மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.11.20

Astrology: Quiz: புதிர்: 6-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 6-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ரோஹிணி நட்சத்திம். கடக லக்கினக்காரர். ஜாதகர் அவருடைய 28வது வயதில் கடுமையான பணச் சிக்கலுக்கு ஆளாகியிருந்தார்.. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: பணத்திற்கான 2ம் வீட்டின் அதிபதி சூரியன் 12ம் வீட்டில் அமர்ந்து கொண்டுவிட்டார். அது விரைய ஸ்தானம். House of Loss அதுதான் பெரிய சிக்கல். கடக லக்கினத்திற்கு குரு பகவான் சுபமாக செயல் படுபவரல்ல. இங்கே 6ம் வீட்டிற்கு அதிபதியான அவர் 3ல் அமர்ந்து இருப்பதோடு செவ்வாயைப் பார்ப்பதோடு அவருடன் சேர்ந்து சூரியனையும் பார்க்கிறார். இருவரும் சேர்ந்து பணச் சிக்கலை அதிகப் படுத்தினார்கள்.ஜாதகரின் பணச் சிக்கலுக்கு  இவைதான் முக்கிய காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 
.
இந்தப் புதிரில் 14 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 13-11-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Sunish commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
18 hours ago
2nd veettu (Simmam) adhipathi "Surya bagavaan 12th marainthuvittar. Athanal jadhagarku pana kashtam.
-----------------------------------------
2
Jeyalaxmi commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
24 hours ago
ஆறுக்குடையவர தசை நடத்தியதும் தன் ஸ்தானாதிபதி சூரியன் விரயத்தில் இருந்ததும் ஜாதகரின் பொருளாதார சிக்கலுக்கு காரணம்.
-------------------------------------------
3
Sridhar commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Yesterday
2 ஆம் அதிபதி 12 இல் மறைவு. சனியின் பார்வை 2 ஆம் வீட்டில் 11 ஆம் அதிபதி கேதுவுடன் கூட்டணி மற்றும் ராகுவின் பார்வை தன அதிபதி குரு 3இல் மறைவு மற்றும் செவ்வாய் பார்வை இதனால் பண பிரச்சினை ஏற்பட்டது இப்படிக்கு திருவான்மியூர் ஶ்ரீதர்
-----------------------------------------------
4
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Yesterday
ஜாதகர் அவருடைய 28வது வயதில் கடுமையான பணச் சிக்கலுக்கு ஆளாகியிருந்தார்.. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? 1. 28 ம் வயதில் குரு தசை ஆரம்பம் 2. குரு 6ம் அதிபதி, கடனுக்கு காரகனான செவ்வாயின் நேரடி 7ம் பார்வையில் உள்ளது. 3. இரன்டாம் அதிபதி சூரியன் 12ம் இடமான விரய ஸ்தானத்தில். 4. 11ம் அதிபதி சுக்கிரன் 11ம் இடத்தற்கு 12ம் இடத்தில் உள்ளது. 5. லக்னாதிபதி ரிஷபத்தில் உச்சம். குரு தசை சந்திர புத்தியில் நிலைமை சீராகலாம்.
-------------------------------------------------------------------
5
arun commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Yesterday
வணக்கம் ஐயா, ஜாதகருக்கு 28 வயதில் ராகு தசா நடக்கும் சமயம் , ராகு பகவான் லக்கினத்திற்கு 4இல்,  வீடு கொடுத்த 4ஆம் அதிபதி சுக்கிரன் கேதுவுடன். செவ்வாய் 9இல், திரிகோணத்தில் சனி பகவான்(5இல்), நிலம், பூர்விக சொத்தில் சகோதரத்துடன் பிரச்சனை அல்லது வழக்கு . இந்த அமைப்பின் மூலம் பொருளாதார சிக்கலுக்கு காரணமாக இருக்கும் ஐயா. மிக்க நன்றி.
