மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.2.07

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1
BY SP.VR.SUBBIAH











எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு
இந்த ஜோதிடப் பகுதியைத் துவங்குகிறேன்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை
நம்பவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ
அல்லது நடுநிலையாக இருப்பவர்களைப் பிடித்து
இழுத்துவந்து நம்ப வைக்க வேண்டுமென்பதோ
என் நோக்கமல்ல!

யாரும், யாரையும் மாற்ற முடியாது!
அவர்களாகவே அறிந்து அலலது உணர்ந்து
மாறினால்தான் மாற்றம் ஏற்படும்!

நான் கற்றுணர்ந்தவைகள், யாருக்காவது பயன்படட்டும்
என்ற உயர்ந்த எண்ணத்தில் எழுதத்துவங்கிறேன்

ஜோதிடம் என்பது பெரிய கடல். அதை வாளியில்
பிடித்து நிரப்புவது போன்றதல்ல என் செயல்.
ஒரு அதிவேகப் படகில் உங்களை ஏற்றிக்கொண்டு
போய் கடலின் தன்மையை உங்களுக்குக் காட்சியாக
காட்டப்போகிறேன்.முத்துக்களையும், சுறாமீன்களையும்
காட்டப் போகிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் என்னுடன் வாருங்கள்.
மற்றவர்கள் வரவேண்டாம். கரையிலேயே
நின்றுவிடுங்கள். அது உங்களுக்கும் நல்லது
படகில் என்னுடன் பயணிப்பவர்களுக்கும் நல்லது!
----------------------------------------------------------------------
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,
ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்தபோது
என்னுடன் - எனக்கு மேலாளராக வேலைபார்த்த
நண்பர் ஒருவருக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானம்
உண்டு.

ஜோதிடம் தெரிந்தவரென்பதால், அவருக்கு அந்த
அலுவலகத்தில் ஒரு தனி மரியாதையும் இருந்தது
ஆனால் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ள
மாட்டார்.எளிமையாக இருப்பார்.

அவ்ருக்குக் கீழே, அவருடைய நேர் உதவியாளனாக
அடியவன் பணி புரிந்ததால், அவருக்கும் எனக்கும்
தொடர்பு அதிகமாகி, அது நட்பாகவும் மலர்ந்து
பரிணமித்தது.

ஒரு நாள் திடீரென்று, அவரிடம் நான் சொன்னேன்
"ஸ்வாமி! எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள
ஆசையாக இருக்கிறது.அதற்கு நான் எனன
செய்ய வேண்டும்?"

(எனக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம்
அவரை நான் முதலில் சார்' என்று கூப்பிட்டவன்,
பிறகு மற்ற மேல் அதிகாரிகள் அவரைக் கூப்பிடுவது
போல ஸ்வாமி' என்றுதான் அழைக்க ஆரம்பித்தேன்.)

அவர் சிரித்துவிட்டு,"அது பெரிய மண்டைக்
குடைச்சலான வேலை! அதைத் தெரிந்து
கொண்டு என்ன செய்யப்போகிறாய்? தெரிந்து
கொண்டால் அது உன்னைப் பேயாகப் பிடித்துக்
கொண்டு விடும்.ஆகவே சும்மா இரு!"
என்று சொல்லி மறுத்து விட்டார்.

எதுவும் மறுக்கப்பட்டால் மனிதன் இரண்டு
மடங்கு ஆர்வமாகி விடுவானில்லையா?
நானும் அப்படி ஆர்வமாகி அவரை விடாமல்
நச்சரிக்க ஆரபித்தேன்.

என் நச்சரிப்புப் பொறுக்காமல் ஒருநாள் அவர்
என்னிடம் ஒரு பஞ்சாங்கத்தைக் கொடுத்து அதில்
உள்ள முக்கியமான த்கவல்களை மனப்பாடம்
செய்துவிட்டு வா என்று சொல்லி என்னை
ஓரங்கட்டி விட்டார்.

