மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.2.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 5

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 5
By SP.VR.SUBBIAH

பஞ்சாங்கம் (Sub Title)



பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்கங்ளைக் கொண்டது

அந்த ஐந்து அங்கங்கள்:

1.வாரம், 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம், 5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள
ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி

வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள
தூரத்தைச் சொல்வதுதான் திதி
(The ditance between Sun and Moon is called as Thithi)

விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம்
செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்

1. சஷ்டி விரதம், ஏகாதேசி விரதம்

2. அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்
விரும்புவது தசமித் திதி

3. திருமணம், பதிவுத் திருமணம், இடம் வாங்குவது
போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி,
நவமித் திதியில் செய்வதில்லை.

4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான்
குறிப்பிடுவார்கள். ஒருவன் சித்திரை மாதம் வளர்பிறை
அஷ்டமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து

அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்

அதே சித்திரை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில்

தான் அவனுக்கு நினைவுச் சடங்களைச் செய்வார்கள்.

கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள்

இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள்
இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில்
பலவிதமாக உள்ளது


---------------------------------------------------------------

நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள
27. நட்சத்திரங்கள்.

நட்சத்திரங்கள்.ந்ட்சத்திரங்கள் என்பது வானவெளியில்
கிலோமீட்டர் கல்லைப்போன்று உள்ளன.சந்திரன்

செல்லும் பதையில் இன்றைய தினம் எந்தக் கல்

உள்ள்தோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம்.

இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது

(23.30 Hours, 26.2.2007, Monday) சந்திரன் இருக்கும்

ந்ட்சத்திரம் மிருகசீரிஷம்.

நாளை திருவாதிரை நட்சத்திரம். தினமும் சந்திரனின்

சுழற்சியில் அல்லது ஓட்டத்தில் ஒவ்வொரு

நட்சத்திரமாக வந்து கொண்டேயிருக்கும்


27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை

முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்

தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும்
சந்திரனைவைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும்,
அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிற்ந்த
ராசியும் மாறும்.
(27 Stars - divide by 12 Rasis or signs = 2.25 days)

நட்சத்திரங்கள் விவரம்

---------------------------------------------------------------------

இந்த 27 நட்சத்திரங்களையும் மனனம் செய்தே
ஆகவேண்டும். இல்லையென்றால் பின்னல் வருகிற
பாடங்கள் பிடிபடாமல் போய்விடும் அபாயம் உண்டு!
------------------------------------------
திதியில் பாதி கரணம்
--------------------------------------------
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து
சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக்
குறிப்பது யோகம்
---------------------------------------------
திதி & யோகங்களினால் என்ன பயன் என்பது பின்
வரும் பாடங்களில் வரும். இப்போது அவசியமில்லை!

----------------------------------------------------------
மருந்தின் அளவு (Dose) அதிகமானால் மாணவர்கள்
விடுப்பில் போய்விடும் அபாயம் உண்டு.
அதனால் இன்றையப் பாடம் இவ்வளவுதான்
பஞ்சாங்கத்தின் அடுத்த பகுதி நாளை!


(தொடரும்)
---------------------------------------------------------------


20 comments:

  1. இங்கே கூட சோதிடப்பாடம் உள்ளது.

    http://www.tamiloviam.com/html/jothidam.asp

    ReplyDelete
  2. ஆதாரமே சந்திரன் தானா?
    இத்தனை நாள் சூரியன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
    27 நட்சத்திரம் எழுதிவைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  3. ///ராவணன் அவர்கள் சொல்லியது:
    இங்கே கூட சோதிடப்பாடம் உள்ளது.//
    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  4. ///வடுவவூரார் அவர்கள் சொல்லியது: ஆதாரமே சந்திரன் தானா?
    இத்தனை நாள் சூரியன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
    27 நட்சத்திரம் எழுதிவைத்துக்கொண்டேன்////

    இந்திய ஜோதிடத்திற்கு அடிப்படை சந்திரன்தான்.
    ஆனால் மேற்கு திசை நாடுகள் சூரியனை ஆதாரமாகக் கொண்டுள்ளன (Sun Signs)

    ReplyDelete
  5. Excel Formatல் உள்ள தவல்களை பதிவில் ஏற்றுவது எப்படி என்று தெரிந்தவர்களைச் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்

    இன்றையப் பதிவில் உள்ள இரண்டு
    Excel Format தகவலகளைப் பாருங்கள்
    அவைகளை பதிவில் முதலில் வழக்கம்போல டெக்ஸ்டை ஒட்டுவதுபோல் ஒட்டினால் ஒட்டமறுத்துவிட்டன

    பிறகு அவற்றைப் பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்து போட்டோ கோப்பாக (BMP File)மாற்றி வலையில் ஏற்றினேன்!

    ReplyDelete
  6. பதிவிற்கு நன்றி வாத்தியாரே!

    பிரதமையை பாட்டியம்மை என்றும் சொல்வதுண்டு எங்கள் இல்லங்களில்.

