மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.4.08

ஜோதிடப் பாடத்திற்கொரு வணக்கம்!


------------------------------------------------------------------------------------------
ஜோதிடப் பாடத்திற்கொரு வணக்கம்!

ஜோதிடம் என்பது பலரையும் பிடித்து உள்ளே கொண்டு வரக்கூடிய கலையாகும்.
அதை ஒரளவு அறிந்தவர்களும் வருவார்கள், அதன் மேல் ஆர்வம் உள்ளவர்களும்
வருவார்கள்.அதைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் வருவார்கள்.அதன் மேல்
சுத்தமாக நம்பிக்கை இல்லாதவர்களும் வருவார்கள்.

இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அது பெரிய கடல்!

அதை முழுதாக அறிந்துணர்ந்தவர்கள் குறைவு!

என்னுடைய அறிவு லெவல் ஒரு பத்தாம் வகுப்பு அல்லது ப்ளஸ் டூ லெவலாக
இருக்கலாம். எனக்குச் சரியாக அளந்து சொல்லத் தெரியவில்லை.

அதில் முதுகலைப் பட்டதாரி, டாக்டரேட் லெவலில் எல்லாம் ஜாம்பவான்கள்
இருக்கிறார்கள்

எனக்குத் தெரிந்தவரை சொல்லிக் கொடுக்கலாம் என்றுதான் அதைத் துவங்கினேன்.

அடிப்படைப் பாடங்களை முன்பே நடத்தி விட்டேன்.

அது மட்டுமே 50 பாடங்கள். இப்போது 10 பாடங்களைப் புதிதாக நடத்தியுள்ளேன்

நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல!

எனக்குத் வேறு தொழில் உள்ளது!

மேல் நிலைப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பது மிகவும் சிரமம்.

அடைப்படைப் பாடங்களைப் படித்து முடித்தவர்களைப் பரிட்சை வைத்து தேர்வு
செய்து அவர்களுக்குத்தானே மேல் நிலைப் பாடங்களைச் சொல்லித் தர முடியும்?

அதெல்லாம் தம்மாத்துண்டு வலைப் பதிவில் எப்படி சாத்தியமாகும்?

இங்கே பதிவைப் படிப்பவர்களில் பல பேர்கள் அடைப்படையைத் தெரிந்து கொள்ள
வில்லை என்பது, எனக்கு வரும் பல மின்னஞ்சல் மூலமாகத் தெரிகிறது.

அதற்குப் பதில் எழுதி விளக்கம் சொல்வது முடியாத செயல்

அதோடு என் ஜாதகத்தைப் பார்த்துப் பதில் சொல்லுங்கள் என்று, வெறும் பிறந்த
தினத்தையும், நேரத்தையும் கொடுத்து உடன் ஐந்து அல்லது ஆறு கேள்விகளையும்
கேட்டுத் தினமும் நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. வந்துள்ளன.

அவற்றிற்கு ஜாதகங்களை நானே என்னிடம் உள்ள மென்பொருளில் கணித்து,
பின் அவற்றைப் பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ந்து, அவர்கள் கேட்டு எழுதியுள்ள
கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

சிலருக்குப் பதில் எழுதினேன்.

அதாவது பரவயில்லை சிலரது கேள்விகளைப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்

உதாரணம் கொடுத்துள்ளேன்

1. அய்யா, எனக்கு எப்பொழுதுமே தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையே
இருக்கிறது. என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் அப்படி ஏதாவது நடந்து விடுமா?

2. என் மனைவிக்கும் எனக்கும் தினமும் சண்டைதான். அவளை விவாகரத்து செய்து
விட்டு வேறு பெண்னைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன்.
என் ஜாதகத்தில் அதற்கு வழி இருக்கிறதா? தயவு செய்து பார்த்து உடனே
பதில் எழுதுங்கள்

3. எனக்குத் தற்சமயம் பார்த்துவரும் வேலை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
வேறு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? தயவு செய்து பார்த்து உடனே
பதில் எழுதுங்கள்.

