மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.10.19

Astrology: Quiz: புதிர்: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்?


Astrology: Quiz: புதிர்: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கேட்டை  நட்சத்திரக்காரர். நல்ல மனிதர். ஆனால் ஆளாமல், அனுபவிக்காமல்  இளம் வயதிலேயே
(26 வயதில்) இறைவனடி சேர்ந்து விட்டார். அல்ப ஆயுளில் அவர் போய்ச் சேர்ந்தமைக்கு என்ன  காரணம்?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 13-10-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம்

    இளம் வயதிலேயே ஜாதகர் இறப்பிற்கான காரணங்கள்

    1 ஜாதகர் விருச்சிக லக்கினம் விருச்சிக ராசி , லக்கினத்திலேயே சந்திரன் நீசம்

    2 பொதுவாக ஒருவரின் ஆயுள் எவ்வளவு என்பதை குறிப்பது எட்டாம் இடம் ஆகும். இவரின் எட்டாம் இடத்து அதிபதி புதன் லக்கினத்திலேயே அஸ்தங்கதம் , மேலும் எட்டாம் இடத்திற்கு ஆறில் மறைந்து உள்ளார். இது இவரின் ஆயுளை குறைத்தது. மேலும் எட்டாம் இடத்தின் மேல் ஆயுள் காரகன் சனியின் பார்வையோ அல்லது குருவின் பார்வையோ இல்லை.

    3 ஆனால் இறப்பு பற்றிய விசயத்திற்கு , இரண்டாம் இடம் மற்றும் எட்டாம் சம்பந்த பட வேண்டும். இவரின் இரண்டாம் இடத்தில் அமர்ந்த சுக்கிரன் தசையில் , இரண்டாம் இடத்து அதிபதி குரு வின் புக்தியில் புதன் அந்தர துணை புக்தியில் இவரின் மரணம் ஏற்பட்டது.

    4 இரண்டாம் இடம் மாரக ஸ்தானம் ஆகும். இது எட்டாம் இடத்து உடன் தொடர்பு பெறும் போது இறப்பு ஏற்படும்.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி: 8879885399

    ReplyDelete
  2. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி பதினொன்றில்
    2 .ஆயுள்காரகன் சனி நான்கில்
    3 மாரகஸ்தானமான இரண்டாம் வீட்டில் 12,6 க்கு உரிய சுக்கிரன் அமர்ந்துள்ளார் தண்டுடைய திசையில் தன திசையில் மாரகத்தை அளித்துள்ளார்

    4 .மேலும் இரண்டுக்கு உரிய குரு தன் வீட்டிற்கு 8ல்
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  3. 7th house(Maraka) lord-Sukran in second house(Maraka house)
    2nd house(Maraka) lord-Guru aspecting Lagna
    The Dasa of 7th house(Maraka) lord-Sukran at very young age, must have been during guru/budhan bukthi
    8th house lord-budhan in lagna might also have contributed

    ReplyDelete
  4. விருச்சிக லக்கினம். விருச்சிக ராசி. அமவாசை அன்று பிறந்துள்ளார். லக்கினாதிபதி செவ்வாய் பதினோராம் அதிபதி (மற்றும் அஷ்டமாதிபத்யம் ) பெற்ற புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்கினம் சூரியன் சந்திரன் மூவரும் அஷ்டமாதிபாதி புதனின் கேட்டை நட்சத்திர சாரம் பெற்றுள்ளனர். குரு பகவான் ஒன்பதாம் இடத்தில இருந்தாலும் உச்ச வக்கிரம் பெற்று அம்சத்தில் ராகுவுடன் சேர்ந்து இருக்கிறார். 2,7 கூறிய தசை மாரக தசையாக வேத ஜோதிடம் கூறுகிறது. சுக்கிர தசை குரு புக்தியில புதன் அல்லது கேதுவின் அந்தரத்தில் இவர் மரணித்திருக்க கூடும். சுக்கிரன் பன்னிரெண்டில் உள்ள கேதுவின் சாரம் பெற்றுள்ளதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அமாவாசை அன்று பிறந்த இவரின் லக்கினம் மற்றும் ராசியை பாப வலுப்பெற்ற சனி தனது பத்தாம் பார்வையில் பார்ப்பது நல்லதன்று. குருவுக்கு வீடு கொடுத்த சந்திரன் நீச மற்றும் ஒளியற்ற நிலையில் முழு பாபராக இருப்பதால் இவரது ஆயுள் அற்பாயுளாக முடிய நேர்ந்தது.

