மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

12.4.08

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!

உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்!

முன் பதிவின் தொடர்ச்சிப் பதிவு இது: அதன் சுட்டி இங்கே!

அந்தப் பதிவைப் படித்துவிட்டு, இதைப் படிக்கவும்!
--------------------------------------------------------------------------
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே.. குரு கேட்டது "உங்களைப் போனற ஒழுக்கமான, அடக்கமான
சீடர்களை நீங்கள் பிடிக்கவே கூடாது" என்ற வரமா..?
ஏனெனில் என் கதையில் இது அப்படியே உல்டாவாகிவிட்டது. அதுதான்
அழுத்தமாகச் சொல்கிறேன்.
எதுவாக இருந்தாலும் இன்றைக்கே சொல்லிவிட்டுப் போங்கள்..
21-வரையெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது.. சொல்லிட்டேன்../////

உங்களைப் போலவே பலர், சார், 21ம் தேதிவரையெல்லாம் சஸ்பென்ஸ் தாங்காது,
விடையைச் சொல்லிவிட்டுபோங்கள் என்கிறார்கள்.

சரி நானும் பல (100க் கணக்கில்) சஸ்பென்ஸ் கதைளைப் படித்திருப்பதால் சஸ்பென்ஸில்
பிடிபட்டுவிடும் அவஸ்தை தெரியும் ஆகவே, விடையை மட்டும் சொல்லி விட்டுப் போகிறேன்.
மற்றது எதையும் கேட்காதீர்கள்!

முழுக்கதையையும் இப்போது சொல்ல முடியாது. மிகவும் நீளமானது.
மேலும், இப்போது தட்டச்ச நேரமில்லை!

தொடரைத் தொடர்வது எப்படி?
அது இன்னும் பத்துப் பக்கங்களுக்கு (A4 Size Paperல்) வரும்

ஆகவே இப்போது சஸ்பென்சை மட்டும் உடைத்துவிட்டுப் போகிறேன்.
மற்றவை நான் திரும்பி வந்த பிறகு.
-----------------------------------------------
விடை:

தலைமை ஆசிரியர் கேட்ட வரம் இதுதான்:

“என் ஜாதப்படி எனக்கு ஆயுள் 83 ஆண்டுகள். எனக்கு இப்போது 42 வயது
ஆகிறது. என் வாலிப வயதில் ஏழரை ஆண்டுச் சனியாக - அதுவும் மங்கு சனியாக
நீ வந்து என்னைப் பிடித்து ஆட்டியதால், எனக்குத் திருமண வாழ்க்கையே
இல்லாமல் போய்விட்டது. ஆனால் எனக்கு ஒரு நன்மையும் கிடைத்தது.
வருடம் 100 செல்வங்களுக்கு உயர் கல்வி போதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் இனி வரும் காலத்தில் எந்தவிதத் துயரமும் இன்றி இருக்க விரும்புகிறேன்.
ஆதலால் வருங்காலத்தில் எக்காரணம் கொண்டும் அல்லது எந்த நியதிப்படியும்
நீ வந்து என்னைப் பிடிக்கவே கூடாது. அதுதான் நான் விரும்பிக்கேட்கும் வரம்.
அதைத் தந்தருள்க சனீஸ்வரரே!”
-------------------------------------------------
சனி அதை வழங்கினாரா?இல்லையா?

ஆசிரியரின் வாழ்வில் நடந்தது என்ன?

இதுபோன்று இன்னும் சில சுவையான விஷயங்கள் உள்ளன!

அதையெல்லாம் இப்போது சுருக்காகச் சொல்லி ஒரு நல்ல நீதிக் கதையை நான்
சாகடிக்க விரும்பவில்லை உண்மைத்தமிழரே!

ஆகவே பொறுத்திருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

23 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

குரு கேட்ட வரம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.. சுத்த சுய நலமான கேள்வியாக அல்லவா இருக்கிறது..?

நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும் ஒன்று,

ஒருவனுக்கு மங்குச் சனி இருந்தால் கல்யாண யோகம் காலி என்பதை இதைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.

எனக்கும் இந்தச் சனிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் இதைப் படித்தவுடன் புரிந்து கொண்டேன்.

தகவலுக்கு நன்றிகள்..

எதையும் சுருக்காதீர்கள். விரிவாகவே ஆற, அமர திரும்பி வந்து கொடுங்கள்.

சுருக்கினீர்கள் என்றால் காரணங்கள் பலவற்றுக்கான வழிகளை ஆராயும் நம் வலைப்பதிவர்களின் பன்முகப்பார்வை தடைபடும்.

எனக்காக இவ்வளவு அவசரமாக ஓடி வந்து பதிவைப் போட்டதற்கு கோடி நமஸ்காரம் வாத்தியாரே..

nellai said...

