மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.1.19

Astrology: Quiz: புதிர்: நோயால் அவதிப்பட்ட அம்மணி - காரணம் என்ன?

Astrology: Quiz: புதிர்: நோயால் அவதிப்பட்ட அம்மணி - காரணம் என்ன?

ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி அவிட்ட நட்சத்திரக்காரர். ஜாதகி தனது 20 ஆவது வயதிற்குப் பிறகு சில காலம் (சில ஆண்டுகள்) ஆஸ்த்மா நோயினால் அவதிப்பட்டார். அதற்குப் பிறகு நோயிலிருந்து விடுபட்டார். அது தனிக் கதை! இப்போது கேள்வி இதுதான். ஜாதகப்படி அவர் நோயினால் அவதிப்பட்ட காரணம் என்ன?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 6-1-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

 1. வணக்கம்

  தங்கள் புதிருக்கான பதில்

  அம்மணியின் லக்கின அதிபதி சூரியன் விரய ஸ்தானம் 12 இல் உள்ளார் , ஆதலால் அம்மணி நோய் வாய் பட அது காரணமாக அமைத்தது .

  மேலும் 6 இம் இடம் ஆனது நோய் பற்றி கூறும் இடம் ஆகும் . இந்த இடத்தின் அதிபதி சனி 8 இம் இடத்தில மறைந்து நோய் தாக்கத்தினை ஏற்படுத்தினார்

  நன்றி

  இப்படிக்கு
  ப. சந்திரசேகர ஆசாத்
  MOB . 8879885399

  ReplyDelete
 2. 6ம் வீட்டு அதிபதி சனி குருவின் (8ம்) வீட்டில் அமர்ந்ததும். இந்த சனி பகவான் அம்சத்தில் உடல் காரகனாகிய சூரியனின் வீட்டில் பகை பெற்று அமர்ந்திருப்பதும், வியாழ திசை சனி புத்தியில் அம்மணிக்கு ஆஸ்துமா ஏற்பட காரணமாயிற்று, அடுத்து வந்த புதன் புத்தி அவருக்கு சுகம் அளித்திருக்க வேண்டும் என்பதே எனது கணிப்பு.

  ReplyDelete
 3. Good morning sir the lady born in 3/8/1966 time 7.10am Lagna lord sun in 12th house Sixth house represents disease here sixth lord saturn in 8th house which is not good for health but it is good for longitivity.Asthma is caused due to weak moon in horoscope The lady was affected during Jupiter dasa saturn bukthi 1987 to 1989 after that budhan bukthi and ketu bukthi the disease will continue DURING venus bukthi she might be cured

  ReplyDelete
 4. ஜாதகர் 3 ஆகஸ்டு 1966 ,காலை 7 மணி 1 நிமிடத்திகுப்பிறந்தவ்ர்.

  ஜாதகரின் (நோய் இடத்தின்) அதிபதி, 6 ம் இட அதிபதி, எட்டாம் இடத்தில் அமர்ந்தது.எட்டாம் அதிபதி 11ம் இடத்தில் அமர்ந்த‌து. ஆறாம் இடத்திற்கு செவ்வாய் பார்வை.18 ஆண்டுகள் 7 மாதம் வரை ராகுதசா நடந்தது.அதன் காரணமாகவும் உடக் நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதன் பின்னர் வந்த குருதசாவினால் சுய புக்தியில் பயன் இல்லை. பின்னர் உடல் நலம் சீராயிற்று.

  ReplyDelete
 5. ஜாதகி தனது 20 ஆவது வயதுக்கு பிறகு ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எட்டாம் அதிபன் குருவின் திசையில் ஆறாம் அதிபன் சனியின் புத்தி நடந்ததுதான் கரணம். சனி காற்று கிரகம் ஆனதால் அவருக்கு சுவாசம் தொடர்பான வியாதி வந்தது. ஆறாம் பாவம் நோயைக் குறிக்கும். எட்டாம் பாவம் நோயால் வரும் கஷ்டத்தைக் குறிக்கும்.

  ReplyDelete
 6. பிறந்த தேதி : 3 - 8 - 1966 7 am

  சிம்ம லக்கினம். 21 பரல்கள். லக்கினாதிபதி சூரியன் 12 -இல் புதனோடு சேர்க்கை. 12 -ஆம் அதிபதி சந்திரன் 7 -இல் அமர்ந்து லக்கினத்தை பார்க்கிறார். ஜாதகர் பல விதத்தில் விரயம் செய்ய பிறந்தவர்.

  6 , 7 ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்று 8 -மிடத்தில் பாவ கர்தாரி யோகம் பெற்று இருக்கிறார். சனி பெற்ற சுய பரல் 2.
  8 ஆம் அதிபதி குரு மிதுன ராசியில் 3 ஆம் அதிபதி சுக்ரனோடு சேர்க்கை பெற்று வர்கோத்தமடைகிறார். குரு 12 ஆம் அதிபதி சந்திரனை பார்க்கிறார்.
  ஆக 3 ,6 ,8 ,12 தொடர்பு உள்ளது. ஜாதகர் அவ்வப்போது உடல் நலம் குன்றி மீண்டு வரும் வாய்ப்பு அதிகம்..

