மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

24.1.19

நரசிம்மரை சாந்தப்படுத்த யாரை அனுப்பினார்கள்?


நரசிம்மரை சாந்தப்படுத்த யாரை அனுப்பினார்கள்?

*"மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்..."*

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித
உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.

இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.

இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். 

அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

""என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள்,
பிறகு நான் அருகில் செல்கிறேன்,'' என்றாள்.

அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது. தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். 

பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

""பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?'' என்றார்.

அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. ""சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்?'' என்றான்.

""உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல
கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு,''
என்றார்.

இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

""மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,'' என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,""ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,''
என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம். ஆனால், ஆசை வேண்டாம் என்றான்
பிரகலாதன்.

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல! பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு! பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின்
மனதை உருக்கிவிட்டது.

பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக்
கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

""இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!'' ஆனாலும், அவர் விடவில்லை. விடாமல் அவனைக்
கெஞ்சினார், ""இல்லையில்லை! ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,''.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால், "தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்' என்று முடிவெடுத்த பிரகலாதன்,

""இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம்
அளியுங்கள்,'' என்றான்.

நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே
செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்," என்றார்.

"நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை. அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது."

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

வரதராஜன் said...

வணக்கம் குருவே,
மீண்டும் மீண்டும் படித்து உருகினேன்! எப்படிப்பட்ட பிள்ளை, எப்படிப்பட்ட நல்ல உள்ளம்! தவப் பயனால் பகவானைக் கண்டும் இகலோக வாழக்கை எணாங்கள்
தன்னுள் வராமல் தடுத்த தயாபரன்!
இறைவனைத் தன் ஆழ்மனதில்
நிறைந்து நிறுத்தி பரசிந்தனைகள் இன்றி, தன் தந்தையின் அத்தனை
கொடுமைகளையும் சகித்து கொண்டு
முடிவில் ஶ்ரீமஹாவிஷ்ணுவை
அவதாரம் எடுக்க வைத்த அரும் புதல்வனல்லவா!
அற்புதமான பதிவு! அதற்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், ஐயா!

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Good morning sir excellent with lord palaniyappan blessings everyone want to get moksha vazhga valamudan

ravichandran said...

Respected Sir,

Happy morning... Excellent post...Superb...

Thanks a lot for sharing...

Have a great day.

With regards,
Ravi-avn

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே,
மீண்டும் மீண்டும் படித்து உருகினேன்! எப்படிப்பட்ட பிள்ளை, எப்படிப்பட்ட நல்ல உள்ளம்! தவப் பயனால் பகவானைக் கண்டும் இகலோக வாழக்கை எணாங்கள்
தன்னுள் வராமல் தடுத்த தயாபரன்!
இறைவனைத் தன் ஆழ்மனதில்
நிறைந்து நிறுத்தி பரசிந்தனைகள் இன்றி, தன் தந்தையின் அத்தனை
கொடுமைகளையும் சகித்து கொண்டு
முடிவில் ஶ்ரீமஹாவிஷ்ணுவை
அவதாரம் எடுக்க வைத்த அரும் புதல்வனல்லவா!
அற்புதமான பதிவு! அதற்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், ஐயா!//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

Subbiah Veerappan said...

//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir excellent with lord palaniyappan blessings everyone want to get moksha vazhga valamudan/////

நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Excellent post...Superb...
Thanks a lot for sharing...
Have a great day.
With regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி அவனாசி ரவி!!