Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!
நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?
நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!
ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.
இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.
குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்
இயற்கையாகவே தீய கிரகங்கள்
சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!
12 லக்கினங்களுக்கும் உரிய நன்மை செய்யும் கிரகங்களையும், தீமையான கிரகங்களையும் வகைப் படுத்தியுள்ளார்கள்
அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
1. மேஷ லக்கினம்:
இந்த லக்கினத்திற்கு குருவும் சூரியனும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்குத் தீய கிரகங்களாகும். மேஷத்திற்கு சுக்கிரன் அதி மோசமான கிரகமாகும்!
2. ரிஷப லக்கினம்
இந்த லக்கினத்திற்கு சனியும், சூரியனும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும்
3. மிதுன லக்கினம்:
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யக்கூடிய கிரகமாகும். செவ்வாய், சூரியன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும்
4. கடக லக்கினம்
செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். புதனும், சுக்கிரனும் ஆகாத (வேண்டாத) கிரகங்களாகும். செவ்வாய் இந்த லக்கினத்திற்கு யோக காரகன் ஆவார். பல நன்மைகளைச் செய்யக்கூடியவர் அவர்தான்!
5. சிம்ம லக்கினம்
செவ்வாய், சூரியன் குரு ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். புதன், சுக்கிரன், சனி ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும். செவ்வாய் இந்த லக்கினத்திற்கு யோக காரகன் ஆவார். பல நன்மைகளைச் செய்யக்கூடியவர் அவர்தான்!
6. கன்னி லக்கினம்
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் மட்டுமே நன்மை செய்யக்கூடிய கிரகமாகும். செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும்.
7. துலா லக்கினம்:
சனியும் புதனும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். குரு, செவ்வாய், சூரியன் ஆகிய மூன்றும் இந்த லக்கினத்திற்கு வேண்டாத கிரகங்களாகும்.
8. விருச்சிக லக்கினம்
குரு, சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சூரியனும், சந்திரனும் இந்த லக்கினத்திற்கு ராஜயோகத்தைக் கொடுக்கும் கிரகங்களாகும். சுக்கிரனும், புதனும் ஆகாத கிரகங்கள். சனி கலவையான பலன்களைக் கொடுக்கும். செவ்வாயும் கலவையான பலன்களையே கொடுப்பார்
9 .தனுசு லக்கினம்
செவ்வாய், சூரியன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இந்த லக்கினத்திற்கு நன்மை செய்யக்கூடிய கிரகங்களாகும். சுக்கிரன் இந்த லக்கினத்திற்கு ஆகாத கிரகமாகும்
10. மகர லக்கினம்
சுக்கிரனும் புதனும் வேண்டியவர்கள். குரு, செவ்வாய், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் வேண்டாதவர்கள் (ஆகாதவர்கள்)
11. கும்ப லக்கினம்
சனியும், சுக்கிரனும் வேண்டியவர்கள். குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் வேண்டாதவர்கள்.
12. மீன லக்கினம்
செவ்வாயும், சந்திரனும் வேண்டிவர்கள். சனி, சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் வேண்டாதவர்கள்.
பாடத்தை மனதில் பதிய வையுங்கள். குறைந்த அளவு உங்கள் லக்கினத்திற்கு உரிய கிரகங்களையாவது மனதில் பதிய வையுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
===========================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com