----------------------------------------------------------------
6
P. CHANDRASEKARA AZAD commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
2 days ago
வணக்கம் தாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில்... ஜாதகர் ஏன் பொருளாதார சிக்கலில் சிக்கினார்? கடக லக்கின ரிஷப ராசி , ரோகினி நக்ஷத்திர ஜாதகர் பொருளாதாரத்தை பற்றி அறிய ஜாதகரின் இரண்டாம் இடம் பதினொன்றாம் இடம் போன்றவற்றையும், பண காரகன் குருவின் நிலையையும் பார்க்க வேண்டும். ஜாதகரின் இரண்டாம் இடத்து அதிபதி சூரியன் பனிரெண்டில் விரய ஸ்தானத்தில் மறைந்து உள்ளார்.மேலும் பதினொன்றாம் இடத்து அதிபதி சுக்கிரன் பதினொன்றாம் இடத்துக்கு பனிரெண்டில் மறைந்து அவரும் விரயமாக உள்ளார்... மேலும் சுக்கிரன் கேதுவுடன் சேர்ந்ததும் ராகுவின் நேரடி பார்வையும் மேலும் பணம் வரும் வழியை தடை செய்தது...நவாம்ச கட்டத்திலும் இரண்டாம் இடத்து அதிபதி சூரியன் நீசமாக உள்ளதால் பண கையிருப்பை காலி செய்தது.. மேலும் குருவும் அவரின் எதிரி வீடான புதனின் வீட்டில் செவ்வாயின் நேரடி பார்வை பெற்று உள்ளதால் குருவின் மூலமாக பணம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிகழ்வு ஜாதகரின் ராகு தசை சூரிய புக்தியில் அதாவது 28 வயதில் ஆரம்ப மானது ...ராகு தசை சூரிய புக்தி இரண்டு மற்றும் பதினொன்றாம் இடத்துடன் சம்பந்தம் பெறுவதால் பணம் வரும் பதினொன்றாம் இடமும், பணம் தங்கும் இரண்டாம் இடமும் அதிகமாக பாதிக்க பட்டது. நன்றி இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத்
------------------------------------------------------------------------------
7
jaga.gm commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
2 days ago
குருவிற்க்கு வணக்கம்! கடக லக்கினம் ரிஷிபம் ராசி , கடன் வர காரணம் ராகு தசா, 6 இம் அதிபதி குரு தனியா இருக்குறார் , 2 இம் அதிபதி சூரியன் நீசம் அம்சத்தில் , ஓட்டை தடுப்பவர் யாரும் இல்லை , வீடு , அம்மா மருத்துவம் , பிசினஸ் ஆசை காட்டி விட்டார் 10 இம் அதிபதி செவ்வாய் அவர் வீட்டுக்கு 12 இல். கடன் குரு தசை இல் அடையும் , குரு வர்கோத்தம் , சந்திரன் உச்சம் லக்கினாதிபதி , என்ன இடத்தை வித்து கொஞ்சம் கொஞ்சம் கடன் அடித்திருக்கும் வகுப்பு பறை புத்தகம் 2 இம் மிக அருமை நன்றி ஜெகதீசன்
----------------------------------------------------
8
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
ஐயா கேள்விக்கான பதில் 1.லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்றுள்ளார் 2 .லாபாதிபதி சுக்கிரன் விரயத்தில் 3 .ஜாதகரின் ராகு திசை சுக்கிர 
புத்தியில் (௨௮ வயதில் ) பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது \ராகு கேது பிடியில் லாபாதிபதி நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
-----------------------------------------------------
9
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
ஜாதகர் 16 ஜூன் 1958 அன்று காலை 9 மணி 33 நிமிடம் போலப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன். 