பஞ்சாங்கத்திலுள்ள விஷயங்களை மனனம்
செய்வதற்கு மூன்றுமாத காலமாவது ஆகும்,
அதுவரை இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாம்
என்று நினைத்தாரோ என்னவோ!

அனால் நான் விடாக் கொண்டனாக, அலுவலக
நேரம் போக மீதமிருந்த நேரங்களில் முழு முயற்சியுடன்
பதினைந்தே நாட்களில் மனனம் செய்து விட்டு,
திருவிளையாடலில் வரும் தருமி ஸ்டைலில்
அவரிடம் சென்று,"பஞ்சாங்கத்தைக் கரைத்துக்
குடித்துவிட்டு வந்திருக்கிறேன் - கேள்விகளை
நீங்கள் கேட்கலாம்" என்றேன்

அவர் சிக்கலான முறையில் பத்துக் கேள்விகள்
கேட்க நான் அத்தனை கேள்விகளுக்கும்
தயக்கமினறித் தடுமாற்றமின்றி பதில் உரைத்தவுடன்
அவர் அசந்துபோய் விட்டார்.

"அடப்பாவி, எப்படியடா, சாத்தியமாயிற்று என்றார்?"

"அதை விடுங்கள் அடுத்ததாக எதைப் படிக்கவேண்டும்?
என்றேன்.

அவர் அதற்கு உடனே சொன்னார்," உன் ஜாதகத்தைக்
கொண்டு வா, பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!"

"எதற்காக என்னுடைய ஜாதகம் தேவைப்படுகிறது -
நான் ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கும், அதற்கும்
என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள்"

"ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு நல்ல புத்தியும்,
அதீத நினைவாற்றலும் வேண்டும். ஜாதகத்தில்
புதன் நன்றாக இருந்தால்தான் ஜோதிடம்
ம்ண்டையில் ஏறும். ஆக்வே கொண்டு வா!"
என்று சொன்னார்.

நான் என் சட்டைப்பையிலேயே அதை வைத்திருந்தேன்
எடுத்து நீட்டினேன்

வாங்கிப் பார்த்தவர் சொன்னார்,"உனக்கு ஜாதகத்தில்
புதன் ஏழில் அமர்ந்து வலுவாக உள்ளான். ஆகவே
உனக்கு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
இருக்கிறது. கற்றுக்கொள். ஆனால் அதை Hobby
ஆக மட்டுமே வைத்துக்கொள்"

நான் அந்த நேரம் வானத்தில் பறந்தது என்னவோ
உண்மை! அத்ற்குப் பிறகு ஜோதிடத்தைக் கற்றுக்
கொள்வத்ற்கு நான் பட்டபாடு இருக்கிறதே - அது
பெரும்பாடு. அதில் பல சுவார்சியமான விஷயங்களும்
உள்ளன

ஜோதிடத்தில் இரண்டு பகுதிகள் உண்டு
1.அடிப்படை ஜோதிடம் (Basic Astrology)
2.மேல் நிலை ஜோதிடப்பாட்ங்கள் (Advanced Study)

அடிப்படை ஜோதிடம் மிகவும் எளிதானது.
அனைவருக்கும் புரியும்படி இருக்கும்.
தெரிந்து கொள்வதும் எளிது

அடிப்படை ஜோதிடத்தைப் பற்றி ஐந்து அல்லது
ஆறு பதிவுகளில் உங்களுக்கு விளக்கிச்
சொல்லி விடுகிறேன்.

அதற்குப் பிறகு மேல்நிலை ஜோதிடத்தில்
படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்டு
விடுகிறேன். விருப்பப்படுபவர்கள் அவற்றை
வாங்கிப் படிக்கலாம்

பின் பதிவுகளில் ஜோதிட மேதைகளைப் பற்றியும்
அவர்கள் சொல்லி நடந்த பல சுவாரசியமான
விஷயங்களைப் பற்றியும் பதிவிட உள்ளேன்

மொத்ததில் பதிவின் சுவாரசியம் கெடாமல்
எழுதுவேன் என்று உங்கள் அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன்

ஆகவே ஒரு பதிவையும் விட்டு விடாது தொடர்ந்து
படிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் உங்களுக்கு
ஒரு கன்டினியூட்டி கிடைக்கும்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன். மற்றவை நாளையப்பதிவில்

(தொடரும்)

41 comments:

  1. சின்ன சந்தேகம்,
    புதன் ஏழில் இருந்தால் மட்டுமேவா,
    இல்லை வேறு இடத்தில் வலுவாக இருந்தாலும் ஜோதிடம் கற்கலாமா?

