நமக்கு தெரியாத பிரசாதங்கள் (Temple Prasadam) !!!!
*நற்பிரசாதம் நாம் அறியவேண்டாமா!*
எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.
* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல்
நைவேத்யம்.
* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.
* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.
* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.
* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.
* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
* கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.
* நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.
* கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.
* திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.
* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.
*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.
*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.
* சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
எனக்கும் கட்செவி அஞ்சலில் வந்திருந்த விவரங்கள். நன்றி.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Nice post...
Thanks for sharing... Have a great day.
With regards,
Ravi-avn
Kovilady appam always available in the Bhattacharya's home.
ReplyDeleteபடம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என நினைக்கின்றேன்.
ReplyDeleteவணக்கம் ஐயா,நல்ல தகவல்கள்.நன்றி.
ReplyDeleteவணக்கம் குருவே,
ReplyDeleteபிரசாத வகைகள் மற்றும் அவை தரப்படும் கோயில்கள் பற்றிய தொகுப்பு பலே!😊
////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteஎனக்கும் கட்செவி அஞ்சலில் வந்திருந்த விவரங்கள். நன்றி.////
நல்லது. தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்!!!!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice post...
Thanks for sharing... Have a great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteKovilady appam always available in the Bhattacharya's home.//////
நல்லது. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger SELVARAJ said...
ReplyDeleteபடம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என நினைக்கின்றேன்./////
தெரியவில்லை. சாமி! படம் உபயம் கூகுள் ஆண்டவர்!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,நல்ல தகவல்கள்.நன்றி./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
பிரசாத வகைகள் மற்றும் அவை தரப்படும் கோயில்கள் பற்றிய தொகுப்பு பலே!😊
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!