    ReplyDelete
  5. I am out of station. No access to desk top or lap top. My hand phone has no Tamil font. Hence I am using English. 1. At the age of 26 the native must have entered Sukra dasa Sani bhukthi. As his 3 rd house lord is Sani,that becomes his maragathipathi bhukthi. 2. The 8 th house lord Bhudha occupied the lagna and burnt by Sun.3. 9 th th house lord Chandra is in neecham position.4. The lagnathipathi Chevvai is in 6x8 position with maragathipathi and ayulkaraka Sani.5. The nadi astrology longivity rule correctly applies to this horoscope. These are the reason for his esrly death.
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  6. ஐயா வணக்கம் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் லக்னாதிபதியான செவ்வாய் பதினொன்றாம் இடமான மாரக ஸ்தானத்தில் அமர்ந்து மாரகாதிபதி ஆன புதன் லக்னத்தில் பரிவர்த்தனை பெற்றுள்ளார் அதோடு அல்லாமல் அம்மாவாசை சந்திரன் இணைவு பெற்று லக்கினம் பாதிப்பு. குருவும் பாதக ஸ்தானத்தில்.
    விருச்சக லக்னத்திற்கு மாரக அதிபதிகள் முறையே சனி(3), சுக்கிரன்(7,12) புதன்(11) ஆகியோர். அவர் ஆயுள் முடியும் போது சுக்கிரன் தசை சனி புத்தில் இவருக்கு ஆயுள் குற்றம் ஏற்பட்டு உள்ளது.

    ReplyDelete
  7. Good morning sir the person was born on 12/12/1966 6.15am .The main reason was 9th lord moon is debilated and he was born on amavasai thithi even though lagna lord and 11th lord in mutual exchange. Lagna is in aspect of Jupiter and saturn.It is exception horoscope.As you said வாங்கி வந்த வரம்.Thanks sir vazhga valamudan

    ReplyDelete
  8. ரோகஸ்தானம் சனி, செவ்வாய், ராகு சம்பந்தம் பெற்று இருப்பதன்னால் , ஜாதகர் ஆட்கொல்லி நோயினனால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

    செவ்வாயின் (லக்கினாதிபதி/ராசியாதிபதி ) 8ம் பார்வை சனியின் 3ம் பார்வை செவ்வாய் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவின் மேல் விழுவதும், லக்கினத்த்தில் நீச சந்திரன் 8ம் 10ம் அதிபதிகளுடன் கூட்டுச்சேர்ந்து நிலையாமையை ஜாதகருக்கு ஏட்படுத்தியிருக்கலாம் என்பது எனது கணிப்பு.

    சுக்கிர தசை ராகு புத்தி, செவ்வாய் புத்தி என்பன இந்த சோக நாடகத்தை அரங்கேற்றியிருப்பர்?

    ReplyDelete
  9. வணக்கம்.
    விருச்சிக லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
    அல்ப ஆயுளில் அவர் போய்ச் சேர்ந்தமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

    1) லக்கினத்தில் அட்டமாதிபதி புதன், விருச்சிக லக்கின பாதகாதிபதி நீச சந்திரன் மற்றும் ஆத்ம காரகன் சூரியன் அமர்ந்து கூட்டாக உள்ளனர்.
    2) ஆத்மகாரகன் சூரியனால் அட்டமாதிபதி புதன் அஸ்தங்கம் அடைந்துள்ளார். கும்ப‌ சனியின் 10ம் பார்வை மற்றும் லக்கினாதிபதியும் 6ம் அதிபதியான செவ்வாயின் 3ம் பார்வை விழுகிறது.
    3) லக்கினாதிபதியும், 11ம் அதிபதிய்ம் பரிவர்த்தனையில் உள்ளனர்.
    4) அட்டம ஸ்தானத்திற்கு சுபரின் பார்வையில்லை.
    5) பொதுவாக எந்த வீட்டிற்கும் அதன் 12மிட ராசியாதிபதியின் தசா நடைபெறும் போது நல்ல பலன் கொடுப்பதில்லை.
    6) அட்டமத்திற்கு 12மிடம், லக்கினத்திற்கு 12மிடம் இவற்றின் அதிபதி சுக்கிரன் தசை, குரு புத்தியில் ஜாதகர் மத்திம ஆயுளில் 26 வயதிற்குள் எதையும் அனுபவிக்காமல் காலமானார்.
    இதுதான் காரணம் என்று என்னால் நிர்ணயிக்க இயலவில்லை. ஏனெனில், சுபக்கிரகாமான குருவின் பார்வை லக்கினத்திற்கும் அதில் உள்ள கிரகங்களுக்கும் இருக்கிறது.
    வாத்தியாரின் மேலான பதிலுக்கு காத்திருக்கும்

