீட்சண்யமான
பார்வையைப் பார்த்தே, மயங்கிப் பழகி விட்ட தலைமை, அதையும் பார்த்தார்.

பார்த்துத் திடுக்கிட்டதோடு, கேட்கவும் செய்தார்

”என்ன தம்பி, பிரிவு உன்னைக் கலங்க வைக்கிறதா?”

“இல்லை அய்யா, இதுவரை, ஒரு உண்மையை நான் உங்களிடம் மறைத்து
விட்டேன். அதைச் சொல்லாமல் போக என் மனம் மறுக்கிறது. ஆகவே
அதைச் சொல்லிவிட்டுச் செல்ல அனுமதி கொடுங்கள்”

“நானும் அதை எதிர் பார்த்தேன். முதலில் நீ சொல்லவந்ததைச் சொல்,
பிறகு நான், எதிர்பார்த்ததைச் சொல்கிறேன்” என்று தலைமை ஆசிரியர்
சொல்ல, சனீஸ்வரன் தொடர்ந்து பேசினார்.

“அய்யா, நான் அந்தணன் அல்ல!”

“அதை நான் அறிவேன்”

“நான் நாட்டார் இனத்துப் பையனும் அல்ல!”

“அதையும் நான் அறிவேன்”

“எப்படி அறீந்தீர்கள் அய்யா?” என்று சனீஸ்வரன் கேட்க, தலைமை ஆசிரியர்
சொன்ன பதிலைப் பதிவின் நீளம் கருதி சுருக்கமாகச் சொல்கிறேன்.

சனீஸ்வரன் அங்கே வந்து சேர்ந்தபோது அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை!
ஆனால் உதவி ஆசிரியர்களில் ஒருவர், சனீஸ்வரனைப் 'Born Genius' என்று
வர்ணித்துப் பாடம் நடுத்துவது வேஸ்ட் என்று புகார் செய்தபோதுதான் அவருக்குச்
சந்தேகம் வந்தது.

உடனே பரபரப்பாகி, அங்கே வரும்போது சனீஸ்வரன் கொண்டு வந்து கொடுத்திருந்த
ஆரம்பப் பள்ளிக்கூடச் சான்றை எடுத்துப் பார்த்தார். அது பனை ஓலையில்
எழுதப்பெற்றிருந்த சான்றிதழ்தான் என்றாலும், பளபளத்தது. அதைத்தன் விரல்களால்
மடக்கிப் பார்த்தார். மடக்க வரவில்லை. முனையில் சற்று ஒடித்துப் பார்த்தார் ஒடிக்கவும்
வரவில்லை. கத்தியை எடுத்துக் கீறிப் பார்த்தார். கீறல்கள் பதியவும் இல்லை.

அப்போதுதான் ஒரு முடிவிற்கு வந்தார். அது சாதாரணமாகப் பூமியில் விளையும்
பனை மரத்து ஓலையல்ல. சக்திவாய்ந்த வேறு இடத்தில், நமது கண்ணிற்கிற்குப்
புலப்படாத இடத்தில் விளைந்த ஓலையாக இருக்கக்கூடும், அதோடு இதைக்
கொண்டுவந்த மாணவனும் அதீத சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும் என்றும்
முடிவு கட்டினார். அவன் சொன்னாலன்றித் தன்னால் ஒன்றையும் கண்டுபிடிக்க
முடியாது என்றும் முடிவு செய்தார். அதோடு பொறுமையாக இருப்போம், போகும்
போது எப்படியும் தன்னைப் பற்றி அவன் சொல்லிவிட்டுத்தான் போவான் என்ற
நம்பிக்கையும் கொண்டிருந்தார். இதுதான் அவர் அறிந்திருந்ததின் சுருக்கம்

இப்போது ஆசிரியரின் முறை! அவர் கேட்டார்.

“தம்பி, நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.
ஆகவே சொல்!” என்றார்

உடனே சனி பகவான் சொன்னார்,”அய்யா, நான் யார் என்பதைச் சொன்னால்
நீங்கள் அதிர்ச்சியடைக்கூடும். ஆகவே அதிர்ச்சி ஏற்படாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.”

”நான் அதிர்ச்சியடைய மாட்டேன். எதுவாக இருந்தாலும், நீ தைரியமாகச் சொல்!”

உடனே சனீஸ்வரன் சொன்னார்.”அய்யா நான்தான் சனீஸ்வரன்!”

தலைமை, உடனே புன்னகைத்துவிட்டுச் சொன்னார்,”இதற்காவது நீ உண்மையான
சான்றைக் கொடுப்பாயா?”

