மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.2.07

ஜோதிடம்பற்றிய தீர்ப்பு - பகுதி 2

ஜோதிடம் பற்றிய தீர்ப்பு - பகுதி 2
SP.VR.சுப்பையா

செய்தித்தாள்களுக்கும், வார, மாத இதழ்களுக்கும்
இல்லாத ஒரு சிறப்பான் வசதி, வலைப் பதிவர்களுக்கு
மட்டும் உண்டு.


பதிவு போட்ட பத்தாவ்து நிமிடமே வாசகர் கருத்தைத்
தெரிந்துகொண்டு விடலாம். 4 முதல் 6 மணி நேரத்திற்குள்
பலருடைய கருத்துக்களையும் தெரிந்துகொண்டு விடலாம்


நேற்றையப் பதிவிற்கு பல சகோதரர்களும், ஒரு சகோதரி
யும் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றி!

நண்பர் வெட்டிப்பயல் அவர்கள் சொன்னது:


//// இங்க வந்த தீர்ப்ப வெச்சி நீங்க செய்ய நினைத்த
காரியத்தை செய்யாமல் விடுவது சரியாக படவில்லை
ஐயா...தாங்கள் கற்று தெரிந்ததை மற்றவருக்கு சொல்லிக்
கொடுங்கள்... அல்லது வலையேற்றுங்கள். பின்னாளில்
கண்டிப்பாக பயன்படும். பல ஆண்டுகளாக சொல்லி
வந்த அரிசந்திரன் கதையால் ஒரு காந்திதான் உருவாகி
னார். ///


அரிசந்திரன் கதையால் ஒரு காந்திதான் உருவாகினார்
என்று சுட்டிக் காட்டிய வரிகள் அனைவரையும்
சிந்திக்கவைக்கும் வரிகள்.


அந்த வாசகம்தான் எனக்கு மனமாற்றத்தைக் கொடுத்தது!

அதற்காக அவருக்கு ஒரு விஷேச நன்றி!

கால்கரி சிவா அவர்களும், ராவணன் அவர்களும்
தங்களது கருத்தைச் சிறப்பாகச் சொல்லியிருந்தார்கள்
அதற்காக அவர்களுக்கும் ஒரு விஷேச நன்றி!
--------------------------------------------------------------------------------
நம்து நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும்
அறிவியலைச் சார்ந்த ஒப்பற்ற கலையாகச் ஜோதிடம்
கருதப் படுகிறது.


அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் ஜோதிடம் கல்வியாகக்
கற்றுத்தரப்படுகிறது.


நமக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரு சிறு வேறுபாடு.
நாம் சந்தரனைப் பிரதானமாக வைத்துப் பேசுவோம்.
அவர்கள் சூரியனைப் பிரதானமாக வைத்துப் பேசுவார்கள்


அதைப் பற்றியெல்லாம் பின் பதிவுகளில் விவரமாகச்
சொல்கிறேன்


ரஷ்யாவில் இருந்த பிரபல அறுவை சிகிச்சை மருத்துவர்
ஒருவர் ஜோதிடத்திலும் பட்டம் பெற்று பல அரிய செய்திகளை
மருத்துவ ஜோதிடத்தில் எழுதிவைத்தார்.


அவரைப் பற்றி 20 வருடங்களுக்கு முன்பு சோவியத் நாடு
என்னும் ரஷ்ய இதழில் (தமிழ்ப் பதிப்பு) வந்த கட்டுரை
ஒன்று என்னிடம் உள்ளது.

அதிலுள்ள பக்கம் ஒன்றை நகல் எடுத்து உங்கள்
பார்வைக்காக் இன்று பதிவிட்டுள்ளேன்.
------------------------------------------------------------------


-------------------------------------------------------------

அதேபோல சீரோ என்ற பிரபல் அமெரிக்க ஜோதிடரின்
படம் மற்றும் சிறு குறிப்பின் நகலையும் பிரதி எடுத்து

உங்கள் பார்வைக்காக் இன்று பதிவிட்டுள்ளேன்.