இப்படித் தினமம் பல மின்னஞ்சல்கள் வந்தால் நான் என்ன செய்வது?
------------------------------------------------------------------------------------------------------
நேரமின்மை காரணமாக, அவற்றைப் pending வைத்தால் reminder மேல் reminder
வந்து குவிகிறது.

எல்லாவற்றிற்கும் பதில் எழுத எனக்கு இந்த ஜென்மம் பற்றாது!

இதை எத்தனையோ தடவை முன்பு பதிவில் எழுதினாலும், பலர் கேட்பதில்லை!

கடிதம் எழுதுபவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவருக்குப் பதில் சொன்னால்
போதும்!
---------------------------------------------------------------------------------------------------------

ஆகவே, ஜோதிட வகுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறேன்
---------------------------------------------------------------

வகுப்பறையில் வேறு பாடங்கள் நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை வந்து
படிக்கலாம். அது பற்றிய அறிவிப்பு தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடப்படும்
------------------------------------------------------------------------

அஞ்சல் வழிக் கல்வியில் 3ஆண்டு பாடத்திட்டங்களுடன் ஜோதிடம் சில பல்கலைக்
கழகங்களில் சொல்லித் தரப்படுகிறது. உங்களுக்காக அவற்றைப் பட்டியலிட்டுள்ளேன்

1.ஜோதிடப் பாடங்கள் குறித்த இந்தியக் கல்வித்துறையின் தளம்:

2. ஜோதிடப் பாடங்கள் குறித்து மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் தளம்

3. தி ஹிண்டு நாளிதழின் செய்தி

4. சென்னையில் ஜோதிட வகுப்புக்கள் நடைபெறும் இடம்

இணைய தளத்தில் தேடுங்கள் நிறையக் கிடைக்கும்

விருப்பம் உள்ளவர்களை அம்போ என்று விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்
மேற்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளேன்,

உண்மையில் விருப்பமுள்ளவர்கள் ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து
படியுங்கள்.

நீங்கள் ஜோதிடத்தை முழுதாக அறிய வாழ்த்துக்கள்!
------------------------------------------------------------------------------------------------------

ஒரு பொன்மொழி உண்டு:

ஆண்டவனே என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
என் நண்பர்களை மட்டும் நீ பார்த்துக்கொள்!

அதைச் சற்று மாற்றி நான் இப்படிச் சொல்ல விரும்புகிறேன்.

ஆண்டவனே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை
நான் பார்த்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை உள்ளவர்களை நீ பார்த்துக் கொள்!

நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்.

18 comments:

 1. konjsam leettaa vanthaa ippati kalluuriyaiyee izuththu muuti vittiingkaLE

  //ஆண்டவனே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை
  நான் பார்த்துக் கொள்கிறேன்.
  நம்பிக்கை உள்ளவர்களை நீ பார்த்துக் கொள்!//

  :-)))))))))))))))

  ReplyDelete
 2. அய்யா, இதுவரை கற்றதே ஒரு அடிப்படையை தந்திருக்கிறது. நீங்கள் தந்த கல்விக்கும், நேரத்துக்கும் நன்றி.

  //சிலரது கேள்விகளைப் பார்த்தால்// இப்படி எல்லாம் கேட்பார்களா! ஒரு முறை உங்களின் இதே போன்ற ஒரு பதிவில், "நீங்கள் சமையல் குறிப்பு சொல்லலாம், சமைத்தேவா தர முடியும்?" என்று ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன்... ரிபீட்டு.

  சோதிடம் பற்றி இதுவரை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!!!
  மாணவி.

  ReplyDelete
 3. I have appended the names of some reknowned astrologers for your use!

