மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.10.19

Astrology: Quiz: புதிர்: 4-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 4-10-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அம்மணியின் ஜாதத்தைக் கொடுத்து, அம்மணி சுவாதி நட்சத்திரக்காரர். அவரின்  25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும்
கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர்
வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார். இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்ன?  ஜாதகத்தை அலசி
அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள் " என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகி ரிஷப லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரன் 12ல். விரைய ஸ்தானத்தில். உடன் 4ம் அதிபதி சூரியனும், 7 & 12ற்குரிய செவ்வாயும் கூட்டாக உள்ளார்கள். அத்துடன் சூரியனுடன் மோதி சுக்கிரனும் செவ்வாயும்
அஸ்தமணமாகியுள்ளார்கள். லக்கினாதிபதி 12ல் விரையத்தில் அமர்ந்ததால் ஜாதகியின் வாழ்க்கை இளமையில் அவருக்குப் பயன்படும்படி உருப்படியாக இல்லாமல் போய்விட்டது. ஆனால் 5ல் திரிகோணத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான் தன் மகா திசை துவங்கியவுடன் ஜாதகிக்கு நல்வழியைக் காட்டி நல்வழிப்படுத்தினார்.

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 11-10-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
என்ன தான் ரகசியமோ இந்த ஜாதகத்திலே ....
1 இந்த ஜாதகி ரிஷப லக்கினம், துலா ராசி, ஸ்வாதி நக்ஷத்திரம் , பொதுவாக மனம் சம்பந்த பட்ட நடத்தைக்கு , மன ஸ்தானமான ஐந்தாம் இடத்தையும் , மனோகாரகன் சந்திரன் நிலையையும் பார்க்க வேண்டும்
2 இந்த ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் குரு சனி சேர்க்கை பெற்று குரு சண்டாள யோகத்தில் உள்ளது. மேலும் இந்த ஐந்தாம் இடத்தின் அதிபதி புதனும் பதினொன்றில் மீனத்தில் நீசமாக உள்ளார். மேலும் இவர் வர்கோத்தமம் பெற்று அந்த இடத்தில் உள்ளார். ( புதன் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தில் ஒரே இடத்தில் உள்ளது;) இது மேலும் மோசமான நிலை
அடைய செய்தது.
3 மேலும் மனோகாரகன் சந்திரன் ராசி கட்டத்தில் ஆறாம் இடத்திலும், நவாம்ச கட்டத்தில் பனிரெண்டாம் இடத்திலும் மறைந்து மன நோயினை உண்டாக்கினார். லக்கின காரகன் சுக்கிரன் ராசி கட்டத்தில் பனிரெண்டில் மறைந்து அதாவது உச்ச சூரியனுடன் அஸ்தங்கதம் ஆனது ஒரு வகையில் இளம் வயதில் இந்த நிலையை அடைய செய்தது. மேலும் ஐந்தாம்
இடத்தை ராகு தனது மூன்றாம் பார்வையால் மோசமடைய செய்தார்.
4 இந்த நிலையில் முதலில் வந்த ராகு தசை ஏழு ஆண்டுகளும், பின்னர் வந்த குரு தசை பதினாறு ஆண்டுகளும் ,
மொத்தம் 23 ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தது. எனென்றால் குரு சுக்கிரனுக்கு உகந்த கிரகமல்ல . மேலும் எட்டாம் அதிபதியும் ஆவார்.
5 பின்னர் வந்த சனி தசை சனி புக்தி கைகூடவில்லை. 25 ஆம் வயதில் வந்த சனி தசை புதன் புக்தியில் நிலைமை சரியானது. எனென்றால் சுக்கிரனுக்கு சனி மற்றும் புதன் சுப கிரகங்களாகும்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
MOB : 8879885399
Friday, October 04, 2019 10:26:00 AM
-----------------------------------------------------------
2
Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The provided horoscope person's lagna lord is in 12th place.
2. Lagna lord is with malefic mars and sun in 12th place.
3. Swathi dasa starts with Rahu dasa. After Rahu dasa, Guru dasa started. Since Guru is 6th lord (villain) she live her life without listening to others.
4. End of Guru dasa got married and Sani Dasa started. Since sani is 9th and 10th lord, sani period is good for her. Sani made her to live in discipline.
Thanking you,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, October 04, 2019 11:03:00 AM
--------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி விரயத்தில்
2 .மூன்றில் (தைரிய ஸ்தானத்தில் ராகு
3 .எட்டாம் அதிபதி குருவின் நேரடி பார்வையில் குடுபஸ்தான அதிபதி புதன்
4 .குருதிசை முடிந்து பாக்கியாதிபதி சனிதிசை ஆரம்பமானவுடன் ஜாதகியின் வழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, October 04, 2019 3:31:00 PM
-----------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 20 ஏப்ரல் 1981 காலை 8 மணி அளவில் பிறந்தவர் பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தது.
குரு ஜாதகருக்கு 8ம் அதிபதி. எட்டாம் அதிபதியின் தசா நடந்தபோது , லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை கிரகமான குருவின் தசா நடந்தபோது, ஜாதகர் தலைகால் தெரியாமல் அலைந்துவந்தார். குருவின் தசா முடிந்து லக்கினத்திற்கு யோககாரகன் சனியின் தசாவில் மனம் திரும்பி திருமண வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தார்.
Friday, October 04, 2019 8:18:00 PM
-----------------------------------------------------------