உண்மைத்தமிழன் உதவியால் கதையின் சஸ்பென்ஸின் பாதி தெரிந்துள்ளது.ஆனால் ஒருவர் வாழ்வில் இரண்டாவது சுற்று சனி (பொங்கு சனி) மிக நல்ல வதிகளையும் வழங்களையும் தானே கொடுக்குமென என சோதிடடவல்லுனர்கள் சொல்லுவார்கள்.வேதத்தில் விற்பன்னரான நமது குருகுலத்தின் (Prime instructor & Principal) தலைவர் த்ரைவேதி' -( த்ரைவேதி' என்றால் மூன்று வேதங்களையும் கற்றவர் ) ஏன் இந்த வரம் கேட்டார் என ஆசிரியரி அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
--------------------------------
"புத்தாண்டு வாழ்த்துக்கள்"

திவா said...

ஸஸ்பென்ஸ் கதைகளின் சுவையே காத்திருப்பதில்தான் இருக்கிறது! இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே!

P.A.விக்னேஷ்வரன் said...

வந்துட்டேன் ஐயா...

மன்னிக்கனும் சார் லிவ் லெட்டர் டைப் பன்ன மறந்துட்டேன்... ஒகேய் சார்... எல்லாத்தையும் படிசிடேன்... பரிச்சை எப்போ சொல்லுங்க, ஒரு கை பாக்குறேன்.நானும் எவ்வளோ நாளு கடைசி பென்ச்சுல உக்காந்திருக்கறது...

Anonymous said...

Dear Sir

I read all the episodes of teacher and student today.Its interesting...keep rocking as usual!!

Its sad that astrology class got closed...waiting for next semester to enroll under this professor to finish pre-requisite course.

Thank you for your efforts.

-Shankar

சென்ஷி said...

//உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்! //

உள்ளேன் ஐயா. :)) (நானும்)

Anonymous said...

ஆயுள்காரகன் ஒவ்வொருவரின் வாழ்விலும் மங்கு, பொங்கு, கொல்லு என மும்முறை வந்து செல்பவர்தானே. இரண்டாவது முறை (பொங்கு) நல்லதையே அளிப்பவர் அல்லவா? அதையும் ஏன் தலைமை ஆசிரியர் வேண்டாம் எனக் கூறினார்?

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
குரு கேட்ட வரம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.. சுத்த சுய நலமான கேள்வியாக அல்லவா இருக்கிறது..?
நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் ஒன்று,
ஒருவனுக்கு மங்குச் சனி இருந்தால் கல்யாண யோகம் காலி என்பதை இதைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.
எனக்கும் இந்தச் சனிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் இதைப் படித்தவுடன் புரிந்து கொண்டேன்.
தகவலுக்கு நன்றிகள்..
எதையும் சுருக்காதீர்கள். விரிவாகவே ஆற, அமர திரும்பி வந்து கொடுங்கள்.
சுருக்கினீர்கள் என்றால் காரணங்கள் பலவற்றுக்கான வழிகளை ஆராயும் நம் வலைப்பதிவர்களின் பன்முகப்பார்வை தடைபடும்.
எனக்காக இவ்வளவு அவசரமாக ஓடி வந்து பதிவைப் போட்டதற்கு கோடி நமஸ்காரம் வாத்தியாரே../////

தலைமை ஆசிரியர் கல்விக்கென்றே தன்னை அர்பபணித்துக் கொண்டவர்
ஒருவர் தன்னை ஒன்றிற்கு அர்ப்பணித்துக்கொண்ட பிறகு, சுயநலம் அங்கே
எப்படித் தோன்றும் தமிழரே? இதற்குப் பதில் சொல்வீராக!

உமது தோழியின் பெயர் என்ன மிஸ் அவசரமா?

SP.VR. SUBBIAH said...

/////nellai said...
உண்மைத்தமிழன் உதவியால் கதையின் சஸ்பென்ஸின் பாதி தெரிந்துள்ளது.
ஆனால் ஒருவர் வாழ்வில் இரண்டாவது சுற்று சனி (பொங்கு சனி) மிக நல்ல
வதிகளையும் வழங்களையும் தானே கொடுக்குமென என சோதிடடவல்லுனர்கள்
சொல்லுவார்கள்.வேதத்தில் விற்பன்னரான நமது குருகுலத்தின்
(Prime instructor & Principal) தலைவர் த்ரைவேதி' -
( த்ரைவேதி' என்றால் மூன்று வேதங்களையும் கற்றவர் ) ஏன் இந்த வரம்
கேட்டார் என ஆசிரியர் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
--------------------------------
"புத்தாண்டு வாழ்த்துக்கள்"/////

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////திவா said...
ஸஸ்பென்ஸ் கதைகளின் சுவையே காத்திருப்பதில்தான் இருக்கிறது!
இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே!//////

தவறுதான்!
என்ன செய்வது?
தாய்ப்பாசம் போல இது மாணவர் பாசத்தினால் நடந்து விட்டது!
பொறுத்தருள்க!