அவரைப் பற்றிய பல சுவையான செய்திகள் உள்ளன
அவற்றையும் வரும் பதிவுகளில் சொல்கிறேன்
---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆகவே, ஜோதிடம் என்பது இந்தியாவில் மட்டுமே
உள்ளது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள்
எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்
----------------------------------------------------------------------------------------------
அதுபோல இந்தியாவில் ஜோதிடத்திற்காக் அரும் பெரும்
சேவைகள் செய்து பல் அறிய சுவடிகளை மொழிமாற்றம்
செய்து புத்தகங்கள் வடிவில் பலர் கைகளிலும் தவழ விட்ட
பெங்களூர் திரு.V. ராமன் அவர்களையும் (அவர் இப்பொது
இல்லை - காலமாகிவிட்டார்) அனைவரும் அறிந்து கொள்ளல்
அவசியம்.
அவருடைய படத்தையும் பிரதி எடுத்து உங்கள்
பார்வைக்காக் இன்று பதிவிட்டுள்ளேன்.
-------------------------------------------------------------------


படத்தில் நடுவில் இருப்பவர் திரு. B.V. ராமன்
அவருக்கு வலதுபுறம் இருப்பவர் நிதியமைச்சர்
திரு.ப. சிதம்பரம், இடதுபுறம் இருப்பவர் அப்போதைய
கர்நாடக முதல்வர் திரு. J.H பட்டேல்
------------------------------------------

நீங்கள் எல்லாம் விரும்பியபடி, எனக்குத் தெரிந்த சுவையான
தகவல்களையும், ஜோதிடத்தின் - அதன் பிரம்மாண்டத்தின்
அரிய உண்மைகளையும், புள்ளி விவரங்களையும் எனது
மொழியில் (நடையில்) தொடர்ந்து பதிவிடுகிறேன்


அனைவரும் படித்து மகிழுங்கள்.

வேறு ஒரு பதிவில் கவியரசர் கண்னதாசன் அவர்களைப்
பற்றிய தொடர் எழுதுவதால் இந்த ஜோதிடப் பதிவு வாரம்
இரண்டு மூறை - நேரம் கிடைக்கும்போது எழுதிப் பதிகிறேன்.


ஒவ்வொரு முறையும் முன் பதிவிற்கு சுட்டியும் தருகிறேன்.
கட்டுரைகள் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதாக இருக்கும்.
ஆகவே தொடர்ச்சி விட்டுப்போகாமல் படிக்கும்படி அனை
வரையும் கேட்டுக் கொள்கிறேன்.


ஆர்வமுள்ளவர்கள் மட்டும் பதிவிற்குள் வரவும்.

மற்றவர்கள் உள்ளே வந்து உபத்திரவம் செய்யாமல்
இருந்தாலே போதும். அது எனக்குப் பேருதவியாக
இருக்கும்!:-))))

(நேற்று வந்த பின்னூட்டம் ஒன்றினால் இதை எழுதும்படி
ஆகிவிட்டது)


அன்புடன்,
SP.VR. சுப்பையா
(தொடரும்)

---------------------------------------------------------
படங்களின்மேல் கர்சரை வைத்துக் ' க்ளிக்' செய்தால்
படம் ஒரு புதிய window' வில் பெரியதாகத் தெரியும்
படித்துப் பார்க்க ஏதுவாக இருக்கும்!

(இது கணினி முறையாகக் கற்றரிந்திராதவர்களுக்கு
மட்டும்)

10 comments:

செல்லி said...

//இந்த ஜோதிடப் பதிவு வாரம்
இரண்டு மூறை - நேரம் கிடைக்கும்போது எழுதிப் பதிகிறேன்.//
நல்ல கட்டுரை இது.சோதிடத்தை நம்பாதவரை நம்பும் எம் போன்றோருக்காக எழுதுங்க சார்.
நன்றி

வடுவூர் குமார் said...