கடகலக்கினத்திற்கு தனஸ்தானமான சிம்மத்தின் அதிபதி சூரியன் 12ல் மறைந்து பகைவீட்டில் அமர்ந்தான்.தன ஸ்தானத்திற்கு 
8ம் அதிபதி சனியின் பார்வை. தன ஸ்தானாதிபதி சூரியனுக்கு செவ்வாயின் பார்வை. லக்கினாதிபதி சந்திரனுக்கு சனியின் நேர்பார்வை.
ஜாதகருக்கு 28 வயதில் ராகு த‌சா சந்திரபுக்தி.12ம் அதிபன் புதன் 11ல் சந்திரனுடன் இருக்கிறார்.இது பலவகையான நஷ்டங்களை ஏற்படுத்தி 
பெரிய சிரமங்களை ஏற்படுத்தியது.தொடர்ந்து வந்த ராகு தசா செவ்வாய் புகதி பலனளிக்கவில்லை. குரு தசா லக்கினத்திற்கு ஆறாம் அதிபனின் தசா . எனவே பெரிய பலனை அளித்திருக்காது.மேலும் குரு வக்கிரம் ஆனால் குரு 9ம் அதிபனும் ஆனதாலும் யோககாரனை தன் பார்வையில் வைத்திருப்பதாலும் குருதசா பாதி நன்மையாவது செய்திருக்கும்.
-----------------------------------------------------
10
C Jeevanantham commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
Dear Sir, The given horoscope person reached Rahu dasa guru bukthi in his 28 years. 2nd lord for financial matters is sitting in 12th. Since 2nd lord is in 12th (loss house), during the sun antar dasa he will get suffered. During that period, since guru is his 6th lord for debit, and guru is sitting in enemy place, not favourable for financial stability. Also Rahu with maandhi made worst effect. The Guru aspects 11th place from 3rd place. (as 9th aspect), Since guru aspects is not good for cancer lagna (6th lord), the native suffered lot for financial related issues (11th house affected).
---------------------------------------------------------
11
K. Ravi commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
வாத்தியாருக்கு வணக்கம் லக்னாதிபதி சந்திரன் விரையாதிபதி புதனுடன் கூட்டு தனஸ்தானாதிபதி சூரியன் விரையஸ்தானத்தில் லாபாதிபதி சுக்கிரன் அந்த வீட்டிற்கு பன்னிரண்டில். 29 வயதில் அவருக்கு கடன் தொல்லைக்கான ஆராம் வீட்டதிபதியான குருதசை மேலும் குரு நவாம்சத்தில். லக்னம், தனஸ்தானம், லாபஸ்தானம் கெட்டிருக்கிறது. ஆருக்குடையோன் தசை ஆரம்பம் ஆகிய இவையே காரணங்கள். கெ. ரவி
------------------------------------------------------------
12
க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம். (tamilselvanabr@gmail.com) commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
ஐயா வணக்கம்! புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன? 1. 6ஆம் அதிபதி மூன்றில் மறைவு, 2. 12ல் மறைவு பெற்ற இரண்டாம் அதிபதி சூரியனின் பார்வை 6ஆம் வீட்டின் மேல், 3. லக்னாதிபதி சந்திரன் 6ஆம் வீட்ட்ற்கு 6ஆம் வீட்டில் 4. 6ஆம் அதிபதி தன்னுடைய திசையில் ஜாதகரின் பண சிக்கலை தீர்க்கவில்லை.
----------------------------------------------------------------
13
Sabarinaathan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
Lagnabathi pabakarthari yogathil. 28 vayathu endral Raghu thisai chevvai bukthi. Raghu than thisai mudiyum bothu seiyum tholilil etho thavarai earpaduthi koduthathellam pudungiruppar. Today i May guess wrong.
----------------------------------------------------------------------
14
Sabarinaathan commented on "Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் என்ன?"
Nov 6, 2020
Just read puranthara das post and heated bhakyada Lakshmi baaramma song by suryagayathri and ms subhu. Swing another post now.. are u online or it is predefined time set post?
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com