5
Blogger kumaran said...
வணக்கம் அய்யா , லகினத்துக்கு 5-இல் சனி 6,12 ஆக சுக்கிரன் சந்திரன் பார்வை வேறு ,சுக்கிரன் ஜாதகி , சந்திரன் மனோ காரகன் , சனி 5இல் புத்தி மாற்றம் கூடவே ராகு தசை , புத்தி இதுதான் அதுக்கு காரணம் இருக்க கூடும் ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Saturday, October 05, 2019 8:32:00 AM
------------------------------------------------
6
Blogger sree said...
ரிஷப லக்கினம் துலாராசி . லக்கினாதிபதி , ராசிக்கு அதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு பனிரெண்டில் ராசிக்கு எழில் செவ்வாய் சூரியனுடன் சேர்ந்ததால் எடுப்பார் கை பிள்ளையாக இருந்திருப்பார். ரிஷப லக்கினத்திற்கு ஆகாத குருவின் தசை அவருக்கு அவப்பெயரை தேடி தந்திருக்கும். ராகுவின் சாரம் வாங்கிய சந்திரன் மனோகாரகன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் (ஆறாம் வீட்டு ஆதிபத்யமும் பெற்றவர்)ஆகியோரின் பார்வை பெற்றதால் மனம் அலை பாய்ந்த படி குரு தசை ராகு புக்தி முடியும் வரை அந்த நிலை நீடித்திருக்கும். குருவோடு சேர்ந்த தனித்த புதனின் பார்வை பெற்ற சனி தசை சனி புக்தி முடிவில் கோச்சார குரு ராசிக்கு இரண்டில் வரும் நிலையில் திருமணம் நடந்திருக்கும்.
சித்திரை பௌர்ணமிக்கு அடுத்த திதியில் பிறந்து இருப்பதால், சிறப்பான சந்திராதி யோகம் வேலை செய்திருக்கும். நல்ல தாய் தந்தையரை பெற்றிருப்பர். லக்கினம் ,லக்கினாதிபதி பாக்கியாதிபதி புதன் சந்திரனுக்கு ல் 6,7,8 இல் இருப்பது சிறப்பு. 25 வயதுக்கு மேல் யோக தசையாக வருவதால் நல்ல வழியில் நல்ல வழக்கை சிறப்புற வாழ்ந்து கொண்டு
இருப்பார்.
Saturday, October 05, 2019 12:33:00 PM
----------------------------------------------------------
7
Blogger sree said...
குரு தசை 16 வருடம் ராகு தசை பாக்கி இருப்பு 7 வருடம்.
23 வயது முடிந்தவுடன் குருதசை முடிந்து விட்டது . 25 வரை திருமணம் கூடி வரவில்லை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
சனிதசை சனி புக்தி முடியும் நேரத்தில் திருமணம் கூடி இருக்கவேண்டும் . பெண் மிகவும் அழகான தோற்றம் கொடவராக இருப்பார்.
நன்றி.
Saturday, October 05, 2019 12:48:00 PM
---------------------------------------------------------
8
Blogger Thanga Mouly said...
லக்கினாதிபதி சுக்கிரன் விரயத்தில் பாவக்கிரகங்களின் பிடியில் இருந்தாலும் பூரண சந்திரனின் பார்வையில் உள்ளார். கூடவே குடும்ப அதிபதி புதன் நீசம் (வர்க்கோத்தமம்) பெற்றது ஜாதகியை தன்னிச்சையான போக்கிற்கு இட்டுச்சென்றது. மேலாக குரு பார்வை பெற்ற லக்கினம் உரிய கோச்சார நிலையில் நல்ல மாற்றத்தினை அளித்துள்ளார்.
Saturday, October 05, 2019 5:49:00 PM
--------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
"Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?"
ரிசப லக்கினம், துலா ராசி ஜாதகி.
இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்ன?
1) லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மேச ராசியில் மறைந்து அதன் அதிபதி இயற்கை அசுப கிரகங்களான செவ்வாய் மற்றும்
உச்ச சூரியனுடன் அஸ்தமனாகி கெட்டு விட்டதே முதற்காரணம்.
2) பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது கற்பு நிலையை குறிக்கும். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். இங்கு 4ம் வீடான சிம்மத்தில் மாந்தி
அமர்வு, அதன் அதிபதி சூரியன் லக்கினத்திற்கு 12ல் மறைவு, பாபகத்திரியின் பிடியில் 4ம் இடம் போன்ற‌ காரணங்களையும் சொல்லலாம்.நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.
ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும்.இந்த ஜாதகத்தில் 12மிடமான அயன, சயன பாவத்தில் இந்த சேர்க்கை உள்ளதால் எவரையும் மதிக்காமல். பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் பிடிவாதமாக (ராகுவுக்கு கேந்திரத்தில் புத்திகாரகன் சந்திரன்)இருத்தல்,தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுதல் போன்ற நடவடிக்கைகளினால் 25 வயது வரை அவரது வாழ்க்கை தடம் மாறக் காரணமாக இருந்தது.
இரா.வெங்கடேஷ்.
Saturday, October 05, 2019 7:32:00 PM
--------------------------------------------------
10
 அய்யா வணக்கம்!
கொடுக்கப் பட்ட ஜாதகி 20 ஏப்ரல் 1981 அன்று காலை 8-00 மணிக்கு பிறந்தவர்.
லக்னாதிபதி சுக்ரன் 12ல். குணத்தை காட்டும் 5மிடம் புதன் வீடு. 8ம் பதி
குருவும் 9ம் பதி சனியும் இணைந்து கெடுத்து விட்டனர்.குரு சனி இருவருமே
வக்கிரம் பெற்றதுடன் இரண்டு டிகிரிக்குள் இனைந்துள்ளனர்.யோகாதிபதி சனி
இங்கு பாதகாதிபதியாக செயல்படுகிறார்.
குரு மகா தசை 16 + 7 ராகு = 23 வருடங்கள் மிக பாதிப்பான குணநலன்கள்.
சனி யோகாதிபதியானதால் சனி மகாதசையில் சுய புத்திக்கு பின் நல்ல குணமான வாழ்க்கை. மிக புத்திசாலி.
பவுர்ணமி யோகத்தால் வெளிநாட்டு வாசம்.
அன்புடன்
பொன்னுசாமி.
Ponnusamy Gowda
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. தாங்கள் எழுதி இருந்த என்ன தான் ரகசியமோ இந்த ஜாதகத்தில் , புதிரின் பதிலில் குரு தசையில் ஜாதகி திருந்தி வந்ததாக எழுதி உள்ளீர்கள் . அது முற்றிலும் தவறு.