  1
  Express Star Teller (Astrologers - Chennai)
  Contact: BANERJEE
  Express Estates, No:4 Club House Road-600002. Phone: 044-28460517
  Email: starcs@starteller.com starcs@starteller.com
  2
  K P Stellar Astrological Research Instt (Astrologers - Chennai)
  Contact: HARIHARAN K
  769 Mount Rd-600002. Phone: 044-28526046
  Email: kpsari@md4.vsnl.net.in kpsari@md4.vsnl.net.in
  3
  Kadalangadi Astrological Indological Research Centre (Astrologers - Chennai)
  Contact: ARDHANAESWARAN
  38 Natesa Iyer St T Ngr-600017. Phone: 044-24343406
  4
  Shankuntala Devi (Astrologers - Bangalore)
  Contact: 105 7 Uls Rd-560042. Phone: 080-25321922
  5
  Raman Associates
  " Rajeswari ",
  # 28, Nehru Circle,
  Nagappa Street,
  Seshadripuram,
  Bangalore 560020, India.
  Phone: 91 - 80 - 23449229
  Telefax: 91 - 80 - 26682050
  E - mail horodept@ramanassociates.com
  6.
  Mr.N.K.Diwakaran
  Astrologer,
  Savithri Photo Shop Building (upstairs)
  Next to Hotoel Seetharam
  Kalingarayar Street, Ramnagar
  Coimbatore - 641 009

  ReplyDelete
 4. குருவே,

  மிக அருமையான தொடர் நிறுத்தப்படுவது சற்று வருத்தமே.
  மீன் பிடிக்க கற்றுத் தருபவரிடம் மீனையே பிடித்து தர சொல்பவர்களை என்னவென்று சொல்வது. தங்கள் பாடங்களுக்கும், வழி காட்டுதலுக்கும் நன்றி.

  இந்த நிறுத்தம் தற்காலிக நிறுத்தமாக இருக்கும் என நம்புகின்றோம்.

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 5. ஐயா,

  நீங்களும் (வெள்ளிக்கிழமை) ஜோதிட கேள்விபதில் தொடங்கலாம்.

  முதல் கேள்வி,

  எந்த கிரகத்தின் ஆதிக்கம் பதிவே கெதி என்ற ஆதிக்கத்தை ஒரு ஜாதகனுக்கு ஏற்படுத்துகிறது ?

  நான் சீரியஸ் ஆக கேட்கிறேன்.

  ReplyDelete
 6. //////திவா said...
  konjsam leettaa vanthaa ippati kalluuriyaiyee izuththu muuti vittiingkaLE
  //ஆண்டவனே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை
  நான் பார்த்துக் கொள்கிறேன்.
  நம்பிக்கை உள்ளவர்களை நீ பார்த்துக் கொள்!//
  :-)))))))))))))))/////

  ஆண்டவன் :-(((((((((
  ---------------------------------

  ReplyDelete
 7. ///////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said..
  அய்யா, இதுவரை கற்றதே ஒரு அடிப்படையை தந்திருக்கிறது. நீங்கள் தந்த கல்விக்கும், நேரத்துக்கும் நன்றி.

  //சிலரது கேள்விகளைப் பார்த்தால்// இப்படி எல்லாம் கேட்பார்களா! ஒரு முறை உங்களின் இதே போன்ற ஒரு பதிவில், "நீங்கள் சமையல் குறிப்பு சொல்லலாம், சமைத்தேவா தர முடியும்?" என்று ஒரு பின்னூட்டத்தில் சொன்னேன்... ரிபீட்டு.

  சோதிடம் பற்றி இதுவரை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி!!!
  மாணவி.///////

  புரிதலுக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 8. ///////Anonymous said...
  குருவே,
  மிக அருமையான தொடர் நிறுத்தப்படுவது சற்று வருத்தமே.
  மீன் பிடிக்க கற்றுத் தருபவரிடம் மீனையே பிடித்து தர சொல்பவர்களை என்னவென்று சொல்வது. தங்கள் பாடங்களுக்கும், வழி காட்டுதலுக்கும் நன்றி.
  இந்த நிறுத்தம் தற்காலிக நிறுத்தமாக இருக்கும் என நம்புகின்றோம்.
  அன்புடன்
  இராசகோபால்

  ஆமாம் தற்காலிகம்தான். உங்கள் அனைவரின் மனப்போக்கில் மாற்றம் வரட்டும். பின்னால் பார்த்துக் கொள்ளலாம். அப்போதும் பாடம் கிடையாது. ஆனால் ஜோதிடக் கட்டுரைகளை (collective and useful information in astrology) எழுதலாம் என்று உள்ளேன்.