அடுத்த நொடியில், சனிஸ்வரன் தன் உண்மையான உருவத்தைப் பத்து மடங்கு
பெரிதாக்கி, தன் காக வாகனத்துடன் அங்கே எழுந்தருளி, தலைமை ஆசிரியர்

உட்பட அனைவருக்கும் அற்புதமாகக் காட்சி கொடுத்தார்.


அத்தனை பேரும் பரவசத்தில் மெய்மறந்து போனார்கள்.

அதற்குப் பிறகு நடந்தது என்ன?

அது இதுவரை நடந்தது எல்லாவற்றையும் விடச் சுவையானது!

”நான் வணங்கும் சர்வேஸ்வரா! என்ன அற்புதம் இது? கர்மகாரகன் சனீஸ்வரனையே
என்னிடம் அனுப்பிப் பாடம் படிக்கவைத்து, எனக்கு பெருமை சேர்த்தது உன்
திருவிளையாடலா? அல்லது எதிரே நிற்கும் சனீஷ்வர பகவானின் திருவிளையாடலா?
அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை! உன் காட்சியாவது பல மெய்யடியார்களுக்குக்
கிடைத்திருக்கிறது! ஆனால் சனீஷ்வரனின் காட்சி யாருக்குக் கிடைத்திருக்கிறது?
நான் மிகவும் பாக்கியம் செய்தவன். அந்தப் பாக்கியத்தின் பலனையெல்லாம் இதோ
இங்கே காட்சி கொடுக்கும் சனீஷ்வரனுக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று பலத்த
குரலில் பலரும் கேட்கச் சொல்லிய, தலைமை ஆசிரியர் சனீஷ்வரனின் காலில்
விழுந்து வணங்க எத்தனித்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னுடைய பள்ளிக்கூட ‘அரவிந்தசாமி' உருவத்திற்கு
மாறிவிட்ட சனீஸ்வரன், ஆசிரியரைத் தடுத்து நிறுத்திவிட்டான்.

“அய்யா, இப்போது நீங்கள் என்னுடைய குரு. நான் உங்களுடைய சீடன். ஆகவே
நீங்கள் என் காலில் விழுந்து வணங்குவது முறையாகாது” என்று சொன்னான்.

தலைமை ஆசிரியர் மேலும் பரசவசமாகி, சீடனின் வார்த்தைகளில் தன்னை இழந்து
அப்படியே நம்முடைய அரவிந்தசாமியைக் கட்டி அனைத்துக் கொண்டார்.

ஆசிரியரின் உடம்பில் 10,000 watts மின்சரம் பாய்ந்தது போல் இருந்தது. அது
விஸ்வரூபக் காட்சிக்காக சனீஸ்வரன் தன்னுடைய Powerஐ Switch On செய்திருந்ததால்
ஏற்பட்டதாகும்.

அது இன்ப அதிர்வை மட்டுமே ஏற்படுத்தும். இப்போது அந்த அதிர்வால் ஆசிரியர்
மிகவும் மகிழ்ந்து போனார்.

அங்கே இருந்த சனீஷ்வரனின் தோழர்கள் அனைவரும், நடந்ததைப் பார்த்துப்
பிரமித்துப் போயிருந்தவர்கள், ஆசிரியரின் கணீர்க்குரலால், பிரமிப்பிலிருந்து
மீண்டதோடு, அனைவரும் கீழே விழுந்து நமது அரவிந்தசாமி சனீஷ்வரனை
வணங்கி மகிழ்ந்தார்கள்.

அந்த் நெகிழ்ச்சியான காட்சியில் இருந்து அனைவரையும் பழைய நிலைக்குக்
கொண்டுவரும் முகமாக சனீஸ்வரன் பேச ஆரம்பித்தார்.

“குருவே, உங்களுக்கு நான் தட்சணை (காணிக்கை) கொடுக்க விரும்புகிறேன்.
என்ன வேண்டும் கேளுங்கள்”

“எனக்கு ஒன்றும் வேண்டாம். பொருட்கள் மீது எனக்கு ஆசை இல்லை” என்று
தலைமை ஆசிரியர் தீர்க்கமாகச் சொன்னார்.

“பொருட்கள் வேண்டாம் என்றால் . வரமாக ஏதாவது கேளுங்கள்;தருகிறேன்!”
என்றார் சனீஷ்வரன்.

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம். நீ தானே ஆயுள்காரகன் அதனால்
ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்வதற்கு அருள் செய்துவிட்டுப்போ என்று
சொல்லியிருப்போம்.

சற்று யோசித்த ஆசிரியர், அருமையான வரம் ஒன்றைக் கேட்டார்.