    நீங்களே கேள்வியில் ஜாதகி 25 வயது வரை தன் மனம் போன போக்கில் அலைந்த தாக கேள்வியில் அளித்து உள்ளீர்கள் . மேலும் ஜாதகிக்கு 7 வயது முதல் 23 வயது வரை குரு தசையாகும். இந்த வயதில் தான் ஜாதகி தன்னிச்சையாக செயல் பட்டார். மேலும் குரு என்ன தான் சுப கிரகமாக இருந்தாலும் ரிஷப லக்கினத்திற்கு அசுப பலன்களை தான் தரும். மேலும் குரு ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் அதிபதியும் ஆவார். அந்த தசையும் கெட்ட பலன்களை தான் தந்து இருக்கும்.

    சனி தான் திருத்துபவர். அவர் தசையில் தான் ஜாதகி நல்வழிக்கு திரும்பி இருக்க வேண்டும். இது தான் ஜாதகப்படி சரியான விளக்கம் ஆகும்.

    நன்றி
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete


  2. அன்பரே,
    ஜாதகி 25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும் கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர் வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார்.

    குரு பகவான் தன் மகா திசை முடியும் நேரத்தில் என்று எழுதியுள்ளேனே - அதைப் பார்த்தீர்களா?

    பாருங்கள்!!!!

    அன்புடன்
    வாத்தியார்
    ========================================

    ReplyDelete
  3. குரு மகா தசை துவங்கியவுடன் என்று தான் எழுதி உள்ளீர்கள்... தங்கள் பதிவை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு தான் இதை எழுதினேன். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்கவும்.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  4. குரு மகா தசை துவங்கியவுடன் என்று தான் எழுதி உள்ளீர்கள்... தங்கள் பதிவை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு தான் இதை எழுதினேன். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்கவும்.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  5. திரு சந்திரசேகர ஆசாத் குறிப்பிட்டது சரியே.. 23 வயதிற்கு மேல் சனி தசை சனி புக்தி ஆரம்பம் ஆகி விடுகிறது. குரு பகவான் கண்டிப்பாக ரிஷப லக்கின துலா ராசி ஜாதகருக்கு அவயோகத்தையே செய்வர்.. சனி தசையில் ஜாதகி நல்ல வழியில் வாழ்க்கை யை புரிந்து நடந்திருப்பர். தவறை சுட்டி காட்டியது தங்கள் அதனை பதிவு செய்தால் மற்றவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்கும். நன்றி.

