பெரியவர்கள் சொன்னதை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்!!!!
பாட்டி அடிக்கடி சொல்லுவாள்!!!!
நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே
கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே
மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே
எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே
குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே
தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே
எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே
*என்ன அழகான வரிகள் இதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*
வணக்கம். நமச்சிவாய வாழ்க
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir excellent words thanks sir vazhga valamudan
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteமூத்தோர் சொல் வார்த்தைகளைத் தட்டவேண்டாம் எண்பதும் அக்கால மொழியல்லவா வாத்தியாரே!
எல்லாம் சரிதான் சொல்லிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்ஙளிடம் கேட்க யாருமில்லை
ஐயா, 'Generation gap' ஆட்டிப் படைக்கிறது. என்ன செய்வது?
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு. வீட்டில் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க பெருசுகள் எங்கே இருக்கிறார்கள்?
எல்லோரையும் முதியவர் இல்லத்தில் சேர்த்தாயிற்றே... ஆரம்ப பள்ளி பாடங்களில் சேர்த்து சிறார்களுக்கு சொல்லி தர வேண்டும்.
வெங்கடேஷ்.
அருமை ஐயா
ReplyDelete//////Blogger Shanmugasundaram said...
ReplyDeleteGood morning sir excellent words thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
மூத்தோர் சொல் வார்த்தைகளைத் தட்டவேண்டாம் எண்பதும் அக்கால மொழியல்லவா வாத்தியாரே!
எல்லாம் சரிதான் சொல்லிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்ஙளிடம் கேட்க யாருமில்லை
ஐயா, 'Generation gap' ஆட்டிப் படைக்கிறது. என்ன செய்வது?//////
உண்மைதான். கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். நன்றி வரதராஜன்!!!!!
//////Blogger Ram Venkat said...
ReplyDeleteசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. வீட்டில் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க பெருசுகள் எங்கே இருக்கிறார்கள்?
எல்லோரையும் முதியவர் இல்லத்தில் சேர்த்தாயிற்றே... ஆரம்ப பள்ளி பாடங்களில் சேர்த்து சிறார்களுக்கு சொல்லி தர வேண்டும்.
வெங்கடேஷ்.//////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!!
/////Blogger TUTIONFREE said...
ReplyDeleteஅருமை ஐயா//////
நல்லது. நன்றி!!!!