  ஜாதகருக்கு 20 வயதிற்கு மேல் குரு தசை சனி புத்தி வருகிறது.

  8 ஆம் அதிபதி திசை 6 ஆம் அதிபதி புத்தியில் குரு நின்ற ராசியான மிதுனத்திற்கு உரிய நுரையீரல் - மூச்சு சம்பந்தமான ஆஸ்துமா நோய் வந்தது. சுபர்கள் புத்தி வரும் சமயம் நோய் விலகியிருக்கும்.

  எனினும் ஜாதகர் முழங்கால்,பாதம் சம்பந்த பட்ட நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் மிக அதிகம்.

  நன்றி.

  ReplyDelete
 7. ஆசிரியருக்கு வணக்கம்.
  சிம்ம லக்கினம், கும்ப ராசி ஜாதகி.
  ஜாதகப்படி அவர் ஆஸ்த்மா நோயினால் அவதிப்பட்ட காரணம் என்ன?
  லக்கினாதிபதியும் ஆத்மகாரகனுமான‌ சூரியன் 12ல் மறைவு.
  லக்கினத்திற்கு 6மிடம். ரோக ஸ்தானம் எனப்படும். ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி மற்றும் துரதிர்ஷ்டங்களைப் பற்றிச் சொல்லும் வீடு.
  இந்த ஜாதகத்தில் 6ம் அதிபதி சனி அட்டமத்தில் வக்கிர கதியில் பலம் குறைந்து (அஷ்ட வர்க்க பரல் 2) அமர்ந்துள்ளார். இது அவருக்கு உகந்த இடமல்ல. ஜாதகருக்கு அடிக்கடி நோய் நொடிகளை உண்டு பண்ணுவார். ஆறாம் வீட்டு அதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதி குரு பகவான் மிதுன ராசியில் உள்ளார். மிதுன ராசி நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல் போன்றவற்றை குறிக்கும். ஜாதகியின் 20 வயதுக்கு மேல் அட்டமாதிபதி குருவின் தசையில் சனி புத்தியில் ஆஸ்த்மா நோயை ஏற்படுத்தினார்.

  வழக்கம் போல வாத்தியாரின் மேலான பதிலை எதிர் நோக்கும்

  இரா. வெங்கடேஷ்.
  பின் குறிப்பு:
  (பாடங்களை படித்து தேறுவதால் மட்டுமே ஒருவர் சரியான பதிலை சொல்லி விட முடியாது. அதிலேயே ஊறி அனுபவம் பெற்றவரால் மட்டுமே நெத்தியடி பதிலை சொல்ல முடியும். இது வாத்தியார் சொல்லிக் கொடுத்த பாடம்.)

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா,1)6ம் இடமே நோய்,கடன்,எதிரிக்கான இடம்.6ம் அதிபதி சனி,குருவின் வீடான 8ல் அமர்ந்து தன் சொந்த வீடான 6ஐ தன் பிடியில் வைத்துள்ளார்.மேலும் அவர் சிம்ம லக்னத்திற்க்கு நடுநிலையானவர்.2)லக்னாதிபதி சூரியன் 12ல் இருந்தாலும் அவர் லக்ன சுபர்.அவர் பார்வை 6ம் இடத்திற்க்கு வாய்த்தது.3)மேலும் யோக காரகன் செவ்வாய் பார்வையும் 6 ம் இடத்திற்க்கும் அதன் அதிபதிக்கும் அமைந்தது.4)இரண்டாவதாக வந்த ராகு தசா,வீடு கொடுத்த செவ்வாய் போல சுபமானதால் அமைதி காத்த சனி,மூன்றாவதாக வந்த லக்ன சுபர் குருதசா குரு புத்தியில் அமைதியாய் இருந்து,குருதசா,சனி புத்தியில்,தன் 10ம் பார்வையால் குருவை பார்த்த காரணத்தினால் நோயை கொடுத்தார்.5)பிறகு வந்த சூரிய புத்தியில்,லக்னாதிபதி,உடல் காரகன் என்ற வகையில் அவர் பார்வை பெற்ற 6ம் வீடு சுகமானது.ஆஸ்த்துமா நோய்க்காண காரணம் பிடிபடவில்லை.நன்றி.


  ReplyDelete
 9. - லக்கினாதிபதி 12 ல்
  - ஆறாம் அதிபதி (சனி) எட்டில்
  - ஆறு மற்றும் எட்டாமிடம் ருண ஸ்தானம், தடை மற்றும் தாமதம்.
  - பாதகாதிபதி செவ்வாய் பதினொன்றில் உடன் எட்டாம் அதிபதி (குரு) சேர்க்கை
  - குரு தசை - தனது புக்தி, சனி புக்தி முடிந்தவுடன் நோயிற்கு தீர்வு
  - பாதகஸ்தானத்தில் ராகு வும் அழையா விருந்தாளியாக உட்கார்ந்து இருக்கிறார்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com