    ReplyDelete

  6. 4-10-2019 அன்று புதிருக்கான கேள்வியில் கீழே உள்ள வாறு எழுதியுள்ளேன்.அதில் குரு பகவான் தன் மகாதிசை முடியும் நேரத்தில் என்று குறிப்பிட்டுள்ளேன்.
    ===================================================================================

    Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?

    ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திரக்காரர். அவரின் 25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும் கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர் வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார்.

    கேள்வி இதுதான் இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்

    சரியான விடை 6-10-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
    அன்புடன்
    வாத்தியார்
    ---------------------------------------------
    கேள்விக்கு உரிய ஜாதகம்:

    ReplyDelete
  7. 4 .10 .2019 அன்று தாங்கள் எழுதி இருந்த பதிலில் தான் குரு தசை ஆரம்பம் ஆனவுடன் ஜாதகி நல்ல வழிக்கு திருப்பினார் என்று எழுதி உள்ளீர்கள் . கேள்வியில் வேறு விதமாக எழுதி உள்ளீர்கள் . தாங்கள் பதிலில் தான் குழப்பம் உள்ளது. அதை தான் சரி செய்யும் படி எழுதி இருந்தேன். அவ்வளவுதான். கேள்வியும் பதிலும் மாறுபாடாக மற்றவர்களை குழப்பும் படியாக உள்ளது .. இரண்டையும் ஒன்றாக சேர்த்து படிக்கவும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கே அது தெளிவாகி விடும். மீண்டும் ஒரு முறை தவறை சொன்னதற்கு மன்னிக்கவும்.

    நன்றி
    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB 8879885399

    ReplyDelete
  8. 4 .10 .2019 அன்று தாங்கள் எழுதி இருந்த பதிலில் தான் குரு தசை ஆரம்பம் ஆனவுடன் ஜாதகி நல்ல வழிக்கு திருப்பினார் என்று எழுதி உள்ளீர்கள் . கேள்வியில் வேறு விதமாக எழுதி உள்ளீர்கள் . தாங்கள் பதிலில் தான் குழப்பம் உள்ளது. அதை தான் சரி செய்யும் படி எழுதி இருந்தேன். அவ்வளவுதான். கேள்வியும் பதிலும் மாறுபாடாக மற்றவர்களை குழப்பும் படியாக உள்ளது .. இரண்டையும் ஒன்றாக சேர்த்து படிக்கவும் மீண்டும் ஒருமுறை தங்களுக்கே அது தெளிவாகி விடும். மீண்டும் ஒரு முறை தவறை சொன்னதற்கு மன்னிக்கவும்.

    நன்றி
    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB 8879885399

    ReplyDelete
  9. குரு தசை முடிவில் என்று குறிப்பிட்டிருப்பதும் ஒப்புக்கொள்ளும் படி இல்லை அய்யா. 23 வயதுடன் குரு தசை முடிவிற்கு வந்து விடுகிறது. மீண்டும் ஒரு முறை சரி பார்க்கவும்.

    ReplyDelete
  10. ஐந்தில் திரிகோணத்தில் அமர்ந்த குரு பகவான் தன் தசை தொடங்கியவுடன் ஜாதகியை நல் வழி படுத்தினர் என்று தாங்கள் அதில் பதிவு செய்து உள்ளீர்கள் . அது முற்றிலும் தவறு. விடை எழுதிய அனைவரும் சனி தசையில் தான் ஜாதகி தவறை உணர்ந்து நல்ல முறையில் வாழ ஆரம்பித்ததாக குறிப்பிட்டு உள்ளார்கள். இருமுறை அதை சுட்டி கட்டியும் தாங்கள் மீண்டும் குரு பகவானை இந்த ஜாதகியின் நாள் வாழ்க்கைக்கு துணை நின்றார் என்று கூறியது ஏற்று கொள்ள முடியவில்லை அய்யா. பிழையை திருத்தி பதிவு செய்யவும்.

    ஒரு சூட்சமமாக சனி இங்கு குருவுடன் சேர்ந்ததால் அவரது தசை ஜாதகிக்கு நல்ல பலனை எடுத்து செய்துள்ளது. அது மட்டுமே நன்மை தர கூடிய விஷயமாக கருதலாம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com