அது என்ன வரம்? அவருக்கு அது கிடைத்ததா? கிடைத்த பிறகு என்ன நடந்தது?
என்பதெல்லாம் மீதிக் கதை! இதைப்போன்றே அதுவும் சுவாரசியமான கதை!
அதிலும் ஒரு சூப்பர் க்ளைமாக்ஸ் இருக்கிறது.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்!

(தொடரும்)

23 comments:

Subbiah Veerappan said...

அறிவிப்பு!

என் அலுவல்கள் காரணமாக வெளியூர் செல்கிறேன்.
அதனால் அடுத்த வகுப்பு 21.4.2008 திங்களன்று துவங்கும்!
அனைவரும் அதைக் கவனத்தில் கொள்வீராக!

Home work செய்யாமல் இருந்துவிடாதீர்கள்
(பின்னூட்டம் இடாமல் விட்டு விடாதீர்கள்).

நீங்கள் நன்றாகப் பின்னூட்டம் இட்டால்தான் அடுத்து வரும்
பதிவுகள் விறுவிறுப்பான நடையில் எழுதப்படும்!

இல்லையென்றால் டண்டனக்கா டக்காதான்!:-))))))))

அதாவது Cut & Paste பதிவுகளாக இருக்கும்!:-)))))

Anonymous said...

தயவு செய்து அடுத்த பதிவையும் பதிந்துவிடுங்கள் அய்யா.

21ம் தேதி வரை சஸ்பென்ஸ் தாங்காது சாமி

Partha said...

ஐயா,

பாடங்கள் கதையின் வடிவில் மிக அருமை. தமிழ் நடை பிரமாதம். 24ம் தேதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பார்த்தா.

Partha said...

ஐயா,

பாடங்கள் கதையின் வடிவில் மிக அருமை. தமிழ் நடை பிரமாதம். 24ம் தேதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பார்த்தா.

Subbiah Veerappan said...

/////scssundar said..
தயவு செய்து அடுத்த பதிவையும் பதிந்துவிடுங்கள் அய்யா.
21ம் தேதி வரை சஸ்பென்ஸ் தாங்காது சாமி////

என் சொந்த வேலைகளுக்கு நடுவே எழுதும் ஆர்வத்தில் இரண்டு நாட்களில் மொத்தம் 12 பக்கங்கள்
தட்டச்சு செய்து பதிவிட்டிருக்கிறேன் நண்பரே!

ஒரு சஸ்பென்சை உடைத்து விட்டேன். இரண்டாவது பகுதி 10 பக்கங்களுக்கு வரும். அதைத் தட்டச்சிப் பதிவிட தற்சமயம் நேரமில்லை. ஊருக்கு வேறு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கு கணினி, தமிழில் தட்டச்சும் வசதி இல்லை. ஆகவே நீங்கள் காத்திருப்பதைத்.....தவிர வேறு வழியில்லை! மன்னிக்கவும்

Subbiah Veerappan said...

/////Partha said..
ஐயா,
பாடங்கள் கதையின் வடிவில் மிக அருமை. தமிழ் நடை பிரமாதம். 24ம் தேதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பார்த்தா.////

பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Partha said...
ஐயா,
பாடங்கள் கதையின் வடிவில் மிக அருமை. தமிழ் நடை பிரமாதம். 24ம் தேதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பார்த்தா.////

உங்கள் காத்திருப்பு வீண்போகாது. சுவையான பதிவாக அதுவும் இருக்கும்!

VIKNESHWARAN ADAKKALAM said...

உள்ளேன் ஐயா...

Subbiah Veerappan said...

////P.A.விக்னேஷ்வரன் said...
உள்ளேன் ஐயா...////

எங்க ராசா, மூணு மாசமா வ்குப்புப் பக்கதிலேயே ஆளைக்காணோம்?

லீவு லெட்டர் கொடுக்கிற பழக்கமெல்லாம் கிடையாதா?

சரி, அதைப் பொறவு பேசிக்கிருவோம்! முதல்ல டிமிக்கி அடிச்ச பாடத்தையெல்லாம் படிச்சிட்டு வாங்க!

உண்மைத்தமிழன் said...

வாத்தியாரே.. குரு கேட்டது "உங்களைப் போனற ஒழுக்கமான, அடக்கமான சீடர்களை நீங்கள் பிடிக்கவே கூடாது" என்ற வரமா..?

ஏனெனில் என் கதையில் இது அப்படியே உல்டாவாகிவிட்டது. அதுதாதன் அழுத்தமாகச் சொல்கிறேன். எதுவாக இருந்தாலும் இன்றைக்கே சொல்லிவிட்டுப் போங்கள்..

21-வரையெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது.. சொல்லிட்டேன்..

Anonymous said...

குருவே!