    ReplyDelete
  2. ///ராவணன் அவர்கள் கேட்டது:
    சின்ன சந்தேகம்,
    புதன் ஏழில் இருந்தால் மட்டுமேவா,
    இல்லை வேறு இடத்தில் வலுவாக இருந்தாலும் ஜோதிடம் கற்கலாமா?///

    ஏழாம் இடம் என்பது விஷேசமான இடம்.(Because it is a place from where the mercury is aspecting the Lagna) அதைவிடச் சிறப்பான இடங்களும் உண்டு.

    கேந்திரம் 4,7,11ம் இடங்கள்
    திரிகோணம் 1,5,9ம் இடங்கள்
    அதுபோல புதன் உச்சம் பெற்றிருப்பது (exaltation) ஆகியவையும் அந்த ஆற்றலைக் கொடுக்கும்
    அது பற்றிய விரிவான் செய்தியை
    'புதன் (Mercury) என்னும் தனிப் பதிவில் தருவதாக உள்ளேன்

    ReplyDelete
  3. சார்
    ஆரம்பமே நல்லாயிருக்கு.
    புதன் கேந்திர, திரிகோண இடங்களில் ஆட்சி,நட்பு பெற்றிருந்தால், எழுத்தாற்றல்,
    சாஸ்திர ஞானத்திகு நல்லதாகும். நீங்கள் சொல்லவதுசரி. புதன் புத்தி நாதனல்லவா.

    வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. ///செல்லி அவர்கள் சொல்லியது:சார்
    ஆரம்பமே நல்லாயிருக்கு.
    புதன் கேந்திர, திரிகோண இடங்களில் ஆட்சி,நட்பு பெற்றிருந்தால், எழுத்தாற்றல்,
    சாஸ்திர ஞானத்திகு நல்லதாகும். நீங்கள் சொல்லவதுசரி. புதன் புத்தி நாதனல்லவா.
    வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து எழுதுங்கள் ///

    பாராட்டிற்கு நன்றி, சகோதரி!

    ReplyDelete
  5. புதுத்தொடர்,புது தகவல்கள்
    ஆர்வம் மேலிடுகிறது.

    ReplyDelete
  6. முதலில் என் நன்றிகள்....

    எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும் அதை சரியாக சொல்லத் தெரிந்தவர்கள் யாரையும் சந்திக்காததால் வருத்தமாக இருந்தது.
    இன்று உங்கள் தயவால் அந்த கவலை தீரும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது.
    எனக்கு ஒரு சந்தேகம்...!
    என் பிறந்தநாள் எனக்கு தெரியும். ஆனால் பிறந்த நேரம் தெரியாது. நான் எப்படி என் ஜாதகத்தை கணிக்கச் சொல்வது. நாடி ஜோசியம் நாடுங்கள் என்று கூற வேண்டாம். அதையும் முயற்சித்து விட்டாகி விட்டது. என் ஓலை கிடைக்கவில்லையாம்.

    பதில்களை நோக்கி மேலும் பல சந்தேகங்களுடன்.....

    முதல் மாணவன் ஆனால் கடைசி பெஞ்சிலிருந்து...
    சென்ஷி

    ReplyDelete
  7. வாத்தியார் அய்யா

    சுவாரசியமாக துவக்கி இருக்கிறீர்கள்.ஆவலுடன் மற்ற பகுதிகளை படிக்க காத்திருக்கிறேன். நமது கலைகள் அனைத்தும் இப்படி ஆவணப்படுத்தப்பட்டு பாதுக்காப்பட வேண்டியது மிக அவசியம்.