    பிரதமையில் எந்த நல்லகாரியங்களையும் நாங்கள் ஆரம்பிப்பதில்லை. அதே போல அஷ்டமியும்.

    நவமியன்று, சூரியன் உதயத்திலிருந்து நவநாழிகை கழிந்துவிட்டால் பரவாயில்லை என்பார்கள்.

    ஆமாம் சந்திராஷ்டமத்தை எங்கு சொல்லப்போகிறீர்கள்?.

    ReplyDelete
  7. //பிறகு அவற்றைப் பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்து போட்டோ கோப்பாக (BMP File)மாற்றி வலையில் ஏற்றினேன்//

    மிக்க சிரத்தை எடுக்கிறீர்கள். நன்றி வாத்தியாரே..

    ReplyDelete
  8. ஐயா,
    அந்த பிரிண்ட் ஸ்கிரீன் முறையை செய்யலாமே?
    முடிந்தவரை உங்கள் பட்டியலை ஸ்கிரீன் அளவுகள் வைத்துக்கொள்ளவும்.
    உதவும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. //பிரதமையை பாட்டியம்மை என்றும் சொல்வதுண்டு எங்கள் இல்லங்களில்.

    பிரதமையில் எந்த நல்லகாரியங்களையும் நாங்கள் ஆரம்பிப்பதில்லை. அதே போல அஷ்டமியும்.

    நவமியன்று, சூரியன் உதயத்திலிருந்து நவநாழிகை கழிந்துவிட்டால் பரவாயில்லை என்பார்கள். //

    நீங்கள் சொல்லும் இரண்டுமே உண்மைதான். வழக்கதில் உள்ளது

    //சந்திராஷ்டமத்தை எங்கு சொல்லப்போகிறீர்கள்?.//

    சந்த்ராஷ்டமம் என்பது ஒருவருடைய ராசிக்க்கு எட்டாம் இடத்துல் Transit Moon இருக்கும் 2.25 நாட்களும் சந்திராஷ்டமம்தான்

    உதாரணத்திகு, உங்களுடைய ராசி மகரம் என்றால், மகம், பூரம் ந்ட்சத்திரங்கள் உடைய நாட்கள் (சிம்ம ராசியுல் சந்திரன் உலாவும் நாட்கள்) சந்திராஷ்டமம் ஆகும்

    அந்த நாட்களில் உங்களுக்குக் காரியத்தடைகள் ஏற்படலாம் என்பார்கள்

    ReplyDelete
  10. // வடுவூரார் சொல்லியது: அந்த பிரிண்ட் ஸ்கிரீன் முறையை செய்யலாமே?
    முடிந்தவரை உங்கள் பட்டியலை ஸ்கிரீன் அளவுகள் வைத்துக்கொள்ளவும்.
    உதவும் என்று நினைக்கிறேன். ///

    முயன்று பார்க்கிறேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    கண்ணை மூடி விழிக்கறதுக்குள்ள அஞ்சு ஜோதிட பதிவ போட்டுட்டிங்களே. இன்னும் கொஞ்ச தூரம் போனவுடன் நிறைய கேள்விகள் கேட்கலாமென்றிருக்கிறேன். பதில் சொல்வீர்கள் தானே?

    ReplyDelete
  12. // Excel Formatல் உள்ள தவல்களை பதிவில் ஏற்றுவது எப்படி என்று தெரிந்தவர்களைச் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன் //

    இப்படி முயன்று பாருங்களேன்:

    தேவையான cellsகளை select செய்து கொள்ளுங்கள்.

    அவற்றை copy (ctrl+c) செய்து கொள்ளுங்கள்.

    Microsoftஇன் Paintஐ திறவுங்கள் - இவ்வாறு:
    Start->Programs->Accessaries->Paint

    புதிய paint documentல் paste (ctrl+v) செய்யுங்கள்.

    Paintன் menuவில் Image->Attributesஐ தேர்வு செய்யுங்கள்.

    இதில் உள்ள Width, Heightஐ நீங்கள் ஒட்டியுள்ள படத்துக்கு சரியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, 150ம் 200ம் போட்டு ஓகே செய்யுங்கள்.

    அளவு சரியான பின், File->Save Asஐ தேர்வு செய்யுங்கள்.

    Save As Typeல் JPEGஐ தெரிவு செய்து, ஒரு பெயரையும் கொடுத்தால், அது bloggerல் upload செய்வதற்குத் தயாராகிவிடும்.

    குறிப்பு: Paintக்குப் பதிலாக நீங்கள் எந்த Graphics softwareஐயும் பயன்படுத்தலாம். எ/கா, Adobe Photoshop, MS Photodraw.