  ReplyDelete
 9. //////கோவி.கண்ணன் said...
  ஐயா,
  நீங்களும் (வெள்ளிக்கிழமை) ஜோதிட கேள்வி பதில் தொடங்கலாம்.////

  எப்படியும் என்னைச் சிக்கலில் மாட்டிவிட நினைக்கும் உங்கள் நல்ல எண்ணத்திற்குப் பாராட்டுக்கள்

  ///////முதல் கேள்வி,
  எந்த கிரகத்தின் ஆதிக்கம் பதிவே கெதி என்ற ஆதிக்கத்தை ஒரு ஜாதகனுக்கு ஏற்படுத்துகிறது ?
  நான் சீரியஸ் ஆக கேட்கிறேன். /////

  இது நல்ல கேள்வி:

  பொதுவாக எதையாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு, அதுவே கதி என்று இருப்பதற்குக் காரணம்
  குரு, சனி, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய ஐந்து கிரகங்களில் ஒன்று பிறந்த ஜாதகத்தில் வக்கிரம்
  (Rotrogation) பெற்றிருக்கும்.

  சிலர் தங்கள் நிலைப் பாட்டில் படு தீவிரமாக இருப்பார்கள். உதாரணம் தீவிரவாதிகள்
  அவர்கள் ஜாதகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் வக்கிரமடைந்திருக்கும்

  இன்னும் ஒரு நல்ல உதாரணம் சொல்லட்டுமா?

  பின் லேடன்.

  அவனுடைய ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் வக்கிரம் பெற்றுள்ளன

  அவன் எதில் மிக்க தீவிரமாக உள்ளான் என்பது உலகத்திற்கே தெரியும்!

  ReplyDelete
 10. ஜோதிடப் பாடங்களை மின்நூலாக்கும் (PDF File) வசதியைக் கொடுத்துள்ளேன்.
  தேவையானவற்றை நீங்கள் மின்நூலாக்கிப் படிக்கலாம்.
  யாரும் அவற்றை மிஸ்யூஸ் செய்ய வேண்டாம்.
  நான் அவற்றைப் புத்தகமாக வெளியிட உள்ளேன்.
  அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்

  ReplyDelete
 11. அந்த மூணாவது கேள்வி கேட்டவர் பெயர் சரவணன் என்றிருந்ததா..?

  ஏதோ நான் எழுதியதைப் போல ஒரு பீலிங் வாத்தியாரே..

  இப்படி சட்டுன்னு கடையை சாத்திட்டீங்களே.. தெரியாத விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சிருந்தேன்.. போச்சு.. போச்சு..

  இதனைக் கண்டித்து வாத்தியாருக்கு பென்ஷனை கட் செய்யலாம்னு இருக்கேன்..

  வலையுலகில் பென்ஷன்னா பின்னூட்டம்ன்ற பேருன்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 12. உலகில் வாழும் மனிதர் யாவருக்கும் தனது வாழ்வின் எதிகாலம் பற்றி அறிய ஆவல் உள்ளதை நாடறியும்.இருந்தபோதிலும் அருமையாக அடிப்படை பாடங்கள் ஐம்பதை அரும் தமிழில் பாடம் எடுத்து
  சிறப்புகள் செய்திட்ட உங்களை எந்த அளவுக்கு தொந்திரவு செய்துள்ளார்கள் என்பது தங்கள் பதிவே சாட்சி.உங்கள் முடிவை மாணவர்கள் ஏற்கிறோம்.