    ReplyDelete
  8. அன்பு சுப்பையா,
    "ஆனகேந்திரத்திற்புந்தி யிருக்கரெண்டாம்வீட்டதிபதி
    தானுமேயுச்சமாகத் தரும்புகருபயமேவ
    ஊனமின்மூன்றினல்ல ருறவெள்ளியுச்சமாக
    மானிலத்துதித்தகாளை சோதிடம்வழுத்தவல்லோன்"
    (சாதக அலங்காரம்)
    அப்படித்தானே!

    ReplyDelete
  9. //முதல் மாணவன் ஆனால் கடைசி பெஞ்சிலிருந்து...
    சென்ஷி//

    வாத்தியாரையா,இதோ இன்னொரு மாணவன்.வகுப்புல இடம் இருக்கா??

    ReplyDelete
  10. ///வடுவூரார சொல்லியது: புதுத்தொடர்,புது தகவல்கள்
    ஆர்வம் மேலிடுகிறது. ///

    ஆகா, அதே ஆர்வத்துடன் வரும் பதிவுகளையும் விடாமல் படியுங்கள்!

    உங்களைப் போன்ற நண்பர்களுக்காகத்தான் இத்தொடர்!

    ReplyDelete
  11. //// சென்ஷு அவர்கள் சொல்லியது: என் பிறந்தநாள் எனக்கு தெரியும். ஆனால் பிறந்த நேரம் தெரியாது. நான் எப்படி என் ஜாதகத்தை கணிக்கச் சொல்வது. நாடி ஜோசியம் நாடுங்கள் என்று கூற வேண்டாம். அதையும் முயற்சித்து விட்டாகி விட்டது. என் ஓலை கிடைக்கவில்லையாம்.
    பதில்களை நோக்கி மேலும் பல சந்தேகங்களுடன்.....
    முதல் மாணவன் ஆனால் கடைசி பெஞ்சிலிருந்து...
    சென்ஷி ///

    அதெற்கெல்லாம் Reversal of birth timing என்றொரு உபாயம் உள்ளது
    அது சற்றுப் பெரிய ப்குதி. பின் வரும் பதிவு ஒன்றில் அதைப் பற்றிச் சொல்கிறேன்!

    ///முதல் மாணவன் ஆனால் கடைசி பெஞ்சிலிருந்து///

    ஒகோ, கண்ணதாசன் அவர்கள் படிக்கும் காலத்தில் கடைசி பெஞ்ச் மாணவர்தான் என்று தெரிந்து விட்டதால் - நீங்களும் கடைசி பெஞ்சிற்குப் போய்விட்டீர்களா?:-))))

    ReplyDelete
  12. ////செல்வன் அவர்கள் சொல்லியது: சுவாரசியமாக துவக்கி இருக்கிறீர்கள்.ஆவலுடன் மற்ற பகுதிகளை படிக்க காத்திருக்கிறேன். நமது கலைகள் அனைத்தும் இப்படி ஆவணப்படுத்தப்பட்டு பாதுக்காப்பட வேண்டியது மிக அவசியம். ////

    பதிவின் மற்றொரு நோக்கம் அதுதான் செல்வரே!
    நன்றி!

    ReplyDelete
  13. ///ஞான வெட்டியான் அவர்கள் சொல்லியது: அன்பு சுப்பையா,
    "ஆனகேந்திரத்திற் புந்தி யிருக்க ரெண்டாம் வீட்டதிபதி
    தானுமே யுச்சமாகத் தரும்புகருபயமேவ
    ஊனமின் மூன்றினல்லருற வெள்ளியுச்சமாக
    மானிலத்துதித்த காளை சோதிடம் வழுத்த வல்லோன்"
    (சாதக அலங்காரம்)
    அப்படித்தானே! ////

    வாருங்கள் அய்யா நீங்கள் வெட்டி எடுத்து வைத்துள்ள வைரங்கள்
    ஏராளம், எனக்கு மிகவும் பிடித்த விவேக சிந்தாமணி உட்பட!