நீங்க என்ன சொன்னாலும் என் தலையில் ஏறுதில்லையே!
இது சனி பகவானின் சாபமோ?

புள்ளிராஜா

Subbiah Veerappan said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
வாத்தியாரே.. குரு கேட்டது "உங்களைப் போனற ஒழுக்கமான, அடக்கமான சீடர்களை நீங்கள் பிடிக்கவே கூடாது" என்ற வரமா..?
ஏனெனில் என் கதையில் இது அப்படியே உல்டாவாகிவிட்டது. அதுதாதன் அழுத்தமாகச் சொல்கிறேன். எதுவாக இருந்தாலும் இன்றைக்கே சொல்லிவிட்டுப் போங்கள்..
21-வரையெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது.. சொல்லிட்டேன்../////

உங்களுக்காக ஒரு இடுகையை வலை ஏற்றி உள்ளேன். சென்று பாருங்கள்!

Subbiah Veerappan said...

/////pulliraajaa said...
குருவே!
நீங்க என்ன சொன்னாலும் என் தலையில் ஏறுதில்லையே!
இது சனி பகவானின் சாபமோ?
புள்ளிராஜா////

நமீதா மாதிரி கலையரசிகளையெல்லாம் மறந்து விட்டால் உங்களுக்கு எல்லாப் பாடங்களும் நன்கு புரியும்!

சனிபகவான் சாபமென்றால் கணினியில் பின்னூட்டமெல்லாம் போடுவதற்கு உங்களுக்கு நேரமிருக்காது. அலைய வைத்துக் கொண்டிருப்பார். எங்கே என்று கேட்காதீர்கள்:-)))))

திவாண்ணா said...

குரு- சிஷ்யன் உறவை அருமையாக சொல்லிவிட்டீர்கள். இது வரை கேட்டிராத கதை.
நன்றி!

Rajaraman said...

I am Searching words Just like this - diffrent words & Diffrent views really such a nice one sir

Subbiah Veerappan said...

////திவா said...
குரு- சிஷ்யன் உறவை அருமையாக சொல்லிவிட்டீர்கள். இது வரை கேட்டிராத கதை.
நன்றி!/////

பாரர்ட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Rajaraman said...
I am Searching words Just like this - diffrent words & Diffrent views really such a nice one sir////

Thank you Mr.Rajaraman

Anonymous said...

அய்யா கதை சுவாரஸ்மாக உள்ளது
முடிவை எதிர்நோக்கிறோம்!

Sumathi. said...

வாத்தியாரய்யா,

நிஜமாவெ எனக்கு இது புதுசா தான் இருக்கு.நான் இதுவரையில் கேட்காத ஒரு கதை.

ஆனாலும் இந்த முடிவுக்காக ஒரு வாரம் வரை காத்திருக்கனுமே?

சரி, அந்த குரு கேட்டது தன் ஆசிரம வகுப்பில படிக்கும் மாணவர்களை பிடித்து கஷ்டப் படுத்தக் கூடாது என்றோ? காத்திருக்க பொறுமையே இல்லைய்யா.

அகில் பூங்குன்றன் said...

கதை அருமையாக உள்ளது ஐயா,
இரண்டாவது முடிவையும் சீக்கிரம் தங்களது பணிகளுக்கு பின் இடவும்.

Subbiah Veerappan said...

//////// Anonymous said...
அய்யா கதை சுவாரஸ்மாக உள்ளது
முடிவை எதிர்நோக்கிறோம்!//////

இன்னும் இரண்டு பதிவுகள் உள்ளன!

Subbiah Veerappan said...

//////Sumathi. said...
வாத்தியாரய்யா,
நிஜமாவே எனக்கு இது புதுசா தான் இருக்கு.நான் இதுவரையில் கேட்காத ஒரு கதை.
ஆனாலும் இந்த முடிவுக்காக ஒரு வாரம் வரை காத்திருக்கனுமே?
சரி, அந்த குரு கேட்டது தன் ஆசிரம வகுப்பில படிக்கும் மாணவர்களை பிடித்து கஷ்டப்
படுத்தக் கூடாது என்றோ? காத்திருக்க பொறுமையே இல்லைய்யா./////

சஸ்பென்ஸ் கதைகள் எப்போதுமே சுவாரசியமாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் காத்து இருத்தலும் தவிர்க்க முடியாதது ஆகும்!

Subbiah Veerappan said...

///அகில் பூங்குன்றன் said...
கதை அருமையாக உள்ளது ஐயா,
இரண்டாவது முடிவையும் சீக்கிரம் தங்களது பணிகளுக்கு பின் இடவும்.////

வெள்ளிக் கிழமை பதிவிடுகிறேன் நண்பரே!