மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.2.07

தயிர்சாதமும் ஊறுகாயும்!

பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் உலகச் சுற்றுப்
பயணம் மேற்கொண்டார்.

பாங்காக், ஹாங்ஹாங் ஆகிய இடங்களைச்
சுற்றிப் பார்த்துவிட்டு ஜப்பானிற்குப் போய்ச்சேர்ந்தார்.

சைவ உணவு சாப்பிடுபவர் என்பதால் போகிற
இடங்களிலேல்லாம் உணவுப் பிரச்சினை தலை
தூக்கியது.

டோக்கியோவில் தான் தங்யிருந்த இடத்திலிருந்த
உணவு விடுதிக்குள் நுழைந்தவர், தனது மேஜைக்கு
வந்த பேரரிடம் கேட்ட முதல் கேள்வி,

"ஒயிட் ரைஸ் இருக்கா?"

அவர் சாதம் இருக்கிறது என்று சொன்னவுடன்,
இவர் மிகவும் குஷியாகி, "ஒரு பிளேட் சாதம்

கொண்டு வாருங்கள்!" என்று சொல்லிவிட்டு
அதீத கற்பனையில் மிதக்க ஆரம்பித்தார்.

அட்டா, ஒருவாரம் கழித்து இன்றுதான் சாதம்

இருக்கிறது என்று கேள்விப் படுகிறோம்.
அதோடு இரண்டு கப் தயிரையும் குழைத்துத்
தயிர்சாதமாக ஒரு அடி அடித்துவிட
வேண்டியதுதான் என்று முடிவு செய்தவர்,

Hand Luggage எனப்படும் கைப் பையிலிருந்து
மாங்காய் ஊறுகாய் பாட்டிலை எடுத்து
மேஜையில் வைத்துவிட்டுக் காத்திருந்தார்

பத்து நிமிடத்தில் சாதம் வந்துவிட்டது.

அடுத்துக்கேட்டார்,"தயிர் இருக்கிறதா?"

அந்த பேரருக்குச் சரியாக ஆங்கிலம் தெரியாது,

இவருக்கு ஜப்பான் மொழி தெரியாது.

அவர் முழிக்க, இவர் அழுத்திச் சொன்னார்,

"Please bring a cup of Curd or Buttermilk"

தயிர் அல்லது மோர் வேண்டுமென்றதை அரை

குறையாகப் புரிந்துகொண்ட அந்த பேரர்,
ஐந்து நிமிடத்தில் ஒரு சிறு Butter Paperல்
சுற்றிய வெண்ணெய் பொட்டலத்தைக்
கொண்டுவந்து நீட்டினார்.

இவருக்குப் புரிந்துவிட்டது, நாம் சொன்னதில்

பட்டர் என்னும் வார்த்தை மட்டும்தான்
இவனுக்குப் புரிந்திருக்கிறது,
ஆகவே கொஞ்சம் விளக்கமாகச் சொல்வோம்

என்று எண்ணியவர் அவ்ரிடம் சொன்னார்.

வெண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது, தயிரைக்

கடைந்துதானே நம்மூரில் வெண்ணெய்
எடுக்கிறோம், அதனால், வெண்ணெய்
பாக்கெட்டைக் அவனிடம் காட்டிச் சொன்னார்.

"இது எங்கிருந்து கிடைக்கிறதோ, அது வேண்டும்!"

அந்த பேரர் சற்றுக் குனிந்து, இவரிடம் பவ்விய

மாகச் சொன்னான்

"இது சூப்பர் மார்க்கெட்டிலிருந்து எங்களுக்குக்
கிடைக்கிறது!”

-----------------------------------------------------------------------------------
இலவச வரிவிளம்பரம்:

"வாழ நினைத்தால் வாழலாம்'
படிக்க இங்கே தட்டுங்கள்


10 comments:

  1. ///Mr. Shenshi Said: தல கதையோ :))///

    அட, எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
    ஜெய்சங்கர் போட்டுக் கொடுத்துவிட்டாரா?

    ReplyDelete
  2. எப்ப என்னுடன் பிரயாணம் செய்தீர்கள்?...இது எனக்கு நிகழும் அன்றாட நிகழ்வல்லவா?.....:-).

    நான் எந்த நாட்டிற்கு செல்வதானலும் இந்திய உணவகங்கள் தேடுவதற்கு முன் அருகில் எங்கு சைனீஸ் உணவகம் இருக்கென்று பார்ப்பேன், ஏனெனில் அங்கு சாதம் கிடைத்துவிடும்.....அதனை மட்டும் பார்சலாக எடுத்துக்கொண்டு ஸ்டோர்களில் கிடைக்கும் யொகார்டுடன் (உப்பின்காய் உதவியுடன்) முதல் சில நாட்களை கழித்துவிடுவேன்.....

    ReplyDelete
  3. ///மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: எப்ப என்னுடன் பிரயாணம் செய்தீர்கள்?...இது எனக்கு நிகழும் அன்றாட நிகழ்வல்லவா?.....:-).///

    இல்லை இது ஒரு பயணக்கட்டுரையில் படித்த செய்தி
    சுவாரசியமாக இருந்ததால் பதிவிட்டேன்

    ReplyDelete
  4. ஐயா வாத்தியார் அவர்களே

    //ஊருகாய் //
    மாங்காய் ஊருகாயா
    மாங்காய் ஊறுகாயா சரி?

    யாழ்ப்பாணத்தில் ஊறுகாய் என்றுதான் சொல்வோம். ஏனெனில் மாங்காய் வற்றல் பின்னர் கடுகு எண்ணெயிலோ(வேறு ஏது எண்ணை சிலர் பயன்படுத்தக் கூடும்) அல்லது எலுமிச்சம் புளியிலோ ஊறுவதால் அது ஊறுகாய் என்ற காரணப் பெயராக வருகிறது.

    ReplyDelete
  5. உறுகாய்தான் சரியான பெயர்
    ஊறியகாய் ஊறுகாய் வினையாகு பெயர்ச்சொல்
    ஊருகாய் என்று பதிவில் வந்தது
    தட்டச்சுப் பிழை : சரி செய்து விட்டேன்.
    நன்றி!

    ReplyDelete
  6. அதாவது எந்த 'ஊரு காயாக' இருந்தாலும் ஊறப் போட்டா 'ஊறுகாய்தான்' இல்லையா!

    :))

    ReplyDelete
  7. ///இலவசக் கொத்தனார் அவர்கள் சொல்லியது:
    அதாவது எந்த 'ஊரு காயாக' இருந்தாலும் ஊறப் போட்டா
    'ஊறுகாய்தான்' இல்லையா! :)) ///

    அடடா, அப்படியே என் நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள்:-))))

    ReplyDelete
  8. பாவம்....ரொம்ப நொந்து போய்ட்டாரோ??

    ReplyDelete
  9. Sir,
    There is a humble request from Junior Sakthi Ganesh (i.e. my daughter) to write more Jokes and Quiz, when time permits please do write sir,
    Thanks. Sakthi Ganesh.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com