    என்னிடம் ஏராளமான் ஜோதிட நூல்கள் த்மிழில் இருந்தன
    ஆனால் அவைகள் இப்போது இல்லை!

    நான் படித்ததும் , கற்றுத் தேர்ந்ததும் - ஆங்கில ஜோதிட நூலகள் மூலமே
    காரணம் என்ன என்பது என்னுடைய பின் பதிவில் வரும்

    ஆகவே நான் சொல்லும் செய்திகளுக்குப் பொருத்தமான ஜோதிடப்பாடல்
    ஏதாவது உங்கள் நினைவிற்கு வந்தால் - அதை நீங்கள் பின்னூட்டமாகத் தந்தால்
    அது அடியவன் செய்த பேறு!
    நன்றி!

    ReplyDelete
  14. /// மணிகண்டன் அவர்கள் சொல்லிய்து: வாத்தியாரையா,இதோ இன்னொரு மாணவன்.வகுப்புல இடம் இருக்கா?? ///

    உங்கள் ம்னதில் இடம் இருக்கும்போது - இந்த
    வாத்தியார் வகுப்பில் இடமில்லாமலா போய்விடும்?

    ReplyDelete
  15. ஐயா
    படங்களை பெரிதாக காட்டும் படி ஏத்தினால் வசதியா இருக்கும்.
    இப்போது உள்ள படத்தின் மேல் சொடுக்கினால் அதே அளவு தான் தெரிகிறது.

    ReplyDelete
  16. ////ஐயா
    படங்களை பெரிதாக காட்டும் படி ஏத்தினால் வசதியா இருக்கும்.
    இப்போது உள்ள படத்தின் மேல் சொடுக்கினால் அதே அளவு தான் தெரிகிறது.//

    j.peg ற்குப் பதிலாக BMP வடிவில்
    கொடுத்தால் தெரியுமா - என்று சொல்லுங்கள்!

    எனககு photoshop பற்றி முழுமையாகத் தெரியாது. யாரவது சொல்லிக்கொடுத்தால் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  17. நானும் வகுப்பில் சேர்ந்து கொள்கிறேன்.எனக்கும் ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறது.

    [கேள்விகள் ஏதும் கேட்பீர்களா?வகுப்பில்]

    ReplyDelete
  18. சார்,
    வானத்துல இருக்கிற கோள்கள், பூமில இருக்கற அனைவர் மேலேயும் ஒரே விதமாகத் தானே தாக்குது. அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் தானே இருக்க முடியும். பின்ன எப்படி வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான பலன்கள் ?

    ReplyDelete
  19. /// முத்துலெட்சுமி அவர்கள் சொல்லியது: நானும் வகுப்பில் சேர்ந்து கொள்கிறேன்.எனக்கும் ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறது.

    [கேள்விகள் ஏதும் கேட்பீர்களா?வகுப்பில்]///

    கேள்விகள் இல்லை
    தேர்வுகள் இல்லை
    பட்டமளிக்கும் வேலையும் இல்லை
    பாடம் மட்டும்தான்!

    விருப்பம் இருந்தால் கேட்கலாம்
    இல்லாவிட்டால் வகுப்பிற்குள்ளாகவே
    தூங்கலாம்.

    பக்கத்து ஸீட்டுக்காரனுக்கும்
    பாடம் நடத்தும் வாத்தியாருக்கும்
    இடையூறு விளைவிக்காமல் இருந்தால் சரி

    ReplyDelete
  20. அன்பு பச்சபுள்ள,
    முதலில் ஒருவர் இடுகையில் மற்றொருவர் குறுக்கிடுதல் பண்பல்ல; சுப்பையா அவர்கள் அனுமதியுடன்:
    வாத்தியார் போடுவது சாப்பாடு; நான் இடுவது ஊறுகாய்.

    பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்.
    நம் கண்ணுக்குத் தெரியும் கிரகங்கள் பிண்டத்திலுள்ளவை. அதன் குணநலன்களுடன் நம் உடலின் உள்ளே அதே போல் 9 மட்டுமின்றி பல அணுக்கள்(கிரகங்கள்) உள்ளன. அவைகள் உடலின் உள்ளே இருக்கும் கிரகங்கள். அவற்றில் 9 மட்டும் தன் உடலில் செய்யும் மாற்றங்களை உணர்ந்து எழுதியவை கணிய(சோதிட) நூல்கள்.

    //வானத்துல இருக்கிற கோள்கள், பூமில இருக்கற அனைவர் மேலேயும் ஒரே விதமாகத் தானே தாக்குது. //

    அந்த தாக்கத்தின் விளைவு எல்லோருக்கும் ஒன்றுபோலத்தான். ஒவ்வொருவரின் உடலில் உள்ள கிரகங்களின் தாக்கம் உடலில் செய்யும் மாற்றங்களில் வேறுபாடு உண்டு.

    //பின்ன எப்படி வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான பலன்கள் ?//

    வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான நேரத்தில் பிறந்தவர்களுக்கு அவரவர்தம் உடலில் உள்ள கிரகங்களின் சக்தி, விசை அளவு வேறுபடும்.வெவ்வேறான பலன்கள் உண்டாகின்றன.

    ReplyDelete
  21. // பச்சப்புள்ள அவர்கள் சொல்லியது:
    சார்,
    வானத்துல இருக்கிற கோள்கள், பூமில இருக்கற அனைவர் மேலேயும் ஒரே விதமாகத் தானே தாக்குது. அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் தானே இருக்க முடியும். பின்ன எப்படி வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான பலன்கள் ? ///

    தாயின் வயிற்றில் ஒரே மாதிரி 280 நாட்கள்தான் இருந்துவிட்டு
    எல்லாக் குழந்தைகளும் பிறக்கின்றன.

    ஆனால் பிறப்பில் ஏன் இததனை பேதமை?
    ஒரு தாய்க்கே பிறக்கும் அததனை குழந்தைகளும் ஒரே மாதிரி
    அழகு, அறிவு, திறமை, குணம் - ஆகியவ்ற்றுடனா பிறக்கின்றன?

    எல்லோருக்கும்தான் வாத்தியார் பாடம் நட்த்துகிறார்?
    வகுப்பில் பத்து பேர் மட்டும் அதிகமான மதிப்பெண் வாங்குவது ஏன்?

    செடியில் பூக்கும் மலர்களில் சில, இறைவனுக்கு மாலையாகிறது
    சில் பூக்கள் மங்கையின் தலையை அலங்கரிக்கிறது. சில் பூக்க்கள்
    இறந்தவனின் இறுதி அஞ்சலிக்குப் போகிறது. சில பூக்கள்
    பறிக்கப்பாடாமல் செடியிலேயே காய்ந்து சருகாகி விடுகிறது.
    சில் பூக்கள் விற்பனையாகமல் சாக்கடைக்குப் போகிறது -
    இந்த வேறு பாடுகள் ஏன்?

    எல்லோருக்கும்தான் பெளலர் சிரமப்பட்டு பந்து வீசுகிறார்
    சச்சினும், கங்கூலியும் விளாசுவது ஏன்? எல்லோரும் ஒரே மாதிரியாக
    அல்லவா விளாச வேண்டும்?

    எல்லோரும்தான் அரசியலில் பாடு படுகிறார்கள். குறிப்பிட்ட சிலர்
    மட்டுமே பதவிக்கு வந்து பரிணமளிப்பது எப்படி?

    இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம் - போதுமென்று
    நினைக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  22. அன்புள்ள அய்யா,

    ஜோதிடத்தில் ஈடுபாடு கொண்ட எண் போன்றவர்களுக்கு உங்களின் இந்த கட்டுரைத்தொடர் மிக மிக உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. /// ஞான வெட்டியான் அவர்கள் சொல்லியது: வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு வெவ்வேறான நேரத்தில் பிறந்தவர்களுக்கு அவரவர்தம் உடலில் உள்ள கிரகங்களின் சக்தி, விசை அளவு வேறுபடும்.வெவ்வேறான பலன்கள் உண்டாகின்றன.//

    உண்மைதான் ஞானகுரு நாதரே!
    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்
    மிக்க நன்றி!