SP.VR. SUBBIAH said...

/////////P.A.விக்னேஷ்வரன் said...
வந்துட்டேன் ஐயா...
மன்னிக்கனும் சார் லிவ் லெட்டர் டைப் பன்ன மறந்துட்டேன்... ஒகேய் சார்...
எல்லாத்தையும் படிசிடேன்... பரிச்சை எப்போ சொல்லுங்க, ஒரு கை பாக்குறேன்.
நானும் எவ்வளோ நாளு கடைசி பென்ச்சுல உக்காந்திருக்கறது...

கடைசி பென்ஞ்ஐ இல்லாமல் செய்துவிடவா?

SP.VR. SUBBIAH said...

///////Anonymous said...
Dear Sir
I read all the episodes of teacher and student today.Its interesting...keep rocking as usual!!
Its sad that astrology class got closed...waiting for next semester to enroll under this professor
to finish pre-requisite course.
Thank you for your efforts.
-Shankar//////

நன்றி நண்பரே - உங்கள் ஆர்வத்திற்கு!

SP.VR. SUBBIAH said...

///////சென்ஷி said...
//உண்மைத்தமிழர் எங்கிருந்தாலும் வகுப்பிற்கு வரவும்! //
உள்ளேன் ஐயா. :)) (நானும்)///////

நீர் அழைக்காமல் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் சென்ஷி!

Anonymous said...

I was reading your articles for a couple of weeks...its quite interesting and the way your narration,examples are awesome...
Tamilila type panna teriyavillai ...ungal adutha paguthikaga kathuirukiren......
...ippadiku,
--jothidaNewbie...

விக்னேஷ் said...

ஆஹா... நம்ம கிலாஸ விட்டே விரட்டுறங்கய்யா....

pulliraajaa said...

சாமி! எனக்கு நாலு கழுதை வயதாகிறது. இன்னுமா மங்கு சனி என்னை பிடிச்சு அலைக்குது?

புள்ளிராஜா

vimal said...

வாத்தியரே,
தன்னம்பிக்கையை நினைவுட்டியாதிர்க்கு நன்றி, இன்று முதல் கடைசி பெண்ச் முதல் மாணவனாய் பதில்களை கூறுவேன்.NSE Reliance Share'z போல மக்குலிருந்து புத்திசாலி ஆக உங்கள் வழிக்காட்டுத்துடன் செயல் படுவேன்.

உங்கள் வருகைகாக காத்திருக்கும் புத்திசாலி ஆக முயற்சிக்கும் மாணவன்,
விமல்

கதை அருமை, தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

vimal said...

இன்றாய தேதி 23, இன்னும் நீங்கள் வந்து சேரவில்லாய வாத்தியரே?

இப்படிக்கு,

உங்கள் தொடர்சிக்காக ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்கள் சங்கம்

SP.VR. SUBBIAH said...

///////Anonymous said...
I was reading your articles for a couple of weeks...its quite interesting and the way your narration,examples are awesome...
Tamilila type panna teriyavillai ...ungal adutha paguthikaga kathuirukiren......
...ippadiku,
--jothidaNewbie...//////

தமிழில் தட்டச்சத்தான் NHM Writer என்ற இலவச மென்பொருள் உள்ளதே, முயன்று பாருங்கள் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////////விக்னேஷ் said...
ஆஹா... நம்ம கிலாஸ விட்டே விரட்டுறங்கய்யா....//////

நீங்க முதல் பெஞ்சில வந்து உட்காருங்க யாரும் விரட்டமாட்டாங்க!

SP.VR. SUBBIAH said...

/////pulliraajaa said...
சாமி! எனக்கு நாலு கழுதை வயதாகிறது. இன்னுமா மங்கு சனி என்னை பிடிச்சு அலைக்குது?
புள்ளிராஜா/////

புள்ளிராஜாங்கிற பெயரை மாற்றிப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////////////vimal said...
வாத்தியரே,
தன்னம்பிக்கையை நினைவுட்டியாதிர்க்கு நன்றி, இன்று முதல் கடைசி பெண்ச் முதல் மாணவனாய் பதில்களை கூறுவேன்.NSE Reliance Share'z போல மக்குலிருந்து புத்திசாலி ஆக உங்கள் வழிக்காட்டுத்துடன் செயல் படுவேன்.
உங்கள் வருகைகாக காத்திருக்கும் புத்திசாலி ஆக முயற்சிக்கும் மாணவன்,
விமல்
கதை அருமை, தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்./////

உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////vimal said...
இன்றாய தேதி 23, இன்னும் நீங்கள் வந்து சேரவில்லையா வாத்தியரே?
இப்படிக்கு,
உங்கள் தொடர்சிக்காக ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்கள் சங்கம்/////

அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் எழுதிவிட்டேன் சாமி!
சங்கத்து ஆட்களைப் படிக்கச் சொல்லுங்கள்!