Astrology கெட்ட யோகம்! Bad yoga:
”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.
ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு எங்கே போவது?
இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டுபோய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.
அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!
ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?
இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.
அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன் இரண்டாவது சாய்ஸ்!
எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது
பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!
அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.
(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)
Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.
பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.
அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
==========================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com