    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  10. பிறப்பு: 12/12/1966, 6:25 AM, chennai
    விருச்சிக லக்கினமாகி ராசியுமாகி, லக்கினத்தை முழுமுதற் பாவியும் 3 க்குரிய மாரகாதிபதியுமான சனி பார்த்து, லக்கினத்தில் மாரகாதிபதியும் அட்டமாதிபதியுமான புதன் சனியின் சாரம் பெற்று அமர்ந்து, புதன் சாரம் வாங்கிய 10 ஆம் ஸ்தானாதிபதி சூரியனுடனும், 9 ஆம் ஸ்தானாதிபதியும் மாரகாதிபதியுமான சந்திரனுடனும் சேர்ந்து, லக்கினாதிபதி செவ்வாய் 11 இல் நீசம் பெற்ற சந்திரனின் சாரத்தில் அமர்ந்து லக்கினமும் லக்கினாதிபதியும் வலு இழந்த ஜாதகம். 5 க்குரிய குரு சனி சாராம் பெற்று பாக்கியஸ்தானமான கடகத்தில் உச்சவக்கிரமாகி தானும் கெட்டு, நீசனுக்கு நிகராக அமர்ந்து 9 ஆம் இடத்தையும் கெடுத்தார்.
    உயிரை குறிக்கும் லக்கினமும் லக்கினாதிபதியும் கெட்டு, பூர்வபுண்ணியாதிபதியும் ஸ்தானமும் கெட்டு, எதையும் அனுபவிக்க வைக்கும் பாக்கியஸ்தானமும் அதிபதியும் கெட்டதால் ஜாதகர்க்கு அற்பஆயுள்.
    தசநாதன் புதன் 4 இல் ஆட்சி பெற்று அமர்ந்த சனியின் சாரம் வாங்கி, குரு பார்வைபெற்று தசமகேந்திரத்தில் அமர்ந்து தசை நடத்தியதால் பெரிய பாதிப்பு இல்லை. தொடர்ந்த குரு சாரம் பெற்று 12 இல் அமர்ந்த கேது தன் தசையில் விரயத்தை கொடுத்திருப்பார். அடுத்து வந்த சுக்கிர தசையில், தசநாதன் சுக்கிரன் 12 இல் அமர்ந்த கேது சாரம் பெற்று 2 இல் அமர்ந்து, வீடு கொடுத்த குரு 8 இல் நிற்க புத்திநாதன் குரு பாதகஸ்தானத்தில் அமர்ந்து ஆயுளை முடித்துவைத்தான்.

    ReplyDelete
  11. Vanakkam ayya,

    nedu natkal kazhithu puthir potiyil kalanthu kolgiren...

    Maaraga athipathi (7 aam athipathi Sukran), matroru maraga sthanam (2aam idam) amarnthu thisai nadapathu nallathu illai.

    Melum Sukra dasa sani bukthiyil maranam - bukthi nathan + ragu - iruvarum oruvarai oruvar paarthu kolgindranar. (Ragu - 11 am paarvai, sani 3 aam parvai). 6 aam idam innum valimai perugirathu - 2,7,6 moondru idangalum sernthu jathagarai mela anupi vidugirathu.

    Nandri,
    Bala

    ReplyDelete
  12. Sukran and guru maragathipathigal 2 and 7. So sukra dhasa, guru bhukhi he passed away.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com