அந்த உபத்திரவ பின்னூட்டம் என்னோடதா?
:-)) இருக்காது என்ற நம்பிக்கைதான்.
ஆமாம் இந்த ஜோசியம் எப்படி ஆரம்பித்தது?இதிலும் இடைச்செருகல்கள் உண்டா?

வடுவூர் குமார் said...

சார் தலைப்பு போடவில்லையா?
அன்டைடில் என்று வருகிறதே!!

SP.VR. சுப்பையா said...

///செல்லி அவர்கள் சொல்லியது:
நல்ல கட்டுரை இது.சோதிடத்தை நம்பாதவரை நம்பும் எம் போன்றோருக்காக எழுதுங்க சார்.///

எழுதுவதென்று முடிவெடுத்துத்தான்
இன்றையப் பதிவை இட்டேன் ச்கோதரி!
நீங்களும் தொடர்ந்து படியுங்கள்!

SP.VR. சுப்பையா said...

///mr. vaduvuur kumaar said: இந்த ஜோசியம் எப்படி ஆரம்பித்தது?இதிலும் இடைச்செருகல்கள் உண்டா? ///

தோற்றுவித்தவர்கள் பற்றிக் குறிப்புகள் இல்லை.There is no information about the founder of Astrologt)
ஆனால் பங்களித்தவர்கள் (contributors) பற்றி நிறையச் செய்திகள் உள்ளன!

வெட்டிப்பயல் said...

ஐயா இதை படிச்சா ஜோதிடத்தின் மூலம் நம்மை யாரும் ஏமாற்றாதவாரும் தெரிந்து கொள்ளும் வகையில் சொல்லி தந்தால் மிக்க மகிழ்ச்சி...

என்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நீங்கள் இந்த பணியை தொடர்வது எனக்கு மகிழ்ச்சியே!!!

kekkE PikkuNi #25511630 said...

ஐயா, நீங்க எழுதுங்க, நான் படிப்பேன். எனக்குக் கட்டாயம் நம்பிக்கை உண்டு... நீங்க போன பதிவுல சொன்ன மாதிரி எனக்கும் சில (குறிப்பாக மலையாள) ஜோதிடர்கள் சொன்னது நிஜமாக நடந்திருக்கிறது. எல்லாருக்கும் பொதுவான வாழ்க்கை விதிமுறைகள் இருப்பதால், சிற்சில விதிப்படி சரியாகச் சொல்லக் கூடும் என்றே தோன்றுகிறது. அதே நாணயத்தின் மறு பக்கமாக, அந்த விதிகளைப் புரியாதவர்களும் தவறாகப் புரிந்து கொண்டவர்களும் ஜோதிடத்தில் தவறு இழைக்கக் கூடும்.

Cheiro பற்றிய நூலில் நான் படித்த வரை, ஜோதிடம் / கைரேகை சாத்திரம் எல்லாம் இந்தியாவிலிருந்து ஜிப்ஸிக்கள் வழியாக உலகளாவப் பரவியது என்று சொல்லியதாய் நினைவு. எனக்கு ஜோதிடம் அவ்வளவாகத் தெரியாது; கைரேகையில் சிறிது நம்பிக்கை உண்டு (மாற்றம் "கை" கூடும் என்பதினால்). உங்கள் தொடரைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

நான் சொன்னது என் சிற்றறிவுக்கு எட்டியது. தவறாயிருந்தால் மன்னிக்கவும் / சுட்டிக் காட்டவும்.

கெ.பி.

மா.கலை அரசன் said...

பயனுள்ள பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

S.Kumar said...

Only yesterday i happened to visit your classroom. Thank God you didnot stop writing. There might be a lot who trust astrology but only a few would have taken part in your polling. Praying to God for more energy and strength to continue your work & that no body's word should harm you or your writing.
S.Kumar,
Colombo

SP.VR. SUBBIAH said...

Thank you Mr.kumar!
Please go through all the posting!
It will be interesting for those who have belief in Astrology!