  சித்திரை திருநாள் கொண்டாடும் தமிழர்
  சிந்தித்து செயல்பட சீர்மிகு
  பாடம்
  சிறப்புடன் வலைப்பூ வானில்
  உலாவரும்
  சிந்தனைமிகு அறிவுப் பெட்டகத்தை
  வரவேற்போம்

  ReplyDelete
 13. அன்புள்ளம் கொண்ட ஆசிரியரே, தங்கள் பாடங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட மாணவனாகிய எனக்கு உங்கள் அறிவிப்பு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. உங்கள் பாடங்களை எதிர்பார்த்தவண்ணம் உள்ளேன். உங்கள் அனுபவ முதிர்ச்சி பெற்ற பாடங்களை அறிவுப் பொக்கிஷமாகக் கருதுகிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 14. Dear sir,

  I am reader of ur astrology lessons. Thank you very much for ur efforts sir. Its sad to know that u r stopping astrology lessons.

  ReplyDelete
 15. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  அந்த மூணாவது கேள்வி கேட்டவர் பெயர் சரவணன் என்றிருந்ததா..?
  ஏதோ நான் எழுதியதைப் போல ஒரு பீலிங் வாத்தியாரே..//////

  அதில் அப்பனுடைய முத்திரை இல்லை! ஆகவே அதை எழுதியது நீங்களல்ல!

  ///////இப்படி சட்டுன்னு கடையை சாத்திட்டீங்களே.. தெரியாத விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சிருந்தேன்.. போச்சு.. போச்சு..
  இதனைக் கண்டித்து வாத்தியாருக்கு பென்ஷனை கட் செய்யலாம்னு இருக்கேன்..
  வலையுலகில் பென்ஷன்னா பின்னூட்டம்ன்ற பேருன்னு நினைக்கிறேன்..////

  உங்கள் மிரட்டலுக்குப் பயந்து மீண்டும் கதவைத் திறந்து விட்டேன்.:-)))))
  இன்றைய அறிவிப்பைப் பாருங்கள்!:

  ReplyDelete
 16. ////nellai said...
  உலகில் வாழும் மனிதர் யாவருக்கும் தனது வாழ்வின் எதிகாலம் பற்றி அறிய ஆவல் உள்ளதை நாடறியும்.இருந்தபோதிலும் அருமையாக அடிப்படை பாடங்கள் ஐம்பதை அரும் தமிழில் பாடம் எடுத்து
  சிறப்புகள் செய்திட்ட உங்களை எந்த அளவுக்கு தொந்திரவு செய்துள்ளார்கள் என்பது தங்கள் பதிவே சாட்சி.உங்கள் முடிவை மாணவர்கள் ஏற்கிறோம்.
  சித்திரை திருநாள் கொண்டாடும் தமிழர்
  சிந்தித்து செயல்பட சீர்மிகு
  பாடம்
  சிறப்புடன் வலைப்பூ வானில்
  உலாவரும்
  சிந்தனைமிகு அறிவுப் பெட்டகத்தை
  வரவேற்போம்////

  உண்மைத் தமிழரின் பின்னூட்டத்தைப் படிக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
 17. ///////ஞானா said...
  அன்புள்ளம் கொண்ட ஆசிரியரே, தங்கள் பாடங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட மாணவனாகிய எனக்கு உங்கள் அறிவிப்பு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. உங்கள் பாடங்களை எதிர்பார்த்தவண்ணம் உள்ளேன். உங்கள் அனுபவ முதிர்ச்சி பெற்ற பாடங்களை அறிவுப் பொக்கிஷமாகக் கருதுகிறேன்.
  நன்றி.////

  இல்லை! சில மாற்றங்களுடன் ஜோதிட வகுப்பு தொடரும் நண்பரே!

  ReplyDelete
 18. /////காயத்ரி said...
  Dear sir,
  I am reader of ur astrology lessons. Thank you very much for ur efforts sir. Its sad to know that u r stopping astrology lessons./////

  இல்லை, உங்களைப் போன்ற பல அன்பு உள்ளங்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து மீண்டும் ஜோதிட
  வகுப்பை நடத்த உள்ளேன். இன்றைய அறிவிப்பைப் பாருங்கள் சகோதரி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com