    வைசா

    ReplyDelete
  13. ///மடையன் அவர்கள் சொல்லியது: கண்ணை மூடி விழிக்கறதுக்குள்ள அஞ்சு ஜோதிட பதிவ போட்டுட்டிங்களே. இன்னும் கொஞ்ச தூரம் போனவுடன் நிறைய கேள்விகள் கேட்கலாமென்றிருக்கிறேன். பதில் சொல்வீர்கள் தானே?///

    பின்னே வாத்தியாருக்கு வேறு என்ன வேலை? நிச்சயம் சொல்வேன்

    ReplyDelete
  14. ///வைசா அவர்கள் சொல்லியது:இதில் உள்ள Width, Heightஐ நீங்கள் ஒட்டியுள்ள படத்துக்கு சரியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, 150ம் 200ம் போட்டு ஓகே செய்யுங்கள்.

    அளவு சரியான பின், File->Save Asஐ தேர்வு செய்யுங்கள்.//

    நன்றி நண்பரே! இன்று காலையில்
    வடுவூரார் அவர்களும் இதைத்தான் சொல்லியிருந்தார். இன்றைய படங்களில் உள்ள எக்செல் கட்டங்களெல்லாம் அந்த முறையில்தான் பதிவிட்டுள்ளேன்

    உங்கள் இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  15. பாடம் வேகமாகப் போகிறது, நான் 'மந்தன்'தான் :)
    நட்சத்திரங்களின் பெயர்கள் எனக்குத் தெரியும், ஆனால் வரிசைக் கிரமமாகத் தெரியாது. அது தேவை இல்லையா ?

    ஒரு கலைச் சொல் அகராதி இட்டால் அங்கும் இங்கும் அரைகுறையாகத் தெரிந்த சோதிடச் சொற்கள் முழுமையாக விளங்கும். நீங்களும் ஆங்கில,தமிழ் மற்றும் வடமொழி கலப்பில் புழங்கும் சொற்களை புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும். உதாரணமாக transit moon என்றால் என்ன ?

    ReplyDelete
  16. ///மணியன் அவர்கள் சொல்லியது: ஒரு கலைச் சொல்
    அகராதி இட்டால் அங்கும் இங்கும்
    அரைகுறையாகத் தெரிந்த சோதிடச் சொற்கள் முழுமையாக
    விளங்கும். நீங்களும் ஆங்கில,தமிழ் மற்றும் வடமொழி
    கலப்பில் புழங்கும் சொற்களை புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.
    உதாரணமாக transit moon என்றால் என்ன ? //

    என்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன். முக்கியமானவற்றை
    மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
    எழுதுவது பொழுதுபோக்கு மட்டுமே (ஆர்வக் கோளாறு)
    எனக்கு சொந்தத் தொழில் உள்ளது(பொருளீட்டல்)

    தட்டச்சு செய்வதற்குத்தான் நேரமில்லை!

    தமிழ் - ஆங்கில ஜோதிடச் சொற்களைத்
    தொகுத்து ஒரு தனிப் பதிவாகப் போட்டு விடுகிறேன்
    யோசனைக்கு நன்றி

    Transit Moon என்பது இன்றையத் தேதியில் உள்ள
    சந்திரனின் நிலைமை. அந்த டிரான்ஸிட் என்ற சொல்
    அத்தன் கிரகங்களுக்கும் பொருந்தும்

    உதாரணத்திற்கு ஒருவர் பிறந்தபோது சனி மேஷ ராசியில்
    இருந்தது என்றால் (அது இன்றைய தேதியில் கடக ராசியில்
    உள்ளது) அவர் அடுத்து வரும் சனியை எப்படி எதிர்கொள்வார்
    என்பது போன்ற விஷயங்களுக்கு இந்த டிரான்ஸிட் விஷயங்கள்
    முக்கியம் (கோச்சாரம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையைத்தான்
    அனைவரும் பயன் படுத்துகிறார்கள்)
    அதைப் பற்றிய விரிவான செய்திகள் பின் பதிவுகளில் வரும்!

    நட்சத்திரங்களை வரிசைப்படிதான்
    நினைவில் வைக்க வேண்டும்

    ReplyDelete
  17. //(கோச்சாரம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையைத்தான்
    அனைவரும் பயன் படுத்துகிறார்கள்)//

    Transitக்கு நல்ல விளக்கம். கோச்சாரம் என்பது முழுமையும் சம்ஸ்கிருதமல்ல அது கோள்கள் + (சஞ்)சாரம் என்ற இரு வார்த்தைகளின் கூட்டு.

    ReplyDelete
  18. // கோபி அவர்கள் சொல்லியது: Transitக்கு நல்ல விளக்கம். கோச்சாரம் என்பது முழுமையும் சம்ஸ்கிருதமல்ல அது கோள்கள் + (சஞ்)சாரம் என்ற இரு வார்த்தைகளின் கூட்டு. //

    உண்மைதான். ஆனால் வடமொழியிலும் கோச்சாரம் என்றுதான் சொல்கின்றார்கள் ந்ண்பரே!

    ReplyDelete
  19. my lagna is shimam. thihi is navami, thithi sunya rasi are simam and viruchigam. mars in magaram stand on avittam star with ragu .please tell the result of mars how much favour to me

    ReplyDelete
  20. my lagna is simmam.birth thiti is navami .mars stands on avittam first patham with ragu please tell mar is how favourable to me .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com