    நீங்கள் பின்னூட்டத்தில் அடிக்கடி வருவது அடியவன் செய்த பேறு!
    அதற்கும் ஒரு விசேச நன்றி!

    ReplyDelete
  24. ஐயா, நல்ல தொடர். நான் சோதிடத்தை நம்பாதுபோனாலும் அதன் கணக்குகளை இரசிப்பவன். படகில் பயணிப்பவர்களுக்கு பங்கம் வராது கேட்கிறேன்.

    //என் நச்சரிப்புப் பொறுக்காமல் ஒருநாள் அவர்
    என்னிடம் ஒரு பஞ்சாங்கத்தைக் கொடுத்து அதில்
    உள்ள முக்கியமான த்கவல்களை மனப்பாடம்
    செய்துவிட்டு வா என்று சொல்லி என்னை
    ஓரங்கட்டி விட்டார்.//
    எங்களுக்கும் அதுபோல முன்னேற்பாடுகள் தேவையா ?

    ReplyDelete
  25. // மணியன் அவர்கள் சொல்லியது: எங்களுக்கும் அதுபோல முன்னேற்பாடுகள் தேவையா ?//

    வேண்டாம்!
    முழுதையும் படிக்க முடியுமா என்ன? அதற்கு அவசியமும் இல்லை. படிக்க வேண்டிய பகுதிகள் Notes' போல தனியாகப் பிரித்து நானே பதிவிடவுள்ளேன். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  26. வேண்டுகோள்
    -----------------------------------
    என்னுடைய வலைப்பதிவில் Blogger
    கள் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்

    அப்படி வருகின்ற பின்னூட்டங்கள் சிலவற்றில் பின்னூட்டமிட்டவர்களின்
    பெயரைக் கிளிக் செய்தால் Profile & Name of their Blog இரண்டும் தெரிகின்றது

    சிலருக்கு, அவர்களுடைய பெயரைக் கிளிக் செய்தால் Profile not found
    என்று வருகிறது.

    அத்ற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள விருப்பம். தெரிந்தவர்களை எனக்குச் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  27. என்னுடைய வலைப்பதிவில் Blogger
    கள் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்

    அப்படி வருகின்ற பின்னூட்டங்கள் சிலவற்றில் பின்னூட்டமிட்டவர்களின்
    பெயரைக் கிளிக் செய்தால் Profile & Name of their Blog இரண்டும் தெரிகின்றது

    சிலருக்கு, அவர்களுடைய பெயரைக் கிளிக் செய்தால் Profile not found
    என்று வருகிறது.

    அத்ற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள விருப்பம். தெரிந்தவர்களை எனக்குச் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்//

    அய்யா

    சில பேர் தங்களின் புரொபைலை வெளிக்காட்ட வேண்டாம் என நினைத்திருப்பார்கள்.அப்படி நினைத்தால் பிளாக்கரில் அது தெரியாமல் செய்யும் வசதி இருக்கிறது.பின்னூட்டத்துக்காக மட்டும் பிளககர் கணக்கு திறக்கும் பதிவர்கள் தான் இப்படி செய்வது வழக்கம்.

    ReplyDelete
  28. அய்யா

    /// செல்வன் அவர்கள் சொல்லியது: சில பேர் தங்களின் புரொபைலை வெளிக்காட்ட வேண்டாம் என நினைத்திருப்பார்கள்.அப்படி நினைத்தால் பிளாக்கரில் அது தெரியாமல் செய்யும் வசதி இருக்கிறது.பின்னூட்டத்துக்காக மட்டும் பிளககர் கணக்கு திறக்கும் பதிவர்கள் தான் இப்படி செய்வது வழக்கம்.///

    தங்கள் விளக்கத்திற்கு நன்றி செல்வரே!

