மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.20

Astrology: Quiz: புதிர்: 30-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 30-10-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு குழந்தையின் ஜாதகத்தைக் கொடுத்து, அக்குழந்தை சுவாதி நட்சத்திம். மீன லக்கினம். மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அதீதமான குறும்பு மற்றும் முரட்டுத்தனம். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: 12ம் வீட்டில் ஐந்து கிரகங்கள் ஒன்றாக உள்ளன. அவற்றுள் தசா நாதன் குருவோடு செவ்வாயும் கேதுவும் கூட்டாக இருப்பதைப் பாருங்கள். Too many planets in a house is a sort of imbalance in the horoscope. சந்திரன் (மனகாரகன்) தனித்திருந்து கேமதுருமா என்னும் அவ யோகத்துடன் இருப்பதைப் பாருங்கள். அத்துடன் பரிவர்த்தனை யோகத்தில் இருக்கும் சனீஷ்வரன் 12ம் வீட்டின் பலனைத்தான் அதிகமாகக் கொடுப்பார்,  இவை எல்லாம் சேர்ந்து அதீதமான குறும்புத்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் அக்குழந்தைக்குக் கொடுத்துள்ளன. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 
.
இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 6-11-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
seethalrajan commented on "Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?"

குருவிற்க்கு வணக்கம்! குழந்தையின் குறும்புக்கு லக்னத்தில் அமர்ந்த சனியே காரணம். இருப்பினும் பரிவர்தனை மூலம் அது பின்பு சரிஆகும். நன்றி.
-----------------------------------------------------------
2
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?"

Reason for stubbornness 1. Child born in rahu dasa and looking 7th Drishti on 12th house having sun/mars/mercury/guru/kethu conjunction 2. Buthikaragan mercury in 12th house 3. 2nd house owner Mars conjunction with Kethu leads rough/bad behaviour/Mis conduct 4. Mercury conjunction with Mars
-----------------------------------------------------------
3
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?"

ஜாதகர் 18 ஃபெப்ரவரி 1998 அன்று காலை 8 .50 நிமிடம் போல் பிறந்த‌வர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன். ஜாதகருடைய ஜாதகத்தில் செவ்வாய் 12 ல் இருப்பது அவரை மூர்க்கத்தனமாக மாற்றும். குரு 12ல் இருப்பது குழந்தைத்தனமாக இருக்கச் செய்யும்.ராகு 6 நோய் ஸ்தானத்தில் இருந்து, அந்த 6ம் இடத்தினை 5 கிரகங்கள் பார்வையிடுகின்றன. 5ம் அதிபதி 8ல் மறைந்தது, லக்கினாதிபதி குரு 12ல் மறைந்து அஸ்தங்கதம் அடைந்தது, லக்கினத்திலேயெ 12ம் அதிபதி சனி நின்றது, 12ம் இடம் தூக்கம் சம்பந்தப்பட்டது. அதி 5 கிரகங்கள் அமர்ந்தது தூக்கத்தைக் கெடுத்துக் குழப்பத்தை உண்டாக்கும். இக்காரணங்களால். ஜாதகர் ஹைபர் ஆக்டிவ்.
---------------------------------------------------------------
4
P. CHANDRASEKARA AZAD commented on "Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?"

வணக்கம் தாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில் ... மீன லக்கினம், துலா ராசி, ஸ்வாதி நக்ஷத்திர குட்டி பையனின் சுட்டி தனத்திற்கான காரணங்கள் சுட்டி தனம் என்ற நிலை அறிய ஜாதகரின் தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தை ஆராய வேண்டும். இந்த பையனின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் மாந்தி நின்று , சனியின் மூன்றாம் பார்வை பெற்று உள்ளது. இது குரு தசையின் சனி புக்தியில் இருந்து ஆரம்ப மானது. மேலும் இதே மூன்றாம் இடத்தை தைரிய காரகனும் ஒன்பதாம் இடத்து அதிபதியும் மான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்த்து கோபத்தையும் யாருக்கும் அடங்காத தன்மையும் அதிக படுத்தியது. மேலும் மூன்றாம் இடத்தில் இருந்து அதன் அதிபதி சுக்கிரன் குருவின் வீட்டில், மூன்றாம் இடத்திற்கு எட்டில் நின்று பையனின் சுட்டி தனத்தினால் மற்றவரை பாடாய் படுத்தியது. மற்றும் சந்திரன் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் இடம் எட்டாம் இடத்தில் வருவதால் இது நிகழ்ந்தது. ( அதாவது சந்திரன் நின்ற இடத்தில் இருந்து மூன்றாம் இடம் எட்டு ஆறு என்ற அமைப்பில் உள்ளது..) நன்றி இப்படிக்கு ப. சந்திரசேகர ஆசாத் கைபேசி : 8879885399
-----------------------------------------------------------------------
5
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?"

ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி குரு விரயத்தில் மேலும் ஆற்றல் காரகன் செவ்வாய் , ஆரமாதிபதி சூரியன் மற்றும் புதனுடன் 2 ..விரயாதிபதி சனி லக்கினத்தில் 3 .பூர்வபுனாதிபதி சந்திரன் எட்டில் நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
------------------------------------------------------------------------
6
C Jeevanantham commented on "Astrology: Quiz: புதிர்: குழந்தையின் ஜாதகம். அதீதமான குறும்புத்தனத்திற்கு (hyperactivity) என்ன காரணம்?"

Dear Sir, The child's horoscope, Sani placed with lagna, And lagna lord is with 4 other planets in 12th place. That is the reason for hyperactivity.
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com