    ReplyDelete
  29. ஞான வெட்டியான் சார், சுப்பையா சார்,
    விளக்கம் அளித்தற்காக இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  30. வாத்தியாரய்யா,

    நல்ல முயற்சி. தொடருங்கள். சோதிடக்கலையை மூடி மறைக்க மறைக்க அது அழிந்திடும் என்பதை உணராமல் அக்காலத்தவர் வெகு சிலருக்கு மட்டுமே அதை எட்டுமாறு செய்துவிட்டனர்.

    உங்களின் இந்தத் தொடர் நிச்சயமாக சோதிடக்கலை பயிலும் ஆர்வமுள்ள அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.

    வரும் தொடர்களில் அடிப்படைப் பாடங்களை முடித்துவிட்டு, என் போல அரைகுறையாய் அறிந்தோருக்காக மேல்நிலை சோதிடப் பாடங்களையும் நீங்கள் விளக்கவேண்டும் என வேண்டுகிறேன்.

    ReplyDelete
  31. ///கோபி அவர்கள் சொல்லியது: முடித்துவிட்டு, என் போல அரைகுறையாய் அறிந்தோருக்காக மேல்நிலை சோதிடப் பாடங்களையும் நீங்கள் விளக்கவேண்டும் என வேண்டுகிறேன்.///

    மேல் நில்லைப் பாடங்கள் என்பது மிகவும் விரிவான பகுதி. அதில் உள்ள முக்கியமானவற்றிற்கு - உங்கள் ஆதரவு இருக்கும் எனில் நிச்சயம் நட்த்துகிறேன்

    ReplyDelete
  32. படப்பிரச்சினை இவ்வளவு நாள்ல முடிஞ்சு போச்சு இல்லையா?

    ReplyDelete
  33. oru giragam matroru giragathin meethu paarvai petrathu endru eppadi arivathu. Ezham paarvai patri vilakkam irrukkuthu, Veru enna enna parvaigal irukkirathu (How to find out one planet is aspecting other planet apart from 7th planet ?

    ReplyDelete
  34. ஐயா,
    உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் .
    எனக்கு ஓலைச்சுவடிகளைப் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளது.
    அந்த எழுத்துக்களைப் படிப்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் கூறவும்

    ReplyDelete
  35. ////ஜிஜி said...
    ஐயா,
    உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் .
    எனக்கு ஓலைச்சுவடிகளைப் பற்றி படிக்கும் ஆர்வம் உள்ளது.
    அந்த எழுத்துக்களைப் படிப்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் கூறவும்////

    கூட்டெழுத்தில் அவைகள் இருக்கும். தொடர்ந்து படித்தால், அது வசப்படும்!

    ReplyDelete
  36. vanakkam,
    en peyar selvakumar. enakku chiruvayathu mudhale jodhitathin mel aarvam. engu, yaridam poyi katru kolvathu entru ariyathavanaga irunthen. intru intha paguthi-i kandapothu ennudaiya aavalukku thodakkamaga ithai padikka thodangukireen. naan ungalai ennudaiya maqnasiga jodhita aasanaga eetru thodangukireen. intha pinnutathai padikka nernthal ennai aasirvathiyungal. ellam valla iraivanaiyum, ungalaiyum thozhuthu thodangukireen.

    date : 19/04/2016 ippadikku
    place : tirur,kerala. ungalathu sidanaga
    v.selvakumar


    ReplyDelete
  37. vanakkam,
    en peyar selvakumar. enakku chiruvayathu mudhale jodhitathin mel aarvam. engu, yaridam poyi katru kolvathu entru ariyathavanaga irunthen. intru intha paguthi-i kandapothu ennudaiya aavalukku thodakkamaga ithai padikka thodangukireen. naan ungalai ennudaiya maqnasiga jodhita aasanaga eetru thodangukireen. intha pinnutathai padikka nernthal ennai aasirvathiyungal. ellam valla iraivanaiyum, ungalaiyum thozhuthu thodangukireen.

    ippadikku ungaludaiya manavanga... v.selvakumar 09400334333

    date : 19/04/2016
    place : tirur,kerala.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com